Saturday, 1 June 2013

கிரிக்கெட்டும் மனித சூதாட்டமும்!! ஒரு பார்வை....


உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லைபயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
அல்குர்ஆன் 6:32
விளையாட்டைக்குறிக்கும் SPORT என்ற ஆங்கிலச் சொல்லிற்கு OXFORD அகராதியில் NOT SERIOUSLY (முக்கியத்துவ மில்லாமல்)என்று பொருள் காணப்படுகிறது ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடும் வீரர்களும் பார்க்கும் ரசிகர்களும் வெறி கொண்ட வர்களாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது இன்று உலகமெங்கும் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் ஒரு விளையாட்டு கிரிக்கெட் ஆகும்.
இங்கிலாந்தில் குளிர் காலத்தில் குளிரைப்போக்கி உடலை சூடேற்றுவதற்காக ஒருவர் ஒரு பொருளைப் போடுவார் அதை மற்றொருவர் தட்டி விளையாடுவார் இது தான் காலப்போக்கில் கிரக்கெட் என்று சொல்லப்படுகிறது. குளிரைப் போக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு தற்போது முட்டாள் தனமாக சுட்டெரிக்கும் வெயிலில் மட்டை தட்டுகின்ற விளையாட்டாக மாறியிருக்கிறது.
சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் மூதறிஞர் ஒருவர் (ஜார்ஜ் பெர்னாட்ஷா) இவ்வாறு சொன்னார் “11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று. அந்த அளவிற்கு எவ்வித பயனற்ற ஒரு விளையாட்டு தான் கிரக்கெட் என்பது.
பெர்னாட்ஷா கூறியது என்னவோ இன்று நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கிறது பார்வையாளர் வீதம் 11 ஆயிரம் என்பது இன்று இலட்சம் மடங்காவது அதிகமாகி இருக்கும் அதாவது கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றவர்கள் குறைவுதான். ஆனால் இதை ஒரு சூதாட்டம்போல் வெறியோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் கூட்டத்திற்கு அளவே இல்லை எனலாம் இவ்விளையாட்டை பார்ப்போருக்கு உடல் ஆரோக்கியமோபண வரவோவேறு எந்தப்பலனுமோ கிடைப்பதில்லை.
ஆடக்கூடியவர்களுக்கும்அவர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடியவர்களுக்கும் தான் எல்லாவித பலனும்இலாபமும் ஏற்படுகிறதே தவிர நாட்டிற்கோ,நாட்டு மக்களுக்கோஅரசாங்கத்திற்கோ எவ்வித பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை.
மாறாக வெறியுணர்வு கிரிக்கெட் விளையாட்டின் ரசிகர்களிடத்தில் மிகைத்துக் காணப்படுகிறது இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடினால் சொல்லவேண்டிய அவசியமேயில்லை இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடப்பது போலவே சித்தரிக்கப்படுகிறது ஏதாவது ஒரு நாட்டு வீரர்கள் தோற்றுவிட்டால் அவர்களின் ரசிகர்கள் அவர்களை கேவலப்படுத்துவதும் அவர்களின் உருவபொம்மைகளை எரிப்பதும் அவர்களின் இல்லங்களை சேதப்படுத்துவதும் வெறித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.
இங்குள்ள சிலர் பாகிஸ்தான் ஜெயித்துவிட்டால்பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வழங்குதும் அது போன்று இந்தியா ஜெயித்து விட்டால்இந்து மத வெறியர்கள் பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வழங்குதும் வெறித்தனத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம்.
மேலும் தங்கள் நாடு தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பிரிவினர் கோவில்களில் பேட்ஸ்டம்புபந்து இவைகளை வைத்து பூஜைகள் செய்வதும் மற்றொரு பிரிவினர் தர்ஹாக்களில் பிரார்த்தனை செய்து ஃபாத்திஹா ஓதுவதும் மடத்தனத்தின் எல்லை என்று சொல்லலாம்.
ஓவ்வொரு வருடமும் IPL லில் கிரிக்கெட் வீரர்கள் மனித சூதாட்டத்திற்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வீரரையும் பல கோடிக்கணக்கில் பல விளம்பர நிறுவனங்களும்பல தொழிலதிபர்களும் ஏலம் எடுப்பதை கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
கடந்த IPL லில் லலித் மோடி மகா ஊழலில் சிக்கி தற்போது வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து வருகிறார் என்பது வேதனைக்குறிய விஷயம் கிரிக்கெட்ரசிகர்கள் தான் ஐயோ பாவம்.
உலகக்கோப்பை போட்டிகளில் கூட பல நாடுகளைச் சார்ந்த பல வீரர்கள் மேட்ச் பிக்சிங் என்று சொல்லப்படக்கூடிய சூதாட்டத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டு விளையாட்டிலிருந்தே தூக்கி எறியப்பட்ட தகவல்களை நாம் கேள்விப்படுகிறோம் அதற்கென்று பல சூதாட்டத்தரகர்களும் வேலை செய்வதை நாம் பார்க்கின்றோம்
தற்போது உள்ள HOT NEWS IPL சூதாட்டம்
நடந்து கொண்டிருக்கும் IPL லில் கூட சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் கையும் களவுமாக பிடிபட்டதை கண்கூடாகக் கண்டுவருகிறோம் இன்னும் பல வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் எவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதை பத்திரிக்கைள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன தங்கள் அணி தான் ஜெயிக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கும் ரசிகர்களுக்கு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்து ரசிகர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுவது எவ்விதத்தில் நியாயம் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டும் தங்களின் பணங்களை வீணடித்து ஏமாந்து போகிறார்கள் ரசிகர்கள் என்பது தான் உண்மை.
சூதாட்டத்தில் ஈடுபட்ட விரர்களுக்கு கடுமையான தண்டனையும் விளையாட்டிலிருந்தே அப்புறப்படுத்தவேண்டும் எனவும் கண்டனக்கனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இது தெரியாத அப்பாவி ரசிகர்கள் தங்களின் பொண்ணான நேரங்களை வீணடித்து தங்களின் அலுவல்களை விட்டு விட்டு அவர்கள் ஃபோர் சிக்ஸர் அடிக்கும் போது கரங்களைத் தட்டுவதிலும் அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் கழித்துக் கொண்டிருக்கின்றனர் அதனால் தங்களுக்கு என்ன லாபம் என்பதை சிந்தித்துப் பார்த்தார்களா?
      • சூதாட்டத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது
சூதாட்டத்தின் மூலம் ஷைத்தான் மக்களுக்கு மத்தியில் பகைமைத் தீயையும் வெறுப்புணர்வையும் தான் உண்டாக்குகிறான் என்பதை சமீபத்திய சூதாட்ட நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஈமான் கொண்டோரே! மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்.
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்;லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்,எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா?
அல்குர்ஆன் 5: 90, 91.
      • ஆபாசத்தின் உச்சகட்டம்
பொதுவாகவே இஸ்லாம் ஆபாசத்தை கடுமையாக எச்சரிக்கை செய்கிறது. ஆபாசம்தான் எல்லாத் தீமைகளுக்கும் ஆணி வேராக இருக்கின்றது அது விளையாட்டிலும் புகுந்து விட்டது என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக ஐ பி எல் கிரிக்கெட்டிலும் (சியர்ஸ் கேர்ள்ஸ்) நடன மங்கைகளின் அரை குறை ஆடையோடு ஆடும் நடனங்கள் பார்வையாளர்களை உள்ளம் கூச வைக்கிறது. ஆடை என்பது மானத்தை மறைப்பதாக இருக்கவேண்டும் ஆனால் இன்று மானம் காற்றில் பறக்கிற அளவிற்கு ஆடைகள் இருக்கின்றன .
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதை விட) மேலானது. இது அல்;லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவீர்களாக. அல்குர்ஆன் 7:26.
