Friday, 16 July 2010

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்...


இன்று இணையத்திலே பலரையும் கட்டிப்போட்ட்டிருக்கின்ற ஒன்றுதான் இணைய அரட்டை. இந்த அரட்டைகள் மூலம் நல்ல பல சம்பவங்கள் இடம்பெறுவதோடு. சில சுத்துமாத்து வேலைகளும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்று பல சமுகத்தளங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலர் தமது நண்பர்கள் வட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் காதல், திருமணம், வியாபாரம் என்று நல்ல பல விடயங்கள் நடை பெற்றாலும் இன்று பலர் இணைய அரட்டையே வாழ்க்கை என்று தினமும் அரட்டையிலேயே தமது காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இங்கே அரட்டை அடிப்போர் பலர் தமது உண்மையான விபரங்களை விடுத்து பொய்யான தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது வேறு விடயம். சில ஆண்கள் பெண்களின் பெயரிலே அரட்டை அடித்து பல சுத்துமாத்து வேலைகள் செயவோருமுண்டு.

சிலர் இந்த அரட்டைகளைப் பயன் படுத்தி நிறையவே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இதிலே சில பெண்கள் ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களிடமிருந்து பணங்களை பெற்று பின்னர் ஏமாற்றி வருகின்ற சம்பவங்களும் நடந்துகொண்டு வருகின்றன.

நான் இணையத்திலே உலாவ வந்த ஆரம்பத்திலே வலைப்பதிவுகள் பற்றி எல்லாம் தெரியாது. நண்பர்கள் மூலமாக சில சமுக வலையமைப்புகள் பற்றி அறிந்தேன். அவ்வப்போது அந்த இணையத்தளங்களிலே அரட்டையோடு என்பொழுது போகும்.

இத் தளங்களிலே அதிகமாக ஆண்கள் என்றால் பெண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். பெண்கள் ஆண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். ( ஈநேன்று தெரியவில்லை தெரிந்தவங்கள் சொல்லுங்கள்) ஆனால் நான் ஆண், பெண் என்று பாகுபாடின்றி எல்லா நண்பர்களையும் இணைத்துக்கொண்டேன். ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது.

இந்த அரட்டையிலே இருக்கின்ற பொய் நண்பர்களையும் இவர்களின் சுத்துமாத்துக்களையும் அறிந்தபோது அரட்டைப் பக்கமே போவதில்லை. அவ்வப்போது போய் என்ன என்ன நடக்கிறது என்று பார்த்துவருவதுமுண்டு.

இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன். அரட்டை மூலம் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். ( நான் நண்பனின் கதை என்று சொன்னால் நம்பவா போறிங்க அதுதான் எனக்கு என்று ஆரம்பிக்கிறேன்) இதிலே சில வெளிநாட்டு நண்பிகள் நெருக்கமானார்கள். அதிலே ஒரு நண்பி எப்போதும் இணைய இணைப்பிலே இருப்பார். எப்போதும் என்னோடு அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்.

இவரது நண்பர் வட்டத்திலே பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றனர். எவரும் பெண்கள் இல்லை. மிகவும் அழகானவர், என்னுடைய வலைப்பதிவை பார்த்து கருத்துக்களைச் சொல்வார். அடிக்கடி என்னைப் பற்றி புகழ ஆரம்பித்துவிட்டார். பின்னர் என்னைக் காதலிப்பதாக அடிக்கடி சொல்வார். நான் இப்போத்துதான் பச்சிளம் பாலகன் என்பதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இக்கால கட்டத்திலே இவரது நட்புவட்டத்திலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த மத்திய கிழக்கு நாடொன்றிலே இருக்கின்ற ஒரு நண்பரை நான் எனது நட்பு வட்டத்திலே இணைத்துக் கொண்டேன். அந்த நண்பரும் என்னோடு நல்ல நெருக்கமான நண்பரானார்.

அடிக்கடி என்னோடு பேசும் ஒரு நண்பராக மாறிவிட்டார். அப்போது அந்த நண்பர் என்னிடம் நான் குறிப்பிட்ட அந்த பெண் தன்னை இரண்டு வருடங்களாகக் காதலிப்பதாகவும் மாதாமாதம் அந்த பெண்ணுக்கு தான் பணம் அனுப்புவதாகவும் சொன்னார். நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை

மறுபுறத்திலே அந்தப்பெண் என்னிடம் விருப்பம் கேட்டு என்னை விடுவதாக இல்லை. அடிக்கடி அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. என்றெல்லாம் பேசுவார் நான் காதில் கேட்காதது போன்று இருந்து விடுவேன்.

