Friday, 12 August 2011

கருணாநிதி குடும்பத்து சொத்து!! ஒரு சிறப்பு பார்வை...



இதயம் பலகீனமாக உள்ளவர்கள் மற்றும்    இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை   படிக்கவேண்டாம்..                         

                     கீழ்கண்ட செய்திகள் ஜூனியர் விகடன் 10   ஆகஸ்ட்   2011 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  

                     ருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது! 
                    'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.

                 அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்​காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாஅந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!


1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு  5 கோடி.
2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு  5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு  2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு  4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு  2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு  5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு  2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும்  கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு -  12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு  4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு -  10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு -  2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு -  2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் -  100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு -  10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு -  2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு -  20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு -  5 கோடி.
18.  சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -  100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின்மதிப்பு -  50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -  4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -  80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -  120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு -  108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு -  48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு  30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு -  50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர்  48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில்  13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு -  1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு -  60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு  2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு -  2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு -  5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு -  40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு -  1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு -  2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு -  2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு -  60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு -  5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு -  2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு -  3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -  1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு -  2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு -  1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு -  5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு -  20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -  30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு -  50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -  90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.


               இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்து​விட்டார் என்கிறார்கள்.

''கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது. பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!'' என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Tuesday, 9 August 2011

ரகசிய கேமராடி,ஜிட்டல் கேமரா, மொபில் கேமரா மற்றும் வெப்காம் -ஒரு விழிப்புணர்வு ஆய்வு...



குறிப்பு :  இது ஒரு ஆய்வு பதிவு மட்டும் இல்ல , இது ஒரு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவும் கூட அதனால நான் வார்த்தைகளை எந்த கட்டுப்பாடும்  இல்லாம எழுதி இருக்கேன். அதுக்காக பெண்கள் இதை படிக்காம போய்ட வேண்டாம் என்னென்றால் இது முக்கியமா பெண்கள்தான் அவசியம் படிக்கவேண்டும் . 

