Friday, 25 August 2023

இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!


அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறிய வணக்க வழிபாடுகளில் ஒன்றே இஃதிகாஃபாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுடைய காலங்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் என்று உறுதியான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.


இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் இஃதிகாஃபுடன் தொடர்புடைய சட்டங்கள் பற்றிய விளக்கங்களை எம்மில் பலர் அறியாதவர்களாக உள்ளனர். எனவே, இச்சிறு தொகுப்பில் இஃதிகாஃப் தொடர்பான மார்க்கச் சட்டங்களைக் கேள்வி பதில் அமைப்பில் மிகச் சுருக்கமாக தொகுத்திருக்கின்றோம். அல்லாஹ் இதன் மூலம் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

1. இஃதிகாஃப் என்றால் என்ன?

பதில்: அரபு மொழியில் இஃதிகாஃப் என்ற வார்த்தைக்கு ஒரு இடத்தைப் பற்றிப்பிடித்திருத்தல் என்று பொருள் வழங்கப்படுகின்றது. மார்க்க அடிப்படையில் இஃதிகாஃப் என்பது: பள்ளிவாசலில் குறிப்பிட்ட அமைப்பில் அல்லாஹ்வுக்காகத் தங்கியிருத்தல் ஆகும்.

2. இஃதிகாஃபின் சட்டம் என்ன?

பதில்: குர்ஆன், ஸுன்னா, இஜ்மா உடைய ஆதாரங்களைக் கொண்டு இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான காரியமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:“பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும்போது அவர்களுடன் ஒன்று கூடதீர்கள்.” (அல்பகறா: 187)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யும் வரை ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்பு அவரது மனைவிமார்கள் அவரது மரணத்திற்குப் பின்பு இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி, முஸ்லிம்) இப்னுல் முன்திர், இப்னு குதாமா, நவவி(ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் இஃதிகாஃப் இருப்பது சுன்னத்தான காரியம் என்பது அறிஞர்களால் ஏகோபித்த முடிவு என்று கூறியிருக்கின்றார்கள்.

3. இஃதிகாப் இருப்பவர் தான் நாடிய போது இஃதிகாஃபை 
துண்டித்து விட்டு வெளியேறலாமா?

பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது இஃதிகாஃபைத் துண்டித்து விட்டு தான் நாடிய போது வெளியேறிச் செல்லலாம். இஃதிகாஃபைப் பூரணப்படுத்திய பின்பே வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.

4. இஃதிகாஃப் இருப்பவர் நோன்பாளியாக இருப்பது அவசியமா?

பதில்: சுன்னத்தான இஃதிகாஃப் (ரமளான் கடைசிப் பத்து நாட்கள் மேற்கொள்ளப்படுகின்றத இஃதிகாஃப்) இருப்பவர் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

5. பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது அவசியமா?

பதில்: அல்லாஹுத்தஆலா பள்ளிவாசலைக் கொண்டே இஃதிகாஃபைக் குறிப்பாக்கியுள்ளான். அல்லாஹுதஆலா கூறுகின்றான்: “பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:187)எனவே, இஃதிகாஃப் பள்ளிவாசலில் மாத்திரமே அமைந்திருக்க வேண்டும்.

6. எவ்வாறான பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்க முடியும்?

பதில்: ஜமாஅத் தொழுகை நடைபெறும் அனைத்துப் 
பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருக்கலாம்.
அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் பள்ளிவாசல்கள் 
எனப் பொதுப்படையாகவே கூறியுள்ளான். 

இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹில் “அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம்” எனத் தலைப்பிட்ட பின்பு மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் (2:187) வசனத்தை இடம்பெறச் செய்துள்ளார்கள்.

7. இஃதிகாஃபின் குறைந்த காலம் எவ்வளவு?

பதில்: இஃதிகாஃபின் குறைந்த காலம் ஒரு நிமிடமோ, ஒரு 
மணி நேரமோ, ஒரு நாளோ (24 மணி நேரமோ) இருக்கலாம்.

8. இஃதிகாஃப் இருப்பவர் மலம்ஜல தேவைகளுக்காகப் 
பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: மலம்ஜல தேவைகளுக்காக இஃதிகாஃப் இருப்பவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாம் என்பது குறித்து இப்னுல் முன்திர், இப்னு குதாமா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

9. ஏனைய தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: பள்ளிவாசலில் நிறைவேற்ற முடியாத அவசியத் தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு இஃதிகாஃப் இருப்பவர் வெளியேறிச் செல்லலாம். மேலும், அல்லாஹ் கட்டாயப்படுத்திய காரியங்களைச் செய்வதற்கும் வெளியேறிச் செல்லலாம். அது நீண்ட இடைவெளியை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

10. இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் 
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃபின் நிலை என்ன?

பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் 
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃப் முறிந்து விடும்.

நன்றி ;- வரஸத்துல் அன்பியா இணையதளம்.

Friday, 18 August 2023

YouTube சமூகத்தில் கோமாளிகள் பப்லிசிட்டிக்காக, பணத்துக்காக ஆபாசமாக உருவெடுக்கும் ஆபத்து !!





