Monday, 20 December 2010

தொழில் தொடங்க முனைவோருக்கு உதவ அரசு மானியம் வழங்குகின்றன?.


வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து திரும்பும் பலரும் தொழில் தொடங்க விரும்புவது இயற்கைதான். ஆனால் அதனை தொடங்குவதற்கு முன்பு தொழில் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய வளர்ந்த உலகில் இதனை அறிந்து கொள்ள பல வசதிகள் உள்ளன. அவற்றை முறையாக பயன் படுத்திக் கொள்வதில் தான் நம் திறமை உள்ளது. விடாமுயற்சியுடன் செயல்பட் டால் வெற்றி எனும் கனியை பறிப்பது ஒன்றும் கஷ்டமல்ல. தொழில் முனை வோருக்கு உதவ அரசாங்கமும் வங்கிகளும் தயார் நிலையில் தான் உள்ளன. அவற்றை நாம் அணுகவேண்டிய முறைதான் முக்கியம். அரசின் மாவட்ட தொழில் மையங்கள், தொழில் முனைவோருக்கு உதவ எப்போதும் தயாராகவே உள்ளன. என்ன தொழில் தொடங்க வேண்டுமென் றவுடனே சரியான திட்டமிடுதல் வேண்டும். அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக் கொண்டு தொழில்முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன.
சிப்காட் எனப்படும் சிறு தொழில் மையம் மூலம் இதுவரை 12 மாவட் டங்களில் 19 தொழில்மையங்கள் நிறுவப்பட்டு 1803தொழில் நிறுவனங் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.
மானியம் வழங்கப்படும் தொழில்கள், மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு மருந்துப் பொருட்கள் உற்பத்தி சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி ஏற்றுமதி ஆபரணங்கள் மாசுகட்டுப்பாடு உபகரணங்கள் விளையாட்டுப் பொருட் கள் சிக்கன கட்டுமானப் பொருட்கள் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவை.
அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவிகிதம் மானியமாக வழங்கப் படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவிகிதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தி தொடங்கி முதல் ஆறு ஆண்டு களில் செலுத்தப்படும் மதிப்புக் கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானிய மாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தி தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து அய்ந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்சம் 25 வேலையாட் களை கூடுதலாக அய்ந்து சதவிகிதம் அதிகபட்சமாக ரூபாய் அய்ந்து லட்சம் வரை வேலைவாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
அரசு வங்கிகளும் தாராளமாக கடனுதவி செய்கின்றன. தொழில் தொடங்க விரும்புவோர் தங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் குறித்து தெரிவிப் பதோடு, தாங்கள் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு, பங்குதாரர் விவரம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தும் முறை, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங் களை மனுவாக கொடுக்க வேண்டும். முறையான ஆய்வுக்குப் பின்னர் வழங்கப் படும் கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால், கூடுதலாக கடன் பெற லாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட் களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.
முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேயைன அனுமதி கிடைக் கும். செயல் துறைத் தலைவர் (வழிகாட் டுதல்  குழு) தமிழ்நாடு தொழில் வழிகாட் டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு.
எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன தெரியுமா?
1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

சரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.  

பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க ....
சுயவேலை தொழில் எப்படி தொடங்குவது?
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு.  வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!
ஓருங்கினைப்பு:
      முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:
செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044-28553118, 285553866
  ஃபேக்ஸ்: 28588364 



Saturday, 18 December 2010

இல்லப்பராமரிப்பில் எதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம்?

 இல்லப்பராமரிப்பு  ஒரு பாடல் வரிகள் உண்டு."சொர்க்கம் என்பது நமக்கு,சுத்தம் உள்ள வீடுதான்;சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்"எத்தனை அழகிய வரிகள்.சிலர் வீடுகளுக்குள் நுழைந்தால் அவர்கள் தரும் காப்பி கோப்பையை தொடவே அருவெறுப்பாக இருக்கும்.சுத்தம் அந்தளவு இருக்கும்.இதற்கு எதிர் மாறாக வேறு சில வீடுகளுக்குள் நுழைந்தால் மனதே ரம்யமாகி விடும்.பளபளக்கும் சுத்தத்தைப்பார்க்கும் பொழுது நாம் இவற்றை எவை எல்லாம் ஃபாலோ செய்து நம் வீட்டு சுத்தத்தினை இன்னும் மேம் படுத்திக்கொள்ளலாம் என்று மனம் அசை போடும்.

சிலருக்கு வீட்டினை தூய்மைப்படுத்துவது தூங்குவது,சாப்பிடுவது போல் அன்றாட வேலையாக,ஏன் மூச்சு விடுவது போல்.இதற்கு எதிர்மாறாக மற்ற சிலருக்கோ "ப்ச்ச்.."என்ற அலட்சிய மனோபாவம்.