           இந்த பதிவ படிக்குற உங்களுக்கு ஒரு சிம்பிள் கேள்வி , நீங்க ரோடுல நடந்து போய்கிட்டு இருக்கீங்க அப்போ உங்களை  ஒரு நாலு பேரு குறுகுறுன்னு கண்ணு கொட்டாம பார்கிறாங்கன்னு வச்சுக்குவோம் அப்போ உங்களால சரியா நடக்க முடியுமா? உடனே கால்கள் பின்ன ஆரம்பிச்சுடாது? சரியா நடக்க முடியாது இல்லையா . அதுலயும் நடக்குறது ஒரு வயசு பையனா இருந்து குறுகுறுன்னு பார்க்குறது நாலு பெண்களா இருந்தா சொல்லவே வேண்டாம் அது வரைக்கும் நல்ல நடந்துகிட்டு இருந்த அந்த பையன் அவங்க பாக்குராங்கன்னு தெரிஞ்சதும் ததக்கா புதக்கான்னு  நடக்க ஆரம்பிசுடுவான். இதே மாதிரி நிலைமைதான் ஒரு பெண் நடக்கும் போது நாலு ஆண்கள் பார்க்கும் போதும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.  இதெல்லாம் மனிதனின் இயல்பு , அடிப்படை உணர்ச்சிகள்.
          ஆனால் இந்த உணர்ச்சிகள் எல்லாம் நமக்கு நம்மையே அறியாமல் மக்கி போக ஆரம்பிச்சு இருக்குகிறது. எப்படின்னு கேட்டிங்கன நாம ரோட்ல நடக்கும் போது , கடைகளில் இருக்கும் போது, ஹாஸ்பிட்டல்களில் இருக்கும் போது, ரயில்வே ஸ்டேஷன் , ஏர்போர்ட் , பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் , ஷொப்பிங் மால், டிராபிக் சிக்னல் அப்படின்னு இன்னைக்கு கண்காணிப்பு கேமரா இல்லாத இடமே இல்ல .
என்னுடைய கல்லூர் நண்பன் இப்போ லண்டன்ல வேலைல இருக்கான் அவன் சொன்ன ஒரு புள்ளி விவரம் , அவன் ஒரு நாள் காலையில் ஆபீஸ்க்கு போயிட்டு இரவு வீடு திரும்புவதற்குள் அவனை இந்த கண்காணிப்பு கேமராக்கள் குறைந்தபச்சம் இருநூறு முறையாவது புகைப்படம் எடுகின்றனவாம். எதுக்குங்க லண்டன்க்கு எல்லாம் போய்கிட்டு? , இங்க நம்ப ஊருலயே இருக்கே, ஆயிரதெட்டு கண்காணிப்பு கேமராக்கள். தினம் தினம் நம்மை கண்காணித்துகொண்டே இருக்கின்றன . எதற்கு இதெல்லாம்? ஏன் இந்த கண்காணிப்பு ?
      இதற்க்கெல்லாம் பதில் , குற்றங்களை தடுப்பதற்காக , பாதுகாப்பு காரணங்களுக்காக , தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்காக. இந்த காரணங்கள் எல்லாம் 100% சரியாகவே இருந்தாலும் . என்னுடைய கேள்வி எல்லாம், எங்கே போயிற்று தனிமனித சுதந்திரம்? இன்றைய நிலைமையில் நம்மால் எந்த ஒரு கண்காணிப்பு இல்லாமல் தனிமனித சுதந்திரத்துடன் வெளியே போயிட்டு வர முடியுமா? சும்மா நாலு பேரு நாம நடக்கும் போது வெறிக்க பார்த்தாலே நமக்கு என்னவோ போல இருக்கு, ஆனா கண்காணிப்பு கேமரா என்கிற பெயரால் நம்மை கேமரா கண்கள் எப்போதும் கண்காணித்து கொண்டே இருப்பது எப்படி இருக்கும் ? எதற்காக எந்த குற்றமும் செய்யாத நம்மை கண்காணிக்க வேண்டும்? ஆகா மொத்தத்தில் தனிமனித சுதந்திரம் ( privacy )  பறிபோய்விட்டதாகவே நான் உணர்கிறேன் . 
         சரி அதற்காக கண்காணிப்பு கேமராவை எல்லாம் நீக்கி விடலாம் , எங்கயும் வைக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை . ஆனால் கண்காணிப்பு கேமரா வைப்பது மட்டுமே குற்றங்கள் தடுத்து விடாது , குறைத்து விடாது . எடுத்துகாட்டாக திருடவோ , கொள்ளை அடிக்கவோ வருபவர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வேலை செய்ய வேண்டி இருக்கும் அது என்ன என்றால் , அவர்கள் போகின்ற இடத்தில உள்ள கண்காணிப்பு காமெராவை முதலில் செயல் இழக்க செய்ய வேண்டி இருக்கும் அல்லது கேமரா கண்காணிப்பில் சிக்காமல் வேலையை செய்ய வேண்டி இருக்கும் . தீவிரவாதிகளுக்கு இந்த கண்காணிப்பு கேமரா பற்றிய கவலை எல்லாம் கிடையாது . மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்த போதே நான் நேரடியாக பார்த்தோம் . தீவிரவாதிகளுக்கு அவர்கள் உயிர் மேலயே கவலை இல்ல அப்புறம் எங்க கண்காணிப்பு காமெராவை பற்றி எல்லாம் கவலை பட போகிறார்கள் ? வந்த வேலையை செவ்வனே செய்தது முடிப்பார்கள் .
       சரி இப்போ கண்காணிப்பு கேமராவுக்கே இத்தனை கஷ்டமா இருக்கு என்றால் உங்களுக்கு மற்றும் ஒரு கேள்வி , பெண்கள் வெளி இடங்களுக்கு போகும் போது ஆண்கள் யாரவது தவறான கண்ணோட்டத்தில் பெண்களில் அங்கங்களை அதாவது , பெண்களின் மார்பையோ , பின்புரத்தையோ அல்லது இடுப்பையோ பார்த்தால் அந்த பெண்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கும்? எதன்னை தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ?
