Sunday, 16 March 2014

நாம் ஓட்டு போடும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம். (Electronic Voting Machine) பற்றிய விழிப்புணர்வு பார்வை...



மின்னணு வாக்குப்பதிவு :
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நம் இந்தியாவில், இன்னும் சில வாரங்களில் தேர்தல் திருவிழா 'களை' கட்டிவிடும். கோடை வெயிலுக்கு மத்தியில் அனல் பறக்கும் பிரசாரங்களால் மக்கள் திக்குமுக்காடிப் போவார்கள். மிகப் பெரியதொரு ஜனநாயக நடவடிக்கையான நமது தேர்தல் பணிகள், காலத்திற்கேற்ப பல மாற்றங்களைக் கண்டு, இன்று மின்னணு வாக்குப்பதிவு முறை என்ற நவீன பரிணாமத்தைத் தொட்டுள்ளது. வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகள் பலவும் இன்னமும் பத்தாம் பசலித்தனமாக தேர்தலை நடத்திக் கொண்டிருக்கையில், அவர்களுக்கு முன்னோடியாக நமது தேர்தல் நடைமுறைகள் அமைந்துள்ளன. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மின்னணு வாக்குப் பதிவு முறை, மேலை நாடுகளை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. ஆயினும், மின்னணு வாக்குப் பதிவை இங்குள்ள சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் (Electronic Voting Machine)நம்பகத்தன்மை குறித்து சில கட்சிகள் சந்தேகங்களைக் கிளப்பின. 

 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியுமா? 

இந்த கேள்வியை எழுப்பும் முன், அந்த இயந்திரத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம். 

நாம் பயன்படுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், ஐதராபாத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனமும் தயாரிக்கின்றன.இந்தக் கருவியானது 'வாக்குப்பதிவு இயந்திரம்', 'கட்டுப்பாட்டுக் கருவி' என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது.தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் கட்டுப்பாட்டுக் கருவி இருக்கும். அவர், 'பீப்' என்ற ஒலியுடன் சமிக்ஞை கொடுத்தால் தான் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்ய முடியும்.

ஒரு மின்னணு இயந்திரத்தில், 16 வேட்பாளர்கள் வீதம் கொண்ட 4 வாக்குப்பதிவு சாதனங்களை இணைக்க முடியும். இந்த வகையில் 64 வேட்பாளர்களுக்கு ஒரு மின்னணு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.

தற்போது ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சமாக 3840 வாக்குகளை பதிவு செய்ய முடியும். ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சமாக 5 வாக்குகளை மட்டுமே இதில் பதிவு செய்யலாம்.

இயந்திரத்தில் பதிவாகும் வாக்கு விவரங்களை, குறைந்தது 10 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதற்கு, 6 வோல்ட் கொண்ட பேட்டரி பயன்படுத்துவதால், வாக்குப்பதிவின் போது மின்சாரம் தாக்கும் அபாயம் எதுவும் இல்லை. பேட்டரியை அகற்றிவிட்டாலும் கூட, இயந்திரத்தில் பதிவான வாக்கு விவரங்கள் அதன் நினைவகத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். 

அரசியல் கட்சிகளிடமும், நீதிமன்றத்திலும் இவற்றையெல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையம் நிரூபித்த பின்னரே, 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 3 மாநிலங்களைச் சேர்ந்த 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முதல் முறையாக இந்த இயந்திரத்தை சோதனை முறையில் பயன்படுத்தியது. ஆனால் இன்றும் சில கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு முறையை குறை கூறி வருகின்றன. அதன் நம்பகத் தன்மை குறித்தும் அவை கேள்வி எழுப்புகின்றன. பதிவு செய்யப்படும் வாக்குகள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு மட்டுமே விழும்படி இயந்திரத்தின் செயல்பாடுகளை மாற்றப்பட்டதாக, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. குற்றம்சாட்டியது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்கு விவரங்களை மாற்றவோ, சேதப்படுத்தவோ முடியாது என்று உறுதியாகக் கூறும் இந்தியத் தேர்தல் ஆணையம், அதன் நம்பகத் தன்மை குறித்து எழுப்படும் சந்தேகங்களுக்கு அவ்வப்போது விளக்கமளித்து, அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை புறந்தள்ளி வந்துள்ளது. 

எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும் ஆதரவாக வாக்குகள் விழும் வண்ணம் இயந்திரத்தில் மோசடி செய்யவோ, அல்லது இயந்திரத்தை சேதப்படுத்தவோ இயலாது என்பதை ஆணையம் தெளிவாக விளக்கியுள்ளது. 

மின்னணு வாக்குப்பதிவு முறையால் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் எந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் இருந்தன. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தக் குறைபாடு காணப்பட்டது. ஆனால் அதற்கு இடம் தராதவகையில், பின்னர் நடந்த தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கையில் சில மாற்றங்களை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது.

'மாஸ்டர் கவுன்டிங் மெஷின்' (Master Counting Machine) என்ற இம்முறையில், அனைத்து இயந்திரங்களிலும் பதிவான வாக்குகள் தொகுக்கப்பட்டு, மொத்தம் பதிவான வாக்கு எண்ணிக்கைகள் மட்டுமே தெரியும்படி செய்யப்பட்டது. 

