Wednesday, 3 August 2011

சாக்லேட் தயாரிப்பில் குழந்தைத்தொழிலாளர்!! ஒரு சமூக பார்வை..

அழுது கொண்டிருக்கிற குழந்தையின் கையில் ஒரு சாக்லேட்டினைக் கொடுத்தாலே போதும், தன்னுடைய அழுகையினை உடனே நிறுத்திவிட்டு முகமலர்ச்சியோடு சிரிக்கத்துவங்கிவிடும். அந்த அளவிற்கு சாக்லேட் என்பது அனைவருக்கும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) பிடித்தமான ஒரு உணவுப்பொருளாகிவிட்டது.

 தெருமுனைப்பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் வரை, சாக்லேட் விற்பனை நடைபெறாத கடைகளே இல்லை எனலாம். ஓராண்டிற்கு உலகம் முழுவதிலும் முப்பது லட்சம் டன் அளவிற்கான சாக்லேட்டுகள் விற்பனையாகின்றன... ஐரோப்பாவில் மட்டுமே அதில் பாதியளவிற்கு உண்டு தீர்க்கிறார்கள். 


சாக்லேட்டின் இந்த இமாலய வெற்றிக்குப்பின் பெரும் சோகம் மறைந்திருக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளின் குழந்தைகள் தினந்தோறும் விதவிதமான சாக்லேட்டுகளை உண்கிற அதேவேளையில், ஆப்பிரிக்கக் குழந்தைகளின் நிலையோ வேறுமாதிரி இருக்கிறது. சாக்லேட் தயாரிப்பிற்குத் தேவையான "கோகோ" உற்பத்தி செய்யும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க குழந்தைகள் கடத்தப்பட்டு வேலைக்கு அமர்த்தபடுவதனை ஒட்டுமொத்த சாக்லேட் தொழில்துறையே செய்துவருகிறது என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத்தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் உழைக்கிறார்கள். நாம் மகிழ்ந்துண்ணும் இனிப்பான சாக்லேட்டுகளின் தயாரிப்பின் பின்னே, கசப்பான ஆயிரம் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன...

சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவை உலகிலேயே அதிகளவில்
 (42 %) உற்பத்தி செய்யும் நாடு மேற்கு ஆப்பிரிக்காவின் "ஐவரி கோஸ்ட்" என்கிற நாடுதான். ஆனால் உலகின் மிக மிக ஏழ்மையான நாடுகளில் ஐவரி கோஸ்டும் ஒன்று என்பதுதான் முரண்.

சாக்லேட் தயாரிப்பின் கசப்பான மறுபக்கம் (Ivory Coast Film) 

சாக்லேட் நிறுவனங்களின் வருடாந்திர கண்காட்சி:

குழந்தைகள் கடத்தல், கட்டாயக் குழந்தைத்தொழிலாளர் முறை போன்றவை உண்மையானதுதானா எனக்கண்டறிய டென்மார்க்கைச் சேர்ந்த "மிக்கி மிஸ்திராதி" என்கிற பத்திரிக்கையாளர் முடிவெடுக்கிறார். அதனை ஒரு ஆவணப்படமாகவும் தயாரித்தார். உண்மை எப்போதும் அபாயகரமானது என்பதால், தன்னுடைய அடையாளங்களை மறைத்தும் சட்டைக்குள் ஓட்டை போட்டு கேமராவினை மறைத்தும் அவர் உருவாக்கிய படத்தின் பெயர்தான்"The Dark side of Chocolate".


ஒவ்வொரு ஆண்டும் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் ஜெர்மனியிலிருக்கும் கொலோன் என்கிற நகரில் சந்தித்துக்கொள்வார்கள். அச்சந்திப்பில், சாக்லேட் தொழிலை வளர்த்தெடுப்பது மற்றும் விற்பனையைப் பெருக்குவது குறித்து விவாதிப்பார்கள். மிக்கி தன்னுடைய பயணத்தினை இச்சாக்லேட் கண்காட்சியிலிருந்து துவங்குகிறார்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான சுவிசர்லாந்தைச்சேர்ந்த "பேரி கேலபாட்" என்கிற நிறுவனம்தான் பெரும்பாலான மற்ற சாக்லேட் நிறுவனங்களுக்கு கோகோ பௌடரை விற்று விநியோகம் செய்கிறது.

பேரி கேலபாட்டின் துணைத்தலைவர் பேட்ரிக் ஹாட்பென்னேவை கண்காட்சியில் சந்திக்கிறார் மிக்கி.

இயக்குனர் மிக்கி : "ஐவரி கோஸ்டில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்?"

 பேட்ரிக் ஹாட்பென்னே (பேரி கேலபாட்டின் துணைத்தலைவர்) : "எங்களுடைய நிறுவனத்தில், உலகம் முழுவதிலும் ஒட்டுமொத்தமாக 7400 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் தோராயமாக 1000 பேருக்குமேல் ஐவரி கோஸ்டில் மட்டும் பணிபுரிகிறார்கள்."

 இயக்குனர் மிக்கி : "குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் பணிபுரிவதாக வதந்திகள் இருக்கின்றனவே. அது குறித்து?"

 பேட்ரிக் ஹாட்பென்னே : "உண்மையாகவே இது குறித்து எங்களுக்குத் தெரியாது. எங்காவது ஒன்றிரண்டு அபூர்வமாக நடக்கலாம். அப்படியொன்று நடந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்..."                              

அக்கண்காட்சியில் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் குழந்தைத்தொழிலாளர்களைப் பயன்படுத்துவது குறித்து வாய்திறக்கவில்லை.

2001 லேயே குழந்தைத்தொழிலாளர்களை சாக்லேட் தயாரிப்புத் தொழிலின் எந்தவொரு வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது என்று சாக்லேட் தொழில்துறை நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றின. இவற்றையெல்லாம் உலகுக்கு அறிவித்தவர்களே, இதனைச் செய்வார்களா? என்ற கேள்வியுடன் இயக்குனர் மிக்கி ஆப்பிரிக்காவிற்கே சென்று ஆய்வினை நடத்த முடிவெடுக்கிறார்.    

 குழந்தைக்கடத்தலில் உலகின் முதன்மை நாடு - மாலி :

மாலி என்கிற மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஏராளமான குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்ட் நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு கோகோ தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவதாகச் செய்தி நிலவுகிறது. எனவே தன்னுடைய பயணத்தை உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியிலிருந்து துவங்குகிறார் இயக்குனர். 


ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு மேற்கே இருக்கிற நாடுதான் மாலி. மாலி மற்றும் பிற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திக்கொண்டு வரப்படும் குழந்தைகளை "சிகாசோ" என்கிற பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்குதான் கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து புறப்படுகிற பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு "செகுவா" என்கிற இடம் வரை செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மாலி-ஐவரி கோஸ்ட் நாடுகளுக்கிடையிலான எல்லையினை குறுக்குப்பாதைகளில் கடந்து குழந்தைகளை ஐவரி கோஸ்டிற்கு கொண்டு சேர்க்கிறார்கள் என்கிற உண்மையினை மாலி நாட்டிலிருக்கும் ஒரு சமூகநல ஊழியர் மூலம் அறிந்துகொள்கிறார் இயக்குனர் மிக்கி.
 இட்ரிகாசா கண்டே (சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர்) :"குழந்தைகளைக் கடத்துவதென்பது எப்போதுமே இருந்து வருகிறது. எல்லாப் பேருந்துகளிலும் குழந்தைகள் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஐவரி கோஸ்டிற்கு செல்லும் குழந்தைகளின் வயது பொதுவாக 12 இலிருந்து 14 வரை இருக்கும். இதிலே பெண்குழந்தைகளும் உண்டு."
அவரால் இயன்ற அளவிற்கு, பேருந்து நிலையத்திலிருந்து கடத்தப்படுகிற குழந்தைகளை மீட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் தான் மீட்கிற குழந்தைகளின் பெயர், முகவரி போன்றவற்றை ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதியும் வருகிறார். 2006 இல் மட்டும் அவர் மீட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 132 (35 பெண் குழந்தைகள் உட்பட). 2007 இல் அவ்வெண்ணிக்கை 140 (41 பெண் குழந்தைகள்). புர்க்கினா பாசோ, மாலி, நைஜர் போன்ற நாடுகளைச்சேர்ந்தவர்கள்தான் அக்குழந்தைகள்.
 ஒரு பேருந்து முதலாளி : "கிராமப்புறக் குழந்தைகள்தான் அதிகமாக கடத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்கள் ஒரே நேரத்தில் 10 முதல் 15 குழந்தைகளை பேருந்தில் கடத்துவார்கள். பேருந்தில் மாலி நாட்டின் எல்லை வரை குழந்தைகளைக் கொண்டுசெல்வார்கள். பின்னர் அங்கிருந்து குறுக்குப்பாதைகளில் மோட்டார் சைக்கிள்களில் நாட்டு எல்லையினைக்கடந்து ஐவரி கோஸ்ட் நாட்டிலிருக்கும் கொரோகோ என்கிற இடத்திற்குச்சென்று அங்கிருக்கும் கோகோ தோட்ட முதலாளிகளிடம் விற்றுவிடுவார்கள்."

பேருந்து முதலாளியிடம் பேசிவிட்டு வெளியே வருகிறபோது, அருகினில் நிற்கும் பேருந்தொன்றினில் ஒரு சிறுமி அங்குமிங்கும் முழித்துக்கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். இயக்குனர் அவளருகினில் சென்றதும், அச்சிறுமியைக் கடத்திவந்த கடத்தல்காரப்பெண் தப்பித்து ஓடிவிடுகிறாள். அச்சிறுமியை விசாரித்துப்பார்த்தால், அவள் கொண்டுவரப்பட்டிருக்கிற பேருந்து நிலையத்திலிருந்து 450 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் செகு என்கிற கிராமத்திலிருந்து வந்திருக்கிறாள் என்றும் தெரிகிறது.

அச்சிறுமியிடம், சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளரான இட்ரிகாசா கண்டே,
 "உன்னை நான் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறேன். மீண்டும் இதுபோல் வந்துவிடாதே... நீ அங்கே சென்று காசெல்லாம் எதுவும் சம்பாதிக்க முடியாது. அங்கே போனால் வீணாகத்தான் போவாய்"
என அச்சிறுமியை எச்சரித்துவிட்டு அவளது வீட்டிற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறார். வாழ்க்கை முழுவதும் இதே போன்ற நிலைமையினைத் தினந்தோறும் எதிகொள்ள வேண்டியிருக்கிறதே என்று புலம்பிக்கொண்டே அழுகிறார் இட்ரிகாசா கண்டே.

குழந்தைக்கடத்தல் நடைபெறுகிற பாதையில் செகுவாவை நோக்கி இயக்குனர் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார். வழியில் ஒரு கிராமத்தில் நின்று, அங்கிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
 பக்கரி (கிராமத்தலைவர்) : "500 வீடுகள் இருக்கிற எங்கள் கிராமத்திலிருந்து, இதுவரை 12 -15 வயதுள்ள 130 குழந்தைகள் காணவில்லை. கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுடைய கிராம சந்தைக்கு வருவார்கள். அங்கே அவர்கள் பார்க்கிற குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் (தெரிவிக்காமல்) கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள்."

மேலும் பயணித்து, செகுவாவை வந்தடைந்து அங்கிருக்கும் உணவகமொன்றின் உரிமையாளர் மூலமாக குழந்தைகளைக் கடத்த உதவுகிற ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது.
 கடத்தலில் ஈடுபடுபவர் "குழந்தைகளை எல்லைதாண்டி கடத்தும் வேலையினை ஒருவரே செய்வதில்லை. ஒருவர் மாலி நாட்டின் எல்லைவரை குழந்தையைக் கொண்டு செல்வார். இரண்டாமவர், யாருக்கும் தெரியாமல், நாட்டு எல்லையினைத்தாண்டிக் கொண்டுசெல்வார். மூன்றாமவர் ஐவரி கோஸ்ட் நாட்டினில் குழந்தையினைப் பெற்றுக்கொண்டு கோகோ தோட்ட முதலாளிகளிடம் ஒப்படைப்பார். ஆக ஒரு கடத்தலை தனிப்பட்ட ஒருவர் மட்டும் செய்வதில்லை. அதே போன்று எல்லையோரம் வாழ்கிற எல்லோரும் ஏதோவொரு வகையில் குழந்தைகளின் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அதனை யாரேனும் மறுத்தால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகளை எல்லை தாண்டி கொண்டு விடுவதற்கு, கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுக்கு பணம் தருகிறார்கள். நானே பல பேரை கொண்டு சென்றிருக்கிறேன்."
செகுவாவிலிருந்து ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைய, புறவழியொன்றின் வழியாகக் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறிந்துகொண்ட இயக்குனர் மிக்கியும் அதே புறவழி மண்சாலைவழியே சென்று பார்க்கிறார். 
 
