Saturday, 16 December 2023

Are you looking for Job? How to send your CV /Resume Via Email??

How to Send your CV via email ??



When they said email us your CV,

you don't just send your CV alone you must compose an email .




Example




To: Email of the company you apply to




Subject: position you are applying for example (APPLICATIONS FOR THE POST OF ELECTRICAL/ INSTRUMENT SUPERVISOR) in Capital letters




Compose Email




Dear Employer/ HR Manager




I am very interested in applying for (ELECTRICAL ASISTANT ENGINEER ) that was advertised on media recently. My qualifications and skills matches your specifications almost exactly. Please take a moment to review my attached supporting documents.




It would be a sincere pleasure to hear back from you soon to discuss this exciting opportunity




Kind Regards

Name and surname

Mobile number

Email address




Attach your resume.

Don't scan CV, Doc file, Screenshot or in image format always send it in PDF format.

Sunday, 19 November 2023

நம்ம வாழ்வில் இறுதி நாட்களில் சிலரின் நிலை பற்றிய ஒரு தொலைநோக்கு பார்வை...

 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதனால், ஒருவர் உயிர் வாழத் தேவையானதை மட்டும் தேடி, உண்டு, வாழ்ந்து, மடிகின்றன. ஆனால், மனிதன் வாழ்வு அப்படியல்ல. இறுதிநாள் நம்பிக்கை என்பது குறிப்பிட்ட நாளை மட்டும் குறிப்பதில்லை, குர்ஆன் மற்றும் சுன்னாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்வின் நம்பிக்கையையும் குறிக்கிறது.யார் இந்த உலகில் ஓர் இறை நம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ, அவருடைய மறுஉலகத் துன்பங்களில் ஒன்றை இறைவன் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்ய "முன்வருகிறாரோ அவருக்கு இறைவன் இம்மையிலும், மறுமையிலும் உதவிசெய்கிறான். யார் ஒரு இறை நம்பிக்கையாளரின் குறைகளை மறைக்கிறாரோ அவரின் குறைகளை இறைவன் இம்மையிலும், மறுமையிலும் மறைக்கிறான். ஒருவர் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு இறைவன் உதவி செய்து கொண்டிருக்கிறான்.ஒருவரின் வாழ்க்கை மற்றும் மரணத்தின் முடிவு ஒருபோதும் எளிதானது அல்ல. அனுபவத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.

1. மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.

2,உடன் பிறந்த சகோதரனோ சகோதரியோ, இனிமேல் இவரால் ஒரு நையா பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லையென்றால் தானாக விலகி விடுவார்கள் அல்லது அவர்களால் நீங்கள் விலக்கப்படுவீர்...

3, வீட்டிற்கு வந்த மருமகள் உயிரை கொடுத்து மாமியாரை பார்த்துக் கொண்டாலும், தன் மாமியாருக்கு அவர் பெற்ற மகளுக்கு என்றும் ஈடாகவே மாட்டாள்... உண்மை தானே..

4,பெரும்பாலான மருமகள்கள் மாமியாரை விரும்புவதில்லை.. காரணம் தன் திருமணத்தின் போது மாமியார் தம் வீட்டாரிடம் அவர்களின் சக்திக்கு மீறி கேட்ட வரதட்சனை சீர் வரிசை கொடுமைகள் தான் அவளின் நினைவில் முன் வந்து நிற்க்கும் ..

5. வயதான பெற்றோர் பெரும்பாலும் வசதியுடன் இருக்கும் மகனிடமோ மகளிடமோ இருக்கவே விரும்புவார்கள்....காரணம் அவர்களால் தான் தனக்கு செலவழிக்க முடியும் என நம்புவதால். ஏழை மகனால் மகளால் தங்களை பார்க்க வசதி இருக்காது என்பதாலும்..

6, எவ்வளவு தான் இளமையை தொலைத்து மெஷின் மாதிரி வருடக்கணக்கில் சம்பாதித்து கொடுத்தாலும் மனைவியோ குழந்தைகளோ சகோதரிகளோ ஒரு குறிப்பிட்ட வயதில் 'எனக்கு அப்படி என்ன செய்து கிழிச்சீங்க?.." என்று கேட்காமல் விட மாட்டார்கள்.....

7, எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையாய் இருக்கும் போது அதற்கு மேல் அடுத்தவர்களுக்கு பாரமாய் வாழாமல் இருப்பது உத்தமம் .... தற்கொலை செய்வது தவறு என்பதால் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நடைபிணமாய் வாழ்வது என்பது பலருக்கு தவிர்க்க முடியாத வாழ்வியல் கொடுமை...

8, உடன் பிறந்த அண்ணன் தம்பி சாகோதரிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் .... சுயநலவாதிகளாய் மாறி விடுவர்.. சொத்துக்கள் இருந்தால் செல்வாக்கு உள்ளவன் நல்ல விலையுள்ள சொத்துக்களையும் தனக்கும் விலை குறைவானதை மற்றவர்களுக்கு தள்ளி விடுவான்...

9, தோள் கொடுக்கும் உறவுகளை விட, காலை வாரும் உறவுகளே அதிகம். ஒன்று வார்த்தைகளால் அல்லது செயல்களால்.

10, ஒருமுறை பொருளாதாரத்தில் வீழ்ந்த குடும்பம் எவ்வளவு போராடி எழுந்தாலும், நம் உறவினர்கள் அதை முதன்மைப்படுத்திப் பேசாமல் இருக்க மாட்டார்கள். (எப்படியோ கஷ்டப்பட்டுகிட்டு இருந்தவன் இன்னைக்கு நல்ல நிலைமை'ல இருக்கான்) என்று தான் பேசுவார்கள்.

11. ,ல் புத்திக்காரனுக்கு வாழ்க்கையோட சூட்சுமம் புரியும் போது, நடக்க முடியாத அளவுக்கு வயசாகிடும்.. அந்த வயசுல எல்லாம் தெரிஞ்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல...
தாம் முழுமையாக ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்வான்...

12, நாம நல்லா இருக்கணும்னு எந்தச் சொந்தக்காரனும் விரும்ப மாட்டான்.... நாம் கஷ்டப்பட்டால் உள்ளுற சந்தோசப்படுவான்..

13, பெண்கள் எப்பவுமே பாவப்பட்ட ஜென்மங்கள் தான்.. எவ்வளவு படிச்சிருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய பதவியில இருந்தாலும் சரி..

14, சில பெண்கள் தம் சுய லாபத்திற்காக நல்லா இருக்குற பல குடும்பங்களை பிரித்து சந்தோஷம் அடைகிறார்கள் .... இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..

15, முக்கியமா நம்மள பத்தி அதிகமா தப்பா பேசுறது பொறாமை பிடித்த நம்ம உறவினர்கள்... அப்புறம் அப்பா அம்மா, மேரேஜுக்கு அப்புறம் மனைவி.. வயசான காலத்துல நம்ம பிள்ளைங்க..


16, நாம் யாரும் திட்டமிட்டபடி நடக்கிற வாழ்க்கையை வாழவில்லை. நாங்கள் பின்னடைவுகளையும் இழப்புகளையும் சந்திக்கிறோம்.

17, ஒரு இறுதி ஆற்றல் எழுச்சியில் எதிர்பாராத, தெளிவான சிந்தனை அல்லது பேசுதல் ஆகியவை அடங்கும். இது "டெர்மினல் லூசிடிட்டி" என்று கூறுவர் .

18, நாம பிளான் பண்ண மாதிரி நமது  மரணம் நிகழாது..


ஆகவே, முதலில் விதிகளை தெரிந்து கொள்வதால் அதன் படி நடக்க வேண்டும் என்று இல்லை.


உயரத்தில் இருந்து குதித்தால் கீழே விழுவோம., விழுதால் அடி படும், வலிக்கும் என்பது விதி.

இல்லை நான் குதித்துப் பார்கிறேன். ஒருவேளை நான் கீழே விழாமல் காற்றில் மிதந்தாலும் மிதக்கலாம்...யார் கண்டது என்று குதித்து முயற்சி செய்து பார்க்கலாம். தவறு ஒன்றும் இல்லை.

விதிகள் தெரிந்தால், அதை கடை பிடித்தால் , வாழ்கை நன்றாக இருக்கும். அவ்வளவுதான்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
 


Friday, 25 August 2023

இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!


அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறிய வணக்க வழிபாடுகளில் ஒன்றே இஃதிகாஃபாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுடைய காலங்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் என்று உறுதியான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.


இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் இஃதிகாஃபுடன் தொடர்புடைய சட்டங்கள் பற்றிய விளக்கங்களை எம்மில் பலர் அறியாதவர்களாக உள்ளனர். எனவே, இச்சிறு தொகுப்பில் இஃதிகாஃப் தொடர்பான மார்க்கச் சட்டங்களைக் கேள்வி பதில் அமைப்பில் மிகச் சுருக்கமாக தொகுத்திருக்கின்றோம். அல்லாஹ் இதன் மூலம் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

1. இஃதிகாஃப் என்றால் என்ன?

பதில்: அரபு மொழியில் இஃதிகாஃப் என்ற வார்த்தைக்கு ஒரு இடத்தைப் பற்றிப்பிடித்திருத்தல் என்று பொருள் வழங்கப்படுகின்றது. மார்க்க அடிப்படையில் இஃதிகாஃப் என்பது: பள்ளிவாசலில் குறிப்பிட்ட அமைப்பில் அல்லாஹ்வுக்காகத் தங்கியிருத்தல் ஆகும்.

2. இஃதிகாஃபின் சட்டம் என்ன?

பதில்: குர்ஆன், ஸுன்னா, இஜ்மா உடைய ஆதாரங்களைக் கொண்டு இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான காரியமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:“பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும்போது அவர்களுடன் ஒன்று கூடதீர்கள்.” (அல்பகறா: 187)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யும் வரை ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்பு அவரது மனைவிமார்கள் அவரது மரணத்திற்குப் பின்பு இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி, முஸ்லிம்) இப்னுல் முன்திர், இப்னு குதாமா, நவவி(ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் இஃதிகாஃப் இருப்பது சுன்னத்தான காரியம் என்பது அறிஞர்களால் ஏகோபித்த முடிவு என்று கூறியிருக்கின்றார்கள்.

3. இஃதிகாப் இருப்பவர் தான் நாடிய போது இஃதிகாஃபை 
துண்டித்து விட்டு வெளியேறலாமா?

பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது இஃதிகாஃபைத் துண்டித்து விட்டு தான் நாடிய போது வெளியேறிச் செல்லலாம். இஃதிகாஃபைப் பூரணப்படுத்திய பின்பே வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.

4. இஃதிகாஃப் இருப்பவர் நோன்பாளியாக இருப்பது அவசியமா?

பதில்: சுன்னத்தான இஃதிகாஃப் (ரமளான் கடைசிப் பத்து நாட்கள் மேற்கொள்ளப்படுகின்றத இஃதிகாஃப்) இருப்பவர் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

5. பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது அவசியமா?

பதில்: அல்லாஹுத்தஆலா பள்ளிவாசலைக் கொண்டே இஃதிகாஃபைக் குறிப்பாக்கியுள்ளான். அல்லாஹுதஆலா கூறுகின்றான்: “பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:187)எனவே, இஃதிகாஃப் பள்ளிவாசலில் மாத்திரமே அமைந்திருக்க வேண்டும்.

6. எவ்வாறான பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்க முடியும்?

பதில்: ஜமாஅத் தொழுகை நடைபெறும் அனைத்துப் 
பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருக்கலாம்.
அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் பள்ளிவாசல்கள் 
எனப் பொதுப்படையாகவே கூறியுள்ளான். 

இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹில் “அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம்” எனத் தலைப்பிட்ட பின்பு மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் (2:187) வசனத்தை இடம்பெறச் செய்துள்ளார்கள்.

7. இஃதிகாஃபின் குறைந்த காலம் எவ்வளவு?

பதில்: இஃதிகாஃபின் குறைந்த காலம் ஒரு நிமிடமோ, ஒரு 
மணி நேரமோ, ஒரு நாளோ (24 மணி நேரமோ) இருக்கலாம்.

8. இஃதிகாஃப் இருப்பவர் மலம்ஜல தேவைகளுக்காகப் 
பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: மலம்ஜல தேவைகளுக்காக இஃதிகாஃப் இருப்பவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாம் என்பது குறித்து இப்னுல் முன்திர், இப்னு குதாமா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

9. ஏனைய தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: பள்ளிவாசலில் நிறைவேற்ற முடியாத அவசியத் தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு இஃதிகாஃப் இருப்பவர் வெளியேறிச் செல்லலாம். மேலும், அல்லாஹ் கட்டாயப்படுத்திய காரியங்களைச் செய்வதற்கும் வெளியேறிச் செல்லலாம். அது நீண்ட இடைவெளியை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

10. இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் 
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃபின் நிலை என்ன?

பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் 
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃப் முறிந்து விடும்.

நன்றி ;- வரஸத்துல் அன்பியா இணையதளம்.

Friday, 18 August 2023

YouTube சமூகத்தில் கோமாளிகள் பப்லிசிட்டிக்காக, பணத்துக்காக ஆபாசமாக உருவெடுக்கும் ஆபத்து !!





 YouTube ல  காசு சம்பாதிக்கலாம் என்று தெரிந்ததின் விளைவு பல சோம்பேறிகள் ,பைத்தியங்களின் வருகைக்கு காரணமா அமைந்துள்ளது 


சமூகத்தில் ஒரு கோமாளியை தெரிவு செய்து அவனுக்கு பப்லிஸிட்டி ஆசை காட்டி அவனை வெட்கம் கெட்ட கிறுக்குத்தனமான செயலில் ஈடுபட வைத்து நெகடிவ் பப்லிசிட்டி தேடிக்கொடுத்து அப்பறம் அவன் தொடர்பான வீடியோக்களை YouTube இல் அப்லோட் செய்து வருமானம் பார்க்கும் ஒரு சில கேவலம் கெட்ட பிழைப்பு புதிதாக உருவெடுத்துள்ளது 


இந்த மாதிரி கோமாளிகளை Troll செய்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் சில கூட்டமும், ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாத இந்த கூழ்முட்டைகளை Interview எடுக்கிறோம் என்ற பெயரில் வருமானம் பார்க்கும் சில கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது இதன் விளைவு நல்ல நோக்கத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்துக்கு பயன் தரக்கூடிய விடயங்களை YouTubeல எடுத்து சொல்லும் நல்ல மனிதர்களுக்கு இது பாதமாக அமைந்துள்ளது சிலர் YouTubeல இருந்து வெளியேறவும் இது காரணாமாக அமைகின்றது


 இதற்கு முழு பொறுப்பும் நாங்கள்தான் நாம் அந்த  கோமாளிகளின் உள் நோக்கம் தெரிந்தும் அதனை ரசித்து உண்மை என்று நம்பி பார்ப்பதும் அதற்கு ஆதரவு கொடுப்பதும் தான் Youtube காரனே அந்த கோமாளிகளை தன்னுடய சுயநலத்துக்காக வளர்த்து விட காரணமாக அமைகின்றது 


தன்னை வெகுளித்தனமான மனிதன் போல காட்டி கொள்வதும் ,தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல நடிப்பதும் ,Content இல்லாததுக்காக மற்றவனை விமர்சிப்பதும் ,ஆபாசமாக நடந்து கொள்வதும் ,Prank Video என்ற பெயரில் மற்றவனை தொந்தரவு பண்ணுவதும் ,விழிப்புணர்வு என்ற பெயரில் உண்மை போல நாடகம் அரங்கேற்றி மக்களை முட்டாள் ஆக்குவதும் , ஏற்கனவே வசதியாக இருக்கும் சில celebrity கள்  குறிப்பாக சீரியல் நடிகைகள் அப்பாவி மக்களை முட்டாள் ஆக்கி ஒன்றுக்கும் உதவாத பொருட்களை விளம்பரம் செய்து மக்களையும் அதனை வாங்க சொல்லி தன்னுடய சுயநலத்துக்கா மக்களின் பணத்தை வீணடிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள் 


மற்றும் சில நடிகைகள் பெருமைக்கு தன்னுடய வசதியை காட்ட home Tour ,Bedroom Tour என்று செய்வது போதாது Toilet Tour யையும் விட்டு வைக்காத சில மூதேவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் 


இத விட கேவலம் Food Review என்ற பெயரில் அவன் கொடுக்கும் பணத்துக்கும் சாப்பாட்டுக்கும் ருசி இல்லாத உணவை கூட வேற லெவல் என்று சொல்லி ஒரு கூட்டமும் சமூகத்தில் உலாவி வருகிறார்கள்


 யூதன் (இலுமினாட்டி) புதிதாக ஒவ்வொன்றை கண்டுபிடித்து அதற்க்கு நம்மை அடிமை ஆக்கி விட்டு மற்ற ஒன்றை கண்டுபிடிக்க சென்று விடுகிறான் நாங்கள் எமது அறிவை அதற்குள் மட்டுப்படுத்தி விடுகிறோம் 


