Thursday, 15 December 2011

Prophet mohammad said this 1400 yrs ago !!


Prophet mohammad said this 1400 yrs ago! Assala-mu-Alaikum

Take a look.... Now this is told 1400yrs ago!!!!

*
Camels will no longer be used as a means of transport; * People will ride on saddles that aren't saddles (cars?) * The distance on earth will become short;
*
Horses will not be used in wars;
* Muslims will defeat the Byzantines which will end with the conquest of Constantinople Istanbul);
*
The Jews will gather again to live in Bilad Canaan;
*
Very tall buildings will be built;

*
The disappearance of knowledge and the appearance of ignorance, with much killing;

*
Adultery will become widespread, and the drinking of wine will become common;
*
The number of men will decrease and the number of women will increase until there are 50 women to be looked after by one man.
* Islam will become worn out like clothes are, until no one will know what fasting, prayer, charity and rituals are;
*
Allah will send a disease to fornicators that will have no cure (Aids?);

*
People will begin to believe in the stars and reject AL QADAR (THE DIVINE DECREE OF DESTINY);
*
Men will pass by people's graves and say: 'Would that I were in his place'; (large amount of sucidal deaths?)

*
The Euphrates will uncover a mountain of gold for which people will fight over (the river of Alfurat that lies near Syria );

*
Two large groups of people will fight one another, and there will be many casualties; they will both be following the same religion World War II?);
* Approximately 30 DAJJALS will appear, each one claiming to be the messenger of ALLAH;
*
Earthquakes will increase; * Time will pass quickly;
*
Afflictions will appear;

*
Killing will increase; * Wealth will increase;
*
Women will be wearing clothes but not wearing clothes
* THE PROPHET (saw) SAID: 'IF MY UMMAH BEARS 15 TRAITS (QUALITIES), TRIBULATION WILL FOLLOW IT.' (DAY OF JUDGEMENT) SOMEONE ASKED, 'WHAT ARE THEY O MESSENGER OF ALLAH?' HE (saw) SAID:
* When any gain is shared out only among the rich, with no benefit to the poor;
*
When a trust becomes a means of making profit;
*
When paying ZAKKAT becomes a burden;
* When voices are raised in the mosque;
*
When the leader of a people is the worst of them; when people treat a man with respect because what he may do;
*
When much wine is drunk; red wind or the earth swallow them, or to be transformed into animals.'
* 'IMRAN IBN HUSAYN SAID: 'THE PROPHET (AS) SAID, 'SOME PEOPLE OF THIS UMMAH WILL BE SWALLOWED BY THE EARTH, TRANSFORMED INTO ANIMALS, AND SOME WILL BE BOMBARDED WITH STONES'. ONE OF THE MUSLIMS ASKED, WHEN WILL THAT BE O MESSENGER Of ALLAH?' HE SAID, 'WHEN SINGERS AND MUSICAL INSTRUMENTS WILL BECOME POPULAR, AND MUCH
WINE IS DRUNK.'' THE GREATER SIGNS OF THE HOUR

The Quran will disappear in one night, even from the people's hearts, and no Ayah will be left on earth. (Some groups of old people will be left who will say: 'We heard of fathers' saying 'LAILLAHA ILLA ALLAH' so we repeat it);

திருமண வாழ்த்து என்ற பெயரால்!..

திருமண வாழ்த்து என்ற பெயரால்!..
 
*அல்லாஹ்வின் திருப்பெயரால்...* *திருமண வாழ்த்து என்ற பெயரால்!..*

 *திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் ‘நபிமார்களைப்போல்வாழ்க’ என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன்கூறிவருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர்.*

 *ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வஃபாரிஸா வஇப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வஸுலைஹா … இவர்களைப்போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்*.

*1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க !*

  A. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
  B. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக்கனியை உண்டதற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
 C. அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப்பட்டார்கள்.
 D. பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக்கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழவேண்டுமா ?*

 2. நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க !*

*A.( நூஹு(அலை) , லூத் (அலை) ஆகிய )இருவருடைய மனைவியரும் நமது இரு
நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைதூதர்களால்)அவ்வருவரையும் இறைவனி(ன் தண்டனையி)லிருந்து காப்பாற்ற முடியவில்லை. இருவரும் நரகிற் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது.(அல்குர்ஆன்: 66: 10)*

*B.இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது.*

*C.இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரகவாசி யாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப்பிறகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரக வாசியைப் போன்று
வாழ்க என வாழ்த்தலாமா ?*

 
 *3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க !*
 
*A.இப்றாஹீம் நபி – ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை
 வரை)குழந்தைப் பேறே இல்லாதிருந்தது.
எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர் வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி ) பிள்ளை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார். என அல்- குர்ஆன் : 11: 71, 72. கூறுகிறது .*

*B. வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத் தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா? எந்த தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்? ஆசையோடு எதிர்பர்க்கும் புதுமணத் தம்பதியரைஇப்படி வாழ்த்தலாமா?*

 
 *5. நபி யூஸுஃப் – ஸுலைஹா போல் வாழ்க!*

*A. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப்பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை.இந்தஸுலைஹா யார் ?