சிகாசோவிலிருந்து வருகிற பேருந்துகளிலிருந்து குழந்தைகள் இறக்கப்படுவதும், உடனே அங்கே தயார் நிலையில் இருக்கும் நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் அக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறவழிச்சாலை வழியாக நேராக ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைவதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. 
 
இயக்குனரும் அதே வழியில் சற்று அதிக இடைவெளிவிட்டுப் பின்தொடர்கிறார். போகிற வழியில் சாலையோரத்தில் ஒரு பத்து வயதிற்குட்பட்ட சிறுவன் தனியாக அழுதுகொண்டிருக்கிறான். கடத்தல்காரர்கள் யாரையாவது பார்த்துப் பயந்து, அச்சிறுவனை நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். அச்சிறுவன் அவ்விடத்திற்கு எப்படி வந்தான் என்று சொல்லக்கூட முடியாதநிலையிலிருந்தான்.

குழந்தைத்தொழிலாளர்களே இல்லையாம் - முதலாளிகளும் ஆட்சியாளர்களும் 

இயக்குனரும் சில ஆப்பிரிக்க சமூக ஆர்வலர்களும் இணைந்து ஐவரி கோஸ்டின் பொருளாதாரத்தலைநகரான "அபிட்ஜானுக்கு"ச் செல்கிறார்கள். நெஸ்லே, கார்கில், ஏ.டி.எம்., பேரி கேலபாட், சாப் கோகோ போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அபிட்ஜானில் இருக்கின்றன. உலகின் 42 % கோகோ, ஐவரி கோஸ்டிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இந்நிறுவனங்கள்தான் ஐவரி கோஸ்டிலிருந்து ஒட்டுமொத்த கோகோ ஏற்றுமதியையும் செய்கின்றன.

கோகோ ஏற்றுமதி நிறுவனமான சாப் கோகோவின் (SAF Cocoa )
 முதலாளி அலி லகிசை சந்தித்து, குழந்தைகள் கடத்தல் குறித்தும், குழந்தைத்தொழிலாளர் குறித்தும் கேட்கிறார் இயக்குனர் மிக்கி.
 அலி லகிஸ் : "நான் ஒரு கோகோ தொழில் குடும்பத்தில்தான் பிறந்தேன். என்னுடைய வாழ்க்கையில் இதுவரையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோகோ தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்ததே இல்லை. கோகோ தோட்டங்களில் குழந்தைத்தொழிலாளர் முறையே இல்லை. ஐவரி கோஸ்டில் ஒரு குழந்தைத்தொழிலாளர்கூட கோகோ தோட்டங்களில் வேலை செய்யவில்லை என்பதனை ஒட்டு மொத்த உலகத்திற்கே சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். இது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. பல குழுக்கள் வந்து முறையாக விசாரித்துவிட்டு அறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றன. எந்தவொரு அறிக்கையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்படவே இல்லை. நாட்டின் எல்லைகளில் கூட இது நடக்கவில்லை."
 இயக்குனர் மிக்கி : "மாலியிலிருந்தும் புர்க்கினா பாசோவிலிருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்டின் கோகோ தோட்டங்களில் வேலை செய்யவைக்கப்படவே இல்லை என்கிறீர்களா?"
 அலி லகிஸ் : "இல்லை இல்லை இல்லவே இல்லை... எங்களது நிறுவனம்தான் ஐவரி கோஸ்டிலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். சும்மா எதையாவது கொளுத்திப்போட்டுவிட்டு போகாதீர்கள். ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். குழந்தைத் தொழிலாளர்களே இல்லையென்பதை நீங்களே சென்று பார்த்துவிட்டு வாருங்கள்" என்கிறார் உலகின் மிகப்பெரிய கோகோ ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் அலி லகிஸ். அவருடைய நிறுவனம்தான் அதிக அளவில் நெஸ்லே நிறுவனத்திற்கு கோகோ விற்பனை செய்கிறது.
இயக்குனர் மிக்கியின் ஆவணப்பட முயற்சி குறித்து கேள்விப்பட்ட ஐவரி கோஸ்ட் நாட்டின் தொழிலாளர் துறையின் தலைமைச்செயலர்  "டோஹே ஆடம் மாலிக்", மிக்கியை அழைத்து பேச விரும்புகிறார்.
 இயக்குனர் மிக்கி : "மாலி நாட்டின் செகுவா என்ற இடத்திலிருந்து குழந்தைகளை கடத்திக்கொண்டு கடத்தல்காரர்கள் புறவழிச்சாலை வழியாக ஐவரி கோஸ்டிற்கு வருகிறார்கள். இதனை நானே பார்த்தேன்"
 டோஹே ஆடம் மாலிக் : "வருடா வருடம் கோகோ விளைச்சலானது அக்டோபரில் துவங்கி மார்ச்சில் முடியும். நீங்கள் ஜூலையில் மக்கள் வருகையினைப் பார்த்தீர்களானால், அவர்கள் கோகோவிற்காக வரவில்லை. அந்த நேரத்தில் கோகோ எங்குமே இருக்காது. அதனால் கோகோ தோட்டங்களில் வேலையும் இருக்காது. உண்மை என்னவென்றால், அவர்கள் எல்லாம் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வருகிறார்கள். ஒரு பேருந்தில் 20 குழந்தைகள் இருந்தால் உடனே குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஐவரி கோஸ்டின் அழகைக் காண சுற்றுலா வருகிறார்கள்"
 இயக்குனர் மிக்கி : "ஆனால் நான் பார்த்தது ஏப்ரல் மாதத்தில்"
 டோஹே ஆடம் மாலிக் : "அதற்கு எங்களிடம் சட்டமெல்லாம் இருக்கிறது."
சொல்லிவைத்தாற்போல் முதலாளிகளும் ஆட்சியாளர்களும் ஒரே மாதிரிகுழந்தைக்கடத்தலும் குழந்தைத்தொழிலாளர் முறையும் இல்லவே இல்லை என்று அடித்துச்சொல்கின்றனர்.
ஆதாரங்கள்:

ஆதாரம் ஒன்று:

கோகோ ஏற்றுமதி நிறுவன முதலாளி அலி லகிஸ் மற்றும் ஐவரி கோஸ்டின் தொழிலாளர் துறை முதன்மைச்செயலர் ஆகியோர் சொல்வது உண்மைதானா என்பதனை அறிய, ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களின் உதவியினை நாடுகிறார் இயக்குனர். மேற்குலக நாட்டவரை பார்த்தால் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால், ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களிடம் மறைமுக கேமராக்களை கொடுத்து கோகோ தோட்டங்களை வீடியோ எடுக்க சொல்கிறார் இயக்குனர். அவர்கள் எடுத்து வந்த வீடியோவில் பதிவாகியிருப்பதைப் பார்த்தால், கோகோ தோட்டங்களில் முழுவதுமாக குழந்தைகள்தான் எல்லா வேலைகளையுமே செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது. 

ஆதாரம் இரண்டு:

வீடியோவை பார்த்ததும், இயக்குனரும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மீண்டுமொருமுறை கோகோ தோட்டங்களுக்கு செல்கிறார். அங்கே கைகளில் கத்தியும் உடலினில் வேர்வையுமாக கோகோ தோட்டங்களில் வேலை செய்கிற அச்சிறுவர்கள் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வந்தவர்களல்ல, தங்கள் மீதமுள்ள வாழ்க்கையையே கோகோ தோட்டங்களில் தொலைக்க வந்தவர்கள்.

ஒரு கோகோ தோட்டத்திலிருப்பவரைச் சந்தித்து (மறைமுகக் கேமராவை வைத்துக்கொண்டு), தங்களுடைய தோட்டத்திற்கும் குழந்தைத்தொழிலாளர்கள் வேண்டுமென்றும், எவ்வாறு பெறுவது என்றும், எவ்வளவு செலவாகுமென்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாகக் கேள்வி கேட்கப்படுகிறது.
 கோகோ தோட்ட முதலாளி : "எங்க பெரியண்ணன் இருக்கார். அவரிடம் எத்தனை குழந்தைகள் வேண்டுமென்று சொன்னால், ஏற்பாடு செய்வார். ஒரு குழந்தைக்கு 15,000 ரூபாய் ஆகும்"
15,000 ரூபாய் கொடுத்தால், ஆயுள் முழுவதும் உழைப்பதற்கு சம்பளமே இல்லாத குழந்தை என்கிற பொருள் கிடைக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆதாரம் மூன்று:

கோகோ தோட்டங்களிலிருந்து தப்பிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லையென்றாலும், மிக அபூர்வமாக ஒன்றிரண்டு குழந்தைகள் கோகோ தோட்டங்களிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். 

அவ்வாறு தப்பித்த இரு சிறுவர்கள்,
 யாயா கொனாட்டே : "கடத்தல்காரர்கள் எங்களை எப்படியோ ஏமாற்றித்தான் அழைத்துச்சென்றார்கள். அங்கே நிறைய சிறுவர்-சிறுமிகள் இருந்தனர். நாங்கள் எல்லோரும் தப்பிக்க முயற்சி செய்தோம். தோட்ட முதலாளிகள் எங்களைத் துரத்தினார்கள். இரவெல்லாம் இருளினில் ஒளிந்து மறைந்திருந்தோம். மறுநாள், எங்களை பார்த்த வெளியாள் ஒருவர்தான் உதவி செய்து எங்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்."
 சங்கா த்ரோரே : "கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது வேலை செய்ய மறுத்தாலோ, கடுமையாக அடிப்பார்கள்."


ஆதாரம் நான்கு:

சர்வதேசக் காவல்துறையினர், குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்ததாகவும் 50 குழந்தைகளை மீட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகிறது. இயக்குனர் மிக்கி சர்வதேசக் காவல்துறை உயரதிகாரியை சந்திக்கப்புறப்படுகிறார்.
 ஹென்றி ப்ளேமின் (சர்வதேச காவல்துறை தலைமை அதிகாரி) :
 "சாலைகள், சந்தைகள், கோகோ தோட்டங்கள் போன்ற இடங்களில் இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, அதன்பின் மேற்கொண்ட சோதனையில் 65 குழந்தைகள் வரை எங்களால் மீட்க முடிந்தது. எங்களது நடவடிக்கைகளை சற்று முன்கூடியே அவர்கள் அறிந்தமையால், பல குழந்தைகளை வீடுகளில் ஒளித்துக்கொண்டார்கள். மீட்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகள் அனைவரும், புர்க்கினா பாசோ, மாலி, டோகோ, நைஜர், நைஜீரியா, பெனின் போன்ற வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்."
 இயக்குனர் மிக்கி : "கோகோ தோட்டங்களில் குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டதும் அதிர்ச்சியடையும் அளவிற்கு புதிய செய்தியாக இருந்ததா உங்களுக்கு?"
 ஹென்றி ப்ளேமின் : "நிச்சயமாக இல்லை"
குழந்தைகள் கடத்தல், குழந்தைத் தொழிலாளர்முறை போன்றவை மிகச்சாதாரணமாக நடப்பது எல்லாத் தரப்பு மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் ஏனோ சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தெரியாமல் (தெரிந்தும் ஒப்புக்கொள்ளாமல்) இருப்பது ஆச்சர்யம்தான்.

