Tuesday, 25 August 2015

சென்னை மாநகராட்சி அசிங்காரச் சென்னைஆகிவிட்ட அவலம்!! ஒரு சிறப்பு பார்வை..

உலகின் முதல் மாநகராட்சி  இலண்டன் தோற்றுவிக்கபட்ட பின் இரண்டாவதாக துவக்கப்பட்ட மாநகராட்சியும் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்று பெருமையை கொண்ட Corporation of Madras  என்று அழைக்கப்படும் இன்றைய சென்னை மாநகராட்சி. 1688 ஆண்டு செப்டம்பர் 29 அன்று சென்னை நகராண்மைக் கழகம் என்ற பெயரிலும், இந்திய விடுதலைக்கு பின் Corporation of Madras என்ற பெயரிலும் தற்பொழுது Corporation of Chennai என்ற பெயரில் சென்னை மாநகராட்சி இயங்கி வருகின்றது. 10 சதுர மைலுக்கு தனது ஆளுமையை செலுத்த ஆரம்பிக்கபட்ட சென்னை மாநகராட்சி பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று 426 சதுர கிலோமீட்ட‌ர்களை (164 சதுர மையிலை) நிர்வகிக்கின்றது. மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக 200 வார்டுகளாகவும்(Ward) 15 மண்டலங்களாக‌வும் (Zone) பிரிக்கப்பட்டு, ஆறு நிலை குழுக்களாகவும் ஒவ்வொரு வார்டுக்கு ஒரு தனி குழு உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மாநகராட்சியில் கீழ் 16  துறைகள் இயங்குகின்றது  ஒவ்வொரு துறையும் தனிப்பட்ட‌ அதிகாரிகளின் கீழ் இயங்குகின்றது.
 சென்னையை பொறுத்தவரை  திடக்கழிவுகளை (குப்பைகளை) அகற்றும் பணி “மேற்பார்வை பொறியாளர்” தலைமையின் கீழ் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை என்ற துறையினரால் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
சென்னை மாநகராட்சியின் அறிக்கையின்படி நாள் ஒன்றுக்கு 4500 மெட்ரிக் டன் குப்பை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்படுவதாகவும். தனி நபர்கள் நாள் ஒன்றுக்கு 700 கிராம் என்ற விகிதத்திலும் கட்டிட மற்றும் திடக்கழிவு 700 மெட்ரிக் டன் என்ற விகிதத்தில் உருவாக்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த கழிவுகள் அனைத்தும் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் எட்டு குப்பை மாற்று நிலையங்கள், முன்று விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் மூலமாகவும் நாள் ஒன்றுக்கு 4000  மெட்ரிக் டன் வரை கையாளப்படுகின்றது. 11,184 நிரந்தர ஊழியர்களும் 567 தற்காலிக ஊழியர்களும் இந்த கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற பொழுதிலும் தற்பொழுது உள்ள கணக்கின்படி மேலும் 1520 பணியாளர்கள் தேவைப்படுவதாக மாநகராட்சி தெரிவிக்கின்றது.  நாள் ஒன்றுக்கு 4000 டன் கழிவுகள் மட்டும் தான் கையாளப்படுகின்றன என்பதின் முலம் மீதி உள்ள 500 டன் கழிவுகள் அகற்றப்படவில்லை என்பதினை மாநகராட்சியின் தகவல்களே தெரிவிக்கின்றன.
29THMETAL_767869g

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 12 மண்டலகளில் மட்டுமே மாநகராட்சி கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்கின்றனர் முன்று மண்டலங்களில் (9, 10 & 13) தனியார் நிறுவனமான M/s. Ramky Enviro Engineers Ltd பணிகளை மேற்கோள்கின்றன.

