Wednesday, 8 April 2020

தப்லிக் ஜமாத் பற்றி பீலாவிடும் பீலா இராஜேஷ் !!


தில்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1200 பேர் கலந்து கொண்டார்கள் என்றும் அவர்களில் 1103 பேர் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொண்டார்கள் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா இராஜேஷ் அவர்கள் ஏப்ரல் 01 ஆம் தேதி ஊடகங்கள் முன் சொன்னாங்க.











அதன் பின் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் முறையே

ஏப்ரல் 1 - 110 பேருக்கும்
ஏப்ரல் 2 - 74 பேருக்கும்
ஏப்ரல் 3 - 101 பேருக்கும்
ஏப்ரல் 4 - 73 பேருக்கும்
ஏப்ரல் 5 - 85 பேருக்கும்
ஏப்ரல் 6 - 48 பேருக்கும்
ஏப்ரல் 7 - 67 பேருக்கும்
ஆக மொத்தம் இதுவரை டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 558 பேருக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களுக்கு பீலா இராஜேஷ் பேட்டி கொடுத்தார்.


இதுவரை எந்த சிக்கலும் இல்லை.

அடுத்து என்ன சொன்னார்?


தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 961பேருக்கு கொரனோ தொற்று இல்லை என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றார்.


மொத்தம் பரிசோதித்ததே 1103 பேருக்கு தான் என்று இவரே ஏப்ரல் 01ஆம் தேதி சொல்லிவிட்டார்.


நேற்று 961 பேருக்கு இல்லை என்றும் சொல்லிவிட்டார்.


அப்படியென்றால் மீதம் 1103-961= 142 பேருக்கு தானே கொரானோ இருக்கவேண்டும்.


பின் எப்படி 558 பேருக்கு கொரனோ என்று இத்தனை நாள் சொன்னார்?


எண்ணிக்கையளவில் மிகப்பெரிய வித்தியாசம் வருகிறதே!!!


மேலும் அடுத்த கேள்வியாக 558- 142 கழித்தால் 416 பேர் வருகிறார்களே இவர்களெல்லாம் யார்?


இதில் நாமெல்லாம் யோசிக்க வேண்டியதும் கவனிக்க வேண்டியதும் இது தான்.


இந்த எண்ணிக்கை விளையாட்டெல்லாம் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய, மக்களால் கேள்வி கேட்க முடிந்த, மக்களிடம் ஓட்டு கேட்டு போக வேண்டிய எடப்பாடியாே, விஜய்பாஸ்கராே செய்யவில்லை.


ஒரு அரசு அதிகாரி செய்தார்...  செய்யவைக்கப்பட்டார்.


என்றிலிருந்து...


முதல்வர் எடப்பாடி தமிழக கவர்னரை சந்தித்த நாள் முதல்...


அதுவரை டிவியில் தினமும் பேட்டி தந்த விஜய்பாஸ்கர் காணாமல் போய்விட்டார்.


பீலாராஜேஷ் வந்துவிட்டார்.


இதற்கு பலியாகி இஸ்லாமியர்கள் தான் தமிழ்நாட்டில் கொரோனா பரப்பும் ஏஜெண்ட் என்று நம்பியோர் நிலைமை என்ன?


இந்து Vs முஸ்லீம் அரசியல் அத்தனை கொரூரமான விளையாட்டு என்று எல்லாரும் புரிந்துக்கொள்ள வேண்டிய நேரம் இது தான்.


பொய் ஊர் முழுக்க யானை மேல் அமர்ந்து ஊர்வலம் வந்து முடிந்த பின் தான் உண்மை பொடி நடையாக தன் பயணத்ணை ஆரம்பிக்கும்......


தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல் .

No comments:

Post a Comment