Saturday, 1 September 2012

முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள்-ஒரு சிறப்பு பார்வை..



வினை தீர்ப்பான் என்று இந்து நண்பர்களால் நம்பப்படுகின்ற வினாயகரின் பெயரால் - கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. 
எளிமைக்குப் பெயர் பெற்ற கடவுளாகச் சொல்லப் படும் இவர்,தாழ்த்தப்பட்ட பிற்படுத்தபட்டவ்ர்களின் தரிசனத்துக்கு எட்டாத'வந்தேறி'தெய்வங்களை போன்றவர் அல்ல. 'சாமான்யனின் தெய்வமாக'ஆலமரவேப்பமர நிழலிலும் மற்றும் ஆத்தங்கரைகளிலும் வீற்றிருக்கும் 'புள்ளையாரைமுன்வைத்து முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகின்றன.
முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் மாட்டுச் சாணம் அல்லது களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ வீசி எறிவர். வினாயகர் சதுர்த்தி என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் கொழுக்கட்டை கிடைக்கும் என்பதுதான்.
இன்றோதமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.
சுதந்திர போராட்டத்தின் போதுபாலகங்காதர திலகர்விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி ஹிந்து-முஸ்லிம்களை ஒன்றிணைத்து,அவர்களிடையே நாட்டுப் பற்றை கொண்டுவர முயன்ற போதுஅதில் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுவதுண்டு.ஆனால்இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு - தங்களின் இருப்பையும் இந்திய முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்ட மதவெறியர்களின் கையில் அப்பாவி வினாயகரும் 'துருப்பு சீட்டாகசிக்கிக் கொண்டார்.
முஸ்லிம்களுக்கு எதிரான பகையை வளர்ப்பதற்கா எந்தவாய்ப்பையும் தவற விடாத ஹிந்துத்வ சக்திகள்கோட்ஸே என்ற சித்பவன பிராமனனால் மஹாத்மா காந்திபடுகொலை செய்யப்பட்டபோது அதைத் திரித்து, "ஒரு முஸ்லிம்தான் காந்தியை படுகொலை செய்தான்" என்று வதந்தி பரப்பினார்கள்அந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து தென்காசியில்தங்களது சொந்த இந்து முன்னணிஅலுவலகத்தில் 'வெடிகுண்டுவைத்துவிட்டுப் பழியை அப்பாவி முஸ்லிம்கள் தலையில் போட்டுக் கலவரம் செய்ய முயன்று -இறுதியில் போலீசில் 'வகையாக சிக்கிமூக்கை உடைத்துக் கொண்டது.
வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்வைத்து இந்த ஆண்டு சங்பரிவார் தனது கலவரத் திட்டத்தை முத்துப்பேட்டைதிருவிதாங்கோட்டை,தக்கலைமேட்டுப்பாளையம்கோயம்புத்தூர் போன்ற இடங்களில்வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
'இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்துக் கடவுளர்களை தூக்கிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் "முஸ்லிம்களின் வசிப்பிடங்களின் வழியாக பன்றி போகலாம்கழுதை போகலாம்நாய் போகலாம் ஆனால் 'புள்ளையர் சிலைபோகக்கூடாதா?" என்று பொது மக்களை உசுப்பேத்தி விட்டுவழக்கமாகச் செல்லும் வழியை விட்டுவிட்டு முஸ்லிம்கள் வசிப்பிடம் வழியாகத்தான் புள்ளையாரைத்தூக்கிச் செல்லவேண்டும் என்று மக்களைத் தூண்டி வருகிறார்கள்.அந்தப் பொய்களை கேட்கிற எவருக்கும் இஸ்லாமியர்கள் வினாயகரை எதிர்க்கிறார்களே என்றே எண்ணத் தோன்றும்.
முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் வழியே பன்றிகள் போகும்போது,"பாபரின் வாரிசுகளேபாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" என்று உறுமுவது கிடையாதுநாய்கள் போகும்போது, "துலுக்கனை வெட்டு;துலுக்கச்சியக் கட்டு" என்று குரைப்பது கிடையாது. கழுதைகள் போகும்போது, "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" என்று கனைப்பது கிடையாதுஆனால் 'பக்த கோடிகளாகவேஷமிட்டு, 'சோம பானம்' 'சுரா பானம்அருந்திசுய நினைவில்லாமல் கூலிக்கு மாரடிக்கிற 'கேடிகள்போடுகிற இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்கள்தாம்முஸ்லிம்களைத் தங்களது வசிப்பிடங்களின் வழியாக 'வினாயகர் ஊர்வலம்செல்வதை எதிர்க்கத் தூண்டுகிறது.
இஸ்லாமியர்களின் எதிர்ப்பு வினாயகருக்கோ ஹிந்து சகோதரர்களுக்கோ எதிரானது அல்ல'வினாயகர் ஊர்வலம்என்ற போர்வையில் கலவரம் விளைவித்துஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைத்துமுஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடத் திட்டம் போடும் ஹிந்துத்வ மதவெறி கும்பலுக்கு மட்டும் எதிரானது என்பதை மாற்றுமதச் சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும்ஆனால்இதையும் வழக்கம்போல் திசை திருப்பி பொதுமக்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை வளர்கிறார்கள்
வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் மந்திரங்கள் சொல்லுவதில்லைஅதற்கு இரண்டு காரணங்கள்ஒன்று தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது;அதற்குக் காரணம் உயர்சாதிக்கு மட்டும் சொல்வதற்குச் சொந்தமானமந்திரத்தைப் பிறர் காதால் கேட்க கூடாது; நாவால் உச்சரிக்க கூடாது, மீறினால் ‘ஈயம் காய்ச்சி ஊற்றப்படும்’ என்ற 'மனுதர்மத்தின்' அன்பானமிரட்டல்தான்.
ஹிந்து தர்மப்படி 'சூத்திரன்' 'மிலேச்சன்என்ற முத்திரைகளோடு கோவிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களின் கைகளிள் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக 'சிலையை'த் திணிக்கிறது ஹிந்துத்வா.
வேதங்களால்தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் தற்காலிகமாக 'ஹிந்துஎன்று முத்திரை குத்தி,முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா.
சாதி வேறுபாடு பாராட்டும் இந்துத்வாவின் இரட்டை வேடம் மக்கள் அறியாதது அன்றுஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோது பின்னங்கால் பிடரியில் இடிபட,மூச்சு முட்ட 'ஹை கோர்ட்' 'சுப்ரீம் கோர்ட்என்று அலைந்து -திரிந்து தடை வாங்கியது - ஹிந்துத்வ கும்பல்தான்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்து ஆதிக்கவாத சக்திகள் அத்துமீறும் போதெல்லாம் வாயையும் 'மற்றதையும்பொத்திக்கொண்டு - காஷ்மீர் உயர் சாதி பண்டிட்களுக்காக 'குய்யோமுறையோஎன்று ஒப்பாரி வைப்பதும் ஹிந்துத்வ கும்பல்தான்.
ஒவ்வொரு வருடமும் வினாயகர் ஊர்வலத்தின் போது பதட்டம்-கலவரம் ஏற்பட இத்தகைய கோஷங்கள்தான் காரணம் என்று - 'ஸ்காட்லாந்துபோலிசுக்கு இணையாகக் கருதப்படும் தமிழகக் காவல் துறைக்குத் தெரியாதா?
வினாயகர் சிலை கரைக்கப்படுவதால் நீர் நிலைகளில் தேக்கங்களில்,ஆறு குளங்களில் ஏற்படும் மாசுகளைப் பற்றி கவலைப்படும் மத்திய-மாநில அரசுகள் - ஊர்வலம் மூலம் ஏற்படும் மதக்கலவரம் பற்றி கவலைப்படாது ஏன்?
நீர் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக - கரைக்கப்படும் சிலைகள் செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைப் பற்றிய விதிமுறைகளில் காட்டப்படும் அக்கறையில் சிறிதுகூட ஊர்வலத்தால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் நலனில் காட்டப்படாதது ஏன்?
சட்டமும் காவல் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? இழவுத் துறையாகிப் போன உளவுத்துறை போல் செயலிழந்து விட்டதா?அமைதியாக நடக்க வெண்டிய ஊர்வலத்தை - பதட்டம் நிறைந்ததாக மாற்றும் கயவர்கள் யார் என்று காவல் துறைக்குத் தெரியாதாடிசம்பர் ஆறை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம்களைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையில் சிறிது கூட'ஹிந்துத்வவினாயகர் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது காட்டாதது ஏன்?
பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வுகள் வேண்டி 'பதட்டம்நிறைந்த ஊர்களில் அனைத்து மதக்கூட்டம் போட்டும் ஹிந்துத்வ வன்முறையாளர்களின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.அதனால் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களை நெறிபடுத்த சில வரைமுறைகளை அரசும்-காவல் துறையும் எதிர்காலத்தில் செய்யவேண்டும்:
  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.
  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் ஆயுதங்கள்வெடிகுண்டுகள் போன்றவற்றைப் பதுக்கி வைத்திருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.
  • முஸ்லிம்களின் வசிப்பிடங்கள வழியாக செல்லும் ஊர்வலங்களை'வீடியோமூலம் படம்பிடிக்க வேண்டும்.
  • வெளியூர்காரர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்வதை அனுமதிக்கக்கூடாது.
  • ஊர்வலத்தின் போது முழங்குவதற்கான கோஷங்களைக் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும்அனுமதிக்கப்படாத கோஷங்களை எழுப்புவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவற்றைச் செய்யத் தவறினால் ஊர்வலத்தின்போது ஏற்படும் வன்முறைபொருள் நஷடம்உயிர் இழப்பு ஆகியவற்றிக்குக் காவல் துறையே பொறுப்பேற்க வேண்டும்கடமையைச் செய்ய காவல் துறை தவறினால்மத நல்லிணகத்திற்குக் கேடு விளைவிக்க விரும்பும் சக்திகளைக் கட்டுப்படுத்த மேற்கண்ட நெறிமுறைகளை வலியுறுத்தி,சமூக அக்கறையுள்ள அமைப்புகள் பொதுநல வழக்கு தொடர்ந்து அரசின் கவனத்தை திருப்ப வேண்டும்.

முதல் இரவில் முதலில் பால் ஏன்?-ஒரு தவகல்...

உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் பல வகைகள் உண்டு.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.

தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால் எளிதில் ஜீரணமாகாது.எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.


ஆட்டுப்பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால் பேதி அதிகமாகப் போகும். ஆனால் ஆட்டுப்பால் அதை கட்டுப்படுத்தும்! 

சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக் கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்தாக உள்ளது.

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து.
ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதனால் தான் நம் பெரியவர்கள் முதல் இரவில் பால் கொடுத்து அனுப்புகிறார்கள் போலும்.   வெள்ளை மனதுடன்  வெள்ளை நிறப் பாலை பகிர்ந்து கொள்ளும் போது அன்னோன்யத்தின் ஆரம்பம்!    

பால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். முதல் இரவிற்கான பலத்தையும் பெறலாம். தூக்கம் வராமல் தவிப்பர்களுக்குத் தான் பால் நல்ல தூக்க மருந்து.ஆகையால் தூக்கம் வரும் என பயப்படவேண்டியதில்லை! மேலும் சூடான பாலின் மேல் படரும் ஆடையை குடிக்கும் முன் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவேண்டுமாம்! பின்னால் இதற்கு தேவையிருந்தாலும் இருக்கலாமாம். ஒன்லி ஃபார் லூப்ரிக்கேஷன் பயன்பாட்டிற்குமட்டும்! புரிந்துகொள்ளுங்கள் இதற்கு மேல் விளக்கமுடியாது!!


பின்குறிப்பு: பாலில் அஷ்வகந்தா என்ற ஒரு சித்த மருந்தை கலந்து குடித்தால் குதிரையின் அதீத கனைப்பு இசை முதல் இரவின் அறைக்கு பிண்ணனி இசையாக இருக்குமாம்!!


நன்றி :Dr.எஸ். ராஜேந்திரன்.  DD CBFD
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

அரசியலில் கரை படியாத சுத்தமான கைக்கு சொந்தக்காரர் "கக்கன்"- ஒரு சிறப்பு பார்வை....


Photo: ..."கக்கன்" என்றொரு "புனிதர்"...


தற்போதைய சூழ்நிலையில் எத்தகையவர்களும் சூழ்நிலையால் தவறு செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதுவும் அரசியல் என்று எடுத்துக்கொண்டால் தற்போது உள்ளவர்கள் யாரும் யோக்கியமானவர்கள் கிடையாது என்பதை வெளிப்படையாகவே கூறலாம்.


தமிழ்நாட்டு அரசியல் என்று சொன்னால் அது சாக்கடையின் முடை நாற்றத்தை விட மோசமாக போய்க்கொண்டிருக்கிறதாய் தான் கூறவேண்டும்.

 
இந்த சூழ்நிலையில் நான் படித்த ஒரு கட்டுரையை இங்கு பதிவிடுவதில் பெருமிதம் அடைகிறேன். ஒரு புனிதர். மாசு மறுவற்ற எந்த ஒரு சுய லாபத்தை எதிர்பார்க்காமல் புகழின் உச்சிக்கு சென்றவர்.. அவரை நாம் மறந்திருக்கலாம்.. ஆனால் அவரின் செயல்களை நாடறியச் செய்வது நம் கடமை. அந்த வகையில் இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.



கக்கன் என்றொரு புனிதர்


இன்றைய இளைய தலைமுறையினருக்கு நம் பாரதத் திருநாட்டில், சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், பின்பும், அரசியல் வாழ்க்கையை தவமாய் எண்ணி வாழ்ந்த உத்தமர் கக்கன்.


"கக்கன்".. காலம் முற்றாக மறந்து விட்ட பெயர். மதுரை மேலூர் வட்டத்தில் "தும்பைப்பட்டி" என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டாகிறது. காமராஜரையே மறந்துவிட்ட காங்கிரஸ்காரர்கள் கக்கனையா நினைவில் நிறுத்தி போற்றப்போகிறார்கள்...? பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதி வகுப்பு வரை படித்து முடித்து பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.


சத்தியமூர்த்தி காமராஜரை தழுவிக் கொண்டது போல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.


காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனை தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.


பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்த கூரை கூட இல்லாத, பரம ஏழையாக, பேருந்தில் நின்ற படி பயணித்தார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.


மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்ற போது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனை போய் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, "வேண்டாம்" என்று மறுத்து விட்டார். "உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்" என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், "நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி" என்று கைகூப்பினார் கக்கன்.


மனிதப் புனிதர் கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாக தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்த போதும் தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.
 

இன்று அந்த இடம் ஒரு கோடிக்கு மேல் பெறும். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது. அவருக்குத் தனியாக ஒரு சமாதி வைக்கவில்லை. இன்று கக்கனை யார் நினைக்கிறார்கள்..? 

அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்டோர் இனத்தில் பிறந்து தான்... அதுவும் தோட்டி மகனாகப் பிறந்தது தான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்னும் வர்ணாசிரம அகராதியில், அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். 

புடம் போட்ட பத்தரை மாற்றுத் தங்கம், மனிதரில் புனிதர், அரசியலில் கரை படியாத சுத்தமான கைக்கு சொந்தக்காரர், எளிமையின் இலக்கணம் கக்கனை விட உயர்ந்தவர்கள் தமிழகத்தில் இதுவரை எவருமில்லை. இனியும் பிறக்கப் போவதும் இல்லை. இது சத்தியம்...!!!!




என்றும் அன்புடன்,
மு.மன்சூர் அலி...



(இது என்னுடைய சொந்தக் கட்டுரை இல்லை..எனக்கு இ-மெயில் மூலம் வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். பாராட்டுக்களும், புகழுரைகளும் கட்டுரையாளரையே சாரும்.)


The Great Thanks To: http://www.thangampalani.com
முன்னுரை : 
                        தற்போதைய சூழ்நிலையில் எத்தகையவர்களும் சூழ்நிலையால் தவறு செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதுவும் அரசியல் என்று எடுத்துக்கொண்டால் தற்போது உள்ளவர்கள் யாரும் யோக்கியமானவர்கள் கிடையாது என்பதை வெளிப்படையாகவே கூறலாம்.

தமிழ்நாட்டு அரசியல் என்று சொன்னால் அது சாக்கடையின் முடை நாற்றத்தை விட மோசமாக போய்க்கொண்டிருக்கிறதாய் தான் கூறவேண்டும்.


இந்த சூழ்நிலையில் நான் படித்த ஒரு கட்டுரைகளை தொகுத்து இங்கு பதிவிடுவதில் பெருமிதம் அடைகிறேன். ஒரு புனிதர். மாசு மறுவற்ற எந்த ஒரு சுய லாபத்தை எதிர்பார்க்காமல் புகழின் உச்சிக்கு சென்றவர்.. அவரை நாம் மறந்திருக்கலாம்.. ஆனால் அவரின் செயல்களை நாடறியச் செய்வது நம் கடமை. அந்த வகையில் இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.



கக்கன் என்றொரு புனிதர்...


இன்றைய இளைய தலைமுறையினருக்கு நம் பாரதத் திருநாட்டில், சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், பின்பும், அரசியல் வாழ்க்கையை தவமாய் எண்ணி வாழ்ந்த உத்தமர் கக்கன்.


"கக்கன்".. காலம் முற்றாக மறந்து விட்ட பெயர். மதுரை மேலூர் வட்டத்தில் "தும்பைப்பட்டி" என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டாகிறது. காமராஜரையே மறந்துவிட்ட காங்கிரஸ்காரர்கள் கக்கனையா நினைவில் நிறுத்தி போற்றப்போகிறார்கள்...? பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதி வகுப்பு வரை படித்து முடித்து பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.


சத்தியமூர்த்தி காமராஜரை தழுவிக் கொண்டது போல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.


காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனை தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.


பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்த கூரை கூட இல்லாத, பரம ஏழையாக, பேருந்தில் நின்ற படி பயணித்தார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.


மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்ற போது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனை போய் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, "வேண்டாம்" என்று மறுத்து விட்டார். "உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்" என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், "நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி" என்று கைகூப்பினார் கக்கன்.

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் [கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவாசாயப் பல்கலைக் கழகங்கள் மதராசு மகாணத்தில் துவக்கப்பட்டன.மனிதப் புனிதர் கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாக தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்த போதும் தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

இன்று அந்த இடம் ஒரு கோடிக்கு மேல் பெறும். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது. அவருக்குத் தனியாக ஒரு சமாதி வைக்கவில்லை. இன்று கக்கனை யார் நினைக்கிறார்கள்..?

அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்டோர் இனத்தில் பிறந்து தான்... அதுவும் தோட்டி மகனாகப் பிறந்தது தான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்னும் வர்ணாசிரம அகராதியில், அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். 

முடிவுரை :
                இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.புடம் போட்ட பத்தரை மாற்றுத் தங்கம், மனிதரில் புனிதர், அரசியலில் கரை படியாத சுத்தமான கைக்கு சொந்தக்காரர், எளிமையின் இலக்கணம் கக்கனை விட உயர்ந்தவர்கள் தமிழகத்தில் இதுவரை எவருமில்லை. இனியும் பிறக்கப் போவதும் இல்லை. இது சத்தியம்...!!!!


நன்றி :தமிழ்  விக்கிப்பீடியா,தங்கம்பழனி,ஈகறை.
ஆக்கம் :மு. அஜ்மல் கான்.

நீங்கள் நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்! -.ஒரு விழிப்புணர்வு ஆய்வு கட்டுரை...



முன்னுரை:
           சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.

ஆவணங்கள் தொடர்பான சட்டங்கள் ஏன்?
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.    இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் 

விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்
பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்
போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது
 தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற
விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது 
மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள்   தெரிந்து 
கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து 
கொள்ளலாம். 

அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண்  (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல
கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.
அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்.

1. பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்
பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)
அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.
பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம்
இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின்
உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய்
பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில்
குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா
எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

அ' பதிவேடு ('A' Register) :
இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு
(தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB -Field Measurement Book{Land Record Survey}) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச்
சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய
வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில்
அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும்
வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக
இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண்
முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி 4.
புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.
Land document
01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்
படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து
விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு
செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த
முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்
இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை  நடைமுறைக்கு வந்தது.

இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம்
எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண
எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால்
குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.

நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன்
முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும்
1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும். 
சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.


பதிவு செய்யும் முறை:
நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்
அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை  பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல்  செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க  முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு  மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம். 

இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப்  பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய  வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக  செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற  விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும். 

பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து  (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது  சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம்  வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு
பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம்
சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம்
இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.
சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள 
அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு
  கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய  பதிவுக் 
 கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின்  புகைப்படங்கள்
 முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய  கையொப்பம்,
முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல்  
சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன்  
பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர்  மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர்  பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு,  இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக்  கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால்,  இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க
வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக
இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம்
செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை
சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு
விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று
ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை  நிர்ணயம் செய்வார். 

Guide line value சரியாக இருக்கிறது என்று அவர்  முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது  அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம்  பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு  என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர்   அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது  அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம்  அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம். 

முடிவுரை :  
                      மேலே சொன்ன அனைத்து குறிப்புகளை மணதில் வைத்து கொண்டு நிலம் வீடுகளை வாங்கும்போது அவற்றை கடைபிடிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.