            சும்மா வெறுமனே வெளி இடங்களில் இந்த மாதிரி பார்வைக்கே எத்தனை தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது , அதுவே அந்த பெண்களில் உடம்பை "நிர்வாணமாய்" யாராவது பார்த்தால் என்னவாகும் ? அதை புகைபடமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்தால் எப்படி இருக்கும் ? அதற்கும் ஒரு படி மேல போய் பதிவு செய்த புகைப்படம் , வீடியோகளை இணையதளத்தில் வெளியிட்டால் என்னவாகும் ?
              இது எல்லாமே நடக்கிறது இன்றைய கலியுகத்தில் . இது எல்லாம் விஞ்ஜான கண்டுபுடிப்புகளின் பக்கவிளைவுகள். இது மட்டும் அல்ல , இன்னும் இளம் தம்பதிகளின் உடலுறவு காட்சிகள் , அந்தரங்கங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகின்றன . எப்படி இதெல்லம் நடக்கிறது? என்ன காரணங்கள் ? நம்மை அறியாமல் எப்படி நம்புடைய அந்தரங்கங்கள் படம் பிடிக்க படிகின்றன ? கூடுமானவரை அதில் இருந்து எப்படி எல்லாம் தப்பிக்கலாம் ? 
நான் சொன்னது எல்லாம் கண்காணிப்பு கேமராகளை பற்றிதான் , ரகசிய கேமராகளுக்கான ஒரு முன்னுரையை மட்டும்தான் நான் குடுத்து இருந்தேன் . கண்காணிப்பு கேமராகளுக்கும் , ரகசிய கேமராகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு . கண்காணிப்பு கேமராக்கள் என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பட்டமாய் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி அதிகார பூர்வமாக பொது இடங்களில் வைக்கப்படுவது, அதற்க்கு பெயர் 
Security Camera  அல்லது  CCTV Camera (Closed Circuit Television Camera )அதுவே தனிமனித சுதந்திரம் பறி போவதாக வருத்தப்பட்டு இருந்தேன் . ஆனால் ரகசிய கேமராக்கள் என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒளித்துதோ அல்லது மறைத்தோ வைக்கபடக்கூடிய சிறிய வகை கேமராக்கள் . இதன் நோக்கம் உளவு பார்ப்பதற்காகவோ அல்லது வேறு சில வக்கிர உள்நோக்கங்களுக்காகவோ வைக்கப்படுபவை.
இந்த ரகசிய கேமராகளுக்கு நிறைய பெயர்கள் உண்டு Spy Cam , Candid Cam , Hidden Cam , Secret Cam என்று பல பெயர்கள்.  சரி அப்படி இந்த கேமராக்களை வச்சுக்கிட்டு அப்படி என்னதான் பண்ணுறாங்க ? கேட்டிங்கனா ரொம்பவே அதிர்ச்சி ஆகிடுவிங்க .
         நான் கட்டுமான பொறியாளராக இருப்பதால் சமீபத்தில் ஒரு மிக பெரிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தேன் , அந்த கட்டிடம் ஒரு மிக முக்கியம் வாய்ந்த கட்டிடம் ஆகையாதால் அந்த கட்டிடத்துக்கு சில பல ரகசிய கேமராக்கள் பாதுகாப்பு காரணாங்களுக்காக  பொறுத்த வேண்டி இருந்தது அந்த கட்டிடத்தின் உரிமையாளர் குழுமம் கேட்டு கொண்டதுக்கு இணங்க . அப்போது அதற்க்கு தேவையான ரகசிய கேமராக்கள் வாங்க வேண்டிய பொறுப்பு நான் பணியாற்றும் கம்பெனிக்கு வந்தது. அப்போது கேமராக்கள் வாங்க வேண்டி அதற்கான தகவல்கள் திரட்டப்பட்டு சில கம்பெனிக்கள் விவரம் கிடைக்க, அந்த கேமரா கம்பெனிகளிடம் மேலும் தகவல்கள் , மாடல்  மற்றும் விலை விவரங்கள் கோரப்பட்டன . அதில் சில கம்பெனிகள் குடுத்த கேமரா மாடல் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை (Catalog)  பார்த்த போது நான் சற்று இல்ல நிறையவே அதிர்த்துதான் போனேன் . சொன்ன நம்ப மாட்டிங்க இதை பற்றிய விவரம் எவ்வளவு பேருக்கு இன்னும் தெரியும் என்று தெரியவில்லை , அந்த ரகசிய கேமராக்களின்  மாடல்கள் உண்மைலயே பேரதிர்ச்சியை உண்டாக்கின . கதவு கை புடி  , கடிகாரம்  , சுவிட்ச் , சுவிட்ச் போர்டு , பல வகை லைட்  வடிவத்தில் , அலங்கார விளக்குகள் , பொம்மைகள் , குளியல் அறையில் லைட் , ஷவர் , வாட்டர் ஹீட்டர்  என எல்லா வடிவங்களிலும் கேமரா மாடல்கள் இன்றைய உலக சந்தையில் சர்வ சாதாரணாம கிடைக்கிறது. ரொம்ப சிம்பிள் அதை வாங்கி அப்படியே பொறுத்த வேண்டியதுதான் அதில் உள்ள உபகரணமும் வேலை செய்யும் , கேமராவ்வும் வேலை செய்யும். யாராலையும் கண்டேபிடிக்க முடியாது . ஏன் பேனா வடிவில் கூட சிறிய கேமராக்கள் வந்து விட்டன,  “மங்காத்த” படத்தில் அஜித் பேனா வடிவ கேமராவை உபயோகித்து இருப்பார். 

