கன்னியாகுமரியில் 3 கடல்கள் சங்கமிக்கும் காட்சியும்,ஒரே நாளில் சூரியன் மறைவதையும், சந்திரன்எழுவதையும் காண்பது கிடைக்ககாத அரிய காட்சிகள்.
இங்குதான் உள்ளது 410 ஆண்டுகள் பழமை வாய்ந்தஉதயகிரிக் கோட்டை. நாகர்கோவிலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலியூர்குறிச்சியில்உள்ளது.
திருவிதாங்கூர் அரசர்கள் பத்மநாபபுரத்தைதலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலத்தில்,இக்கோட்டை அவர்களுக்கு முக்கிய படைநிலை களமாகஅமைந்திருந்தது. கி.பி. 1600-ம் ஆண்டு இந்த கோட்டைகட்டப்பட்டதாகவும், பின்னர் பேரரசர் ராஜராஜ சோழன்படையெடுப்பால் பாதிக்கோட்டை அழிந்துபோனதாகவும், வரலாறுகள் கூறுகின்றன.
வேநாடு மன்னர் மார்த்தாண்டவர்மா 1729 ம் ஆண்டுஇந்தக் கோட்டையை புதுப்பித்துக் கட்டியுள்ளார்.
90ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டையைமுன்னின்று கட்டியவர் டி லனோய் என்ற கடற்படைதளபதி ஆவார். இந்தக் கோட்டைக்குள் 200 அடி உயரமலைக்குன்று ஒன்று அமைந்துள்ளது.
90ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டையைமுன்னின்று கட்டியவர் டி லனோய் என்ற கடற்படைதளபதி ஆவார். இந்தக் கோட்டைக்குள் 200 அடி உயரமலைக்குன்று ஒன்று அமைந்துள்ளது.
மன்னர் மார்த்தாண்டவர்மா பத்மநாபபுரத்தில்மிகப்பெரிய அரண்மனையை கட்டியதுடன்திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலையும்புதுப்பித்து அமைத்துள்ளார்.
இந்தக்கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவபடைகள் 19 ம் நூற்றாண்டு இடைப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கோட்டையினுள்அமைந்த தூப்பாக்கி வார்ப்பட தொழிற்சாலையில்கண்டெடுக்கப்பட்ட 16 அடி நீள துப்பாக்கியைஅங்கிருந்து எடுத்துச் செல்ல முடியாமல் பல ஆண்டுகள்வீரர்கள் தவித்ததாக கதைகள் உண்டு.
பின்னர், 1200 வீரர்கள் மற்றும் 19 யானைகளின்உதவியுடன் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும்கூறப்படுகிறது.
இந்தக்கோட்டையை பல ஆண்டுகள் முன்னின்று கட்டியதளபதி டி லனோய். தனது வாழ்நாளின் பெரும்பகுதியைஇந்தக் கோட்டையில் தான் கழித்துள்ளார்.
கோட்டையினுள் பழைய மாதா கோவில் போன்றுஅமைந்த ஒரு கட்டிடம் இடிந்த நிலையில் உள்ளது.இங்கு தான் தளபதி டி லனோய் அவரது மனைவி, மகன்ஆகியோரது கல்லறைகள் உள்ளன.
கோட்டையினைச் சுற்றிவரும்போது, ஒரு அமைதியானசூழல் இருப்பதை காணலாம். விசித்தரமான தனிமைஉணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.கோட்டையினுள் பெரிய அரண்மனையோ, கோவிலோஇல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அளப்பரிய பணிகளைமன்னர் மார்த்தாண்டவர்மாவும், தளபதி டி லனோயும்திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளனர். இந்த கோட்டைஉருவான பின்னரே சுற்றியுள்ள ஊர்களில் அமைதிஉருவானது. மன்னரால் பொன்மனை அணையும்,கால்வாயும் உருவாக்கப்பட்டதால், விளை நிலங்கள்செழித்து கன்னியாகுமரியை வளமாக்கின.
இந்தக் கோட்டை ஒரு காலத்தில், கைதிகளை காவலில்வைத்திருக்கும், களமாகவும் விளங்கியுள்ளது.திப்புசுல்தானுக்கு எதிராக கிழக்கிந்திய கம்பெனிபோரிட்டபோது பிடிபட்ட கைதிகளை கிழக்கிந்தியகம்பெனி இங்கு பாதுகாப்பாக வைத்திருந்ததாககூறப்படுகிறது.