நீங்கள் நுழையும் வீடுகள்,உங்கள் தெரிந்த,நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளை சற்று நேரம் மனக்கண்ணில் அலசுங்கள்.அசுத்தனமான இல்லங்களுக்கு சொந்தக்கார்களின் இல்லங்கள் அதகளமாக இருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் வீட்டில் எப்பொழுதும் இரைச்சலும்,கூச்சலும்,கணவன் மனைவி சச்சரவும்,ஒழுங்கில்லாத குழந்தைகளும்,பண்பில்லாத பழக்கவழக்கங்களும்,இன்னும் சொல்லப்போனால் ஒரு சுபிட்சமில்லாத வாழ்க்கை சூழ்நிலை இருக்கும்.ஆள் இல்லாத அறைகளில் விளக்குகளும்,மின்விசிறிகளும் சர்வசாதராணமாக ஓடிக்கொண்டிருக்கும்.எந்த வித ஒழுங்கும்,கட்டுபாடுகளும் இருக்காது.வேலை பார்ப்பவர்களால் அடிக்கடி சின்ன,பெரிய திருட்டுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.எல்லா செயல்களிலும்,நடவடிக்கைகளிலும் அலட்சிய மனப்போங்கு,ஸ்திரமாக முடிவெடுக்காத்தெரியாத தயக்கம்,இன்னும் எவ்வளவோ ரசிக்கதகாத அம்சங்கள் நிறைந்திருக்கும்.

தூய்மையான இல்லங்களுக்கு சொந்தக்கார குடும்பங்களை இப்பொழுது மனக்கண்ணில் அலசுங்கள்.கண்டிப்பாக சுபிட்சம் நிறைந்த,நிறைவான குடும்பமாக,தெளிவான சிந்தனை உள்ளவர்களாக,அமைதி நிறைந்த குடும்பமாக முதல் குடும்பத்திற்கு நேர் எதிர் அம்சங்கள் நிறைந்த அழகிய குடும்பமாக ,மற்றவர்களுக்கு முன்மாதிரியான குடும்பமாக திகழும்.

சில நாட்களுக்கு முன் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன்.வீட்டு சூழ்நிலையைப்பார்த்து விட்டு எனக்கு தலையே சுற்றி விட்டது,போர்க்களம் போல் வீடு காட்சி அளித்தது.சுத்தம் செய்யாத டம்ளர்கள்,ஈரடவல்கள்,சோபா மீது ஒரு செல்ஃப் முழுக்க அடுக்கி வைக்கும் அளவு பொருட்கள்,தரையில் அப்படி அப்படியே கிடக்கும் துணிகள்,கலைந்து போன பேப்பர் கற்றைகள்,ஒட்டடை தொங்கும் சுவர்கள்,பிசுபிசுப்பான தரைகள்..அடுக்கிக்கொண்டே போகலாம்.இப்படியான பரமரிப்பு இல்லாத இல்லங்களைக்காணும் பொழுது அறுவெறுப்புத்தான் மிஞ்சுகின்றது.

இதற்கு நேர் எதிராக இன்னொருவர் இருக்கின்றார்.நம் வீட்டிற்குள் வந்தாலே செருப்பை வாசலுக்கு எதிரே கழற்றி வைக்காமல் ஒரு ஒரமாக கழற்றி வைப்பார்.அந்த ஒரு ஜோடி செருப்பு கூட கழற்றி வைப்பதில் ஒரு நேர்த்தி இருக்கும்.

உள்ளே நுழையும் பொழுதே கால் மிதி சற்று கோணல் ஆக இருந்தால் தன் கால்களால் சரி செய்து விட்டுத்தான் உள்ளேயே நுழைவார்.ஷோபாவில் உட்காரும் நேர்த்தி,காப்பிக்கோப்பையை காலி செய்துவிட்டு அதன் கைப்பிடி இருக்கும் பகுதியைக்கூட ஒரு நேர்த்தியுடன் திரும்ப வைக்கும் பொழுது பிரமித்துப்போய் இருக்கின்றேன்.இப்படிப்பட்டவர் தனது இல்லத்தை எப்படி வைத்து இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.இப்படிப்பட்டவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் போல் இருக்கும்.

நம்முடைய பொருட்கள்,உடமை,வீடு அனைத்தும் இறைவன் நமக்குகொடுத்த அருட்கொடைகள்,பாக்கியங்கள்.அதனை முறைப்படி பராமரித்து சுத்தப்படுத்தி,ஏனோதனோ என்றிராமல்,ஒரு முன்மாதிரியாக இருந்தால் இல்லம் இனிய இல்லமாகிவிடும்.மனமும் நிறைந்ததாகிவிடும்.மற்றவர்கள் அதனைக்காணும் பொழுது நம் பால் உள்ள மரியாதை அதிகரிக்கும்.