இவர் நிறையப்பேரை ஏமாற்றி வருகின்றார் என்பது மட்டு எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது. இவரை பற்றி ஆராய வேண்டு மென்று நினைத்தேன் இவரது நண்பர் வட்டத்திலே இருக்கின்ற பலரை என் நண்பர் வட்டத்திலே இணைத்தேன். அப்போது பலரை இந்தப் பெண் காதலிப்பதாக அறியக் கிடைத்தது. நான் எவரிடமும் இந்தப்பெண் பற்றிய விடயங்களை சொல்லவில்லை.

அவர் தனக்கொரு வலைப்பதிவு உருவாக்கித்தரும்படி அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு. நான் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் என்பவற்றை தாருங்கள் என்று கேட்டு வங்கிக் கொண்டேன். வலைப்பதிவு உருவாக்கியக் கொடுப்பது என் நோக்கமல்ல இவரது ஏமாற்று வேலைகளை அறிய வேண்டும் என்பதே என் எண்ணம்.

உடனடியாக நான் அவரது மின்னஞ்சலை பார்த்தபோது பலரிடமிருந்து நிறையவே பணம் பெற்றிருப்பது அறிய வந்தது. அவர் பலரை காதலிப்பதாக நடித்துக்கொண்டிருக்கின்றார். பலர் இவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். என்பதும் தெரிய வந்தது.


உடனடியாக நான் மத்திய கிழக்கிலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த நண்பருடன் தொடர்புகொண்டு விபரங்களைச் சொன்னேன் அவர் நம்பவே இல்லை. அவரால் அவள் மீதான காதலிலிருந்து வெளியே வர முடியவில்லை.

அந்த நண்பரைப் பற்றி நினைக்கும்போது இன்றும் நான் கவலைப் படுவதுண்டு. அவரது குடும்பம் சாதாரண ஏழைக் குடும்பம். தந்தை இறந்துவிட்டார். தாய், இரு தங்கைகள் அவர்களைப் பார்க்கின்ற பொறுப்பு இவரிடமே. இவர் செய்தவை தனது வருமானத்தில் அரை வாசியை அந்தப் பெண்ணுக்கும் அரை வாசியை தாய்க்கு அனுப்புவதும். இன்று அந்தப் பெண்ணின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகவும் அந்தப் பெண்ணால் நிறையவே இழந்திருப்பதாகவும் கூறினார்.

இவர் மாத்திரமல்ல இன்று பல இளைஞர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். பல சமுக இணையத்தளங்களிலே பல பெண்கள் காதல் எனும் போர்வையில் இளைஞர்களை சிக்கவைத்து பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இணையத்திலே அரட்டை அடிப்பவர்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவது நல்லதே.

Thursday, 15 July 2010

”ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா (NAGORE NOORNISHA)



எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்!” _ சினிமா நகைச்சுவைக் காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச் சரியாகப் பொருந்தி விட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா.
‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூனுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது,
அதைவிட அதிர்ச்சியான செய்தி.
ஒரு முஸ்லிம் அமைப்பு மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நடைப்பிணமாக, ஒரு கட்டிலில் கிடந்த நடிகை நிஷாவை நாம் சந்தித்தோம். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என திகைக்கும் வண்ணம் காய்ந்த கருவாடாக கட்டிலில் கிடந்தார். நாம் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வருகிறோம் என்றதும் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்ட அவர், ”சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கனும்!” என்று கதறினார்.
சினிமா ஸ்பாட் லைட்களின் ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது நம்மை உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார்.
”எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். நடிகர் கமலோடு ‘டிக்…டிக்….டிக்’, ரஜினி சாரோட ‘ஸ்ரீராகவேந்திரர்’, பாலசந்தர் சாரோட ‘கல்யாண அகதிகள்’ இன்னும் விசு சார், சந்திரசேகர் சார் டைரக்ஷனில் கூட நடிச்சிருக்கேன்” என்றவர் தொடர்ந்தார்.
”அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு
சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார்.
நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீருடன். ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். என் பெரியப்பா அப்துல் ஹமீதுவின் மகள் நிக்காவின்போது, தாலிக்கு நான் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதை அவர்கள் மறந்து விட்டார்கள். சொந்த ஊரில்… பெற்ற தந்தையின்
கண்முன்பே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.
அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடனும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார்.
நம்முடன் வந்திருந்த நண்பரொருவர் ஓடிச்சென்று அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். நிஷா, சென்னை பல்லாவரத்தில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மா என்பவரிடம் அலிபாய், ரபீர் என்பவர்கள் மூலமாக நகை மற்றும் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பதாகவும், நகையன்றை அடகு வைத்து அந்தப் பணத்தில் வாடகைக் கார் பிடித்து அலிபாய் மூலம்தான் நாகூர் வந்து சேர்ந்ததாகவும் நிஷா நம்மிடம் விவரித்தார். தந்தை மற்றும் உறவினர்கள் ஏற்க மறுத்து விட்ட நிலையில், நாகூர் தர்கா அருகே அவர் அனாதையாக விடப்பட்டிருக்கிறார்.
நடிகை நிஷாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்தபோது, நர்ஸ் ஒருவர் விடுவிடென்று வந்து நம்மை, அப்பால் அழைத்துச் சென்றார். ”அந்தம்மாவுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்திலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரிக்கு அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்!” என்றார்
இரக்கக் குரலில். நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. நாகூரில் வசிக்கும் நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைச் சந்தித்தோம். ”நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணி திருமணம் செய்ததால், பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. ‘கொஞ்ச நாள் பொறு’ன்னு நான் சொன்னதைக் கேட்காமல், குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. அதன் பிறகு, பேபியைத் தேடியலைஞ்சு கோடம்பாக்கத்தில் கண்டுபிடித்தேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. தான் ஜலீல்னு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச்
சொன்னாள். நிஷாவை என் கண்ணில் காட்டாமல் மறைச்சிட்டாள். பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. அதனால், ”உனக்கு ஊரில் பல பொம்பிளைகளோடு தொடர்பிருக்கு. இனிமே இங்கே வராதேன்னு என்னை விரட்டிட்டா” என்றார்.
‘உங்களுக்கு எத்தனை மனைவிகள்?’ என்று ஜப்பாரிடம் கேட்டோம். ”மனைவி என்றால் அது பேபி மட்டும்தான். ஆனால் நாலைந்து பெண்களோடு தொடர்பு உண்டு. எனக்கும் ஓர் இந்துப் பெண்னுக்கும் பிறந்த பையனை முஸ்லிமாக மாத்தி ஷாகுல் அமீதுன்னு பெயர் வைத்து வளர்க்கிறேன்” என்றார். மீண்டும் தொடர்ந்த அவர், ”பேபி இறந்தபோது எனக்கு தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே போனபோது, ‘எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் பெரியப்பா எதுக்கு?’ன்னு கேட்டு, நிஷா அவரை விரட்டியிருக்கா. இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்கள்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன்.
இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்?” என்றார் அப்துல் ஜப்பார். நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீதைச் சந்தித்தோம். ”சென்னை சாந்தோமில் மலாக்கா சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக்கும் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார் போட்டோவுக்கு மறுத்தபடி.
நாகூர் ஜமாத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீனுடன் பேசினோம். ”ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை” என்று முடித்துக்கொண்டார்.
அடுத்து நாகை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகியும், பொதுநல ஆர்வலருமான நாகூர் பாரி, ”நலிந்த கலைஞர்களுக்குக் கிடைக்கும் உதவி நிஷாவுக்குக் கிடைத்தால் நல்லது! திரையுலகைச் சேர்ந்தவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்” என்றார்.
‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டோம். ”அந்தப் பொண்னும் அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தபோது உதவினோம். நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு
உதவப்போய் இப்போது எங்களுக்குக் கெட்ட பெயர். உடல்நிலை சரியில்லாத நிஷா, அவரது நகை ஒன்றை அடகு வைத்தார். அந்தப் பணத்தில்தான் கார் ஒன்றை வைத்து அவரைக் கொண்டு போய் நாகூரில் விட்டுவரச் சொல்லி ஏற்பாடு செய்தோம்.நிஷாவை உறவினர்கள் ஏற்க மறுத்ததால், நாகூர் தர்காவில் தன்னை விடச்சொல்லி நிஷாவே சொன்னதால்தான் அங்கே விட்டு விட்டு வந்தோம். நிஷா பல்லாவரத்தில் அவரது எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மாவிடம்தான் மீதி நகைகளைக்
கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்றவர், அதைத் தொடர்ந்து நாம் கேட்ட சில கேள்விகளால் கோபமடைந்து மிரட்டலுடன் போன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.
அடுத்த சில மணி நேரத்தில் முகமது அலியின் செல்போன் மூலம் மகியம்மா என்பவர் நம்மிடம் பேசினார்.
”என்னிடம் மொத்தம் மூனு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டேன். நகைக்கு அது சரியாப் போச்சு. நிஷா இருபத்து நான்கு புடைவை கொடுத்தார். அதில் இருபது புடைவைகளை தலா நூறு ரூபாய்க்கு விற்று அவரிடம் காசு கொடுத்துவிட்டேன். மீதமிருப்பது நான்கு புடைவைகள்தான்” என்றார்.
”முகமது அலிக்கும் நிஷாவுக்கும் நீண்டகாலமாகத் தொடர்புண்டு’ என்று அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அந்த செல்போனைப் பிடுங்கிய முகமது அலி, ”நிஷா இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான் அவரை எனக்குத் தெரியும். அவரோடு எனக்கு முப்பது வருஷப் பழக்கம் என்பதெல்லாம் பொய்!” என்றார் கோபத்தோடு. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அப்துல் ஜப்பாரின் மகன் ஷாகுல்அமீது, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்ததாக நமக்குத் தெரிய வந்தது.
நிஷா குறித்து ஃபிலிம்நியூஸ் ஆனந்தனிடம் பேசினோம். அவரது நிலை பற்றி மிகவும் வருத்தப்பட்ட அவர், ”அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீஸ§க்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படியரு நிலைமை?” என்றார் நிஜமான வருத்தத்தோடு.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Tuesday, 13 July 2010

