Wednesday, 26 October 2011

வைரம் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க !



வைரம் பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. ஆந்திராவில் உள்ளகோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது. அந்த வைரம் பற்றிய அடிப்படை தகவல்களும் கூடவே சில சுவாரஸ்யமான தகவலும் பார்ப்போமா?


வைரம் எப்படித் தான் உருவாகிறது?


பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.


வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?


இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.


 வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது?


வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.


வைரத்தை ஏன் காரட்(Carat) முறையில் எடை போடுகிறார்கள்?


இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்படுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில்காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை. இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.

ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.


சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும்?


ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.
உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.


 ப்ளு ஜாகர்(Blue Jager) வைரம் என்றால் என்ன?


தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.


வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன்?


ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.


இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?


இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.


பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.


வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே, அதனை உண்மையா?


வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும். பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மைHardness என்கிறோம்.


வைரத்தில் தோஷம் என்றால் என்ன?


அடிப்படையில் வைரம், நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலக்கூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும். இவை கறுப்பு நிறம் கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியியல் பெயர் கிராபைட்.

வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே தனியாக கறுப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் Black Pique / Black Spot என்பார்கள். நம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.pattri 


வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது?


வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது.முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.


இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது?


கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of Londonஎன்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.


இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது?


தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.

தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

வைரம் பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போமே !! -

தொடரும் ..




Saturday, 22 October 2011

இஸ்ரேல் மீது மரியாதை செலுத்தாமைக்கான 10 காரணங்கள்.

 




அமெரிக்க அரசியல் அரங்கங்களில் இஸ்ரேலின் மீது அனுதாப அலைகள் வீசினாலும் பெரும்பாலான அமெரிக்க மக்களிடையே இஸ்ரேளின் மீதும் அதன் கொலைகார செயற்பாடுகள் மீதும் வெறுப்பே காணப்படுகிறது.அதற்கான  பல ஆயிரம் காரணங்களில் முக்கியமான பத்து காரணங்கள்.

1.லிபர்ட்டி போர் கப்பல் தாக்கப்பட்டமை.
  •  1967 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அமெரிக்காவின் "லிபர்ட்டி" போர் கப்பலுக்கு இஸ்ரேலின் விமான மற்றும் கடட் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.இந்த எதிர்பாராத கோரமான தாக்குதலில் அமெரிக்காவின் 34 படையினர் கொல்லப்பட்டதுடன் 174 பேர் காயமடைந்தனர்.  
    தாக்குதலில் சேதமடைந்த லிபர்ட்டி

    தாக்குதல் பட்டப் பகலிலேயே இடம்பெற்றது,அதுவும் சர்வதேச கடற்பரப்பிலே நண்பகல் 2 மணிக்கு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    கபட புத்தியுள்ள இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு காரணம் அமெரிக்காவையும் எகிப்தையும் மூட்டி விடுவதேயாகும்.ஏனெனில் அப்போது அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்தம் நடந்து கொண்டிந்தது.

    2.ரேச்சல் கோரி படுகொலை.
    •  2003 மார்ச் 16 திகதி இடம்பெற்ற முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இஸ்ரேலின் படுகொலை.அமெரிக்காவின் சமாதான செயற்பாட்டாளர் சகோதரி ரேச்சல் கோரி (Rachel Corrie) இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக செயலில் போராடியவர்.அவர் காஸா பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் பலஸ்தீன மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கும் போது BULLDOZER முன் வந்து எதிர்ப்பை தெரிவித்த சந்தர்ப்பத்தில் கொடிய மனம் கொண்ட அந்த BULLDOZER சாரதி எந்த விதமான ஈவுஇரக்கமும் இன்றி அவரின் உடம்புக்கு மேலால் BULLDOZER ஐ ஏற்றிச் சென்று படுகொலை செய்தான்.

    RACHEL CORRIE ஐந்து வயதில் ஆற்றிய உரை.
     
    IDF இனால் கொல்லப்பட்ட அவரின் உடல்.

    3.புர்கான் டோர்கன் படுகொலை.
    •  2010 மே மாதம் துருக்கியின் மாவிமர்மாரா உதவிக் கப்பலின் மீது இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பல நாட்டைச் சென்ற சமாதான செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்,அதில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது சமாதான செயற்பாட்டாளர் புர்கான் டோர்கன் (FURKAN DORGAN) கொல்லப்பட்டமை.
    புர்கான் டோர்கன் 

     4.காங்கிரஸ் பெண் சின்தியா மக்கினி கடத்தல்.

