Thursday, 1 May 2014

Is It Possible to Privatization Of Indian Railways?...



Indian Railways is the largest employer in India providing employment to around 1.6 million people. For the first time in a decade, the Government could not help itself from increasing fares because of the massive financial crisis it is facing. 
          Over the years, Indian Railways have shown itself successfully as the most preferred common-man’s transporting system.

How railways could charge such low fares?

          The main reason is that the British Government, which governed us had laid rails all over the country before 150 years itself. The Roadways on the other hand, lend contracts to Private for laying roads and hence had to price 2 to 3 fold than Railways. 
          With no big investment needed to lay out rails, only the operating costs like fuel costs, maintenance costs, etc., required and that is why they are able to charge such low prices.

The Reason for Downfall:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj06XEWEhTIbwWZgDuZGj0WJ5iO77L8Vv6rwvxu1Zrpz3ielFjlbIUP1JFHZFuRBtdeXqSxdOAELheRzfqR8sw_P3N_Fu4fZxbxecv4Bl4B_2kFiZ-2AknnYg3bwfvrTV6QuF7pHi2P-C0/s320/000-Del300343-jpg_110734.jpg

In spite of having so many advantages over other transportation systems all it needed was to manage profits in an effective way, which the Railways could not.
They were criticized for various reasons like time delay, unhygienic toilets inside the trains and in Railway stations, and the major reason being the accidents that kill thousands of people every year
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi76oXfOjCwAXtIFtHWny_TcdbOr_spp34XCEg45dh1YMt-JUViWRZARcfJLDQK-THpUPzGV_cEeXnoKY96kb-GioqJNzySBhjkW6SOsLpOWDk9NAlYFZ8EE6L7ulqVE0ZcSUmQwzrfeIg/s400/indian-railways-1.jpg




How would Privatization help Indian Railways?


         
With the various FDI policies amended, the Railways can look forward to blend in some new blood to offer services. It is doubtless that the quality of services in Railways will improve due to the competition.
Imagine a train running from Mumbai to Delhi in less than 2 hours. Would not that portray India as a developed country? Better Competition leads to better infrastructure and hygiene facilities. Privatization is good for Indian Railways.

But,…… Is it Possible??

People say we did manage to Privatize Insurance sector, why not Railways. But is it as easy as we think? 
Let us have a look at some of the constraints which are holding up Privatization until now.
·         ·         Huge Investment Required to lay rails around the country
·         ·         Land Acquisition Problems because many rails passes across various Public Property
·         ·         Safety and Security Reasons towards Private Companies
·         ·         Employees Concern - We discussed earlier that Railways has the largest number of employees in the country, so Privatization means few employees have to be sent out of Government Jobs

When Can It Be Possible – The Solution:

When Privatization can offer so many benefits, why not we try implementing so that it improves the quality of service?
Let us have a look at some of the possible solutions that can be made to implement Privatization:
·         ·         We can let the Private Sector to operate on selected routes because presently there are many routes which are over burdened throughout the year. 
·         ·         Not only in peak seasons but in weekdays also we find reservation in trains on these sections very hard due to lack of trains and heavy traffic.

e.g.,  Mumbai-Indore route, Commercial Capital of country with Commercial Capital of Central India, has only one daily train!

·         ·         Allot non-performing slots to the new Private Entrants

          Who would not like hygienic toilets, better food quality and availability of services?

Imagine the scenario where Private players provide more trains on such sections! We do not need to mention the better quality of trains and on board services they will bring with them. 

 Our Country has a very good experience of Privatization in Aviation Industry and that should be a good enough experience and reason to give it a try in Railways also.

My View..

In my opinion, Indian Railways should never be privatized simply because it is not just a profit making firm that runs trains in India. It is the largest employment scheme ever deployed by the Indian government. Privatization of Railways will lead to ‘optimization of corporate resources’, and millions of Indians will lose their livelihood.

I didn't agree for privatization of Indian Railway. I can't understand why people are thinking for privatization.. ? Why we don't think to solve a problem, we always complain everything.. If the Govt  sector is not working properly or they have some problem's then we need to support them.. Some of Govt sector like telecommunication [BSNL] is in loss and they have some problems after privatization like network consumption, no service, connection errors etc.

There are multiple reasons, why Indian railways shouldn't be privatized. 

1. It's huge, no one can buy it. Think about lands that Indian railway owns in Mumbai and Delhi and other major cites. 


2. It’s not cheap, but still cheaper. Consider a the two busiest railway station - Mumbai and Ahmedabad - the route only cost 1800 Rupees in 2 tier AC reserved seat with free meals. That's less than 30 USD. If you go to Japan (Osaka to Tokyo - 500 KM) or Canada (Toronto to Montral - 500 KM) you would need to pay almost 3-4 times more money for the  same services, Just in case if bill gates and warren buffet finds someone (still if they can buy it) and if they could buy Indian railway,
they would wish to get their money returned, and for that they would increase their ticket and logistics price. 


3. It's also not in favor of Indian economy - as many companies is depended on Indian railway for their logistics, and they won't get the same price.


4. if it goes to certain company - they won't allow a "pass" for daily commuters for a few hundred bucks. Imagine how many people travels almost 150 KM one way daily for going to their jobs? Will a buyer company allow them to travel that much distance for just few hundred rupee a month? 


5 We cant implement technology in near future. It is not because of whether other countries
Using or it, it is the need of the hour. How can we think that it is not Suiting for us? If we think negatively our railway system will not develop. The mentioned routes are apt for bullet train service. So the railway has to take bold steps soon in this regards.


Written By M.Ajmal Khan.

Wednesday, 30 April 2014

இந்தியன் ரயில்வே - ஐ ஆர் சி டி சி - சீக்ரெட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியன் ரயில்வேயில் முக்கிய பிரச்சினை அதன் டிராஃபிக் என சொல்லப்படும் அதிக பேர் புக்கிங் செய்ய முனைப்படும்போது அதனின் பல பிரச்சினைகள் நம்மளே சரி செய்தால் பிரச்சினை இல்லாமல் புக்கிங் செய்யலாம் அதன் சில ரகசியங்கள் டெவலப்பர் சங்கத்தில் இருந்து சுட்டது உங்களுக்காக - இது 100% லீகல் அதனால் கவலை கொள்ள வேண்டாம். March 2014 IRCTC invested 10 crore with 64 GB RAM servers with a spike capacity of 1 Million to 8 Million in REAL TIME and LIGHT VERSION Launched
முதன் முதல் உங்க்ள் பிரவுசரின் அத்தனை கேஷ் / குக்கிஸை கிளியர் செய்யவும். AVOID Internet Ecplorer
இரண்டாவது உங்கள் பிரவுசர் இந்திய நேரம் அதுவும் ஐ ஆர் சி டி சி சர்வர் நேரத்துடன் ஒத்து போக வேண்டும். இதன் மூலம் புக்கிங் அனேகமாய் ஒகே - ஏன் என்றால் வெளி நாட்டிலிருந்து புக்கிங் செய்யும் போது ரிலே டோக்கன் எனப்படும் சர்வர் டிலே - மற்றூம் ஆக்டிவ் ரவுட்டிங் வழி என நினைத்து உங்களுக்கு காலம் தாழ்த்தும். ஐ ஆர் சி டி சி சர்வர் டைமை மேட்ச் செய்ய இந்த லின்க்கை அழுத்தவும். http://www.indianrail.gov.in/train_Schedule.htmlஏதாவது ஒரு ரயில் நம்பரை போடவும் உடனே அந்த ரயில் டீட்டெயில் மற்றூம் கீழே இன்றைய தேதி மற்றூம் ஐ ஆர் சி டி சி ரயில்வே சர்வரின் நேரம் - மிக துள்ளிய்மாக காட்டும் அதற்க்கு ஏற்றார் போல் செட் செய்துக்கோங்க - மூணு நிமிஷம் அப் / ட்வுன் ஒகே -
மூன்றாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர் யூஸ் ப்ண்ணீனா இந்த டூலை டவுன்லோட் செய்தா அதுவே டைம் சின்க் செய்யும் -http://userscripts.org/scripts/show/109376 - இது குரோம் பிரவுசருக்கு வேலை செய்யும்.
நாலாவது செஷன் எக்ஸ்பயரி தான் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு கடைசியா எக்ஸ்பயரி ஆகி லாகின் திரும்பவும் செய்ய சொல்லும் இது தான் உச்சகட்ட கொடுமை - இதற்க்கு இரண்டு வழிகள் - ஒன்று - உங்க செஷன் ஐடியை பிரவுசரில் இருந்து எடுத்து கொள்ளுங்கள் - இந்த லின்க்கை உபயோகபடுத்தி https://www.irctc.co.in/…/bv60.dll/irctc/booking/planner.do… - இன்னொரு பிரவுசர் - அதாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் யூஸ் பண்ணினா = குரோமில் இதை போட்டு செஷன் ஐடியை மாற்றீ அப்படியே சர்வுருக்குள் குடியிருந்த கோயில் மாதிரி ஒட்டிக்கலாம். மூணு நிமிஷத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி பண்ணி கொண்டே இருங்கள் லாக் அவுட் ஆகவே ஆகாது. இரண்டாவது மேஜிக் ஆட்டோஃபில் எனப்படும் நிலைத்தகவலை அப்படியே சர்வருக்குள் போட இந்த டூலை பயன்படுத்தினால் எல்லா டீட்டெயிலும் போட தேவையில்லை அதற்க்கான லின்க் - http://ctrlq.org/irctc/ - ஃபயர் ஃபாக்ஸ் / குரோமுக்கு ஆல் ஒகெ ஒகெ - இதன் மூலம் 80% கண்டிப்பாய் டிக்கட் கிடைக்க வாய்ப்புண்டு.
ஐந்தாவது கடைசியாக - தட்கல் டிக்கட் நேரமான 10 - 12 மணி நேராத்தில் இன்னொரு புது சர்வரை ஐ ஆர் சி டி சி மார்ச் மாதம் 10 கோடிக்கு வாங்கி இன்ஸ்டால் செய்திருக்கிறது இதன் மூலம் உங்கள் டிக்கட்டை லைட் வெர்ஷன் என்னும் அறிவிப்பு 9.30 முதல் 12 மணி வ்ரை வருகிறதா என்று பாருங்கள் வர வில்லை என்றால் ரெஃபர்ஷ் செய்து பின்பு ஆரம்பிக்கவும் இதன் மூலம் 10 லட்சம் கப்பாசிட்டி 80 லட்சம் ஆகி 60 - 65,000 டிக்கட்கள் எளிதாக செய்ய முடியும் வித் அவுட் நோ பிராப்ளம்ஸ். இந்த நேரத்தில் விளம்பரம் / டூர் பேக்கேஜ் லொட்டு லொசுக்கு எதுவுமே வேலை செய்யாததால் இதன் டிராஃபிக் ஸ்மூத்தாய் இருக்கும் ஆல் தி பெஸ்ட் மக்களே.................
Human ERROR is the main cause for IRCTC bookings - Avoid smartly

நாய் வளர்ப்பு பற்றிய சிறப்பு பார்வை ..

நாய் நன்றிக்கு பெயர் போன,நம்மிடம் விசுவாசமாய் உள்ள நமது வளர்ப்பு நாய்க்கு சில கொடிய நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசிகள் போடவேண்டியது நமது கடமைதானே!
நன்றிக்கு பெயர் போன,நம்மிடம் விசுவாசமாய் உள்ள நமது வளர்ப்பு நாய்க்கு சில கொடிய நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசிகள் போடவேண்டியது நமது கடமைதானே!




பிறந்த 2 மாதத்திலிருந்தே தடுப்பூசி போடவேண்டும்.அதற்கு பின் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவேண்டும்.

தடுப்பூசி போடுவதற்கு முன் குடற்புழுநீக்கம் செய்திருக்க வேண்டும்.
அட்டவணை:-

வயது
குடற் புழு நீக்கம் செய்யவேண்டிய இடைவெளிகள்

2வாரம் முதல் 3மாதங்களுக்குள்

நாட்களுக்கு இடைவேளியில்
3
 மாதங்கள் முதல் 6மாதங்களுக்குள்
15 நாட்கள் இடைவெளியில்
மாதங்களுக்கு பின்
21 முதல் 30நாட்கள் இடைவெளியில்


நோய்களும் தடுப்பூசிகளும்:-

1வெறி நோய்( Rabies):-
நாய்க்கு வரும் வைரஸ் வியாதிகளில் மிகவும் பயங்கரமானது இதுஇந்த நோய் மனிதருக்கும் பரவக் கூடியது என்பதால் வராமல் தடுப்பது அவசியம்
முதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்
பூஸ்டர் : 6ம் மாதத்தில்
அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்
வெறி நோய் கொண்ட நாயினால் நமது வளர்ப்பு நாய் கடிப்பட்டால்:
முதல் தடுப்பூசிஜீரோ நாள் ( தடுப்பூசி போடும் நாள்)
2ம் தடுப்பூசி : 3ம் நாள்
3ம் தடுப்பூசி : 7ம் நாள்
4ம் தடுப்பூசி : 14ம் நாள்
முதல் பூஸ்டர்: 30ம் நாள்
2ம் பூஸ்டர் : 90ம் நாள்
வெறி நோய் தடுப்பூசிகள்:-
Inj.Rabisin
Inj.RakshaRab
Inj.Pentadog ( 5 தடுப்பூசிகளை உள்ளடக்கியது.)
குறிப்புதடுப்பூசி போடவேண்டிய நாள்/அளவு எல்லாவற்றையும் கடிப்பட்ட இடத்தை பரிசோதனை செய்து கால்நடை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

2டிஸ்டம்ர் ( Canine Distember):-
ஒரு வருடம் வயதுக்கு கீழ் உள்ள நாய்களுக்கு இந்த நோய் அதிகம் வருகிறது.அதிக அளவில் காய்ச்சல்மூக்கில் சளி ஒழுகுதல்,இருமல்நுரையீரல் பாதிப்பு,வாந்திபசியின்மைவயிற்றுப் போக்கு,கண்களில் நீர்பாதத்தின் அடிப்பாகம் கெட்டியாகுதல்,வயிற்றின் அடிப்பாகத்தில் சிறிய கொப்பளங்கள் என பல வித அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட நாய்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கிறது.

முதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்
பூஸ்டர் : 6ம் மாதத்தில்
அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்
டிஸ்டம்பர் நோய் தடுப்பூசிகள்:-
Inj. Candur-DHL ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
Inj. Canlin DH ( இரண்டு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
Inj. Canifa ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
In. PentaDog ( 5 வகை நோய் தடுப்பு மருந்துகளை உள்ளடக்கியது.)

3 பார்வோ நோய் ( Parvovirus Infection)
1978 ஆண்டு முதல் இந்த DNA வைரஸ் மூலம் வரும் இந்த பார்வோ நோயினால் பல நாய் குட்டிகள் இறக்கின்றனஅதிகமான காய்ச்சல்பசியின்மைஇரத்தம் கலந்தவயிற்றுப் போக்குவாந்திஎன ஒருவகையும்இதயத்தின் சதையை பாதிக்க கூடிய இன்னொரு வகையும் இருக்கிறது.
முதல் தடுப்பூசி : 6 முதல் 7 ம் வாரத்தில்
பூஸ்டர் : 12வது வாரத்தில்
அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்
கற்பமடைந்த நாயிற்கு பார்வோ தடுப்பூசி சினையின் போது போடுவதால் பிறக்கும் குட்டிகள் முதல் வாரம் முதல் 7ம் வாரம் வரை இந்த நோய் வராமல் தாயிடம் இருந்து பெற்ற எதிர்ப்பு சக்தி காப்பாற்றுகிறது.
பார்வோ நோய் தடுப்பூசிகள்:-
Inj.Candur-P ( நான்கு வகை நோய் தடுப்பு உள்ளடக்கியது)
Inj. Purvodog
Inj. Megavac 6 ( நான்கு வகை நோய் தடுப்பு உள்ளடக்கியது)
4எலிக் காய்ச்சல் ( Leptospirosis)
இந்த நோய் இரண்டு வகையான பாக்டீரியாக்களால் ஏற்படும் வியாதிஅதிகமான காய்ச்சல்வாந்திகாமாலைசிறுநீரக கோளாறு போன்றவைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நாய்கள்இறந்துவிடுகின்றன.
எலிக் காய்ச்சல் தடுப்பூசிகள்:-
முதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்
பூஸ்டர் : 6ம் மாதத்தில்
அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்
Inj. Candur-DHL ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
Inj. Leptorab
Inj. Caniffa ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)

5மஞ்சள் காமாலை ( Hepatitis)
இது ஒரு வைரஸ் கிரிமினால் கல்லீரலை பாதிக்கும் வியாதிஇதனாலும் பல நாய்கள் இறக்கின்றன.
தடுப்பூசிகள்:-
முதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில்
பூஸ்டர் : 6ம் மாதத்தில்
அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும்
Inj.Candur-DHL
Inj. Caniffa ( மூன்று வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
Inj. Canulin-DH ( இரண்டு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)
Inj. Bivrovax (இரண்டு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது
Candur-P (நான்கு வகை நோய் தடுப்பு மருந்துகள் உள்ளடக்கியது)

சுருக்கம்:-தடுப்பு ஊசி வயது
Inj. Purvodog : 9வது வாரத்தில்
Inj. Candur-DHL : 12வது வாரத்தில்
Inj. Rabisin : 16வது வாரத்தில்
inj. Purvodog : 21வது வாரத்தில்
Inj. Magavac : 24வது வாரத்தில்
இதற்கிடையில் முன்பு அட்டைவணையில் குறிப்பட்டபடி குடற்புழுநீக்கம் செய்திருக்கவேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி:-
Inj.Rabisin தடுப்பூசி பின் ஒரு மாதத்திற்கு பின் Inj. Megavac 6 என்ற தடுப்பூசியை போட்டு நம்மிடம் நன்றி காட்டிய நமது செல்ல நாய்க்கு நாமும் நன்றி காட்டுவோம்.

LPG கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி?


‘சமையலறையில் இந்தியப் பெண்கள் வெகு அனாயசமாக வெடிகுண்டை கையாள்கிறார்கள்’. இப்படிக் குறிப்பிட்டிருந்தார் மூத்த சமூக சேவகி ஒருவர். அவர் குறிப்பிட்டது சமையல் எரிவாயு சிலிண்டரை! அதை யாராலும் மறுக்கவும் முடியாது. சமையலுக்குப் பயன்படும் அந்த எரிபொருள், சில நேரங்களில் பலரின் உயிரையும் பலி வாங்கிவிடுகிறது.

சமீபத்தில் சென்னையில் நடந்தது அந்தச் சம்பவம். எரிவாயு சிலிண்டர் வெடித்த நிகழ்வில் தண்டையார்பேட்டையில் வசித்து வந்த கணவன், மனைவி இருவருமே இறந்து போனார்கள்.

இது நடந்து இரண்டே நாட்கள் கழித்து, ஆந்திராவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் அதே போன்ற விபத்து… எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரரும் அவர் மனைவியும் இறந்து போனார்கள். இப்படித் தொடர்கிற கேஸ் சிலிண்டர் விபத்துகள் நம்மைக் கலங்க வைக்கின்றன.

மையலுக்குப் பயன்படும் கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு என்ன காரணம், அதைத் தவிர்க்க முடியுமா, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? இவையெல்லாம் சமையலறையில் புழங்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். அவற்றைப் பற்றி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளர் (எல்பிஜி) சந்திரனிடம் பேசினோம். பொறுமையாக, தெளிவாக நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார் சந்திரன்…

‘‘தமிழகம் முழுக்க இண்டேன் கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒருகோடியே 7 லட்சம்பேர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புதிதாக கனெக்‌ஷன் பெற்றிருக்கிறார்கள். சமீபத்தில் வடசென்னையில் நடந்த விபத்து மட்டுமல்ல… தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் விபத்துச் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் அலட்சியமே!பெரும்பாலானவர்கள் சிலிண்டர் கனெக்‌ஷனை பெறுவதற்காக காட்டும் ஆர்வத்தையோ, செய்யும் முயற்சிகளையோ அதைப் பராமரிப்பதில்காட்டுவதில்லை. கேஸ் சிலிண்டருக்கான புது கனெக்‌ஷனைப் பெறும்போதே அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், என்னென்ன பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றவேண்டும் போன்ற விஷயங்களைக் கற்றுத்தருவார்கள். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலே போதும்…எந்த பிரச்னையும் வராது’’ என்கிறார் சந்திரன்.
சிலிண்டர் விபத்து நடப்பதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?
‘‘தினமும் தூங்கப் போவதற்கு முன்னால் ரெகுலரேட்டரை ஆஃப் செய்துவிட வேண்டும். நிறையபேர் அதைப் பின்பற்றுவதில்லை. ரெகுலேட்டரில் இருந்து கேஸ் கசிவதால்தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. கேஸ் சிலிண்டரின் உள்ளே இருக்கும் புரோப்பேன் (Propane), பூட்டேன்   (Butane) ஆகியவை திரவ வடிவில்தான் இருக்கும். அதுதான் அடுப்பு வழியாக நமக்கு வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகும்போது எளிதில் உணர்ந்து கொள்ள உதவியாக எத்தில் மெர்கேப்டன் (Ethyl Mercaptan) என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த கெமிக்கல்தான் கேஸ் லீக்காவதை முதலில் எச்சரிக்கை செய்யும். அந்த வாசனையை உணர்ந்ததும் உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும். இல்லையென்றால் சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம் தரையில் பரவிவிடும். சின்ன தீப்பொறி  ஏற்பட்டாலோ, எலெக்ட்ரிக்கல் ஸ்விட்சை ஆன் செய்தாலோ பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். இப்படித்தான் சிலிண்டர் விபத்து நடக்கிறது.
சிலர் அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அந்த இடைவெளியில் பால் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். திரும்ப அடுக்களைக்குள் வருபவர்கள், அடுப்புதான் அணைந்துவிட்டதே என்று நினைப்பார்கள். அல்லது அடுப்பை தாங்கள் அணைக்கவில்லை என்பதை மறந்து போய்விடுவார்கள். ஆனால், சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறிக் கொண்டிருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி, வீடு முழுவதும் நிரம்பி விபத்துகளை உருவாக்கிவிடும். எனவே, அடுப்பில் எதையாவது வைத்திருந்தால் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சில வீடுகளில் கிச்சனோடு பூஜையறையும் சேர்ந்தே இருக்கும். விளக்கேற்றுவது அல்லது ஊதுவத்தி கொளுத்துவது போன்றவற்றை செய்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு வெளியே போய்விடுவார்கள். இந்த மாதிரியான நேரங்களில் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது.
சிலர் கிச்சனிலேயே ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருப்பார்கள். சிலிண்டர் லீக்ஆகும் நேரத்தில் இவற்றுக்கு மின்சாரம் வரும் ஸ்விட்ச் போர்டில் இருந்து சின்ன ஸ்பார்க் வந்தாலும் எளிதில் தீ பற்றிக் கொள்ளும். எனவே, கிச்சனில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
மாடுலர்கிச்சன் என்ற பெயரில் சிலர் சிலிண்டரை மர கப்போர்டுகளால் பூட்டி வைத்துவிடுவார்கள். இதனால் கேஸ் லீக் ஆனால் கூட ஆரம்பத்திலேயே தெரியாமல் போய்விடும். எந்த மாடல் கிச்சனாக இருந்தாலும் சிலிண்டரை வெளியில், காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
சிலர் ஜன்னலுக்கு அருகில் கேஸ் அடுப்பை வைத்திருப்பார்கள். அதிகமான காற்று அடிக்கும் நேரங்களில் அடுப்பு அணைந்து போய்விடும். வேறு வேலைகளில் பிஸியாக இருந்தால், அது கவனத்துக்கு வராமலே போய்விடும். இப்படி லீக் ஆகும் கேஸ் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.
முன்பெல்லாம் அடுப்பைப் பற்ற வைக்க தீக்குச்சிகளைப் பயன்படுத்தினோம். இப்போது லைட்டர் கருவி வந்து விட்டது. இது எளிதாக இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை.உண்மையை சொல்லப் போனால் லைட்டர்களாலும் விபத்துகள் நடக்கின்றன. கையில் வைத்து ‘டக்டக்’ என்று தட்டிக் கொண்டிருக்கும் போது கேஸ் லீக் ஆகி, கவனிக்காமல் விட்டுவிட்டால் குப்பென உடலிலேயே நெருப்பு பற்றிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் அலட்சியம் கூடாது. அடுப்பை ஆன் செய்த அடுத்த சில விநாடிகளுக்குள் நெருப்பை பற்ற வைப்பது ரொம்ப முக்கியம்’’.
கேஸ் லீக் ஆனால் செய்ய வேண்டியது என்ன?
‘‘உடனடியாக அடுப்பையும் ரெகுலேட்டரையும் ஆஃப் செய்துவிட்டு ஜன்னல்  மற்றும் கதவுகளை திறந்து வைக்கவேண்டும். இதனால் வீட்டின் உள்ளே பரவியிருக்கும் கேஸ் வெளியே போய்விடும். ரெகுலேட்டரை சிலிண்டரில் இருந்து டிஸ்கனெக்ட் செய்து (பிரித்து) விடவேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேஃப்டி கேப்பால் லாக் செய்து விடவேண்டும்.
லீக்கேஜ் ஆன உடனே சம்பந்தப்பட்ட ஏரியா சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் தெரிவித்து விடுவது நல்லது. ஒவ்வொரு பத்தாயிரம் வாடிக்கையாளருக்கும் ஒருவர் என்ற கணக்கில் இண்டேன் கேஸ் நிறுவனத்தின் சார்பில் மெக்கானிக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து பிரச்னையை சரிசெய்து கொடுப்பார்கள். சிலிண்டரில் பிரச்னை என்றால் அதை மாற்றித் தந்துவிடுவார்கள். அதன்பிறகு பயன்படுத்தலாம். இந்த சேவை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே. இது தவிர மாலை 6 மணி முதல் காலை 9 மணி வரை உள்ள நேரங்களில் சிலிண்டர் லீக் ஆகிறது என்றால்1800425247247 என்ற டோல்ப்ரீஎண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சென்டரில் புகாரை பதிவு செய்த உடனே, அந்தத் தகவல் உங்கள் ஏரியாவில் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர் மெக்கானிக், சேல்ஸ் ஆபிஸர், ஏரியா மேனேஜர் ஆகியோருக்கு போய்ச் சேர்ந்து விடும். அவர்கள் உடனடியாக வந்து சரிசெய்து கொடுப்பார்கள்’’.
சிலிண்டர் விபத்தைத் தடுக்க எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்?
‘‘கேஸ் சிலிண்டருக்கான புது இணைப்பைப் பெறும் போது, உங்கள் பகுதி டிஸ்ட்ரிப்யூட்டருக்கான அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்கை வரவழைத்து அவர் மூலமாக சிலிண்டரை இணைப்பது முக்கியம். ஒருவேளை அவர்கள் செய்ய மறுத்தால் ‘டெமோ’ செய்து காட்டும்படி கேட்கவேண்டும். முறையாக எப்படி இணைப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும். சிலிண்டர் டெலிவரி ஆகும் போது, அதை அடுப்புடன் இணைத்து எரிய வைத்துப் பார்க்க வேண்டும். பிரச்னை ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சிலிண்டர் இணைப்புப் பெறும்போது, எரிவாயு நிறுவனத்தில் கொடுக்கும் ரெகுலேட்டர், டியூப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் பிரச்னை எதுவும் ஏற்பட்டால் ஏரியா டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் சொல்லி, புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும். இப்படி மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை. ஆனால், நீங்களாக சாதாரண கடைகளில் கிடைக்கும் தரமற்ற ரெகுலேட்டர், டியூப்களை வாங்கி எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம்.  இந்த தரமற்ற ரெகுலேட்டர், டியூப்களின் வழியாகத்தான் கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்துகள் அதிகம்நடக்கின்றன. 2 அடுக்கு வயர்களால் ஆன திக்கான சுரக்‌ஷா டியூப்கள் எப்போதும் நிரந்தரமாக இருக்கும். ஒரு மீட்டர், 1.2 மீட்டர் என இரு அளவுகளில் கிடைக்கிறது. 5 வருட வாரண்டியுடனும் தருகிறார்கள். எலி கடித்தாலும் டேமேஜ் ஆகாமல் உறுதியாக இருக்கும்… ஆபத்துகளை தவிர்க்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்களை ஒரே இடத்தில் குவித்து வைக்கக் கூடாது. ஒரு வீட்டில் 2 சிலிண்டர்களுக்கு மேல் வைத்திருப்பதும் ஆபத்தானதே. நல்ல காற்றோட்டமான இடத்தில், சிலிண்டர்களை வைப்பது நல்லது.
‘துருப்பிடித்த, மட்டமான சிலிண்டர்களை எங்களுக்குக் கொடுக்கிறார்கள்’ என நிறையபேர் புகார் சொல்கிறார்கள். ஒரு சிலிண்டரின் ஆயுட்காலம்10 வருடங்கள். 10 வருடங்களில் சிலிண்டர் எங்கெங்கேயோ பயணம் செய்திருக்கும். எனவே, சிலிண்டரை மேற்பார்வையாக பார்த்து அதன் தரத்தை தீர்மானிக்க முடியாது. சிலிண்டரின் மேற்பகுதியில் அது தயாரான தேதி, அதன் ஆயுள் முடிவுறும் தேதி உட்பட எல்லாமே இருக்கும். அதன் ஆயுட்காலத்தையும் தாண்டி புழக்கத்தில் இருப்பது தெரிந்தால் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். கேஸ் சிலிண்டர் தொடர்பான எல்லா புகார்களுக்கும்18002333555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் இல்லங்களில் சிலிண்டரை வாங்குவதில் சிரமமும் தேவையில்லாத குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்காகவே மாலை 6 மணிக்கு மேல் சிலிண்டர் விநியோகம் செய்யும் வசதியும் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சிலிண்டர் டெலிவரி செய்ய வரும்போது அதன் எடையை பரிசோதித்துக் கொள்வது அவசியம். சிலிண்டரின் எடை 15 கிலோ, உள்ளிருக்கும் கேஸ் எடை 14.2  கிலோ இரண்டும் சேர்த்து 29.5 கிலோ இருக்க வேண்டும். இந்த எடை விவரம் சிலிண்டரிலேயே குறிக்கப்பட்டிருக்கும். அதற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ 100 கிராம் இருக்கலாம். அதற்கும் குறைவாக இருந்தால் சிலிண்டரை திருப்பி எடுத்துப் போக சொல்லிவிட்டு, வாடிக்கையாளர் மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
ஐஎஸ்ஐ முத்திரையுள்ள தரமான அடுப்பைப யன்படுத்தவேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியமானது. பர்னரை சுத்தம் செய்கிறேன் என்று அடுப்பைக் கழற்றி, ஊற வைத்து சுத்தம் செய்யத் தேவையில்லை. அவ்வப்போது சுத்தம் செய்தால் போதும்.
2 வருடங்களுக்கு ஒரு முறை ஏரியா கேஸ் சிலிண்டர் மெக்கானிக்கை அழைத்து அடுப்பு, கனெக்‌ஷன் ஆகியவற்றை சோதித்துக் கொள்வது அவசியம். இதற்கு கட்டணமாக ரூ.70 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.
அடுப்பருகில் நின்று சமைக்கும்போது தீ பரவாமல் இருக்க Fire Resitant Apron என்றொரு கவர் இருக்கிறது. தீப்பிடித்தாலும் எரியாத தன்மை கொண்ட இதை சமைக்கும்போது பயன்படுத்தலாம். இது இண்டேன் டிஸ்ட்ரிபியூட்டர்களிடமும் கிடைக்கிறது.
சில முக்கியக் குறிப்புகள்… விளக்கங்கள்!
Image

***
Image
மேலும் உங்கள் புகார்களை தெரிவிக்க கீழ்கண்ட எண்களைத் தொடர்புகொள்ளலாம். (இண்டேன் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்)…
சென்னை: 044-24339236, 044-24339246
கோயம்புத்தூர்: 0422-2245902, 0422-2247396
மதுரை: 0452-2533956
திருச்சி: 0431-2740066 
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.