Thursday 30 April 2020

மரணம் கொரோனாவால் வருமா இல்லை பட்டினியால் வருமா ?? ஒரு சிறப்பு பார்வை..

இந்தியாவிலே யே டாப் மூன்று மாநிலங்களில் கொரோனா வைரசைசிறப்பாக கட்டுப் படுத்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருந்தது.
லாக் டவுன் முற்றிலுமாக கடைபிடிக்கப்படவில்லை என்றாலும் ஓரளவு எஃபெக்ட்டிவ்வாக இருந்ததே இதற்குக் காரணம்.
உயர்நடுத்தர, மற்றும் நடுத்தர மக்களை விடுங்கள்.. அன்றாடம் உழைத்தால்தான் சோறு என்ற நிலையில் இருக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கூட அங்கங்கே புலம்பினாலும் எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு இதற்கு ஒத்துழைத்தார்கள். பசித்த வயிறுகளை எல்லாம் தேடித் தேடி உதவிய தன்னார்வலர்களுக்குதான் நாம் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு ...ஆனால் இந்தளவுக்கு கட்டுப்பாட்டோடு இருந்ததை திடுமென்று ஐந்து நகரங்களில் இந்த கம்ப்ளீட் லாக்டவுன் என்று அறிவித்து மொத்த ஃபர்னீச்சரையும் தூக்கிப் போட்டு சுக்கு நூறாக உடைத்திருக்கிறது இந்த அடிமை தமிழக அரசு..
வழக்கம்போல எந்த முன்னேற்பாடும் இல்லாமல் வந்த இந்த அறிவிப்பபால் நேற்று சென்னை, மதுரையில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பிடுங்கி panic buying செய்திருக்கிறார்கள்.. ஓரளவு கட்டுப்பாட்டோடு வீட்டுக்குள் அடங்கி இருந்த மக்கள் வேறு வழி இன்றி வீதிக்கு வந்து ஒருவர் மீது ஒருவர் விழுந்தடித்து பொருட்களை வாங்கி இருக்கிறார்கள்.
கொரோனா தொற்று சமூகப் பரவலாக ஆகிவிட்டதோ என்ற பயத்தில் தமிழக அரசு அறிவித்த இந்த எதிர்பாராத சடன் லாக்டவுன்தான் இப்போது இந்த தொற்று சமூகப் பரவலாக ஆவதற்கே வழி வகுத்திருக்கிறது.
ஒரே ஒரு தொடுகை போதும், ஒரே ஒரு தும்மல் போதும் கொரோனா பரவுவதற்கு. அவ்வளவு ஏன்.. ஐந்து நிமிடம் கொரோனா நோயாளியின் அருகில் இருந்து பேசினாலே தொற்று பரவுவது உறுதி..
இந்த நிலையில் இத்தனை மக்கள் இப்படி நெருக்கி அடித்து பொருடகளை வாங்கியதில் தொற்று பரவாதவர்களுக்கு கூட நிச்சயமாக தொற்று பரவி இருகக வாய்ப்பிருக்கிறத. இது ஒரு தமிழக அரசு ஏற்பாடு செய்த சமூகப் பரவல்.. இப்படி ஒரு கேவலமான ஐடியாவை தமிழக அரசுக்கு தந்த புத்திசாலி யார் என்றுதான் தெரியவில்லை.
மக்களை சொல்லியும் குற்றமில்லை. தேனியில் பரவாயில்லை.. முதலில் உழவர் சந்தையை புது பஸ்ஸ்டாண்டுக்கு மாற்றினார்கள். மக்களை சமூக இடைவெளி விட்டு நிற்க செய்து பொருட்களை வாங்க வைத்தார்கள். அது ஓரளவுக்கு எஃபெட்டிவ்வாக இருந்தது. திடீரென்று உழவர் சந்தைகளை மூடினார்கள். நகராட்சி வண்டிகளின் மூலம் இனி காய்கறிகள் தெருத்தெருவாக விற்கப்படும் என்று அறிவித்தார்கள்.. அது கூட புத்திசாலித்தனமான ஐடியாவாகவே இருந்தது.
