Thursday 9 April 2020

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த செகத்தினை அழித்திடுவோம் !!

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த செகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் கோபம் இலேசதானதல்ல. சாப்பாடு இல்லாமல் உலகில் நான்கு வினாடிகளுக்கு ஒருவர் பசியினால் இறந்துபோகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு. ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டும் 5 கோடி பேர் தினமும் பசியினால் துடி துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இந்த உலகத்தில் 15 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் செத்துப்போகிறார்கள். பசியால் இறந்துபோகின்ற அளவுக்கு உலகில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

பசி என்பது பெரும் துன்பம்தான். பசிக்காகவே மனிதன் உழைத்து உழைத்து சேமிக்கிறான். பசி மட்டும் இல்லாவிட்டால் மனிதனின் வாழ்க்கையே அடியோடு மாறியிருக்கும்.
ஒரு நேர உணவு இல்லாவிட்டால் எப்படி துடி துடித்துப் போகிறோம். பசியும் தாகமும் எங்களை பின் தொடருகின்றவை. அந்த இரண்டும் பூர்த்திசெய்யப்படாத எத்தனைபேர் எங்களின் காலடிக்குள் கிடக்கிறார்கள்.பசியையும் தாகத்தையும் எங்களுக்கு பூர்த்தி செய்யக் கிடைத்திருப்பதே பெரும் கொடையாகும். 
மற்றவர்களின் பசியை தீர்க்க நாம்  என்ன செய்கிறோம் என்பதனை யோசித்துப் பார்க்கவேண்டும்.
 ஆனால் அரசாங்கங்கள் மக்களின் பசியைப் போக்குவதற்கு என்ன செய்கின்றன.  

உணவில்லாமல் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் ஏழை மக்களின் அவல நிலையை படம் பிடித்து பதிவிடுங்கள், அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

செலவுக்கு காசில்லாமல் மனைவி பிள்ளைகள் முன்பு கூனிகுறுகி நிற்கும் தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுகுறு வியாபாரிகளின் நிலையை படம் பிடித்து அப்படியே வலைத்தளங்களில் பதிவிடுங்கள்.

அவர்கள் உங்களை வாயார வாழ்த்துவார்கள்.இறைவனது அருள் கிடைக்கும்.அதை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்புங்கள்..

அவன் தப்லீக் ஜமாத் பின்னாடியே அலைவது குறையும்.அரசின் மனசாட்சியை அது உசுப்பிவிடும்.

பத்தமடை கிழவியையும்ம்,பள்ளிவாசலில் அடிப்பதையும் திரும்ப திரும்பபகிர்வதால் என்ன பலன் ஏற்படப்போகிறது.

சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் என்ற பெயரே ஏற்படும்.

முஸ்லிம்கள் குறித்த எந்த எதிர்மறையான செய்தியையும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.அதை சங்கி மீடியாகாரன் சரியாக செய்வான்.

பதிலுக்கு சமூக அவலங்களை பகிரங்கப்படுத்தி வாயை அடையுங்கள்.

அன்பு உள்ளங்கள் அனைவரும் உதவி செஞ்சேன் என்று நிறைய பேர் போட்டோ எடுத்து அனுப்பி இருந்தீங்க..

ஏழை மக்களுக்கு நீங்க எல்லாம் உதவி செஞ்சதில்ல ரொம்ப சந்தோசம்..

கொஞ்சம் வருத்தம் அவர்களையும் சேர்த்து போட்டோ எடுத்து அனுப்புனதுல்ல..

நம்ம உதவி செய்கிறோம் என்று தயவுசெய்து யாரையும் போட்டோ எடுத்து தர்மசங்கடம் ஆக்காதீர்கள் அன்பு உறவுகளே..

தொடரட்டும் உங்கள் சேவை வளரட்டும் நல்ல மனிதம்..


உங்கள்  தோழன்  மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment