சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி 1420 அஹ்மத் இப்னு மஜீத் ஓமான் தேசத்தில் பிறந்த ஒரு ஆற்றல் மிகுந்த கடலோடி.
மீனவ பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர், தன் தந்தையிடமிருந்து பல கடலியல் மரபு சார்ந்த அறிவை கற்றுத் தெளிந்தார்.
இந்தியா, இலங்கை, கீழைத்தேய நாடுகள் மற்றும் சீனாவிற்கு கடற் வழி பயணம் மேற்கொண்டு வணிக சாத்துக்களை பாதுகாப்புடன் மீண்டும் அரேபியாவுக்கு கறை சேர்த்த சிறந்த மாலுமியாக திகழ்ந்தவர் இப்னு மஜீத்.
ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் பயணப்பட்டு நன்கு அறிமுகவானவர்.
ஒரு நூலில் குறிப்பிட்ட அளவு இடைவெளியில் அடுத்தடுத்து பல முடிச்சுகள் போட்டு ஒரு முடிச்சை பற்களில் கடித்து துளையுள்ள சிறிய அட்டை ஒன்றின் மூலம் சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரத்தின் கோணங்களை கணக்கிட்டு அதன் மூலம் நடுக்கடலில் கப்பல் இருக்கும் நிலை, செல்ல வேண்டிய எல்லை ஆகியவற்றை துல்லியமாக கணிக்கும் திறன் பெற்றிருந்தார்.
இவரிடம் 11 நூற்றாண்டு காலத்து ஆந்தலூசியா திசை மானியும் அதே சமயத்தில் சமகால சீன மாலுமிகள் பயன் படுத்தும் திசை மானிகளையும் கைவசம் வைத்து பயன்படுத்தி வரலாற்று ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் மனிதர் update ஆக இருந்திருக்கிறார்.!
கி.பி1490 அஹ்மத் இப்னு மஜீத் எழுதிய புத்தகம் Kitab al-Fawa’id fi Usul ‘ilm al-bahr wa al-Qawa’ed, (Book of Useful Information on the Principles and Rules of Navigation ) உலகின் முழு கடற் பயண வழித்தடங்களில் பாதி வழித்தடங்களை குறித்து அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இது கடல்சார் துறைக்கு கட்டற்ற கலைக்களஞ்சியமாக திகழ்கிறது.இந்த புத்தகம் தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் தேசிய நூலத்தில் உள்ளது.இவரது பல நூற்கள் பிரெஞ்சு மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.
1498 போர்ச்சுகீசிய நாடு காண் பயணி?! வாஸ்கோடகாமா இந்திய பயணத்திற்க்கு ஆப்பிரிக்கவின் கென்யா (மலிந்தி துறை முகத்திலிருந்து) தென்னிந்திய மலபார் கடற்கறைக்கு ஆழ்கடல் பயணத்திற்க்கு உதவியவர் அஹ்மத் இப்னு மஜீத் ஆவார். வாஸ்கோடாமாவுடன் இந்திய பயணத்தில் உடன் சென்ற குழு உறுபினர்களில் ஒருவரான Álvaro Velho எனும் படை வீரர் எழுதிய குறிப்பு Roteiro da viagem de Vasco de Gama எனும் புத்தக்தில் இப்னு மஜீதை மொம்பசாவில் சந்தித்து இந்திய பயணத்திற்க்கு வழிகாட்டுமாறு கேட்டுக் கொண்டார் வாஸ்கோடகாமா என அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் கட்டுமான தொழில்நுட்பம், கடலில் ஏற்படும் நீர் சுழற்சி, மணற் திட்டுகள், தட்ப வெப்ப சூழ்நிலை, பருவ காலங்களில் காற்றின் திசைவேகம், சூறாவளி , வசந்த காலங்களில் பயணிக்கும் பறவை இனங்கள், மற்றும் வானவியல் குறித்த பட்டறிவை ஏடுகளில் எழுதினார்.இப்னு மஜீத் எழுதிய கடல் சார்ந்த புத்தகம் மட்டும் சுமார் 30 க்கும் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு குறிப்பு.
அஹ்மத் இப்னு மஜீத்தை அன்றைய அரபுகள் مُعَلِّم முஅல்லிம் என அழைத்தார்கள்.
முஅல்லிம் என்பதற்கு ஆசிரியர் என பொருள்.
ஐரோப்பிய கடலோடிகள் இவரை Master of Marine என்று அழைத்தார்கள்.
தொகுப்பு : மு. அஜ்மல் கான்.