நம்மிடையே நிலவும் சாதியை ஒழிக்க என்னதான் தீர்வு?


நம் தமிழக மக்களிடம் சாதிப்பிரிவு வேற்றுமைகளும் அது சார்ந்த  உயர்வு-தாழ்வு பாகுபாடும், அதனால் தீண்டாமையும் அதன் காரணமாய் சாதிவெறி வன்முறைகளும் கலவரங்களும்... என இந்த சாதி படுத்தும் பாடு இருக்கிறதே..! அப்பப்பா. இதனை தவறு என்றும் அருவருக்கத்தக்கது என்றும் சொல்வோர் ஏன் சாதிப்பிடியிலிருந்து மீள முடியவில்லை?

நம் அரசாங்கமும் மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே, அவர்களின் அனைத்து பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே... 

"தீண்டாமை ஒரு பாவச்செயல்,
 தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
 தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"
 ---என்று எழுதிப்போட்டும், 

அப்புறம்... பலமுறை பல வகுப்புகளில் மீண்டும் மீண்டும் 
"ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" 
---என்றும் சொன்னாலும், அவை எல்லாமே ஏன் விழலுக்கு இறைத்த நீராய் போகின்றன? 

அது மட்டுமா? சினிமாவில் அந்தக்காலம் முதலே... "ஒன்று எங்கள் ஜாதியே..."  "ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான்..." "நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம்"... "உன் ரத்தமும் என் ரத்தமும் நம்ம எல்லார் ரத்தமும் சிவப்பு"... என்றெல்லாம் பாடி ஆடினாலும், இந்த சாதி விஷயத்தில் மட்டும் மக்கள் மனதில் எந்த மாற்றத்தையும் எந்த கதாநாயகனும் எப்போதும் ஏற்படுத்த முடியவில்லையே? ஏன்?  ஏன் முடியவில்லை?

'முடியவில்லை' என்றால்... இவ்விஷயத்தில் எங்கோ, ஏதோ, அடிப்படையில் தவறு உள்ளது. அது என்ன?

இதைபற்றி பார்ப்பதற்கு முன் இந்த சாதி 'எப்படி நம்மிடம் வந்தது?' 'எங்கிருந்து உற்பத்தியாகிறது?' என்றும் பார்த்து விடுவோம்.

உலக சிருஷ்டிக்கே காரணகர்த்தா 'பிரம்மா' எனவும், பிரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள் 'பிராமணர்' என்றும், மார்பிலிருந்து பிறந்தோர் 'ஷத்ரியர்' என்றும், இடுப்பில் இருந்து பிறந்தோர் 'வைசியர்' என்றும், காலிலிருந்து பிறந்தோர் 'சூத்திரர்' என்றும் கூறி மக்களை நான்காக பிரித்து 'வர்ணாசிரமம்' கூறுகிறது சாஸ்திரங்கள். இதை பிரம்மாவின் மகன் மனு எழுதியதாக கூறி 'மனுதர்மம்' என நம்பவைத்து அப்பாவி மக்களிடம் அமலுக்கு கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள். இவர்கள் தம்மை 'பிராமணர்கள்' என்றும் கூறிக்கொண்டனர். இவர்கள் அல்லாத இங்கிருந்த மற்றவர்களை அவரவர் அப்போது செய்து வந்த தொழிலுக்கும் தொழில் சார்ந்த முக்கியத்துவத்துக்கும், அப்போது அவரவர் கொண்டிருந்த வலிமைக்கும் ஏற்ற வகையில் தரம்பிரித்து மற்ற மூன்று பிரிவுகளில் அவர்களை எல்லாம் இட்டு நிரப்பினார்கள்.
  • the Brahmins: Scholars, teachers and fire priests
  • the Kshatriyas: Kings and soldiers warriors
  • the Vaishyas: Agriculturists and merchants
  • the Shudras: Service providers and artisans
அதோடு முடியவில்லை..! இந்த ஆரியர்கள், தங்களுக்கான சுயநல சட்டமாய், 'தங்களுக்கு கடின உடலுழைப்பு ஏதும் தேவையற்றது' என்றும், 'அது மற்றவர்களுக்கானது' என்றும், 'தாங்கள் மட்டும் எந்த மோசமான குற்றம் செய்தாலும் தண்டனை கொடுக்க யாருக்கும் அருகதை இல்லை' என்றும், 'மற்றவர்கள் தம்மை தீண்டத்தகாதோர்' என்றும், 'தன் வழியாக மட்டுமே கடவுளை மற்றவர் சந்திக்க முடியும்' என்றும், 'தாங்கள் மட்டுமே உயர்ந்தோர் என்றும்' தம் இஷ்டத்திற்கு வசதியாய் இவர்கள் சட்டங்களை எழுதி வைத்துக்கொண்டதை பார்த்தால், இந்த சாதிப்பிரிவு சட்டங்கள் அல்லது மனுதர்மங்கள் எல்லாமே, தங்களை இந்நாட்டில் ஆதிக்க மணப்பான்மையுடன் ஸ்திரப்படுத்திக்கொண்டு இங்கிருந்த மற்றவர்களை அடக்கி ஒடுக்கி ஆள ஏற்படுத்திக்கொண்ட ஆரியர்களின் சாமர்த்தியமான திறமையேயன்றி வேறில்லை என்பது கண்கூடு. ஏனெனில், ஒரு கடவுளால் தான் படைத்தவர்களை பிரித்துப்பார்க்க ஒருக்காலும் இயலாது.