முதலாளித்துவத்தின் அடிப்படையே மனிதநேயத்திற்கு எதிரானதுதான்:

எல்லா ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு சாப் கோகோவின் முதலாளி அலி லகிசை சந்திக்கிறார் இயக்குனர் மிக்கி.
 இயக்குனர் மிக்கி : "சென்ற முறை உங்களை சந்தித்தபோது, ஐவரி கோஸ்டில் குழந்தைத்தொழிலாளர்களே இல்லை என்றீர்கள். ஆனால் சர்வதேச காவல்துறைகூட பல குழந்தைத் தொழிலாளர்களை மீட்டிருக்கிறார்கள்."
 அலி லகிஸ் : "ஐவரி கோஸ்டிற்கே இது மிக வருத்தமான செய்திதான். செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் நானும் பார்த்தேன். இதெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கிறது. அரசாங்கமும் இதனை எதிர்த்து போராடிவருகிறது."
என்கிற மிகப் பொறுப்பான(?!?) பதிலை உதிர்க்கிறார் அலி லகிஸ்.

ஆதாரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஐ.நா. சபையின் ஒரு அங்கமான"சர்வதேச தொழிலாளர் ஆணையத்திற்கு" செல்கிறார் இயக்குனர் மிக்கி. உலகம் முழுவதிலும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பினையும் தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டியுங்கும் அமைப்பிது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இதே அமைப்புடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு குறித்த ஒப்பந்தமொன்றினை கையெழுத்திட்டது.

சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் இயக்குனர் பிரான்க் ஹேகமன், மிக்கி காண்பித்த வீடியோ ஆதாரங்களைப் பார்த்தபின்னர்,
 பிரான்க் ஹேகமன் : "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்காகக் கடந்த 13 வருடங்களாக உழைத்து வருகிறேன். ஆனால் இது போன்ற வீடியோ காட்சிகளை பார்க்கிறபோதெல்லாம், அதிர்ச்சியாகவே இருக்கிறது. இது போன்ற ஆதாரங்களெல்லாம் நம்முடைய இயலாமையினைத்தான் காட்டுகிறது."
 இயக்குனர் மிக்கி : "சாக்லேட் நிறுவனங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது?"
 பிரான்க் ஹேகமன் : "பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. சில வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையான மாற்றம் எதுவும் பெரிய அளவில் நிகழவில்லை. ஐவரி கோஸ்டிலும் கானாவிலும் கோகோ தோட்டங்களில் இன்றையநிலவரப்படி எத்தனை குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று கேட்டால், என்னால் சொல்லமுடியாத நிலைதான்"
சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தன்னுடைய ஆவணப்படத்தை திரையிட்டுக்காட்டவும், அவர்களின் உண்மையான அக்கறை குறித்து சில கேள்விகளைக் கேட்கவும் அனுமதி கேட்டுப்பார்த்தார் இயக்குனர் மிக்கி. ஆனால் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் அவருடைய படத்தைப் பார்க்கவோ, அவரிடம் பேசவோ மறுத்தவிட்டன. ஆனால் திடீரென ஒரு நாள், சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு அறிக்கையினை மட்டும் வெளியிட்டன. அதில், 
 "பெரும்பாலான கோகோ தோட்டங்கள் எங்களுக்குச் சொந்தமானதல்ல. அதனால் அங்கிருக்கும் எந்தவொரு மோசமான நிலைமைக்கும் நாங்கள் பொறுப்பாகமுடியாது"
என்றொரு வரி எழுதப்பட்டிருந்தது.
 
ஆதாரங்களை காண்பித்தவுடன், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தட்டிக்கழிக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு அக்குழந்தைகள் மீது அக்கறை இருக்கிறதா என்கிற சந்தேகம்தான் நம் அனைவருக்கும் எழும்.

ஒவ்வொரு சாக்லேட் நிறுவனங்களின் வாசலிலும் பெரிய திரையொன்றினை அமைத்து, தான் தயாரித்த ஆவணப்படத்தை திரையிடத்திட்டமிடுகிறார் இயக்குனர் மிக்கி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐவரி கோஸ்டில் அலுவலகம் அமைத்து சுரண்டலைச் செய்துவரும் நெஸ்லேயின் தலைமையகம் முன்பு திரையமைத்து தன்னுடைய ஆவணப்படத் திரையிடலைத் துவங்கினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒட்டுமொத்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து 40 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவிகளை செய்திருக்கின்றன. 
 
ஆனால், நெஸ்லே என்கிற ஒரே ஒரு நிறுவனம் கடந்த ஓராண்டில்மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்திருக்கிறது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் ஐவரி கோஸ்டில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. 
 
அவர்களுடைய மேற்பாவையில்தான் அனைத்து கொத்தடிமைத்தனமும், ஒடுக்குமுறையும், சுரண்டலும் நடைபெறுகின்றன. 
 இலாபமொன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவர்கள், ஐ.நா.வில் சட்டம் போடுவதும், குழந்தைதொழிலாளர் முறையினை ஒழிக்க முயற்சி எடுத்து வருகிறோம் என்று வருடாவருடம் அறிக்கைகள் விடுவதும், உதவித்தொகை என்கிற பெயரில் மிகச்சிறிய தொகையினை வீசியெறிவதும், யாரை ஏமாற்றுவதற்காக?
ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்காதீர்கள், சிரியாவிடம் சிரித்துப் பேசாதீர்கள், க்யூபாவை கண்டுகொள்ளாதீர்கள் என்று உலகிற்கே ஒரே நாளில் உத்தரவு போட்டு நிறைவேற்றுகிற ஐ.நா., அமெரிக்கா மற்றும் இன்ன பிற மேற்குலக நாடுகள் எல்லாம், இத்தனை ஆண்டுகளாகக் கொடூரமாக சுரண்டப்படும் ஆப்பிரிக்ககி குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்காததற்கான காரணம் என்ன?  

 ஒருபுறம் மனிதநேயத்தை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர்கள்போல பேசிக்கொண்டே, மறுபுறம் மக்களைக் கொன்றாவது இலாபம் பார்க்கத்துடிக்கிற அமைப்பின் பெயர்தான் முதலாளித்துவம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 2 August 2011

The Sump of Assumptions....

Thomas Edison had a very simple way of conducting job interviews. He'd invite prospective employees to join him for soup in the company cafeteria. If they salted their soup before tasting it, the interview was over. Plain and simple. Given the nature of his work - where even a single stone unturned could mean the difference between the failure or success of a costly product - Edison could not afford to surround himself with people ruled by faulty assumptions,

Of all the roadblocks to innovation, assumptions are the worst. Invisible, insidious and habitual, THEY STOP US BEFORE WE EVEN START - the default position for those of us too consumed by our past to consider the future the way it really is: pure potentiality.
 
What is an assumption? Simply put, it's "taking something for granted". A "supposition." We do it all the time - although not always to our detriment. For example, if you leave your toothbrush in the bathroom at night, it's safe to assume that it will be there in the morning. Your assumption saves you lots of time searching for it in the kitchen or garage. Other assumptions, however, don't work out quite as well - despite the seeming evidence for their veracity. Many of our ancestors, for example, assumed the earth was flat. They had "proof." They saw it with their own eyes. But their so-called proof - their inaccurate interpretation of existing phenomena - was a far cry from reality. And it was precisely because of their faulty assumptions, that many of our ancestors missed out on the New World and all the fabulous beachfront property that came with it.
 
Think about it. If every ten years half of what scientists believe to be true is proven to be false, how much of what your decisions are based on is anything more than just a temporary - and not very elegant - arrangement of half-baked perceptions, flaky factoids, and loosely interpreted statistics?
 
Take a minute now to consiser what you may be assuming falsely. What conclusions have you drawn that prevent you from sailing new oceans? What beliefs are you bound by that are likely to be laughable three years from now? Are you absolutely sure you know what your customers want? Are you positive your manager won't free up the money to fund your latest idea? Can you say, without a shadow of a doubt, that your current strategy to accomplish your "stretch goal" is based on anything more than hearsay and hot talk?
 
But hey, you're not alone in your tendency to jump to conclusions. Join the club as you consider some of these (now famous) limiting assumptions throughout history:
  • "I think there is a world market for about five computers." (Thomas Watson, founder of IBM)
  • "Everything that can be invented has been invented," (Charles Duell, Commissioner, US Office of Patents, 1899)
  • "There is not the slightest indication that nuclear energy will ever be obtainable. It would mean that the atom would have to be shattered at will." (Albert Einstein)
  • "The phonograph is not of any commercial value." ( Thomas Edison)
  • "I don't need body guards." (Jimmy Hoffa)
  • "Man will not fly for 50 years." (Wilbur Wright, 1903)
  • "640K ought to be enough for anybody." (Bill Gates)
  • "With over 50 foreign cars on sale here, the Japanese auto industry isn't likely to carve out a big slice of the U.S. market for itself." (Business Week, 1968)
What is your bigggest assumption about your hottest new idea?
What is your company's most pervasive, collective assumption?
What can you do today to identify the one assumption most likely to sabotage your future success? What can you do to go beyond it?

The Sump of Assumptions
by Mitchell Ditkoff

Wednesday, 27 July 2011

தங்கம் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது...

தங்கம் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது.வீடு இல்லாமல் இருப்பவர்களைவிட தங்கம் இல்லாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு என்றேதான் சொல்லவேண்டும். ஆண்களைவிட பெண்களை அதிகமதிகம் கவரக்கூடியது தங்கம்.

பல ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருப்பது இந்தத்தங்கம்.
வரதட்சணை என்பது பணமாக கொடுக்கப்படும் கைக்கூலி. ஆனால் இன்று வரதட்சணை பணமாக அல்லாமல் பல இடங்களில் தங்கமாக வாங்கப்படுகிறது கொடுக்கப்படுகிறது.100 சவரண் 200 சவரண் என்று வசதிக்கேற்ப கேட்கப்படுகிறது.

ஆசியா கண்டத்தில் அதிகமான தங்கம் இறக்குமதியும் விற்பனையும் நம் இந்தியாவில்தான் நடக்கிறது. இந்தியர்கள் பெரும்பாலோர் தங்கத்தை சேமிப்பு நோக்கம் கருதியே வாங்குகிறார்கள்.இப்படி சேமிப்பின் நோக்கத்தில் வாங்கக்கூடிய தங்கம் தரமானது தானா.? நாம் கொடுக்கக்கூடிய பணத்திற்கு தகுந்த மதிப்பு அந்ததங்கத்தில் இருக்கிறதா.? என்ற பல சந்தேகக்கேள்விகள் நம்பலரிடையே இருந்து வருகிறது.
காய்கறி கடைகளில் நம்பெண்கள் காய்களை ஒடித்துப்பார்த்து அழுத்திப்பார்த்து நசுக்கிப்பார்த்து முகர்ந்துப்பார்த்து வாங்குவார்கள்.
புடவைக்கடைகளில் தரம் நிறம் துணியின் தன்மை என்று பார்த்து பார்த்து பல கடைகளில் ஏறி இறங்கி வாங்குவார்கள்.ஆனால் தங்கக்கடையில் மட்டும் நம்பெண்களும் ஆண்களும் எளிமையாக ஏமாந்துவிடுகிறார்கள் ஏமாற்றிவிடுகிறார்கள்.காரணம் தங்கத்தை உரசிப்பார்க்க அதன் தரத்தை அலசிப்பார்க்க ‘லேப்;’ வசதி எல்லா ஊர்களிலும் இல்லை.

இன்று பல நகைக்கடைகளில் வாங்கக் கூடிய தங்கத்தை இயந்திரத்தில் வைத்து சோதனை செய்து கொடுப்பதாக நிறைய விளம்பரங்கள் பார்க்க முடிகிறது. இதுவும் ஒருவகையான ஏமாற்றல்தான்.
இன்றைய பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வாக இருப்பதினால் தங்கத்தைப்பற்றி பலவிதமான கேள்விகள் கேட்பதினால் அதே விழிப்புணர்வுக்கு தங்கவியாபாரிகளும் இயந்திரங்களின் மூலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் எல்லா நகைக்கடைக்காரர்களும் ஏமாற்றுகிறார்கள் என்று நான் கூறவில்லை. அதிகமானோர் ஏமாற்றுகிறார்கள் என்றே சொல்கிறேன்.