எழுத்தறிவற்ற பாமர மக்களும் எளிதில் கையாளும் வகையில், தவறுகள் நேராத வண்ணம் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு வாக்காளர் ஒருமுறை வாக்குப்பதிவு பொத்தானை அழுத்திய பின், தவறுதலாக மீண்டும் பொத்தானை அழுத்திவிட்டாலும் கூட, முதலில் பதிவான வாக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். இதனால் செல்லாத வாக்கு என்பது கிடையாது. 

பழைய வாக்குப் பதிவு முறையுடன் ஒப்பிடும்போது வாக்கு எண்ணிக்கையிலும், முடிவுகளை அறிவிப்பதிலும் ஏற்படும் கால தாமதம், இம்முறையில் தவிர்க்கப்படுகிறது. முடிவுகள் சில மணி நேரங்களில் வெளியாகிவிடுக்ன்றன. 

எழுது பொருள் செலவுகள், அதிக மனித ஆற்றல், நேர விரயம் போன்றவை மின்னணு வாக்குப்பதிவு முறையில் மிகவும் குறைவு. 30- 40 மணி நேரத்தில் செய்யப்பட்டு வந்த பணிகள் தற்போது 4- 5 மணி நேரங்களில் முடிந்து விடுகின்றன. வாக்குப்பதிவுத் தாள், அவற்றை எடுத்து செல்ல வேண்டியதில் உள்ள சிக்கல்கள் தற்போது குறைவு. 


 ரசீது வழங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விரைவில் அறிமுகம்...


தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு  நாடாளுமன்ற தேர்தலை நடத்த 13 லட்சம் மின்னணு இயந்திரங்கள் தேவைப்படும். ஒரு இயந்திரத்தை தயாரிக்க ரூ.13 ஆயிரம் விதம் ரூ. 1,692 கோடி நிதி ஒதுக்க உள்ளது.மேலும்  இந்த இயந்திரத்தின் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ரசீது வாக்கு சாவடியிலேயே திரும்பப் பெறப்பட்டு தனியாக சேகரிக்கப்படும்.




என்னுரை :

ஒரு வாக்கு சாவடி ஒரு இயந்திரத்தில் எத்தனை வாக்கு பதிவு ஆகி இருக்கும் என்று அந்த வாக்கு சாவடி முகவருக்கு தெரியும்,அந்த விவரத்தை வைத்து வாக்கு என்னும் இடத்தில் ஒவ்வரு இயந்திரம்மாக தான் என்ன படும் அந்த இயதரத்தில் பதிவான வாக்கு கூறப்படும்  படும் .அபொழுது எந்த ஊர் வாக்கு சாவடி எந்தனை வாக்கு கிடைத்து இருக்கும் என்று தெரிந்துவிடும் . வாக்கு பணம் கொடுத்த கட்சி இதன் மூலம் வாக்காளர்கள் மிரட்டபடலாம்.அத்த ஊருக்கு எந்த நன்மையையும் பண்ணாமல் விட்டுவிடலாம்.

முன்பு இந்த பிரச்சனையல் தான் வாக்கு சீட்டு முழுவதும் கலக்கி என்ன பட்டது. 
ஓட்டு பதிவு இயதிரத்தில் சில முறை கேடு தவிர்க்க.ஒட்டு இயதிரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் இம்போளுது சில முறை முலம் ஓட்ட படுகிறது தேசிய கட்சி, மாநில கட்சி, பதிவு பெற்ற கட்சி, சுயட்சை. அகர வரிசை பின் பற்ற படுகிறது .இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி இட்ட உடன் எந்த இடத்தில நம் கட்சி இடம் பெரும் என்பது தெருந்து விடும்.அதற்கு தகுந்தார் போல மென் பொருள் சில மாற்றி விட்டால் குறிப்பிட்ட கட்சி வாக்கு அதிகம் விழும் படி செய்தால்.இதை தடுக்க தேர்தலுக்கு முந்திய தினம் அணைத்து வேட்பாளர் முன்னிலை குழுக்கள் போட்டு எந்த வேட்பாளர் சின்னம் எங்கு வர வேண்டும் என்பது அபொழுது முடுவு பண்ணலாம் .ஒட்டிய பின் சீல் வைத்து வேட்பாளர் முகவர் காவலுக்கு வைக்க வேண்டும்.என்ன இபொழுது மறு நாளே வாக்கு என்ன படுவது இல்லை பலத்த சந்தேகத்தை உண்டுபன்னிகிறது.முன்பு எல்லாம் மறு நாளே என்னபடும்.வாக்கு சாவடிக்கும் வாக்கு என்னும் இடதுக்கும் அதிக பட்சம் 100கிமி இருக்கும் அதற்கு 10 மணி நேரம் போதாது?யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு ரசீது அளிக்கப்படவேண்டும். 

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இந்திய ஜனநாயகத்தைப் போலவே, இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப் படுத்திய மின்னணு வாக்குப் பதிவு முறையும், வலுவாகவும் ஆரோக்கியமாகவும் போற்றத்தக்கதாகவும் உள்ளன.

ஆக்கம் & தொகுப்பு : மு .அஜ்மல் கான் .

No comments:

Post a Comment