Saturday, 31 July 2010

ஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள்!!! ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...



 இன்றைய சூழ்நிலையில் நமது சமதாயம் விழிப்புணர்வுடன் இருக்க பல்வேறு இணையதளத்திலும் , ஈமெயிலிலும் வந்த பல செய்தி/ கட்டுரைகளை இங்கே சமர்ப்பித்துள்ளோம். இதனை அனைவருக்கும் எத்தி வைக்க இறைவனுக்காக கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும். வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

 தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை நமது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் பல முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமண ம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துனை போகின்றது.


முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும் , நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்தாமல் உடனே செய்ய வேண்டும்.


இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள் :

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது.

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்இருக்கின்றதோ அத்தகயவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளதுஎன்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனiவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தற வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்.

7.தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளாச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்பக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்பததினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன் , பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்னிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துனைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செலவதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முiறாயன ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்ஸியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்போன்வற்றை தவிருங்கள்,

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை :

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உரவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றால். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இரையாக்குகின்றான். அவளது கர்ப்பை சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றால்.

இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்னிற்கு 1 லட்சம் என்றும் எந்த போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உரவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும், நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்னின் நிலை...???

பெண்களே, மாணவிகளே, உங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவர்கள் ஏமாந்து விட வேண்டாம்!!. 

பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்காணியுங்கள்.
சிந்திப்பீர் செயல்படுவீர்;!! சூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்!!

Source:http://ambaireport.webs.com/apps/blog/show

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Friday, 30 July 2010

அமெரிக்க முஸ்லிம்ளிடம் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?-ஒரு சிறப்பு ஆய்வு ..



 பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் 2009-ஆம் வருடம்க அமெரிக்க முஸ்லிம்ளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் விடைகள்..

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா? 
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் 2009-ஆம் வருடம்க அமெரிக்க முஸ்லிம்ளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. 

இதற்கான பதில் -ஆம் - 80% 

முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.   


காலப் நிறுவனத்தின் அமெரிக்க முஸ்லிம்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....

1. இனப் பின்னணி: 

அமெரிக்க முஸ்லிம்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில்,  ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.

அமெரிக்க முஸ்லிம்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.

28% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

அமெரிக்க முஸ்லிம்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசியாக, சுமார் 1% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.. 

2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. 

சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.


இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.


ஆக, அமெரிக்காவை பொறுத்தவரை மார்க்கப்பற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுள்ளது. ஆனால் அமெரிக்க முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த வித்தியாசம் இல்லாமல் இருபாலரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலேயே உள்ளனர். 

அமெரிக்க முஸ்லிம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வும் (77%) இதே முடிவுகளைத்தான் தருகிறது.

80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக  கூறியிருந்தாலும் இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, இதே நிறுவனத்தால் வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர்.


3. பெண்கள் 

யூதர்களுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள் தான். 

அதிலும், மேற்படிப்பு முடித்த மற்றும் பட்டம் பெற்ற முஸ்லிம்களில் ஆண்களை (39%) விட பெண்களே (42%) அதிகம். 


முஸ்லிம் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மற்றொரு குறிப்பிடத்தக்க தகவலையும் தருகின்றது. என்னவென்றால், பெண்கள் (40%), ஆண்களுக்கு (42%) நிகரான அளவில் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது, காலப் நிறுவனத்தால் சில முஸ்லிம் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது வேறுபடுகின்றது. இந்த நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு வருவது (அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது) குறைவே. ஆனால் அமெரிக்காவில் அந்த நிலை இல்லை. அங்கு ஆண்களும் பெண்களும் சமமான அளவிலேயே பள்ளிக்கு வருகின்றனர். 

4. மற்றவைகள்: 

  • 70% முஸ்லிம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 6% அதிகம்.
  • அமெரிக்காவின் பள்ளிவாசல்கள் பல்நோக்கு கூடங்களாக உள்ளன.  
  • மது அருந்துவோரின் சதவிதம், மற்ற மார்க்க மக்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. அதே சமயம், நான்கில் ஒரு முஸ்லிம் அமெரிக்கர் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.     
  • அமெரிக்க முஸ்லிம் பெண்களில் மூன்றில் ஒருவர் "professional Job"பில் உள்ளார்.
  • கறுப்பின முஸ்லிம் அமெரிக்கர்கள் மார்க்கத்தின் மேல் அதிக பற்று கொண்டுள்ளனர் (87%). இவர்களைத் தொடர்ந்து ஆசியர்களும் (86%), வெள்ளையர்களும் (72%) வருகின்றனர். 

