Thursday, 16 February 2017

இஸ்ரோவின் உலக சாதனை, 104 செயற்கைக் கோள்களுடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!

Image result for உலக சாதனை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 104 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்ததுஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்து உள்ளது. விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.





பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. கடல்சார் ஆராய்ச்சி, பூமி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை வடிவமைத்து விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று 104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

அமெரிக்காவுக்கு சொந்தமான 88 ‘டோவ்’ செயற்கைகோள்கள், 8 லெமூர் செயற்கைகோள்கள், இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான பி.ஜி.யு.எஸ்-அட், கஜகஸ்தான் நாட்டின் ஏ1-பார்பி-1 செயற்கைகோள், நெதர்லாந்துக்கு சொந்தமான பி.இ.ஏ.எஸ்.எஸ்.எஸ். செயற்கைகோள், சுவிட்சர்லாந்தின் டி.ஐ.டி.ஓ-2, அமீரகத்துக்கு சொந்தமான நைப்-1 ஆகிய வெளிநாடுகளுக்கு சொந்தமான செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இவற்றுடன் இந்தியாவுக்கு சொந்தமான 2 நானோ செயற்கைகோள் மற்றும் 714 கிலோ எடை கொண்ட கார்டோ சாட்-2 ஆகிய செயற்கைகோள்கள் அடங்கும். செயற்கைகோள்களில் 101 செயற்கைகோள்கள் நானோ வகையை சேர்ந்தவையாகும். இவற்றின் மொத்த எடை 1,378 கிலோ ஆகும்.

வெற்றிகரமாக பாய்ந்தது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9.28 மணிக்கு 104 செயற்கைகோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்டின் எடை 320 டன் (3 லட்சத்து 20 ஆயிரம் கிலோ) ஆகும்.

செயற்கைகோள் பிரிந்தது

புறப்பட்ட 31 நிமிடத்தில் ராக்கெட் பூமியில் இருந்து 520 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. அதைத் தொடர்ந்து அனைத்து செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் திட்டமிட்டபடி அந்தந்த இலக்கில் கொண்டு சேர்த்தது.

இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், 3-வது மற்றும் 4-வது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார் இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பூமி கண்காணிப்பு

முதன்மை செயற்கைகோளான ‘கார்டோ சாட்-2’ பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு, ராணுவ ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த செயற்கைகோளில் 986 வாட் திறன்கொண்ட 2 பேட்டரிகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

‘கார்டோ சாட்-2’ செயற்கைகோள் பூமி கண்காணிப்பு மற்றும் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த செயற்கைகோள் மூலம் 1,500 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கலாம். மேலும் இதன் மூலம் பேரிடர் மேலாண்மை, செல்போன் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு, புவியியல் வரைபடங்களை கண்காணித்தல், கார், கனரக வாகன (டிரக்ஸ்) ஓட்டுனர்களுக்கு குரல் வழி மூலம் முறையாக ஓட்டச் சொல்லி வாகனங்களை இயக்க செய்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்ள முடியும்.

வரலாற்று சாதனை

இஸ்ரோ வரலாற்றில் கடந்த 2008-ம் ஆண்டு அதிகபட்சமாக ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. தற்போது ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களுடன் விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலகில் எந்த நாடும் இத்தனை எண்ணிக்கையில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியதில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு ரஷியா 37 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.


தொகுப்பு  : தையுபா  அஜ்மல் .

Wednesday, 15 February 2017

சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ!

Image result for நித்திய கல்யாணி செடிநித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
நித்திய கல்யாணி பூக்கள்,
சீரகம். 5 முதல் 10
நித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும்.
இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும்.
நித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், கருஞ்சீரகம். நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும்.
இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.
நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை. ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.
தலையில் ஏற்படும் பொடுகுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.

Sunday, 12 February 2017

இணைய உலகின் வ‌லைப்பின்ன‌ல் (இன்டர்நெட்) காதல் பற்றிய சிறப்பு பார்வை..

Image result for இண்டெர்நெட் காதல்


ஓர் இளைஞன் தான் உயிருக்கு உயிராக காத‌லிக்கும் பெண்ணிடம் பேச முடியாமல் தயங்குவதையும், காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதையும் மிக அழகாக சொன்ன இந்தப் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் உருகிப் போனார்கள். என்ன ஒரு புனிதமான காதல் என்று நெகிழ்ந்தும் போனார்கள். 1980களில் நடந்த அதிசயம் இது.காலம் மாறுகிறது.காதலும் மாறிக்கொண்டிருக்கிறது.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கொண்டிருக்கிறது .காதலர்கள் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் விதமும் மாறியிருக்கிறது.எல்லாம் ஒரே பாஸ்வேர்டாக மாறியிருக்கிறது.


ஆம் மனம் ஒத்த காதல் ஜோடிகளை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் நெருக்கமானவர்கள் என்று சொல்லும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது.


வாருங்கள் இண்டெர்நெட் கால காதலுக்கு! இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலை பரிமாறிக்கொள்ள இமெயில் ,பேஸ்புக் ,சாட்டிங் என புதிய வழிகள் உருவாகியிருப்பது போல காதல் நெருக்கத்தை வெளிப்படுத்தி கொள்ளவும் புதிய வழி கிடைத்திருக்கிறது.அது தான் ஒரே பாஸ்வேர்டு.அதாவது காதலர்கள் பரஸ்பரம் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வது.


நீ பாதி நான் பாதி என்றெலாம் சொல்வது அந்த காலம் இந்த காலத்தில் காதலர்கள் சொலவதெல்லாம் உன் பாஸ்வேர்டும் ஒன்று என பாஸ்வேர்டும் ஒன்று என்பதாக தான இருக்கிறது.


கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம் தான் இது.இணைய உலகின் சேவைகளுக்கான பூட்டு சாவியாக கருதப்படும் பாஸ்வேர்டு அவற்றின் தன்மைக்கேற்ப அந்தரங்கமானவை.பாஸ்வேர்டை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பது இண்டெர்நெட் யுகத்தின் எழுதப்படாத விதியும் கூட.பாஸ்வேர்ட் வேறு யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இணைய உலகில் எலோருக்கும் இருக்கிறது.


பாஸ்வேர்டு பகிர்ந்ங்கமாவதால் பலவித ஆபத்துகளும் ஏற்படலாம்.ஆனால் இவை எல்லாவற்ரையும் மீறி டிஜிட்டல் யுகத்தின் காதலர்கள் தங்களது பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளவும் ,முடிந்தால் இருவரும் ஒரே பாஸ்வேர்டையும் வைத்திருக்க விரும்புகின்றனர் தெரியுமா என்று கேட்கிறது நியுயார்க்டைம்ஸ் கட்டுரை.


பாஸ்வேர்டு பகிர்வு என்பது எப்படி இந்த காலத்து காதல் அடையாளமாக உருவாகியிருக்கிறது என விவரிக்கும் அந்த கட்டுரை சுவாரஸ்யமான பல தகவல்களை தருகிறது.அவை சிந்திக்கவும் வைக்கின்றன.


பாஸ்வேர்டு அந்தரங்கமானவை தான்.ஆனால் காதலர்களுக்கு இடையே எதற்கு அந்தரங்கம்.இருவரும் ஓருயிர் எனபது உண்மையானால் பாஸ்வேர்டில் என்ன ரகசியம்?இந்த என பாஸ்வேர்டு என்று கொடுத்து விடுவது தானே காதலுக்கு மரியாதை என்று இந்த கால காதலர்கள் பலரும் கருதுகின்றனர்.


காதலில் ஒரு நெருக்கமும் நம்பகத்தன்மையும் வந்த பிறகு ஒரே ஸ்டிராவில் குளிர்பானம் குடிப்பது,ஒன்றாக கைகோர்த்தப்டி நடந்து செல்வது போன்றவை நிகழ்வது போலவே பாஸ்வேர்டை இருவரும் பகிர்ந்து கொள்வதும் வெகு இயல்பாக நிகழ்ந்து வருகிறது.


அது தான் பல நவீன காதலர்கள் இந்தா என இமெயில் பாஸ்வேர்டு என்றும் இது தான் என் இமெயில் பாஸ்வேர்டு என்றும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றனர்.


அமெரிக்காவில் இப்படி பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் 30 சதவீத காதலர்களிடம் இருப்பாதாக தெரியவந்துள்ளது.


அது மட்டும் அல்ல யுவன்களும் யுவதிகளும் இதை ஒரு காதல் மைல்கல்லாகவே கருதுவதாக கொள்ளலாம்.யாருமே எடுத்த எடுப்பிலேயே பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வதில்லை.ஆனால் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ள முடியும் என்றால் காதல அந்த அளவுக்கு நெருக்கமாகிவிட்டதாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.


அவர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டனர் என்று சொல்வது நண்பர்கள் வட்டத்தில் காதலின் நெருக்கத்துக்கான சான்றிதழாகவும் பாராட்டாகவும் அமைந்து விடுகிறது.


காதலனோ காதலியோ ஒருவர் மற்றவருக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கும் நிலையிலேயே ஒரே பாஸ்வேர்டுக்கு மாறுகின்றனர்.அவனி(ளி)டம் இருந்து மறைக்க என்னிடம் எதுவும் இல்லை என்று கட்டதிலேயே காதலர்கள் இந்த முடிவுக்கு வருவதால் இந்த பகிர்வு அவர்களுக்கும் ஒரு காதல் திருப்தியை கொடுக்கிறது.


இவ்வளவு ஏன் ஒரு அமெரிக்க காதல் ஜோடி ஐ லவ் கெவின் என்றும் ஐ லவ் அலெ என்றும் பரஸ்பரம் தங்கள் பெயரை கொண்டு பாஸ்வேர்டை உருவாக்கி கொண்டுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.அதாவது பாஸ்வேர்டு முலமே காதலை பறைசாற்றி மகிழ்ந்துள்ளது.


இதே போல இருவரும் தங்கள் பெயர்களை இணைத்தே ஒரே பாஸ்வேர்டை அமைத்து கொள்ளலாம்.அதுவும் காதல் நெருக்கம் தான்!


எல்லோரும் இப்படி இருப்பதாக சொல்ல முடியாது.அந்தரங்கத்தை மதிப்பவர்கள் தனித்தனி பாஸ்வேர்டே சரி என நினைக்கலாம்.ஒருவர் இமெயில் கணக்கில் அல்லது பேஸ்புக பக்கத்தில் மூக்கை நுழைக்காமல் கன்னியம் காக்கலாம்.


ஆனால் இன்னும் சிலரோ என்னிடமே பாஸ்வேர்டை மறைக்கிறாயா என கோபம் கொண்டு பாஸ்வேர்டு மீது உரிமை கொண்டாலாம்.நீயும் நானும் ஒன்று என்றால் பாஸ்வேர்டில் ஏன் பிரிவினை என்று கேட்கலாம்.


எனவே பாஸ்வேர்டை பகிர்வது சிலருக்கு காதல் கட்டாயமாகவும் மாறலாம்.இன்னும் சிலருக்கோ அதுவே காதல் இன்பமாகவும் மாறலாம்.குறிப்பாக காதல் வீதியில் திரிந்து விட்டு கல்யாண வீட்டிற்கு வருபவர்கள் இனி ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்த முடிவு செய்து அன்யோன்யத்தை உறுதி செய்து கொள்ளலாம்.அல்லது கணவன் மனையிவான பிறகு முதல் வேலையாக ஒரே பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம்.


திருமணமான ஜோடிகளில் பலர் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டு வருவதோடு அது குறித்து மகிழ்ச்சி கொள்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆக இணைய யுகத்தில் பாஸ்வேர்டுக்கு காதல் அடையாளம் என்னும் கூடுதல் பயனும் உண்டாகியிருக்கிறது.


ஆனால் பாஸ்வேர்டு பகிர்வு என்பது ரிஸ்கானது தான்.ஒன்றாக இருக்கும் போது பாஸ்வேர்டை கொடுத்துவிட்டு பின்னர் காதல் கசந்து பிரிய நேர்ந்தால் காதலனோ காதலியோ பாஸ்வேர்டை கொண்டு பழி வாங்கும் வாய்ப்பு உள்ளது.


இமெயிலில் உள்ள அந்தரங்கமான விஷயங்களை அல்லது பேஸ்புக் சங்கதிகளை பகிரங்கமாக்கி அவதூறு ஏற்படுத்தலாம்.பாஸ்வேர்டை மாற்றிவிடலாம் என்றாலும் அதற்கு முன் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.


இத்தகைய நிலை ஏற்படாமல் தவிர்க்க பாஸ்வேர்டு குறித்து ஆலோசனை எல்லாம் கூறத்துவங்கியுள்ளனர்.ஆக பாஸ்வேர்டு நிர்வாகம் என்பது இனியும் கம்புயூட்டர் மட்டும் சார்ந்ததல்ல;அது காதல் சார்ந்ததும் கூட!.


இன்டர்நெட்டின் வ‌ருகைக்கு பின் காணாம‌லே காத‌ல் த‌த்துவ‌த்துக்கு புத்துயிர் கிடைத்திருக்கிற‌து. நேரில் பார்க்க‌மாலேயே இமெயில் வாயிலாக‌ அறிமுக‌மாகி… காத‌லர்களாகி… அதன்‌ பின், முத‌ல் முறையாக நேரில் ச‌ந்தித்துக்கொண்ட‌ ந‌வீன‌ காத‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின்ற‌ன‌ர். இதெல்லாம் ஒரு த‌லை ராக‌ த‌லைமுறைக்கு சாத்திய‌மாகாத‌ வ‌ச‌திக‌ள். மற்ற துறையைப் போலவே இன்டர்நெட் காத‌ல‌ர்க‌ளூக்கும் புதிய‌ க‌த‌வுக‌ளை திற‌ந்துள்ள‌து.