ஒரு கடையில் வாங்கிய நகையை அதை விற்கும் போது இன்னொரு கடைக்காரர் வாங்குவதில்லை அப்படியே வாங்கினாலும் அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்வார்கள். காரணம் என்ன.? அதன் தரம் அவர்களுக்கு தெரியும்.இது இந்தியாவில் செய்து இந்தியாவில் விற்கப்படும் நகைகளுக்கு மட்டும்தான்.இதே வெளிநாட்டிலிருந்து குறிப்பாக துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாங்கிய நகைகளுக்கு எந்தக்கடைக்கு போனாலும் நல்ல தொகை கிடைக்கும்.காரணம் தரம்தான்.

ஏன் நம்மவர்கள் அந்தத்தரத்தை கொடுக்கக்கூடாது.?
அப்படிக்கொடுத்தால் அவர்களால் அதிகமான லாபம் ஈட்டமுடியாது. உல்லாசமான வாழ்க்கை வாழமுடியாது. பல நகைக்கடைக்கார்களின் வாழ்க்கையைப் பாருங்கள். எனக்கு தெரிந்த பத்தர்கள் சிலர் இன்று பெரிய நகைக்கடை அதிபராகத் திகழ்கிறார்கள்.

சாதாரனமாக துவங்கிய கடைகள் நாளடைவில் அழங்காரமாக வடிவமைத்து விஸ்திரப்படுத்தி குளிர்சாதனங்கள் வைத்து மக்களை கவரக்கூடிய அளவிற்கு வளர்ந்திருப்பார்கள். நேர்மையான வியாபாரத்தில் எளிதில் இப்படியானதொரு வாழ்க்கைக்கு வரமுடியாது என்பது உண்மை. அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அப்பாவிமக்களின் உழைப்பை வேர்வையை சுவைப்பது எந்த வியாபாரிக்கும் நியாயமானதல்ல.

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று சொல்வார்கள்.நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் நம் பணத்தை நாம் வாங்கக்கூடிய பொருளை தரமாக நியாயமாக வாங்கலாம்.

இந்தியாவில் வாங்கிய 22கேரட் நகையை துபாயில் விற்பனை செய்தால் அல்லது நகைமாற்றம் செய்தால் அதற்கான மதிப்பு என்னத் தெரியுமா.?
18kt மதிப்புபோட்டு எடுப்பார்கள் அதாவது ஒரு கிராம் 22கேரட் இந்திய ரூபாய்படி 1500 க்கு வாங்கி இருப்பீர்கள். அதை விற்கும் போது 1200 க்கு வாங்குகிறார்கள்.இந்த 1200- 18kt விலை.300ரூபாயை நாம் ஒரு கிராமுக்கு இழக்கிறோம்.
இதே துபாயில் வாங்கப்பட்ட 22kt தங்கத்தை துபாயிலேயே நகைமாற்றம் செய்தால் 30 ரூபாய் மட்டும் (3திரஹம்)ஒரு கிராமுக்கு குறைத்து எடுத்துக் கொள்வார்கள்.இந்தியாவில் அதேவிலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
அப்படிப்பார்த்தால் 270 ரூபாய் ஒரு கிராமுக்கு இந்திய நகைக்கடைக்காரர்கள் நம்மிடம் அதிகமாக வாங்குகிறார்கள்.
ஒரு கிராமுக்கு 270 என்றால் 10 சவரண் நகை (80 கிராம்) வாங்கப்படும்போது 21600 ரூபாயை நாம் ஏமாறுகிறோம்.இது தரமில்லாத நாம் 22kt என்று நம்பி வாங்கப்படும் நகைக்கு இந்த நிலை.

24Kt,22kt, 21kt, 18kt - என்று தரம் வைத்துள்ளார்கள் அது எதன் அடிப்படையில் என்று பார்க்கலாம்.

24கேரட் தங்கம்
24 கேரட் என்பது சுத்தமான தங்கம். அதில் ஒரு சதவீதம் மட்டுமே காப்பர் கலந்திருக்கும்.அதை995 என்றும், 999 என்றும், 999.9 என்றும் தரத்தன்மையில் பிரிக்கப்படுகிறது.
சுத்தமான தங்கம் பல கிலோக்களில் இருக்கிறது ஆனால் அதிகமாக புலக்கத்தில் ஒரு கிலோ பாராகவும்
116.64 கிராம் பிஸ்கட் என்று அழைக்கப்படும் பத்து தோலாவாகவும் (டிடிபார்)
31.10 கிராம் கொண்ட அவுண்ஸ் காயினும் 20 கிராம் 10 கிராம் என்று சுத்தத்தங்கத்தில் விற்கப்படுகிறது.
எதையும் கலக்காமல் தங்கத்தை வடிவமைக்க முடியாது.

தங்கத்தில் காப்பரின் கலவை அதிகரிக்க அதிகரிக்க அதன் வலுகூடுகிறது.
24கேரட் தங்கக்கட்டிகள் அதிகமாக சுவிஸ் முத்திரையுடன் இருக்கும்.இது சுவிஸ்லாந்துதில் தயாரிக்கப்படுகிறது.நம் இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் சுத்தத்தங்கக் கட்டிகளை உலகத்தரத்திற்கு தயார்செய்து விற்கிறார்கள். ஆனால் உலக வார்த்தகத்தில் இந்திய தங்கத்தை அவ்வளவாக யாரும் சோதிக்காமல் வாங்குவதில்லை.
சுவிஸ் முத்திரைப்பதித்த தங்கக்கட்டிகளை நம்பிவாங்கலாம்.இது உலகதரம் பெற்ற சுத்த தங்கமாகும்.

முதலீடு செய்ய நினைப்பவர்கள் 24கேரட் சுத்தத் தங்கத்தை விலை குறையும் தருவாயில் வாங்கி வைத்துக் கொண்டு விலை கூடும் சமயத்தில் விற்பனைச் செய்யலாம்.ஆனால் இதில் சிரமம் என்னவென்றால் வாங்கக் கூடிய தங்கத்தை
பத்திரப்படுத்த வேண்டிய பொருப்பு அதிகமாகிறது.வங்கிகளில் லாக்கர்ஸ் வைத்திருப்பவர்கள் அதில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

சென்ற வருடம் ஆகஸ்ட் தருவாயில் 10 தோலா (116.64) 10,000 திரஹம் (இந்திய ரூபாய் மதிப்பு 130,000) விற்பனையானது. பலர் தங்கத்தை வாங்கி சேமித்துக்கொண்டார்கள்.
இந்த ஒரு வருடத்தில் சுமார் 4500 திரஹம் (இந்திய ரூபாய் 58,500) 10 தோலாவிற்கு சுமார் பத்து மாதத்திற்குள் லாபம் கிடைத்திருக்கிறது. இன்றைய விலை 14,500. இது இன்னும் கூடும் என்றே வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

தங்கச்சுரங்கங்கள் ஆப்பிரிக்காவில் மின்தட்டுப்பாட்டினால் மூடப்பட்டதாலும் (நம் நாட்டில் பெங்களுருக்கு அருகில் கோலார் தங்கச்சுரங்கம் இருக்கிறது. இதில் தற்போது தங்கம் மிகக்குறைவாகக் கிடைப்பதால் அதை எடுப்பதில் தங்கத்தை விட கூடுதல் சிலவு ஆகிறது என்றக்காரணத்தினால் அந்தச் சுரங்கத்தை மூடிவைத்துள்ளார்கள்.)
தங்கம் தட்டுப்பாட்டினாலும் இணையதள வணிகம் அதிகரித்திருப்பதாலும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணம்.

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் டாலரின் மதிப்பு குறைவதினால் தங்கத்தின் விலை ஏறுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இணையதளம் மூலம் வாங்கப்படும் தங்கம் நம் கைக்கு வருவதில்லை அது டிமேட் அக்கவுண்ட் இருந்தால் அந்த கணக்கில் எழுத்துரூபத்தில் வைக்கப்படும்.
விற்கப்படும்போதும் டிமேட் அக்கவுண்ட் மூலமே விற்பனைச் செய்யப்படும்.
கிட்டதட்ட பங்குச் சந்தை முறையில்தான் இணையதள தங்க வர்த்தகம் நடக்கிறது.
தங்கத்தைப் பார்க்காமல் தங்கம் வாங்கி எழுத்துருவில் வைத்துக் கொள்வதும் அதை விற்பனைச் செய்வதுமே ஆன்லைன் டிரேடிங் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கியில் டிமேட் அக்கவுண்ட் மூலம் தங்கம் வாங்குவதை நிறுத்திவைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

22கேரட் தங்கம்
22 கேரட் இது 916- 8.40 சதவீதம் காப்பர் 91.60 சதவீதம் தங்கம்.
நம் நாட்டில் 22 கேரட் தங்கம் செய்பவர்கள் அதை பற்றவைக்கும்போது காப்பரைக் கொண்டும் சில்வரைக்கொண்டும் பற்றவைப்பதினால் தங்கத்தின் தரம் குறைகிறது.அது மட்டுமல்ல 91.6 கிராம் தங்கத்திற்கு பதிலாக 85.00 கிராம் மட்டும் தங்கமும் 15 கிராம் காப்பரும் கலந்து நகை செய்வதால் தங்கத்தின் தரம் 18 கேரட்டுக்கு தள்ளப்படுகிறது.
இதில் கேடிஎம் நகைக்கு கூடுதலாக விலை சொல்வார்கள்.

கேடிஎம்(KDM) என்றால் என்ன…?
"கேரட் டிவைசிங் மெட்டல்" என்று சொல்வார்கள். தமிழ் படுத்தவேண்டுமென்றால் உலோகத்தின் தரத்தை பிரித்துக் கொடுக்ககூடியதே .

அதாவது 91.6 கிராம் தங்கமும் 8.40 கிராம் காப்பரும் கலந்து நகைச் செய்யும் பொழுது அதை ஒட்டவைப்பார்கள் அப்படி ஒட்டவைக்கப்டும்போது கேடியத்தினால் பற்றவைப்பதற்கு பெயர்தான் கேடிஎம் நகைகள்(KDM).

வெளிநாடுகளில் விற்கக்கூடிய நகைகள் அனைத்தும் கேடிஎம் நகைகள் அல்ல.... அதன் தரத்தை பரிசோதித்துப்பார்த்தால் 22 கேரட்916 லிருந்து 920 க்குள் இருக்கும்.

 கேடிஎம் எல்லா நாடுகளிலும் உபயோகிப்பதில்லை… சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அது ஒரு ரசாயனம் .(கெமிக்கல்)
கேடிஎம் இல்லாத செம்புக்கலக்காத தங்கத்துகலினால் பற்றவைக்கப்படும் நகைகளில் 916 தரம் கிடைக்கும். முன்பெல்லாம் நகை செய்பவர்கள் பற்றவைக்க பொடி என்று ஒரு கலவையை பயன் படுத்துவார்கள் . (தங்கம் + வெள்ளி +செம்பு ) இந்த மூன்றும் சேர்ந்ததுதான் பொடி . இந்த பொடியை பயன்படுத்தி நகை பற்றவைக்கும் போது பொடியில் உள்ள செம்பு இ மற்றும் வெள்ளி ஆகியவை நகை உடன் சேர்ந்து விடும் அதனால் தங்கத்தின் தரம் குறைந்து விடும் . ஆனால் கேடிஎம் வந்த பிறகு அந்த பிரச்சனை இல்லை . ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் கேடிஎம் சேர்த்தால் போதும். பற்றவைக்க இதனை பயன் படுத்தலாம் .பற்றவைக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் கேடிஎம் மட்டும் தீய்ந்து போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும் நகையில் இருக்கும்கேடிஎம் நகைகளைப் பொருத்தமட்டில் அதனுடைய தரம் கிட்டதட்ட 916 என்றால் 916 இருக்கவேண்டும். வாங்கக்கூடியவர்கள் அதை சோதித்துப்பார்பதில்லை.

தரம் பரிசோதிக்கும் லேசர் கருவி
சோதிப்பது எப்படி…?

லேபில் சோதனை செய்யும்போது நகையை உருக்கி தங்கத்தையும் அதில் கலந்திருக்கும் உலோகத்தையும் பிரித்து பார்ப்பார்கள்.அப்போது தான் அதன் தரம் விளங்கும்.ஆனால் நகை உருகுலைந்து விடும் .அதனால்தான் இன்றைய நவீன விஞ்ஞானத்தில் லேசர் கருவிகளை கண்டுபிடித்து நகைகள் உருகுலையாமல் அதன் தரத்தை சோதிப்பதற்கு உபயோகப்படுத்துகிறார்கள்.
இந்த லேசர்கருவிகள் தரக்கூடிய ரிப்போர்ட்டை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.
அதிலும் முறைக்கேடுகள் நடப்பதாக கூறுகிறார்கள்.

பல பெரிய நகைநிறுவனங்களில் இந்த கருவியை வைத்து தரம் பரிசோதிக்கிறார்கள்.தங்களுடைய கடையின் பொருளை அதில் வைத்தால் 916 என்று சரியாக வருவதுபோல செட்டப் செய்திருக்கிறார்கள் என்று பலர் குற்றம் கூறுகிறார்கள்.

நெருப்பில் நைட்ரிக் அமிலத்தோடு நகையை உருக்கி அதன் கலப்பை கண்டறிவதனாலயே அதனுடைய சுத்தத்தை விளங்கமுடியும் .வாங்கிய நகையை உருகுலைக்க யாரும் விரும்புவதில்லை.

தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைக்கல்லும் அமிலங்களும்
தாங்கள் வாங்கிய நகை தரம் குறைவானது என்று நினைத்தால் முதலில் உரைக்கல்லில் உரைத்துப்பாருங்கள். கொல்லர்களிடம் இந்த உரைக்கல் கிடைக்கும் அல்லது உங்களுக்கு தெரிந்த நகைக் கடைகளில் கொடுத்து சோதியுங்கள். அந்த சோதனையில் அது தரம் குறைவு என்றால் லேசர் இயந்திரத்தின் மூலமும் சோதனை செய்யுங்கள் அதிலும் தரம் குறைவு என்று காணப்பட்டால் இறுதியாக வாங்கிய கடையில் நகையை திருப்பி கொடுத்து விடுங்கள். வாங்க மறுத்தார்கள் என்றால் நுகர்வேர் நீதி மன்றத்துக்கு போகப்போவதா சொல்லுங்கள் அதற்கும் மசியவில்லை என்றால் நைட்ரிக் அமிலத்துடன் நகையை உருக்கி அதன் தரத்த்தின் ரிப்போர்ட்டை வைத்து நுகர்வேர் நீதிமன்றத்தில் வழக்காடலாம்.

இதெல்லாம் நடக்கின்ற காரியமா…? என்று யோசனை செய்கிறீர்களா…?

இது நடந்திருக்கிறது. சிலர் வழக்கு பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள்…
பல நகைக்கடைக்காரர்கள் நீதிமன்றங்களுக்கு தங்களின் வாடிக்கையாளர்கள் செல்வதை விரும்பமாட்டார்கள் தங்கள் பெயர் கெட்டுவிடும் என்பதற்காக உடனே நகையை திரும்ப பெற்றுக் கொள்வார்கள்.
ஆதலால் நாம் வாங்கும் நகைகள் தரம்மிக்கதுதானா என்று பரிசோதித்து வாங்குங்கள்.

தங்கத்தில் முதலீடு செய்யக்கூடியவர்கள் 22 கேரட்டில் முதலீடு செய்யாதீர்கள். காரணம் ஆபரண தங்கத்தை வாங்கும் போது அதற்கான சேதாரம் மற்றும் செய்கூலி கொடுக்கவேண்டும். மீண்டும் விற்கப்படும் போது அன்றைய சந்தை நிலவரப்படி என்ன விலையோ அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை கழிவு செய்தே வாங்குவார்கள்.அதனால் சேதாரமும் செய்கூலியும் நமக்கு நஸ்டமாகும்.

ஆதலால் 24 கேரட் கட்டிகளை சுத்ததங்கம் 10 கிராம் அல்லது 20 கிராம் நம்மிடம் உள்ள பணத்திற்கு தகுந்த மாதிரி வாங்கிக் கொள்ளலாம். விற்கும்போது நஸ்டம் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

மொத்த வியாபாரிகள் (ஓல்சேல்) நகைகளை தொழிற்சாலையிலிருந்து வாங்கும் போது வாங்கக்கூடிய நகைகளிலிருந்து ஒரு பொருளை பரிசோதித்து தரத்தை சோதனை செய்வார்கள்.இது அமீரகத்தில்(U.A.E) நடந்துக் கொண்டிருக்கும் வழக்கம்.

காரணம் அமீரக அரசாங்க தங்ககட்டுபாட்டு வாரியம் மூன்று மாதத்திற்கொருமுறை ஒவ்வொரு கடைகளுக்கும் வருகைத் தந்து அங்குள்ள நகைகளில் சிலவற்றை இவர்களின் பரிசோதனைக்கு எடுத்துச் செல்வார்கள்.
அப்படி எடுத்துச் செல்லும் நகைகளில் தரம் குறைவாக இருந்தால் அந்த நகைகள் அனைத்தையும் உருக்குவதற்கு கட்டளையிடுகிறார்கள்.
இரண்டாம் முறையும் இதே தரம் குறைவு என்றால் அபராதமும் ஒருமாதக்காலம் கடையடைப்பும் செய்வார்கள். மூன்றாம் முறை கடையின் லைசன்சை இரத்துசெய்துவிடுவார்கள். இந்த கட்டுப்பாட்டினால் தங்கத்தின் தரம் அமீரகத்தில் இன்று வரையில் தலைத்தூக்கி சர்வதேச சந்தையில் பெயரும் பெற்றுவருகிறது.

அமீரகத்தில்(U.A.E) பல தொழிற்சாலைகள் இருக்கின்றன இதுமட்டுமல்லாமல் சிங்கப்பூர் மலேசியா துர்க்கி இத்தாலி இந்தோனேசியா போன்ற நாடுகளில் தயார் செய்யப்பட்ட நகைகள் அதிகம் அமீரக சந்தையில் விற்பனையாகின்றன.

அனைத்து நாடுகளின் நகைகளும் தரம்பரிசோதிக்கப்பட்ட பின்னரே விற்பனைசெய்யப்படுகிறது.அமீரகசந்தையை பொருத்தமட்டில் பல நாடுகளுக்கு நகைகளை ஏற்றுமதி செய்வதால் தரத்தில் மிக கவனமாக தங்கக் கட்டுப்பாட்டு வாரியம் இருக்கிறது.
குறிப்பாக இந்தியா இலங்கை சிங்கை மலேசியா வளைகுடாநாடுகள் மற்றும் இங்கிலாந்து அமெரிக்கா ஸ்பெயின் ஆஸ்தெரிலியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு துபாயிலிருந்து நகைகள் ஏற்றுமதியாகின்றது.

உலகசந்தையில் துபாய் சந்தை குறிப்பிடதக்கது.சில இந்திய நகைக்கடைகள் தங்களுடைய கிளைகள் துபாயிலும் இந்தியாவிலும் உள்ளதால் இந்தியாவில் அவர்களின் கிளைகளில் வாங்கிய நகைகளை துபாய் சந்தை விலையின்படி வாங்கிக் கொள்கிறார்கள்.அதுபோன்ற நம்பிக்கைமிக்க கடைகளில் நகைவாங்கினால் நம்முடைய பணத்திற்கு மதிப்பும் வாங்கிய பொருளில் தரமும் கிடைக்கும்.இப்போதெல்லாம் நாம் தொலைக்காட்சியில் அடிக்கடி நகைக்கடைகளின் விளம்பரத்தை காணலாம்…சேதாரம் இல்லை செய்கூலி இல்லை …என்று மக்களை கவர்கிறது இந்த வாசகங்கள்.
சேதாரமும் செய்கூலியும் இல்லாமல் நகைகள் தயாரிக்கப்படுகிறதா…?
அல்லது பேஷன் மாறிப்போன துணிகளை தள்ளுபடி என்ற பெயரில் விற்கிறார்களே அது போன்று பழைய டிசைன் நகைகளை அப்படி ஏதும் விற்பனை செய்கிறார்களா…? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

சேதாரம் இல்லாமல் நகைகள் தயார் செய்யப்படுவதே இல்லை.
பட்டறைகளில் தொழிற்சாலைகளில் செய்யப்படும் நகைகளுக்கு கண்டிப்பாக சேதாரம் உண்டு.
மொத்த வியாபாரிகள் வாங்கக்கூடிய நகைகளுக்கு அதாவது 916 க்கு அவர்கள் 920 என்றக் கணக்கில் 4 சதவீதம் சேதாரத்துடன் கொடுத்துதான் வாங்குவார்கள்.இது கல்கள் இல்லாத நகைகளுக்கு மட்டும்.

கல்வைத்த நகைகளுக்கு சேதாரம் இல்லை காரணம் கல்லின் எடை தங்கத்துடன் சேர்ந்துக் கொள்வதால் செய்கூலி சேதாரம் இல்லாமலேயே மொத்த வியாபாரிகள் வாங்குவார்கள்.
ஆனால் கல்பதித்த நகைகளை செய்யும்போதும் சேதாரம் ஏற்படும்.சேதாரம் இல்லாமல் நகைகள் செய்யப்படுவதில்லை.

பழைய நகைகளாக இருந்தாலும் அதை பாளீஸ் செய்து சூடுபத்திய திரவங்களில் நனைத்து அதிலுள்ள அழுக்குகளைப் போக்கி புதிய நகைப்போல விற்றுவிடுவார்கள்.
கல் வைத்த ஓரு மோதிரம் செய்வதென்பது
முதலில் மோல்டிங் செய்யப்படவேண்டும் மோல்டிங் செய்ய நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது.

பின்னர் அளவு தட்டி ராவி சுத்தம் செய்ய படுகிறது . அளவு தட்டும் போதும் ராவும் போதும் சேதம் ஏற்படும் . அடுத்து மோதிரம் பம்பிங் முறையில் மெருகு ஏற்ற படுகிறது. இதிலும் சிறிது சேதம் ஏற்படும். பின்னர் கல் வைத்து செதுக்க படுகிறது. கல்வைக்க செதுக்க நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது. பின்னர் நீர் மெருகு போடப்பட்டு மோதிரம் இறுதி வடிவம் அடைகிறது.

இவ்வளவு வேலைகள் செய்துவிட்டு சேதாரம் இல்லை செய்கூலி இல்லை என்று விளம்பரம் செய்கிறார்களே…தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா…? பொது மக்களை ஏமாற்றுகிறார்களா…?

சேதாரம் செய்கூலி இல்லாத நகைகளில் தரத்தினை சோதனைச் செய்துப் பாருங்கள் . இது ஒருவகையான மோடி வித்தைக்காரனின் மோசடியாகவே இருக்கும்.

18 கேரட்டின் நகைகள்……….
இது 750 என்ற சுத்த தங்கமும் 250 செம்பும் கலந்து செய்யப்படுகிறது.இதன் நிறம் மஞ்சளாக இருக்காது வெழுத்துப்போன நகைகளாக காட்சியளிக்கும்.சிலர் இந்த நிறத்தைக் கண்டுவிட்டு தங்கமே அல்ல என்று சத்தியம் செய்வார்கள்.

சொல்லப்போனால் அதிகமான புதிய வடிவங்களை இந்த 18 கேரட்டில்தான் வடிவமைக்க முடிகிறது. குhரணம் தங்கத்தில் கலவை அதிகமாக கூட்டினால் அதன் தன்மை கெட்டியாகும். நாம் நினைத்தபடி வடிவங்களை உருவாக்க முடியும்.

நம்ம ஊர்களில் காசிமாலை என்ற 22 கேரட் பத்து பவுன் நகையைப் பார்த்தால் பெரிதாக இருக்கும்.அதே பத்து பவுனுக்கு துபாயில் காசிமாலை வாங்கினால் பார்வைக்கு சின்னதாக இருப்பது போலத் தெரியும்… தரம் குறைவுதான் அதற்கு காரணம்.

பணக்காரர்கள் 18 கேரட்டின் நகைகளைதான் அதிகம் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். அதில் வைரங்களை பதிப்பதற்கு ஏற்றமான தரத்தை கொண்டதாக 18 கேரட் இருக்கிறது.தற்போது 18 கேரட் நகைகள் பல நிறங்களில் செய்கிறார்கள்.வெள்ளை நிறம் ரோஸ்நிறம் பழுப்பு நிறத்திலும் செய்யப்படுகிறது.