 
 B. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன்வந்தது எப்படி?

 
 C. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?
 
D. திருமறையே இவளை நடத்தை கெட்டவள் என வர்ணிக்கிறது. நடத்தை கெட்டவள் நபியின்
மனைவியாக முடியுமா?

 
E. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா ?

 
F. திருமணம் நடந்ததாக ஆதாரரமே இல்லாத ஒருவளை – ஒரு தம்பதியை – குறிப்பிட்டு வாழ்த்தலாமா ? இது முறையா ?

 
G. பல தீமைகளை தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு
 நபிக்கு மனைவிக்கவேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?

H. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப்பெண்ணாக
 உருமாற்றி திருமணம் செய்து
வைக்கவேண்டுமென்ற அவசியம் என்ன?

I. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயேஅறிவித்திருப்பானே?

 
J. அஹ்ஸனுல் கஸஸ் அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்?*

இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்சிகரமான மணவிழாவில் புதுத்தம்பதியரை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்ளவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும்
சிந்தித்துப்பார்க்கவேண்டும்?*

 *பாவமென்று தெரிந்தும் வீம்புக்காக இவற்றில் அடம்பிடிப்பதும் பெரும் பாவமல்லவா? இவையெல்லாம் சரிதானா என்று இன்னும் சிந்தித்துப் பார்க்காமலிருப்பது பத்தாம்
பசலித்தனமல்லவா ?*
   *தவறான ஃபத்வாக்கள்*ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ மர்ர்க்கத்தைப்பற்றி எதையும் துணிந்து எழுதுவது இன்று நாகரீகமாகிவிட்டது. தேசிய அளவில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஷாபானு, இம்ரானா போன்றவர்களின் செய்திகளை சமுதாயம் நன்கறியும்.*
 
 *தமிழகத்திலிருந்து நெடுங்காலமாக தொடர்ந்து வெளிவரும் மாத இதழ் ஒன்றில்‘;இஸ்லாமிய சட்ட விளக்கம்’ என்ற பெயரில் யூஸுஃப் நபி , ஸுலைஹாவை மணமுடித்திருந்தார்கள் என ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர், அதை நியாயப்படுத்தஇந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட மக்களால் அறியப்படாத‘ மஆரிபுல் குர்ஆன் ” என்னும் உருது கிதாபை ஆதாரமாககக் குறிப்பிட்டுள்ளார்கள்.* 
*இதற்கு வலுவூட்டும் ஆதாரரம் ஏதையேனும் அதில் குறிப்பிட்டுள்ளார்களா என்றால்
எதுவுமே இல்லை. குர்ஆன் , ஹதீஸுடைய விளக்கங்களோ அதனை உறுதிப்படுத்தும்
சான்றுகளோ குறிப்பிடப்படவில்லை. சில விரிவுரையாளர்கள் இப்படிஎழுதியுள்ளார்கள் என மொட்டையாக மேற்கோள் காட்டியுள்ளார்கள்.*

 *இறுதியில் யூஸுஃப் ஸுலைஹா போல் வாழ்த்தலாம் எனபத்வாவும்கொடுத்துள்ளார்கள்.*
*இதனை வரலாற்று ரீதியாக சற்று ஆராhய்ந்தாலே இதற்கு துளியும் ஆதாரம் இல்லை எனஎளிதில் புரிந்து கொள்ளலாம்.*

*இறை தூதர் நபி யூஸுஃப் (அலை) அவர்கள் வாழ்ந்த காலமோ மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர். அவர்கள் ஸுலைஹாவை மணமுடித்தார்கள் என்பதை குர்ஆனோ ஹதீஸோ எந்த செய்தியையும் குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட நூலோ,கல் வெட்டோ இல்லை. இமாம்கள் ஏவரேனும் இதுபற்றி எழுதியுள்ளார்களா என ஆராய்ந்த போதும் அப்படியும் இல்லை.*

*இறைவன் ஸூரா யூஸுஃபில் கூறுகிறான் :*
 *நபியே! இந்த குர்ஆனை ( நாம் வஹீ மூலம்) அறிவித்திருப்பதின் வாயிலாக மிக்க
 அழகான வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர்
அறியாதவராக இருந்தீர். (; அல்-குர்ஆன் 12 :13)*
 
 *அல்லாஹ்வின் தூதரே வஹீ வருவதற்கு முன்னர் இந்தச்செய்தியைப்பற்றி எதுவும்
தெரிந்திருக்கவில்லை என்று குர்ஆன்கூறும்போது , மற்றவர்களுக்கு குர்ஆன்,ஹதீஸ் ஆதாரமின்றி எப்படித் தெரிந்திருக்க முடியும். ?*

*நமக்கு அந்த துஆவில் வரும் நபி மார்களைப்பற்றித் தான் தெரியுமே தவிர அவர்களின்மனைவியருடன் நடத்திய இல்லற வாழ்வைப்பற்றி எதுவும் தெரியாது.
 
அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ இவர்களின் இல்லற வாழ்வு பற்றி எதுவும் அறிவிக்காத போது நாம்எவ்வாறு துணிந்து இது பற்றிக் கூறமுடியும் ?*

*இவையெல்லாம் புனித நபிமார்களைப்பற்றிப் புனையப்படும் கற்பனைகளல்லவா ?
பாவங்களல்லவா? நவூதுபில்வாஹ்! (அல்லாஹ் நம்மைக்காப்பானாக!)*

*ஓவ்வொரு நபிமார்களின் வாழ்வில் பின்பற்றப்படவேண்டியஎத்தனையோஅம்சங்களும், பாடங்களும் உள்ளன.அவற்றையெல்லாம் முன்மாதிரியாகக் கொள்ளாமல் குர்ஆனிலோ நபிமொழியிலோ கூறப்படாத எதையும் நாமாக் கற்பனை செய்து, ஆதாரமற்றசெய்திகளைவைத்து மர்க்கமாக்குவதும் முன்மாதிரியாகக் கொள்வதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவேஇல்லை.*

*எனவே நபி (ஸல்) அவர்கள் வாழ்தியவாறே நாமும் வாழ்த்தவேண்டும்;.
எப்படி வாழ்த்தவேண்டும் ? அவர்களே கற்றுத்தந்துள்ளார்கள்:-*

*‘பாரகல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீ கைர்’*
 *அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்களிலும்(சந்ததிகள் பெருகுமாறு) அருள் பொழிவானாக, நல்லறங்களில்உங்களிருவரையும்
ஒன்றிணைத்து (பெருவாழ்வு)வாழச்செய்வானாக.*
*அருட்செல்வமும் பொருட்செல்வமும் மக்கட்செல்வமும் ஒருங்கே பெற்று பெரு வாழ்வுவாழுமாறு வாழ்த்தும் இந்த அற்புத துஆவை விட்டு விட்டு சம்பிரதாயத்துக்காகவும், சடங்கிற்காகவும் பிடிவாதமாக திருமண வாழ்த்து என்ற பெயரில் இவர்கள் ஓதுவதும் வாழ்த்துவதும் நபி வழிக்கு மாற்றமாக இல்லையா?*

*சமுதாயமே ! சிந்திப்பீர்!! தெளிவு பெறுவீர்!!!*
Visit Us @ www.MumbaiHangOut.Org
M. Ajmal Khan

அயல்தேசத்து ஏழை!

அயல்தேசத்து ஏழை!
 
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து ஏழைகளின் ..
கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால்
வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
மரஉச்சியில் நின்று ...
தேன் கூட்டை கலைப்பவன் போல!

வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள்
பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள்
தினமும்
இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
'ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த
உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் !
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் 'ஒன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !
கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி
வறட்டு பிடிவாதங்கள் !
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் "ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒ'ரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
'ஒரு
கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;!
" இறுதிநாள் " நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு...
முதல் பார்வை...
முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?

'ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின்
திடீர்மறைவு ...
இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...

மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!






 

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!


கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!


நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.
கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.
3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-


2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..
4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.


நன்றி: ரபீக்.H
chittarkottai.com
1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

Wednesday, 14 December 2011

முதல் இரவு (First Nigh).....

முதல் இரவு (First Nigh).....

உலகில் பருவ வயதைத் தாண்டிய, சிந்திக்க தெரிந்த எல்லோறும் ஒரு முதல் இரவுக்காக காத்திருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உலக வாழ்க்கையில் ஒரே ஒரு உதலிரவே கிடைக்கின்றன, பலர் அந்த முதலிரவை திருமணத்திற்கு முன்னர் அப்படி, இப்படி என்று கற்பனை பண்ணிக்கொன்று அந்த நாளைக்காக காத்திருக்கின்றார்கள்,இன்றைய இளைஞர் யுவதிகள் அனைவரும் உடலுரவுக் கலையைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மஞ்சள் பத்திரிகைகள்,ஆபாச திரைப்படங்கள், ஆபாச இணையத்தள பக்கங்கள், ஆபாச கல்வித்திட்டங்கள், மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்வதனால் அந்த விடயத்தில் உசாராக நடைபோட எத்தனிக்கின்றார்கள்,இந்த விடயத்தில் நகர் புற பெண்கள் உசாராக இருந்தாலும் கிராமத்துப் பெண்கள் மற்றும் அமைதியான ஒழுக்கமான சூழலில் வாழும் இளம் பெண்களும் அவர்களுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நான்கு குணங்களையும் முறையே கொண்டவர்களாக இருக்க முனைவதனால் இதில் கொஞ்சம் மந்த கெதிதான்.எவ்வளவு தான் இத்துரையில் உசாராக இருந்தாலும் அந்த நாள் நெருங்கும் போது எல்லா இளைஞர், யுவதிகளும் டிம்மாகிவிடுகின்றார்கள்.