ஆனால், 
இன்டர்நெட் காத‌ல் ஆப‌த்துக்க‌ள் நிறைந்த‌து என‌பதை ம‌ற‌ந்துவிட‌க் கூடாது. இமேயில் மூல‌ம் அறிமுக‌மாகி தப்பான‌வ‌ர்க‌ளின் வ‌லையில் விழுந்து ஏமாந்த‌வ‌ர்க‌ளும் க‌ணிச‌மாக‌ உள்ள‌ன‌ர். கியுபா முன்னாள் அதிப‌ர் காஸ்ட்ரோவின் ம‌க‌ன் இப்ப‌டி அமெரிக்க‌ வாலிப‌ர் ஒருவ‌ரை கொல‌ம்பிய‌ அழ‌கி என‌ நினைத்து ஏமாந்த‌ க‌தையும் இருக்கிற‌து. அது ம‌ட்டும‌ல்ல‌, ஃபேஸ்புக் புதிய‌ உற‌வுக்கு எப்ப‌டி உத‌வுகிற‌தோ அதே போல‌ உற‌வுக்கும் வேட்டு வைக்க‌லாம். ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளில் ப‌ல‌ர் ப‌ழைய‌ காத‌ல‌ர்க‌ள் அல்ல‌து முத‌ல் காத‌ல‌னை/காதலியை தேடும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌தும், அவ‌ர்க‌ளில் சில‌ர் இதில் வெற்றி பெற்று ப‌ழைய உற‌வை புதுப்பித்துக் கொண்டு புதிய‌ உற‌வில் சிக்க‌லை தேடிக்கொள்வ‌து குறித்தும் இன்டர்நெட் உல‌கில் ப‌திவுக‌ள் இருக்கின்ற‌ன.

எனவே, எச்சரிக்கை தேவை! ஆதி கால‌ காத‌லோ இன்டர்நெட் காத‌லோ, காத‌லுக்கான‌ பொன்விதிக‌ள் எப்போதுமே பொதுவ‌னாவை.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 8 February 2017

Scaffold Supervisor Test Question & Answers..


1.      Up to what height only supervisor will sign
a) 0----6m                                      b) 6----12.2 m
c) Any height                                d) Up to 38 m
2.      For an internal ladder, What is the minimum occupying size
a) 27’’ x 30’’                                 b) 27’’ x 36’’
c) 24’’ x 30’’                                 d) 24’’ x 36’’
3.      How many lifts can be installed above raker tie-in point
a) One                                           b) Three
c) Four                                           d) Two
4.      What is the position of tie-in point for a scaffold 4’ x 8’
a) 20’                                             b) 15’
c) 16’                                             d) 12’
5.      What is the size of scaffold wheel for a medium duty scaffold
a) 5’’                                              b) 8’’
c) 7’’                                              d) 12’’
6.      What a scaffold wheel must have
a) A threaded portion                   b) Caster lock/Wheel lock
c) Base plate                                  d) Connecting pin
7.      For a system scaffold, what is Aramco requirement to follow
a) Manufacturer manual                b) Aramco standard
c) L. P. instructions                       d) Scaffold drawings
8.      For a hanger tube in under-hung scaffold, What type of coupler is used
a) Double                                      b) Swivel
c) Sleeve                                        d) Putlog
9.      When extending a brace, What can not be used
a) Sleeve clamp                             b) Double clamp
c) Swivel clamp                             d) Joint pin
10.  What is the load rating for a medium duty scaffold
a) 120 Kg                                      b) < 240 Kg
c) 240 Kg                                      d) 50 Kg
11.  How a scaffold classified used for abrasive blasting
a) Light duty                                 b) Special duty
c) Medium duty                            d) Heavy duty
12.  On a temporary ramp, Aramco requires which ratio
a) 1-V   3-H                                   b) 1-V   2-H
c) 1-V   4-H                                   d) 1-V   1-H
13.  What is the minimum clear head room on a scaffold platform
a) 2 m                                            b) 1.5 m
c) 1.8 m                                         d) 2.5 m
14.  What is the minimum clearance between a toe-board and the surface of working platform
a) 1’’ (25 mm)                               b) ½’’ (13 mm)
c) ¼’’ (6 mm)                                d) ¾’’ (20 mm)

15.  The top rail height can not be more than
a) 0.95 m (38’’)                             b) 1.15 m (45’’)
c) 1.20 m (48’’)                             d) 1.10 m (43’’)
16.  Minimum diameter of life line rope is
a) 1’’ (25 mm)                               b) ½’’ (13 mm)
c) 3/8’’ (10 mm)                            d) ¼’’ (6 mm)
17.  What is the minimum number of boards for a bracket scaffold
a) Two                                           b) One
c) Four                                           d) Three
18.  Who will determine the integrity of a tank wall before welding a bracket strap
a) L. P. D.                                     b) Proponent Engineering Unit
c) W. P. Issuer                               d) Aramco inspector
19.  What is the minimum diameter of rope used as a guard rail member in a bracket scaffold system
a) ¾’’ (20 mm)                              b) 3/8’’ (10 mm)
c) ½’’ (13 mm)                              d) ¼’’ (6 mm)
20.  What is the nominal size of sill board
a) 2’’ x 8’’ (50 mm x 200 mm)      b) 1-1/2’’ x 9’’ (38 mm x 225 mm)
c) 2’’ x 10’’ (50 mm x 250 mm)    d) 1-1/2’’ x 10’’ (38 mm x 250 mm)
21.  What is the maximum length of board used in bracket scaffold with 2’’ thickness & 12’’ width
a) 10’ 6’’                                       b) 8’ 6’’
c) 9’ 6’’                                         d) 6’ 6’’
22.  What is the length of bracket strap
a) 8’’                                              b) 10’’
c) 7’’                                              d) 9’’
23.  What is the height of guard rail on a bracket scaffold
a) 1.15 m (45’’)                             b) 0.90 m (36’’)
c) 0.95 m (38’’)                             d) 1.20 m (48’’)
24.  What is the nominal size of debris net
a) 13 mm (1/2’’)                            b) 20 mm (3/4’’)
c) 10 mm (3/8’’)                            d) 25 mm (1’’)
25.  On a climbing side of a ladder, What is the minimum clear distance from a structure
a) 36’’ (900 mm)                           b) 30’’ (760 mm)
c) 20’’ (500 mm)                           d) 24’’ (600 mm)
26.  What is the maximum height of fabricated tubular frame scaffold
a) 6 m (20’)                                   b) 5 m (16’)
c) 8 m (25’)                                   d) 10 m (30’)

27.  How many maximum platforms in a medium duty scaffold, when there are 3-
Planked level
a) One                                           b) Two
c) Three                                         d) Four
28.  What should be the clear distance between a trapeze tube and a runner
a) 2’ (600 mm)                              b) 1.5’ (450 mm)
c) 1’ (300 mm)                              d) 3’ (900 mm)
29.  What is the maximum length of a trapeze tube
a) 2’ (600 mm)                              b) 1.5’ (450 mm)
c) 3’ (900 mm)                              d) 2.5’ (760 mm)
30.  Which part of the scaffold, You will remove first while dismantling any scaffold
a) Brace                                         b) Raker
c) Tie                                             d) Guard rail
31.  What is the distance between a post and brace tie-in point
a) 12’’ (300 mm)                           b) 4’’ (100 mm)
c) 8’’ (200 mm)                             d) 6’’ (150 mm)
32.  Above what height a scaffold plan will be required
a) 12.2 m (40’)                              b) 6 m (20/)
c) 38 m (125’)                               d) 8 m (26’)
33.  While abetting of joints is done in a tube and coupler scaffold, What you will do, While erecting the scaffold
a) Not to install in the same lift    b) Fix all the joints near to the posts
c) To install at middle third          d) to install in the same span


           Thanks to Mr.Karthikeyan

Saturday, 4 February 2017

உலகில் ஆக்கிரமிக்கப்பட முடியாத பாதுகாப்பு நாடுகள் பற்றிய ஒரு பார்வை !!