தங்கம் விலை உதாரணத்திற்கு ஒரு கிராம் 18 கேரட் 1000 ரூபாய் என்றால் அதன் செய்கூலி ஒரு கிராமுக்கு 200 – 300 என்று பல வேலைப்பாடுகளுக்கு தகுந்தமாதிரி இருக்கிறது.

நம்நாட்டில் பெரிய நகரங்களில் 18 கேரட்டின் டிசைன்கள் விற்பனையாகி வருகிறது. மும்பை சென்னையிலும் சாதாரன 18 கேரட் சங்கிலிகள் வெள்ளைத்தங்கத்தில் விற்கப்படுகிறது.
ஆலோய் என்ற உலோகத்தை தங்கத்தில் கலந்து செய்த நகையை ரோடியம் என்ற அமிலத்தில் நனைத்து எடுத்தால் வெள்ளை நிறமாக மாறிவிடும்.

இப்போதெல்லாம் 22கேரட்டுகளில் வளையல்களில் வெள்ளை ரோடியம் இடப்படுகிறது. மஞ்சலும் வெள்ளை கலரும் கலந்திருப்பதினால் அழகின் மெருகு கூடுகிறது.


தங்கத்தின் விலை அவுன்ஸில் நிர்ணயிக்கப்படுகிறது.ஒரு அவுன்ஸ் என்பது 31.1035 கிராம் எடைகொண்டதாகும்.
உலக வர்த்தகசந்தையில் அவுன்ஸ் அளவின்படி அமெரிக்க டாலரில் விலை கோடிடுவார்கள்.இணையத்தில் கிட்கோ டாட்கம்மில் தங்கம் வெள்ளி பிளாட்டினம் ஆயில் கரண்சி போன்றவைகளின் விலையை டாலரில் காணலாம்.
தற்போது ஒரு அவுன்ஸின் விலை 1100-டாலர்.
இது இன்னும் ஏறுமா இறங்குமா…? என்று பலரின் கேள்வியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு 2008 ஆகஸ்ட் செப்டம்பரில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 685 டாலர் வரையில் இறங்கியது.அந்த தருணத்தில் பலர் இன்னும் இறங்கும் என்று எதிர்ப் பார்த்தார்கள்.ஆனால் ஏறத்தொடங்கியது.டிசம்பரில் 900 டாலராக அவுன்ஸின் விலை ஏற்றத்தைக்கண்டது.

ஜனவரி பிப்ரவரியில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 1200 வரை வரும் என்று நிபுணர்களின் கணிப்பு இருந்தது.அந்தச் சமயத்தில் அவுன்ஸ் 920 டாலராக இருந்தது.

ஆனால் பிப்ரவரியில் விலை ஏற்றம் நாளுக்கு நாள் 20 டாலரிலிருந்து 30 டாலர்வரையில் ஏறி 1005- சை தொட்டது.ஆனால் அது நீடித்து நிற்கவில்லை. மீண்டும் ஆயிரத்திலிருந்து படிப்படியாக குறைந்து 875 டாலர் வரையில் இறங்கியது.மீண்டும் 950 வரையில் சென்று ஏற்ற இறக்கம் கண்டது.

ஆகஸ்ட் 2009 தங்கவிலை கடுமையாக இறங்கும் என்று பல வல்லுனர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் எதிர்ப்பார்ப்புக்கு நேர் எதிர்மறையானது தங்கவிலை.
பலகாரணங்கள் பலரால் கூறப்படுகிறது.

1.பங்கு சந்தை சரிவினால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.

2.இணையதள வர்த்தகத்தால் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு.

3.அமெரிக்காவின் பொருளாதார சரிவினால் டாலரின் மதிப்பு உலக நாடுகளுக்கிடையில் குறைகிறது.அதனால் தங்கம் விலை ஏற்றம்.

4.சீனா இந்தியா இங்கிலாந்து போன்ற நாடுகள் டன் கணக்கில் தங்கம் வாங்கியிருப்பதினால் தங்கவிலை ஏறுகிறது.

5.தென்ஆப்ரிக்காவில் மின் தட்டுப்பாட்டின் காரணமாக தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்டிருப்பதினால் உலகில் தங்கக் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது அதனால் தங்கத்தின் விலை ஏற்றம்.

6.ஆயில் விலை கூடிவிட்டது அதனால் தங்கத்தின் விலையில் ஏற்றம் என்றார்கள்.இன்று ஆயிலின் விலை 100 சதவீதம் இறக்கம்.ஆனால் தங்கம் ஏற்றம்.

இப்படி பல காரணங்கள் சொல்லப்படுகிறது.எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும் தங்கத்தின் விலை 1990-லிருந்து சுமார் 19 வருடங்களில் இன்று வரையில் 450 சதவீதம் விலை கூடி இருக்கிறது.

பங்குசந்தையை பொருத்தமட்டில் 21000 சென்ஸஸ் அதிகபட்சமாக சென்றிருந்தாலும் அதன் இறக்கம் 7000 சென்ஸஸ் வரையில் இறங்கி பல பெரிய நிறுவனங்களின் பங்குகளின் விலை கடுமையாக சரிந்து மீண்டும் ஏறி வருகிறது. ஆனால் தங்கம் ஏறும் முகமாக இன்று வரையில் இருந்து வருகிறது.

ஆதலால் அதிகபட்சமாக பணம் வைத்திருப்பவர்கள் தங்கத்தில் குறுகிய கால முதலீடாக இல்லாமல் நீண்டகால முதலீடாக வைத்திருக்க நினைப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.இது அவரவர்களின் விருப்பத்தை பொருத்ததே.

இந்தப் படத்தைப் பார்த்தலே தெரியும்....தங்கவிலை ஏறியதின் காரணம்.


தங்கம் விலை ஏறிவருவதினால் தங்கக் கடைகாரர்களுக்கு கொள்ளை லாபம் என்று பலர் கருதுவது உண்டு.உண்மையாகவே தங்க ஏற்றத்தில் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறதா என்று கேட்டால் வெகு சிலருக்கு கிடைக்கலாம் ஆனால் பெரும்பாலோருக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு.

காரணம் இது ஒருவகையான சூதாட்ட வியாபாரம் (கேம்லிங்).
ஒரு கடைக்காரர் தன்னுடைய கடைக்கு ஐந்து கிலோ தங்கம் கொள்முதல் செய்கிறார் என்றால் அந்த ஐந்து கிலோவிற்கு சுத்ததங்கமாக கொடுப்பார்.அல்லது அதற்கு நிகரான தொகையை கொடுத்து விடுவார்.

பணமாக கொடுக்கும் பட்சத்தில் அன்றை விலை ஒரு கிராம் ஆயிரம் ரூபாய் என்றால் அந்த விலையை அவர்நிர்ணயம் செய்து உறுதிபடுத்த வேண்டும் (பிக்ஸிங்) .விலையை நிர்ணயிக்காமல் உறுதிபடுத்தாமல் (அன்பிக்ஸ்) வாங்கி இருந்தால் சில நாட்களில் தங்கத்தின் விலை 1200 என்று ஏறும் போது அவர் ஒரு கிராமுக்கு 200 ரூபாய் வித்தியாச தொகையை செலுத்தவேண்டும்.

அதே விலை 800 ரூபாயாக குறைந்தால் அவர் தான் வாங்கிய ஐந்து கிலோ தங்கத்தை பிக்ஸ் பண்ணினால் 200 ரூபாய் கொள்முதல் செய்தவரிடம் திரும்பப் பெற்றுக் கொள்வார்.

பெரும்பாலான கடைகளில் தினசரி வியாபாரங்களில் விற்பனையான தங்க எடைக்கு உடனே கொள்முதல் செய்பவர்களிடம் பிக்ஸ் அன்றைய விலையை நிர்ணயம் உறுதி செய்துக் கொள்வார்கள்.அப்படி செய்யாமல் ரெஸ்க் எடுத்தார்களென்றால் ஆபத்தில் தான் முடியும்.

இந்த விலை நிர்ணயத்திற்கு காலஅவகாசம் உண்டு.ஒவ்வொரு மொத்தவியாபாரிகளும் ஒரு கணக்கை வைத்திருப்பார்கள்.

விலை நிர்ணயிக்கப்படாத கடைக்காரர்கள் (அன்பிக்ஸ்ஸில்) பலர் நடுரோட்டுக்கே வந்துமிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
 

தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்ற செய்தி பரவிவருவதால் ஏற்கனவே தங்கத்தில் பிஸ்கட்டுகளாக வாங்கி வைத்திருப்பவர்கள் லாபத்தில் இருந்தாலும் அதை விற்பனை செய்வதற்கு முன்வர வில்லை.

விலை இன்னும் ஏறும் என்ற எதிர்ப்பார்ப்பில் பலர் முதலீட்டின் நோக்கத்துடன் தங்கக்கட்டிகளை வாங்கி குவித்துக் கொண்டு வருகிறார்கள்.

Tuesday, 26 July 2011

What are the consequences of R134a Gas in A/C Field !!

During the last years more and more counterfeit R134a entered all markets, especially the Middle East and Maghreb countries.
All counterfeit refrigerants have in common that they are offered in disposable cylinders at a very low price in comparison to well known R134a brands or in comparison to R134a in returnable cylinders.
Picture 2How is this possible? The answer is quite simple. 
The cheap price can only be achieved by selling other refrigerants than R134a. The most common refrigerants in counterfeit R134a are pure R12 or blends of R22 / R152a or R22 / R152a / R142b. A very common explanation of the cheap price is the origin of the material and mostly with the hint that it is “Chinese R134a“, which is just cheaper. But this is not true. The reason for the cheap price is:  the refrigerant in the disposables is simply no R134a.

The printing of the carton indicates the content of R134a A further hint on fake material is the weight which often does not meet the weight labelled on the carton and the cylinder itself. In case of any doubts it is always recommended to ask for a MSDS of the product or a certificate of its origin.Picture 1 and 2 show examples of a typical packaging of counterfeit “Chinese R134a”.
What are the consequences of using fake R134a?
Picture 3
Apart from the negative consequences for the environment by using ozone depleting substances some severe problems exist for the refrigeration system itself. Most of the fake R134a gases are mixtures of R22 and other gases with a lower pressure level. These mixtures show often zeotropic behaviour. A typical example is R415B (R22/R152a 25/75%) which became quite famous as a cheap R134a replacement over the last years.  An unexpected use of these mixtures in R134a designed systems leads to serious problems like liquid slugging and compressor failures. Some of the mixtures tend to have less capacity than R134a. The system has to work more often and under difficult conditions. An increased wear and tear is the consequence. R22 has different solvent characteristics than R134a. Damages on the gaskets and flexible hoses caused by R22 result in complete system failures due to refrigerant losses.  Fake R134a with a high R152a content (like R415B) is flammable (see picture 3 ).  Unexpected explosions can occur while maintaining systems filled with these kinds of fake R134a.
All these dangers for people and systems should be considered and evaluated in respect of the  little money saved by buying  refrigerant of unknown quality. The best way to avoid buying fake R134a is to purchase it from a reliable source or in refillable cylinders..
Prepared by M.Ajmal Khan.
.

Friday, 22 July 2011

நோன்பு இருந்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம்!

உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நல்லதா? அல்லது கேடு விளைவிக்குமா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. எனவே லண்டனில் உள்ள ஒரு நிறுவனம், சமீபத்தில் இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில், வாரத்துக்கு ஒருநாள் அல்லது 2 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும். அவர்கள் நீண்டநாள் உயிர் வாழமுடியும் என தெரிய வந்துள்ளது. ஏனெனில் உண்ணா நோன்பை கடைபிடிப்பதன் மூலம் அல்சமீர்ஸ், மறதி நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் மூளையை தாக்க கூடிய எதிர்ப்பு மிகவும் குறைகிறது. குறைவான அளவு உணவு சாப்பிடுவதால் மூளைக்கு அதில் உள்ள ரசாயன கடத்திகள் குறைவான அளவு சக்தியை மட்டுமே கொண்டு வருகின்றன.

இதன் மூலம் மூளையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றிகரமாக தொடக்கத்தில் இந்த ஆய்வு எலி மற்றும் சுண்டெலிகளிடம் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. அதே விளைவு மனிதர்களின் உடலிலும் ஏற்பட்டதை தற்போது நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, உடல் நலத்தை பேணி பாதுகாத்து நீண்ட நாட்கள் உயிர்வாழ உண்ணா நோன்பை கடைபிடிக்கலாம்.