    • 2009 இல் முன்னால் காங்கிரஸ் பெண் சின்தியா மக்கினி இஸ்ரேலிய  பாதுகாப்பு படையினரால் (IDF) கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவருடன் சேர்த்து 20 க்கும் மேற்பட்ட சமாதான செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.1500 க்கும் மேட்பட்டவர்களுக்கு மரணத்தையும் 10000 க்கும் மேட்பட்டவர்களுக்கு காயத்தையும் ஏற்படுத்திய இஸ்ரேலின் காஸா மீதான 2008 டிசம்பர் தாக்குதலில் சின்னாபின்னமாகிப்போன காஸா மக்களுக்கு தேவையானா மருந்துகள்,சீமெந்து,ஒலிவ் மரங்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை கப்பலில் காஸாவுக்கு கொண்டு போகும் போதே அவர் கைது செய்யப்பட்டார்.இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 50000 வீடுகள்,800 தொழிற்சாலைகள்,200 பாடசாலைகள்,39 பள்ளிவாசல்கள் மற்றும் இரண்டு தேவாலயங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

    சின்தியா மக்கீனி 
    5. ஐ.நா.வில் ஆகக் கூடிய எதிர்ப்பு ஆனால்...

    • ஐக்கிய நாடுகள் சபை 1945 இல் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த பின் பொதுச் சபையில் கொண்டு வந்த 700 பொதுச் சபை தீர்மானங்களில் 450 தீர்மானங்கள் இஸ்ரேலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்டவையே ஆகும்.இது வரை ஐ.நா.வில் ஒரு முஸ்லிம்  நாட்டுக்கு எதிராக பொதுச் சபையில் தீர்மானகள் நிறைவேற்றப்பட்டு இல்லை.
    

    
    6. அமெரிக்காவின் கோரிக்கைக்கு எதிர்ப்பு.

    • மேற்குக் கரையில் இஸ்ரேல் சட்டவிரோத குடிய்ற்றங்களை நிறுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    7.ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்க பூமி.

    • மத்திய கிழக்கில் ஓரினச்சேர்க்கை குற்றமாக கருதப்படாமல் ஊக்குவிக்கப்பட்டு வருடாவருடம் பகிரங்கமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஒரே ஒரு நாடு இஸ்ரேலாகும்.உலகில் இஸ்ரேலிலே ஒரு விலைமாதுக்கு தனி நபர் நுகர்வு அதிகம்.மேலும் இதன் காரணமாக பாலுறவு சம்பந்தப்பட்ட நோய்கள்,கருக்கலைப்பு என்பன இஸ்ரேலில் உச்சத்தை தொட்டுள்ளன.ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை முறை தவறிப் பிறந்தவர் என்றும் மர்யம்(அலை) அவர்களை விபச்சாரி என்றும் இஸ்ரேலிய மீடியாக்கள் சித்தரிக்கின்றன(அஸ்தஹ்பிருல்லாஹ்).இங்கு வருடா வருடம் இடம்பெறும் ஓரினச்சேர்க்கையாளர்களின் ஒன்று கூடலில் பகிரங்கமாக அனைத்து விதமான அனாச்சாரங்களும் இடம்பெறுகின்றன.இஸ்ரேலுக்கு உலகம் முழுதும் ஆதரவு திரட்டி திரியும் அமெரிக்காவின் CHRISTIAN UNITED FOR ISRAEL என்ற அமைப்புக்கு ஏன் இவை புலப்படுவதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
    2009 இல் இடம்பெற்ற GAY PRIDE PARADE ஊர்வலத்தில்

    8.அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் விற்கப்பட்டமை.

    • அமெரிக்காவும் இஸ்ரேலும் நீண்ட நாள் நண்பர்களாக இருந்தாலும் இஸ்ரேல் முழு உலகை எப்படி எந்நேரமும் கவனித்துக் கொண்டு இருக்குமோ அதுபோல் அமெரிக்காவையும் கண்காணித்துக் கொண்டே இருக்கும்.இப்படி கண்காணிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட பல தகவல்களை இஸ்ரேல் அமெரிக்காவின்  எதிரிகளான ரஷ்யா மற்றும் சீனாவுக்கு வழங்கிய சம்பவம் அமெரிக்க மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த நம்பிக்கை துரோகத்தை செய்தவன்  நம்பிக்கை துரோகத்திலே உருவான நாட்டின் குடிமகனான ஜோனதன் போலார்ட் என்பவனாவான்.
    ஜோனதன் போலார்ட்

    9.பலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறை.

    • இஸ்ரேலானது பலஸ்தீன மக்கள் மீது பாரிய அளவில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து அவர்களை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கி வருகிறது.இந்த அடக்கு முறை மூலம் ஆட்கடத்தல்,முற்றுகை,நாடு இரவில் வீடுகளை சோதனை செய்தல் ,எந்தவிதமான காரணமும் இன்றி கைது செத்தல் என்பன அடங்கும்.சட்விரோத குடியேற்றவாசிகள் தொடந்தும் பலஸ்தீன மக்களின் ஒலிவ் மர தோட்டங்களுக்கு செய்யும் அநியாயம்  தொடர்ந்து கொண்டே செல்கிறது.



    10.உடல் உருப்பு திருட்டு.


    • இந்த விடயம் உலக  மீடியாக்களில் பரவலாக பேசப்பட்ட ஒரு மிகமுக்கியமான விடயமாகும்.இஸ்ரேலில் சோதனைச் சாவடிகளிலும் நாடு இரவு வீச்ச சோதனைகளிலும் கைது செய்யப்படும் பல பேரின் உடல் உறுப்புக்கள்  திருடப்பட்டு வருகின்றது.

    இந்த ஆக்கத்தை வாசித்தமைக்கு நன்றி.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்  திருத்திக்கொள்கிறேன்.