Image result for நாடுகள்ஒரு நாடு ஆக்கிரமிக்க இலகுவானதா இல்லையா என்பது அதன் படைவலுவில் மட்டும் தங்கியில்லை. அதன் பூகோள அமைப்பு, நிலப்பரப்பு, காலநிலை, அதன் நட்பு நாடுகள் போன்றவையும் முக்கியமானதாகும். நேட்டோவில் புதிதாக இணைந்துள்ள லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய மூன்று நாடுகளையும் இரசியாவால் அறுபது மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமிக்க முடியும். ஆனால் மற்ற நேட்டோ நாடுகள் அந்த ஆக்கிரமிப்பின் பின்னர் இரசியாவுக்கு எதிராக எடுக்கக் கூடிய அரசுறவியல் மற்றும் பொருளாதார் நடவடிக்கைகள் இரசியாவைத் தடுத்துள்ளன.    
சுவிற்சலாந்து – பல வழிகளில் பாதுகாப்பு
சுவிற்சலாந்து தனது இயற்கை அமைப்புடன் பல செயற்கைக் கட்டமைப்புக்களைச் செய்தது மட்டுமல்லாமல் நெடுங்காலமாக நடுநிலை நாடாக இருந்து கொண்டு ஆக்கிரமிக்கப்பட முடியாத நிலையில் இருக்கின்றது. பல மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள சுவிஸ் அந்த மலைகளுக்குள் பெரும் படையணி தங்கி இருந்து தாக்குதல் செய்யக் கூடிய குகைகளை அமைத்துள்ளது. அந்த மலைகளின் நுழைவாசல்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வரும் போது வெடித்துச் சிதறக் கூடிய இரகசிய ஏற்பாடுகளையும் அது செய்துள்ளது. பாலங்களும் பெரும் தெருக்களும் வெடித்துச் சிதறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி மூவாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக்குடியவையாக உள்ளன என சுவிஸ் அரசு சொன்னாலும் உண்மையில் ஆறாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக் கூடியவை என நம்பப்படுகின்றது. உலகிலேயே முதலில் எல்லோருக்கும் படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி அவர்கள் தேவை ஏற்படும் போது கட்டாயமாக படைச் சேவைக்கு அழைக்கும் சட்டம் சுவிஸில் உண்டு. இதனால் ஒன்றரை இலட்சம் நிரந்தரப் படையினரைக் கொண்ட சுவிஸில் தேவை ஏற்படும் போது நாற்பது இலட்சம் படையினர் போர் முனையில் செயற்படுவர். சுவிஸ் சிறந்த முறையில் ஆட்சி செய்யப்படும் நாடாகும். உலகிலேயே அதிகாரப் பரவலாக்கம் உச்ச நிலையில் உள்ள நாடு சுவிஸ். அதன் நடுநிலைத் தன்மையால் பல உலக அமைப்புக்கள் சுவிஸ்ஸில் நிலை கொண்டுள்ளன. அது சுவிஸ் ஒரு சமாதான நாடாக இருக்க மேலும் உதவுகின்றது.
ஐஸ்லாந்து
மலைகள் எரிமலைக்குழம்பு, பனிப்பாறைகள் ஆகியவற்றால் சூழப்பட்ட ஐஸ்லாந்தும் ஆக்கிரமிக்கப்பட முடியாத ஒரு நாடாகும். அத்துடன் அங்கு பெரிய துறைமுகங்கள் ஏதும் இல்லை. அதனால் எதிரி நாட்டுப் படைகள் போய் தரையிறங்க முடியாது. உலகிலேயே அமைதியான நாடாகாக் கருதப்படும் ஐஸ்லாந்து தனது கரையோரப் பகுதியை கடுமையான கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் பேணிவருகின்றது.
நியூசிலாந்து
நியூசிலாந்தின் பூகோள அமைப்பு அதன் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கின்றது. அதன் அண்மை நாடான ஒஸ்ரேலியாவே ஆயிரம் மைல் தொலைவில் இருக்கின்றது. நியூசிலாந்தை ஆக்கிரமிக்கும் படைகள் கடினமான மலைகளைக் கடக்க வேண்டும். அந்த மலைகளிலும் காடுகளிலும் இருந்து நியூசிலாந்துப் படையினர் கரந்தடித் தாக்குதலை மேற்கொண்டு எதிரிகளை அழித்தொழிக்கலாம்.
ஒஸ்ரேலியா
பெரு நிலப்பரப்பும் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நிலையும் ஒஸ்ரேலியாவின் பாதுகாப்பு அரண்களாகும். இவற்றால் இரண்டாம் உலகப் போரின் போது ஒஸ்ரேலியாவை ஜப்பான் ஆக்கிரமிக்காமல் விட்டது. தற்போது சீனாவால் உருவாகியுள்ள அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒஸ்ரேலியா அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பைப் பேணுவதுடன் அமெரிக்கப் படைகளையும் அங்கு நிலை கொள்ள அனுமதித்துள்ளது. ஒஸ்ரேலியாவிடமும் வலுமிக்க கடற்படை உண்டு. பல பன்னாட்டு படை நடவடிக்கைகளில் நேட்டோப் படையினருடன் இணைந்து செயற்பட்டு தனது படையினரின் போர் முனை அனுபவத்தை பேணிவருகின்றது.
ஜப்பான் – ஆக்கிரமிப்பதே அதன் வரலாறு
மேற்கு நாடுகளைப் போரில் கலங்கடித்த பெருமை ஜப்பானுக்கு உண்டு. இரசியாவைப் போரில் வென்ற பெருமை ஜப்பானுக்கு உண்டு. தென் கொரியா சீனா ஆகிய நாடுகளை மட்டுமல்ல இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியப் படைகளை மலேயா, பர்மா போன்ற பல தூர கிழக்கு நாடுகளில் இருந்து விரட்டி அடித்தது ஜப்பான். உலகிலேயே அணுக் குண்டால் தாக்கப்பட்ட நாடு ஒரே நாடு ஜப்பான். அதன் போராடும் திறனை வேறு வழிகளால் அழிக்க முடியாததாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா ஜப்பானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி அது ஒரு தாக்குதல் படையை வைத்திருக்க முடியாது என அதன் அரசியலமைப்பு யாப்பில் இருந்தாலும் பாதுகாப்புக்கு மட்டுமான படை என்னும் பெயரில் உலகில் படைவலுவில் முன்னணி நாடாக இருக்கும் ஜப்பான் தீவை ஆக்கிரமிக்க முடியாது. அதன் விமானப் படை உலகின் ஐந்தாவது பெரியதாக இருக்கின்றது.
ஈரான் – தீவிரவாத அமைப்புக்கள் பெரும் துணை
மதவாதமும் மக்களாட்சியும் இணைந்த அரசக் கட்டமைப்பு தேசப்பற்றும் கல்வியறிவும் மிக்க மக்கள் அர்பணிப்புடன் போர் புரியக் கூடிய படையினர் ஆகியவை ஈரானின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஈராக்கில் ஆக்கிரமிப்புக் எதிராக நீண்ட நாள் சளைக்காமல் போராடி வெற்றி கண்டவர்கள் ஈரானியர். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தாடைக்கு எதிராக நின்று பிடித்தவர்கள் ஈரானியர். மத்திய கிழக்கில் பெரிய படை ஈரானினுடையது. பல மலைத் தொடர்களைக் கொண்ட ஈரானின் பூகோள அமைப்பும் அதன் பாதுகாப்பிற்கு வலுவூட்டுகின்றது. பல இஸ்லாமிய விடுதலை அமைப்புக்களுக்கு உதவி செய்வதால் அந்த விடுதலை அமைப்புக்களின் ஆதரவு ஈரானின் வலிமையாகின்றது. ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு எதிராக பல இஸ்லாமிய விடுதலை அமைப்புக்கள் தீவிரவாதத் தாக்குதல்களை தொடுக்கும் என்ற அச்சம் ஐக்கிய அமெரிக்காவையே கரிசனை கொள்ள வைத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தினால் நாம் அமெரிக்காவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோம் என லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு 2015-ம் ஆண்டு தெரிவித்திருந்தது.