முக்கியத்துவம் எதற்கு கொடுக்க வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்பாக இருங்கள் அது அறிவு மிக்க சமூகம் தோன்ற அடித்தளமாக இருக்கும்


உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் வளர்ந்து வரும் குழந்தைகளின் நலன் கருதி இப்படியானவர்களை புறக்கணியுங்கள் ,கண்டு கொள்ளதீர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மக்களுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்


இது தொடர்ந்தால் உங்கள் சந்ததியில் கூட சிலர் பப்லிசிட்டிக்காக, பணத்துக்காக ஆபாசமாக சமூக வலையத்தளங்களில்  உருவெடுக்கும் ஆபத்து உருவாகி விடும் இது எனது மனக்குமுறல் சரியென்றால் செயார் செய்யுங்கள்


இந்த லிஸ்டில் பலர் இருக்கிறார்கள் ஒரு சிலரை மாத்திரம் இங்கே சுட்டி காட்டியுள்ளேன் அவர்கள் பற்றி விவாதிக்காவோ ,தேடவோ ,சிரிப்பதுக்காக இதனை பதிவு செய்யவில்லை சிந்தித்து தெளிவு பெற மாத்திரமே இந்த பதிவு..



Thursday, 1 June 2023

குழந்தைகளுக்கு அவர்களது புகைப்படத்துடன் கூடிய ஸ்டிக்கர் லேபிளை பரிசளியுங்கள் !!

 







உங்களுடைய செல்லக் குழந்தைகளுக்கு அவர்களது புகைப்படத்துடன் கூடிய ஸ்டிக்கர் லேபிளை பரிசளியுங்கள் உங்களுடைய அண்ணன் தம்பி அக்கா. தங்கை. ஆகியோருடைய குழந்தைகளுக்கும் பரிசளிக்கலாம் இல்லையெனில் குழந்தைகள் உள்ள உங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்கள் நன்றி.

Saturday, 22 April 2023

குளச்சல் பிறை சர்சையும், விளக்கமும்!! ஒறு இஸ்லாமிய பார்வை...


இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!!

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிறை சர்ச்சை.எந்த சார்பும் இல்லாத என் தனிப்பட்ட கருத்தை பதிவிடுகிறேன், குளச்சலால் குழப்பம் தேவையில்லை….

கண்ணியாகுமரி குளச்சலில் பிறை பார்க்கப்பட்டதாக சொன்னாலும் அதை தமிழ்நாட்டில் நாம் ஏன் ஏற்பது இல்லை?

உண்மையிலேயே குளச்சல் தமிழகததின் ஒரு பகுதி தான் என்றாலும் பூகோள அமைப்பில் குளச்சல் தமிழகத்தின் பூகோள அமைப்பிற்கு முற்றிலும் மாறுபட்டது.

முதலாவது..

தமிழகத்தின் அனைத்து கடலோர ஊர்களும் கிழக்கு நோக்கிய கடற்கரைகளைக் கொண்டிருக்கும்போது நாகர்கோவிலுக்கு மேற்கே உள்ள ஊர்கள் அனைத்தும், அவை தமிழக எல்லைக்குள் வந்தாலும் மேற்கு நோக்கிய கடற்கரையை கொண்டவை. அதாவது இந்திய பெருங்கடலும் அரபிக் கடலும் இணையக்கூடிய பகுதிகளை தாண்டி இருக்கக்கூடிய ஊர்கள் அரபிக் கடலின் கடற்கரையைக் கொண்டவை. அதில் குளச்சலும் ஒன்று.

இரண்டாவது…


உண்மையில் குளச்சல் மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமே ஒரு காலத்தில் கேரளத்தில் ஒரு பகுதியாகவே இருந்தது.

சுதந்திரத்திற்கு பிறகும் கூட 1956 வரை கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் தான் இருந்தது. பிறகு தான் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. காரணம் அதன் அமைப்பு.

புவியியல் அடிப்படையில் குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் முதலிய ஊர்களெல்லாம் கேரளத்தின் தொடர்ச்சியாகவே உள்ளன.