    Tuesday, 18 October 2011

    ஸ்மார்ட் போன்கள்....



    ஸ்மார்ட் போன்கள் என‌ப்ப‌டும் கணிப்பேசிகள் பற்றி பார்க்கலாம். முன்பைப்போல கைப்பேசிக‌ளின் ப‌ய‌ன்பாடு வெறும் பேச‌வும், டெக்ஸ்ட் செய்ய‌வும் என்றில்லாது இன்றைக்கு அதை இணைய‌த்தோடு இணைய‌ச்செய்து, அதற்கு ப‌ல்வேறு புத்திக‌ளையும் கொடுத்து அதை நாம் அநேக‌ம் செய்ய‌ வைத்திருக்கின்றோம். சீக்கிரத்தில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்க‌ உத்தேச‌த்திலிருப்போர்க்கு கீழ்க‌ண்ட குறிப்புக‌ள் உதவலாம்.

    1.ஆப்பரேட்டிங் சிஸ்டம் : ஸ்மார்ட் போன்க‌ள்,க‌ணிணிகளைப் போல‌வே ஏதாவ‌து ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு வ‌ரும். எகா: கூகிளின் ஆன்ட்ராய்ட், ஆப்பிளின் iOS4, பிளாக்பெர்ரியின் BlackBerry OS ,மைக்ரோசாப்டின் Windows Mobile, நோக்கியாவின் Symbian அல்லது MeeGo. இந்த‌ OS-‍க‌ளில் எந்த‌ OS உங்க‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து ச‌வுக‌ரிய‌மான‌து என‌ முடிவு செய்து கொள்ளுங்க‌ள். ஒவ்வொன்றும் அத‌ற்கென‌ "பய‌ன்பாடு ச‌ந்தை"க‌ளை கொண்டுள்ள‌ன.‌ ஐமீன் AppStore or Application Marketplace.எப்ப‌டியும் உங்க‌ள் ஸ்மார்ட்போன் மேற்சொன்ன‌வைக‌ளில் எதாவ‌து ஒரு OS-ஐ கொண்டிருப்ப‌தாக‌ பார்த்துக்கொள்ளுங்க‌ள். என‌து ப‌ரிந்துரை Android. முடியுமெனில் iOS4.

    2. இணைய இணைப்பு வசதிகள் : உங்க‌ள் ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக Wi-Fi இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடவே உங்கள் இடம், சூழலுக்கேற்ப 4G, UMTS/HSDPA அதாவது 3G,GPRS, EDGE போன்ற இணைய இணையும் வசதிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

    3.தொடுதிரை : சிலருக்கு எல்லாமே டச் ஸ்கீரினால் செய்ய முடியும். சிலருக்கு டச் ஸ்கீரின் என்றாலே அலர்ஜி. உங்கள் ஸ்மார்ட் போன் எது கொண்டிருக்க வேண்டுமென நீங்க‌ளே முடிவுசெய்து கொள்ளுங்க‌ள். சில‌ கணிப்பேசிக‌ள் இர‌ண்டுமே கொண்டு வ‌ருகின்ற‌ன‌. ட‌ச் ஸ்கிரீனெனில் Capacitive Touchscreen ந‌ல்ல‌ தொடு உண‌ர்வை தரும். எதற்கும் வாங்கும்முன் ஒரு முறை தொடுதிரையை தொட்டு பார்த்து அது உங்களுக்கு லாயக்காவென தெரிந்துகொள்ளுத‌ல் ந‌ல்ல‌து.பிற்பாடு விர‌ல்க‌ளால் மொத்து மொத்தென திரையை மொத்துவ‌தை த‌விர்க்க‌லாம்.யூடியூப் வீடியோ பார்வைக‌ளுக்கு ந‌ல்ல‌ Display Resolution இருப்பது ந‌ல்ல‌து.விரல்கள் விளையாட வசதியான அளவு Display Size வேண்டும்.

    4.நினைவகம் : ப‌ய‌ன்பாடுக‌ளை நிறுவ‌ அதிக‌ Internal Memory தேவைப்ப‌டும்.GB க‌ண‌க்கில் இருப்ப‌து ந‌ல்ல‌து.

    5.பேட்டரி : கடைசியாக ஆனால் மிக முக்கியமாக battery life.

    தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

    Saturday, 15 October 2011

    குழந்தைகளுக்கான இணையதளங்கள்...





    இணையம் - தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தில் இன்றைய  குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை மற்றும் இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.


    1. Kidsmart

    லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விசயங்களை கற்றுத்தருகிறது. சாட்டிங், சோசியல் நெட்வொர்க் தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விசயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.

    முகவரி: http://www.kidsmart.org.uk/

    2. Yahoo Kids

    குழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொதுஅறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது.

    முகவரி: http://kids.yahoo.com/

    3. Ask Kids

    முன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும்.

    முகவரி: http://www.askkids.com/


    4. National Geographic Kids

    அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society [National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்] குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விசயங்களை குழந்தைகள் கற்றக் கொள்ளலாம்.

    முகவரி: http://kids.nationalgeographic.com/kids/

    5. Kids Health

    மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.