கனடா
உலகப் பெரு வல்லரசான அமெரிக்காவை அயல் நாடாகவும் நெருங்கிய நட்பு நாடாகவும் கொண்டிருக்கும் கனடா வடக்கே வடதுருவத்தையும் தெற்கே ஐக்கிய அமெரிக்காவையும் மற்ற இரு புறங்களிலும் பசுபிக் மாக் கடலையும் அத்லாந்திக் மாக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய நிலப்பரப்பையும் நேட்டோ உறுப்புரிமையையும் கொண்ட கனடாவை ஆக்கிமிக்க முடியாது.
ஐக்கிய இராச்சியம்
உலகப் பெரு வல்லரசாக இருந்த ஐக்கிய இராச்சியம் இன்றும் பொருளாதாரத்திலும் படைவலுவிலும் உலகில் முன்னணி நாடாக இருக்கின்றது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஐக்கிய இராச்சியம் சிறந்த படைத்துறையைக் கொண்ட ஒரு வல்லரசாகும். இதனால் அது இன்றும் ஒரு ஆக்கிரமிக்கப்பட முடியாதநாடாகும். உலகின் முதற்தரப் பயிற்ச்சி மட்டுமல்ல அனுபவம் மிக்க படையணி அர்ப்பணிப்புடன் போர் புரியக் கூடியது. உலகிலேயே சிறந்த சிறப்புப் படையணியைக் கொண்டது ஐக்கிய இராச்சியம். கடற்போக்குவத்திலும் கடற்போரிலும் பல நூற்றாண்டு அனுபவத்தைக் கொண்டது.
இரசியா
உலகிலேயே பெரிய அளவு நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவை முழுமையாக ஆக்கிரமிப்பது முடியாத ஒன்று என்பது சரித்திரத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அதன் கால நிலையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏதுவானது அல்ல என்பதையும் நெப்போலியனும் ஹிட்லரும் செய்த ஆக்கிரமிப்பு சுட்டி நிற்கின்றது. இரசியாவின் முழு வட எல்லை பனிப்பாறைகளாலான வடதுருவமாகும். தென் புறமுள்ள பல நாடுகள் வலுவற்ற சிறிய நாடுகளாகும். இரசியாவின் பெரு நிலப்பரப்பில் அநேக மலைகளும் ஆறுகளும் உள்ளன. அப்படிப்பட்ட பெரு நிலப்பரப்பை ஆக்கிரமித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய படை வலிமை எந்த நாட்டுக்கும் இல்லை. படைத்துறை வலு என்று பார்க்கும் போதும் இரசியா உலகில் முன்னணியில் நிற்கின்றது. உலகிலேயே அதிக எண்ணிக்கையான அணுக்குண்டுகளை வைத்திருக்கும் நாடு இரசியாவாகும்.
ஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவும் சாதகமான பூகோள அமைப்பைக் கொண்டது. மொத்த உலகப் படைத்துறைச் செலவில் மூன்றில் ஒரு பகுதி அமெரிக்காவினுடையது. அதன் படைத்துறைத் தொழில்நுட்பம் தன்னிகரில்லாதது. அதன் படைகள் உலகின் எங்காவது ஒரு மூலையில் படைநடவடிக்கை செய்து கொண்டே இருக்கின்றன. உலகில் நடக்கும் பத்து படை மோதல்களில் ஒன்பதில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருக்கும். உலகெங்கும் பல நூற்றுக் கணக்கான படைத்தளங்களை வைத்திருக்கும் அமெரிக்கா தாக்குதலே சிறந்த பாதுகாப்பு என்னும் கொள்கையைக் கொண்டது. உலகிலேயே அதிக அளவு துப்பாக்கி பாவனையில் உள்ள நாடு அமெரிக்காவாகும். அமெரிக்காவில் சராசரியாக நூற பேருக்கு 112 துப்பாக்கிகள் என்ற அளவில் துப்பாக்கிப் பாவனை அங்கு உண்டு. இரசியாவில் நூறு பேருக்கு எட்டு என்ற அளவிலேயே துப்பாக்கிப் பாவனையில் உண்டு. அமெரிக்காவிற்கு அடுத்ததாக அதிக அளவு துப்பாக்கி பாவனையில் உள்ள யேமனில் நூற்றுக்கு 54 என்ற அளவிலேயே துப்பாக்கி பாவனையில் உண்டு. இதனால் அமெரிக்காவை யாராவது ஆக்கிரமிக்க முயன்றால் ஒவ்வொரு குடிமகனும் துப்பாக்கியுடன் களத்தில் இறங்கலாம்.
பிரான்ஸ்????
பிரான்ஸ் ஒரு வல்லரசாக இருந்தாலும் அதை ஆக்கிரமிக்கப்பட முடியாத நாடு என எந்த ஒரு படைத்துறை நிபுணர்களும் அதை வகைப்படுத்தவில்லை. படைத்துறைத் தொழில்நுட்பத்தில் பிரான்ஸ் முன்னணியில் இருந்தாலும் அதன் படைகட்டமைப்பும் படை முகாமைத்துவமும் இரண்டாம் போரின் போது சரியானதாக இருக்கவில்லை.
இந்தியாவையும், சீனாவையும் ஆக்கிரமிக்கலாம்!!!!
இந்தியாவும் சீனாவும் ஆக்கிரமிக்கப் பட முடியாத நாடுகளாக வகைப்படுத்தப்படவில்லை. இந்தியா மொகாலயர். பிரித்தானியா சீனா போன்றவற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. கார்கில் போரில் வெல்ல இந்தியாவிற்கு இஸ்ரேலின் உதவி தேவைப்பட்டது. இந்தியாவின் எல்லைகளில் சீனப்படைகள் ஊடுருவி படை நிலைகளை நிறுவுவது பல தடவைகள் நடந்துள்ளன. இந்தியாவில் பெரும் உள்நாட்டுக் குழப்பத்தை அல்லது பிரிவினைவாத அமைப்புக்களைத் தூண்டி இந்தியாவை சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து ஆக்கிரமிக்க முடியும். இரசியா விலகி இருந்தால் அல்லது நடு நிலை வகித்தால் சீனாவை இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஆக்கிரமிக்க முடியும். சீனாவிடம் எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே பெரிய படை இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியிலும் போர் முனை அனுபவ ரீதியிலும் அது பின் தங்கியுள்ளது. ஒரு சீனப் படை வீரனிடம் இருக்கும் கருவிகளின் பெறுமதி 1500 அமெரிக்க டொலர்களாகவும் ஓர் அமெரிக்கப் படைவீரனிடம் இருக்கும் கருவிகளின் பெறுமதி 17,000 டொலர்களுக்கு அதிகமானதாகவும் இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப வித்தியாசத்தைக் காட்டுகின்றது. 2030-ம் ஆண்டளவில் சீனாவும் இந்தியாவும் ஆக்கிரமிக்கப்பட முடியாத நாடுகளாக உருவெடுக்கும்.
எதிர் காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டுவரவிருக்கும் செயற்கை விவேகம் படைத்துறையில் கணனிகளால் இயக்கப்படும் இயந்திர மனிதர்களை போர் முனையில் ஈடுபடுத்தும். அந்த தொழில்நுட்பம் பெருவளர்ச்சியடைய முன்னர் மக்கள் தொகையும் அதன் கட்டமைப்பும் போர் புரியும் திறனில் கணிசமான பங்கை வகிக்கும். அதிக இளையோரைக் கொண்ட இந்தியா அந்த வகையில் உலக அரங்கில் மற்ற நாடுகள் பார்த்து கரிசனை கொள்ளக் கூடிய நிலையை இன்னும் பத்து ஆண்டுகளில் அடையும்!!
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 31 January 2017