காலப் நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை (140 பக்கங்கள்) முழுவதுமாக படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (File Size : ~5.2 MB). 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


My Sincere Thanks to: 
1. Sister Dalia Mogahed.
2. Gallup's Center for Muslim Studies.

Reference: 
1. Muslim Americans: A National Portrait - The center for Muslim Studies, Gallup, 2009.   

One can download the complete document from: 
http://www.muslimwestfacts.com/mwf/116074/Muslim-Americans-National-Portrait.aspx

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 26 July 2010

மறை நீர் (Virtual water)-ன் பற்றிய விழிப்புணர்வு பார்வை...

ஒரு காலத்தில், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை பார்த்திருக்கிறோம். இன்று ஆறு இருக்கிறது. ஆனால், தண்ணீர் இல்லை. பதிலாக, சாக்கடை கழிவு நீர் துர்நாற்றத்துடன் ஓடுகிறது. அதற்கு காரணமும் நாம். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை ஆக்கிரமிக்கிறோம்; அழித்து வருகிறோம்.
அதன் விளைவு, மழையின்மை, சுகாதாரமற்ற தண்ணீர், மாசு நிறைந்த காற்று என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு விட்டன. இதே நிலை நீடித்தால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு ஏற்பட்டு விடும். இப்போது, மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்னை போய், எதிர்காலத்தில், ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு தண்ணீர் பஞ்சம் வந்துவிடும். அதை நோக்கியே, நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

சர்வதேச அளவில், தண்ணீருக்காக போர் கூட மூளும் என்று, அறிவியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதை மெய்ப்பிப்பதுபோல், ஆண்டுக்கு ஆண்டு பருவமழை பொய்த்து கொண்டே வருகிறது. இயற்கை நம்மை காக்க வேண்டுமெனில், நாம் அதை பாதுகாக்க வேண்டும். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து, பள்ளி பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான கடமையும், பொறுப்பும் நமக்குள்ளது. 

மறை நீர் (Virtual water)-ன் தத்துவம்..


பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சரா சரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10/- இது நமக்குதெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக்கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர்வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டு பிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர்- இதுவே மறை நீர். இது ஒரு  பொருளாதார தத்துவம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம்.


 மறைநீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “ கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறைநீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக் கொள்கிறது” என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். 

சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர்தேவை 560 லிட்டர். சொட்டுநீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறைநீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டைஉற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிர ம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக் கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக் கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின் பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60கிராம் கொண்ட ஒருமுட்டையை உற்பத் தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்? முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்யமுடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்தசெலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 %வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரி யாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால் நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கண க்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம் பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்யவேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறைநீர் தத்துவத்தை உணர வேண்டும்.

தொகுப்பு :  அ.தையுபா அஜ்மல்.

Wednesday, 21 July 2010

உப ரத்தினங்கள் மருத்துவ குணங்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை..


ரத்ன கற்கள் நவரத்ன கற்கள் மற்றும் உப ரத்ன கற்கள்  என்று இரண்டு வகைப்படும்.



உப ரத்தினங்கள்
சில உப ரத்தினங்கள் (அகேட் , டர்மலீன், டர்க்குவாய்ஸ்ட், அம்பர், அமேதிஸ்ட் , ஓபல், அகுவாமரின்சூரிய காந்த கல் , லேமிஸ் லூயி, சந்திர காந்த கல், கிட்னி ஸ்டோன், ப்ளட் ஸ்டோன், கார்நெட் , ஆனிக்ஸ், ஜஸ்பெர்  , பெரிடாட்) நவரத்தினங்களுக்கு மாற்றாகவும்  விளங்குகிறது. இந்த கற்களை பெரும்பாலும் அனைவருமே அணியலாம். இந்த கற்களுக்குள் நட்பு,பகை,தோசம்  ஆகியவை ஏதும் கிடையாது.இந்த கற்கள் நன்மை மட்டுமே செய்யும்.ரத்தின நிபுணர்களின் பல வருட ஆராய்ச்சிக்கு  பின்னரே இந்த  வகை கற்கள்  நவரத்தின கற்களுக்கு மாற்றாக பரிந்துரை செய்யபட்டன.
அதிகம் பயன்பாட்டில் இருக்கும் உப ரத்தினங்களைபற்றி காண்போம்.