    முகவரி: http://kidshealth.org/kid/

    Friday, 30 September 2011

    வெள்ளை தங்கம்(white Gold)-ஒரு ஆய்வு ..

    Click to show "white Gold" result 4இன்று உலகின் தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1200-1300 டன்கள். இன்றுபுழக்கத்திலுள்ள தங்கத்தின் எடை 3,00,000 டன்கள். நதிகளின் மணலிலிருந்துதங்கத்தைப் பிரித்தெடுக்கும் முறைக்கு அலுவியல் என்று பெயர். தங்கச்சுரங்கங்களின் வழியே ஓடிவரும் நதி நீரில், மணலோடு தங்கத் துகள்களும்அடித்து வரப்படும். நதிக்கரையில் நீரையும் மணலையும் தட்டுகளில் ஏந்திச்சலிப்பார்கள். இலேசான மணல் நீரோடு அகல, கனமான தங்கத் துகள்தட்டிலே தங்கிவிடும். இதுதான் மணலிலிருந்து தங்கத்தை அரித்து எடுக்கும்பழைய முறை. 
         தங்கம் - பாறைகளில் வேறு பல தாது உப்புகளோடு சேர்ந்திருக்கும்.இது ரசாயன, யந்திர முறைகளில் பிரித்து எடுக்கப்படுகிறது. தங்கச் சுரங்கத்தில்தங்கமுள்ள பாறைகளை
    வெட்டி, அதைப் பொடி செய்து, பல்வேறு ரசாயனங்கள் மூலம் தங்கத்தை
    அதிலிருந்து தனிமைப்படுத்துகிறார்கள். பாதரசத்தோடு தங்கம் கலக்கும்.

    ஆகவே தங்கம் கலந்த மணலோடு பாதரசத்தைக் கலந்து, அப்பாதரசக்
    கலவையை சூடாக்க, பாதரசம் ஆவியாகிப் பிரியும், தங்கம் தங்கிவிடும். 

         உலோகங்களிலேயே அதிகமாக வளைந்து கொடுக்கக்கூடியது
    தங்கம்தான். மிக மிக மிக மெல்லிய தகடுகளாக்கலாம் தங்கத்தை - ஒரு 
    மில்லி மீட்டரில் பல ஆயிரம் தகடுகளை அடுக்கும் அளவுக்கு! தங்கம்
    கனமான உலோகம். ஆனால், மிருதுவானது. ஆபரணங்கள் செய்ய இதில்
    உறுதி ஏற்படுத்த தாமிரம், வெள்ளி ஆகியவற்றைக் கலந்து
    பயன்படுத்துகிறார்கள். தங்கத்தை அளக்க ‘காரட்’ என்ற முறை
    பயன்படுத்துகிறது. நாம் பயன்படுத்துவது 24 காரட் தங்கம். மேல் நாடுகளில் 9-
    8 காரட் தங்கங்களையே பயன்படுத்துகின்றனர். திருமண மோதிரங்களுக்கு
    மட்டுமே 22 காரட் தங்கம். வெள்ளை தங்கம் என்று ஒருவகை. தங்கத்துடன்
    பல்லாடியம் அல்லது நிக்கல் இவற்றைச் சேர்த்து இந்த வெள்ளைத் தங்கத்தை
    உருவாக்குகிறார்கள். இந்த வெள்ளைத் தங்கத்தினால் மேல் நாட்டவர்
    ஆபரணங்களைச் செய்து கொள்ளுகிறார்கள். ஒரு தீக்குச்சித் தலை அளவுள்ள
    தங்கத்திலிருந்து மூன்று மீட்டர் நீளமுள்ள கம்பி இழுக்கலாம். 

         இன்று தங்கத்தைத் தனிமைப்படுத்திப் பிரிக்க பாதரசத்தைப்
    பயன்படுத்துவதில்லை. பொட்டாசியம் சயனைடைப் பயன்படுத்துகின்றனர்.
    சயனைட் தங்கத்தைக் கரைக்க வல்லது. இன்று உலகில் மிகப் பெரிய தங்க
    இருப்பைப் கொண்டுள்ள நாடு ஐக்கிய அமெரிக்கா. ஃபோர்ட் நாக்ஸ்
    என்னுமிடத்தில் அமெரிக்காவின் இத் தங்கக் குவியல் பாதுகாக்கப்பட்டு
    வருகிறது.
    அதிலிருந்து தனிமைப்படுத்துகிறார்கள். பாதரசத்தோடு தங்கம் கலக்கும்.
    ஆகவே தங்கம் கலந்த மணலோடு பாதரசத்தைக் கலந்து, அப்பாதரசக்
    கலவையை சூடாக்க, பாதரசம் ஆவியாகிப் பிரியும், தங்கம் தங்கிவிடும். 