Saudi Arabia's Vision 2030 !!


Image result for saudi vision 2020
Ambitious plans announced by Saudi Arabia last month to diversify its economy could lead to a credit ratings upgrade in the future, according to Moody’s Investors Service.



In its latest report, the rating agency highlighted Deputy Crown Prince Mohammed bin Salman’s Vision 2030 reforms that include tax rises, an efficiency drive and plans to give a bigger role to the private sector.

Saudi Arabia's Vision 2030 represents a serious attempt to address a future in which oil plays less of a role in the kingdom's economy but implementing the plan is likely to bring about unpredictable political change, a think tank said.


A report published by the UK-based Chatham House largely attributed the ambitious economic plan to the rise of Crown Prince Mohammed bin Salman.
The need to diversify and develop the kingdom's economy has put serious pressure on the highest levels of governments to make the long-overdue changes needed for Saudi Arabia to progress..
Senior research fellow at Chatham House and author of the report, Jane Kinninmont, said the blueprint for the future economy is unlikely to become reality without some unintended political reactions.
“The authorities may hope that the political system can remain largely unchanged, at least in terms of the dominant role of the monarchy,” she said. “But their economic reform plans imply major changes in the economic basis of the relationship with citizens, and potentially also to the traditional partnership between ruling family and clerics.”
As the plan looks to promote a more active citizenry, it will also encourage more independent thinking and a more entrepreneurial spirit - both of which will have to overcome the obstacle of religious conservativism.
But there is no doubt that Vision 2030 is focused on moulding a country that is less reliant on oil, a fact that both the rulers and the citizens of Saudi Arabia generally accept is necessary.
A main concern is that as the transition pushes for rapid change, the Saudi leadership will continue to support a private sector that will nonetheless still be at least semi-dependent on the good will of the government.
“This transition will be a difficult one, and will create winners and losers. In particular, a generation of less well-educated youth will find it extremely difficult to make a decent living in the private sector and are thus likely to need social and economic support,” the report said.
The ambitious plan, said the report, is likely to create divisions not only in economic standards but in social and political ones. Less-privileged residents working in private-sector industries in Saudi Arabia are likely to fall behind.
Economic reformists both within and outside Saudi Arabia hope that developing the economy will promote evolution in governance and institutions, or at least in the relationship between the authorities and the populace.
The Vision 2030 plan wants to implement changes throughout Saudi Arabia that will drive the young to seek careers less dependent on government subsidies and more based on private sector entrepreneurship.
Chatham House also said Vision 2030 pays too little attention to social change as Saudis strive to improve their quality of life. Making the country more “fun” would be a real gain for the leadership.
The think tank report also referred to Dubai’s development and modernisation plans.
“While Saudi Arabia is never going to be Dubai, the UAE model of social liberalization without political liberalization is one that influences the debate across the region,” Ms Kinninmont said..
Whatever the potential effect on quality of life, some in Saudi Arabia will regard any provision of entertainment as a step too far towards Westernisation and an expensive indulgence only available to the privileged few. Instead, the economic transformation of Vision 2030 could be used as an opportunity to create a more inclusive political system in Saudi Arabia, which would in turn lessen the need to appease its citizens with government handouts and bonuses.
However, the difficulties emerging from the gradual empowerment of parliaments in Kuwait and Bahrain have made engaging in politics less attractive.
Additionally, the calls for change inspired by the Arab uprisings of 2011 highlighted a need for greater government accountability and a more earnest fight against corruption.
“This regional climate has given the Saudi leadership a window of opportunity to push through painful austerity measures, which are not popular but which have not provoked any corresponding populist mobilization,” the report said.It also pointed out that “promises of transparency laid out in Vision 2030 have not been matched by a step change in press freedom or freedom of information.”
Although Vision 2030 lays out an economic path, it is hard to image the political status quo remaining unchanged until 2030, Ms Kinninmont said. Though the plan is ambitious, it would have a better chance of success if implemented over a longer period than 13 years.

Tuesday, 24 January 2017

போராட்டத்தில் பின்னால் இருப்பது அரசியல்வாதிகளா? கட்சிகளா? சமூக விரோத சக்திகளா?

Image result for காவல்துறை உங்கள் நண்பன்காவல் நிலையத்தை எரித்தது போராட்டக்காரார்கள் அல்ல என்று போலீஸே சொல்கிறது என்றால், இதன் பின்னால் இருப்பது அரசியல்வாதிகளா? கட்சிகளா? சமூக விரோத சக்திகளா?



