Saturday, 2 February 2013

கொள்ளு!!! லொள்ளு வாழ்க்கையில் கடைபிடிக்க இதுவும் ஒண்ணு ....



உணவே மருந்து, மருந்தே உணவு’ என்றது நம் பாரம்பரிய ரகசியம்... அதனை அச்சுப்பிசகாமல் மொழிபெயர்த்துக் கொண்டுபோய் ‘உணவு என்பது சுவைக்காக மட்டுமல்ல நோய் வராமல் தடுக்கவும்தான்’ என்று அரிதாரம் பூசிக்கொண்டு ஆங்கிலத்தில் functional foods என்று கூறும்போது நம் மனம் சட்டென்று ஏற்றுக்கொள்கிறது. 




இந்தியா முழுதும் பரவிக் காணப்படும் குத்துச்செடி வகையைச் சார்ந்தது. இதில் நாட்டுக் கொள்ளு, காட்டுக் கொள்ளு என இரு வகைகள் உள்ளன. இதில் கருமை, செம்மை, வெண்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இன்னும் ஒருவகை பேய்க்கொள்ளு என்று அழைக்கப்படுகிறது.
கொள்ளுவை ஒரு உணவாகவே நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தனர். இடைப்பட்ட காலத்தில் கொள்ளுவின் பயன்பாடு குறைந்து போனது. காரணம் கொள்ளுவில் உள்ள சத்துக்கள் பற்றி இடைக்கால மக்கள் தெரிந்துகொள்ளாமல் போனதுதான்.
கொள்ளுவை காணம் என்ற பெயரிலும் அழைக்கின்றனர்.

காஃபிக்குப் பதில் cornflakes, மதிய உணவுக்கு. burgerம் என்று வேகமாக வளர்ந்து வரும் கம்ப்யூட்டர் கலாச்சாரத்தில் இட்லியும், அரிசி சோறும் அந்நியன் ஆகிவிட்டது. அதிலும் சிறுதானியங்களின் மகத்துவத்தை சிறுமையாகவே கருதும் மேற்கத்திய மோகம் நம்மை இறுக்கமாக பற்றிக்கொண்டது.

தினை, அரிசி, கம்பு, சோளம்... என நீளும் இந்த சிறுதானியப் பட்டியலில் கொள்ளு என்ற தானியத்தை குதிரைக்கு மட்டுமே என பட்டா செய்துவிட்டோம். கொள்ளில் லோ கிளைசீமிக் தன்மையும் (low glycemic index), நார்ச் சத்துக்களும், நம்முடைய உடலுக்கு தினமும் தேவையான இரும்புச் சத்தும், புரதச் சத்தும், அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் அருமருந்தாகிய natural polyphenols உள்ளது.


தொப்பை குறைய கொள்ளு சாப்பிடுங்க..
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. 

மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.

அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

சளித் தொல்லை வந்தால் மூக்கை உறிஞ்சிக் கொண்டுமூலையில் படுத்துவிடவேண்டாம். இதற்கு எனக்கு தெரிந்தமுறைகளை சொல்கிறேன். அதை பயன்படுத்தி பயன்அடைந்தால் மகிழ்ச்சியே.
1. 
மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்துசாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!

2. 
அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில்முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி,தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!

3. 
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால்இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும்மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம்கிடைக்கும்

4. 
நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்குசுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

5. 
கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும்சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையானமருந்து.

6.
கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

7. 
தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்துசாப்பிட்டால் சளி குணமாகும்.

8. 
மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில்தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

9. 
வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுதுசின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால்சளி கரையும்.

10.
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள்நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில்வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம்பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

11. 
துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

12. 
சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம்தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்தபலனைத் தரும்.

13. 
ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறியநான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளைகாலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்

14. 
தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச்சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக்கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன்தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

15. 
சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒருஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்துவைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன்பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்லகுணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில்அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)

16. 
நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால்மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில்கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டுநாளில் சரியாகப்போயிரும்.


கொள்ளுவின் மருத்துவத் தன்மை!!

இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு
பெருத்தவனுக்கு கொள்ளைக் கொடு 

என்பது நம் முன்னோர்கள் வாக்கு. இதிலிருந்தே இதன் மருத்துவத் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.

குடல் வாதங் குன்மமுண்டாங் கொள்மருந்தோ நாசம்
அடலேறு பித்தமிக ஆகுங்-கடுகடுத்த
வாதநீ ரேற்றமொடு மன்னுகுளிர் காய்ச்சலும்போகுஞ்
சாதிநறுங் கொள்ளுக்குத் தான்(அகத்தியர் குணபாடம்)


வற்றிய உடம்பு தூணாம் வாதமும் பித்துங் குக்கி
சுற்றிய கிராணி குன்மஞ் சுரம்பல சுவாச காசம்
உற்றடர் கண்ணன் புண்ணோ டுறுபிணி யொழியும் வெப்பைப்
பெற்றிடுங் காணச் சாற்றாற் பெருஞ்சல தோடம் போம்


உடல் வலுப்பெற..

சிலர் நோய்வாய்ப்பட்டதாலும், சத்தான உணவுகள் கிடைக்காததாலும் நோஞ்சான் போல் காணப் படுவார்கள். இவர்கள் கொள்ளுவை வறுத்து கஞ்சியாகச் செய்து தினமும் மூன்று வேளையும் குடித்து வந்தால் உடல் நன்கு வலுப்பெறும், புத்துணர்வு பெறும். 

கொள்ளுவை அரிசியுடன் சேர்த்தும் கஞ்சி செய்யலாம். மேலும் கொள்ளுவை வறுத்து துவையலாகவும் பயன்படுத்தலாம். 

நன்கு பசியைத் தூண்ட..

சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தும் சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.

மலச்சிக்கல் தீர..

மலச்சிக்கல் என்பது ஒரு நோய் என்றால் சிரிப்பார்கள். மலச்சிக்கல், மனச்சிக்கல் இரண்டுமே நோய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகும். மனச்சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் தானாகவே வந்துவிடும். மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கலும் கூடவே வரும்.

இந்த மலச்சிக்கலைத் தீர்க்க கொள்ளு சிறந்த மருந்து. கொள்ளுவை சட்னியாகவோ கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

சிறுநீர் பெருக்க..

சிறுநீர் நன்கு பிரிந்தால்தான் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும். இரத்தம் சுத்தமடையும். 

சிறுநீரகச் செயல்பாட்டிற்கு கொள்ளு சிறந்த மருந்து. கொள்ளுவை தினமும் உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். 

இடுப்பு வலி மூட்டு வலி மாற..

இடுப்பு வலி, மூட்டு வலியால் அவதியுறுபவர்கள் கொள்ளுவுடன் பூண்டு, மிளகு சேர்த்து ரசம் செய்து அருந்தி வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி நீங்கும்.

பெண்களுக்கு..

நீண்ட நாட்களுக்கு மாதவிலக்கு வராமல் இருப்பதும், அதிகமான உதிரப்போக்கும் இருப்பதற்குக் காரணம் உடலில் வலு இல்லாமையே. இவர்கள் கொள்ளுவை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மேற்கண்ட தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.

கொள்ளுவில் புரதச் சத்து, கொழுப்பு சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சத்து தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன.

இருமல் சளி நீங்க..

1 பங்கு கொள்ளுக்கு 10 பங்கு நீர்விட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் இந்துப்பு சேர்த்து நன்றாகக் கடைந்து கொடுத்து வந்தால் இருமல், சளி நீங்கும்.

கொள்ளுவை அரைத்து வீக்கக் கட்டிகள் மேல் பூசி வந்தால் வீக்கம் குறையும்.


கொள்ளினால் செய்யப்பட்ட உணவுகள், அனைவரும் உண்ணும் அமிர்தமானாலும் கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சரி... கொள்ளு ரெசிபிக்களை எந்த பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென குழம்பவேண்டாம். உங்களுக்காக சில ரெசிபிக்கள்.....

கொள்ளு இரசம்..


கொள்ளு இரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.




Posted Image
பாட்டன் சொத்தாக காணிநிலம் வருதோ இல்லையோ, பரம்பரை வழியாக இந்த நீரிழிவு நோய் பலருக்கும் முப்பதுகளிலேயே வந்துவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கண்ட கண்ட மசாலாக்களைக் கொட்டித் தயாராகும் ஃபாஸ்ட் ஃபுட்டும், முறையான தூக்கமில்லாத உழைப்பும்தான்.
சர்க்கரை நோயாளிகள், பருமனான உடல் வாகு கொண்டவர்கள், அரிசிக்கு மாற்று என கோதுமையில் தவம் கிடப்பதைக் காட்டிலும், கம்பங் களியும் கொள்ளு ரசமும் வாரம் 1-2 நாட்கள் மாற்றிக் கொள்வது நல்லது. உடலை வளர்க்கும் முக்கிய அமினோ அமிலங்களை இயல்பாக உள்ளடக்கிய கொள்ளு போன்ற தானியங்கள், நமக்கு உணவாவது மட்டுமின்றி, நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்க்கும்.

ஆங்கிலத்தில் Longer the waist line. shorter the life line என்று மருத்துவத்துறை அச்சமூட்டும் இக்காலகட்டத்தில், கொள்ளினால் செய்யப்பட்ட கொள்ளு பருப்புப் பொடி, கொள்ளுச் சட்னி, கொள்ளு வடை ஆகியவை நம் உடல் எடையைக் குறைக்க நம் முன்னோர்கள் வகுத்த அருமையான ரெசிபீஸ் என்றே சொல்ல வேண்டும். உடல் எடையைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நம் பாக்கெட்டின் எடையை மட்டுமே குறைக்கின்றன. குண்டு உடம்பு இளைப்பதென்பது பலருக்கு பகல்கனவாகிவிட்ட சமயத்தில் கொள்ளினால் செய்யப்படும் உணவு வகைகள் need of the hour ஆகிவிட்டன. இன்று கல்லூரிப் பெண்கள் பலர் கலோரி கணக்குப் பார்த்து உண்ணும் கலாச்சாரத்தில்... கொள்ளு ரசம், கொள்ளுப் பருப்புப் பொடி ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

காலைக்கடன் என்று சொன்னவுடன்,அதனை தினசரி வெளியேற்றாவிட்டால் வட்டியுடன் சோதனை தரும் என அறியாமல் மலச்சிக்கலுடன் மல்யுத்தம் செய்வோர் நிறையப் பேர் உண்டு. கொள்ளில் உள்ள நார்ச் சத்துக்களால் சிரமமின்றி முழுமையாக மலத்தை வெளியேற்றுவது ஆரோக்கியத்தின் முதல் படி
.
Posted Image


கொள்ளு சூப் தயாரிக்கும் முறை:-
கொள்ளு - 2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தக்காளி - 1கொத்தமல்லித்தழை- சிறிது
கறிவேப்பிலை - சிறிது

இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லதுமிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.4கப் தண்ணீரில்கரைத்து,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள்பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி, தேவையானஅளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல்வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப்குடித்தால் சளி பிடிக்காது.

உடல் பருத்து (தொளதொளவென்று) தசை இறுக்கமில்லாமல் இருப்பவர்கள் கொள்ளுவை கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் தசைகள் இறுகி வலுப்பெறும். தேவையற்ற நீர் வெளியேறும். 

தவிர, கொள்ளு உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், குளிர்காலங்களுக்கு ஏற்ற உணவாகிறது. கொள்ளு ரசத்தினால் தொண்டையில் கட்டும் கோழை, சிறுநீரக கல்லடைப்பு போன்ற நோய்களுக்கு குட்பை சொல்லிவிடலாம்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, 1 February 2013

சிஃப்நெட் கடல் மீன்பிடி படிப்பு!! ஒரு சிறப்பு பார்வை..


சிஃப்நெட் வழங்கும் கடல் மீன்பிடி தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளை சென்னையிலும் படிக்கலாம்.

கடலில் மீன்பிடி கப்பல்களை இயக்குவதற்கும் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1963ம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது தற்போது, சிஃப்நெட் என்று அழைக்கப்படுகிறது.

 அதாவது, சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபிஷரிஸ், நாட்டிக்கல் அண்ட் என்ஜினீயரிங் டிரெயினிங் என்ற பெயரில் செயல்படுகிறது. சென்னை ராயபுரத்தில் 1968ம் ஆண்டிலும் விசாகப்பட்டினத்தில் 1981ம் ஆண்டிலும் சிப்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டில் கடல் மீன்பிடி கப்பல்களில் பணிபுரியும் ஸ்கிப்பர்கள், மேட்ஸ், என்ஜினியர்கள், என்ஜின் டிரைவர்கள் போன்ற பணிகளுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் ஒரே நிறுவனம் சிஃப்நெட்.
இங்கு பேச்சலர் ஆஃப் ஃபிஷரி சயின்ஸ் (நாட்டிக்கல் சயின்ஸ்) என்ற பி.எஃப்எஸ்சி நான்கு ஆண்டு படிப்பு உள்ளது. மீன்பிடி தொழில்நுட்பங்கள், மீன்பிடி கப்பல்களை இயக்குதல், நாட்டில்கல் சயின்ஸ் உள்ளிட்டவற்றை கற்றுத் தரும் படிப்பு. இது. பல்வேறு வகையான மீன்பிடிப்பு முறைகள், மீன்பிடி கப்பலை வடிவமைக்கும் முறை, நேவிகேஷன், என்ஜின்களை இயக்குதல், ஓசனோகிராபி மற்றும் மெரைன் மெட்ரியாலஜி, மீன் பிடித்தல், மீன்களைப் பதப்படுத்துதல்…இப்படி மீன்பிடி தொழில் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். அத்துடன் நேர்முகப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதாவது, கடல் மீன்பிடி கப்பலிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு கொச்சியில் உள்ள கொச்சின் யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பட்டங்களை வழங்கும். டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் அனுமதி பெற்ற படிப்பு இது.

இந்தப் படிப்பில் சேர என்ன படித்திருக்க வேண்டும்?
பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் மற்ற அறிவியல் பாடங்களில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று 17 வயது ஆகி இருக்க வேண்டும். அதேசமயம் 20 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. மெர்ச்செண்ட் ஷிப்பிங் விதிமுறைகளின்படி, விண்ணப்பிக்கும் மாணவர்கள் மருத்துவரீதியாக உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். நல்ல கண்பார்வையும் அவசியம்.

எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்?
நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். நுழைவுத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் இருக்கும். இந்த நுழைவுத் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. நுழைவுத் தேர்வுக்கு 50 சதவீத மதிப்பெண்களும் பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீத மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வுக்கு 10 சதவீத மதிப்பெண்களும் என்ற  அடிப்படையில் கணக்கிடப்பட்டு அதிலிருந்து சிறந்த மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத் தேர்வு ஜூன் 10ம் தேதியும் நேர்முகத் தேர்வு ஜூலை 16ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பைப் படிக்கக் கட்டணம் எவ்வளவு?
பி.எப்.எஸ்சி. படிப்பில் முதல் ஆண்டில் முதல் செமஸ்டருக்குக் கட்டணம் ரூ.23,515. இரண்டாவது செமஸ்டர் கட்டணம் ரூ.7,500. இரண்டு, மூன்று, நான்காம் ஆண்டுகளில் முதலாவது செமஸ்டர் கட்டணமாக ரூ.19,315ம், இரண்டாவது செமஸ்டர் கட்டணமாக ரூ.7,500 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டது என்பதால், இந்தப் படிப்பில் சேரும் போது கட்டணம் எவ்வளவு என்பதை சிஃப்நெட் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சிஃப்நெட் இணைய தளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. `Senior Administrative Officer, CIFNET’ என்ற பெயரில் இந்தத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ஜாதிச் சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். வயதுக்கான சான்றிதழ்களும் தேவை. சுயவிலாசமிட்ட இரண்டு கவர்களையும் (25செமீ x 11 செமீ) இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொச்சியில் உள்ள சிஃப்நெட் இயக்குநர் முகவரிக்கு மே 18ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த விரிவான விவரங்களை இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு என்ன வேலைவாய்ப்பு என்று கேட்கிறீர்களா? இங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மத்திய மீன்வள நிறுவனங்களிலும் மாநில மீன்வளத் துறைகளிலும் வேலையில் சேரலாம். தனியார் நிறுவனங்களிலும் மீன்பிடி கப்பல்களிலும் வேலை கிடைக்கும். பல்கலைக்கழகங்களிலும் வேலை கிடைப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. கடல் மீன்பிடி கப்பல்களில் பணி செய்ய ஆர்வம் உள்ள மாணவர்களா நீங்கள்? விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: www.cifnet.gov.in
தொழில் பயிற்சி படிப்புகள்..
சிஃப்நெட் கல்வி நிறுவனத்தின் கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் வெஸல் நேவிக்கேட்டர் (விஎன்சி), மெரைன் பிட்டர் (எம்எஃப்சி) ஆகிய படிப்புகளைப் படிக்கலாம். மத்திய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககத்தினால் கிராப்ட்ஸ்மேன் டிரெயினிங் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட படிப்புகள் இவை. இந்த இரண்டு படிப்புகளின் காலம் இரண்டு ஆண்டுகள். இந்தப் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.700 வீதம் உதவித் தொகை அளிக்கப்படும். தியரி மற்றும் பிராக்டிக்கல் வகுப்புகளுக்கு யூனிபார்ம் கட்டாயம் அணிய வேண்டும். வகுப்புகள் ஆங்கிலத்தில் நடைபெறும். மாணவர்கள் வளாகத்தில் தங்கிப் படிக்க வேண்டும்.
இந்தப் படிப்புகளில் சேர பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் கணிதத்திலும் அறிவியல் பாடத்திலும் தலா 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 வயது ஆனவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். 20 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். மாணவர்களுக்கு நல்ல பார்வை இருக்க வேண்டியது அவசியம். அத்துடன் உடற் தகுதியும் கருத்தில் கொள்ளப்படும்.
இந்தப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, தில்லி, புவனேஸ்வரம், மும்பை ஆகிய இடங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். நுழைவுத் தேர்வு ஜூன் 24ம் தேதி காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை நடைபெறுகிறது. கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.300. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150. கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள சிஃப்நெட் அலுவலகங்களில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு, `Senior Administrative Officer, CIFNET’ என்ற பெயரில் இந்தத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து ரூ.15 மதிப்புள்ள தபால் தலையுடன் கூடிய சுய விலாசமிட்ட கவரையும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை இணைய தளத்தில் டவுன்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து டிமாண்ட் டிராப்ட்டுடன் இணைத்து அனுப்பலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 21ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.