         உலோகங்களிலேயே அதிகமாக வளைந்து கொடுக்கக்கூடியது
    தங்கம்தான். மிக மிக மிக மெல்லிய தகடுகளாக்கலாம் தங்கத்தை - ஒரு 
    மில்லி மீட்டரில் பல ஆயிரம் தகடுகளை அடுக்கும் அளவுக்கு! தங்கம்
    கனமான உலோகம். ஆனால், மிருதுவானது. ஆபரணங்கள் செய்ய இதில்
    உறுதி ஏற்படுத்த தாமிரம், வெள்ளி ஆகியவற்றைக் கலந்து
    பயன்படுத்துகிறார்கள். தங்கத்தை அளக்க ‘காரட்’ என்ற முறை
    பயன்படுத்துகிறது. நாம் பயன்படுத்துவது 24 காரட் தங்கம். மேல் நாடுகளில் 9-
    8 காரட் தங்கங்களையே பயன்படுத்துகின்றனர். திருமண மோதிரங்களுக்கு
    மட்டுமே 22 காரட் தங்கம். வெள்ளை தங்கம் என்று ஒருவகை. தங்கத்துடன்
    பல்லாடியம் அல்லது நிக்கல் இவற்றைச் சேர்த்து இந்த வெள்ளைத் தங்கத்தை
    உருவாக்குகிறார்கள். இந்த வெள்ளைத் தங்கத்தினால் மேல் நாட்டவர்
    ஆபரணங்களைச் செய்து கொள்ளுகிறார்கள். ஒரு தீக்குச்சித் தலை அளவுள்ள
    தங்கத்திலிருந்து மூன்று மீட்டர் நீளமுள்ள கம்பி இழுக்கலாம். 

         இன்று தங்கத்தைத் தனிமைப்படுத்திப் பிரிக்க பாதரசத்தைப்
    பயன்படுத்துவதில்லை. பொட்டாசியம் சயனைடைப் பயன்படுத்துகின்றனர்.
    சயனைட் தங்கத்தைக் கரைக்க வல்லது. இன்று உலகில் மிகப் பெரிய தங்க
    இருப்பைப் கொண்டுள்ள நாடு ஐக்கிய அமெரிக்கா. ஃபோர்ட் நாக்ஸ்
    என்னுமிடத்தில் அமெரிக்காவின் இத் தங்கக் குவியல் பாதுகாக்கப்பட்டு
    வருகிறது.
    தங்கம் fineness பொறுத்து மதிப்பெண்கள் உள்ளன: தங்கம், 8 வரைபடங்கள் (8k) - 333 மதிப்பெண்கள் தங்கம் 10 அட்டைகள் (10K) - 375 மதிப்பெண்கள் தங்கம் 15 அட்டைகள் (14k) - 585 மதிப்பெண்கள் 18 காரத் தங்க (18K) - குறியீடு 750 22 காரத் தங்க (22K) - குறியீடு 900 உயர்ந்த தரமான வெள்ளை தங்கம் 17 அட்டைகள் ஒரு குறைந்தபட்ச கொண்டிருக்கிறது மற்றும் உலோகக்கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளது எடை பெற்றது மற்றும் ஒரு சிறந்த நடத்த வேண்டும் என்று இது பிளாட்டினம் தடயங்கள், சிலவேளைகளில், தங்கம் மற்றும் பிளாட்டினம் செய்யப்பட்டது. இந்த உலோகக்கலவைகள் ஒரு சிறப்பு goldsmiths உருவாக்குகின்றன.

    Wednesday, 28 September 2011

    அணுமின்சாரம் -ஒரு ஆய்வு ....


    அணுமின்சாரம் சிறந்த மின்சாரமாக இருந்திருந்தால் உலகநாடுகள் அதிக அளவில் அணு உலைகளை அமைத்திருக்கும். ஆனால், உலகின் 31 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் அமைக்கப்பட்டன. அதிலும் ஒருநாடு, லிதுவேனியா தனது கடைசி அணு உலையை மூடிவிட்டது. இப்போது ஐ.நா. அவையில் உறுப்புநாடுகளாக உள்ள 192 நாடுகளில் வெறும் 30 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் உள்ளன.

    அதிலும் உலகின் அணு உலைகளில் முக்கால் பங்கு வெறும் 6 நாடுகளில் மட்டுமே உள்ளன. அவை. அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான், ரசியா, செர்மனி, தென் கொரியா. இவற்றில் - செர்மனி, ஜப்பான் நாடுகள் அணு உலைகளுக்கு விடைகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளன.

    2002 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 444 அணு உலைகள் இருந்தன. இப்போது 437 அணு உலைகள் மட்டுமே உள்ளன. அதாவது - உலகளவில் அணுமின் திட்டங்கள் அதிகமாகவில்லை. குறைந்து வருகின்றன.
    அணுமின்சாரம்தான் எதிர்காலத்தின் மின்சாரம்" என்பது ஒரு அயோக்கியத்தனமான கூற்று. இதனை அப்துல் கலாம் அவர்கள் கூறிவருகிறார். இப்போது சுமார் 4,800 மெகாவாட் அளவாக உள்ள இந்திய அணுமின் உற்பத்தியை 50,000 மெகாவாட் அளவாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
    ஆனால், இந்திய அணுசக்தி துறை 1970 ஆம் ஆண்டில் வெளியிட்ட கணிப்பில் 2000 ஆவது ஆண்டில் இந்தியாவில் 43,000 மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 4,870 மெகாவாட் அளவுதான் எட்ட முடிந்தது.