Monday, 18 July 2011

முதன்முதலாய் அமெரிக்கா போறீங்களா? உங்களுக்ககா 15 டிப்ஸ்..

1,உஷாராய் இருக்க வேண்டும்.இல்லை உங்கள் பேரையே மாற்றிக்க வேண்டியது வரும்.உங்கள் விமானம் அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக I94 என ஒரு form fillup பண்ண சொல்லுவார்கள்.நீங்கள் உங்கள் Family name அதாங்க lastname மற்றும் first name-ஐ மிக சரியாக கொடுங்கள்.அந்த பெயர் தான் அமெரிக்காவில் உங்களுடன் கடைசிவரை வரும்.கண்டிப்பாக இரண்டு பெயரையும் கொடுங்கள்.இல்லையென்றால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் அப்புறமாக.

2,உஷாராய் இருக்க வேண்டும்.கொஞ்சம் அமெரிக்க டாலர் வைத்திருங்கள் எப்போதும் சில்லரையாக.அங்கே எதுவும் பணம் கொடுத்தால் தான் கிடைக்கும்.விமான நிலையத்தில் trolley கூட.So strange.

3,அமெரிக்காவில் இப்போ குளிர் காலமாம்-NOV,DEC,JAN,FEB & MAR.பனி கொட்டிக்கிடக்க வாய்ப்புண்டு.எதையும் தாங்கும் உடம்பு இதுவென மெத்தனமாய் போய்விடாதீர்.அது நம்மூர் குளிர் போலல்லாது சுர்ரென ஈட்டிபோல் தாக்கும் குளிராம்.நன்றாக மூடிக்க warm dresses like leather jacket,sweater,gloves,ear wrap,hat முதலியன முன்னெச்சரிக்கையாய் வைத்துக்கொள்ளுங்கள்.www.weather.com ல் நீங்கள் போகும் இடத்தின் zip code கொடுத்தால் துல்லியமாய் அது நிலவரம் சொல்லிவிடும்.

4,அமெரிக்காவில் நுழைந்ததும் உங்கள் முதல் வேலை உங்களை SSN-Social Security Number-ல் பதிவு செய்வதாக இருக்க வேன்டும்.SSN-கிடைக்கும் வரை நீங்கள்எங்கும் வேலை செய்ய முடியாது.பொதுவாக ஒரு வாரம் கழித்து SSN-ல் பதிவு செய்வது நல்லது.அது SSN சீக்கிரம் உங்களுக்கு கிடைக்க உதவும்.
http://www.ssa.gov தளத்தில் பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

5,முக்கியமாகஒன்று..காலைக்கடன்..முற்போக்கு,பிற்போக்குகளுக்கு பேப்பர் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் இப்போதே...அமெரிக்கா பயணம் போகும் விமானம் தொடங்கி திரும்ப ஊர் வரும் வரை பேப்பர் தான் என கேள்வி.Toilet Tissue அல்லது Paper Towel என்பார்களாம்.
எனக்கு தெரிந்து வளைகுடா நாடுகளில் இந்த பிரச்சனை இல்லை.Bucket,Mug இருக்காது,அதற்கு பதிலாக தனியாக ஒரு Water tube கைக்கு உதவிக்கு வரும்.Summer-ல் முக்கிய பாகத்தை சுட்டுக்காவிட்டால் சரிதான்.அப்படி சூடாக தண்ணீர் வரும்.

6,IDL-எனப்படும் Indian or other country`s International Driving License எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.அங்கே இடது புறம் அமர்ந்து வலதுபுறமாய் கார் ஓட்டவேண்டும்என்பது குறிப்பிட தக்கது.
பொதுவாக ஓட்டுனர் லைசென்ஸ் கிடைக்க அந்தந்த State DMV(Department of Motor Vehicles)மூன்று தேர்வுகளை நடத்துகிறது.Written test,Eye test மற்றும் Road test.சில State-களில் IDL இருந்தால் Road test தேவை இருக்காது.லைசென்ஸ் எளிதாக கிடைத்து விடும்.ஆனால் Written test compulsary.

Written test என்பது கணிணி வழி நடத்தபடும் Multiple choice test.உடனடியாக ரெசல்ட் வரும்.பாடங்களை அந்தந்த State DMV web தளங்களில் பெறலாம்.

US முழுவதுமாக ஒரேலைசென்ஸ்கிடையாது. ஒவ்வொரு State-க்கும் அந்தந்த Stateலைசென்ஸ் கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

ரொம்ப செலவு கிடையாது..Driving class போனால் தான் செலவு அதிகமாகும்.Per hour around $40.வளைகுடா நாடுகளில் செலவு அதிகமாகும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.சிங்கப்பூரில் கார் ஓட்ட தேவையே இல்லை.மற்றும் cost of ownership அதிகம் என கேள்வி.Public transport அங்கு excellent ஆச்சுதே.

7,On Arrival-ல் முழுமையான செக்யூரிட்டி செக்கப் இருக்கும்.ஆனால் பயப்படும் படியாய் எதுவும் இல்லை.(துரதிஷ்டமாய் சில வி.ஐ.பி-கள் மாட்டிக்கொள்வது உண்டு).முக்கியமாய் மசாலா உணவு பதார்த்தங்கள்,ஊறுகாய்,பழங்கள் லக்கேஜில் வைக்காமல் செல்லுதல் நலம்.எல்லா இந்திய,தமிழக ஐட்டமும் அங்கே கிடைக்கிறது (சில குறிப்பிட்ட State-களில்).H1B -ல் வந்தால் மறக்காமல் ஒரிஜினல் form I 797 (Approval notice) மற்றும் ஒரிஜினல் Appointment order வைத்திருங்கள்.விமானத்தில் fillup பண்ணின I94-ஐயும் கொடுக்க வேண்டும்.
I94-ன் மறுபாதி உங்கள் கைக்கு கிடைக்கும்.உங்கள் வருகை குறித்த சில கேள்விகள் கூட கேட்கபடலாம்.I94-ல் நீங்கள் எவ்வளவுகால்ம் அமெரிக்காவில் இருக்கலாம் என்பது குறிப்பிடபட்டிருக்கும்.இந்த I94 மிக முக்கியமான தாள்.நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.லேமினேட் பண்ணகூடாது.அங்கே அமெரிக்காவில் SSN ஆகட்டும்,இல்லை Green Card ஆகட்டும்,இல்லை Auto Registration card ஆகட்டும் எதையும் லேமினேட் செய்ய கூடாது.காப்பியும் எடுக்ககூடாது.(எடுத்தால் வீட்டில் உங்கள் reference-க்காக வைத்துக்கொள்ளலாம்.Never show that to a officer.)விமான நிலையத்தில் சொந்தங்களோ இல்லை நண்பர்களோ அங்கே காத்திருக்கலாம்.இல்லை,இருக்கவே இருக்கிறது வாடகை கார்கள்.முன்பதிவுக்கு http://www.limousines.com/ or http://www.limos.com/ தளங்களை முயற்ச்சிக்கலாம்.
எதற்க்கும் maps.google.com or maps.yahoo.com or www.mapquest.com தளங்களில் இருந்து airport to home directions எடுத்து வைத்துக்கொள்ளுதல் புத்திசாலித்தனம்.

8,அமெரிக்காவில் இப்போது அனைவரும் Tax return file பண்ணும் நேரம் இது.ஒரு வருட கணக்கை பைசல் பண்ணுவார்கள்.வருடம் முழுவது உங்கள் சம்பளத்தின் income tax-ஐ (Federal and State)பிடித்து வைத்துவிடுவார்கள்.வருட முடிவில் W2FORM உதவிஉடன் உங்கள் கணக்கை ஒப்புவிக்கும் போது (ie tax return filing) IRS (Internal revenue service) அதை சரிபார்த்து அதிகமாய் உங்கள் சம்பளத்தில்(Income)tax பிடித்திருந்தால் மிச்ச மீதியை திருப்பி அனுப்பி கொடுத்து விடுவார்கள்.இப்போது இதை paper மூலமாகவும் அனுப்பலாம் இல்லை online வழியாகவும் efile பண்ணலாம். For a rough calculation use this 2006 withholding calculatorhttp://www.irs.gov/individuals/page/0,,id=14806,00.html
உண்மையிலேயே efile செய்ய இங்கிருந்து ஒரு பார்ட்னரை தெரிந்தெடுங்கள்.
http://www.irs.gov/efile/lists/0,,id=101223,00.html



9,எனக்கு தெரிந்த சில உபயோகமான வெப் தளங்கள்...உங்கள் பார்வைக்கு.

அமெரிக்க சட்டம் மற்றும் immigration சம்பந்தமாக Law sites
http://www.murthy.com/
http://www.rapidimmigration.com

Good sites for searching Deals,Coupons and Prices
http://www.deals2buy.com/
http://www.pricewatch.com/
http://www.flamingoworld.com/
http://www.brokenprices.com/
http://www.tigerdirect.com/

Good site for searching rooms and apartments
http://classifieds.sulekha.com/

Good site for searching apartments
http://www.apartmentguide.com
http://www.apartmetguide.com/links

Cheapest Health Insurance
http://health.kvrao.org/

Cheapest Auto Insurance
http://www.progressive.com/

Good banking for new comers-(Specially who plans for unsecured credit cards and loans)
http://www.dcu.org/

Good hotel travel vacation
http://www.bookingbuddy.com/
http://www.priceline.com/

Good money to india for those who have NRE account back home in India http://www.onlinesbi.com/gls/
https://cash2india.xoom.com/

Convenient way to call India with your cell without any pin numbers http://www.relianceindiacall.com/

Good site for Share Stocke Options
http://www.schwab.com/
http://www.ameritrade.com
http://www.callpix.com/
http://www.coveredcalls.com/

Good Tax site
http://www.olt.com

10,சில H1B மற்றும் Greencard ஸ்பான்சஸர் செய்யும் அமெரிக்கா based கம்பெனிகள் லிஸ்ட் இங்கே உங்களுக்காக

List of US based companies for JobOpportunity


List of Companies you need to be careful.(People had bad experience or Black listed)

1.Mastech Sys
2.Syntel
3.Computer People Inc.
4.Capricon
5.American MegaTrend Inc.
6.CBS
7.Intelligroup (Edison - New Jersey)
8.Cybertech (Chicago - Ilinnois)
9.Systech (Gelndale - Calif.)
10.IntecNew Jersey. Now it is named as Compuflex.
11.Indotronixs or Indotronics
12.Capricorn Systems Inc , Atlanta
13.BCC computers Ltd in Madras
14.Frontier Systems
15.C G VAK(Coimbatore)
16.Kumaran Software, Anna Nagar, Madras
17.BCS Project Consultants; Bangalore or BCS Computer Consultancies and Services.
18.Pragathi Computers; Bangalore.
19. Indusa Technical Corp, chicago
20.SYSINNOVATE INC,CA
21. Realsoft technologiees LLC
22.Friendly Consultants-Princeton,NJ

11,உலகமே மாறியிருக்கும் போது தான் மட்டும் அடம்பிடித்து வைத்திருக்கும் சில அளவீட்டு முறைகள் கீழே.-வேறு வழியில்லை அதற்கு இப்போதைக்கு.

எடைகள்: Weight is measured in ounces and pounds.
1 ounce = 28 grams,
1 pound = 0.45 kg.

தொலைவு: The basic units of distance are inch, foot, yard and mile.
1 yard = 0.9 meter,
1 mile = 1.6 km.

வெப்பம்: temperature is measured in Fahrenheit degrees.
1 celcius is 1.8 Fahrenheit.
C=(5/9)*(T-32)
F=(9/5)*C+32
C=temperature in degrees Celsius
F=temperature in degrees Fahrenheit

கொள்ளளவு:Volume
1 Ounce (OZ) Fluid = 29.57 ml
1 Gallon = 3.785 Liters


அமெரிக்க நாணயம் பற்றிய விளக்கம் இங்கே.

அமெரிக்க நாணயம் cents and dollars- $.

நாணயங்கள் 1,5,10,25 cents- களாக உள்ளன.