உங்களுக்காக  சில ரகசிய கேமராக்களின் படங்கள் கீழே : 

        இந்த கேமராக்கள் எங்கு எல்லாம் எப்படி எப்படி எல்லாம் சமூக விரோத தனமாக , வக்கிர எண்ணங்களுடன் உபயோக படுத்தப்படுகிறது? எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல் ரூம்களில் , ஹோட்டல் பாத் ரூம்களில் , துணி கடைகளில் பெண்கள்  உடை மாற்றும் அறைகளில்தான். பெரும்பாலும் எல்ல ஹோட்டல்கள் , குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களிலும் இந்த வேலை நடக்கிறது. இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்பது வேறு கதை , யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் , அதை பின்னர் விவாதிப்போம் . 
        இப்போது எல்லாம் நான் வெளியூர்களுக்கு போனால் தாங்கும் ஹோட்டல்களில் நட்சத்திர ஹோட்டல்களே ஆனாலும் , குளிக்கும் போது கோவணம் கட்டி கொண்டுதான் குளிக்கிறேன் , ஏனென்றால் இது போல ஏதாவது ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டு இருக்குமோ என்கிற பயம் தான். இல்லை என்றால் அப்புறம் என்னுடைய பிறந்த மேனியை நானே இணையதளத்தில் பார்க்க நேரிடலாம் . என்னதான் பெண்களை குறி வைத்து கேமராக்கள் பொறுத்த பட்டு இருந்தாலும் , குளிக்கிறது ஆணா ? பெண்ணா ? என்று கேமராவுக்கு எங்கு தெரிய போகிறது அப்படி என்னையும் குளியல் காட்சியில் படம் பிடித்துவிட்டால் ? அதனால் தான் இந்த கோவண குளியல் .
      இன்றைய இணையதளத்தில் இந்த ரகசிய கேமராக்களை பயன்படுத்தி ஏகப்பட்ட அந்தரங்க , உடலுறுவு  மற்றும் நிர்வாண கட்சிகள் படமாக்கப்படுகின்றன பல வக்கிர கும்பல்களினால் . அதை இணையதளத்தில் வெளியிட்டு பணம் பார்க்கின்றனர். பாவம் ஹோட்டலில் தங்குபவர்களுக்கு இதை பற்றி எந்த விவரமும் தெரியாது . கேமரா பொறுத்தப்பட்டதோ , அவர்களின் அந்தரங்கங்கள் படம் பிடிக்கப்பட்டதோ எதுவும் தெரியாது. 
பெரும்பாலும்  இந்த வக்கிர கும்பல்களின் குறி அழகிய பெண்கள் மற்றும் இளம் தம்பதிகள் . அதிலும் தேனிலவுக்கு போகும் புது மண தம்பதிகள் என்றால் இந்த வக்கிர கும்பகளுக்கு ஏக கொண்டாட்டம். பெரும்பாலும் தேனிலவுக்கு போகும் இடங்களான சுற்றுலா தளங்களின் உள்ள ஹோட்டல்களில் இந்த அபாயம் அதிகம் உள்ளது. ஜாக்கிரதை . 