சிலர் தாங்கள் பல வருடங்களாக காத்திருந்த, கற்பனை பண்ணியவாறு அந்த முதலிரவை ஒரெ முரையில் காம உணர்ச்சிகளையும் காமப் பசியையும் தீர்த்துக்கொள்ளலாம் என நினைக்கின்றனர், இது மிகவும் தவரானதாகும்.
முதலிரவை அடையும் புதிய தன்பதியினர், குறிப்பாக மனமகன் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

முதலிரவு என்றால் கனவனுக்கும் மனைவிக்குமிடையில் உடலுறவு விடயத்தில் மட்டும் தான் என்பது தவராகும்.

இது மொத்த குடும்ப வாழ்க்கையின் முதலிரவாகும். அதில் காம ஆசையை பகிர்ந்து கொள்வது என்பது அதன் ஒரு பகுதி அல்லது ஒரு அங்கமாகும்,
இந்த இரவில் பல கட்ட அம்சங்கள் நடந்தேர வேண்டும், குறிப்பாக,
இந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து உண்ணுவது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் முதல் உணவு,இந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து புனனகிப்பது அவர்களின் வாழ்க்கையின் முதல் புன்னகை,அந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து முத்தமிடுவது அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்தை அன்பாய் ஆரம்பிக்க செய்யும் ஒரு அன்சமாகும்.

அந்த முதலிரவில் பழைய சில நினைவுகளை, சம்பவங்களை ஞாபகமூட்டல் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும்,இவ்வாரு பல கட்ட வேலைகள் இருக்கின்றன. அவைகளில்முதலில் இருவரும் இணைந்து இரவு உணவை இன்பமாக பரிமாறிக்கொள்ளல்,
இரண்டாவதாக,
பழைய, முந்திய சில சம்பவங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு வந்து இருவரும் சுதந்திரமாக புன்னகைத்துக் கொள்ளல்,சில நேரம் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில், ஒரே ஊரில் உள்ளவர்களாக இருக்கலாம்,ஒரே சம்பவத்தில் தொடர்புபட்டவர்களாக இருக்கலாம்,இந்த சில மறக்க முடியா, சிறிக்கத்தக்க கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போது இருவருடைய உள்ளங்களிலும் உடல்களிளும் தேங்கிக்கிடக்கும் ஒரு வித பயம், அச்சம் மெது மெதுவாக நீங்க ஆரம்பிக்கும்,
அந்த புன்னகைகளுடன் நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த முக்கியமான கட்டத்திற்கு இருவரும் எத்த முடியும்.

காம உணர்வுகளையும் உடல் பசியையும் தணிக்கின்ற அந்த பொன்னான சந்தர்ப்பம் இது,இதன் போது நிதானமாக நடந்து கொண்டால் முதலிரவின் இன்பத்தை, அதன் சுவர்க்கத்தை அடைந்து கொள்ள முடியும்.

இருவரும் இணைந்து கலவியில் இன்பமடைந்து ஓய்வு பெற்று விட்டு, அனுவவித்த இன்பங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அதே நேரம் இருவரும் உடலுரவில் இணைந்து கொள்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்:

உடலுறவு கொள்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆ:
"பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்ன ஷ் ஷைத்தான வ ஜன்னிப்னிஸ் ஷைத்தான மா றசக்னா
"


அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

அதன் பொருள்: "அல்லாஹ்வின் பெயரால், இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கி வைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!"
அல்லாஹ்த் தா ஆலா திருமறையில் கூரும் போது:
“மேலும் அவர்கள் எத்தகையோரென்றால், எங்கள் இரட்சகனே எங்கள் மனைவியர்களிடமிருந்தும், எங்கள் சந்ததியகர்களிடமிருந்தும் எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியைத் தந்தருள்வாயாக! அன்றியும், பயபக்தியுடையவர்களுக்கு எங்களை (நல்வழியில் நின்று அதன்பால் அழைக்கும்) வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக என்று (பிராத்தித்துக்) கூறுவார்கள்." (அல் குர்ஆன் - 25: 74).


உடலுரவு முடிந்து உரங்கும் போது உளுச்செய்து கொண்டு உறங்க வேண்டும்,
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விடுவது பற்றிக் கேட்டார்கள், அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளுச்செய்யுங்கள்; உங்கள் பிற உருப்புக்களைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள் என்றார்கள்."

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி

இதே போன்ற ஒரு செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமயாகி) இருக்கும் போது உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத்தூய்மை (உளூ) செய்வது போன்று அங்கத்தூய்மை செய்வார்கள்." ஆதாரம்: முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூரினார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவிடம் பாலுறவு கொண்டு விட்டு பின்னர் மீண்டும் (உறவு கொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத்தூய்மை (உளூச்) செய்து கொள்ளட்டும்."
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) ஆதாரம்: முஸ்லிம்

முதலிரவு முடிந்து தூங்கிய தம்பதியினர் அதிகாலையில் எழுந்து கடமையான குளிப்பைக் குளித்து கடமையான சுபஹ் தொழுகைக்கு தயாரக வேண்டும்.

டிசம்பர் 25 பைபிளுக்கு முரணானது.... ? !!!