இந்த 'ஆரிய தகிடுதத்தங்களை' எல்லாம் கடவுள் பக்தியுடன் இணைத்து, காலப்போக்கில் அதை வெற்றிகரமாக ஒரு மதமாக மாற்றி, அப்பாவி மக்களிடம் சேர்த்து, அதன்மூலம் மற்றவர்களை அஞ்சவைத்து  தமக்கு வழிபட வைத்தமையில்தான் ஆரியர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். 
இந்த 'ஆரிய தந்திர மூட நம்பிக்கைகளை' மக்கள் மனதிலிருந்து முற்றாக ஒழித்தால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் என்று எளிதாக புரிய முடிகிறது.  

இதை புரிந்தவர்கள் பலர், இந்த 'ஆரிய->பிராமண->பார்பனிய->ஹிந்து' மதத்தைவிட்டு வெளியேறி வேறுமதம் சென்றனர்; சிலர் நாத்திகராயினர்.

நாத்திகர்களுக்கு :

இப்போது தமிழகத்தில் நாத்திகம் பேசும் இரு பிரிவினரில் ஒருவர் கம்யுனிஸ்ட்கள் மற்றவர் திராவிடர் கழகத்தினர். கடவுள் மறுப்புக்கொள்கை கொண்ட இவர்கள் மிக எளிதாக இந்த சாதி வலையில் இருந்து வெளியேற முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. என்னதான் ஒருவர் நாத்திகம் பேசி அவர் தம் வாழ்வில் விலகினாலும், அவரின் சந்ததி மீண்டும் அதே சாதிச்சகதியில்தான் வீழ்கின்றன. இ.வி.கே.எஸ்.இளங்கோவன் சாதியை பெரியாரால் அழிக்க முடியவில்லை..! பெரும்பாலும் கம்யுனிஸ தலைமைக்கும் கூட இங்கே பார்ப்பணிய பாரம்பரியத்திலிருந்துதான் வரவேண்டியதிருக்கிறது..!

இதன்மூலம் தம் சாதியை தம்மிடமிருந்து இவர்களால் அழிக்க முடியாததைத்தான் பார்க்கிறோம். எதனால்? சாதியை மறுக்க சரியான எதிர்கொள்கை இவர்களிடம் இல்லாததால்..!

இவர்கள் சொல்லலாம்... நாங்கள் 'டார்வினின் பரிணாமக்கொள்கையை' நம்புகிறோம் என்று..! இது இன்னொரு மிகப்பெரிய மூட நம்பிக்கை..!

"எது மனிதகுல சீரழிவுக்கு அதிகம் வித்திட்டது? 
             #  டார்வினின் நிற வருணாசிரமகொள்கையா?
             #  பார்ப்பனரின் சாதி வருணாசிரமக்கொள்கையா?"
-----இதொன்றும் பட்டிமன்ற தலைப்பு அல்ல. உலக நிதர்சனம்.

முன்னது வெவ்வேறு இனத்துக்குள் நிற வேற்றுமை காரணமாய் உயர்வு தாழ்வு உருவாக்கியது என்றால் பின்னது ஒரே இனத்துக்குள் தொழில் சார்ந்து உயர்வு தாழ்வு உருவாக்கியது.

சார்லஸ் டார்வின் எழுதிய DESCENT OF MAN புத்தகத்தில்,  பக்கம்-201-ல் அவர்...