திடக்கழிவுகளின் உற்பத்தியாகும் இடங்கள், பொருட்கள் மற்றும் பிரிக்கப்படும் வகைகளை பற்றி சற்று விரிவாக காண்போம் : –
கழிவுகள் உற்பத்தி செய்யப்படும் இடங்கள்சதவிகிதம்
குடியிருப்புகள்68%
வணிக வளாகங்கள்14%
உணவகங்கள், விடுதிகள், திருமனமண்டபங்கள், பள்ளிகள் மற்றவைகள்11%
சந்தைகள்4%
மருத்துவமனைகள்3%
மொத்தம்100%

Composition of Waste: -
Composition%to total by Weight
Paper8.38%
Rags3.11%
Organic Matter51.34%
Plastics7.48%
Metals0.19%
Rubber & Leather0.19%
Inert26.01%
Glass0.29%
Coconut2.48%
Wood0.50%
Bones0.01%

Chemical Analysis of Solid Waste: -
Items%Value
Moisture content47%
Ph Value6.20% – 8.10%
Volatile matter at 55042.62%
Carbon24.72%
Nitrogen content0.88%
Phosphorous as P2O20.44%
Potassium as K2O0.89%
C/N Ratio29.25%
Calorific Value in Kj/kg2594

சென்னை நகரில் இருந்து அகற்றப்படும் அனைத்து கழிவுகளும் இரண்டு பகுதிகளில் பிரித்து கொட்டப்படுகின்றன ஒன்று வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியிலும் மற்றொன்று தென்சென்னை பகுதியில் உள்ள பெருங்குடி பகுதியில். கொடுங்கையூர் பகுதியில் உள்ள திடக்கழிவு கிடங்கு கடந்த 30 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகின்றது,  இதன் பரப்பளவு 200 ஏக்கர் நாள் ஒன்றுக்கு 2100 முதல் 2300 டன் வரை கையாளப்படுகின்றது. இந்த கிடங்கு இருக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் குடியிருப்புகள் அமைந்து இருக்கின்றன. இந்த திடக்கழிவு கிடங்கின் ஆயுள் முப்பது ஆண்டு காலம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு தற்பொழுது ஆயுட்காலம் முடியும் தருவாயில் உள்ளது.
03THDUMP_PHOTO_137962f
பெருங்குடி பகுதியில் உள்ள திடக்கழிவு கிடங்கு 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது கடந்த 25 ஆண்டு காலமாக இந்த கிடங்கு பயன்பாட்டில் உள்ளது மேலும் நாள் ஒன்றுக்கு 2200 முதல் 2400 டன் வரையான திடக்கழிவுகள் இங்கு கையாளப்படுகின்றது, தற்பொழுது இந்த கிடங்கில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள் உருவாகி உள்ளது.

இந்த இரண்டு கிடங்குகள் மட்டும் அல்லாமல் சில சிறிய அளவில் கழிவுகளை சேகரிக்கும் இடங்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளன. இவை மட்டுமின்றி மேலும் இரண்டு திடக்கழிவு கிடங்கு அமைக்க பரிசீலனையில் உள்ளது.  ஒன்று 67 ஏக்கர் நிலப்பரப்பில் மீஞ்சூரிலும் மற்றொன்று கூத்தம்பாகத்தில் 100 ஏக்கர் நிலபரப்பிலும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்பொழுது உள்ள இரண்டு கிடங்குகளுமே இந்த ஆண்டுடன் தனது ஆயுட் காலங்களை பூர்த்தி செய்ய இருக்கின்றன. இரண்டு கிடங்குகளிலுமே கழிவுகள் நிறைந்து காணப்படுவதுடன், கழிவுகள் சரியான முறையில் கையாளப்படாததால் அடிக்கடி தீ விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறை தீவிபத்து ஏற்படும் பொழுது அதை கையாளும் வகையில் தீயணைப்பு வசதிகள் நம்மிடம் இல்லை எனத்தெரிகின்றது, மழை வந்து தீ அணைந்தால் தான் உண்டு, அல்லது அதுவாகவே எரிந்து நின்றால் தான் உண்டு என்ற நிலையே நீடிக்கின்றது. இந்த மாதத்தில் கூட தாம்பரம் கிடங்கில் ஏற்பட்ட தீயை மழை வந்து தான் அணைத்தது.
Kodungaiyur-dumpyard

சென்னையில் உள்ள இந்த இரண்டு பெரிய  கிடங்குகள் மட்டுமல்லாமல் சென்னையை சுற்றி பல இடங்களில் திடக்கழிவு கிடங்குகள் உள்ளன.

