Thursday, 6 June 2024

MOST TOP SALADS OF WORLD


Mechouia Salad (4.9): A Tunisian grilled salad made with vegetables like tomatoes, peppers, onions, and garlic, often garnished with hard-boiled eggs, olives, or tuna.

Ovcharska Salad (4.8): A Bulgarian shepherd's salad, typically including tomatoes, cucumbers, peppers, onions, mushrooms, ham, cheese, and a hard-boiled egg.

Fattoush (4.5): A Levantine bread salad made with toasted or fried pieces of pita bread, mixed greens, and other vegetables.

Greek Salad (4.4): A popular salad from Greece, characterized by tomatoes, cucumbers, onions, feta cheese, and olives, typically dressed with olive oil and oregano.

Mizeria (4.4): A traditional Polish cucumber salad, usually made with sliced cucumbers, sour cream or yogurt, and dill.

Panzanella (4.2): An Italian bread and tomato salad, often including onions, basil, and a vinaigrette dressing.

Olivier Salad (3.9): A Russian salad made with diced potatoes, carrots, peas, pickles, eggs, and a mayonnaise-based dressing, often including meat like chicken or ham.

Caesar Salad (3.8): A classic American salad consisting of romaine lettuce, croutons, Parmesan cheese, and a creamy dressing.

Salade Niçoise (3.8): A French salad from Nice, typically featuring tomatoes, hard-boiled eggs, Niçoise olives, anchovies, and tuna, dressed with olive oil.

Esqueixada: A Catalan salad from Spain, made with shredded salt cod, tomatoes, onions, olives, and a vinaigrette.

Macaroni Salad: A pasta salad made with cooked elbow macaroni and a mayonnaise-based dressing, often including vegetables like celery and onions.

Bayerischer (Bavarian) Salad: Likely referring to a Bavarian potato salad, often made with warm potatoes, bacon, onions, and a vinegar-based dressing.

Thursday, 16 May 2024

Save 1000s of dollars for Free Excel Course !!






If you want to learn Excel ???

I have curated a free Excel course for you.


Following 15 free lessons to make you better at Excel than 90% of the people.


1. Presentation of Excel and PowerQuery 

https://lnkd.in/eyx2Hg3a


2. Excel Ultimate Guide 

https://lnkd.in/eT8wWia7


3. Excel Vlookup 

https://lnkd.in/eHjZrf_y


4. Excel Lookups 

https://lnkd.in/eCNRGYAg


5.Excel Shortcuts 

https://lnkd.in/esMKGVqf


6. Excel Tips

 https://lnkd.in/eh-QtbbR


7. Excel Financial Statements Template 

https://lnkd.in/ebHpsbNZ


8. Excel Waterfall Template 

https://lnkd.in/eP6sKmV8


9. Excel Table and Tabular Data

 https://lnkd.in/eF2FhZFk


10. Excel Charts Tips 

https://lnkd.in/et8E47rt & https://lnkd.in/eSJhViNu


11. Excel FP&A Tips

 https://lnkd.in/eCyegUQW


12. Excel vs PowerBI 

https://lnkd.in/epqjPW6s


13. Excel Dynamic Arrays

 https://lnkd.in/exUSTxUf


14. Excel Split Text in Seconds 

https://lnkd.in/e66gHfrC


15. Excel Financial Modeling

 https://lnkd.in/e34gyct3

 Help me spread this free course: like, share and comment!

Tuesday, 14 May 2024

உலகின் முதல் இஸ்லாமிய பெண் செவிலி ருஃபைதா பின்த் ஸ'ஆத் ( Rufaida Al Aslamia) பற்றிய ஒரு சமூக பார்வை !!

 

உலகின் முதல் செவிலியர் மற்றும் ரஸூலுல்லாஹ் (ஸல்)  காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தின் முதல் பெண் செவிலி ருஃபைதா பின்த் ஸ'ஆத் (ரலி) ....

நபிகள் நாயகம் முஹம்மது( ஸல் ) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ருஃபைதா, பனி அஸ்லாம் குலத்தை சேர்ந்தவர்கள்,போர்க்களத்தில் காயமடைந்த ஸஹாபாக்களுக்கு சிகிச்சையளிக்க நபிகள் நாயகத்திடம் அனுமதி பெற்று இயங்கியவர், மதினா பள்ளிவாசலுக்கு மிக அருகில் கூடாரங்கள் அமைத்து நோயாளிகளுக்கும்    தேவையுடையோருக்கும் உதவுமாறு அனுமதியளிக்கப்பட்டிருந்தார்.

ருஃபைதா அவர்கள் சவூதியின் மேற்கு பகுதியான ஹிஜாஸில் ஹிஜ்ரி 2ல் பிறந்ததாக (கிபி 620) தோராயமாக அறியப்படுகிறது.

