Thursday, 27 August 2015

GSAT-6 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. !!

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட GSLV-D6 ராக்கெட் மூலம், GSAT-6 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து  விண்ணில் செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக இந்த செயற்கைகோள் செலுத்தப்பட்டுள்ளது.

2 ஆயிரத்து 117 கிலோகிராம் எடைகொண்ட இந்த செயற்கைகோள், இதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே அதிக எடை கொண்டது

இஸ்ரோ விண்ணில் ஏவிய 25 ஆவது தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஆகும்.

9 ஆவது முறையாக பயன்படுத்தப்படும் GSLV ராக்கெட்டில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரியோஜெனிக் என்ஜின் பொறுத்தப்பட்டு ஏவப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில் முதல் முறையாக விரித்து மடங்கக்கூடிய ஆண்டனா பயன்படுத்தப்பட்டுள்ளது.இதில் எஸ்-பேண்ட் தொழில்நுட்ப முறை இடம்பெற்றுள்ளது. செயற்கைக் கோளில் மிகப்பெரிய 'ஆண்டனா' பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறிய தொலை பேசி மூலமாகவும் நேரடியாக செயற்கைக்கோளை, எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும். இந்த ஆண்டனாவுக்கு அதிகளவிலான சிக்னலை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே, தகவல் தொடர்புத் துறைக்கு அதிலும் குறிப்பாக, பாதுகாப்புத்துறைக்கு இந்த செயற் கைக்கோள் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய தொழில்நுட்ப வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும்.

ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் பூமியிலிருந்து குறைந்தபட்சம் 170 கிலோமீட்டரும் அதிகபட்சம் 35,975 கிலோமீட்டரும் கொண்ட தற்காலிக சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டு, அதன்பிறகு அதிலுள்ள திரவ எரிபொருள் மோட்டார் இயக்கப்பட்டு, சரியான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.  


No comments:

Post a Comment