பெண்களிடத்தில் இயல்பாகவே இருக்கின்ற வெட்கம்நாணம் அகன்று விட்டது அதனால் தான் இது போன்ற அசிங்கங்கள் ஒழுக்கக் கேடுகள் விளையாட்டிலும் அரங்கேறுகின்றன.
நாணம் என்பது இறைநம்பிக்கையில் ஓரம்சம்
நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக் கொண்டிருந்தார். நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய் (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன) வெட்கத்தால் உனக்கு நஷ்டம் தான்” என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், “அவரைவிட்டுவிடு! நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்” என்றார்கள்.
புகாரி 6118.
நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
புகாரி 6119
மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்என்பதும்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
புகாரி 2484,6120.
      • நேர,கால விரயம்
காலம் பொன் போன்றது என்பார்கள் அது வீணாகக் கழிவது கிரிக்கெட்போன்ற விளையாட்டுக்களில் தான் நேரத்தையும் காலத்தையும் வீணாகக் கழிப்பது இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல. இறைவனிடத்தில் அதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்
உன் ஆயுள்இளமைஈட்டிய சம்பாத்தியம்அதை செலவழித்ததுகொடுக்கப்பட்ட அறிவு இவைகளுக்கு நாளை மறுமையில் பதில் சொல்லாத வரை தான் நிற்கும் இடத்தை விட்டும் நகர முடியாது என நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் (திர்மிதீ)
ஆக நேர காலங்களை நல்ல ஆரோக்கிமான பல பயனுள்ள விளையாட்டுக்களிலும் பல பயனுள்ள வழிகளிலும் கழிக்க முன்வரவேண்டும்.
விளையாட்டு என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு வரையறுத்துத் தருகிறது
ஓட்டப்பந்தயம்அம்பு எறிதல்மல்யுத்தம்குதிரை ஏற்றம்வாள் வீச்சு போன்ற பல தற்காப்புப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள வலியுறுத்துகிற அதே நேரத்தில் சோம்பேறிகளாக கோழைகளாக இருப்பதை வெறுக்கிறது வீரர்களாக இருக்க வலியுறுத்துகிறது இஸ்லாம்.
விளையாட்டிற்கு முக்கியத்துவமில்லாமல் என்ற பொருள் இருந்தாலும் இஸ்லாம் விளையாட்டை முக்கியத்துவமாகத் தான் பார்க்கிறது.
பலவீனமான மூஃமினை விட பலம் வாய்ந்த மூஃமின் தான் அல்லாஹ்விற்கு பிரியத்திற்குறியவனாகவும் அல்லாஹ்விடத்தில் சிறந்தவனாகவும் இருக்கிறான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).
அன்று ஈத் (பெருநாள்) தினமாக இருந்தது. (ஆப்பிரிக்கக்) கருப்பர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரிடம் நான் (விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும் அல்லது அவர்களே என்னிடம், “நீ இவர்களுடைய (வீர விiளாயட்டைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். நான், “ஆம்” என்று பதிலளித்தேன். உடனேஅவர்கள் என் கன்னம் அவர்களின் கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்கஎன்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள். அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, “போதுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம்போதும்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போ!” என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். புகாரி 2901, 2907, 3530, 5236.
ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோநான் கேட்டதற்காகவோ நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்கவைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்’”
என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள்.ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
புகாரி 950.
பந்தயம் நடத்தப்பட்டிருக்கிறது நபியவர்கள் காலத்தில்
ஒருமுறை நபியவர்களுக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே ஓட்டப்பந்தயம் நடக்க முதல் முறை அன்னை ஆயிஷா அவர்கள் ஜெயிக்க இரண்டாவது முறை ஆயிஷா அவர்கள் சற்று குண்டானதால் நபியவர்கள் ஜெயித்து விடுகிறார்கள் (ஹதீஸின் கருத்து)
நபி(ஸல்) அவர்களிடம் அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய) தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்தபோது நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அறிவித்தார்.
புகாரி 2872, 6501.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) தூரம் சனிய்யத்துல் வதா’ விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை(யுள்ள தொலைவாக) இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
புகாரி 2869.
மெலிய வைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய தூரம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ஹஃப்யா’ விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை சனிய்யத்துல் வதாவாக இருந்ததுஎன்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
நான் (அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம், ‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிலிருந்தது?’ என்று கேட்டேன். அவர், “ஆறு அல்லது ஏழு மைல்கள் தொலைவிலிருந்து” என்று பதிலளித்தார் என (மற்றோர் அறிவிப்பாளரான) அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
புகாரி 2870.
விளையாட்டில் நோக்கம் இருக்கவேண்டும். எதிரியை வீழ்த்த வேண்டும் வேட்டைப் பிராணியை கொல்லவும் வேண்டும் அதல்லாத உடலுக்கு தீங்கு தருகின்ற பார்வையை பறிக்கின்ற பல்லை உடைக்கின்ற எந்த விளையாட்டையும் இஸ்லாம் தடை செய்கிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களும் அதுபோன்றதுதான்அது எதிரியை வீழ்த்தாது வேட்டைப் பிராணியைக் கொல்லாது.
தடைசெய்யப்பட்ட விளையாட்டுக்களைப்பற்றி நபியவர்கள் கூறும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்
கல்சுண்டு விளையாட்டிற்கு (கத்ஃப்’) நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், “அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது;எதிரியையும் வீழ்த்தாது. மாறாகஅது கண்ணைப் பறித்து விடும் பல்லை உடைத்துவிடும்” என்றார்கள்.
புகாரி 6220, 255.
நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன்.அவரிடம், “சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்” அல்லது சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்”. மேலும்நபி அவர்கள் அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாதுஎந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாகஅது பல்லை உடைக்கலாம் கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)என்று கூறினார்கள்” எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்” அல்லது சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்” என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால்நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயேநான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன் என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்.
புகாரி 5479.
தங்களைத் தற்காத்துக் கொள்கின்ற எதிரிகளைத் தாக்குகின்ற எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது

·         அல்லாஹ் கூறுகிறான்:

மேலும்அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் முடிந்த அளவு வலிமையையும் தயார் நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள். அவற்றின் வாயிலாகநீங்கள் அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்கள் பகைவர்களையும் பீதிக்குள்ளாக்கலாம். அல்குர்ஆன் 8:60
பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது நபி(ஸல்)அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில்உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள். உடனேஇரண்டு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்தினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கென்ன ஆயிற்றுஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்கநாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், “அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள்.ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
புகாரி 2899.
இப்படி ஆபாசம்சூதாட்டம்நேர கால விரயம்போன்றவற்றின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற வணக்கவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற கிரிக்கெட் செஸ் போன்ற எந்த விளையாட்டையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது மாறாக அவற்றை தடை செய்கிறது.
இதுபோன்ற விளையாட்டுக்களில் காலத்தை வீணடிக்காமல் பல பயனுள்ள ஆரேக்கியமான மனதுக்கு இதமளிக்கிற மார்க்கத்திற்கு வணக்கவழிபாடுகளுக்கு ஊறுவிளைவிக்காத வீரவிளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தவேண்டும்.


ஆக்கம்:காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி,
பேராசிரியர் JFA கல்லூரி (Al- Jamiathul Firdhousiya Arabic College),
இமாம் IRGT பள்ளிவாசல்

உங்கள் ரெஸ்யூமில் உள்ள தவறுகளை சரி செய்வது எப்படி? ஒரு தவகல் ..

ஒருவரின் ரெஸ்யூமை மேலோட்டமாக ஆராயஒரு பணி வழங்குநருக்குசராசரியாக விநாடிகள் மட்டுமே ஆகிறது. எனவேஅத்தகைய மிகக் குறுகிய காலஅளவிற்குள்பணி வழங்குநரின் கவனத்தைக் கவர்ந்துவாய்ப்பைப் பெறுவது தனிக் கலை.
ரெஸ்யூம் தயாரித்தலுக்கென்றுஒரு வழக்கமான முறை நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில்அந்த முறையில் நிறைய மாறுதல்கள் வந்துவிட்டன. வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்கள்ரெஸ்யூம் தயாரிக்கும் முறையையும் பெரியளவில் மாற்றிவிட்டன. கன்சல்டண்டுகளைப் பொறுத்தவரைஒரு நாளில்ஆயிரக்கணக்கான ரெஸ்யூம்களை கையாள்வதால்அவர்கள் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
எனவேஉங்களின் ரெஸ்யூம்குறைந்த வினாடிகளுக்குள்கன்சல்டண்டுகளின் கவனத்தைக் கவரும் வகையில்ரெஸ்யூம் தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப சரிபார்ப்பு முறை..
இன்றைய நிலையில்பொதுவாகரெஸ்யூம்கள்அப்ளிகேஷன் டிராக்கர் சிஸ்டம் மூலமாகசோதிக்கப்படுகின்றன. அந்த நிலையைக் கடந்துஒரு ரெஸ்யூம் சென்ற பிறகுதான்அதை மனிதக் கண்கள் பார்க்கின்றன. எனவேஇந்த முதல் நிலையை உங்கள் ரெஸ்யூம் கடப்பதை உறுதிசெய்யசரியான keywords -ஐ உங்களின் ரெஸ்யூம் கொண்டுள்ளதா மற்றும் முறையான format -ல் உங்கள் ரெஸ்யூம் வடிவமைக்கப்பட்டுள்ளதாஎன்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
Keywords என்பதுஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறையில் பயன்படுத்தக்கூடிய மொழி நடையாகும். அவற்றில்,துறைதிறன்கள்பதவி மற்றும் தேவையான கல்வித் தகுதிகள் போன்ற விபரங்கள் அடங்கும். Search filters, பணி தேவைகளுக்கு ஏற்பகுறிப்பிட்ட keyword -களால் வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவேசரியான இடத்தில் keywordsபயன்படுத்தல்சரியான எண்ணிக்கையில் அவற்றைப் பயன்படுத்தல் போன்றவைஉங்கள் ரெஸ்யூமின் முக்கியத்துவத்தைப் பெருமளவில் அதிகரிக்கும்.

ரெஸ்யூம் தயாரிப்பானதுதொழில்நுட்ப முறையில் இருக்க வேண்டும். அப்போதுதான்தொழில்நுட்ப அடிப்படையிலான ரெஸ்யூம் ஆய்வில்அடுத்த நிலைக்கு செல்ல முடியும். தொழில்நுட்ப முறை தயாரிப்பு என்பதுசரியான fonts மற்றும் fontவடிவமைப்பு ஆகியவற்றை பயன்படுத்துதலை உள்ளடக்கியதாகும். இதன்மூலம், search engine, உங்கள் ரெஸ்யூமை எளிதாக ஆராயும். Graphs, tables, pictures, special effects and fancy fonts ஆகியவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டாம். அப்போதுதான்,எந்தவித சிக்கலுமின்றிஉங்களின் ரெஸ்யூம்அடுத்த நிலைக்குச் செல்லும்.
ஆறே விநாடிகள்தான்...
ஒருவரின் ரெஸ்யூமில்சில நொடிகளில்வேலை வழங்குநர் பார்க்கும் விஷயங்கள் என்னவெனில்விண்ணப்பதாரரின் இருப்பிடம்கடைசி நிறுவனங்களில்அவர் வகித்த பதவிகள் மற்றும் கல்வித் தகுதிகள் போன்றவைதான். எனவே,இத்தகைய ஜீவாதாரமான விஷயங்கள்வேலை வழங்குநருக்கு எளிதில் கிடைக்கும்படி செய்தல் முக்கியம்.
பணி வழங்குநர்கள்ரெஸ்யூமை எவ்வாறு ஆராய்கிறார்கள் என்பதன் heap map -ஐ உருவாக்க, eye tracking தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. முக்கிய விஷயங்கள்ரெஸ்யூம் பக்கத்தின் இடதுபுறமாகபெரிய எழுத்தில் இருக்கும் என்பதை, mappingஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. எனவேதேவையற்ற விஷயங்கள் இருந்தால்அவை தயவுதாட்சண்யமின்றி நிராகரிக்கப்பட்டு விடும்.

வெளிப்படுத்தும் திறன்கள்..
உங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளபணி வழங்குநர்களைத் தூண்டும் விதமாகரெஸ்யூம் அமைய வேண்டும். குறிப்பிட்ட பணிக்குத் தேவையான திறன்களும்கல்வித் தகுதிகளும் உங்களிடம் உள்ளன என்பதை உங்களின் ரெஸ்யூம்,தெளிவாகவும்எளிதாகவும் வெளிப்படுத்த வேண்டும்.
உங்களின் பிரதான பணித்திறனை முதன்மைப்படுத்தியிருக்க வேண்டும். இதைத்தவிரஉங்களின் மென்திறன்களும் சிறப்பான முறையில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மென்திறன்கள்தான்உங்களின் சம அனுபவத்தையும்சமமான கல்வித்தகுதியையும் வைத்திருக்கும் ஒருவரிடமிருந்துஉங்களை வேறுபடுத்திக் காட்டும். இந்த மென்திறன்கள்தான்,உங்களின் பதவி உயர்விலும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

ரெஸ்யூமில் ஏற்படும் பொதுவான தவறுகள்
பழைய சாதனைகளைரெஸ்யூமில்திரும்ப திரும்ப குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாகசமீபத்திய சாதனைகள் மற்றும் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொருத்தமான தகுதிகள் உங்களுக்கு இருப்பதைநீங்கள் சிறப்பாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில்பணி வழங்குநர்கள்,அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பெரியளவிலான எழுத்துக்கள், fancy fonts, எழுத்து மற்றும் இலக்கணப் பிழை ஆகியவற்றை தவிர்க்கவும். ரெஸ்யூம்களில்,அடிக்கடி காணப்படும் சில முக்கிய தவறுகளாக சுட்டிக்காட்டப்படுபவை,
கல்வித்தகுதி பற்றிய விளக்கப் பகுதியில்படிப்பை முடித்த ஆண்டுகள் குறிப்பிடப்படுவதில்லை. அதேபோல்பணி அனுபவம் பற்றிய விளக்கப் பகுதியில்மொத்த பணி அனுபவ ஆண்டுகள் குறிக்கப்படுவதில்லை.

ஆன்லைன் ரெஸ்யூம்...
இந்த வகையில்சோஷியல் மீடியா முக்கிய இடம் வகிக்கிறது. ஏனெனில்இதுபோன்ற வசதிகளின் மூலம்,விண்ணப்பதாரரைப் பற்றிய பல விபரங்களைபணி வழங்கும் நிறுவனங்கள் அறிந்து கொள்கின்றன. இந்த சோஷியல் மீடியாவின் மூலமாகஒரு நிறுவனத்திலிருந்துமற்றொரு நிறுவனத்திற்கு மாற விரும்பும் நபர்கள்அதிக வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். எனவே, Linkedin போன்ற தளங்களில்உங்களின் விபரங்கள் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
பொருத்தமான keywords பயன்படுத்திஉங்கள் ரெஸ்யூமை எளிதாக கண்டுபிடித்தலையும் மற்றும் அனைத்து முக்கிய விபரங்களும்அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதையும் உறுதிசெய்தல் அவசியம். இதன்மூலம்உங்களைபணி வழங்குநர்கட்டாயம் தொடர்பு கொள்வதை உறுதிசெய்ய முடியும்.

ஆன்லைன் மதிப்பை தக்கவைத்தல்..
உங்கள் பெயரில் Google search செய்துவிபரம் தெரிவிக்கும் இணைப்புகளை சரிபார்க்கவும். அந்த விபரங்களில்எவ்வித எதிர்மறை அம்சங்களும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். எனவேஉங்களின் விபரங்களை பதிவேற்றம்(upload) செய்யும் முன்பாகஒன்றுக்கு பலமுறை நன்றாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்பு சந்தையில்சரியான ரெஸ்யூமேஒருவருக்கு சிறப்பான வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்..
தொகுப்பு : மு.அஜ்மல் கான் 

நாம் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியா? ஒரு சிறப்பு பார்வை...


ஓட்டல்  மற்றும்  மதுபான கடைகளில் நாம்  சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம். 

அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை, 
அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு.

1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”,

2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன. 

இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் :0 என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது, அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகழுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது)
அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் தெரியவில்லை) 

அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள். 

இன்னும் பல எழுதமுடியும் மற்றொன்று முக்கிய செய்தி இது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஏன் வெளியெ சொல்வதில்லை அதுதான் தமிழரின் அற்புத குணங்களில் ஒன்று முகநூலிலும் இதர இணையத்திலும் தமிழனின் பெருமையை பார் என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவான், அந்த பொய்யை இரசிக்க ஆயிரம் சேர்களும் லைக்குகளும், ஆனால் உண்மையை பகிரமாட்டான் ஏன் தெரியுமா. அடுத்தவன் எக்கேடு கெட்டுப்போகட்டும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் (பேருந்தில் நிற்க முடியாத நிலையில் ஒரு முதியவர் இருக்கும் போது இரண்டு வயது குழந்தையை சீட்டில் உட்கார வைத்து இடம் கொடுக்க கூறினால் குழந்தைக்கு காய்ச்சலுங்க பெரியவர் என்ன அவசர வேலையாகவா போகிறார்) காலியாக வரும் பஸ்ஸில் ஏறவேன்டியது தானே என்று சொல்லும்............................


இதை(கெட்டுப்போன மாமிசம்) அரசு எந்த அளவிற்கு தடுக்க முடியும் என்றால் முடியாத காரியம் தான் ஊறிப்போன லஞ்ச பரிமாற்றம். அரசு திட்டமிட்டால் கீழே வர வர காணாமல் போகும். ஒரு நாள் நடவடிக்கை எடுத்தால் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து விடும் நாம் தான் இதை தடுத்து நிறுத்த முடியும் எப்படி உண்மையை எடுத்துக்கூறுங்கள் பலருக்கு தெரிவியுங்கள் கூட்டம் குறையும் போது தன்னாலேயே நல்ல பொருளை வாங்கி விற்க ஆரம்பிப்பார்கள், அப்போதுஅவர்களுக்கு துணிவு வரும் லஞ்சம் வாங்க வருபவர்களுக்கு பயப்பட தேவையில்லாமல் போகும் நல்ல மாற்றம் வரும் ...

நன்றி -செந்தமிழ் நாடெனும்..

Thursday, 23 May 2013

நாம் தினம் ஒரு முட்டைசாப்பிடுவது அவசியமா!! ஒரு சிறப்பு பார்வை ....

http://z.about.com/d/australianfood/1/0/R/3/-/-/Devilled-Eggs-350.jpgநாம் உண்ணுகின்ற உணவானது, உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதாக இருக்க வேண்டும். உடலும், உள்ளமும் நலமாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் உங்களால். நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள் ஆகியவை சைவப் பிhpயர்களின் அன்றhட உணவில் அவசியம் இருக்க வேண்டும். அசைவப் பிரியர்கள் இறைச்சி, இறால், மீன், நண்டு, முட்டை முதலியவை மூலம் முழுமையாக உண்கிறார்கள். சைவமோ, அசைவமோ எதுவாக இருப்பினும், அந்த உணவு வகைகளில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, மாவுச்சத்து முதலியவை முக்கிய பங்கை வகிக்க வேண்டும். இந்த சத்துப் பொருட்கள் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காக்கவும், வருமுன்னர் தடுக்கவும், வந்தபின் குணப்படுத்தவும் உதவுகிறது. சைவம் சாப்பிடுபவர்களே அதிகம் விரும்பிச் சாப்பிடும் முட்டை நம் அன்றாட உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது.



ஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம் . எல்லோருக்கும் மிகவும் நல்லது . குறைந்த செலவில் நிறைந்த பயனை தருகிறது முட்டை . கூடுதலான முட்டை இருக்கிறது என்று நான்கு , ஐந்து என்று சாப்பிடாதீர்கள் . எதுவும் அளவோடு சாப்பிட்டால் பயன் உண்டு . ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள் முட்டையை .


அவித்தோ  , பொரித்தோ  சாப்பிடுங்கள் . அல்லது முட்டை குழம்பு வைத்து சாப்பிடுங்கள் . அதுவும் நன்றாக இருக்கும் . முட்டையை விரும்பாதவர்கள் இல்லை . ஒரு சிலர் தான் விரும்ப மாட்டார்கள்.

கிராமங்களில் எல்லாம் எல்லோர் வீட்டிலும் கோழி வளர்த்து முட்டை விற்கிறார்கள் . முட்டையை நாம் எந்த காலங்களிலும் கடைகளில் வாங்க முடியும் . அதற்க்கு தட்டுப்பாடு இருக்காது . ஏனெனில் கூடுதலானவர்கள் முட்டையை அதிகம் சாப்பிடுவதனால் எந்த கடைகளிலும் முட்டை இல்லை என்று சொல்ல மாட்டார்கள் .


ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும் . சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும் . உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள் .



உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது. 

தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து  அத‌ன் வெ‌‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம். ‌பி‌ன்ன‌ர் ‌சி‌றிது ‌சி‌றிதாக அவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் கருவை  கொடுக்கலாம் . 

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது . அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை . மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை  .


 
முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும்  என ஒவ்வொருவர் ஒவ்வொரு கதைகளை சொல்வார்கள் .  பல்வேறு  பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.அந்த பயத்தை நீக்கி தினம் ஒரு முட்டை உண்ணுங்கள் . பல ஆராய்ச்சியாளர்களும் இதை தான் சொல்கிறார்கள் .  முட்டையை கடையில் வாங்கி வந்தவுடன் அவை உடைந்து போய் இருந்தால் அன்றே பாவியுங்கள் . மற்றைய முட்டைகளை கழுவிய பின்பு ப்ரிஜில் வையுங்கள் . பழுதாகாமல் இருக்கும் .  



 முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான, ச ரி சமமான உணவாக மாற்றுகிறது. ஒரு முட்டையில் ஒளிந்திருக்கும் சத்து உடலுக்கு உகந்ததாக உள்ளது. ஆரோக்கியமாக இருப்பதில் முட்டை பெரும் பங்கை வகிக்கிறது. குழந்தைகளிடமும், பொpயவர்களிடமும் ஏன் எல்லோ ரிடமும் கூட ஊட்டச்சத்துக் குறைவால் சில உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எந்த, எந்த வகையான உடல் உபாதைகளுக்கு முட்டையின் மூலம் ஊட்டச்சத்து அளித்து, ச ரி செய்ய முடியும் என்று கீழே உள்ளதை படித்தால் பு ரியும் உங்களுக்கு. முட்டையால் குணமாகும் நோய்களும், ஊட்டச்சத்தின் அவசியமும் அறிந்து கொள்ள அனைத்தையும் படியுங்கள்.


கோழிமுட்டையின் உள்ளமைப்பு: 1. முட்டை ஓடு
2. புறமென்றோல்
3. உள்மென்றோல்
4. Chalaza
5. வெண்ணி (வெளி)
6. வெண்ணி (இடை)
7. மஞ்சட்கருவாக்கிக்குரிய மென்றோல்[1]
8. Nucleus of pander
9. சத்துமத்து/கெழுமைத் தட்டு(Germinal disk) [2]
10. மஞ்சள் கரு
11. வெண்கரு
12. உள்வெண்ணி
13. Chalaza
14. வளி அறை
15. புறத்தோல், தோல் மேல் ப



 கீழே சொல்லப்பட்டுள்ள அனைத்து தொந்தரவுகளுக்கும், முட்டைக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. கீழே உள்ள அனைத்து குறை பாடுகளும் முட்டையால் நீங்கும். குழந்தைகளிடம்„ போதிய வளர்ச்சியில்லாமை அல்லது எடைக்குறைவு, நடப்பது, பேசுவது அல்லது சிந்திப்பது ஆகிய செயல்களில் மந்தம், உப்பிய வயிறு, சூம்பிய கை, கால்கள், சுணங்கிக் காணப்படுதல், சக்தியின்மை, கால்களில், முகத்தில், கைகளில் வீக்கம் பெரும்பாலும் புண்களுடேனோ, தோலில் தடங்களுடனோ, முடிகொட்டுதல் அல்லது மெலிதல், முடி செம்பட்டை ஆதல், கண்களில் வறட்சி, பார்வைக் குறைவு ஏற்படும். எல்லோ ரிடமும்„ தளர்ச்சியும் களைப்பும், பசியின்மை, சோகை, வாய் ஓரங்களில் புண், நாக்கில் வலி அல்லது புண், கால்களில் எhpச்சல் அல்லது கால்கள் மரத்துப் போதல் ஆகியவை ஏற்படும். நோய்கள் ஏற்பட வேறு காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் அவை சாpயாகச் சாப்பிடாததால் ஏற்படுகின்றன அல்லது மோசமடைகின்றன. அந்நோய்களில், வயிற்றுப் போக்கு, காது இரைச்சல், தலைவலி, சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு அல்லது இலுப்பு, நெஞ்சு படபடத்தல், பல் ஈறுகளில் ரத்தக் கசிவு அல்லது அவை சிவப்பாதல், மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், வயிற்று அளெச்காpயம், தோலில் வறட்சி அல்லது வெடிப்பு, கவலை, பலவகையான நரம்பு அல்லது மனம் சம்பந்தப்பட்ட கோளாறுகள், ஈரல் சிதைவு, அடிக்கடி தொற்றுக்கு ஆளாதல் போன்றவைகளாகும். போதிய ஊட்டம் பெற்ற குழந்தைகளைவிட, ஊட்டக் குறைவுள்ள குழந்தைகளுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அதனால் இறந்துவிடக் கூடிய அபாயம் அதிகம். ஊட்டக்குறையுள்ள குழந்தைகள் விஷயத்தில் மணல்வாரி மிகவும் ஆபத்தானது. ஊட்டக் குறையுள்ள குழந்தைகளிடம் காசநோய் பரவலாகக் காணப்படுவதுடன் நோயின் தாக்குதலால் உடல்நிலை விரைவில் மோசமடைகிறது. ஈரல் சிதைவு ஏற்படுவதற்கான பல காரணங்களில் மிதமிஞ்சி மது அருந்துவதும் ஒன்று. இந்த ஈரல் சிதைவு ஊட்டக் குறையுள்ளவர்களிடம் பரவலாகவும் கடுமையாகவும் காணப்படுகிறது. ஊட்டக் குறையுள்ளவர்கள் ஜலதோஷம் போன்ற சிறிய நோய்களால்கூட அடிக்கடியும் மோசமாகவும் பாதிக்கப்படுகின்றனர். 


நல்ல உணவு நோயைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், நோயை எதிர்த்துப் போராடவும் மீண்டும் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. ஆகையால் நோயுற்றிருக்கும்போது ஒருவருக்கு ஊட்டசத்துள்ள உணவு மிக அவசியமானதாகிறது. துரதிர்ஷ்டவசமாக சில தாய்மார்கள் குழந்தை நோயுற்றிருக்கும்போது அல்லது வயிற்றுப் போக்கு கண்டிருக்கும்போது ஊட்டசத்துள்ள உணவுகள் கொடுப்பதை நிறுத்திவிடுகின்றனர். இதனால் குழந்தை மெலிந்து நோயை எதிர்த்துப் போராட முடியாமல் இறந்து போகலாம். உடல் நலமில்லாத குழந்தைகளுக்கு ஊட்டசத்துள்ள உணவு தேவை. உடல்நல மில்லாத குழந்தை சாப்பிடாவிட்டால் அதைச் சாப்பிடுமாறு செய்வது அவசியம். 



ஒருவருக்கு ஏதாவது உடல்நலக் குறை ஏற்படும் போதுதான் ஊட்டக்குறைவான அறிகுறி முதலாவதாக வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பல நாட்களாக வயிற்றுப்போக்குக்கு ஆளான குழந்தைக்கு கை, கால் வீக்கம், முக வீக்கம், கால்களில் பழுப்புநிறப் புள்ளிகள் அல்லது புண் விhpதல் ஏற்படலாம். இவை ஊட்டக் குறையின் அறிகுறிகள். இந்தக் குழந்தைக்கு ஊட்டமுள்ள உணவு அதிகம் தேவை. உடல்நலக் குறையின்போதும் அதற்குப் பின்னரும் ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் அவசியம். 


ஆரோக்கியமாய் இருப்பதற்குத் தேவையான உணவுகள்„ ஆரோக்கியமாகவும், திடகாத்திர மாகவும் இருக்க நமது உடலுக்குத் தினமும் பலவகையான ஊட்ட சத்துள்ள உணவுகள் தகுந்த விகிதத்தில் தேவைப்படுகின்றன. பிரதான உணவு„ சக்தி பெறுவதற்கான எளிய மலிவான வழி பிரதான உணவுகளே. பிரதான உணவுகள் சக்தி உணவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை அடுப்புக்கு விறகு போன்றவை, ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு கடினமாக உழைக்கிறhரோ அவ்வளவுக்கு அவருக்கு சக்தி தரும் உணவுகள் அதிகம் தேவைப்படுகின்றன. நம்முடைய சாப்பாட்டில் சக்தி தரும் உணவுகள் மிக அதிகமாக இருக்கின்றன. ஆனால் மற்ற மூன்றுவகை உணவுகள் இல்லாமல், இந்த உணவுவகை மாத்திரம் அடங்கிய சாப்பாடு நம்முடைய உடலை பலஹீனப் படுத்துகிறது. 

சக்தி தரும் உணவுகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்„ தானியங்கள்„ கோதுமை, அரிசி, சோளம், மக்காச் சோளம், கேழ்வரகு. மாவுச் சத்துள்ள உணவுகள்„ உருளைக்கிழங்கு, சர்க்கரை, வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மாவுச்சத்துள்ள பழங்கள்„ வாழைப்பழம், சீமைப் பலாப்பழம், ரொட்டிப்பலா கூடுதலான புரதம் உள்ள உணவு வகைகள்„ புரதம் உடலை வளர்க்கும் உணவு. சீரான வளர்ச்சிக்கும், தசைகள், மூளை மற்றும் உடலின் பல பாகங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இது தேவை. பிரதான உணவுகளில் நமது உடலுக்குத் தேவையான புரதம் அனைத்தும் முழுமையாக இருப்பதில்லை. எனவே ஆரோக்கியமாய் இருப்பதற்குப் புரத உணவுகளில் ஒன்றhன குறைந்தது ஒரு முட்டையாவது தினம் நம்முடைய சாப்பாட்டில் அடங்கியிருக்க வேண்டும்.

 முட்டைகளின் தரத்தை சோதித்தல்„ முட்டை வணிகத்துறைகள் வெள்ளைக் கருவின் உயர்ந்து நிற்கும் நிலையை வைத்து அளந்து முட்டையின் தரத்தைக் கண்டுகொள்கின்றன. அடுத்தபடியாக, முட்டையை உடைத்தவுடன் மஞ்சள்கரு இருக்கும் உயர்ந்த நிலையைக் கொண்டும் தரத்தை அளிக்கின்றன. இம்முறைக்கு மஞ்சள் கரு அட்டவணை என்பது பெயர். இம்முறையில் முட்டையை உடைத்துத் தட்டில் ஊற்றியவுடன் மஞ்சள் கருவின் உயரத்தையும், பரந்திருக்கும் அகலத்தையும் அளந்து உயரத்தால் கிடைக்கும் எண்ணை கொண்டு முட்டையின் தரத்தை நிர்ணயிக்கிறhர்கள். முட்டையின் தரக்குறைவும், காரணங்களும்„ முட்டை இடப்படுவதிலிருந்து உண்ணப்படும்வரை அதனுடைய தரம் கெடுவதற்குப் பல சூழ்நிலைகள் இயற்கைச் காரணமும். தகுந்த பாதுகாப்பும், சுத்தமான சூழ்நிலையும் இல்லாவிடில் முட்;டை ஓட்டிலுள்ள நுண்துவாரங்களின் வழியே கிருமிகள் உள்புக வழியுண்டாகும். முட்டைகள் சேமிக்கப்படும் இடம் வெப்பத்துடனும் ஈரம் அற்றும் இருந்தால், முட்டையிலிருந்து தண்ணீர் ஒட்டுத் துவாரங்கள் வழியே வெளியேறும். சில சமயங்களில் மஞ்சள் பாகம் முட்டை ஓடுவரை இழுக்கப்பட்டு, அதன் உட்புறத்துடன்; ஒட்டிக்கொள்ளும். காற்றறையின் அளவும் பெரிதாகக் காணப்படும். அதிக வெப்பமான சூழ்நிலையில் வெள்ளைக்கரு புரதப்பாகம் உடைப்பட்டு கடினப்பாகமானது நீர்த்த பாகத்துடன் நன்கு கலக்க வழியுண்டாகும். தண்ணீர் வெள்ளைக்கரு புரதப் பாகத்திலிருந்து வெளியேறுவது மட்டுமின்றி, மஞ்சள் கருபாகத்தையும் நீர்;க்கச் செய்யும். முட்டைகள் நன்றhகச் சுத்தமாகத் துடைக்கப்பட்டு சேமிக்கப்பட்டால் சேதம் ஏற்பட வழியில்லை. முட்டை ஓட்டின் உட்புறத் தோலும், வெள்ளைக்கரு புரதபாகமான ஆல்பிமினுள் அடங்கிய லைசோகைம் எனும் புரதமும் ஓரளவு கிருமி எதிர்ப்புத் தன்மையுள்ளவை. சேமிக்கப்பட்ட முட்டைகளில் உண்டாகும் காரத்தன்மையும் கிருமிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். முட்டை ஓடுகள் சிறிது விhpசல் கொண்டிருந்தாலும், ஈரம், அசுத்தம் ஆகியவற்றுடன் இருந்தாலும் கிருமிகள் உட்புக வாய்ப்பு உண்டாகும். தரம் குறைந்த முட்டைகளில் ஆல்புமின் நீர்;த்துப் பசுமை கலந்திருக்கும் மஞ்சள் பாகம் இலகுவாக வெண்மை அல்லது ஊதாப் புள்ளிகளுடன் இருக்கும். விட்டலைன் சவ்வு தடிப்பாக வெண்மையாயிருக்கும். ஒளியில் சோதித்தால் மஞ்சள் பாகம் கருஞ்சிவப்பாகத் தோன்றும். முட்டையின் தரம் பாதிக்கப்படுவதற்குக் கருவின் வளர்ச்சியும் ஒரு காரணமாகும். வளர்ந்த கரு மஞ்சள் பாகத்தின் மேல் சிவப்பான புள்ளி வடிவாகவோ அல்லது சிவந்த வட்டமான மோதிர வடி வாகவோ காணப்படலாம். கவனமின்றி கையாளப்படும் முட்டைகளில் உட்புறப் பாகங்கள் கலங்கியும், முட்டைகள் விhpசலுடனும் காணப்படும். அளவாகவும், சீராகவும் அடுக்கப்படாத முட்டைகளிலும் விரிசல்கள் ஏற்பட வழியுண்டு. இப்போது முட்டையின் முக்கியத்துவமும், முக்கிய பயன்களும் புரிந்திருக்குமே உங்களுக்கு. முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான, சரிசமமான உணவாக மாற்றுகிறது.


“தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது . பிறகென்ன உங்கள் பாடு கொண்டாட்டம் தான் . 

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல் .