தமது தந்தையான ஸ'ஆத் அல் அஸ்லாமி அவர்களிடம் மருத்துவம் பயின்ற ருஃபைதா முதல் முஸ்லிம் அறுவை சிகிச்சை மருத்துவராகவும் அறியப்படுகிறார்.

ருஃபைதா ஒரு செவிலி , ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மாத்திரமல்லாது சிறந்த சமூக சேவகியாகவும், சமூகத்தில் சூழ்ந்திருந்த நோய்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும், அனாதை குழந்தைகளுக்கான ஆதரவு இல்லம் ஒன்றினை தொடங்கி ஆரதவற்றவர் பாதுகாவலராகவும் இருந்துள்ளார்.

தம்மை போல பல விருப்பமுடைய அன்சாரி பெண்களுக்கு செவிலிப்பணிக்கான பயிற்சிகள் அளித்து பட்டறை ஒன்றும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறந்த செவிலியாக ருஃபைதா அவர்கள் கடைபிடித்த ஒழுங்குமுறைகள் தான் பின்னாளில் மத்தியகால இஸ்லாமிய பேரரசுகள் நிர்மாணித்த மருத்துவமனைகளிலும் , பிறகு ஐரோப்பாவிலும் நர்ஸிங் என பரவியது.

நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் காலத்திலேயே அவர்களோடு வாழ்ந்த செவிலி ருஃபைதா தான் இஸ்லாமிய உலகின் முதல் செவிலியாக அறியப்படுகிறார்.

தொகுப்பு  : அ. தையுபா  அஜ்மல்.

Tuesday, 23 April 2024

காரைக்குடி,கோட்டையூரின் புத்தக பொக்கிஷ மனிதர் ரோஜா முத்தையா செட்டியார்!!

இன்று புத்தக தினத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மூலம் ஒரு லட்சம் புத்தகங்களை , பொக்கிஷம் போல போற்றிப் பாதுகாத்து வந்த ஒரு தனி மனிதரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


அந்த அபூர்வ மனிதரின் பெயர் ரோஜா முத்தையா செட்டியார். அவர் சிவகங்கை மாவட்டம் , நான் பிறந்த என் ஊர் காரைக்குடி கோட்டையூரில் பிறந்து [ 1926-1992 ]வாழ்ந்தவர்.தன்னுடைய நடுத்தர வயதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்களை சேர்த்து விட்டாராம் செட்டியார்..!

தனி ஒரு மனிதனாக , எப்படி இவற்றையெல்லாம் பாதுகாப்பது ...?


இந்த புத்தகங்கள் அனைத்தையும் தஞ்சை பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விடலாம்...அல்லது தமிழக அரசிடம் கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டார் செட்டியார்,அதற்கான முயற்சிகளை முழு மூச்சுடன் எடுத்தார்..!அடுத்த சில நாட்களில் , அதிகாரிகள் சிலர் வீடு தேடி வர, செட்டியாருக்கு அளவில்லா சந்தோஷம்.அப்பாடா என்று அரசு அதிகாரிகள் வந்து விட்டார்களே என ஆவலோடு வரவேற்றார், ஆனால் வந்தவர்கள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்கள்.

செட்டியார் பற்றி கேள்விப்பட்டு , தானாகவே முன் வந்த சிகாகோ பல்கலைகழகத்தினர் ,கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து செட்டியாரிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் அவர்களே எடுத்துக் கொள்ள தயாராக இருந்தார்கள்.

என் பொக்கிஷங்கள் இந்த தமிழ் நாட்டிற்கு மட்டுமே சொந்தம். ” என்று சொல்லி விட்டார்.என்றாவது ஒரு நாள் , தன் புத்தக பொக்கிஷங்களை தமிழக அரசு எடுத்துக் கொள்ளும் என்று தளராத நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருந்தாராம் முத்தையா செட்டியார் .

செட்டியார் , ஒரு புத்தகத்தை கையில் எடுக்கும்போது , அப்போதுதான் பிறந்த குழந்தையை எடுப்பதை விட , மென்மையாக எடுப்பாராம்... எந்த புத்தகத்தை யார் அவரிடம் கொடுத்தாலும் கோடி ரூபாய் பணத்தை கையில் வாங்குவது போல மகிழ்வோடு வாங்குவாராம்.

எல்லோரும் தாங்கள் உடுத்தியுள்ள வேட்டி அழுக்காகாமல்தான் பார்த்துக் கொள்வார்கள். ஆனால்....செட்டியார் தன் புத்தகத்தில் அழுக்கு இருந்தால்,

தான் உடுத்தியிருக்கும் பட்டு வேட்டியால் , புத்தகத்தில் இருக்கும் அழுக்கை மென்மையாகத் துடைப்பாராம்.

தான் வாழும் காலத்திலேயே , எல்லா புத்தகங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்து விட ஆசைப்பட்ட முத்தையா செட்டியார் எதிர்பாராமல் 4.6.1992 அன்று இறந்து போனார்.

அதன்பின் சிக்காகோ பல்கலைக்கழகம் மீண்டும் செட்டியாரின் குடும்பத்தை தொடர்பு கொண்டது...செட்டியாருடைய சேகரிப்புக்கள் அனைத்தையும் , நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டது...

அந்த நூல்கள் அனைத்தையும் அமெரிக்கா கொண்டு செல்லாமல் , செட்டியார் ஆசைப்பட்டபடியே , சென்னையிலேயே ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ என்ற பெயரில் 1994-ம் ஆண்டு தொடங்கி , இப்போதும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது சென்னை தரமணியில் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புத்தகம் வாசிப்பது சுகானுபவம். அதை அனுபவித்தவர்கள், ஒரு போதும் மாற மாட்டார்கள். மனதுக்கும் மிக நெருக்கமாக உள்ள புத்தகங்களை வாசிக்கும் போது தான் சிந்தனை பிறக்கிறது. அது செயலாக மாறுகிறது. புத்தக வாசிப்பை வளப்படுத்துங்கள்புத்தகங்கள் வாசிப்பது ஒரு அருமையான பழக்கம். அது நம் அறிவை மேன்படுத்த உதவும். மேன்படுத்துவது மட்டும் இல்லாமல், ஒருவரை பல கோணங்களில் புத்தக வாசிப்பு சிந்திக்க வைக்கும். பல நேரங்களின் உங்களுக்கு புத்தக வாசிப்பு கைகொடுக்கும். 

எனக்கு அவ்வாறு தான் என் முதல் நேர்முகத்தேர்வுக்கு கைகொடுத்தது.
எல்லா கேள்விகளும் கேட்டு முடித்த பிறகு, நேர்முக தேர்வாளர் நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகத்தின் பெயரை கூறுங்கள் என்றார். நான் அப்போது படித்த புத்தகத்தின் பெயரை கூறினேன்
(The Bad Beginning  - A Series of Unfortunate Events, #1 by Lemony Snicket) அதில் வரும் மூன்று தவறுகள் என்ன. அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டார்.

மூன்று தவறுகளைக் கூறி அதில் இருந்து கற்றுக்கொண்டதை கூறினேன். நேர்முக தேர்வாளரும் அந்த புத்தகத்தை படித்து இருப்பர் போல.அவருக்கு நான் கூறிய பதில் பிடித்து இருந்தது. ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்தி மறைமுகமா நீங்கள் Selected என்று வார்த்தைகள் இல்லாமல் கூறினார். புத்தகம் படிப்பது எவ்வளவு நல்லது என்று நான் உணர்ந்த தருணம் அது.


ஒரு வேலை நான் புத்தகம் படிக்காதவனாக இருந்து இருந்தால் நேர்முக தேர்வாளருக்கும் எனக்குமான தொடர்பு அன்றே முடிந்து இருக்கும். இருவரும் புத்தக வாசிப்பாளர்கள் என்பதினால் நாங்கள் இன்று வரை தொடர்பில் உள்ளோம். நான் அலுவகத்திற்கு சேர்ந்த பிறகு அவரை தேடி கண்டுபிடித்து இன்றளவும் தொடர்பில் உள்ளேன். உண்மையில் சொல்லப்போனால் காதலர்கள் இடையே இருக்கும் உறவை விட அற்புதமான உறவு இரண்டு புத்தகம் வசிப்பவர்கள் இடையே இருக்கும்.

புத்தகம் வாசியுங்கள். புத்தகம் வசிக்கும் நபர்களிடம் பேசுங்கள். அது ஒரு தனி உணர்வு. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உறவாக இருக்கும்.


இந்த புத்தக தினத்தில் புத்தகங்களை வாசிப்போம் என உறுதி எடுத்துக்கொண்டுஇன்றே தொடங்குங்கள்.

என்றும் என் வாழ்த்துக்களுடன்...

உங்கள் மு. அஜ்மல் கான்.

Sunday, 10 March 2024

Environmental Concerns Lead to Discontinuation of FM200 Fire Suppression Systems !!



FM200 (also known as HFC-227ea) is a clean agent fire suppression system that has been used for decades to protect valuable assets and critical infrastructure from fire damage. However, there has been a recent trend towards phasing out FM200 due to concerns over its environmental impact and safety risks.


One of the main concerns with FM200 is its impact on global warming . FM200 is a hydrofluorocarbon (HFC), which is a type of synthetic gas that has a high global warming potential. When released into the atmosphere, HFCs can contribute to climate change.