    உலகளவில் 2000 ஆம் ஆண்டில் 4,450 ஜிகாவாட் (ஒரு ஜிகாவாட் = 1000 மெகாவாட்) அளவு அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று பன்னாட்டு அணுசக்தி முகமை 1974 ஆம் ஆண்டிலேயே அறிவித்தது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 375 ஜிகாவாட் அளவுதான் உலகம் முழுவது அணுமின்சாரம் உற்பத்தி ஆகிறது.

    அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டில் அந்நாட்டு அதிபர் நிக்சன் அங்கு 1000 அணு உலைகள் அமைக்கப்போவதாகக் கூறினார். ஆனால், அங்கு ஒட்டுமொத்தமாக 253 அணு உலைகள் தொடங்க உத்தரவிடப்பட்டு, 71 நிலையங்கள் தொடங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டன, 50 நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டன. 28 நிலையங்கள் தொடங்கிய பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டன. இப்போது 104 அணுமின் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதுமட்டுமல்லாமல் கடந்த 37 ஆண்டுகளாக அமெரிக்காவில் புதிய அணுமின் நிலையம் தொடங்கப்படவில்லை.


    உலகிலேயே அதிக அணு உலைகள் உள்ள பகுதி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகும். அங்குள்ள 18 நாடுகளில் எட்டு நாடுகள் அணுமின்சாரத்திட்டங்கள் இல்லாத பகுதி என அறிவித்து விட்டன. 4 நாடுகள் புதிய அணு உலைகள் தொடங்க மாட்டோம் எனக் கூறிவிட்டன. செர்மனி நாடு 2022 க்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாகக் கூறிவிட்டது. அங்கு வெறும் மூன்று நாடுகள் மட்டுமே அணுமின்சாரத்தை ஆதரிக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும் கடந்த 30 ஆண்டுகளாக புதிய அணுமின் திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை.

    இப்போது உலகின் மொத்த மின் உற்பத்தியில் 13% அணுமின்சாரம் ஆகும். இது 2050 ஆம் ஆண்டில் 6% ஆகக் குறையும் என மதிப்பிட்டுள்ளது பன்னாட்டு அணுசக்தி முகமை. எனவே, அணுமின்சாரம்தான் எதிர்கால மின்சாரம் என்பது காதில் பூ சுற்றும் வேலை.


    இந்த உணர்வோடு, நாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையும், மக்களின் நியாயமான கேள்விகளையும், உண்மையான பயத்தையும் போக்கும் வகையில் ஒவ்வொன்றாக பார்ப்போம். அதாவது ஒரு அணுமின் நிலையத்தைப்பற்றியும் அதன் பாதுகாப்பை பற்றி நாம் முக்கியமாக பார்த்தோமேயானால், நான்கு பாதுகாப்பு விஷயங்கள் முக்கியமானவை. 

    1. Nuclear Criticality Safety
     - நீடித்த தொடர் அணுசக்தி கதிர்வீச்சினால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தால் அதில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய தொழில் நுட்பம்

    2. Radiation Safety 
    - அணுக்கதிர் வீச்சுள்ள எரிபொருள்களை எப்படி கையாளுவது என்பது பற்றியும், உலக தரத்திற்கேற்ப அதை எப்படி எந்த முறையில் பாதுகாப்பாக உபயோகிப்பது என்பது பற்றிய வழிமுறை

    3. Thermal Hydraulic safety 
    - அணுஉலையில் எரிபொருளை குளிர்விக்கும் அமைப்பு மின்சார தடையால் இயங்கவில்லை என்றால், அதை எப்படி மின்சாரம் இல்லாமலேயே இயங்க வைத்து மாற்று மின்சாரம் வரும் வரை உருகி வெப்பநிலை கூடி வெடிக்காமல் தடுக்கும் அமைப்பை எப்படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் இயக்குவது.

    4. Structural integrity Safety? 
    அணுஉலையும் அது தொடர்பான மற்ற அமைப்புகளின் கட்டமைப்பையும், அது அமைக்கப்பெறும் இடத்தின் வலிமையையும், இயற்கைப்பேரிடர் நேர்ந்தாலும் அதை எப்படி நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை

    இந்த நான்கு அமைப்புகளும் முறையாக அமைக்கப்பட்டிருக்கிறதா, தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என்று தான் முதலில் பார்க்கவேண்டும். 



    ஒரு அணுஉலையை நிறுவுவதற்கு இடத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக மிக கடுமையான தேர்வு முறை பின் பற்றப்படுகிறது. அந்த இடத்தில், அதாவது பூகம்பத்தின் விளைவுகள் எப்படி இருக்கும், அது எவ்வித பூகம்ப வரையரைக்குள் வரும், அதன் பூகோளத்தன்மை, அடிப்படை அமைப்பு, பூகம்பம் வந்தால் ஏதேனும் பாதிப்பு நிகழுமா இல்லையா, பாறைகளின் தன்மை எப்படி இருக்கிறது, சுனாமி வர வாய்ப்பு உண்டா, அப்படி வந்தால் அது எப்படி பட்ட தன்மையானதாக இருக்கும், வெள்ளம், மழை, பக்கத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்தால் அதனால் பாதிப்பு ஏற்படுமா, விமான நிலையம் பக்கத்தில் இருக்கிறதா இல்லையா, நச்சு மற்றும் வெடிக்கும் தன்மையுள்ள பொருள்கள பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க இடம் இருக்கிறதா இல்லையா, இராணுவ அமைப்புகள் அருகில் உள்ளனவா, அந்த பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்பு எவ்விதம் அமைந்துள்ளது, கடல் உயிரனங்களின் வாழ்வாதாரம், தேவையான பரந்த நிலப்பரப்பு, தண்ணீர், மின்சாரத்தேவை இருக்கிறதா இல்லையா போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தான் அணுஉலை அமைக்க ஒரு இடத்தை அரசு தேர்வு செய்கிறது. இதில் ஏதாவது ஒன்று குறை இருந்தால் கூட அந்த இடம் அணு மின்சார உற்பத்திக்கு ஏதுவான இடம் இல்லை என்ற முடிவுக்கு வந்து, அதற்கான அங்கீகாரம் கிடைக்காது. 