அமிதிஸ்ட் (amethyst) 

கத்தரி பூ நிறத்தில் அழகாக காட்சி அளிக்கும் இந்த கல் தமிழில் செவ்வந்தி கல் என அழைக்கபடுகிறது.




அமிதிஸ்ட்டின் மருத்துவ குணங்கள்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள்,வயிற்றுவலி,மூட்டுவலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.  தூக்கமின்மை,மாலைக்கண் நோய் , தோல் வியாதி ஆகியவற்றில் இருந்து காக்கும்.
கார்னட் 



மருத்துவ குணங்கள் 

விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு , புற்று நோயால் பாதிக்க பட்டவர்கள் இக்கல்லை அணிந்தால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

ஜேட் 


மருத்துவ குணங்கள்

   சிறுநீரக கோளாறு கொண்டவர்கள் இக்கல்லை அணிந்து நிவாரணம் பெறலாம். வயிற்று வலியை குணமாக்கும். வலிப்பு  நோயைகுணமாக்கும். பிரசவ வலியை  குறைக்கும். அனைத்து தோல்  வியாதிகளையும் குணமாக்கும் .
அலெக்ஸாண்ட்ரைட்

இது மிகவும் விலை உயர்ந்தது. ஆலிவ் பச்சை நிறத்தில் காணப்படும், வெளிச்சம் பட்டால் சிவப்பு  நிறமாக மாறும் இதுவே  இதன் தனித்தன்மை. 

 மருத்துவ குணங்கள் 
முக வாதம்,வாதம் ஆகிய குறைகளை  போக்கும், திக்குவாய் பிரச்சனை உள்ளவர்கள் இக்கல்லை  அணிந்தால் நல்ல பேச்சாற்றல் பெறலாம்..!

அனைவரும்  இக்கல்லை  அணியலாம்.

அகேட்




 மருத்துவ குணங்கள்

தலைவலி, வாயுத்தொல்லையை போக்கும். அசிட்டிடி யை குணப்படுத்தும்.

    சந்திர காந்த கற்கள்  (Moon Stone)

இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும்.ஜலகண்டதில் இருந்து காக்கும்.நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்   

தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று  பிரச்சனைகளை நீக்கும்.குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

சூரிய காந்த கற்கள்(Sun Stone)
  

அம்பர் (Amber)



மருத்துவ குணங்கள் 

ஜீரண கோளாறுகளை  சரி செய்கிறது,கருச்சிதைவை தடுக்கும்,கண்பார்வை கோளாறுகள்,காதுவலி,சிறுநீரகம் சம்பந்த பட்ட வலிகள் நீங்கும்.பிரசவ காலத்தில் அம்பர் பொடியை தூபமிட்டால் நன்மை கிடைக்கும்.

அக்வா மெரின் (Aqua Merune)



மருத்துவ குணங்கள்

உடலில்  எப்போதும்  உஷ்னத்துடன் இருப்பவர்கள் இக்கல்லை  அணிந்து கொண்டால் உஷ்ணம் சமனிலை அடையும். வாதம்,பித்தம்  ஆகிய பிரச்சனைகளுக்கு உகந்தது.பல்,கழுத்து  சம்பந்த பட்ட நோய்களை  குணமாக்கும்.
ஆனிக்ஸ் (Onyx)





பெரில் கற்கள் (beryl stone)


பொதுவில் பச்சை நிறம் கொண்ட இந்த கற்கள் நீலம்,சிவப்பு மற்றும்  தேன்  நிறத்திலும் கிடைக்கிறது. 

மருத்துவ குணங்கள்

சிறுநீரக கோளாறுகள் நீங்கும், நரம்பு தளைச்சியை போக்கி  நரம்புகளுக்கு  நல்ல பலத்தை கொடுக்கும்.ரத்த சோகை நீங்கும். வாதம்,பித்தம் ஆகியவற்றை சமன் செய்யும்.தாம்பத்ய வாழ்வில் ஆர்வத்தை கொடுக்கும். தொண்டை,ஈரல் வியாதிகளை குணமாக்கும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 19 July 2010

பெண்ணுக்கு ஓய்வென்பதே கிடையாதா ?...

58 – 60 வயதில்  ஓர் ஆண் தன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட முடியும்.  ஆனால் ஒரு பெண்? 