In addition to environmental concerns, there are also safety risks associated with FM200. While FM200 is a highly effective fire suppressant, it can be hazardous to human health in high concentrations. Exposure to FM200 can cause respiratory problems, eye irritation, and other health issues.


As a result of these concerns, many countries and organizations are phasing down the use of FM200 and other HFC-based fire suppression systems. The United States Environmental Protection Agency (EPA) has also announced plans to phase down the use of HFCs in various applications, including fire suppression.


While the phase-down of FM200 may be concerning for those who rely on this technology to protect their assets, there are alternative fire suppression systems available that are more environmentally friendly and safer for human health. For example, some companies are switching to water mist systems or inert gas systems, which use non-toxic gases like nitrogen or argon to suppress fires.

FM-200 Fire Suppression Systems Article_5:

Clean Agent Standards:

The most common standard that we have come across when using a Clean Agent Gas for Fire Suppression is the NFPA 2001 – Standard on Clean Agent Fire Extinguishing.

The standard covers the requirements for designing, installing, testing, inspecting, approving, operating, and maintaining the systems.

Is FM200™ banned?

No, FM200 is not banned, there is sometimes confusion with Halon, which during the start of 1992, it was instructed that no manufacturing of new Halon was allowed from 1994, under the Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer. This was due to its environmental impact on the Ozone Layer.

FM200 became one of the world’s leading replacements of Halon for Fire Suppressant and Clean Agent Gases.

Is FM200™ Safe?

Upon exposure to people, it is safe but should be noted one of the Hazards noted is ‘May displace oxygen and cause rapid suffocation’, due to the way it works, being heavier than air.

What other suppression gases are available?

Although the most common, FM-200™ it is not the only option when it comes to using a Clean Agent for Fire Suppression. Other gases available are:
·Novec™ 1230 [Halocarbon]
·Inergen [Inert Gas]
·Nitrogen [Inert Gas]
·Argonite [Inert Gas]

Room Integrity Testing:

Prior to the space being put into operation, that is being protected, there will need to be a ‘Room Integrity’ test carried out to test it for leakage, and thus ensure the gases holding time can be met.

5 Different Fire Classes A, B, C, D & K:

To understand the Fire Classes [A, B & C] that the FM200™ gas is applicable for, refer to the below table:





Wednesday, 6 March 2024

இஸ்லாத்தில் 5 கலிமா பற்றி அறிந்து, அவற்றை புரிந்து மற்றும் எளிதில் மனனம் செய்து கொள்ளுவோம் !!



1. கலிமா தய்யிப்

 

லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி


பொருள்: முதல் கலிமா பரிசுத்தமானது

வணக்கத்திற்குரியவன் அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள்.


2. கலிமா ஷஹாதத்


அஷ்ஹது அல்லாஹ் இலாஹ இல்லல்லாஹு வஹ்த்ஹு லாஷரீக்க லஹு வஆஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு.


பொருள்: இரண்டாம் கலிமா (உள்ளத்தால்) சாட்சி கூரல்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை என்று (உள்ளத்தால் உறுதி கொண்டு) சாட்சிக் கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு (யாரும்) இணை இல்லை. மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், உண்மைத் திருத்தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சிக் கூறுகிறேன்.


3. கலிமா தம்ஜீது


சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹௌல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.


பொருள்: மூன்றாம் கலிமா தூய்மைப்படுத்துதல்

அல்லாஹ் பரிசுத்தமானவன். மேலும் எல்லாப் புகழும் அல்லாஹுத்தஆலாவிற்கே உரியன. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும் அல்லாஹுத்தஆலா மிகப் பெரியவன், பாவத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள சக்தியும், நற்காரியங்கள் புரிவதற்குரிய திறனும் அல்லாஹ்வின் உதவிக் கொண்டே ஒழிய இல்லை. அவன் மிக உயர்ந்தோனும் கண்ணிய மிக்கோனுமாக இருக்கிறான்.


4. கலிமா தவ்ஹீது


லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக் கலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயெமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.


பொருள்: நான்காம் கலிமா ஒருமைப்படுத்துதல்

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத் தவிர வேறு இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. எல்லா அரசாட்சிகளும் அவனுக்கே உரியன, புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன. அவனே படைப்பினங்களை உயிர்ப்பிக்கவும், மரணிக்கவும் செய்கிறான். அவன் என்றும் நிலைத்திருப்பவன். நலமனைத்தும் அவன் கைவசமே உள்ளன. அவன் எல்லாப் பொருள்களின் மீதும் சக்தி வாய்ந்தவன்.


5. கலிமா ரத்துல் குஃப்ர்


அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅவ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரத்து மினல்லகுஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.


பொருள்: ஐந்தாம் கலிமா இறைமறுப்பை நீக்குதல்

யா அல்லாஹ் நான் அறிந்தவனாக இருக்கும் நிலையில் உன்னைக் கொண்டு எந்த வஸ்துவையும் (இணை வைப்பதை) விட்டும் உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன். நான் அறியாமல் எக்குற்றம் என்னில் நிகழ்ந்ததோ, அதற்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். அக்குற்றத்தை விட்டும் நான் தவ்பா செய்து (இனி ஒரு போதும் அதை செய்வதில்லை என்ற உறுதியுடன்) மீண்டேன்.


தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல். 


Thursday, 22 February 2024

The difference between an NCR (Non-Conformance Report)and SOR (Site Observation Report-lies)

In their purpose, focus, and usage within a project or quality control process:

1-NCR (Non-Conformance Report):

 A- Purpose: The NCR is used to formally document when something does not meet the required specifications, standards, or regulatory requirements. It is typically raised when a defect, deviation, or non-compliance is identified, requiring corrective action.

 

B- Focus: Focuses on non-conformities instances where something does not align with the set quality standards or project requirements.

 

C- Usage: The NCR is part of the quality management process aiming to ensure that non-conformities are addressed and corrected to prevent recurrence.

   

D- Example: A contractor notices that the concrete used on a project is not up to the specified strength. An NCR is raised to address the issue, and corrective actions are documented.


2. Site Observation Report (SOR):

 A- Purpose: The Site Observation Report is a document used to record observations made during site inspections. It often highlights both positive and negative findings but does not necessarily indicate that any action or non-compliance is required.

 

 B- FocusFocuses on observations made during a site visit or inspection, providing a record of conditions, activities, or progress on the site.

 

C-Usage: This report is used for monitoring, tracking progress, and ensuring that the work is proceeding according to plan. It may or may not lead to corrective actions depending on the nature of the observations.

 

D-Example: A project manager conducts a site visit and observes that workers are following safety protocols but notices some minor issues with material storage. These observations are recorded in the Site Observation Report.


(Key Differences): 

1 - NCR: This is used to document non-compliance or defects that require corrective action.

 

 2- Site Observation Report: This is a more general record of observations** during an inspection or visit, which may or may not indicate problems.

 

(Action Taken): 

1 - NCR: often results in specific corrective actions and follow-up to resolve issues.


2 - Site Observation Report : May not necessarily require immediate action but serves as a tracking tool for site conditions and progress.

 

In summary, the NCR is more formal and action-oriented, while the Site Observation Report is a broader tool for monitoring and documenting site conditions.

Thursday, 8 February 2024

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!!

 

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?


சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.


டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.


2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?


அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.


டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?


அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.


டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..


4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?

நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.


டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.


5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?


இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.


டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?


உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.


டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?


கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.


டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென 

உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?


சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.


டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?


நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.


டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?


தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.


டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?


கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.


டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?


இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.


டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?

ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.


டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?


சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.


டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.


16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?


பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.


டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது. www.puradsifm.com 


17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?


வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.


டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?


உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.


டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.✍🏼🌹

Thursday, 25 January 2024

கூனைப்பூ ( Artichoke) வில் இவ்ளோ விஷயம் இருக்கா??? தெரியாம போச்சே!!

 நாம் சமீப காலமாக ஊடகங்களில் கூனைப்பூ பற்றிய செய்திகள் வருவதை கண்டிருப்போம்.  கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது.இந்தக் கட்டுரையில், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட 10கூனைப்பூ நன்மைகள் மற்றும் கூனைப்பூ சத்துக்கள் பற்றி விவரமாக காணலாம்.

முன்னுரை  :'கூனைப்பூ' என்பது 'திஸ்டில் மற்றும் பால் திஸ்ட்டின்' குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். "லத்தீன் சினாரா" என்று அழைக்கப்படும் "கூனைப்பூ" கேனரித் தீவுகள் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் அதிகம் காணக் கிடைக்கிறது.

இந்த வகைப் பூ அதிக அளவில் மருத்துவ குணங்கள் கொண்டது. அதிலும், கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்கக் கூடியதாக இருக்கிறது. மேலும், இந்தப் பூ உண்ணக் கூடிய காய் கறி வகையைச் சேர்ந்தது ஆகும். வளர்ச்சியின் செயல்பாட்டில், இது 2 மீ உயரம் வரை காணப்படும். கூனைப்பூ வெப்பத்தை விரும்பும் தாவரமாகும் என்ற போதிலும், இது சிறிய வெப்பநிலை சொட்டுகள் மற்றும் லேசான உறைபனிகளுடன் கூட உயிர்வாழக்கூடியதாக உள்ளது. இதன் கூம்புகளை உண்ணலாம். சுவையில் அவை பழுக்காத அக்ரூட் பருப்புகளுக்கு ஒத்தவை. கூனைப்பூவில் சுமார் 140 இனங்கள் உள்ளன, அவற்றில் 40 மட்டுமே மதிப்புமிக்கதாக கருதப்படுகின்றன. அதன் சாகுபடியின் வரலாறு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது. அதன் சாகுபடியில் முதல் அனுபவம் ரோமானியர்களால் பெறப்பட்டது, அவர்களுக்குப் பிறகு கிரேக்கர்களும், எகிப்தியர்களும் இதனைப் பயன்படுத்தினர்.


கூனைப்பூ சத்துக்கள்:

குறிப்பிட்ட வகை கூனைப்பூக்கள் மற்றும் அவை எவ்வாறு சமைக்கப் படுகின்றன என்பதைப் பொறுத்து இந்த மதிப்புகள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

கூனைப்பூக்கள் சுவையானது மட்டுமல்ல, சமைக்கும் போது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் நிரம்பியுள்ளது. 100 கிராம் சமைத்த கூனைப்பூக்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் தோராயமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மக்ரோநியூட்ரியண்ட்ஸ்:

கலோரிகள்: 100 கிராம் சமைத்த கூனைப்பூவில் தோராயமாக 47 கலோரிகள் உள்ளது. ஒப்பீட்டளவில் இவை கலோரிகளில் சற்று குறைவாக உள்ளது.

கார்போஹைட்ரேட்டுகள்: இவை சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும், 100 கிராமுக்கு சுமார் 11 கிராம் வழங்குகிறது.

புரதம்: கூனைப்பூக்கள் 100 கிராமுக்கு சுமார் 3.5 கிராம் புரதத்தைக் கொண்டிருக்கின்றன, அவை இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கான மிதமான ஆதாரமாக அமைகின்றன.

நார்ச்சத்து: கூனைப்பூக்கள் நார்ச் சத்தின் வளமான மூலமாகும். 100 கிராமுக்கு தோராயமாக 5 கிராம் நார்ச்சத்து நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளது.


வைட்டமின்கள் :

வைட்டமின் சி:
சமைத்த கூனைப்பூக்கள் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், 100 கிராம் கூனைப்பூவில் சுமார் 9.6 மில்லிகிராம்கள் உள்ளன. நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு மற்றும் கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி முக்கியமானது.

வைட்டமின் கே: கூனைப்பூக்கள் வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகும், 100 கிராம் கூனைப்பூவில் 14.8 மைக்ரோகிராம் வைட்டமின் கே உள்ளது.

வைட்டமின் பி6: 100 கிராம் சமைத்த கூனைப்பூவில் 0.2 மில்லிகிராம் வைட்டமின் பி6 காணப்படுகிறது.


தாதுச்சத்துக்கள்:

பொட்டாசியம்:கூனைப்பூக்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, 100 கிராமுக்கு சுமார் 370 மில்லிகிராம்கள் உள்ளன.

மக்னீசியம்:கூனைப் பூ 100 கிராமில் 60 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. மக்னீசியம் தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

பாஸ்பரஸ்:கூனைப்பூக்கள் 100 கிராமுக்கு தோராயமாக 75 மில்லிகிராம் பாஸ்பரஸை வழங்குகிறது, இது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

இரும்பு:மிக அதிகமாக இல்லாவிட்டாலும், கூனைப்பூக்கள் 100 கிராமுக்கு 0.6 மில்லிகிராம் இரும்புச்சத்தை வழங்குகின்றன, இது உங்கள் தினசரி இரும்பு உட்கொள்ளலுக்கு பங்களிக்கும்.


ஆக்ஸிஜனேற்றிகள்:

ஃபிளாவனாய்டுகள்:
கூனைப்பூக்களில் குர்செடின் மற்றும் ருட்டின் உள்ளிட்ட ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த கலவைகள் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
மற்ற ஊட்டச்சத்துக்கள்:

ஃபோலேட்: சமைத்த கூனைப்பூக்களில் 100 கிராமுக்கு 68 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. ஃபோலேட் உயிரணுப் பிரிவு மற்றும் டிஎன்ஏ உருவாவதற்கு முக்கியமானது.


கூனைப்பூ நன்மைகள் :

கூனைப்பூக்கள் 2,000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களால் அவற்றின் சமையல் மற்றும் மருத்துவ குணங்களுக்காக பயிரிடப்படுகிறது. சில கூனைப்பூ நன்மைகள் பின்வருமாறு...

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை:கூனைப்பூவில் குர்செடின் மற்றும் ருடின் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது மேலும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

செரிமான ஆரோக்கியம்:அவை கூனைப் பூவில் கனிசமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது. கூனைப்பூ இலை சாறு எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் (IBS) அறிகுறிகளைக் குறைக்கிறது.

கல்லீரல் ஆரோக்கியம்:

கூனைப்பூவில் சினரின் மற்றும் சிலிமரின் போன்ற கலவைகள் உள்ளன. அவை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்:

கூனைப்பூ உணவில் சேர்த்துக் கொள்வது “கெட்ட” எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
எடை மேலாண்மை:

இந்த காய்கறியில் உள்ள ஃபைபர் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிக்கிறது. எனவே அதிக உணவு உண்ணப்படுவதைக் குறைத்து எடை இழப்பில் உதவுகிறது.

நீரிழிவு மேலாண்மை: கூனைப்பூக்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. மேலும் அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்காறியாகும்.

புற்றுநோய் தடுப்பு:கூனைப்பூக்களில் உள்ள சில கலவைகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாக நிரூபிக்கப் பட்டுள்ளது. கூனைப்பூ புற்றுநோயை தடுக்க வல்லது. புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது எப்படி எனில், கூனைப்பூ (ஆர்டிசோக்) இலையின் சாறுகள் அப்போப்டொசிஸை தூண்டி புற்றுநோய் செல்களை அளிக்கிறது. கூனைப்பூவில் அதிகமாக பிளவோனோய்ட்ஸ் நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. மேலும் புரோஸ்டேட் புற்றுநோய், லுகேமியா போன்றவை ஏற்படுவதையும் தடுக்கிறது. கூனைப்பூ நோய் எதிர்ப்பு சக்தியை நல்ல முறையில் மேம்படுத்துகிறது: கூனைப்பூவில் ரூடின், ஆன்தோ சயனின்ஸ், சினாரின் லுடேலின் மற்றும் சிலிமரின் போன்ற நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளன. இதனால் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.


எலும்பு ஆரோக்கியம்: வைட்டமின் கே மற்றும் கால்சியம் நிறைந்த கூனைப்பூக்கள் வலுவான எலும்புகளுக்கு பங்களிக்கின்றன மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தைக் குறைப்பதில் உதவுகிறது.


தோல் ஆரோக்கியம்: கூனைப்பூவில் நிரம்பியுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதான அறிகுறிகளைக் குறைத்து, பொலிவான நிறத்தை மேம்படுத்துவதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு: கூனை பூவில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.


முடிவுரை: கூனைப்பூக்கள் ஒரு சுவையான சுவையாக மட்டுமல்ல, அறிவியல் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப் பட்ட பல ஆரோக்கிய நன்மைகளின் சக்திவாய்ந்த ஆதாரமாகும். அவை பல நன்மைகளை வழங்கினாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வதால் சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Monday, 1 January 2024

ஐந்து வக்திற்கு சொல்லப்படும் பாங்கின் ஐந்து இராகம்!! ஒரு தவகல்..


துருக்கி நாட்டில் எங்கே சென்றாலும் அங்குள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் சொல்லப்படக் கூடிய பாங்கின் இனிமையான ஓசை நிச்சயம் செவிக்கு விருந்தளிக்கும்.இது சாதாரண விஷயம் என்று எண்ணி விடக் கூடாது.இவ்வளவு இனிமையாக துருக்கி மக்கள் பாங்கு சொல்வதற்கு 500 வருட கால பாரம்பரியம் உள்ளது.இதற்கென்றே தனி மத்ரஸாக்கள் உள்ளது .தனி ஆசிரியர்கள் உள்ளார்கள்.  

சில வருடங்களுக்கு முன்பு அல்ஜசீரா செய்தி நிறுவனம்."அல் அதான் (பாங்கு )- மக்களை சத்தியத்தை நோக்கி அழைக்கும் அழகிய குரல்கள் " என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.அந்த நிகழ்ச்சியில் துருக்கியிர்கள் பாங்கு சொல்வதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.அதெற்கென்றே பிரத்யேக இராகத்தை உருவாக்கியுள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் அல் உஸ்தாத் முஹம்மத் ஹாதி தவ்ரான் இஸ்தான்புலில் உள்ள "அஸ்ஸுல்தான் அஹ்மத்" என்ற மிகப்பெரிய மஸ்ஜிதின் முஅத்தின் (மோதினார்) கூறுகிறார்: உஸ்மானிய்யா பேரரசின் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் ஐந்து முஅத்தின்கள் நியமிக்கப்படுவார்கள்.இவ்வாறான முஅத்தின்கள் தங்களது குரல் வளத்திற்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள்.ஏன்?