புவி வரைபடத்தில் (Satellite Map) பார்த்தால் கூட கேரளாவிற்கென்ற புவியியல் அமைப்பு (மலைத் தொடர்ச்சி, கடற்மட்ட உயரம்) நாகர்கோவில் பகுதி வரை தொடர்வதை பார்க்க முடியும்.

மூன்றாவது…

கேரளாவின் கடற்கரைகளைப் போன்றே கடற்மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரமான (MSL - Mean Sea Level) ஊர்கள் இவை.

சாதாரணமாக நீண்ட அரபிக்கடற்பகுதியும் கடற்மட்டத்திலிருந்து உயர்ந்த நிலமும் (சராசரி MSL உயரம் 1150 மீட்டர்) கொண்ட கேரள மாநிலத்தில் நாட்டின் மற்ற பகுதிகளை விட ஒரு நாள் முன்பு பிறை தெரிவது இயல்பே..

எனவே, அதிகமான காலங்கள் கேரளாவிற்கு பிறை தென்படும் போது அதன் தொடர்ச்சியாக குளச்சல் நாகர்கோவில் போன்ற பகுதிகளிலும் தென்படுவது இயற்கையே. ரமழான் பிறை மட்டுமல்ல மற்ற மாதங்களின் பிறைகளும் இங்கு ஒரு நாள் முன்பே தென்பட்டுள்ளன.

எனவே மாநிலம் எல்லையில் இருந்தாலும் பூகோள அமைப்பில் அது மற்ற தமிழகத்தின் பகுதிகளுக்கு மாற்றமாக இருக்கும் காரணத்தால் வெறுமனே குளச்சலில் அல்லது அதன் சுற்று வட்டாரத்தில் மட்டுமே பார்க்கப்பட்டு வேறு எங்குமே பார்க்கப்படாத பிறையை முழு தமிழகத்திற்கும் ஏற்றுக் கொள்வது சாத்தியமாகாது.

அதாவது தமிழகத்தின் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள 950 கிலோமீட்டர் நீளத்துக்கும் பல்வேறு இஸ்லாமிய ஊர்கள் வழிநெடுக இருந்தும், எண்ணிலடங்கா மக்கள் பிறையைத் தேடியும், தகவல்களை உடனுக்குடன் பரப்ப வழிகள் இருந்தும் கூட மாநிலத்தில் மட்டுமல்ல நாட்டிலேயே எங்குமே பிறை தெரியாத போது புவியியல் அமைப்பில் வேறுபட்டிருக்கும் ஒரு ஊரின் பிறையை வைத்து ஒன்னரை லட்சம் ச.கிமீ கொண்ட முழு தமிழகத்திற்கும்‌ பிறையை முடிவு செய்வது சரியாகுமா ?

சிந்நியுங்கள் மக்களே....

தலைமை காஜி மற்றும் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த சில தகவல்களை பகிர விரும்புகிறேன்.

பிறை பார்த்த செய்திக்காக நேற்று மாலையில் தலைமை காஜியுடன் பல மார்க்க அறிஞர்கள், பிரமுகர்கள், ஊடகவியலர்கள் காத்திருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து பிறை பார்த்த செய்தி வந்தவுடன் கடிதம் வாயிலாக வாட்ஸ் அப்பில் உறுதி செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மௌலானா மௌலவி அப்ஸலுல் உலமா "ஷைக்குத் தப்ஸீர்"அல்ஹாஜ் R N K அபுசாலி பாசில் பாகவி, தமிழ்நாடு அரசு தலைமை காஜி, கன்னியாகுமரி மாவட்டம்.அரசாணை கையொப்பமிட்ட கடிதத்தில் குளச்சல் பகுதியில் பிறை தென்பட்டதாக ஜமாத் செயலாளர் அறிவித்துள்ளதை மாவட்ட தலைமை காஜியான தான் உறுதி செய்வதாக அறிவித்துள்ளார்.

அவர் பார்த்ததாக உறுதி செய்யாத நிலையில் அவர் குறிப்பிட்ட செயலாளரை தொடர்பு கொண்ட போதும் அவரும் பார்த்ததாக உறுதி செய்யவில்லை. அங்கிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் கடல் கரையில் அல்லது கடலுக்குள் சென்று மூன்று அல்லது ஐந்து வினாடிகள் பிறை தெரிந்ததாக முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டதால் அச்சாட்சியத்தை சென்னை வாழ் எளிய தலைமை காஜி ஏற்கவில்லை.