நோட்டுகள் 1, $5, $10, $20, $50 மற்றும் $100 - களாக உள்ளன.

100 cents=1 dollar ஆகும்

1 cents-ஐ 1 penny என்கிறார்கள்
5 cents-ஐ 1 nickel என்கிறார்கள்
10 cents-ஐ 1 dime என்கிறார்கள்
25 cents-ஐ 1 quarter என்கிறார்கள்
dollars-ஐ bucks என்கிறார்கள்

பொதுவாக எல்லா அமெரிக்க நாணயங்களிலும் நோட்டுகளிலும் "In God We Trust" என்ற வாக்கியத்தை காணலாம்.

சமீபத்தில் (மார்ச்) புதிதாக வெளியிடப்பட்டுள்ள 10 டாலர் நோட்டில் "We The People" என்ற (First three words of the Constitution) வாசகம் உள்ளது.

12,அங்கு காலையில் முட்டையும் முட்டை சார்ந்த உணவும் மதியம் சிக்கனும் சிக்கன் சார்ந்த உணவும் பிரபலம்.சன்னி சைட் அப்,ஸ்கிராம்பில்ட் எக்,வித விதமான ஆம்லேட்,சான்விச் என நிறைய வகைகளில் முட்டை சாப்பிடுகிறார்கள்.காலையில் பெரும்பாலோனோரை டன்கின் டோனட்ஸ் காபி கப்போடு தான் பார்க்க முடியும்.டோஸ்ட்,மப்பின்,க்ரோஸன்ட்,டோனட்,பீகிள்,சாலட்,சூப்,
லசானியா,பீஸா,சப்,நூடுல்ஸ்,ராப்ஸ்,பான் கேக்ஸ்,சைனீஸ் பப்பே,காட் டாக்ஸ்,நக்கட்ஸ்,ஸ்ரைப்ஸ்,ப்ரைஸ்,பர்கர் உணவு வகைகள் பிரபலம்.எல்லா உணவிலும் சீஸ் தவறாமல்.கோக்,பெப்ஸி வகையராக்களை சோடா என்கிறார்கள்.
மெக்டொனால்ட்ஸ்,பர்கர்கிங்,பீஸாகட்,பப்பாயீஸ்,ரெட்லாப்ஸ்டெர்,
டிஜிஐப்ரைடேஸ்,சார்லி ப்ரொவ்ன்,ரூபி ட்யூஸ்டே,ஹார்டீஸ்,ஒயிட்கேஸ்டில்,சப்வே,கேஎப்சி,டாகோபெல்,
பட்ரக்கர்ஸ்,பிளிம்பீஸ்,டெலி,ஆலிவ் கார்டன்,பாஸ்டன்மார்க்கட்,டைனெர்,டோமினொஸ்,விண்டீஸ்,
ஹூட்டர்ஸ்,பென்னிகென்ஸ்,ஆப்பிள்பீஸ்,குயிஸ்னோஸ் இவை பிரபல உணவகங்கள்.
நன்றாக சீஸ் சாப்பிடுவதாலோ என்னமோ பெரும்பாலோர் ஓவர் வெயிட்.ரோட்டோரமாய் அல்லது எதாவது பார்க்குகளில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் இல்லை வோர்க் அவுட் ப்ளேஸ் போய் உடற்பயிற்சி செய்து சில பவுண்ட் எடை குறைக்க எல்லோருமே முயன்று கொண்டிருக்கிறார்கள்

13,அங்கே நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் எண்களால் குறிப்பிடப்படுகின்றன.வடக்கு தெற்காய் ஓடும் சாலைகள் ஒற்றைபடை எண்ணிலும் (எ.கா Route 1-(Pronounced as ரவுட்)) கிழக்கும் மேற்காய் ஓடும் சாலைகள் இரட்டைபடை எண்ணிலும் குறிப்பிடுகிறார்கள்.(எ.கா.ரவ்ட் 256)
மாகாணங்களை இணைக்கும் பெருஞ்சாலைகள் டர்ன்பைக் (TurnPike)எனப்படுகின்றன.
மற்ற நெடுஞ்சாலைகள் பார்க்வேஸ் (Parkways) எனப்படுகின்றன.பெரும்பாலும் குறுக்காக செல்லும் சாலைகள் அவெனியூ (Avenue) என்றும் நெடுக்காக செல்லும் சாலைகள் ஸ்டிரீட்-Street அல்லது ரோடு-Road என்றும் அழைக்கப்படுகின்றது.
இரு மருங்கும் மரங்கள் நிறைந்த சாலை போலேவாட்-Boulevard எனப்படுகிறது.
பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகள்,ரயில்கள் நம்பமுடியா அளவு அட்டவணை நேரப்படி வந்து போகும்.Academy,greyhound,CoachUSA,NJTransit,MTA,NYC Transit இவை சில East Coast பொது பேருந்துகள்.Amtrack,NJTransit,Subway,PATH,MTA இவை சில East Coast ரயில்கள்.ஒற்றைபடை எண் கட்டடங்கள் சாலையின் ஒரு மருங்கிலும்,இரட்டைபடை எண் கட்டடங்கள் சாலையின் மறு மருங்கிலும் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.சாலைகளின் சிக்னல்கள் லைட்ஸ் எனப்படுகின்றன.
"Support Our Troops,Proud to be an American" இவை சாலை வாகனங்களின் பிரபல வாசகங்கள்.சில வாகனங்கள் Stop War.Put troops on the Mexican border என புஷ்ஷை திட்டவும் செய்கின்றன.

சைரென் லைட் உள்ள ,இல்லாத கார்களில் மாமாக்கள் வலம் வருவார்கள்.சில சமயம் பதுங்கியும் இருப்பர்.ஓவர் ஸ்பீட் தாதாக்களை பிடிக்கத் தான்.மரத்தாலும் இரும்பாலும் ஆன நாடு இதுவென்றால் மிகையில்லை.வீடுகள் மரத்தாலானதென்றால்,மாபெரும் பாலங்களும்,வானுயர் கட்டடங்களும் இரும்பை உருக்கி கொட்டி கட்டியிருக்கிறார்கள்.

மாதம் ஏறக்குறைய $400 தவணையும்,$300 இன்சூரன்சும்,$100 காஸ்க்கும் (அதாங்க Gasoline எனப்படும் பெட்ரோல்) நீங்கள் செலவு பண்ணமுடியுமென்றால் நீங்களும் கார்வைத்துக்கொள்ளலாம்.எல்லாரும் அதைத்தான் செய்கிறார்கள்.காரில்லா வாழ்வு மிகக் கடினம்.யாரோ சொன்னார்கள்.அமெரிக்க வாழ்க்கைக்கு நான்கு C-க்கள் மிக முக்கியம் என்று.CAR--CREDIT CARD-COMPUTER-CELLPHONE.
கூடவே Job-ஐயும் சேர்த்துக்கோங்கப்பு.

14,இந்திய லாப்டாப்,இந்திய குக்கர் போன்றவற்றை அமெரிக்காவில் உபயோகிக்க (110/220v 50/60Hz copatibility is required)அல்லது அமெரிக்க லாப்டாப்,அமெரிக்க குக்கர் போன்றவற்றை இந்தியாவில் உபயோகிக்க (again 110/220v 50/60Hz copatibility is required)பயனுள்ள அடாப்டெர் செட்
http://www.amazon.com/gp/product/B0009EXVFI
http://www.magellans.com/store/

அமெரிக்காவில் பொதுவாக செல்போன் ப்ளானோடுதான் வாங்கமுடிகிறது.ப்ளான் இன்றிசெல்போன் வாங்க
http://www.cellhut.com/

இந்தியாவில் ஆன்லைனில் செல்போன் வாங்க-பரிசளிக்க
http://shopping.sify.com/shopping/

காரிலிருந்த படி உங்கள் லாப்டாப்பை மின்னேற்றம் செய்ய
http://www.meritline.com/car-power-adapter-laptop-notebook-computer.html

15,அமெரிக்கா-உங்கள் மாகாணத்தில் சேல்ஸ் டாக்ஸ் எவ்வளவு % அறிய
http://thestc.com/STRates.stm

American universities list
http://www.globalcomputing.com/universy.html

The Complete List: 1,200 Top U.S. Schools
http://www.msnbc.msn.com/id/12532678/site/newsweek/

USA all 50 states information
http://www.infoplease.com/states.html

USA Zipcode Distance Checker
http://www.orangehedgehog.com/zipcodes/?c=US

North American (NANPA) Telephone Code List
http://www.orangehedgehog.com/telephone_codes/nanpa_code_list.php?type=c

Spelling differences between American and British English
http://www2.gsu.edu/~wwwesl/egw/jones/differences.htm

Different Words in American and British English
http://www2.gsu.edu/~wwwesl/egw/jones/words.htm

All time 100 novels
http://www.time.com/time/2005/100books/the_complete_list.html

All time 100 movies
http://www.time.com/time/2005/100movies/the_complete_list.html

English grammer
http://www2.gsu.edu/~wwwesl/egw/grlists.htm


How To Speak American :
1 U don't open conversation (on telephone) with a "Hello", ......but with a "Hi" !
2.U never say "want to" /"going to" do it?? u say "wanna"/ "gonna" do it.
3. The telephone is never "engaged", ???.it's always "busy".
4. U don't "disconnect" a phone, ??.U simply "hang-up".
5. U never "mess-up" things, ????U only "screw them up".
6. U never have a "residence" tel. no., ???.U have a "home" no.
7. U never have a "office" tel. no., ???U have a "work" no.
8. U don't stop at the "signals", ???..but halt at the "lights".
9. U don't "accelerate", ??.U "step on the gas".
10 Your tyre never "punctures", ???.U may have a "flat".
11 The trains have "coaches" or "bogies' ;no more ! ..but "carriages" or "boxes".
12. There are no "petrol pumps", ???.but "gas stations"..
13 U no longer meet a "wonderful" person, ???U meet a "cool" guy
14 U don't pull the switch down to light a bulb. U rather flick it up.
15 U don't "turn on the heat", ???? U "turn on the juice".
16 There's no "Business Area" ... only "business districts", ???.and no "districts" but"counties".
17 No one stays "a stone's throw away", rather "a few blocks away".
18 There's no "Town Side", ???..it's "Down Town".
19 In hotel U no longer ask for "bill" and pay by "cheque", ??.rather ask for "check" and pay with "bills" (dollars).
20 There are no "soft drinks", ???.. only "sodas"/"pop".
21 Life's no longer "miserable", ??? it "stinks".
22 U don't have a "great" time, ???? U have a "ball".
23. U don't "sweat it out", ????U "work U'r butt off".
24. Never "post" a letter, ??always "mail" it and "glue" the stamps,?..don't "stick" them.
25. U no longer live in "flats" , ???..U live in "apartment".
26. U don't stand in a "queue", ???..you are in a "line".
27. U no longer "like" something, ??? U "appreciate" it.
28. "#" is not "hash", ???..it's "pound".
29. U R not "deaf", ???.U have "impaired hearing".
30. U R not "lunatic", ????U are just "mentally challenged".
31. U R not "disgusting", ???.. U R "sick".
32. U can't get "surprised", ???? U get "zapped".
33. U don't "schedule" a meeting, ????.. U "skejule" it.
34. U never "joke", ????U just "kid".
35. U never "increase" the pressure, ???U always "crank" it up.
36. U never ask for a pencil "rubber" U ask for an eraser.
37. U don't try to find a lift, ???..U find an elevator.
38. U no more ask for a route??? but for a "RAUT"
39. U don't ask somebody "How r u ?", ???.U say "What's up dude?" or U say "How U DOIN' "
40. U never go to "see" a game, ???? U go to "watch" a game.
41. If U see "World" champions(or Series), ????read "USA" champions (orSeries).
42. There's no "zero" but "O", ???.no "Z" but "zee".
43. There's no FULL STOP after a statement, ???. there's a PERIOD.
44. If someone gets angry at U, ???.U get "flamed".
45. U Drive Ur car on Parkways and ???..always park your car in the driveway!
46. You do not ask for" brinjal" .?.. ask for "eggplant "?? also there are no"lady's finger".its "Okra" !
47. In short U don't speak English, ????.U speak American.

------------------------------------------------------------------
... here's 1 more....
... U don't make a move..... U always get going...
------------------------------------------------------------------