தளபதி டி லனோய், மன்னர் மார்தாண்டவர்மாவிற்கு 37ஆண்டுகள் நம்பிக்கையான படைத்தளபதியாகவும்,நண்பராகவும், இருந்தார்.
திருவிதாங்கூர் அரச வீரர்களுக்கு தற்காலபோர்த்தந்திரங்களை இவர்தான் பயிற்சி அளித்தார்.தனது 62 வயதில் மரணம் எய்தினார். இவருடையகல்லறையின் மேல் தமிழிலும் லத்தீன் மொழியிலும்இவரைப் பற்றிய விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் தொல்பொருள் ஆய்வுத் துறையினர்கோட்டையின் அருகே ஒரு சுரங்கப்பாதையினைகண்டுபிடித்துள்ளனர். அந்தப் பாதை கோட்டையிலிருந்துபத்மநாபபுரம் அரண்மனைக்கு ரகசியமாக செல்லும்வகையில் அமைந்துள்ளது.
கோட்டை தற்போது தமிழக வனத்துறையின்கட்டுப்பாட்டில் உள்ளது. வனத்துறை சார்பில்அமைந்துள்ள மீன் காட்சியகமும், பூங்காக்களும்சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில்அமைந்துள்ளன.
இந்தக்கோட்டையை புதுப்பிப்பதற்காக தமிழ்நாடு அரசு 7லட்ச ரூபாய் செலவு செய்துள்ளது. சுற்றுலா பயணிகள்அனைவரும் கண்டிப்பாக காண வேண்டிய ஒரு இடம்உதயகிரி கோட்டையாகும்.
இப்ப கோட்டையை சுற்றி பார்க்கலாம் வாங்க...
இப்ப கோட்டையை சுற்றி பார்க்கலாம் வாங்க...
மேலே நீர் நிறைஞ்ச குளத்தை சுத்த படுத்தும் போது நிறைய பீரங்கி குண்டுகள் கிடைச்சிருக்கு. ஏன்னா இந்த கோட்டை பீரங்கி துப்பாக்கி போன்ற போர் ஆயுதங்கள் செய்யும் தொழில் கூடமாகவும், ஆயுத சேமிப்பு கிடங்காகவும் இருந்திருக்கு.
நாம போறவழியெல்லாம் மூங்கில் காடுகளும், இயற்கை சூழ்நிலையும் மனசை கொள்ளை கொள்ளுது. நடைபாதைகள் எல்லாம் அழகாக கட்டப்பட்டு இருக்கு. காட்டு பகுதியையும், மான்களையும் பார்க்கும் போது பிரமாண்டமான அரண்மனைகள் இல்லாமலும், கோட்டை எளிமையாக வும் அதே நேரத்துல அழகாவும் காணபடுது.
நாம போறவழியெல்லாம் மூங்கில் காடுகளும், இயற்கை சூழ்நிலையும் மனசை கொள்ளை கொள்ளுது. நடைபாதைகள் எல்லாம் அழகாக கட்டப்பட்டு இருக்கு. காட்டு பகுதியையும், மான்களையும் பார்க்கும் போது பிரமாண்டமான அரண்மனைகள் இல்லாமலும், கோட்டை எளிமையாக வும் அதே நேரத்துல அழகாவும் காணபடுது .
நுழைவு கட்டணம் 10 ரூபாயும், ஸ்டில் கேமராவிற்கு 30 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 50 ரூபாயும் வசூலிக்கபடுது .சில முறை கேடுகள் நடந்தாலும் ,இங்க பெரும்பான்மையான இடம் வனபகுதிகளா இருக்குறதால காதலர்களாய் இல்லை நண்பர்களாய் வரும் ஆண் -பெண்களுக்கு அனுமதியில்லை. குடும்பத்துடன் வருபவர்களுக்கும் தனியாய் வரும் ஆண்கள் தனியாய் வரும் பெண்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுது (அப்ப தனித்தனியா போய் ஜாய்ன் பண்ணிக்கலாமான்னு குதர்க்கமா யாரும் கேள்வி கேக்காதீங்கப்பா)!
No comments:
Post a Comment