தமிழகத்தின் வேறு பகுதிகளில் இருந்து தகவல் ஒன்றும் வராத நிலையில் வெள்ளியன்று முதல் நோன்பு என்ற அறிவிப்பை காஜி வெளியிட்டார்.

பல தவ்ஹீத் இயக்கங்கள் அவரவர்கள் தனியாக கமிட்டி காஜி என்று அமைத்து அவர்களாகவே பிறை நிர்ணயம் செய்வது பல ஆண்டுகளாக தொடர்வதைப் போல் இந்த ஆண்டும் தொடர்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் குமரி சகோதரர்களிடையே இந்த பிறை பார்த்தல் விவாதங்கள் பகிரப்பட்ட போது நான் பெரிதும் மதிக்கும் குளச்சல் சார்ந்த தமிழகம் நன்கு அறிந்த சமூக ஆர்வலரிடம் விளக்கம் கேட்டேன்.

குமரி மாவட்ட ஜமாத்துகள் தமிழக அறிவிப்பை தவிர்த்து கேரள அறிவிப்பின்படி செயல்படுவதை குறிப்பிட்டதற்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கேரள முஸலியார் வழி நடத்துவதால் இந்த முறை பின்பற்றுவதாக கூறினார். கேரளத்தில் கோழிக்கோடு காப்பாடு முசலியார் அறிவிப்பில் கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து செயல்படுவதை அவர் கருத்து உறுதி செய்தது.

அப்பகுதி முன்பு திருவாங்கூர் சமஸ்தானத்துடன் கேரள பகுதிகளுடன் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாடு முழுவதும் முற்றிலும் சென்னை தலைமை காஜி அறிவிப்பை ஏற்று பிறை சார்ந்த நிகழ்வுகள் நடத்தி வந்த நிலையில் இவ்வருடம் இப்பிரச்சினை வருவதற்கு காரணத்தை ஆராய்வோம்.

குளச்சல் கடலோரத்தில் பார்த்ததாக ஊர்ஜிதம் செய்யாத பிறை பார்த்ததை இதுவரை தமிழகத்தின் ஏனைய பகுதிகளுடன் இணையாத குமரி மாவட்டம், தமிழ் நாடு முழுவதும் இப் பிறை பார்த்தலை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவது எந்த வகையில் பொருந்தும் என்று என் சிற்றறிவுக்கு தெரியவில்லை.

பெரும்பாலும் வானம் தெளிவாக நாடு முழுவதும் இருந்த நிலையில் பிறை பார்த்த அறிவிப்பு எங்கும் வரவில்லை. அறிவியல் சார்ந்தும் அன்றைக்கு பிறை தெரிய வாய்ப்பில்லை என்று பகிரப்பட்டது.

குளச்சலில் பிறை பார்த்த அறிவிப்பு வராமல் இருந்தால் பேசாமல் கேரள காப்பாடு முசலியார் அறிவிப்பை ஏற்று இருப்பார்கள் என்பது திண்ணம்.

இந்த கூப்பாடு வந்திருக்க வாய்ப்பில்லை.

அறிவார்ந்த கன்னியாகுமரி மாவட்ட சகோதரர்கள் ஆலோசித்து தமிழக பகுதிகளுடன் பிறை சார்ந்த முடிவெடுத்து நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் விழைகிறேன்.

இச்சூழ் நிலையில் சென்னை தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் 
எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.






யார் இந்த தலைமைகாஜி???அவர் ஏன் பிறை தெரிவதை தீர்மானிக்கவேண்டும்??

அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர் இவர்கள் நவாப் என்று அழைக்கப் படுகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின் ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய இவர்களின் குடும்பம் காஜி என்ற பெயராலேயே அழைக்கப் பட்டது. இவரது மூதாதையர்கள் பல மார்க்க விளக்க நூல்களை எழுதியவர்கள். குர்ஆனுக்கு உருது மொழியில் மொழி பெயர்ப்பு, தப்சீர் எனும் விளக்கவுரை என மார்க்கத்துக்கு அளவற்ற சேவைகள் புரிந்த இவர்களது குடும்பத்தை சார்ந்த அறிஞர்கள் ஆற்காடு நவாபுகளால் அரசு காஜியாக நியமிக்கப் பட்டனர். (அந்த காலத்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்).அன்றைய தமிழகத்தை ஆற்காடு நவாபுகளே ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜி சலாஹூத்தீன் அய்யூப் இந்த குடும்ப பாரம்பர்யத்தில் பிறந்தவர். உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய பல்கலைக் கழகமான எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