ஆலந்தூர்20.46 ஏக்கர்
பல்லவபுரம்20.16 ஏக்கர்
தாம்பரம்19.27 ஏக்கர்
பம்மல்6.86 ஏக்கர்
அனகாபுத்தூர்4.44 ஏக்கர்
உள்ளகரம் (புழுதிவாக்கம்)4.26 ஏக்கர்
அம்பத்தூர்42.35 ஏக்கர்
ஆவடி22 ஏக்கர்
கத்திவாக்கம்4.56 ஏக்கர்
மாதவரம்15 ஏக்கர்
திருவற்றியூர்29.65 ஏக்கர்
திருவேற்காடு4.30 ஏக்கர்
பூந்தமல்லி5.95 ஏக்கர்
மதுரவாயில்6.18 ஏக்கர்
வளசரவாக்கம்5.77 ஏக்கர்
மணலி5.30 ஏக்கர்
பயன்பாட்டில் உள்ள கிடங்குளை விரிவுபடுத்தவும் மேலும் பல கிடங்குகளை அமைக்கவும் பின்வரும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1) வெங்கடாபுரம் – 50 ஏக்கர்
2) நல்லூர் – 55 ஏக்கர்
3) புஞ்சை- புழுதிவாக்கம் – 25 ஏக்கர்
4) வெங்கல் – 30 ஏக்கர்
5) மணலி – 5.5 + 4.93 ஏக்கர் (விரிவாக்கம்)
6) சாந்தங்காடு – 12 ஏக்கர்7) வடபெரும்பக்கம் – 4.7 ஏக்கர்
8) பம்மல் – 2 ஏக்கர்
9) கோலடி – 10.2 ஏக்கர் (புறம்போக்கு நிலம்).