அதே மாதிரி வண்டிகளும் பல பகுதிகளுக்கு வந்தன.. எல்லாம் இரண்டு நாட்களுக்குதான்.. அப்புறம் எந்த வண்டிகளும் வரவில்லை. வந்தாலும் வாடிய வதங்கிய காய்களாக கொண்டு வந்தார்கள். வேறு வழி இல்லாமல் மக்கள் காய்கறிகளை தேடி வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுப் போக ஆரம்பித்தார்கள்.
ஆனால் இந்த மளிகைப் பொருள் விஷயத்தில் தேனி நிர்வாகம் ஓரளவு வெற்றிகரமாகவே செயல்பட்டிருக்கிறது. தேனியின் முன்னணி டிபார்ட்மெண்டல் ஸ்டோகளை ஒருங்கிணைத்தார்கள். அந்த ஸ்டோர்களின் எண்களை பொதுவில் விநியோகித்தார்கள். நாம் வாட்ஸ் ஆப் மூலம் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கு ஆர்டர் போட்டால் வீட்டுக்கே வந்து அனைத்துப் பொருட்களையும் விநியோகம் செய்து விட்டுப் போகிறார்கள். அவர்களும் எங்களிடம் ஸ்டாக் இருக்கும் வரைக்கும்தான் இது சாத்தியம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஆக இனி தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
மருத்துவர் அமலோற்பவநாதனின் கருத்துப்படி இந்த லாக்டவுனின் மூலம் கொரோனா பெருந்தொற்றை தள்ளிப் போடலாமே ஒழிய முற்றிலுமாக ஒழிக்க முடியாது..
அதாவது எவ்வளவு நாள் லாக் டவுன் அறிவித்தாலும் இந்த தொற்று முற்றிலுமாக நிற்க வாய்ப்பே இல்லை என்கிறார்.
அது உண்மைதான். அதிலும் தமிழக கொரோனா நோயாளிகளில் 90 சதவீதம் பேர் அசிம்ப்ட்டமேட்டிக்காக இருக்கிறார்கள். அவர்ளுக்குள் நோய் இருப்பதே அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவதே இல்லை.. ஆனால் அவர்கள் மூலம் நோய் வழக்கம் போல பரவத்தான் செய்கிறது.
ஆக முப்பது நாட்கள் இல்லை.. முன்னூறு நாட்கள் ஆனாலும் இந்த அசிம்ட்டமெட்டிக் தொற்றாளர்கள் இருக்கும்வரை கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கவே முடியாது என்பதே நிஜம்.. அத்தனை அமசிம்ட்டமடிக் தொற்றாளர்களையும் அடையாளம் காண வேண்டும் என்றால்ஒட்டு மொத்த ஏழரை கோடி தமிழர்களையும் டெஸ்ட் செய்து ஆக வேண்டும். அதற்கான வாய்ப்போ வசதியோ சத்தியமாக நம் நாட்டில் அல்ல.. நம் மாநிலத்தில் சாத்தியமே இல்லை.
கேரளாவில் எப்படி நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்..?
சிம்பிள்.. உணவு, அத்தியாவசிய தேவை என்று மக்கள் வெளியே வர வாய்ப்பையே அரசு அவர்களுக்கு தரவில்லை. உணவில்லாதவர்களுக்கு உணவை அரசே வழங்கியது. அதன் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.. தமிழகத்தில் அப்படியா நடந்தது..?
இப்போதைக்கு நமக்கிருக்கும் ஒரே வழி தடுப்பூசிகளும் கோரோனா எதிர்ப்பு மருந்துகளும்தான்.. அதுவும் இப்போதைக்கு நம் கைவசம் இல்லை.
சரி.. இதற்கு என்னதான் தீர்வு..?
இப்படியே லாக்டவுனை நீட்டித்துக் கொண்டே போனாலும் பாதி மக்கள் பட்டினியால் செத்துவிடுவார்களே.. என்னதான் செய்ய முடியும்.?
அதற்கும் மருத்துவர்கள் ஒரு தீர்வை சொல்கிறார்கள்.. நினைக்கவே அச்சமாக இருப்பினும் அந்த தீர்வுதான் சரி என்று நமக்குத் தோன்றுகிறது.
தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் இந்த 90 சதம் அசிம்ப்ட்டமேட்டிக் தொற்றாளர்களுக்கு தமக்கு தொற்று வந்தது தெரியவில்லை என்பதைத் தாண்டி அவர்களை அறியாமலேயே அவர்களது உடல் அந்த தொற்றுக்கு எதிராக போராடி தானாக குணமாகிவிடுகிறது என்பதுதான் நம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் சிறப்பு.