தமிழக காவல்துறை என்றும் மாறாது.எட்டு நாட்கள் நம் மாணவர்கள் காவலர்களை தனக்குள் ஒருவராக நினத்து உணவு, தண்ணீர் அனைத்தும் கொடுத்து வந்தார்கள். அவர்களை இன்று விரோதிகளை போல காவல்துறை அடித்து நொருக்குகிரது.தமிழக காவல்துறையில் நல்லவர்கலும் இல்லை, நன்றி உள்ளவர்களும் இல்லை.கேட்டால் எங்கள் கடமை இது என்பார்கள். அதே கர்நாடக கலவரம் நடந்த போது அந்த மாநில காவல்துறை அந்த மாநில மக்கள் மீது எந்த வன்முறையையும் பிரயோகிக்கவில்லை.அப்போதும் நம் மக்கள் மீது தான் நம் காவல் துறை நடவடிக்கைகள் எடுத்து கைது செய்தது. 50 ஆண்டுகள் முன்பு படிக்காத பாமரர்களைஎப்படி காவல்துறை கையாண்டதோ அப்படியே தான் இன்று படித்த அறிவு சார் சமூகத்தையும் காவல்துறை கையாளுகிறது.தமிழக காவல்துறையில் காவலர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அறிவுசார் சமூகத்தில் நாமும் வாழ்கிரோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நிறைய காவல்துறை அதிகாரிகள் மேடைகளில் சிறப்பாக மக்களுக்கு நல்ல உபதேசம் வழங்குகிறார்கள். அதனை முதலில் அவர்களும் அவர்கள் துறையில் உள்ளவர்களும் கடைபிடிக்க வேண்டும்.மொத்தத்தில் நம் சமூகம் கற்றுள்ள,கடைபிடிக்கிற நாகரீகத்தை இன்னும் நம் காவல்துறை கற்றுக்கொள்ளவில்லை என்பது வருந்த தக்கது.Image result for வன்முறையில் ஈடுபடக் கூடாது

தமிழக காவல்துறையின் மிக கீழ்த்தரமான செயலை இதன் மூலம் அரியாலாம்


வீடுகளை உடைப்பது, வாகனங்களை எரிப்பது, அப்பாவி பொது மக்களை அடிப்பது.. இதையெல்லாம் யார் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? ரவுடிகள் மற்றும் தீவிரவாதிகள் என்று நீங்கள் சொன்னால் உடனடியாக இந்த காணொளியை பாருங்கள். சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் இந்த கொடுமைகள் அனைத்தையும் செய்தது சென்னை காவல்துறை. இனி பொதுமக்களுக்கு இந்த காவல்துறை மீது எவ்வாறு நம்பிக்கை வரும்?


1)கர்பினி பெண்ணின் சிசுவை கொலை செய்தது.

2)ஏழைகளின் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தியது.

3)போராட்ட கலத்தில் பெண்ணின் ஆடையை கிழித்து அரை நிவாரணம் படுத்தியது.

4)மாணவர்கள் மீது கொலைவெரி தாக்குதல் நடத்தியது.

5)மதத்தின் பெயரால் அப்பாவி வாலிபரை எட்டுபேர் சேர்ந்து தாக்கியது.

6)சம்மந்தமே இல்லாம தெருவுல நின்ன பைக்குகலை நொருக்கியது.

7)ஏழைகளின் குடிசையில் தீ வைத்தது அதுவும் பெண் போலீஸ்.


நம்புங்க காவல்துறை உங்கள் நண்பன்.
இதையென்னம் ஏன் மனித உரிமை ஆணையம் கண்டுக்கொல்லாம் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்றுமாட்டு புலப்படுகிறது நம் மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த தமிழக அரசின்

செயலாகவே இதை நம் கருதலாம். யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது. ஆனால் ஒன்று மட்டும் நங்கள் கூறுவது, இந்த மீதம் உள்ள 4 ஆண்டோடு அதிமுக வின் அராஜகம் மொத்தமாக ஒழிந்து விடும் என்பது மட்டும் தீர்க்கமாக தெரிகிறது .


# நீதிபதிகளின் கண்கள் மூடப்பட்டு உள்ளதா?...

# மனித உரிமை ஆணையம் இந்த செயலுக்கு என்ன செய்யபோகிறது?

# சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள் அதில் வாதாடும் வழக்குறைஞ்சர்களே வெளிச்சம் என்பார்கள் அவர்களும் இதில் மவுனம் காக்க போகிறார்களா?... 
ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.




Sunday, 22 January 2017

காந்தீய வழியில் போராடி வெற்றி பெற்று சாதனை !!


25,00000 இளைஞர்கள் 500 இடங்களில் அமைதியாக, காந்தீய வழியில் போராடி வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். உலகமே உற்று நோக்கி வியந்து நிற்கும் வகையில் வரலாறு படைத்திருக்கிறார்கள். இப்படியொரு தீப்பொறி அவர்களுக்குள் கனன்று கொண்டிருப்பதே வெளியில் தெரியாமல் பொத்தி வைத்திருந்தவர்கள் அதன் எல்லை மீறி இன்று பெருந்தீயாக கொதித்தெழுந்துள்ளார்கள். கங்கு கூட குளிர்த் தென்றலாய் அமைதி காக்கும் என்பதையும் உணர்த்தி, சரித்திரம் படைத்துள்ளார்கள். என் மனச்சாட்சியே எனக்குத் தலைவன், முகமூடியணிந்த எந்த தலைவனும் எங்களுக்குத் தேவையில்லை என்று ஒற்றுமையுடன் கூடி நின்று நினைத்ததை நடத்தி சாதனைப்படைத்து விட்டார்கள். புல்லுறுவிகளாக உள் நுழைய முற்பட்ட சாதி அரசியல்வாதிகளையும், அதனுள் விட்டிலாய் வீழ இருந்தவரையும் அடையாளம் கண்டு நாசூக்காக ஓரங்கட்டிய சடங்குகளும் அழகாக நடந்துள்ளன. வெகு இயல்பாக இளைஞரோடு இளைஞராக கலக்க இருந்த புல்லுருவிகளையும் நிதானமாக திறமையாக வெளியேற்றிய சாதனைகளையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இலக்கு நேர்மையானதாக, தன்னலமற்றதாக, நாட்டின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டதாக இருக்கும்பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்பதை மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். குப்பை போடாமல், தீய சொற்களையும், தீய செயல்களிலும் ஈடுபடாமல் மனமுதிர்ச்சியுடன் நடந்துகொண்ட இந்த துள்ளிவரும் காளைகள் இன்றைய அரசியல்வாதிகளுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பாடம் புகட்டியுள்ளனர். இதற்கு மேலும் திருந்தாவிட்டால் அடுத்து அவர்களின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதையும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள். அண்டை மாநில இளைஞர்களும் தன்னார்வத்துடன் உதவிக்கு வரத் தயாராக இருந்ததன் மூலம் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் நம் நாட்டிற்குக் கிடைத்த வரம் என்றே பெருமை பொங்க கூறமுடிகிறது. சில புல்லுறுவிகள் நம் நாட்டுத் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசியும், தேவையில்லாத செயல்பாடுகளில் இறங்கியும் உள்ளதற்கு இந்த மாணவச் செல்வங்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல என்பதையும் உணர்த்தியுள்ளார்கள். கூட்டத்தில் குளிர் காய்ந்துகொண்டு தங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்ட சுயநலவாதிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மற்றபடி பாலின பாகுபாடின்றி எல்லோரும் ஓரினம் என்ற அறைகூவலோடு, பெண்களையும் கௌரவமாக நடத்தி, எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாகப் போராடி வெற்றி கண்டுள்ள இளைஞர்களை/மாணவச் செல்வங்களை எத்துணை பாராட்டினாலும் தகும். Image result for ஜல்லிக்கட்டுப் போராட்டம்
அவசரச்சட்டம் மத்திய அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு தலைவரும் ஏற்றுக்கொள்வதற்காக அவருடைய பார்வைக்குச் சென்றுள்ளது. இன்று மாலைக்குள் ஆளுநரும் கையொப்பமிட இந்த அவசரச் சட்டமானது மாநில அமைச்சர் குழுக்களால் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. நாளை அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு வீர விளையாட்டைத் தாமே துவங்கி வைப்பதாக தமிழக முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றே அதற்கான பணிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வாடிவாசல் வந்து பார்வையிட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கான ஆரம்பப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.