லகில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தினம் டிசம்பர் 25.
இயேசு கிறிஸ்து (ஈசா அலை) அவர்கள் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்ற ஒரு தவறான நம்பிக்கை, ஆனால் அதனை கிறிஸ்தவர்கள் புதிய, புத்தாண்டு கொண்டாட்டமாக அறிமுகப்படுத்தி கொண்டாடி வருகின்றனர்.
உண்மையில் பைபிளின் பக்கங்களை ஒரு தடவைக்கு பல தடவை புறட்டி படிக்கின்ற போது அதன் உண்மையை கவனிக்க முடிகின்றது.
பைபிளில் படித்த, படிக்கின்ற உண்மைகளை என்னுடன் மட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது, அது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்திற்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகத் தான் மாற்றங்கள் தேவை வலைப்பகுதி சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் பல செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது.
வருடத்தில் டிசம்பர் 25 வந்துவிட்டால் நத்தார் வாழ்த்துக்கள், (marry charismas, X’Mass ) என்று ஆங்காங்கே சத்தங்கள், வீடுகளுக்குள் ஆட்டுத் தொழுவங்களும் அலங்காரங்களும் என்று தொடர்கிறது உலகில் வாழும் கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கைப் போக்கு.....
கிறிஸ்தவ சமூகத்தை விட்டும் பைபிளை தூரப்படுத்தும் மதகுருமார்கள் (ரபாய்க்கள்) ஒரு புறமிருக்க, மறுபக்கம் பைபிளிய கட்டளை (Biblical commands) களை படித்து அதில் புதையுண்டிருக்கின்ற, நம்பிக்கைக்கு மாற்றமான பல செய்திகளை கிறிஸ்தவ அறிஞர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
Shocked by the Bible என்ற புத்தகத்தை வெளியிட்ட Joe Kovacs அவர் அதில் சொல்லும் சில செய்திகள் புத்தகத்தின் தலைப்புக் கேற்றாற் போல் அதிர்ச்சியை தருகிறது.
இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை மரணிக்கவில்லை என்பதை எடுத்துச் சொல்லும் அவர் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறக்கவில்லை என்பதையும் தெளிவாகச் சொல்லுகிறார்.
எல்லாக் காலங்களிலும் விடுமுறையாகக் கொண்டாடப்படும் தினத்தை மக்கள் தெரியாதிருப்பது ஆச்சரியமானது (It's amazing what people don't know about the most popular holiday of all time) என்று ஆச்சரியப்படுகிறார் Joe Kovacs.
உண்மையில் உலகில் வாழும் எல்லாக் கிறிஸ்தியர்களாலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் டிசம்பர் 25 பற்றி அதை கொண்டாடுகின்ற மக்கள் கவனம் செலுத்தாமை கவலைக்குரியதாகும்.

புனித பைபிள் முற்று முழுதாக கடவுள் வார்த்தை என்று நம்புகின்ற கிறிஸ்தவ மக்கள் அதன் போதனைகளை தான் பின்பற்றி நடக்கின்றோமா? என்பதில் கவனம் செலுத்தாமல் இருப்பது அல்லது தெரிந்து கொண்டு பரவாயில்லை என்று நடந்து கொள்வது பகிரங்க இரகசியமும் பைபிளுக்கு மாற்றமாக நடக்கும் செயலுமாகும்.
இறைமகனாக (God’s son), கடவுள் அவதாரமாக (Cardinal God),கடவுளாக (God) பூமியில் 33 வருடங்கள் வாழ்ந்த இயேசுக் கிறிஸ்து எப்போது பிறந்தார் என்பதை பைபிள் தெளிவாகச் சொல்லுகிறது.
ஆனால் அவரது பிறப்பை கொண்டாட வேண்டும் என்பதை சொல்லாமல் பைபிள் முழுமை பெற்றிருக்கிறது?
பைபிளில் அவரது பிறப்புப் பற்றி பார்க்க முடிகிறது.
அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.(லூக்கா 2:8  9)
And there were in the same country shepherds abiding in the field, keeping watch over their flock by night.  And, lo, the angel of the Lord came upon them, and the glory of the Lord shone round about them: and they were sore afraid. (Luke 2 : 8 -9)

அதே செய்தியை இன்னும் தெளிவாக கர்த்தரின் கடைசி வேத நூலாகிய அல் குர்ஆனில் இவ்வாறு பகருகின்றது
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது.
"நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்றுஅவர் கூறினார். "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான் என்று அவரதுகீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
 "பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்) (அல் குர்ஆன் 19 : 23  25)
And the pains of childbirth drove her to the trunk of a palmtree: She cried (in her anguish): "Ah! would that I had died before this! Would that I had been a thing forgotten and out of sight!"  But (a voice) cried to her from beneath the (palmtree): "Grieve not! for thy Lord hath provided a rivulet beneath thee; "And shake towards thyself the trunk of the palmtree: It will let fall fresh ripe dates upon thee’. (Holy Quran 19 : 23 – 25)