    எனவே அணுஉலை அமைக்கும் முன்பாகவே இத்தகைய அம்சத்தையும் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுத்த பின்புதான் கூடம்குளம் இடம் அணுஉலை அமைப்பிற்கான Environmental Impact Assessment (EIA),
     

    அதாவது இந்த அணு உலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றத்தைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அதன் தொடர்புடையோர் கருத்தரிந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் 2006 ம் ஆண்டின் வழிமுறைப்படி தேவையான பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதற்கான AERB Code of Practice on Safety in Nuclear Power Plant Sitting வழிமுறைப்படி, இடம் தேர்வுக்கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டு அரசு அதற்கு முறைப்படி அனுமதி கொடுத்துள்ளது. எனவே, அணுஉலை சம்மந்தமாக செய்யப்படும் எந்த ஒரு அனுமதியும் எவ்வித சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் அரசு மிக கடினமான வரைமுறைகளுடன் நிறைவேற்றி இருக்கிறது. ஜப்பான் புக்குஸிமா விபத்திற்கு பிறகு பூகம்பமும், சுனாமியும் ஒன்று சேர்ந்து வந்தாலும் கூட கூடங்குளம் அணு உலை தாங்கும்.
     

    தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பகுதி பற்றிய அச்சம் தேவையற்றது (Exclusion and sterilization zone)
     

    அணுஉலையை சுற்றி 1.5 கிலோமீட்டர் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான பகுதி, அங்கு தான் குடியிருப்பு தடைசெய்யப்பட்ட பகுதி, அந்த பகுதி அணுஉலைக்கான இடத்திற்குள்ளேயே வருவதால், அதற்கு வெளியே குடியிறுக்கும் மக்களை வெளியேற்றுவது என்ற கேள்விக்கு இடமில்லை.
     

    இதற்கடுத்தாற்போல், வரக்கூடிய பகுதி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்கள் எப்பொழுதும் போல் இருக்க, அந்த மக்கள் தொகை பெருக்கம் இயற்கையாக வளர எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி அந்த பகுதியில் அதிகமான மக்கள் புதிதாக குடியேறுவது, அந்த 5 கிலோமீட்டர் பகுதிக்குள் புதிய தொழிற்சாலைகள் போன்றவை உருவாவது தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும், அதனால் அதிக மக்கள் குடியிருப்பு, அதாவது 20000 மக்கள் தொகைக்கும் மேல், அந்த பகுதியில் ஏற்படுத்தப்படக்கூடாது என்பது ஒரு வழிகாட்டு நெறிமுறை தானே தவிர, கட்டாயம் இல்லை.



    தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

    Friday, 23 September 2011

    The Difference Between IELTS and TOEFL...

    How can you do this? You can prove your knowledge of the language by taking a test. Two of the most popular are the Test of English as a Foreign Language (TOEFL) and the International English Language Testing System (IELTS). While these two tests have a similar goal - to show that you know English - they are different in many ways.
     
    One difference in the two tests is in the intent. The main intent of the TOEFL is to determine whether or not the test taker can speak, read, understand, and write English well enough to attend college in an English-speaking program. The questions, reading material, and listening material are all designed on a college level.

    While there is one version of the IELTS that is designed for college applicants, the Academic Version, the IELTS also comes in a General Training Version. This is used for those who are looking to head to an English-speaking country for work or immigration. Many companies who are looking to hire non-native English speakers need to know that their employees can speak and understand English, and they require a test to show this. Also, Australia and Canada require those who are immigrating to their countries to pass the test as part of their citizenship requirements.

    Difference in Focus

    Another difference between the two tests is the focus. The TOEFL is designed for North American speakers and hearers. The spoken portions are read by native North American speakers. The questions of form and style are based on North American English. On the other hand, the IELTS is designed to fit a variety of accents and situations. The writing styles and accents incorporated into the test are designed to mimic the accent and style of many different countries. This makes this test ideal for those who are looking to test their ability to speak and read English, but do not necessarily need to speak and read North American English.

    The Structure of the IELTS


    Candidates who are taking the IELTS are required to complete four modules. These are speaking, reading, writing, and listening. Once complete, the applicant will receive a band, or score, which will be displayed on the IELTS Test Report Form. The highest possible score is a 9 band score, which means the individual is completely competent in all tested areas.