    
     
த்ரிஷா போன்று பிரபலங்களின் நிர்வாண குளியல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஆனது எல்லாரும் அறிந்ததே , ஆனால் பிரபலங்கள் மட்டும் அல்லாது சாமானிய குடும்ப பெண்களின் , தம்பதிகளின் நிர்வாண , அந்தரங்க உடலுறவு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொட்டிகிடகின்றன இன்றைய இணையதளத்தில் .எப்படி இதெல்லாம் சாத்தியம் ஆகிறது? எல்லாம் இந்த ரகசிய கேமராக்களின் உதவியால்தான். ஹோட்டல்களில் தாங்கும் போது கண்டே புடிக்க முடியாத சிறிய வகை ரகசிய கேமராகளை பற்றி இது வரை யாராவது யோசித்து பார்த்து இருக்கிர்களா? கவலைப்பட்டு  இருக்கீர்களா? 
இனி கண்டிப்பாக கவலைப்படணும் , கவனமாய் இருக்கணும். 


இனி ஹோட்டலில் தாங்கும் போது கவனிக்க வேண்டிய , செய்ய வேண்டிய விஷியங்கள் :
1, உடலுறவு கொள்ளும் அவசியம் இருந்தால் முடிந்தவரை ஹோட்டல் அறையை இருட்டாக்கிகொண்டு விளக்குகளை அணைத்து விட்டு நடக்கட்டும் . கேமரா கண்களில் இருந்து தப்பிக்க வேற வழி இல்லை .
2) பெண்கள் முடிந்தவரை உடையை கலையாமல் இருக்கவும் அறையுனுள் இருக்கும் போது. உடை மாற்றும் போது கூட கணவர் மட்டும்தானே இருக்கார் என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் சுவர்களுக்கு கூட (கேமரா)கண்கள் இருக்கலாம் .
3) அதே போல் பெண்கள் குளிக்கும் போது முடிந்தால் உடம்பை மறைக்க ஏதாவது துணி கட்டிக்கொண்டு குளிக்கவும்.

      இதையெல்லாம் செய்ய சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் ஆனால்  ரகசிய கேமரா கண்களுக்கு இரை ஆகி , 
வக்கிர மனம் கொண்டவர்களின் கண்களுக்கு விருந்தாகாமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேற வழி இல்லை .

       சரி இது எல்லாம் நமக்கு தெரியாமல் ரகசிய கேமராகளால் நமக்கு வரும் பிரச்சனைகள் . ஆனால் சிலர் ஆர்வ கோளாறினாலும் , சில தம்பதிகள் அவர்கள் அந்தரங்களை அவர்கள் உபயோகத்திற்காக சொந்த கேமராவிலோ அல்லது மொபைல் கேமராவிலோ எடுக்கும் நிர்வாண புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எப்படி வெளியுலகிற்கு , இணையதளத்திற்கு வருகிறது? அதை எப்படி எல்லாம் தடுக்கலாம் ? 

உங்கள் லேப்டாப் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்காம்களை மற்றவர்கள் உங்கள் அனுமதி இன்றி உங்களை எப்படி பார்க்க முடியும் ? அதை எப்படி தடுப்பது ?





 
இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது  ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும். 

          இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில்  கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும் பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீஸ்சார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும் ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்து கொண்டும், பதிவு செய்தது கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக நிர்வாணமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்தது ரசித்து கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்தது கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை. 
         இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting அப்படியென்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை. 
சரி இந்த வகை தில்லாலங்கடி கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது? 

 Reflecting Glass -சை  கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :


1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுண்ணிப்பாக கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால்  இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது. 
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கை பையில் எப்பவும் ஒரு சிறிய முகம் பார்க்கும் வைத்து கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் , உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.  

2. உங்கள் கைப்பையில் எப்பவும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தல் அதில் ஒளி ஊடுருவுகிறதா என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது  முகம் பார்க்கும் கண்ணாடி. 

3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப சிம்பிள்  உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகம்ப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால்  கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியை குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொருத்தி இருப்போம் இல்லையா அதில் நாம் சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா கார்க்குள் என்ன இருக்கிறதென்று அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.

       சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றி . ஆனால் இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல. 

    சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி  அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம்  எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக  வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை . 
          ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின்  நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ? 
மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம்  புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன்.  

           எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று  தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்க்கிறது? 

டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் : 
1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.  

3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.




                                                       உங்க WEBCAM ஜாக்கிரதை . . .


          சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்யில்  இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்க்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு இணைக்க வில்லை ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்க்கு என்ன சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . அப்புறம்  தெரியாத ஒரு தப்பான விஷியத்தை நானே சொல்லி குடுத்தார் போல் ஆகிவிடும். அதனால் விஷியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .

இதில் இருந்து தப்பிக்க : 

1. நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்திருப்பார்களானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் . 
 
2. நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்ஸ்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமா லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கராய்அல்லது ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது . 




இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.

தொகுப்பு; மு.அஜ்மல் கான்.

Monday, 8 August 2011

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? பெரியார்தாசன்....

மதமாற்றமல்ல! இது மனமாற்றம்.
நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட டாக்டர் பெரியார்தாசன்.

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்?

பெரியார்தாசன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மா என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். இவர் 12-3-2010 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்[1][2]. அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார். - SOURCE:WIKEPEDIA

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? டாக்டர் பெரியார்தாசன்


இப்பரந்த உலகையும் அண்ட சராரங்களையும் படைத்தவன் என்று ஒருவன் உண்டா? இல்லையா?. இக்கேள்வியின் மீதான விவாதத்திற்கு, இல்லை என்றும் உண்டு என்றும் இருவேறு பதில்கள் உள்ளன.

உண்டு என்பதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் உண்டு என்று கூறுவோரும் உளர்.

இதில் படைத்தவன் ஒருவன் உண்டு என்று கூறுவோரில் ஒன்றுக்கு மேற்பட்ட பல கடவுள்கள் உண்டு என்ற நிலைபாட்டில் உள்ளோரில் பெரும்பாலோர் என்றாவது ஒருநாள் படைத்தவன் ஒருவன்தான் என்ற உண்மையைக் கண்டுகொள்கின்றனர்.

இது நாள்தோறும் நாம் படிக்கும் செய்திகளில் ஒன்றுதான்.

ஆனால், "படைத்தவன் என்றொருவனே இல்லை; அனைத்தும் தானாகவே தோன்றின" என நிரூபிக்கப்படா அறிவியலைத் துணைக்கழைத்து "பகுத்தறிவு" என்ற பெயரில் படைத்தவனை மறுதலித்து வாழும் நாத்திகர், படைத்தவனைக் கண்டுகொள்தல் என்பது நிகழ்வுகளில் ஆச்சரியமும் அபூர்வமுமான நிகழ்வாகும்.

தமிழகத்தின் பகுத்தறிவு(!)ப் பாசறையிலிருந்து இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுள் மிகச் சிறந்த இலக்கியவாதியான முரசொலி/நீரோட்டம்/அடியார் அவர்கள் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்.

நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட இன்னொருவரது வாழ்வின் திருப்புமுனை நிகழ்வு ஒன்று கடந்த வியாழன் (11.03.2010) அன்று சவுதி அரேபியாவில் நடந்தது.

ஆம்! "தேடுதல் உடையோர் நேரான வழியை அடைந்து கொள்வார்" என்பதற்கு இன்னுமோர் இலக்கணமாக, தமிழகத்தில் "கடவுள் இல்லை" என்ற கொள்கையில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வந்த பிரபல பேராசிரியர் முனைவர் பெரியார்தாசன் அவர்கள் கடந்த வியாழன் அன்று இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தம்மையும் இவ்வுலகையும் படைத்த இறைவனை இறுதில் தேடிக் கண்டுகொண்டார்.

உள்ளம் திறந்து, முன்முடிவுகள் இன்றித் தேடமுனைபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தேடுவதில் முனைப்புடன் இருந்தால் என்றாவது ஒருநாள் அவர்கள் தேடுவதை அடைந்தே தீருவர்.

"படைப்பாளன் என்றொருவன் இல்லவே இல்லை" என்று எவ்வித உறுதியான சான்றும் இல்லாமல், கண்டுபிடிப்பில் இன்றும் கத்துக்குட்டியாக இருக்கும் விஞ்ஞானத்தைத் துணைக்கழைத்து மிக அற்பமான சிற்றறிவைப் பயன்படுத்திப் படைத்தவனை மறுதலித்து வாழும் நாத்திகச் சகோதரர்கள்,

தங்களைத் தாங்களே "பகுத்தறிவுவாதிகள்" என அழைத்துக் கொள்வதிலாவது அவர்கள் உறுதியானவர்களாக இருப்பின்,

தம் மனதைத் திறந்து "படைப்பாளன்" குறித்துப் பேசும் அனைத்து வேத கிரந்தங்களையும் ஒப்பீட்டாய்வு செய்ய முன்வரவேண்டும் என்றும்

படைத்தவனின் வாக்காக இவ்வுலகின் இறுதிநாள்வரை பாதுகாக்கப்பட இருக்கும் திருக்குர்ஆனை முழுவதும் ஒருமுறையாவது படித்துப் பார்க்கவேண்டும் என்றும் இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறோம்.

தன்னுடைய நீண்டகால நாத்திக+புத்தமதப் பயணத்தின் இறுதியில் தன்னையும் இவ்வுலகையும் படைத்தவனைக் கண்டுகொண்ட பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், "கருத்தம்மா" என்ற பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருந்த திரைப்படத்தின் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவராவார்.

உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்து தனது பெயரையே நாத்திகச் சிந்தனையாளரான பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டு, 'பெரியார்தாசன்' ஆக வாழ்ந்தவர்.

சமூக சிந்தனைக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னணியில் நின்ற அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இஸ்லாத்தைப் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பெரியார்தாசன், கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11, 2010) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, தன்பெயரை "படைத்தவனுக்கு அடிமை" என்ற பொருள்படும் "அப்துல்லாஹ்" என்று மாற்றிக் கொண்டார்.

இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட முனைவர் அப்துல்லாஹ் எனும் பெரியார்தாசனின் இறைதேடுதல் பயணம் சுவாரசியமானது.

சிறுவயதில் தன்னுடன் பயின்றிருந்த சிராஜுதீன் என்ற முஸ்லிம் நண்பருடன் 2000ஆம் ஆண்டில் ஒருநாள் இரவு பல விஷயங்களைக் குறித்துக் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், படைத்தவனைத் தேடும் சிந்தனை எழக் காரணமான ஒரு கேள்வி சிராஜுதீனிடமிருந்து எழுந்தது என்றும் அதுவே தன் இறைதேடுதல் பயணத்தின் ஆரம்பக்கட்டம் என்றும் அவர் நினைவு கூர்கிறார்.