இந்த போராட்டம் எதை காட்டுகிறது?
1.தமிழன் என்ற உணர்வு
2.பொறுமையின் எல்லை
3.பொறுமையின் உச்சம்
4.ஒருங்கிணைப்பு முறை
5.கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,
6.தெளிவான கருத்துக்கள்
7.தன்னம்பிக்கை
8.மக்களின் சீற்றம்
9.உணர்வுகளின் குவியல்
10.உ ண்மை போராட்டம்
11.அரசியல் உதாசீனம்
12.மக்கள் ஒற்றுமை
13.மனித நேயம்
14.எதிர்பார்பில்லாத உதவி
15.தமிழின உணர்வு முன்னுரிமை
16.பெண்களின் முழு ஆதரவு
17.சமுதாய எழுச்சி
18.காவல்துறை ஆதரவு
19.அரசியல் கட்சிகளின் அதிர்ச்சி
20.சமூக வளைதளங்களின் தேவை.....
இப் போராட்டம் வெற்றியின் முகவரி!!
கண்ணியம் காத்த அனைத்து இளைஞர்களுக்கும் தமிழ் பண்பாட்டை உலகிற்கே உணர்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுதல்களும், வாழ்த்துகளும் தெரிவிக்கும் அதே நேரத்தில் மேலும் இதே ஒற்றுமையையும், அமைதியையும் என்றும் காத்து தமிழர் நலம் பேணுவோம் என்று உறுதியெடுப்போம்!

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

பெங்களூரு ஷாப்பிங் மால்களில்பதப்படுத்தப்பட்ட பால் !!!

Image may contain: textFair life என்னும் பதப்படுத்தப்பட்ட பால் பெங்களூரு ஷாப்பிங் மால்களில் சமீபத்தில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்தப் பாலில் அப்படியென்ன விசேஷம்?
இந்தப் பாலில் 50% அதிக புரோட்டீனும், 30% அதிக கால்சியமும், 50% குறைக்கப்பட்ட சர்க்கரையும் உள்ளது என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட விஷேசமான செய்தி இதை தயாரிப்பது கோக கோலா நிறுவனம் என்பதுதான்! (இந்த நிறுவனத்தைப் பற்றி எழுதத் துவங்கினால் தட்டச்சு செய்து என் விரல்கள் ஓய்ந்து போய்விடும். அதைப் பின்னால் ஒருநாள் பிரித்து மேயலாம்.இப்போதைக்கு ஒத்தி வைக்கிறேன்)
கோககோலா நிறுவனத்தின் வட அமெரிக்க நிர்வாகி சேண்டி டக்ளஸ் கூறுகிறார், 'ஆசியச் சந்தையில் இந்தப் பால் விற்பனைக்கு வரும் போது கோலா நிறுவனம் பணமழையில் நனைந்து கொண்டிருக்கும். சாதாரண பாலை விட இரண்டு மடங்கு விலையில் நம்மால் அங்கு இந்த பதப்படுத்தப்பட்ட பாலை விற்பனை செய்துவிட முடியும். ஆனால் விளம்பரங்களின் மூலம் நாம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். முக்கிய நிகழ்வுகளின் விளம்பரத் தூதராக நாம் மாற வேண்டியது அவசியம். அதற்கு முன் பண்பாடு சார்ந்த விஷயங்களில் இருந்து மக்களை வெளியே கொண்டு வர வேண்டியது முக்கியமான பணி.'
சரி...அவர்கள் வியாபாரத்தை வளர்க்க அவர் பேசுகிறார். தொலையட்டும்.
இந்தப் பாலின் இலட்சணம் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
The china study என்பது ஒரு ஆய்வின் பெயர். அதைச் செய்தவர் காலின் கேம்ப்பல் என்பவர்.இந்தப் பாலை அவர் எலிகளிடம் பரிசோதனை செய்கிறார்.இந்தப் பாலில் இருக்கும் 50% அதிக புரோட்டீன் எலிகளுக்கு கேன்சர் நோயை வரவைக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர் பதப்படுத்தப் படாத சாதாரண மாட்டுப் பாலை அந்த கேன்சர் பாதித்த எலிகளுக்கு மீண்டும் தந்து பரிசோதனை செய்கிறார். இப்போது அந்த எலிகளுக்கு கேன்சர் குணமடையா விட்டாலும் எதிர்ப்புத் திறன் கூடுவதைக் காண்கிறார்.
“From Grass to Glass” என்ற அவரது ஆய்வின் முடிவு இப்படிக் கூறுகிறது. ' பாலை பதப்படுத்துவதாகக் கூறி அதில் சர்க்கரையைக் குறைக்கிறேன்,புரோட்டீனை அதிகப் படுத்துகிறேன் ,கால்சிய அளவினைக் கூட்டுகிறேன் என்ற பெயரில் வேதியியல் வினைகளுக்கு உட்படுத்துவது கேன்சரில் கொண்டு வந்து விடுகிறது. பாலை இயற்கையாக எந்த வேதிவினைகளுக்கும் உட்படுத்தாமல் உண்பது மட்டுமே சரியானது.'
Fair life பால் The “real food” movement என்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை சர்வாதிகாரத்திற்கு எதிராக நம்மால் என்ன செய்துவிட முடியும்?
நாட்டு மாடுகளை இன்னும் வைத்துக் காப்பாற்றி வரும் நம் விவசாயிகளை இந்தச் சூறையாடலில் இருந்து எப்படி நாம் மீட்கப் போகிறோம்?
ஜல்லிக்கட்டுத் தடை என்பது கண்ணிற்குத் தெரியாத சிக்கலின் ஒரு முனை மட்டுமே!
மல்லுக்கட்டித் தான் தீர வேண்டும்!
நம்மால் முடியும் ...