    The Listening and Speaking Modules are the same for both the academic and general versions of the exam, but the Reading and Writing Modules are not. The test takes 2 hours and 45 minutes to complete. The Listening, Reading, and Writing Modules must be completed in that order on the same day without a break. The Speaking Module can be completed within a week prior to or following the written portion of the test.

    The Structure of the TOEFL

    The TOEFL can be taken online or at a testing center. When taken online, the applicant has four hours to complete the Reading, Listening, Speaking, and Writing sections of the test. Each section has its own time limit. The paper-based test is similar in structure. However, it has a structure and written expression section rather than a speaking section. These test similar skills, just in a different format.

    The Internet based version has a highest possible score of 120 and a lowest possible score of 0. The paper version is scored in a range between 310 and 577, with each section scored separately, but the writing section not included in the final score.

    While the TOEFL and the IELTS have significant differences, both are good ways to judge whether or not an English speaker truly knows the language. If you are trying to decide which test to take, contact the school or company with which you are applying to see which test they prefer.

    Thursday, 22 September 2011

    வாரம் ஒரு அறிவியல்-உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி!




    பௌதீகவியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான Richard Muller என்பவர் 1800 ம் ஆண்டிலிருந்து 2009 வரையில் உலக வெப்பநிலை மாற்றம் பற்றிய தகவல்களை பெற்று இந்த புள்ளிவிபர அட்டவனையை தயாரித்திருக்கிறார்.



    ‘உலகம் வெப்பமயமாகி வருகிறது’ என்பதை எச்சரிக்கை மணி அடித்து, ஒரு வீடியோ மூலம் நிரூபித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். 1950ம் ஆண்டிலிருந்து உலக சராசரி வெப்பநிலை எப்படி 1 பாகை செல்ஸியஸ் உயர்ந்துள்ளது என இரண்டு நிமிடம் கொண்ட இந்த வீடியோ துல்லியமாக காண்பிக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த Berkeley பல்கலைக்கழகத்தின் உலக வெப்பநிலை பற்றிய (BEST) ஆராய்ச்சி ஒன்றின் முடிவில்,  1950ம் ஆண்டிலிருந்து, உலக சராசரி வெப்பநிலை 1 பாகை செல்சியஸ் வெப்பநிலையால் உயர்வடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



    இதற்கென உலகெங்கிலும் 15 வகையிலான நிறுவனங்களிடமிருந்து 1.6 பில்லியன் வெப்பநிலை அறிக்கைகள் பெறப்பட்டு இப்புள்ளிவிபரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


    புவி வெப்பமயமாதல் பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும், இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்களுக்கும் நிச்சயம் இவ்வீடியோ பாடம் சொல்லித்தரும்.



    Tuesday, 20 September 2011

    தீபாவளி வாழ்த்து (Greeting Cards) தமிழில் அனுப்ப சிறந்த தளங்கள்...

    ஒரு பண்டிகை என்றதுமே அனைவரும் நினைப்பது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என. அஞ்சல் வழியாக வாழ்த்து அட்டைகள் (Greetings Cards) அனுப்பிய காலம் போய் இப்பொழுது ஈமெயிலிலும், மொபைல்களிலும் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்கிறோம். இணையத்தில் இலவசமாக வாழ்த்து அட்டைகள் அனுப்ப ஏராளமான தளங்கள் உள்ளது. இதில் குறிப்பிட்ட தளங்களே தமிழில் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வசதியை ஏற்ப்படுத்தி தருகிறது. அந்த வகையில் தமிழில் வாழ்த்து அட்டைகளை அனுப்ப சிறந்து பத்து தளங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

    koodalwww.klgreetings.com, www.dgreetings.com
    இந்த தளத்தில் பல தீபாவளி வாழ்த்து அட்டைகள் தமிழில் கிடைக்கின்றன. இதில் உள்ள அட்டைகளை கணினியில் டவுன்லோட் செய்தும் நண்பர்களுக்கு அனுப்பலாம்.

    365 Greetings , www.indiadivine.org ,www.123greetings.com, www.klgreetings.com, kongutamil.tripod.com ,
    இந்த தளத்திலும் சில தமிழ் வாழ்த்து அட்டைகள் உள்ளன. இந்த தளத்தில் இருந்தே நேரடியாக சமூக தளங்களில் பகிரும் வசதியை கொடுத்து உள்ளனர். மற்றும் இதில் உள்ள பின்புற நிறத்தை நமது விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்.

    V4Orkut
    இந்த தளத்திலும் சில தமிழ் வாழ்த்து அட்டைகள் உள்ளன. நேரடியாக பேஸ்புக் தலத்தில் பகிரும் வசதி உள்ளது.

    Latest Greeting Cards
    இந்த தலத்தில் சில Flash Cards தமிழில் உள்ளது. அதற்க்கான கோடிங்கும் கீழே கொடுத்து இருப்பார்கள் அதை காப்பி செய்து வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    இங்கு எனக்கு தெரிந்த சில தளங்களை குறிப்பிட்டு உள்ளேன். தங்களுக்கு வேறு ஏதேனும் தளத்தை பற்றி தெரிந்தால் கமேண்டில் சொல்லலாம். 

    தொகுப்பு :மு.அஜ்மல் கான்.