சிறிய வீடோ,பெரிய வீடோ,பழைய வீடோ ,புது வீடோ வீடு,சொந்தவீடோ,வாடகை வீடோ நம்முடையது,நாம் ஜீவிப்பது..அதனை சுத்தமாகவும் சுகாதாரமாகும் வைத்திருப்பது நமது கடமை.ஆணும் சரி,பெண்ணும் சரி இருவரும் சேர்ந்தே இதில் ஈடுபாடு காட்டினால் பிற்காலத்தில் குழந்தைகளும் அதனைப்பின் பற்றுவார்கள்.

அடுத்ததாக  வீட்டு பராமரிப்பில் எதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம் எனபதைப்பற்றி அலசுவோம்.


இல்லப்பராமரிப்பை வீட்டிற்கு வெளியில் இருந்து ஆரம்பிப்போமா?

வீட்டின் வெளிப்பகுதி:
தனி வீடோ அடுக்குமாடிவீடோ வீட்டிற்கு வெளியில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்து தூசி கிளம்பாமல் நீர் தெளித்து,கேட் கிரில்கள்,காம்பவுண்ட் விளக்குகளை,வீட்டிற்கு வெளிப்பகுதியில் உள்ள ஜன்னல் கிரில்களை அவ்வப்பொழுது சுத்தம் செய்து வந்தால் வீடே தனித்துவமாக காட்சி அளிக்கும்.காம்பவுண்டுக்குள் செடி கொடிகள் இருந்தால் காய்ந்த தளைகள் அகற்றி,அவ்வப்பொழுது மண் சட்டிகளை இடம் மாற்றி கீழே படிந்துள்ள மண் துகள்களை சுத்தம் செய்வதைக்கடை பிடியுங்கள்.வீட்டிற்கு முன் செருப்புகள் சிதறிக்கிடக்காமல் ஸ்டேண்ட் வாங்கி வைத்து வீட்டிலுள்ளவர்களை செருப்பை கழற்றும் பொழுது ஸ்டேண்டில் கழற்றி வைக்க பழக்குங்கள்.வாசலுக்கு வெளியில் உள்ள கால் மிதி தூசி தும்புகள் இல்லாமல் தினமும் தட்டி சுத்தப்படுத்த தவறாதீர்கள். மாதம் இரு முறையாவது சோப்பினால் சுத்தம் செய்யுங்கள்.கதவு,நிலைப்படி போன்றவற்றை துணியினால் துடைத்து ஒட்டடை இன்றி சுத்தம் செய்யுங்கள்.


ஹால்:
நம்மை பிறர் மதிப்பீடு செய்வதில் வீட்டின் முன்னறை பெரும்பங்கு வகிக்கின்றது.விலைஉயர்ந்த சோபாக்கள்,கம்பளங்கள்,சாண்டிலியர்கள்,ஓவியங்கள் போன்றவற்றை அடுக்கி அழகு படுத்த வேண்டுமென்பதில்லை.இருப்பவற்றை சுத்தமாக வைத்து இருந்தாலே போதும்.தூசிகள் இல்லாத சோபா,கோடிழுத்தால் கோடு வராத டீபாய்,சோபாவுக்கு அடியில் குப்பைகள் தேங்காத நிலை,தொலைக்காட்சி பெட்டி இருக்கும் அலமாரியில் பொருட்கள் கன்னா பின்னவென்று இராமல் நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,அன்றைய தினசரியைத்தவிர மற்ற பழைய பேப்பர்களை பிறர் கண்களுக்கு படாமல் மறைவான இடத்தில் வைத்தல்,தினசரி,மற்றும் புதிய பத்திரிகைகள் போன்றவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,மாதம் ஒரு முறை துவைத்து மாற்றிய கர்ட்டன்கள்,விளக்குகள் பேன் போன்றவற்றை துணியினால் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது துடைத்து சுத்தப்படுத்துதல் போன்றவற்றில் உறுதியாக இருங்கள்.ஆங்காங்கு உங்கள் பொருளாதர வசதிக்கு ஏற்ற படி படங்கள்,பூங்கொத்துக்கள் போன்றவற்றை மாட்டினால் வீடு அழகு கொஞ்சும்.