கறுப்பினத்தவரை (நீக்ரோ என்று குறிப்பிட்டு) மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைக்கிறார். பின்னர் மேலும் இப்படி சொல்கிறார்... "நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்". 

அவர் யாரை 'காட்டுமிராண்டிகள்' என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இவ்வுலகில் இருக்கிறார்கள். இவர்களுக்கே அவர்களில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக.! அவர்கள் அழிந்துவிடவில்லை. இவர்களுடைய அறியாமை தான் அழிந்து விட்டது. இன்று அவர்கள் சிந்தனையிலும் திறமையிலும் இந்த ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை.  டார்வினின் கட்டுக்கதை மூட்டையின் ஒட்டை வழியே எட்டிப்பார்க்கும் அவரின் அறியாமை நன்றாக வெளிப்படும் இடம் தான் இது. 

சரி... டார்வினின் மனிதப்பரிணாமத்தில் "கருப்பும் பழுப்பும் மஞ்சளும் கலந்துள்ள ஆசியர்களாகிய நாம் எந்த படித்தரம்" என்று டார்வின் சொல்ல மறந்துவிட்டார் போலும்..! (இவற்றை 'இல்லை' என மறுப்பவர்கள்/ பரிணாம ஆதரவாளர்கள் கைவசம் விவாதிக்க சரக்கு இருந்தால் இங்கேயோ.. அல்லது இங்கேயோ.. சென்று ஆதாரங்களுடன் தமிழிலேயே மறுத்துவிட்டு வாருங்களேன்..!)

"பாம்பையும்  பார்ப்பனரையும் கண்டால் முதலில் பார்ப்பனரை அடி" என்றார் ஈ.வெ.ரா.பெரியார். ஆனால், டார்வினியம் பற்றி முழுமையாக அறிந்திருந்தால்,  "பார்ப்பனரையும் டார்வினிஸ்டுகளையும் கண்டால் முதலில் டார்வினிஸ்டுகளைத்தான் அடிக்க வேண்டும்" என்றிருப்பார் போல..! ஏனெனில், பார்ப்பணியமாவது மனிதரில் சிலரை 'இழிபிறவி' என கேவலம் மட்டுமே படுத்துகிறது. ஆனால், டார்விணியமோ 'மனிதரில் சிலரை மனித இனமே  இல்லை' என்கிறது..!

ஆக, மிளகாய்ப்பொடி விழுந்த கண்ணை கழுவ தண்ணீர் தேடிப்போனால் அங்கே டார்வின் கடையில் அமிலம்தான் கிடைக்கிறது..!?  ''சரி, பரவாயில்லை அவசரத்துக்கு இருக்கட்டும்" என்று எப்படி கழுவுவது? முதலுக்கே மோசமாகாதா?

சரி... நம்மிடையே நிலவும் சாதியை ஒழிக்க வேறு என்னதான் தீர்வு?

ஆப்ரஹாமிய (யூத,கிருத்துவ,இஸ்லாமிய) மதங்களின் பார்வையில் 'மனிதன் தோற்றம்' பற்றி என்ன சொல்கிறது? ஒரு ஜோடி மனிதனிலிருந்து பல்கிபெருகியவர்களே உலகமாந்தர் அனைவரும் என்கின்றன..! இந்த சித்தாந்தம் சாதி ஒழிப்புக்கு உகந்ததாய் தெரியவில்லையா? ஒரே பெற்றோருக்கு 'ஒரே விதமாய்' பிறந்தவர்கள் மத்தியில் எப்படி சாதி, இன வேறுபாடு உண்டாகும்? "மதஅடிப்படைவாதம்" சரியானதை சொன்னாலும் 'நிராகரித்தே தீர வேண்டும்' என்ற வறட்டு பிடிவாதத்தை தயவு செய்து கொஞ்ச நேரம் ஓரமாய் வைத்துவிட்டு  தொடருங்கள். சென்ற நூற்றாண்டு நாத்திகர்களை விட்டுவிடுவோம். ஆனால், இந்த நூற்றாண்டு நாத்திகர்களுக்கு... இந்த நூற்றாண்டு கண்டுபிடிப்பான, "உலக மக்களின் ஜீனோம் சங்கிலித்தொடர்பு ஓர் ஆப்ரிக்கத்தாயிடம் போய் முடிகிறது" ('Mitochondrial Eve': Mother of All Humans Lived 200,000 Years Ago) என்ற அறிவியல் உண்மை வெளிவந்த பின்னும் எதற்கு இந்த வீண் வெட்டிப் பரிணாமவாதம்?