கர்த்தருடைய கடைசி வேதப் பிரதியிலும் அதற்கு முன்னர் நபி ஈசா (அலை) அவர்களுக்கு அனுப்பிய நூலிலும் ஈசா அலை அவர்களுடைய பிறப்பு ஒரு கோடைகாலத்தில் (mid summer) தான் இருந்தது என்பதை இன்றுவரை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த இரு வேத நூல்களும் சொல்லுவது போல அவர்ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தான் பிறந்திருக்க வேண்டும்.
தமிழில் புரட்டாசி அல்லது எபிரேய மாதமாகிய எத்தானிம் மாதத்திலும் அவரது பிறப்பை கணக்கெடுக்க வேண்டும்
உங்களுடைய பிறந்த தினத்தை மாற்றி வைத்தால் விரும்புவீர்களா?
இறைமகனாக, கடவுள் அவதாரமாக, கடவுளாக பூமியில் வாழ்ந்த இயேசு (ஈசா அலை) அவர்களுடைய மரணத்திற்குப் பின் அவர் எப்படி இந்த உலகில் பார்க்கப்பட வேண்டும், எதனை கொண்டாடப்பட வேண்டும் என்பதில் ஏன் கருத்து வேருபாடு?
பிறந்த நாளை கொண்டாடத்தான் வேண்டுமா?
அதற்காக அவர் பிறந்த கோடை காலைத்தை விட்டுவிட்டு நடுப்பனிக்காலத்தில் (Mid winter) அவரது பிறப்பைக் கொண்டாடுவது அவருக்குச் செய்யும் தவறு, அவரது கட்டளைகளுக்கு எதிரான ஒரு செயல் என்று சொன்னால் எந்த தவறும் இருக்காது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் கர்த்தருடை கடைசி வேத நூலாகிய அல் குர்ஆனின் பக்கம் திரும்ப வேண்டும், இஸ்லாம் அது தான் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையான மார்க்கமாகும்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

நான்கு இமாம்களுக்கும் இன்றைய மதுகபுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!!!

நான்கு இமாம்களுக்கும் இன்றைய மதுகபுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!!!

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ...இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை (நபியை) நாம் அனுப்பும் போதெல்லாம்‘எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம்.நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள்’என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.(அல் குர்'ஆன்:43:23)இன்று உலகில் வாழம் முஸ்லிம்களில் கணிசமானோர் நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுகின்றனர. இம்மத்ஹபுகளைத் தொகுத்தவர்கள் கண்ணியமிக்க இமாம்களான அபுஹனிபா,ஷாபிஈ, மாலிகி, ஹம்பலி, ஆகியோர்கள்தான் என்றும் நம்புகின்றனர்.இந் நம்பிக்கை முற்றிலும் தவறானதாகும். எவ்வாறு இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ, அதே போன்று மத்ஹபுகளுக்கும் நான்கு இமாம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இமாம்கள் மத்ஹபுகளைத் தொகுக்கவுமில்லை, தங்களை பின்பற்றுங்கள் என்று சொல்லவுமில்லை.. இவ்விமாம்கள் மீது கொண்ட அளவுகடந்த பக்தியினால் இவர்களின் மாணவர்களால் உருவாக்கப்பட்டவைகளே மத்ஹபுகள்.இவர்கள் மரணித்து பலநுறு ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்டவைகளே இன்று ஷாபிஈ மத்ஹபில் மார்க்கத்தீர்ப்பு வழங்கக்கூடிய (பத்வா) நூல்களான1.நூல் அல்மஜ்மூ ஷரஹுல் முஹத்தப் ஆசிரியர்: அபு ஸகரிய்யா முஹியித்திpன் இப்னு ஷரப் அன் நவவி பிறந்த வருடம்: ஹிஜ்ரி 631இறந்த வருடம்: ஹிஜ்ரி 676இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 427 வருடங்கள்2.நூல் பத்ஹுல் முயுன்ஆசிரியர்: ஸைனுத்திpன் இப்னு அப்துல் அஸிpஸ் அல்மலேபாரிஇமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நுpல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 7 நூற்றாண்டுகள்3.நூல் இஆனதுத் தாலிபின்ஆசிரியர் முஹம்மத் ஷதா அத்திம்யாதிபிறந்த வருடம்: ஹிஜ்ரி 1266இறந்த வருடம்: ஹிஜ்ரி 1302இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 1062 வருடங்கள்ஷாபிஈ (ரஹ்) அவர்களுடைய பெயரால் ‘ஷாபிஈ மத்ஹப் நூல்கள்’ என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.அதே போன்று இமாம் அபு ஹனிபா மரணித்து பலநூறு ஆண்டுகளுக்கு பின்னால் எழுதப்பட்டவைகளே ஹனபி மத்ஹபில் மார்க்கத்திpர்ப்பு வழங்கக்கூடிய (பத்வா)நூள்களான.நூல் துர்ருல் முக்தார்ஆசிரியர் பெயர்: முஹம்மது அலாவுதீன் ஹஸ்காபிபிறந்த வருடம் :ஹிஜ்ரி 1025இறந்த வருடம் :ஹிஜ்ரி 1088இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும்இடைப்பட்ட காலம் 900 ஆண்டுகள்.நூல் பதாவா ஆலம்கீரிஆசிரியரின் பெயர்:முகலாய மன்னர் அவ்ரங்கசீப் காலத்து உலமாக்கள்.எழுதப்பட்ட காலம் :ஹிஜ்ரி 1118இமாம் அபூஹனீபாவிற்கும் இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 975 ஆண்டுகள்நூல் :கன்ஜுத் தகாயிக்ஆசிரியரின் பெயர் :அபுல் பரக்கத் அன்னாசாபிஇறந்த வருடம் :ஹிஜ்ரி 710இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 560 ஆண்டுகள்நூல் ஹிதாயாஆசிரியரின் பெயர் :அலி பின் அபீபக்கர்பிறந்த வருடம் :ஹிஜ்ரி 511இறந்த வருடம் :ஹிஜ்ரி 593இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்.அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய பெயரால் ‘ஹனஃபி மத்ஹப் நூல்கள்’ என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.மேலும்.நான்கு இமாம்களும் தங்களைப் பின்பற்றுமாறு ஒருபோதும் கூறவுமில்லை மாறாக ...1.இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறுகிறார்கள்:எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால் ரசூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.ஆதாரம் : தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3 இ பக்கம் 15ஈகாழுல் ஹிமம் பக்கம் 100‘ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை’ என்று முஸ்லிம்கள் அனைவரும் ‘இஜ்மாவு’ செய்துள்ளனர்.ஆதாரம் : ஈகாழுல் ஹிமம் பக்கம் 682. இமாம் அபூஹனீபா(ரஹ்) கூறுகிறார்கள்:ஹதீஸ் சஹீஹாக (ஆதாரப் பூர்வமாக) கிடைக்கும் போது அதைப் பின்பற்றுவதே உனது கொள்கையாகும்.ஆதாரம் :- ஹாஷியா இப்னு ஆபிதீன். பாகம் 1இ பக்கம் 63ரஸ்முல் முப்தீ பாகம் 1இ பக்கம் 4ஈகாழுல் ஹிமம் பக்கம் 62எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம்’ என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை.ஆதாரம் :- அல்இன்திகா பக்கம் 1453. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :நான் (சில ேநரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான் எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் ெபாருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்!ஆதாரம் :- ஜாமிவு இப்னு அப்துல்பர் பாகம் 2இ பக்கம் 42.உஸுலுல் அஹ்காம்இ பாகம் 6இ பக்கம் 149ஈகாழுல் ஹிமம் இ பக்கம் 72.நபி(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்கத் தக்கவைகளும் உண்டு நபி(ஸல்) அவர்கள் சொல் மட்டுமே முற்றாக எடுக்கப்பட வேண்டியவை.ஆதாரம் : இர்ஷாதுஸ்ஸாலிக் பாகம் 1 பக்கம் 227ஜாமிவு இப்னு அப்துல் பர் பாகம் 2 பக்கம் 91.4. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள்:என்னையோ மாலிக் ஷாபீஈ அவ்ஸாயீ ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன் ஹதீஸிலிருந்து) நீயும் புரிந்து கொள்!ஆதாரம் : ஈகாழுல் ஹிமாம்இ பக்கம் 113.ஷாபி, ஹனபி மத்ஹப்களின் சட்டவிளக்க ஞானக் கடல்கள் என மத்ரஸாக்களில் வைத்து மாணவர்களுக்குப் போதிக்கப்படும் மேற்கூறப்பட்ட நுpற்களில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறையவே இருக்கின்றன. அல்லாஹ்வின் தெளிவான வசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் விட்டுவிட்டு மனிதர்கள் தம் கரங்களால் எழுதியவைகளை மார்க்கத் தீர்ப்புகள் என நம்பி செயல்படுபவர்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் பற்றி சிந்திக்க கடைமைப் பட்டுள்ளார்கள்முஸ்லீம்களே சிந்திப்பீர்களாக !

பெற்றோர்களே கவனம் – உஷார்!!!

பெற்றோர்களே கவனம் – உஷார்!!!

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல்.  வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல்.  தங்களின் பொறுப்பை மறந்து..,.   தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

SUBJECT #  01
இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்.....

சென்னை, அக். 25-
இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.

சமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர்.   குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி பிளாக் மெயில் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இதுவே பிளாக்மெயில் பேர் வழிகளுக்கு உரமிட்டது போல் ஆகி விடுகிறது. இப்படி பல விஷயங்ககள் அமுக்கப்படுவதால், இன்டர்நெட் குற்றவாளிகளை பிடிப்பது சைபர்கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த 10 வயது பள்ளிச்சிறுமி இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு வலையில் சிக்கி, பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்த சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது.   சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் அபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயதான இவள் நகரில் உள்ள பிரபல பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் பூரித்துப் போனார்கள்.

