பெங்களூர் மாநகர பேருந்துக் கழகம் நாட்டிலேயே முதன்முறையாக எலக்ட்ரானிக் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
போக்குவரத்து துறையிடம் முறையான அனுமதி பெற்றதையடுத்து கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று துவங்கி வைத்தார்.
இன்னும் மூன்று மாதத்திற்கு மெஜஸ்டிக் பகுதியிலிருந்து கடுகோடி வரை சோதனை முறையில் இயக்கப்படும் இந்த பேருந்து, விரைவில் விமான நிலைய வழித்தடங்களிலும் இயக்கப்பட உள்ளது.
இந்த பேருந்தின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரம் ஆகும். மேலும், பேட்டரியில் இயங்குவதால் கார்பன் புகை வெளியிடாது என்பதால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராது.
ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கி.மீ வரை ஓடும்.
12 மீட்டர் நீளம் கொண்ட இந்த பஸ் 14.3 டன் எடை கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 96 கிமீ வேகத்தில் செல்லும்.
தற்போதைய நிலையில் இந்த பேருந்தை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட் மெஜஸ்டிக் பகுதியில் மட்டுமே உள்ளது.
இந்த பேருந்தின் மதிப்பு ரூ.2.7 கோடியாகும். மெஜஸ்டிக் பகுதியிலிருந்து கடுகோடி வரையில் பயணக்கட்டணமாக ரூ.80 வசூலிக்கப்படுகிறது.அதேவேளை, ஒரு கிலோமீட்டர் இந்த பஸ்சை இயக்குவதற்கு ரூ.4 மட்டும செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு செலவும் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சீனாவை சேர்ந்த சென்ஸென் பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்பு இது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்பட பல வெளிநாடுகளில் இந்த பஸ் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற சுமார் 5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:
Post a Comment