சலிப்பு - இந்த வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம். மதியம் சமைத்த உணவை இரவும் கொடுத்தால் சலிப்பு வந்துவிடுகிறது. ஒரு சேனலைத் தொடர்ச்சியாக அரை மணிநேரம் பார்க்க முடிவதில்லை.
ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுகிறது. ஆனால் காலம் காலமாகப் பெண்கள் ஒரே வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு மட்டும் சலிப்பு என்பதே கிடையாதா?
படித்தவராக இருக்கலாம். படிக்காதவராக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். வசதியானவராக இருக்கலாம். வேலைக்குச் செல்லலாம். வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த வேலைகளில் இருந்து மட்டும் தப்பிக்க முடியாது.

அதிகாலையிலேயே எழ வேண்டும். வாசல் பெருக்கி, கோலம் போட வேண்டும். பால் காய்ச்ச வேண்டும். ஒவ்வொருவரும் எழுந்து வர வர அவர்கள் விருப்பப்படி கலந்துகொடுக்க வேண்டும். காய் நறுக்க வேண்டும். காலை டிபன், மதிய உணவு என்று பம்பரமாகச் சுழல வேண்டும்.
வீட்டில் உள்ள பெரியவர்களுக்குப் பிரத்யேக உணவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் வகையில் அவர்களுக்குப் பிடித்த உணவும் செய்ய வேண்டும். (இரண்டு குழந்தைகள் இருந்தால் இரண்டும் வெவ்வேறு உணவுகளைக் கேட்கும்!) ஞாபகமாக செய்த ஐட்டங்களை அடிக்கடி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், வீடு பெருக்குதல், மாவு அரைத்தல், மாலை டிபன், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருதல், இரவு உணவுக்குப் பின் மறுநாள் சமையலுக்கான தயாரிப்புகளை முடித்துவிட்டு, உறக்கம். சில மணி நேரங்களிலேயே அலாரம் அடிக்கும்.


இந்த விஷயங்களைப் படிப்பதற்கே சலிப்பாக இருக்கலாம். ஆனால் காலம்காலமாக பெண்கள் இதே வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குச் சலிப்பு வருமா என்று கூட யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை.

இந்த வேலைகளைச் சிலருக்கு ஏழு, எட்டு வயதிலும் சிலருக்கு பதினைந்து வயதிலும் சிலருக்கு இருபது வயதிலும் செய்ய வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. இப்படி ஆரம்பிக்கும் வேலைகளைப் பெண்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் செய்துகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதிலிருந்து ஓய்வு என்பது அவர்கள் இயக்கத்தை நிறுத்திக்கொண்ட பிறகுதான் கிடைக்கிறது.

திருமணம், குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று எத்தனையோ மாற்றங்கள் வாழ்க்கையில் வந்துகொண்டே இருக்கும். வீட்டு வேலைகளில் மட்டும் மாற்றத்துக்கு இடமே இருக்காது.

இதில் வேலைக்குச் செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். ஞாயிற்றுக்கிழமை என்றால் எல்லோருக்கும் விடுமுறை. ஆனால் பெண்களுக்கு அன்று இரண்டு நாள்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். ஒட்டடை அடிப்பது, மாவு அரைப்பது, சமையலறை, கழிவறைகளைச் சுத்தம் செய்வது, மற்ற நாள்களில் செய்யாத ஸ்பெஷல் உணவுகளைச் சமைப்பது என்று வேலை நாள்களே தேவலாம் என்று தோன்றும் அளவுக்கு வேலைகள் காத்திருக்கும்.

மற்ற நாள்களில் பிஸியாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் விருந்தினர்கள், நண்பர்கள் வருவார்கள். அவர்களைக் கவனிப்பது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என்று வேலைகளுக்கு நடுவே நேரம் கரைந்துவிடும். விருந்தினர்களிடம் ஒரு ஹாய் சொல்லிவிட்டு, ஆண் தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிடலாம். ஆனால் பெண்? மகிழ்ச்சியுடன் உரையாட வேண்டும். உபசரிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் நம் வீட்டுக்கு வரும்படி நடந்துகொள்ள வேண்டும்.