அப்புறம், 'பகுத்தறிவுவாதி' என்று தங்களை சொல்லிக்கொள்வது யாரை ஏமாற்ற? தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளவா? இதை மதங்கள் சொல்லி இருந்தால் என்ன கெட்டுவிட்டது இப்போது? சாதியை ஒழிக்க இப்போதைக்கு இவ்வுலகில் இருக்கும் உருப்படியான அறிவியலால் நிரூபிக்கப்பட்ட ஒரே கொள்கையான இந்த "ஒரே தாய்" கொள்கையை ஏற்றுக்கொண்டால்... ஆத்திகவாதிகள் ஆகிவிடுவோம் என்ற பயமா? ஏன்? இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டே நாத்திகர்கள், நாத்திகவாதியாக இருந்துதான் பாருங்களேன்...! ஏன்? முடியாதா?

ஆத்திகர்களுக்கு:

இதில் இன்னொன்றும் சொல்லவேண்டும். யூத மதத்தினர் தங்கள் மத அடிப்படையில் இஸ்ராயீல் சந்ததியினரான தாங்களும் மற்றவர்களும் சமம் என்று நினைப்பதில்லை. இங்கே, கிருத்துவரிடையே 'கிருத்துவ நாடார்', 'தலித் கிருத்துவர்' என்று இருப்பதிலேயே சாதிய விழுமியங்களிருந்து இவர்கள் இன்னும் மீண்டு வரவில்லை என்றாகிறது.

அதாவது, 'சாதி இல்லை' என்ற கருத்து தம் மதத்தில் இருந்தாலும் அதை தம் வாழ்வில் நடைமுறைப்படுத்தும் மக்கள் அந்த மதத்தினில் மிக மிக மிகுதியாக கடைப்பிடித்தவாறு இருத்தல் மிக மிக அவசியம்.

இந்த அடிப்படையில் இஸ்லாம் சொல்வது என்னவென்றால்...

மனிதரிடம் சாதி, இன வேறுபாட்டை உடைக்கும் இறைவசனம் :
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" (குர்ஆன் 49:13) என்று அனைத்து மனிதரையும் படைத்த இறைவன் கூறுகிறான்..!

இன, மொழி வேறுபாட்டை உடைக்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின்  இறுதிப்பேருரை !

ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (ஹதீஸ்: தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (ஹதீஸ்: அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஹதீஸ்: ஸுனன் நஸயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

ஆத்திகர்களுக்கும்  நாத்திகர்களுக்கும் :

இப்போது நம்மிடம் இக்கருத்தை ஏற்க எஞ்சி நிற்கும் ஒரே ஐயம், "பரிணாமம் பொய் என்றால் ஆதாம் ஏவாள் இருவரில் இருந்து படைக்கப்பட்டதாக நீங்கள் சொல்லும் மக்கள் எப்படி பல்வேறு நிறங்களுடன், முக அமைப்புகளுடன் இனக்குழுக்களாக ஆகிப்போனார்கள் ?" -- என்பதுதானே?

ஒருவேளை... அந்த முதல் ஜோடி "ஒரே இனம்; ஒரே திடம்; ஒரே நிறம்" என்றால்... நம்மில் எத்தனையோ சிவப்பான தம்பதிகளுக்கு கருப்பு குழந்தை பிறப்பதில்லையா? அதற்கு, "என் குழந்தை அவன் தாத்தா நிறம்" என்பதில்லையா? அல்லது சிவப்பான குழந்தை கருப்பு தம்பதிகளுக்கு பிறப்பதில்லையா? கேட்டால், "அவளோட கொள்ளுப்பாட்டியோட அத்தை செம சிவப்பாம்" என்பதில்லையா?

'சரி',  இந்த குழந்தை எப்படி இவர்களிடமிருந்து? மேலும் விபரங்களுக்கு...

உலக  மாந்தர்கள் அனைவரும்... "ஒரே ஓரு மனிதனிடமிருந்து வந்தவர்" என்றால்தான் இந்த சந்தேகம் வரவேண்டும். மாறாக, ஒரு ஜோடி என்றால் இருவர் அல்லவா? அந்த முதல் ஜோடியில், " ஒருவர் வெள்ளையர்..! இன்னொருவர் கருப்பர்...!"  --- ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது? 'இல்லை' என்பதற்கு என்ன ஆதாரம்? 

கீழே சில புகைப்படங்கள்... செய்திகள்... அதில், இரட்டைக்குழந்தைகளில் எப்படி இப்படி எல்லாம் சாத்தியம்?  (3 படங்கள் அடுத்தடுத்து கீழே)

1-மேல் விபரங்களுக்கு...    2 -மேல் விபரங்களுக்கு...    3-மேல் விபரங்களுக்கு... 

சகோதரர்களே..! சிந்திப்பீர்களாக..! தீர ஆலோசித்து ஒரு முடிவெடுப்பீர்களாக..!