நவாபுகள் காலத்தில் 1800 களில் ராயப் பேட்டை திவான் தோட்டத்தில் மதரஸா முஹம்மதியா என்ற பெயரில் பள்ளிவாசலுடன் இணைந்த மார்க்க கூடத்தை இவர்களது முன்னோர்கள் நடத்தி வந்துள்ளனர். அதுவே தற்போதைய தலைமை காஜியின் அலுவலகமாகவும்,இருப்பிடமாகவும் உள்ளது.

இங்கு அரிய வகை நூல்களை கொண்ட நூற்றாண்டுகளை கடந்த ஒரு நூலகம் இயங்கி வருகிறது. சென்னையின் பழமையான நூலகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். உருது,பார்சி,அரபி மொழிகளின் பழமையான மேனுஸ்கிரிப்ட் என்று சொல்லப்படும் குர்ஆன்,மார்க்க,வரலாற்று நூல்களை தேடி உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள்,ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகின்றனர்.

கடைசியாக விஷயத்துக்கு வருவோம். தமிழக காஜியின் பத்வா அடிப்படையிலிலேயே தமிழக முஸ்லிம்கள் தங்கள் பெருநாள்களை கொண்டாடி வருகின்றனர். சுன்னத் வல் ஜமாத்இனரின் எந்த பத்வாவையும் ஏற்காத மாறாக முஷ்ரிக்குகள் என்று தங்கள் கருத்துக்களை ஏற்காத சுன்னத் ஜமாத்தினரையும் பிற அமைப்புகளை சார்ந்த முஸ்லிம்களையும் தூற்றி வரும் ததஜ அமைப்பினர் பிறை விஷயத்தில் தங்கள் விருப்பத்துக்கு தலைமை காஜியை பத்வா கொடுக்க வேண்டும் என நினைப்பதும், அவ்வாறு நடக்கவில்லையென்றதும் தலைமை காஜியின் வயதையும் அவர் மார்க்க அறிஞர் என்பதையும் பொருட்படுத்தாமல் மிகக் கேவலமாக ஏசி வருவதையும் சகிக்க முடியவில்லை.

இறுதியாக தலைமை காஜியை மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியுள்ளனர்.

தலைமை காஜி அவர்களை நன்கறிந்தவர்களுக்கு தெரிய அவர் மிக,மிக எளிமையானவர், மக்கள் எளிதில் அணுகக் கூடியவர் அது மட்டுமல்ல எந்த நிர்பந்தத்திற்கும் அடி பணியாதவர்.

தான் வகிக்கும் பொறுப்புக்காக அரசிடம் இருந்து சம்பளமோ,சலுகைகளோ, சைரன் காரோ, தலைமை அலுவலகமோ பெறாதவர்.

மாநிலம் முழுவதும் சென்னை தலைமை காஜி அறிவிப்பை ஏற்று ரமலான் மாதத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ஒற்றுமையுடன் ரமலானை வரவேற்று இறை பொருத்தத்தை பெற வல்ல இறைவன் அருள் புரிய இறைஞ்சுகிறேன்.

உங்கள்  மு.அஜ்மல் கான்.

Sunday, 1 January 2023

2023 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!


 பிறந்திருக்கும் 2023 புத்தாண்டு
  அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு வருடமும் இதே நாளில் ஒவ்வொரு பதிவு இட்டு வரும் நேரம் மனது புதிதாக பிறந்தது போல இருக்கும்.

ஆனாலும் 2018 இலங்கையில் ஈஸ்டர் குண்டு தாக்குதல்.

2020 கோவிட் ஊரடங்கு

2021 மீண்டும் கோவிட் அலை

2022 பொருளாதார சீரின்மை என நாடு ஒரு புறம் தள்ளாடினாலும் புதிய வாய்ப்புகள் புதிய மனிதர்கள் புதிய முயற்சிகள் என நகர்ந்து கொண்டே இருக்கிறது. 

 பிறந்திருக்கும் 2023 புத்தாண்டு  அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய இந்த ஆண்டும் வெற்றிகள் தொடர இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உங்கள் அஜ்மல் கான்