திடக்கழிவுகள் தற்பொழுது முன்று தொழில்நுட்ப முறையில் கையாளப்படுகின்றன.
1) முழுவதுமாக எரிப்பது (Combustion) பெருமளவிற்கு கையாளப்படும் முறை
2) வளிமயமாக்கல் (வாயுவாக மாற்றுவது (Gasification) 20 விழுக்காடு
3) உரமாக்கும் முறை(Composting). மிகச்சிறிய அளவிலும் நடைபெற்று வருகின்றது
திடக்கழிவு கிடங்குகளில் இருக்கும் கழிவுகளை எரிப்பதன் முலமாக அருகில் குடியிருக்கும் மக்க‌ளுக்கு தொண்டை,முக்கு எரிச்சல்,  இதயம், சுவாசக் கோளாறுகள், நுரையிரல் தொடர்பான நோய்களும் ஆஸ்துமா, ஒவ்வாமை (அலர்ஜி), வீக்கம், கிருமி நோய் தொற்றுகள், இரத்த சோகை, இரத்தம் தொடர்பான‌ நோய்களும், பொதுவாகவே நோய் எதிர்ப்பு சத்தி குறைபாட்டையும் எதிர்கொள்கின்றனர். இவைகள் மட்டுமின்றி நச்சுப்பூச்சிகள் உற்பத்தி ஆகும் இடமாகவும் மழைகாலங்களில் டெங்கு, காலரா போன்ற தோற்று நோய்களின் பிறப்பிடமாகவும் இந்த கிடங்குகள் மாறிவிடுகின்றன.
திடக்கழிவு கிடங்குகளின் நிலம், நீர், காற்று என அணைத்து சுற்றுச்சூழல் சீர்கேட்டின் பிறப்பிடமாக மாற்றப்பட்டு உள்ளது. சில நேரங்களில் மீத்தேன் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் வாயு பரவலும் இந்த கிடங்குகளில் நடக்கின்றன. கார்பன்-டை-ஆக்ஸ்சைடை விட 21 மடங்கு மோசமான விளைவுகள் ஏற்படுத்த கூடியது மீத்தேன் வாயு (UN ESCAP (2007)) . திடக்கழிவுகள் உலகம் முழுவதும் 7.5 முதல் 10 கோடி டன் வரையிலான கர்பன்டை ஆக்ஸ்சைட் வாயுவை உற்பத்தி செய்வதாக IPPCC Intergovernmental Panel of Climate Change என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் திடக்கழிவுகளை கையாள தேசிய அளவில் எந்த ஒரு கொள்கையோ, அறிவியல், தொழில்நுட்ப முறையோ சமந்தபட்டவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்பதனை அண்மையில்தெற்காசிய அளவில் நடந்த ஒரு சுற்றுச்சுழல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திடக்கழிவுகளை அழிப்பதற்கு incineration எனப்படும் எரியூட்டல் போன்றவைகளை தடை செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் நோய்கள், சுற்றுசூழல் மாசுகள், நீர்நிலைக் கேடுகள் போன்றவற்றைக் குறித்த விழிப்புணர்வையும், போராட்டங்களையும் மாணவர்கள், மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுமார் 25 கிமீ சுற்றளவில் எந்தவொரு திடக்கழிவு இடும் கிடங்குகள் அமைக்கப்படக் கூடாது என்ற நடைமுறையை கொண்டு வரவேண்டும்.
திடக்கழிவு மேலாண்மையில் சாலையோரங்களில் சேர்கின்ற தூசுகள், மண்கள், மணல்களை சிறப்பு எந்திரம் வைத்து உறிஞ்சி எடுத்து, அவற்றை தரம் பிரித்து கடுமானப் பணிகள் போன்றவைக்குத் தேவையான உட்பொருளாக பயன்படுத்தும் நடைமுறை வெளிநாடுகளில் உள்ளன. இதனையும் மாநகராட்சி செய்யலாம். இவ்வாறு கழிவுகளையும் கசடுகளையும் தரம்பிரித்து பயன்படுத்துவதால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய்கள் வருவாயே கிடைக்கும்.