Wednesday, 7 July 2010

பாபரை பின்பற்றுவோமனா?...வாருங்கள...


 கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
இது பாபர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயில்
பாபர் நாமா எனும் வரலாற்று புத்தகம் இதை பதிவு செய்துள்ளது.


ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.  ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்;    பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல;  மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.  பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. 
source : நான் தான் பாபரி பேசுகின்றேன் -ஆடியோ இலக்கிய சோலை வெளியீடு  vinavu , arulgreen

Tuesday, 22 June 2010

ஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது ?



சமீபத்தில் நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். அவருக்கு பி.இ.படிக்கும் ஒரு மகன் -+ 2 மற்றும் 10th  படிக்கும் இரண்டு மகள்கள்.இணையம் பற்றி பேசும்போது தேவையில்லாமல் அடல்ஸ்ஒன்லி படங்கள் தோற்றுவதாகவும் அதை நிறுத்த ஏதாவது செய்யமுடியுமா என்றும் கேட்டார். அவருக்கான பதிவு இது.தேவையில்லாமல் வரும் படங்களை தடைசெய்வதோடு அல்லாமல் கம்யுட்டரில் அதிக நேரம் Games விளையாடுவதையும் Chat செய்து பொழுதினை கழிப்பதையும் தடுக்கலாம்.சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இதுவும் 4 எம்.பி. கொள்ளளவு தான். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இந்த சாப்ட்வேருக்கான பாஸ்வேர்ட் இது. நீங்கள் கொடுக்கும் பாஸ்வேர்டை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளவும. பின்னர் நீங்கள் இந்த சாபட்வேரை ஓப்பன் செய்யும் சமயம் அந்த பாஸ்வேர்டை கொடுத்தால்தான் ஓப்பன் ஆகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மைதான் யாரும் கவனிக்கவி்ல்லையே – நாம் தவறு செய்யலாம் என நினைக்கலாம். ஆனால் இறைவன் அதை கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றான். அதுபோல இந்த சாப்ட்வேரை நிறுவிய பின டாக்ஸ்பாரில் ஒற்றைகண்ணுடன் கழுகு உங்கள் கம்யுட்டரின் நடவடிக்கைகளை கவனித்துகொண்டு இருக்கும்.அது ஆபாச தளங்கள் வந்தால் அதை தடை செய்துவிடும்.குழந்தைகள் என்ன செய்கிறார்களோ என்கின்ற பதட்டம் அடையாமல் நாம் மற்ற வேலைகளை பார்த்துகொண்டுஇருக்கலாம். டாக்ஸ்பாரில் உள்ள ஒற்றை கண்ணை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஏற்கனவே நீங்கள்கொடுத்த பாஸ்வேரட் கொடுத்து உள் நுழையவும்.
இப்போது மீண்டும் டாக்ஸ்பாரில் அந்த கண்ணை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Settings and options கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் ஏதும் மாற்றாதீர்கள். இதுதான் ஆபாச படங்களை தடை செய்யும் செட்டிங்ஸ்.அடுத்துள்ள டேப்புகளில் தேவைப்பட்டால் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள். இறுதியில் ஓ.கே. தாருங்கள்.
அடுத்துள்ளது சாட்…இதில் நீங்கள் உங்கள் குழந்தைகள் சாட் செய்யும் நேரத்தை சேட் செய்துகொள்ளலாம். அந்த நேரம் மட்டும் சாட் வேலை செய்யும்.
இதைப்போலவே விளையாட்டை யும் தேவையான நேரம் கொடுத்து மற்ற நேரங்களை தடை செய்துவிடுங்கள்.
நீங்கள் வேலைக்கு செல்பவராக இருக்கலாம். வெளியில் செல்ல நேரலாம். அவ்வாறான நேரங்களில் குழந்தைகள் கம்யுட்டரில்  அமரும் நேர்த்தை செட் செய்துவிடலாம். அந்த நேரம் கடந்துவிட்டால் கம்யுட்டர் வேலை செய்யாது.
குழந்தைகளும் சரி – நாமும் சரி..தொடரந்து மானிட்டரையே பார்த்துக்கொண்டிருந்தால் கண் என்ன ஆவது. அதற்கும் இதில் கண்ணை காப்பதற்கான வழி வைத்துள்ளார்கள். எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை கம்யுட்டர் ஆப் ஆகி பின்னர் எவ்வளவு நேரத்திற்கு பின் ஆன் ஆக வேண்டும் என செட் செய்துவிட்டால் நாம் மறந்துவிட்டாலும் கீழ்கண்ட விண்டோ தோன்றி கம்யுட்டர் ஆப் ஆகிவிடும்.
இவ்வளவு தடைகளும் தேவையானல் வைத்துக்கொள்ளலாம் தேவையில்லையென்றால் எடுத்துவிடலாம்.