 YouTube ல  காசு சம்பாதிக்கலாம் என்று தெரிந்ததின் விளைவு பல சோம்பேறிகள் ,பைத்தியங்களின் வருகைக்கு காரணமா அமைந்துள்ளது 


சமூகத்தில் ஒரு கோமாளியை தெரிவு செய்து அவனுக்கு பப்லிஸிட்டி ஆசை காட்டி அவனை வெட்கம் கெட்ட கிறுக்குத்தனமான செயலில் ஈடுபட வைத்து நெகடிவ் பப்லிசிட்டி தேடிக்கொடுத்து அப்பறம் அவன் தொடர்பான வீடியோக்களை YouTube இல் அப்லோட் செய்து வருமானம் பார்க்கும் ஒரு சில கேவலம் கெட்ட பிழைப்பு புதிதாக உருவெடுத்துள்ளது 


இந்த மாதிரி கோமாளிகளை Troll செய்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் சில கூட்டமும், ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாத இந்த கூழ்முட்டைகளை Interview எடுக்கிறோம் என்ற பெயரில் வருமானம் பார்க்கும் சில கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது இதன் விளைவு நல்ல நோக்கத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்துக்கு பயன் தரக்கூடிய விடயங்களை YouTubeல எடுத்து சொல்லும் நல்ல மனிதர்களுக்கு இது பாதமாக அமைந்துள்ளது சிலர் YouTubeல இருந்து வெளியேறவும் இது காரணாமாக அமைகின்றது


 இதற்கு முழு பொறுப்பும் நாங்கள்தான் நாம் அந்த  கோமாளிகளின் உள் நோக்கம் தெரிந்தும் அதனை ரசித்து உண்மை என்று நம்பி பார்ப்பதும் அதற்கு ஆதரவு கொடுப்பதும் தான் Youtube காரனே அந்த கோமாளிகளை தன்னுடய சுயநலத்துக்காக வளர்த்து விட காரணமாக அமைகின்றது 


தன்னை வெகுளித்தனமான மனிதன் போல காட்டி கொள்வதும் ,தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல நடிப்பதும் ,Content இல்லாததுக்காக மற்றவனை விமர்சிப்பதும் ,ஆபாசமாக நடந்து கொள்வதும் ,Prank Video என்ற பெயரில் மற்றவனை தொந்தரவு பண்ணுவதும் ,விழிப்புணர்வு என்ற பெயரில் உண்மை போல நாடகம் அரங்கேற்றி மக்களை முட்டாள் ஆக்குவதும் , ஏற்கனவே வசதியாக இருக்கும் சில celebrity கள்  குறிப்பாக சீரியல் நடிகைகள் அப்பாவி மக்களை முட்டாள் ஆக்கி ஒன்றுக்கும் உதவாத பொருட்களை விளம்பரம் செய்து மக்களையும் அதனை வாங்க சொல்லி தன்னுடய சுயநலத்துக்கா மக்களின் பணத்தை வீணடிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள் 


மற்றும் சில நடிகைகள் பெருமைக்கு தன்னுடய வசதியை காட்ட home Tour ,Bedroom Tour என்று செய்வது போதாது Toilet Tour யையும் விட்டு வைக்காத சில மூதேவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் 


இத விட கேவலம் Food Review என்ற பெயரில் அவன் கொடுக்கும் பணத்துக்கும் சாப்பாட்டுக்கும் ருசி இல்லாத உணவை கூட வேற லெவல் என்று சொல்லி ஒரு கூட்டமும் சமூகத்தில் உலாவி வருகிறார்கள்


 யூதன் (இலுமினாட்டி) புதிதாக ஒவ்வொன்றை கண்டுபிடித்து அதற்க்கு நம்மை அடிமை ஆக்கி விட்டு மற்ற ஒன்றை கண்டுபிடிக்க சென்று விடுகிறான் நாங்கள் எமது அறிவை அதற்குள் மட்டுப்படுத்தி விடுகிறோம் 


முக்கியத்துவம் எதற்கு கொடுக்க வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்பாக இருங்கள் அது அறிவு மிக்க சமூகம் தோன்ற அடித்தளமாக இருக்கும்


உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் வளர்ந்து வரும் குழந்தைகளின் நலன் கருதி இப்படியானவர்களை புறக்கணியுங்கள் ,கண்டு கொள்ளதீர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மக்களுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்


இது தொடர்ந்தால் உங்கள் சந்ததியில் கூட சிலர் பப்லிசிட்டிக்காக, பணத்துக்காக ஆபாசமாக சமூக வலையத்தளங்களில்  உருவெடுக்கும் ஆபத்து உருவாகி விடும் இது எனது மனக்குமுறல் சரியென்றால் செயார் செய்யுங்கள்


இந்த லிஸ்டில் பலர் இருக்கிறார்கள் ஒரு சிலரை மாத்திரம் இங்கே சுட்டி காட்டியுள்ளேன் அவர்கள் பற்றி விவாதிக்காவோ ,தேடவோ ,சிரிப்பதுக்காக இதனை பதிவு செய்யவில்லை சிந்தித்து தெளிவு பெற மாத்திரமே இந்த பதிவு..