என் தோழிக்கு படிப்பது என்றால் மிகவும் விருப்பம். இதுதான் என்று இல்லைஸ கிடைப்பது அத்தனையையும் படித்து விடுவாள். சாப்பிடும்போது கூட கையில் புத்தகம் இல்லாமல் அவளால் சாப்பிடவே முடியாது. திருமணத்துக்குப் பிறகு அவள் வீட்டில் புத்தகங்களோ, வார இதழ்களோ இல்லை. அவள் கணவருக்கு எதிரிலேயே காரணம் கேட்டபோது, ‘அவருக்குப் பிடிக்காதுஸ’ என்று வலியை மறைத்துக்கொண்டு சிரித்தாள்
திருமணம் ஆகும் வரை வரைவது, எழுதுவது, பாடுவது என்று திறமையாக இருக்கும் பெண்கள், திருமணத்துக்குப் பிறகு தங்கள் திறமைகளை மறந்து போவதற்குக் காரணம் இந்தச் சூழல்தான்.

ஞாயிற்றுக்கிழமை என்றால் ஓர் ஆணின் பொழுது எப்படி விடிகிறது? சனிக்கிழமை இரவு வெகு நேரம் டிவி பார்த்துப் படுத்துவிட்டு, காலை பத்து மணி வரை தூங்கிக்கொண்டிருக்கலாம். மெதுவாக எழுந்து ஸ்பெஷலாக செய்யப்பட்டிருக்கும் டிபனை ஒரு பிடிபிடித்து விட்டு, மீண்டும் தூக்கத்தைத் தொடரலாம். அல்லது டிவி பார்க்கலாம். அடிக்கடி காபி கேட்டு, சுவைத்துக்கொண்டே புத்தகங்களைப் படிக்கலாம்.

இண்டர்நெட்டில் மூழ்கலாம். நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம். அல்லது வெளியில் எங்காவது கிளம்பிச் சென்று விடலாம்.
ஆண்களும் தங்கள் அலுவலங்களில் ஒரே மாதிரியான வேலைகளைத்தானே செய்கிறார்கள். அவர்களுக்குச் சலிப்பு வராதா என்று கேட்கலாம். அவர்கள் செய்யும் வேலைகளுக்கும் பெண்கள் செய்யும் வேலைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.


ஆண்களுக்கு வெளியுலகத் தொடர்பு அதிகம். சலிப்பு தோன்றும் நேரங்களில் ஆண்கள் தன்னந்தனியாக ஒரு சினிமாவுக்குச் செல்லலாம். கடற்கரைக்குப் போகலாம். ரெஸ்டாரண்ட்டில் மணிக்கணக்கில் அமரலாம். ஒரு போன் செய்து, ‘நான் ஃப்ரெண்ட்ஸோடு சினிமாவுக்குப் போறேன். நைட் லேட்டாகும்’ என்று தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடலாம். (சில வீடுகளில் அது கூட அவசியம் இல்லை!) நண்பர்கள் வீட்டுக்குச் சென்றுவிடலாம்.


ஆனால் ஒரு பெண் தனியாக கடற்கரை, சினிமா, ஹோட்டல் என்று செல்வதை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? கணவருக்குப் போன் செய்து, ‘நான் என் நண்பர்களோடு சினிமாவுக்குப் போறேன். வீட்டைப் பார்த்துக்கொள்’ என்று சொல்லிவிட்டுச் செல்ல முடியுமா? ’

உடல்நிலை சரியில்லை என்று இரண்டு நாள்கள் ஹோட்டலில் வாங்கிச் சாப்பிட்டால், மூன்றாம் நாள், ’சமைக்கறதே இல்லை போலருக்கு! பாவம் சார்’ என்று ஏளனமாகச் சிரிப்பார்கள்.

ஆறு மணிக்கு அலுவலகம் முடிந்த பிறகு, அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கோ, வெளியில் நடைபெறும் கூட்டங்களுக்கோ பெண்கள் சென்றால், அலுவலக நண்பர்கள் தவறாமல் இந்த விஷயங்களைச் சொல்வார்கள்.

‘நம்மளே கலந்துக்கறதில்லஸ இவங்களுக்கு என்ன? சீக்கிரம் வீட்டுக்குப் போறதுன்னா இவங்களுக்குப் பிடிக்காது போலருக்குஸ’
‘மேடம், சீக்கிரம் வீட்டுக்குப் போனால் நல்லா சமைக்கலாம், வீட்டு வேலைகளைச் செய்யலாமேஸ ஏன் இந்தக் கூட்டங்களில் எல்லாம் கலந்துக்கறீங்க? இதுல நீங்க கலந்துக்கணும்னு ஒண்ணும் கட்டாயம் இல்லையே!’

ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் நீ ஒரு ’பெண்’ என்று நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

உடல்நிலை சரியில்லை என்றால் லீவு போட்டுவிட்டு, அந்த விடுமுறையில் முழுமையாக ஆண்களால் ஓய்வெடுக்க முடியும். ஆனால் பெண்களால் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தாலும் வீட்டு வேலைகளில் இருந்து விடுபட முடியாது. வீட்டில் இருக்கும் பெண்கள் முடிந்ததோ, முடியவில்லையோ சுருக்கமாக ஏதாவது செய்துவிட்டு, சற்று ஓய்வெடுக்கலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்களை விட வீட்டில் இருப்பவர்களின் நிலை இன்னும் கொடுமையானது. வீடே உலகம் என்று வெளி உலகம் தெரியாமல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே சிறிது ஓய்வு கிடைக்கும்போது டிவி பார்த்தால், அதில் சித்தரிக்கும் பெண்களைப் பார்த்து இன்னும் மன அழுத்தம் கூடும்.



சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையில் வந்த செய்தி.

சென்னை எழும்பூர் அஞ்சலகத்தில் அந்தப் பெண் வேலை செய்துகொண்டிருந்தார். செங்கல்பட்டில் இருந்து அதிகாலையில் வீட்டுவேலைகளை முடித்துவிட்டு, அரக்கபரக்க ஓடிவந்து ரயிலைப் பிடித்தால்தான் அலுவலகத்துக்குச் சரியான நேரத்துக்கு வர இயலும். வழக்கமான பணி. மதியம் தயிர் சாதம். இரவு வீடு.
அன்று மதிய உணவு வேளையில் தயிர் சாதம் சாப்பிட்டார். பாத்ரூம் சென்று முகத்தைக் கழுவினார். வெளியே வந்தார். மாடிப்படிகள் தெரிந்தன. மெதுவாகப் படி ஏறினார். மேலே இருந்து ஊர்ந்து செல்லும் மனிதர்களைப் பார்த்தார். அடுத்த நொடி மாடியில் இருந்து குதித்து விட்டார். அவர் இறந்ததுக்கான காரணம் வாழ்க்கையில் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்த சலிப்பு.
ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை தடவை பெருக்கிக் கோலம் போட்டிருப்பாள். எத்தனை ஆயிரம் இட்லிகளைச் சுட்டிருப்பாள். எவ்வளவு துணிகளைத் துவைத்திருப்பாள். எவ்வளவு பாத்திரங்களைத் தேய்த்திருப்பாள்?
பெண்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் சமையலறை எப்படிப்பட்டதாக இருக்கிறது? வீடு கட்டும்போதே ஹால், பெட்ரூம் எல்லாம் பெரிதாக வேண்டும். சமையலறை சிறியதாக இருந்தால் போதும் என்று சொல்பவர்கள் எத்தனைப் பேர்? காற்றோட்டம் இன்றி, ஓர் ஆள் இயங்கும் அளவில்தான் பெரும்பாலான சமையலறைகள் இருக்கின்றன. கிராமங்களில், ஏழை எளியவர்களின் வீடுகளில் பச்சை விறகை வைத்து, கண் எரிய ஊதி ஊதி சமைக்கும் பெண்களின் நிலை மிகவும் மோசம்.

இத்தனை வேலை செய்தும் பெண்கள் வீடுகளில் செய்யும் வேலைகளுக்குச் சரியான மதிப்பீடுகள் இல்லை. பணம் சம்பாதித்து தரும் பெண்களின் வேலைகளைத்தான் வேலையாக நினைக்கிறார்கள். வீட்டில் வேலை செய்பவர்களுக்கு ’சும்மா இருக்கிறாள்’ என்ற பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது. எந்தப் பெண்ணும் சும்மா இருந்துவிட முடியாது.

வேலைக்குச் செல்லாத மனைவி விபத்தில் இறந்தால் அந்த இறப்புக்கு இழப்பீடு இல்லாமல் இருந்தது. சமீபத்தில்தான் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

58 – 60 வயதில் ஓர் ஆண் தன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட முடியும். ஆனால் ஒரு பெண்?