"படைத்தவன் என்றொருவன் இல்லை என்ற நாத்திக கொள்கைதான் சரியானது எனில் அதனால் நம்முடைய மரணத்துக்குப் பின் எந்த இழப்பும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக ஒருவேளை படைத்தவன் என்றொருவன் இருந்து விட்டால் மரணத்துக்குப் பின் நாம் மிகப் பெரிய நஷ்டவாளியாக நிற்க நேருமே" என்ற சிந்தனையினால் எழுந்த அச்சம்தான் "படைத்தவன் என்றொருவன் இருக்கிறானா?" என்ற தேடுதலுக்குத் தன்னை உந்தித் தள்ளியதாகக் கூறுகிறார்.

"கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் அங்கு உரையாற்ற வந்த பெரியாரைப் புகழ்ந்து, நான் எழுதிய கவிதைதான், பெரியாரின் கொள்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பமாக அமைந்தது" என்று கூறும் அவர்,

அதன்பின் கடுமையான கடவுள் மறுப்புச் சிந்தனை கொண்டவராக தமிழகம் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும்

இதற்கிடையில் இனத்தின் அடிப்படையிலான இழிவை அகற்ற "புத்த மதத்துக்கு" மாறியதாகத் தமிழக அரசு பதிவேடுகளில் தன் விவரங்களை மாற்றிக்கொண்டதையும் நினைவு கூர்கிறார்.

"2000இல் மனதினுள் எழுந்தக் கேள்வி, பல வேத கிரந்தங்களையும் ஆராயச் சொன்னது.

இந்துமத வேதங்களில் கடவுளைத் தேடுபவன், கடவுள் மறுப்புக் கொள்கையில்தான் போய் சேருவான்.

பைபிளிலும் படைத்தவனைக் குறித்த தெளிவு இல்லை.

இறுதியில் இஸ்லாத்தில் - திருக்குர்ஆனில் தேட முற்பட்டேன்.

திருக்குர்ஆனை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்தே மனதினுள் தெளிவுகள் ஏற்பட ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் தினசரி வேலைகளை ஒதுக்கி, நாளுக்கு 5 மணி நேரம் வரை திருக்குர்ஆனை வாசித்து முழுமையாக முடித்தேன். அதன் பின் ஹதீஸ்களையும் வாசிக்க ஆரம்பித்தேன்.

2004 இல் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை முழுமையாக நிறுத்தி விட்டேன். அதன் பிந்தைய 6 ஆண்டுகளும் முழுமையாக இஸ்லாத்தை ஆய்வு செய்வதிலேயே செலவழித்து, இறுதியில் உண்மையான இறைவனை இஸ்லாத்தின் மூலம் கண்டுகொண்டேன்" என்று தன் இறைதேடுதல் பயணத்தின் கடந்த 10 ஆண்டுகால முக்கிய நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.

"கடவுள் இல்லை" என்ற சிந்தனையை ஆயிரக்கணக்கானோருக்கு விதைத்த இறைமறுப்பாளர் ஒருவர் இன்று இறைவனைக் கண்டுகொண்டுள்ளார்.

கடுமையான தேடுதல் மூலம் கண்டு கொண்ட ஓரிறையை இனிவரும் காலங்களில் மக்களுக்கு எடுத்தியம்ப இருக்கும் அன்னாரின் கண்டறிதலைத் தமிழ்ச் சமூகம் மனம் திறந்து கேட்கட்டும்; உண்மையான படைத்தவனைக் கண்டு கொள்ளட்டும்.

இறைமார்க்கத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபின், மக்கா நோக்கிக் கடந்த சனிக்கிழமையன்று உம்ரா எனும் புனிதபயணத்தை மேற்கொண்ட அவர், இன்று 14.03.2010 இரவு 8.30 மணிக்கு ஜித்தா செனய்யாவில் "நான் எவ்வாறு இஸ்லாத்திற்கு மாறினேன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார், இன்ஷா அல்லாஹ்.

அவரது இந்நாள் வரையிலான பிழைகளைப் பொறுத்து, அவர் மூலம் இத்தூய மார்க்கம் மேலும் வலுப்பெற இறைவன் அருள்புரிவதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

"தேடுங்கள்; கண்டடைவீர்கள்!"

Artical source : Satyamargam.com