இவளது இ.மெயில் முகவரிக்கு தினமும் நிறைய மெசேஜ்கள் வந்தன. அந்த முகவரிக்கு இவளும் பதில் அனுப்புவாள்.   கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும், ஒரு சமயத்தில் அபியுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அந்த முகம் தெரியாத பெண்ணை அபி நண்பராக ஏற்றுக் கொண்டாள். இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர். இப்படியே தொடர்ந்து பழக்கம் சில நாளில் திசை மாறியது. நைசாக பேசி அபியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினாள்.
வெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள்.   ஆனால், இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை, மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது. இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும்.

மற்ற இணையத்தளங்களிலும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டார். இதனால் போலீசுக்கு செல்ல தயங்கினார். பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அபியின் பெற்றோர், தனியார் துப்பறியும் ஏஜென்சியை அணுகி விபரத்தை தெரிவித்தனர். அவர்கள் சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
இது பற்றி, தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இது போன்று நிறைய புகார்கள் எங்களிடம் வந்துள்ளன. பேஸ்புக்கில் முதியவர்கள் கூட இளையவர் போன்று தோற்றமளிக்கும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்களை ஏமாற்றுகின்றனர். நட்பு விலையில் விழச்செய்து பெண்களை பிளாக் மெயில் செய்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இ-பயங்கர வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெதர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர்.   ஆனால், இந்தியாவில் போலீசாருக்கு போதிய பயிற்சியும், நுட்பமும் இல்லாததால், சைபர் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இணைய தளத்தில் சாட்டிங்கில்  ஈடுபடுபவர்கள் குறிப்பாக பெண்கள் முன் ஜாக்கிரதையாக கையாண்டால், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும். வெளிநாடுகள் அல்லது தூரத்தில் இருக்கும் தெரிந்து நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில் மட்டுமே இ-மெயிலில் பேச வேண்டும். முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது, பின்பு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.

முகம் தெரியாதவர்களின் முகவரிக்கு எந்த சூழ்நிலையிலும் போட்டோவை அனுப்ப கூடாது. போட்டோவை வைத்து கூட மார்பிங்” முறையில் ஆபாசமாக சித்தரிக்க முடியும் எச்சரிக்கை மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
http://www.maalaimalar.com/2011/10/25120839/internet-friendship-girl-stude.html

SUBJECT #  02


1,வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>>   DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>> லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >>  பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.  கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!! ·
       
மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.  யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம்கார்டுகள்உபயோகிக்கிறார்கள். ·
       மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?·         தனி அறையில் இருந்து T.V  யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.·

      கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள். ·         இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்... என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா? 

என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல்.  வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல்.  தங்களின் பொறுப்பை மறந்து..,.   தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

உடலில் என்ன, என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !


உடலில் என்ன, என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !



கண்கள்

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.


டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.


கண் இமைகளில் வலி


என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.


டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்




என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.




டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.




கண்கள் உலர்ந்து போவது.




என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.




டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.


சருமம்தோலில் தடிப்புகள் ஏற்படுதல்


என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.


டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.




முகம் வீக்கமாக இருப்பது




என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.




டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.




தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.




டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.




பாதம்





கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்


என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.




டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.




பாதம் மட்டும் மரத்துப் போதல்




என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்




என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.




டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.




கைகள்


சிவந்த உள்ளங்கை




என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.




டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.




வெளுத்த நகங்கள்




என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!




ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.




டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.




விரல் முட்டிகளில் வலி




என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.




டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.




நகங்களில் குழி விழுதல்




என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.




டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.




வாய்







ஈறுகளில் இரத்தம் வடிதல்.




என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.




டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.




சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்




என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.




டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.




வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.




என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.




டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.


நன்றி .குமுதம் சினேகிதி

இஸ்லாத்தின் good குணங்கள்.......

இஸ்லாத்தின் good குணங்கள்.......

1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?
பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.
(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)
சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?தந்தையின் திருப்தி :இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.
(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.
தாய்க்கு நன்மை செய்வது :
இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,
மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)
பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக...

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)

தீய குணங்கள்

1 . தற்பெருமை(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)
நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 . கொடுமைஅநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 . கோபம்(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5. பொய்எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)
சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)

6. கெட்டவற்றை பேசுதல்எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. இரட்டை வேடம் போடுதல்மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8. பாரபட்சம் காட்டுதல்நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9. வரம்பை மீறிய புகழ்ச்சி – நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)

10. பரிகாசம்முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. வாக்குறுதி மீறல்வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)
நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)

12. சண்டைஅல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. குறை கூறல்குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)
இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. பொறாமைநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)
15. கெட்ட பார்வை(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)
கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)
செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)

நற் குணங்கள்
1. நிதானம்இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)
உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)
2. எளிமைநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, ‘எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.’ (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.
நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)

3. தூய்மைநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)
(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்
உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

5. நாவடக்கம்இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)
எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)

6. அன்பாக பேசுதல்கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7. பிறருக்கு உதவி புரிதல்நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)

8. உண்மை பேசுதல்ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)
விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

9. நன்றி செலுத்துதல்மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)

10. வெட்கப்படுதல்திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)

11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)
12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி

13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)
தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்