தினமும் 5 பேருக்குச் சாப்பாடு கட்டி அலுத்துப் போயிருந்த ஓர் அம்மா, ’ஒவ்வொருத்தருக்கும் கல்யாணம் ஆக, ஆக ஒரு டப்பா குறையுதுன்னுதான் தோணும். இந்த டப்பா கட்டற வேலையிலிருந்து எப்ப முழு விடுதலை கிடைக்குமோ?’ என்று விரக்தியுடன் சொன்னார்.

வயதான காலத்தில் வேலைகளைச் சுருக்கமாகச் செய்துவிட்டு, ஓய்வு எடுக்கக்கூட இப்போதுள்ள சூழல் விடுவதில்லை. பேரன், பேத்திகளைக் கவனித்துக்கொள்வதற்காக மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்து வேலையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது பெண்களுக்கு!

Saturday, 17 July 2010

கர்ப்பிணி தாய்மார்களுக்கு போலிக் அமிலம் அவசியமா?

கர்ப்பகாலம் பெண்களின் தவக்காலம் என்பார்கள். பத்துமாதங்கள் கருவை சுமந்து அதை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. அதற்கு
தாயானவள் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியம். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றெடுத்தால் அது குழந்தையின் தலைமுறையை பாதிக்கும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். எனவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.


துத்தநாகம்..
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு துத்தநாகச்சத்து சரியான அளவில் இருக்கவேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஏற்றது. எனவேதான் கர்ப்பிணி தாய்மார்கள் தினசரி உணவில் 15 மில்லிகிராம் புரதச்சத்து அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி பிறக்கும் குழந்தைகளுக்கு தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும் என்று மருத்துவர்கள் அச்சுறுத்துகின்றனர்.



மெக்னீசியம்..
கர்ப்பகாலத்தில் உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க மெக்னீசியம் உதவுகிறது. எனவே தினசரி 200 மில்லிகிராம் அளவிற்கு மெக்னீசியம் சத்து அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தானியங்கள், பருப்புகள், இலைக்காய்கறிகளில் மெக்னீசியம் அதிக அளவில் கிடைப்பதால் கர்ப்பகாலத்தில் அவற்றை தவறாமல் உட்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பி வைட்டமின்கள்
கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. எனவே வைட்டமின் பி உணவுகள் இந்த மனஅழுத்தத்தை தடுக்கிறது. தினசரி 200 மில்லிகிராம் பி6 வைட்டமின்களை உட்கொண்டால் அது கரு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அதேபோல் வைட்டமின் பி 12 உணவுகள் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு ஏற்றது.
மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனித மூளைக்கு அவசியமானது. டிஹெச்ஏ குறைபாடு ஏற்படாமல் இது தடுக்கிறது. சல்மான், டுனா வகை மீன்களை கர்ப்பிணிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
அதேபோல் கர்ப்பகாலத்தில் தினசரி 1500 மில்லிகிராம் வரை கால்சியம் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல் கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி சத்தும் அவசியமானது. கால்சியம் மாத்திரைகளாக உட்கொள்வதை விட யோகர்டு போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.

இரும்பு சத்து
கர்ப்பிணிகள் தினசரி 18 முதல் 36 மில்லிகிராம் வரை இரும்புசத்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடினால் அனீமியா ஏற்படுவதோடு அது பிரசவத்தை சிக்கலாக்கிவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் ஏற்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பகாலத்தில் தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்படுவது இயல்பு. எனவே தைராய்டு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேபோல் கர்ப்பிணிகள் தினசரி சரியான அளவு தண்ணீர் பருகவேண்டும். இல்லையெனில் உதடு, வாய் போன்றவை வறட்சியாகிவிடும். எனவே கர்ப்பகாலத்தில் உடம்பில் தண்ணீர் சத்து குறையாமல் அடிக்கடி தண்ணீர் பருகவேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் கர்ப்பகாலத்தில் தினசரி 8000 யூனிட்டிற்கு மேல் வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். அதேபோல் கர்ப்பகாலத்தில் புகைப்பதையோ, மது அருந்துவதையோ தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் கர்ப்பகாலத்தில் கடினமான உடற்பயிற்சி மேற்கொள்வதையோ, 102 டிகிரிக்கு மேல் சூடான நீரில் குளிப்பதையோ தவிர்க்கவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.


போலிக் அமிலம்
போலிக் அமிலச் சத்தானது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நரம்பியல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. எனவேதான் தினசரி 400 முதல் 800 மைக்ரோகிராம் வரை போலிக் அமிலம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கர்ப்பிணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். இது பச்சைகாய்கறிகளிலும், இலைக்காய்கறிகளிலும் காணப்படுகிறது.