சராசரியாக ஒரு மனிதன் தனது வாழ்வில் ஐந்து வகையான படித்தரங்களை கடக்கிறான்.அதேபோல ஒரு நாளில் ஐந்து வகையான பொழுதுகளை அவன் கடக்கிறான்.மனிதன் தினசரி கடக்கும் இந்த ஐந்து பொழுதுகளை நம் முன்னோர்கள் நன்கு புரிந்து வைத்தார்கள்.ஐந்து நேரங்களில் மனிதனது உணர்வுகள் ஒவ்வொரு நேரங்களிலும் மாறுபடும்.

காலை ஃபஜ்ரு நேரத்தில் இருக்கிற உணர்வு லுஹர் நேரத்தில் வேறு மாதிரி இருக்கும்.அதேபோல அஸர் , மஃரிப், இஷா ஆகிய ஒவ்வொரு நேரத்திலும் மனித உணர்வுகள் வேறுபட்டு கொண்டே இருக்கும்.இசைக்கும் மனித உணர்வுகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புள்ளது. கருவிகள் மூலம் இசைக்கப்பட கூடிய இசையை விட மனிதனின் தொண்டையிலிருந்து வெளிபடும் ஓசை மிகவும் நுட்பமானது.


இதனால் நம் முன்னோர்கள் ஐந்து நேரங்களில் பாங்கு கூறுவதற்கு
ஐந்து வகையான இராகங்களை உருவாக்கினர்.இதற்கு ஸபா, அஷாக், ரஸ்த், ஸீகா, ஹிஜாஸ் என்று பெயரிட்டனர்.ஐந்து வகை பாங்கின் இராகத்திற்கு ஏற்ப குரல் வளம் கொண்டவர்களை மட்டுமே அந்த அந்த நேரத்திற்கான தனித்தனி முஅத்தின்களாக நியமித்தனர்.

1) ஸபா : ஃபஜ்ரில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஸபா.அதிகாலை பொழுதில் உள்ளம் இன்னும் சிறிது நேரம் உறங்கலாம் என்று கூறும் தருணத்தில் சொல்லப்படும் பாங்கு அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக அப்படியே செவிகளுக்கு இதமாக மிருதுவான இராகத்தோடு சொல்லப்படும்.

2) அஷாக்: லுஹர் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் அஷாக். உச்சி பகல் நேரத்தில் மனிதன் தனது பணியில் தீவிரமாக ஈடுபடும் நேரம். இந்த நேரத்தில் அவனை பள்ளிக்கு வரவழைக்க சொல்லப்படும் பாங்கு உத்வேகம் கலந்த இராகத்தோடு சொல்லப்படும் ‌.

3) ரஸ்த்: அஸர் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர்.ரஸ்த். பரபரப்பான பகல் பொழுது புறப்பட ஆயத்தமாகும் போது சிறிய ஓய்வு மனிதனை வருடும்.இந்த பாங்கோசை அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக சிறிய பரபரப்போடும் அதேநேரத்தில் சிறிது ஏக்கமும் கலந்த இராகத்தோடு சொல்லப்படும்.

4) ஸீகா: மஃரிப் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஸீகா. இது பகல் பொழுது விடைபெற்று இரவு மெல்ல படரத் துவங்கும் நேரம். சோர்வும் உடல் முழுக்க படரத் துவங்கும் நேரமும் இதுவே . இதனால் இந்த நேரத்தில் சொல்லப்படக் கூடிய இராகம் மனதினுள் ஊடுருவி சோர்வை மெதுவாக கலைத்து அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக இந்த இராகம் அமைந்திருக்கும்.

5) ஹிஜாஸ்: இஷா நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஹிஜாஸ்.ஒரு நாளுடைய முடிவு அடுத்த நாளுடைய உழைப்பிற்காக நீண்ட ஓய்வுக்கு தயாராகும் தருணம்.இந்த நேரம் என்பது அமைதியில் ஆழ்ந்து ஒரு மோன நிலைக்கு உள்ளம் செல்லும் நேரம்.எனவே

மயிலிறகை உடலில் மெல்ல வருடுவது போல உள்ளத்தை மெல்லிசையால் வருடி அவனை‌ பள்ளிக்கு வரவழைக்கும் விதத்தில் இந்த இராகம் அமைந்திருக்கும்.

இது புத்தகங்களின் பதிவு செய்யப்பட்ட கலையோ கல்வியோ அல்ல. செவி வழியாக தலைமுறை தலைமுறையாக பயணிக்கும் கல்வி.இந்த பாரம்பரியத்தை பாதுகாக்க துருக்கி அரசே இதனை எடுத்து நடத்தி வருகிறது.

நன்றி : மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.