மாநகர திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பின் வரும் அமைச்சகம், துறைகள் தான் பொறுப்புகள் வகிக்கின்றன  :-
1) சுற்றுசூழல் மற்றும் வனத்துறை ( Ministry of Environment and Forests (MoEF)).
2) ஊரக வளர்ச்சி அமைச்சகம் (Ministry of Urban Development (MoUD).
3) மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பட்டு வாரியம் (Central and State Pollution Control Boards).
4) ஊரக வளர்ச்சி துறை (Department of Urban Development)
5) முறைப்படுத்தப்பட்ட & முறைப்படுத்தபடாத தனியார் அமைப்புகள் (Private Formal and Informal Sector).
6) ஊரக உள்ளாட்சி துறைகள் (Urban Local Bodies).
7) வேளாண்மை துறை (State Level Nodal Agency).
இத்தனை துறைகளும், அமைச்சகங்களுக்கு கீழ் இந்த பணி வந்தாலும் இன்னும் சென்னை திடக்கழிவு மேலாண்மை முன்னேறாமல் , பின்னோக்கி சென்று கொண்டே இருக்கின்றது
Garbage
சந்திரன் முதல் செவ்வாய் வரை ராக்கெட் விட்டதாகவும், உலக தரம் வாய்ந்த அணு உலைகளை வைத்து உள்ளதாக பெருமை கொண்டு வல்லரசு கனவு காணும் நமது நாட்டில் தான் இன்றும் மனிதர்களை வைத்தே மனித கழிவுகளை அகற்றும் பணியை எவ்வித பாதுகாப்பான உபகரணங்கள் இன்றி சென்னை மாநகராட்சி 4,5,6,8,10 &13 மண்டலங்களில் 69 பணியாளர்களை நாள் ஒன்றுக்கு 297 ரூபாய் கூலி வேலைக்கு வைத்து உள்ளது.  இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் நச்சு வாயு தாக்கி இறப்பது அன்றாட செய்தியாகி விட்டது.  திடக்கழிவுகளை சரியான முறையில் கையாளாமல் சென்னையில் உள்ள‌ ஆறுகளான கூவம், அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் திடக்கழிவுகள் கொட்டபடுகின்றன. மேலும் சென்னை – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் NH 45 மதுரவாயல் முதல் – செம்பரம்பாக்கம் ஏரி வரை சாலையின் இரு பக்கங்களிலும் பல இடங்களில் திடக்கழிவுகள் இருப்பதை பார்க்க முடிகின்றது. ஆறுகள் சுற்றுசூழல் சீர்கேட்டின் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் சென்னையைச்  சுற்றி இருந்த நீர்நிலைகளான‌ ஏரிகள், குளங்களில் திடக்கழிவுகளை கொட்டி மேலும் கழிவு நீர்களை கலக்கச் செய்து நீர் நிலைகளைப் பாழடைந்த நிலைக்கு தள்ளியும்,  பல நீர்நிலைகள் அழிக்கப்பட்டும் உள்ளது.
      வளரும் நாடுகளில் 20-50% நிதியினை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுவதாக ஐ.நாவின் சுற்றுச்சூழல் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்கம்(Swachh Bharat Abhiyan) என்ற இயக்கத்தினை 2014 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூய்மைப்படுத்துவதற்காக துவக்கியது, ஐந்து ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைய வேண்டும் என நிர்ணயத்துள்ளது. ஆனால் மோடியும், அவரது அமைச்சர்களும் விளம்பரங்களுக்காக மட்டும் துடைப்பத்தோடு வந்து நின்றதோடு சரி, இன்று வரை இந்த திட்டத்தின் கீழ் விளம்பரங்களுக்காக மட்டும் பல கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளதேயொழிய உருப்படியாக எந்த ஒரு வேலையையும் மத்திய அரசு செய்யவில்லை.
     
கடந்த காலங்களில் சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்று பல திட்டங்களை பல கோடி செலவுகள் செய்தது மாநில அரசு, அதன் மூலம் குடிசைப் பகுதிகள் அடிக்கடி எரிந்து(எரிக்கப்பட்டு) அப்பகுதி மக்கள் செம்மஞ்சேரிக்கும், கண்ணகி நகருக்கு மாற்றப்பட்டதும் தான் மிச்சம், ஆனால் சென்னை கழிவுகள் நிறைந்த நகரமாக தான் காணப்படுகின்றது, அதே போல‌Vision 2023 திட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு என்ற பகுதியில் பக்கம் 15 –இல் கூறி இருப்பது (open defecation free and garbage free environment)என்று  மேலும் இந்த திட்டத்திற்காக இரண்டு லட்சம் கோடி முதலீடு (பக்கம் 27) செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது . பல இலட்சகோடிகளில் பணிகள் மேற்கொள்வதை போல் தெரிந்தாலும் உண்மையில் சில கோடிகள் கூட சரியான செயலுக்கு செலவிடப்படாமல் மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளதுடன், இதில் பல ஊழல்களும் நடந்துள்ளன. தூய்மையான இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில், 61- வது இடத்தில் சென்னை இருக்கின்றது. நமது அண்டை மாநிலத்தின் தலைநகரங்கள் எல்லாம் முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்ற போது சென்னை 61-வது இடத்தில் இருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
 நன்றி  : இராசன் காந்தி,இளந்தமிழகம் இயக்கம்.
மேலும் படிக்க…
http://ebtc.eu/pdf/111031_SNA_Snapshot_Waste-management-in-India.pdf

No comments:

Post a Comment