கோமார்பிட் கண்டிஷன்ஸ் எனப்படும் சிக்கலான பிரச்சினை உள்ளவர்களான இதயநோய், நுரையீரல் பிரச்சினைகள், உயர் சர்க்கரை மற்றும் கட்டுப்படாத உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல கோமார்பிட் கண்டிஷன் உள்ளவர்களும் வயதானவர்களும்தான் இந்த தொற்று காரணமாக அதிகமாக பலியாகிறார்கள்.
மருத்துவர்கள் இப்போதுதான் இந்த ஹெர்ட் இம்யூனிட்டி தியரியை முன் வைக்கிறார்கள்.
கோரோனா தொற்று வந்தாலே நிறைய பேர் இறந்து போவது ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகளின் நிலைமை. ஏனென்றால் அங்கே உள்ள மக்களின் நோயெதிர்ப்பு சக்தி அவ்வளவுதான்.
ஆனால் இவ்வளவு அதிகமான நோயெதிர்ப்பு சக்தி உள்ள நம் நாட்டில் பேசாமல் லாக் டவுனை தளர்த்தி விடுவதுதான் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.. அதாவது வயதானோர், கோ மார்பிட் கண்டிஷன் உள்ளோர் குழந்தைகள் ஆகியோரை மட்டும் பத்திரமாக தனிமைப் படுத்திவிட்டு மற்றோரை எல்லாம் வெளியே அனுமதிப்பதுதான் சிறந்த வழி என்கிறார்கள்..
உடனடியாக தடுப்பூசியோ, அல்லது மருந்தோ கண்டுபிடிக்கப்பட முடியாது.. அதற்கு எப்படியும் ஒரு வருடமாவது ஆகும். அது வரை இந்த லாக்டவுனை நீட்டித்தால் பாதி மக்கள் தொகை மடிந்துவிடும்.. அப்படியே கண்டு பிடிக்கப் பட்டாலும் நூற்று முப்பது கோடி மக்களுக்கும் அதை எப்படி போடுவது.? எவ்வளவு பணம் செலவாகும்.. இது மாதிரி பிரச்சினைகள் எல்லாம் உள்ளன.
அதே போல லாக்டவுனை முடிவுக்கு கொண்டு வந்து கொரோனாவை சமூகப் பரவல் ஆக்கும் பட்சத்தில் அதிலும் வயதானோர் கோ மார்பிட் கண்டிஷன் உள்ளோர், குழந்தைகள் ஆகியோர் தனிமைப்படத்தப்படும் பட்சத்தில் ஆரோக்கியமானவர்கள்தான் வேளியே நடமாடுவார்கள்..
இயல்பாகவே அதில் தொண்ணூறு சதவீதம் பேரின் உடல் தானாக நோயை சரி செய்து கொள்ளும்.. எஞ்சிய பத்து சதம் பேருக்கு மருத்துவம் தரலாம். சரி செய்து கொள்ளலாம். அதை விட்டு லாக்டவுனை நீட்டித்துக் கொண்டே போனால் கோரோனாவால் உயிரிழப்பவர்களை விட அதிக அளவு மக்கள் பட்டினியால் செத்துப் போவார்கள் என்கிறார்கள்.
துவக்கத்தில் இருந்தே இந்த ஹெர்ட் இம்யூனிட்டி சிஸ்டத்துக்கு எதிராகவே நம் மனது சிந்தித்தாலும் இன்றைய நிலையில்,, நம் நாட்டு மக்களின் நோயெதிர்ப்பு சக்தியையும் மனதில் வைத்துப் பார்த்தால் எனக்கென்னமோ இந்த தியரிதான் இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே வழி என்று தோன்றுகிறது.
மத்திய அரசும், அதன் அடிமையாக கால் வருடும் இந்த தமிழக அரசும் என்ன செய்யப் போகிறது என்றுதான் தெரியவில்லை.-
மரணம் கொரோனாவால் வருமா.. இல்லை பட்டினியால் வருமா என்பதே அடிப்படை தினத் தொழிலாளியின் அன்றாட கேள்வியாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.. 
நமக்குள்ளும் இது பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் துவங்கட்டும்,,

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment