Sunday, 15 May 2016

பட்டப்படிப்பின் பெயர்கள் பற்றிய ஒரு தவகல் !!


பட்டப்படிப்பு  பெயர்கள்...

1. அகச்சுரப்பியியல் - Endocrinology
2. அடிசிலியல் - Aristology
3. அடையாளவியல் - Symbology
4. அண்டவியல் - Universology
5. அண்டவியல் - Cosmology
6. அணலியல் - Pogonology
7. அருங்காட்சியியல் - Museology
8. அருளரியல் - Hagiology
9. அளவீட்டியல் - Metrology
10. அற்புதவியல் - Aretalogy
11. ஆடவர் நோயியல் - Andrology
12. ஆய்வு வினையியல் - Sakanology
13. ஆவணவியல் - Anagraphy
14. ஆவியியல் - Spectrology
15. ஆறுகளியல் - Potamology
16. இசையியல் - Musicology
17. இந்தியவியல் - Indology
18. இயற்பியல் - Physics
19. இரைப்பையியல் - Gastrology
20. இலக்கிலி இயல் - Dysteleology
21. இறை எதிர் இயல் - Atheology
22. இறைமையியல் - Pistology
23. இறைமையியல் - Theology
24. இன உறுப்பியல் - Aedoeology
25. இன்ப துன்பவியல் - Algedonics
26. இனப் பண்பாட்டியல் - Ethnology
27. இனவியல் - Raciology
28. ஈரிடவாழ்வி இயல் - Herpetology
29. உடலியல் - Physiology
30. உடற் பண்டுவஇயல் - Phytogeography
31. உடற்பண்பியல் - Somatology
32. உடுவியக்கவியல் - Asteroseismology
33. உணர்வகற்றியல் – Anesthesiology
34. உயிர் மின்னியல் - electro biology
35. உயிர்ப்படிமவியல் - Paleontology
36. உயிர்ப்பொருளியல் - Physiology
37. உயிர்மியியல் - Cytology
38. உயிரித் தொகை மரபியல் - Population Genetics
39. உயிரித்தொகை இயக்க இயல் - Population
Dynamics
40. உயிரிய இயற்பியல் - Biophysics
41. உயிரிய மின்னணுவியல் - Bioelectronics
42. உயிரிய வேதியியல் - Biochemistry
43. உயிரிய வேதிவகைப்பாட்டியல் - Biochemical taxonomy
44. உயிரியத்தொழில் நுட்ப இயல் - Biotechnology
45. உயிரியப் பொறியியல் - Bioengineering
46. உயிரியல் - Biology
47. உயிரினக் காலவியல் - Bioclimatology
48. உயிரினச் சூழ்வியல் - Bioecology
49. உருவகவியல் - Tropology
50. உருள்புழுவியல் - Nematology
51. உரைவிளக்கியல் - Dittology
52. உளவியல் - Psychology
53. ஊட்டவியல் - Trophology
54. எகிப்தியல் - Egyptology
55. எண்கணியியல் - Numerology
56. எரிமலையியல் - Volconology
57. எலும்பியல் - Osteology
58. எலும்பு நோய் இயல் - Osteo pathology
59. எறும்பியல் - Myrmecology
60. ஒட்பவியல் - Pantology
61. ஒப்பனையியல் - Cosmetology
62. ஒலியியல் - Phonology
63. ஒவ்வாமை இயல் - Allergology
64. ஒழுக்கவியல் - Ethics
65. ஒளி அளவை இயல் - Photometry
66. ஒளி இயல் - Photology
67. ஒளி உயிரியல் - Photobiology
68. ஒளி விளைவியல் - Actinology
69. ஒளி வேதியியல் - Photo Chemistry
70. ஒளித்துத்த வரைவியல் - Photozincography
71. ஓசையியல் - Acoustics
72. கசிவியல் - Eccrinology
73. கட்டடச்சூழலியல் - Arcology
74. கடப்பாட்டியல் - Deontology
75. கடல் உயிரியல் - Marine biology
76. கடற் பாசியியல் - Algology
77. கண்ணியல் - Opthalmology
78. கணிப்பியல் - Astrology
79. கதிர் மண்டிலவியல் - Astrogeology
80. கதிர் விளைவியல் - Actinobiology
81. கரிசியல் - Hamartiology
82. கரிம வேதியியல் - Organic Chemistry
83. கருத்தியல் - Ideology
84. கருதுகை விலங்கியல் - Cryptozoology
85. கருவியல் - Embryology
86. கருவியல் - Embryology
87. கல்வி உளவியல் - Educational Psychology
88. கலைச்சொல்லியல் - Terminology
89. கழிவியல் - Garbology
90. கனி வளர்ப்பியல் - Pomology
91. கனிம வேதியியல் - inorganic chemistry
92. கனியியல் - Carpology
93. கனியியல் - Pomology
94. காளானியல் - Mycology
95. காற்றழுத்தவியல் - Aerostatics
96. காற்றியக்கவியல் - Aerodynamics
97. காற்றியல் - Anemology
98. கிறித்துவியல் - Christology
99. குடல் புழுவியல் - Helminthology
100. குருட்டியல் -Typhology
101. குருதி இயல் - Haematology / Hematology
102. குளுமையியல் - Cryology
103. குற்றவியல் - Criminology
104. குறிசொல்லியல் - Parapsychology
105. குறிப்பியல் - Cryptology
106. குறியீட்டியல் - Iconology
107. கெல்டிக் சடங்கியல் - Druidology
108. கேட்பியல் - Audiology
109. கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)
-Pasimology
110. கையெழுத்தியல் - Graphology
111. கொள்ளை நோயியல்- Epidomology
112. கோட்பாட்டியல் - Archology
113. கோளியல் - Uranology
114. சங்குஇயல் - Conchology
115. சமயவிழாவியல் - Heortology
116. சரி தவறு ஆய்வியல் - Alethiology
117. சாணவியல் - Scatology
118. சிலந்தி இயல் - Araneology
119. சிலந்தியியல் - Arachnology
120. சிறப்புச் சொல் தோற்றவியல் - Onomatology
121. சீனவியல் - Sinology
122. சுரப்பியியல் - Adenology
123. சூழ் வளர் பூவியல் - Anthoecology
124. சூழ்நிலையியல் - Ecology
125. செதுக்கியல் - Anaglyptics
126. செய்கை இயல் - Dactylology
127. செல்வ வியல் - Aphnology
128. செல்வவியல் - Plutology
129. செவ்வாயியல் - Areology
130. செவியியல் - Otology
131. சொல்லியல் - Lexicology
132. சொல்லியல் - Accidence
133. சொற்பொருளியல் - Semasiology
134. தசையியல் - Myology
135. தண்டனையியல் - Penology
136. தமிழியல் - Tamilology
137. தன்மையியல் - Axiology
138. தன்னியல் - Autology
139. தாவர உள்ளியல் - Phytotomy
140. தாவர நோய் இயல் - Phytopathology
141. தாவர வரைவியல் - Phytography
142. தாவரஊட்டவியல் - Agrobiology
143. தாவரவியல் - Botany
144. திணைத் தாவர இயல் - Floristics
145. திணையியல் - Geomorphology
146. திமிங்கில இயல் - Cetology
147. திருமறைக் குறியீட்டியல் - Typology
148. திருமனையியல் - Naology
149. திரைப்படவியல் - Cinimatography
150. தீவினையியல் -Ponerology
151. துகள் இயற்பியல் - Particle physics
152. துகளியல் - Koniology
153. துதிப்பாவியல் - Hymnology
154. துயிலியல் - Hypnology
155. தூய இலக்கியல் - Heirology
156. தூள்மாழை இயல் - Powder Metallurgy
157. தேர்தலியல் -Psephology
158. தேவதை இயல் - Angelology
159. தேவாலயவியல் - Ecclesiology
160. தேனீ இயல் - Apiology
161. தொடர்பிலியியல் - Phenomenology
162. தொண்டை இயல் - Pharyngology
163. தொல் அசீரியர் இயல் - Assyriology
164. தொல் உயிரியல் - Palaeontology
165. தொல் சூழ்நிலையியல் - Paleo ecology
166. தொல் பயிரியல் - Paleobotany
167. தொல் மாந்தவியல் - Paleoethnology
168. தொல் மீனியல் - Paleoichthylogy
169. தொல் விலங்கியல் - Palaeozoology
170. தொல்தோற்ற இனவியல் (மாந்த - மாந்தக்குரங்கினவியல்) - Anthropobiology
171. தொல்லிசையியல் - Ethnomusicology
172. தொல்லியல் - Archaeology
173. தொல்லினவியல் - Paleethnology
174. தொல்லெச்சவியல் - Archaeozoology
175. தொழில் நுட்பச் சொல்லியல் - Orismology
176. தொழில் நுட்பவியல் - Technlogy
177. தொழிற்சாலை வேதியியல் - industrial chemistry
178. தொழு நோயியல் - Leprology
179. தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் - Pestology
180. தொன்மவியல் - Mythology
181. தோட்டுயிரியியல் - Astacology
182. தோல்நோயியல் - Dermatology
183. நச்சியியல் - Virology
184. நடத்தையியல் - Praxeology
185. நரம்பியல் - Neurology
186. நல்லுயிரியல் - Pneumatology
187. நலிவியல் - Astheniology
188. நன்னியல் - Agathology
189. நாடி இயல் - Arteriology
190. நாணயவியல் - Numismatology
191. நாளவியல் - Angiology
192. நிகழ்வியல்- Chronology
193. நிலத்தடி நீரியல் - Hydrogeology
194. நிலநடுக்கவியல் - Seismology
195. நிலாவியல் - Selenology
196. நிலை நீரியல் - Hydrostatics
197. நீத்தாரியல் - Martyrology
198. நீர் வளர்ப்பியல் - Hydroponics
199. நீர்நிலைகளியல் - Limnology
200. நீராடல் இயல் - Balneology
201. நுண் உயிரியல் - Microbiology
202. நுண் வேதியியல் - Microchemistry
203. நுண்பொருளியல் - Micrology
204. நுண்மி இயல் - Bacteriology
205. நுண்மின் அணுவியல் - Micro-electronics
206. நூல் வகை இயல் - Bibliology
207. நெஞ்சக வியல் - Cardiology
208. நெடுங்கணக்கியல் - Alphabetology
209. நெறிமுறையியல் - Aretaics
210. நொதி இயல் - Enzymology
211. நொதித் தொழில் நுட்பவியல் - Enzyme tecnology
212. நோய் இயல் - Pathology
213. நோய்க்காரணவியல் - Aetiology
214. நோய்க்குறியியல் - Symptomatology
215. நோய்த்தடுப்பியல் - Immunology
216. நோய்த்தீர்வியல் - acology
217. நோய்நீக்கியல் - Aceology
218. நோய்வகையியல் - Nosology
219. நோயாய்வியல் - Etiology
220. நோயியல் - Pathology
221. படஎழுத்தியல் - Hieroglyphology
222. படிகவியல் - crystallography
223. பணிச்சூழ் இயல் - Ergonomics
224. பத்தியவியல் - Sitology
225. பயிர் மண்ணியல் - Agrology
226. பயிரியல்-Phytology
227. பரியியல் - Hippology
228. பருப் பொருள் இயக்கவியல் - kinematics
229. பருவ இயல் - Phenology
230. பருவப் பெயர்வியல் - Phenology
231. பல்லியல் - Odontology
232. பழங்குடி வழக்கியல் - Agriology
233. பழம்பொருளியல் - Paleology
234. பற் கட்டுப்பாட்டியல் - Contrology
235. பறவை நோக்கியல் - Ornithoscopy
236. பறவையியல் - Paleornithology
237. பனிப்பாளவியல் - Glaciology
238. பாசி இயல் - Phycology
239. பாப்பிரசு சுவடியியல் - Panyrology
240. பாம்பியல் - Ophiology
241. பார்ப்பியல் Neossology
242. பாலூட்டியல் - Mammalogy
243. பாறைக் காந்தவியல் - Palaeo Magnetism
244. பாறையியல் - Lithology
245. பாறை அமைவியல் - Petrology
246. பிசாசியல் - Diabology
247. பிளவையியல் - Oncology
248. புத்த இயல் - Buddhology
249. புத்தியற்பியல் - New physics
250. புதிரியல் - Enigmatology
251. புதைபடிவ இயல் - Ichnology
252. புல உளவியல் - Faculty Psychology
253. புல்லியல் - Agrostology
254. புவி இயற்பியல் - Geo physics
255. புவி உயிர்ப் பரவியல் - Biogeography
256. புவி வடிவ இயல் - Geodesy
257. புவி வளர் இயல் - Geology
258. புவி வேதியியல்- Geo-chemistry
259. புவியியல் - Geography
260. புவிவெளியியல் - Meteorology
261. புள்ளியல் - Ornithology
262. புறமண்டிலவியல் - Exobiology
263. புற்று நோய் இயல் - Cancerology
264. பூச்சி பொட்டு இயல் - Acarology
265. பூச்சியியல் - Entomology
266. பூச்சியியல் - Entomology
267. பூச்சியியல் - Insectology
268. பெயர்வன இயல் - Acridology
269. பெரு வாழ்வியல் - macrobiotics
270. பேயியல் - Demonology
271. பொதுஅறிவு இயல் - Epistemology
272. பொருள்சார் வேதியியல் - Physical Chemistry
273. போட்டியியல் - Agonistics
274. போதனையியல் - Patrology
275. மகளிர் நோய் இயல் - Gynaecology/ Gynecology
276. மண்டையோட்டியல் - Craniology
277. மண்ணியல் - Pedology
278. மண்புழையியல் - Aerology
279. மணி இயல் - Campanology
280. மணிவியல் - Gemology
281. மதுவியல் - Enology (or Oenology)
282. மர ஒளி வரைவியல் - Photoxylography
283. மரபு இயைபியல் - Genecology
284. மரபு வழியியல் - Geneology
285. மரவரியியல் - Dendrochronology
286. மரவியல் - Dendrology
287. மருத்துவ அளவீட்டியல் - Posology
288. மருத்துவ நோயியல் - Clinical pathology
289. மருத்துவ மரபணுவியல் - Clinical genetics
290. மருந்தாளுமியல் - Pharmacy
291. மருந்தியல் - Pharmacology
292. மருந்து வேதியியல் - Medicinal chemistry
293. மலையியல் - Orology
294. மழையியல் - Ombrology
295. மனக்காட்சியியல் - Noology
296. மனநடையியல் - Nomology
297. மன்பதை உளவியல் - Social Psychology
298. மன்பதையியல் - Sociology
299. மனைவளர்உயிரியல் - Thremmatology
300. மாந்த இனவியல் - Ethnology
301. மாவியல் - Morphology
302. மானிடவியல் - Anthropology
303. மின் ஒலியியல் - Electro-acoustics
304. மின்வேதியியல் - Electrochemistry
305. மின்னணுவியல் - Electronics
306. மீனியல் - Ichthyology.
307. முகிலியல் - Nephology
308. முட்டையியல் - Oology
309. முடியியல் - Trichology
310. முதற்கோட்பாட்டியல் - Archelogy / Archology
311. முதியோர் கல்வியியல் - Andragogy
312. முதுமையியல் - Gerontology
313. முரண் உயிரியல் - Teratology
314. முரணியல் - Heresiology
315. முறையியல் - Systomatology
316. முனைப்படு வரைவியல் - Polarography
317. மூக்கியல் - Rhinology
318. மூதுரையியல் - Gnomology
319. மூப்பியல் - Gerontology
320. மூலக் கூறு உயிரியல் - Molecular biology
321. மெய் அறிவியல் - Philosophy
322. மெய்ம்மி நோயியல் - Histopathology
323. மெய்ம்மியியல் - Histology
324. மேகநோயியல் - Syphilology
325. மொழியியல் - Philology
326. மோப்பவியல் - Olfactology
327. ரூனிக்கியல் - Runology
328. வகையியல் - Taxology
329. வண்ணவியல் - Chromatology
330. வழக்குப் பேச்சியல் - Dialectology
331. வழிபாட்டியல் - Liturgiology
332. வளி நுண்மியல்- Aerobiology
333. வளிநுகரியியல் - Aerobiology
334. வாந்தியியல் - Emetology
335. வாய்நோயியல் - Stomatology
336. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337. வான இயற்பியல் - Astrophysics
338. வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) - Aerophilately
339. வானியல் - Astronomy
340. வானிலை இயல் - Neteorology/ Astrometeorology
341. வானோடவியல் - Aerodonetics
342. விசை இயக்க இயல் - Kinetics
343. விண்கற்களியல் – Aerolithology
344. விண்ணுயிரியியல் - Astrobiology
345. விண்பொருளியல் - Astrogeology
346. விந்தையியல் - Thaumatology
347. விலங்கியல் - Zoology
348. விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) - Agronomics
349. வெளிற்றியல் - Agnoiology
350. வேதியியல் - Chemistry
351. வேதிவகைப்பாட்டியல் - Chemotaxonomy
352. வேர்ச்சொல்லியல் - Etymology


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 12 May 2016

pH (pH stands for 'potential of Hydrogen) என்றால் என்ன?


வேதியியலில், ஒரு கரைபொருளைக் (Solute) கரைக்கும் கரைப்பானாக (Solvent) நீர் இருக்கும் திரவத்தினை (Aqueous Solution) மதிப்பிடும் ஒரு மதிப்பாகும். 

இது 0வில் இருந்து 14 வரையில் மதிப்புகளைக் கொண்டிருக்கும். இரு வேறு எல்லைகளில் இருக்கும் பண்பினைக் குறிக்கும் மதிப்புகள் இவை. அதாவது அமிலத்தன்மையையும் (Acidic) காரத்தன்மையையும் (basic or alkaline) குறிக்கின்றன. அமிலத்தன்மையும் காரத்தன்மைய
ும் இல்லாது இருப்பது நடுநிலை (Neutral) எனப்படும்.

pH அளவையில் 7 என்பது நடுநிலை. 7க்கு கீழே இருப்பவை அமிலத்தன்மையும், 7க்கு மேலே இருப்பவை காரத்தன்மையும் கொண்டிருக்கும். 7க்கு கீழே குறையும் ஒவ்வொரு மதிப்பும் அதன் முந்தைய மதிப்பை விட 10 மடங்கு அதிகமான அமிலத்தன்மையைக் கொண்டிருக்கும். அதே போன்று 7க்கு மேலே கூடும் ஒவ்வொரு மதிப்பும் அதன் முந்தைய மதிப்பை விட 10 மடங்கு அதிகமான காரத்தன்மையைக் கொண்டிருக்கும்.

சுத்தமான நீர் நடுநிலை. அதன் pH மதிப்பு 7 ஆகும். அதனுடன் வேதியியல் பொருட்கள் கலக்கப்படும்பொழுது, அப்பொருளைப் பொருத்து அது அமிலத்தன்மையுடையதாகவோ காரத்தன்மையுடையதாகவோ மாறும்.

உதாரணம் கூறி விளங்க வைப்பதானால், வெப்பமும் குளிரும் (Hot and Cold) இரு வேறு எல்லைகள். அவைகளை அளக்கும் அளவை வெப்பநிலை (Temperature) என்கிறோம். சுடுநீரையும் குளிர் நீரையும் ஒன்றாகக் கலந்தால் அவைகள் ஒன்றின் தன்மையை ஒன்று போக்கிக்கொண்டு சமநிலைக்கு வரும். அதே போன்று அமிலமும், காரமும் இருவேறு எல்லைகள். அவற்றை அளக்கும் அளவை pH மதிப்பு என்கிறோம். அமிலத்தையும், காரத்தையும் ஒன்றாகக் கலந்தால், அவைகள் ஒன்றை ஒன்று போக்கிக்கொண்டு தண்ணீராக மாறிவிடும்.

அதி அமிலத்தன்மையும், அதி காரத்தன்மையும் வினைபுரிபவைகள் (Reactives).

pH கண்டுபிடித்தவர் யார்? pHன் விரிவாக்கம் என்ன?

டென்மார்க் நாட்டு விஞ்ஞானியான, Søren Peder Lauritz Sørensen (SPL Sørensen) என்பார் Carlsberg Laboratoryல் 1909ம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தினார். அப்பொழுது அவர் p↓H என்றுதான் குறிப்பிட்டிருந்தார். அதாவது p என்ற சிறிய எழுத்திற்கு அடுத்து Subscriptஆக H என்ற பெரிய எழுத்து வரும். அதாவது Power of Hydrogen என்பதைக் குறிக்குமாம். ஆனால், ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன் மொழிகளிலும் இதனைக் குறிப்பிடுகின்றனர். எதுவாக இருந்தாலும் ஒரே பொருளைத்தான் தருகின்றன.

pH எப்படி மதிப்பிடப்படுகின்றது?

ஒரு கரைசலில் இருக்கும் ஹைட்ரஜன் அயனிகளின் மோல் மதிப்புச் செறிவினைக் (Molar Concentration) கொண்டு pH மதிப்பு மதிப்பிடப்படுகின்றது. கணிதரீதியாக, இதனை ஹைட்ரஜன் அயனிகளின் மோல் மதிப்புச் செறிவின் பத்தினடிமான மடக்கையின் எதிர் மதிப்பாகச் சொல்வார்கள்.

pH = -log↓10 [H↑+]

ஹைட்ரஜன் அயனிகளுக்குப் பதிலாக ஹைட்ராக்ஸானியம் (H↓3O) அயனிகளைக் கொண்டும் குறிப்பிடுவார்கள்.

ஹைட்ரஜன் அயனிகள் கூடக் கூட அமிலத்தன்மை அதிகரிக்கும்; குறையக் குறைய காரத்தன்மை அதிகரிக்கும். அல்லது,
ஹைட்ராக்ஸானிய அயனிகள் குறையக் குறைய அமிலத்தன்மை அதிகரிக்கும்; கூடக் கூட காரத்தன்மை அதிகரிக்கும்.

அதனால்தான், நம் உடலில் அமிலம் பட்டுவிட்டால் தண்ணீரை ஊற்றுகிறோம். அது அமிலத்துடன் சேர்ந்து ஹைட்ரஜன் அயனிகளைக் குறைத்து விடும். அதைவிட காரத்தன்மை உடையவைகளைச் சேர்த்தால் இன்னும் விரைவாக அமிலத்தன்மை மட்டுப்பட்டு விடும். (இங்கே காரம் என்று குறிப்பிடுவது மிளகாய் காரம் அல்ல. அயனி உப்பு என்று பொருள் கொள்க.)

உதாரணம்
அமிலம் = வினிகர், எலுமிச்சை சாறு, மின்கல அமிலம், வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலம், ஆரஞ்சு சாறு, கடுங்காப்பி, சிறுநீர், எச்சில்
காரம் = சலவைத் தூள், அம்மோனியா, கடல் நீர், சமையல் சோடா, சவர்க்காரம், ப்ளீச்சிங் தூள்

உதவித்தளங்கள் : http://en.wikipedia.org/wiki/PHhttp://www.epa.gov/acidrain/measure/ph.htmlhttp://www.engineeringtoolbox.com/ph-d_483.htmlhttp://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/chemical/ph.html

2016 சட்டசபை தேர்தலில் யார் ஆளும் கட்சி !!


Tamilnadu Assembly Election 2016 Schedule
திமுக கூட்டணி - திமுக 24% காங் 4% மு.லீ. - 3% - (பு.த பெ.ம.க சிவகாமியின் கட்சி ) - 1% இதர ஓட்டுகள் - 3% மொத்தம் 35%, அதிமுக 30% இதர ஓட்டுக்கள் - 3% மொத்தம் 33%. ( கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த 44% என்பது எப்படி கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்த 44% என்பது அதிமுகவின் ஒரிஜினல் வாக்கு சதவீதம் கிடையாது) . கே.நல.கூ = தேமுதிக 5%, வைகோ 3%, வி.சி 2%, கம்.யூ - 1.5%, தா.ம.க - 1% இதர ஓட்டுகள் - 4.5% , மொத்தம் 17%, பா.ம.க - 5%, பா.ஜ.க - 3%, இதர ஜாதி கட்சிகள், சுயேட்சைகள் = 7% ஆக மொத்தம் 35 33 17 5 3 7 = 100%. . இதர ஓட்டுக்கள் என்பது, நடுநிலை புதிய வாக்காளர்கள் சுமார் 10-12% ( திமுகவை விட அதிமுகவுக்கு 4 - 5% அதிகம் ஒட்டு உண்டு. அது போல, தே. நல. கூ -க்கு நடுநிலை புதிய வாக்காளர்கள் = 4-5% ஒட்டு கிடைக்கும். இது தான் இப்போதைய நிலவரம். இதுதான் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.




இதில் ஒவ்வொரு கட்சியின் ஆதரவாளர்கள் 100% ஒட்டு போடுவார்கள் என்று நினைக்க முடியாது. அதிக பட்சம் 80% ஒட்டு போடுவார்கள் என்று எடுத்து கொண்டாலும் 20% வாக்காளர்கள் ஒட்டு போடமாட்டார்கள். ஓட்டு போடாதவர்கள் எண்ணிக்கை எந்த கட்சியில் அதிகமோ, அவர்களால் அந்த கட்சிக்கு பாதகம் ஏற்படலாம். அதுபோல இதர ஜாதிகட்சிகள் சுயேட்சைகளின் 7% சதவீத வாக்குகள் திமுக அல்லது அதிமுக அல்லது கே.நல.கூ-க்கு சாதகமாக விழுந்தால், அதன்படி வெற்றியும் அந்தந்த கட்சிகளுக்கு சாதகமாக மாறலாம். இந்த தேர்தலில் விநோதமாக, திமுக, அதிமுக, கே.நல.கூ, பாமக., பாஜக என்று ஐந்து முனை போட்டி இருந்தாலும், முக்கியமாக, திமுக, அதிமுக, கே.நல.கூ-க்கு தான் மும்முனை போட்டி. 30% தொகுதிகளில் திமுக - அதிமுகவும், 30% தொகுதிகளில், அதிமுகவும் - கே.நல.கூ-க்கும், 20% தொகுதிகளில் திமுக - கே.நல.கூ தான் நேரடி போட்டி நடக்கும். 10% தொகுதிகளில் பா.ம.க - மற்றகட்சிகளுக்கு கடும் போட்டி இருக்கும். இந்த 10% தொகுதிகளில், கே.நல.கூட்டணியின் வாக்கு வங்கி, பாமகவால் நிச்சயம் பாதிக்க படும். அதுபோல 10% இடங்களில் அனைத்து கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நடை பெறும். எப்படி பார்த்தாலும், திமுக, அதிமுகவுக்கு இடையில் 2-4% வாக்கு வித்தியாசம் இருக்கும். கே.நல.கூ-க்கும் - திமுக அதிமுக இடையில் 10-12% வாக்கு வித்தியாசம் இருக்கும். திமுகவினர் 100% ஓட்டு போட்டால், திமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அதிமுக 100% வாக்கு அளித்தால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி இருக்கும். கே.நல.கூ - இந்த இரண்டு கட்சிகளின் வாக்குகளை பிரிக்குமே தவிர, வெற்றி பெற மிகவும் கஷ்டம். மேலும், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்தால், யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று நடுநிலை புதிய வாக்காளர்களுக்கு நல்ல அறிவு இருப்பதால், அவர்களின் வாக்குகள் மிகவும் முக்கிய இடத்தில இருக்கிறது. எப்படி பார்த்தாலும் திமுக ஆட்சியை பிடிக்கவும், அதிமுக ஆட்சியை இழக்கவும் விஷயங்கள் நடை பெறலாம். தேர்தல் கமிஷன் உதவியோடு, அதிமுக, கே.நல.கூ- மற்றும், பிஜேபி, பாமகவின் வேட்பாளர்களை விலைக்கு வாங்கினால், இதில் மாற்றம் நடைபெறலாம். 

ஒரு அருமையான சந்தர்ப்பம், ஒரு அழகான கூட்டணி, நல்ல திறமையான அனுபவம் மிக்க கம்யூனிஸ்ட் தலைவர்கள், மக்கள் சக்தி பெற்ற விஜயகாந்த், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை கவர ஒரு சிறுத்தை, காங்கிரஸ் பேரியிக்கத்தின் ஒரு பகுதி ஆதரவை பெற்ற வாசன், தொடர்ந்து நான்கு முறை ராஜ்ய சபாவில் உறுப்பினாராக இருந்த அனுபவம், அனைத்தையும் பயன்படுத்தி ஒரு குடையின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து, அனைவரும் இணைந்து சிறந்த பிரச்சாரம் செய்து, மேடை நாகரிகத்தை அனைவரும் ஒரு சேர பின்பற்றி ஒரு நல்ல பிம்பத்தை மக்கள் மத்தியில் இவர்கள் உருவாக்கி இருந்தால், அது ஒரு சிறந்த கூட்டணியாக

மக்களே உங்களுக்கு கடைசி சந்தர்ப்பம் நழுவ விட்டு விடாதீர்கள்....திமுக அதிமுக ஆகிய ரெண்டு கட்சிகளையும் ஒழிக்க கடைசி சந்தர்ப்பம்....இந்த தேர்தலில் மூன்றாவது கூட்டணியை வெற்றி பெற வைக்க வில்லை என்றால் அப்புறம் கடைசி வரை அந்த இரண்டு திருட்டு கட்சிகளிடம் நீங்கள் அடிமையாக இருக்க வேண்டி ஆகிவிடும்..மக்களுக்காக அமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணியை இந்த ஒருமுறை ஆதரவு கொடுங்கள் .. மாற்றத்தை விரும்புவோம் நாம் மாற்றத்தை கொண்டு வருவோம் , இரண்டு ஊழல் இயக்கங்களை அறவே அகற்றுவோம் புதிய அணி ,கூட்டணி ஆட்சியயை, நல்லவர்கள் உள்ள ஆட்சியை கொண்டுவருவோம் , தேமுதிக - மக்கள் நல கூட்டணி - தாமாகா கூட்டணிக்கு வாக்களிப்போம்....நல்லாட்சியை கொண்டு வருவோம் .இதுதான் நிதர்சன உண்மை. மே 19 இதை நிருபிக்கும்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 5 May 2016

நாம் குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும் !!

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!
சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
குளியல் = குளிர்வித்தல்
குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.
காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.
குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.
எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
வியக்கவைக்கிறதா... ! நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.
பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.
குளித்தல் = குளிர்வித்தல்
குளியல் அழுக்கை நீக்க அல்ல
உடலை குளிர்விக்க.
இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.நலம் நம் கையில்

Monday, 2 May 2016

பதிவு எண்ணைக் கொண்டு ஒரு வாகனத்தின் உரிமையாளர் பெயரை தெரிந்துகொள்ளலாம்.!!

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.
எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:
TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை
நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155

ஒட்டகம் ஒரு ஒப்பற்ற அதிசயப்படைப்பு !! பற்றிய ஒட்டகம் அறிவியல் விழிப்புனர்வு பார்வை ...

மாபெரும் இறை அத்தாட்சி !!
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? அல் குர்ஆன்:88:1
சற்று நீளமான பதிவு ..எனினும் கண்டிப்பாக ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அதிசய படைப்பினம்! (....! வைத்த இடங்களில் சுபஹானல்லாஹ் சொல்லிக் கொள்ளுங்கள் !
50, 55 டிகிரி பாகை வெயிலிலும், கடும் பாலைவனப் புயலிலும் , மழை , பனி இப்படி பல இயற்கையின் தாக்கங்களை தாக்குப் பிடிக்கும் வல்லமையுடன் ஒட்டகம் படைக்கப் பட்டுள்ளது . பரிணாம வாதிகளால் கியாம நாள் வரை பதில் சொல்ல முடியாத, அவர்கள் முகத்தில் கரியை பூசிக் கொள்ளும் விதமானதாக இதன் படைப்பு உள்ளது !
ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.
ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்... அரபிகள்முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. ‘கடலுக்கு கப்பல்பிரயாணம் - பாலைக்கு ஒட்டகபிரயாணம்’ என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.
மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது...., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பான ஒட்டகத்துக்கு.... எப்படி ஒப்பாகும்?
நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும் இவை, பொதுவாக 50ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்... உணவில்லாமல்... பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே..!
எப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில் 50°செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரை... தன் எடையில் 22%இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8%எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே… 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- ‘அவன் உடம்பில் 88% நீர்ச்சத்துதான் இருந்தது’ என்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில் 12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா,அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%-ஐ இழந்தும் உயிர் வாழும்...! இதல்லாம்கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்... கேட்கவே வேண்டாம்... அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!
சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை 10நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது 450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்து ஏறிவிடும்..! அதன் இரப்பையில் உள்ள நீர்அறைகளில் நீரை தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றி சேமித்துக்கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள் அதன் உண்மையானஅளவை விட 240% விரிந்து இடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240% அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை..!

மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோ... தன்னுடைய சிறுநீரையும்குறைத்துக்கொள்ளும்..! ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடை கிட்னியாகஇருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும். அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன் ‘விசேஷ லிவர்’ ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!
ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசு... சிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன் கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏ/சி செய்யப்பட்ட ‘குளுகுளு’ இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின் ‘C’ அதிகம் உள்ளது..! இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!
பாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.
ஒட்டகத்தின் ரோமமும், தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°C லிருந்து 41.7°Cவரை (93°F-107°F.) சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும்வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில்,மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..!மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!
ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகன்றவட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!
மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டுமடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்றுமடக்கும் இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள் அதன்மீதுஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..! அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும், கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..! ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போது கொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!
அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்று... மணற்புயல்... பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..!தன் ‘கை’யால் இல்லைங்க.. அதன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள்மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு மணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்திகூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!
பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..!அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!
மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாகஉண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?
“அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியது” என்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடி விளக்கமாவது கொடுக்கும் 'பரிணாம உலகம்', 'ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது' என்று கதை புனையவோ அல்லது புனைவை கதை சொல்லவோ இல்லையே, ஏன்?
இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?
மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீ பயணம்செய்யும் ஒட்டகம்..., நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும் தாரளமாககிடைக்கும் ஐரோப்பாவை நோக்கியோ, தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோமுறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும்முட்டாள் ஒட்டகம் எப்போதோ ஓடிபோயிருக்கலாமே..! இப்படிபாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..! 
அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்...) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்...
“(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்று கேட்கிறான்.
தொகுப்பு : அ . தையுபா  அஜ்மல்.

Sunday, 1 May 2016

தேர்தல் அறிக்கை ஒரு கட்டு காகித குவியல்!! எனது ஆதங்க பார்வை...

சமூக அக்கறை கொண்ட அன்பு வாசகர்களே!!
எனது ஆதங்கத்தை பதிவு செய்ய ஆசை படுகிறேன்.ஒரு நாட்டின் பொருளாதாரம் முனேற்றம் அடைய வேண்டும் என்றால் வேலை முக்கியம். தமிழர்கள் உலகின் எத்தனயோ நாடுகளில் தங்களின் உழைப்பை கொடுத்து உள்ளார்கள். அனால் பிறந்த மண்ணில் அது போன்றதொரு வாய்ப்பு இல்லை. நம் நாட்டின் அரசியல் சட்டம் சரியா? மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை சரியா? யார் நம்மை ஆள்வது? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நாம் படிக்கிறோம், வேலைக்கு செல்கிறோம் ஆனால் எவ்வளவு கஷ்ட படுகிறோம். அரசியலில் முறையாக படித்தவர் உண்டா? இல்லை அரசியலுக்கு தான் கல்வி தகுதி உண்டா? யார் வேண்டுமானாலும் நம்மளை ஆட்சி செய்யலாம். இதை பதிவு செய்யும் போது கூட நான் உணர்ச்சி வச பட்டவனாய் இருக்கிறேன். நமக்கெல்லாம் பேச வாய்ப்பு கிடைக்காதா? நாம் ஆதங்க பட்டு பேசுவதை யாரவது செவி கொடுத்து கேட்பார்களா? நாம் மட்டும் ஏன் இவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.
ஒரு விஷயத்த எல்லாரும் புரிஞ்சிக்கணும்.....

1)3.80 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க போறோம்னு சொல்லி இருக்காங்க .... அதை எப்படி பண்ண போறங்கனு சொல்லவே இல்லை... காரணம் அவங்க கட்சி காரங்கள வச்சி பணம் வாங்கிட்டு வேலை கொடுப்பாங்க.... திறமைய மதிச்சு ஒழுங்கா எக்ஸாம் வச்சு வேலை கொடுக்கணும்.....

2) எந்த ஒரு அரசு அலுவலகங்களையும் பொது மக்களால் காசு கொடுக்காம வேல வாங்க முடியல... அதை ஒழிக்க எந்த திட்டமும் இந்த தேர்தல் அறிக்கைல் இல்லவே இல்லை..... எப்படியாவது ஆட்சியை பிடிக்கணும்...

4) விவசாய கடன் ரத்து... அதை அவங்கள வாங்குற அளவுக்கு கொண்டு சென்றதே நீங்கதான்...

5) எல்லா திட்டங்களுக்கும் நிறைவேற்ற ஆகுற செலவுக்கு .... மொத்த காசையும் ஊழல் பண்ணாம மக்களுக்கு நிறைவேற்றி கொடுத்து முன்னெற்ற பாதைக்கு கொண்டுசென்றாலே போதும்...

6) வெறும் அறிக்கை வடிவத்துல தான் திட்டம் இருக்கும் ... சட்டமும் புத்தக வடிவில் தான் இருக்கும்... இது இரண்டும் மக்களுக்கு எப்போ செயல் வடிவத்துல வருதோ அன்றைக்குத்தான் மக்களுக்கு நல்ல காலம் .

அதற்கு வழி ஊழல் இல்லாத ஆட்சி . தன் கடமையை சரியாய் செய்யும் அரசு அதிகாரிகள்.... நேர்மையான மக்கள் ..... இது மூன்றும் என்றைக்கு கிடைக்குதோ அன்றைக்குத்தான் நம் நாடு முன்னேறும் .. என்னுடைய  ஆதங்க 

 அறிக்கை ஒரு கட்டு காகித குவியல்!!

இதனால் தமிழகத்துக்கோ, தமிழ் மக்களுக்கோ ஒரு பயனும் இருக்காது என்பதை 100% ஆணித்தரமாக சொல்லமுடியும்.மக்களை மீண்டும் மீண்டும் அடிமை ஆக்குவதே இந்த அறிக்கை ,

1,இலவச மின்சாரம் யாருக்கு போய் சேரும் 1,2,ஏக்கர் உள்ள விவசாயிகள் பயிர் கடன்கள் எப்புட்டு ,எல்லாம் விவசாயி பயிர் கடன்கள் வாங்கியா பெரிய பெரிய முதலாளிக்கு தான் போய் சேரும் இந்த கடன் தள்ளுபடிம் இலவச மின்சாரமும் ,,3ஜி / 4ஜி யாருக்கு வேணும் ,

3,அரசு வேலை செயும் மகளிருக்கு மட்டும் தான் இந்த 9 மாத பேறுகால விடுமுறை தரப்படும், அப்போறம் பிரைவேட்டுல் வேலை செயும் மகளிருக்கு என்ன செய்யும் இந்த அரசு ,அதை பத்தி ஏதேனும் உண்டா ?

முதலில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கிடைக்குமா ? அரசு வேலை வீட்டுக்கு ஒருவருக்கு கட்டாயம் 20,30 வருடம் என்று சட்டம் போட முடிமா ? அரசு வேலை பார்கும் நபர் லசம் வாங்கினால் எந்த வித அறிவுப்பு இல்லாமல் பதவி பறிக்க முடிஉமா ? அரசு வேலை பார்கும் நபர் யாரா இருந்தாலும் வருமானடிஎகு மேல் சொத்து சேர்ததால் ,அந்த வருமானடிஎகு மேல் உள்ள சொத்தை மட்டும் பறிமுதல் சட்டம் போட முடிஉமா ? இதை நீ தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு இரூந்தால் திருமண உதவித் தொகை, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு, 4 கிராம் தங்கம் ஏதுவும் மக்களுக்கு தேவை இல்லை ,மக்களே கொஞ்சம் சித்திங்கல் ,இன்னும் அடிமையா இருக்க போறிங்களா ? யாரும் விலைவாசியை குறைப்போம் ,இனிமேல் எந்த விலைவாசியைம் கூடது என்று யாரும் சொல்ல மாட்டான் . அட்லிஸ்ட் இலவசம் தேவை இல்லை என்று மக்கள் கூற முன் வர வேண்டும் ,இலவசம் என்றால் மக்கள் அவனுக்கு ஓட்டு போட கூடாது.
 தேர்தல் அறிக்கை யாருக்கு லாபம்?

நம் அரசியலே மாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு நமக்கு எத்தனை சுற்றுகள்- கல்வி தகுதி தேவை, ஆங்கிலம் தேவை, ஆளுமை திறன் தேவை, கணினி அறிவு தேவை- வருடத்திற்கு ஒரு முறை திறமை பரிசோதிக்க பட்டு சம்பள உயர்வு, சரியாக வேலை செய்யவில்லை என்றால் பணி நீக்கம். அரசியலில் இப்படி எதாவது ஒன்று உண்டா? என்ன தகுதி உள்ளது இந்த அரசியல் வாதிகளிடம்? ஜெயித்து விட்டால் 5- ஆண்டு நாம் கேள்வி கேட்க முடியுமா? இதுபோல பல கேள்விகள் என்னுள் எழுகின்றன நண்பர்களே என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன். நான் ஒருவன் மட்டும் முயன்றால் முடியாது.


மக்களுக்கு உண்மையாக இருப்போம், ஆட்டய போடுவதற்கும், ஓட்டு வாங்கவதற்கும் திட்டங்கள் கொண்டு வரமாட்டோம், விவசாயத்தை முக்கியமாக கருதுவோம், ரியல் எஸ்டேட்டை கட்டு படுத்துவோம்,மது ஆலையை உடனடியாக மூடி மது விலக்குக்கு முன்னோடியாக இருப்போம், இயற்கை வளங்களை சுரண்ட மாட்டோம், வட்ட, மாவட்டங்களின் அரசியல் குறுக்கீடு இல்லாமல் ஆட்சி நடத்துவோம், லஞ்சம் கேக்க மாட்டோம், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வோம்ன்னு தேர்தல் அறிக்கை கொண்டு வாங்க, நாங்க ஓட்டு போடுறோம்.

நம்மை ஆளுவதற்கு இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. சிந்திப்போம் நண்பர்களே...


ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.