கர்ப்பமாயிருக்கும்போதுகர்ப்பிணி பெண்கள்உட்கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விடயம்தான். கர்ப்பணி நலம்பேணும் கிளினிக்குகளில் இது அனைத்துத் தாய்மார்களுக்கும் வழமையாக வழங்கப்படுகிறது.

போலிக் அமிலம் என்பது அது ஒரு வகை விட்டமின் ஆகும்.



எத்தகைய பாதிப்பு...

இது எமது உடற்கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களின் (Chromosome) நியுகிலிய அமில உற்பத்திக்கு மிக அவசியமானதாகும்.

எனவே கர்ப்பகாலத்தில் தாய்க்கு இது குறைபாடாக இருந்தால் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சி பாதிப்படையும்.

இதனால் மண்டை ஓடு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும்.

இது பாரிய பிரச்சனை என்பதால்தான் இக் குறைபாட்டைத் தடுப்பதற்கு அனைத்துக் கரப்பிணிகளுக்கும் போலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

அத்துடன் அது எமது இரத்தத்தின் செறிவிற்கும் அவசியமானது.

அதாவது செங்குருதிக் கலங்கள் எலும்பு மொச்சையில் உற்பத்தியாவதற்கு அவசியமானது. அதாவது இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கத் தேவையாகும்.


ஏன் குறைபாடு ஏற்படகிறது

எமது உடலில் போலிக் அமிலக் குறைபாடு ஏற்படுவதற்கு போசணைக் குறைபாடே முக்கிய காரணமாகும்.

அத்துடன் கர்ப்பமாயிருக்கும் போதும் பாலூட்டும் போதும் போலிக் அமிலத்தின் தேவை அதிகரிக்கிறது. அந்நேரத்தில் அதன் குறைபாடு இருந்தால் கரு பாதிப்படைவதுடன் தாயும் இரத்த சோகைக்கு ஆளாவாள்.

குறைபாடு எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்.

இதைத் தடுப்பதற்கு போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.



ஈரல், இறைச்சி, பால், பாற் பொருட்கள். முட்டை, தானியங்கள், கீரைவகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதால் அவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

சாதாரணமாக ஒருவருக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போதுமானது.

ஆயினும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 5 மி.கி போலிக் அமிலம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பதால் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் 72 சதவிகிதத்தால் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

எப்பொழுது எவ்வளவு காலத்திற்கு?

கரு தங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே  ஆரம்பித்து முதல் 12 வாரங்களுக்கு தவறாது உட்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆயினும் தொடர்ந்து கர்ப்ப காலம் முழுவதும் உட்கொள்வது நல்லது.  குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து 6மாதங்கள் தொடர்ந்தால்  இரத்தசோகை ஏற்படாமல் தடுக்க உதவும்.

இங்கு பலரும் மாதவிடாய் நின்று கர்ப்பம் என்பது நிச்சமாகிய பின்னரே உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். இது நல்ல முறை அல்ல. கரு தங்க முன்னரே உபயோகிக்க ஆரம்பிப்பதே சிறப்பானது.

எந்தப் பெண்ணும் மாதவிடாய் தள்ளிப் போன பின்னரே தான் கர்ப்பமாகியதை உணர்வாள். ஆனால் மாதவிடாய் கடப்பதற்கு பதின்னான்கு தினங்களுக்கு முன்னரே அவளது சூலகத்திலிருந்து முட்டை வெளியாகி அது ஆணின் விந்துடன் கலந்து கரு உற்பத்தியாகிறது.

எனவே மாதவிடாய் தள்ளிப் போகும்வரை காத்திருப்பது உசிதமல்ல. பெண்கள் திருமணமாகி கர்ப்பம் தங்குவதற்குத் தாங்கள் தயாராகும் போதே ஆரம்பிக்க வேண்டும். குறைந்தது ஒருமாதம் முன்னரே ஆரம்பிப்பது சிறப்பானது.




மேலதிக தகவல்களுக்கு

பிரித்தானிய தேசிய சுகாதார சேவையின் 'போலிக் அமிலம் ஏன் பெண்களுக்கு அவசியம்?' என்ற தொடுப்பிற்கு Why Folic acid is important in pregnancy

நன்றி : டாக்டர்.எம்.கே.முருகானந்தன்.


தொகுப்பு : .தையுபா அஜ்மல்.