படுக்கையறை:
கட்டில் வாங்கினால் ஸ்டோரேஜ் கட்டிலாக பார்த்து வாங்குதல் படுக்கை அறை அடைசல் இல்லாமல் இருக்க வழிவகுக்கும்.காலையில் எழுந்ததுமே போர்வைகளை மடித்து தலை அணைகளை எல்லாம் அப்புறப்படுத்தி கட்டிலுக்கடியில் இருக்கும் ஸ்டோரேஜில் அடுக்கி வைத்து,பெட் சீட்டை உதறி சுருக்கமில்லாமல் விரித்து வையுங்கள்.வாரம் ஒரு முறை பெட்ஷீட் மாற்றும் பழக்கத்தினை மேற்கொள்ளுங்கள்.அதே போல் படுக்கையறையில் இருக்கும் திரைச்சீலைகளையும் அடிக்கடி துவைத்து சுத்தம் செய்யுங்கள்.படுக்கை அறையில் நசநசவென்று பொருட்கள் அடைத்து இருப்பதை விட எளிமையாக சுத்தமாக வைத்து இருந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கையறையாக இருந்தால் நறுமணமாக இருப்பதற்கு செலவு செய்யத்தயங்காதீர்கள்.இதமான வர்ணத்தில் பெயிண்டும்,ஒரு சில இதமான ஓவியங்களும் மனதிற்கு இதம் தரும்.
 

கப்போர்ட்:
அநேகமாக எல்லாப் படுக்கை அறைகளிலும் இருக்கும்.ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து நன்கு துணியால் துடைத்து பேப்பர் மாற்றுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.அநேக வீடுகளில் நியூஸ்பேப்பரை கப்போர்ட் தட்டுகளுக்கு விரித்து பொருட்களை அடுக்குவார்கள்.இந்த முறை கனமான சார்ட் பேப்பர்,அல்லது பிரவுன் ஷீட்டை விரித்துப்பாருங்கள்.இனி அந்த பழக்கத்தை விடவே மாட்டீர்கள்.அழகாக இடைவெளி விட்டு அடுக்கி,நாப்தலின் பால்களை ஆங்காங்கே வைத்து ,துணிகளும் மற்ற பொருட்களையும் தனித்தனி அடுக்குகளில் வைத்து தேடினால் உடனே கிடைக்கும் படியாக அமைத்துக்கொள்ளுங்கள்.
 

பாத் ரூம்:
இது அநேக வீடுகளில் படுக்கையறையுடன் அமைந்திருக்கும்.இதனை அதிகம் கவனம் செலுத்தி எப்பொழுதும் உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.குளிக்கும் முன்னர் தினமும் சுத்தப்படுத்தும் வழக்கம் அவசியம்.வாஷ் பேசின்கள்,டாய்லெட்டுகளை அதற்குறிய கிளீனிங் உபகரணங்களை வைத்து சுத்தப்படுத்தி,தரையை பிரஷ் செய்து நறுமணயூட்டிகளை மாட்டி வையுங்கள்.ஒரு வைப்பரை வாங்கி வைத்து ஒவ்வொருவரும் உபயோகித்தபின் வைப்பரால் நீர் தேங்காத வண்ணம் சுத்தம் செய்யும் பழக்கத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்திக்கொண்டால் நலம் பயக்கும்.வைப்பர்,புரூம்,பிரஷ் போன்றவற்றை பாத்ரூமின் மூலையில் சாய்த்து வைப்பதைத்தவிர்த்து சின்ன ஹூக்குகளை ஓரமாக பொருத்தி அதில் மாட்டி வைத்தால் தரையை இலகுவாக சுத்தம் செய்யலாம்.டாய்லெட்டினுள் இருக்கும் கேபினெட்டின் கண்ணாடி மற்றும் கேபினெட்டை ஈரத்துணியால துடைத்து பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்து நாப்தலின் உருண்டைகளைப்போட்டு வையுங்கள்.பழைய பிரஷ்கள்,காலியான பேஸ்ட்கள்,குப்பிகள்,காலியான சாஷேக்கள் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.ஜலபாதையில் ஒரு போதும் முடி தங்கி இருக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.தரையை மட்டுமின்றி சுவரில் பதித்திருக்கும் டைல்ஸ்,மற்றும் பிட்டிங்குகளையும் அவ்வப்பொழுது அதற்குறிய கிளீனிங் லிக்விட் கொண்டு சுத்தம் செய்ய தவறாதீர்கள்.
 
சமையலறை
ஒரு இல்லத்தின் மிக முக்கியமான அறை.நல்ல காற்றோட்டத்துடனும்,வெளிச்சத்துடனும் அமையப்பெற்று இருப்பது அவசியம்.சில இல்ல சமையல்கட்டுகளில் மேடை முழுக்க பொருட்களை நிறைத்து வைத்திருப்பார்கள்.ஸ்டவ் தவிர மிக அத்தியாவசிய பொருட்கள் ஓரிரண்டு இருந்தால் தான் பார்க்க அழகாகவும்,சுத்தம் செய்ய எளிதாகவும் இருக்கும்.மிக்ஸி,எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றை உபயோகித்து விட்டு,அப்புறப்படுத்தும் வசதி இருந்தால் எடுத்து உள்ளே வைத்து விட்டால் இன்னும் பளிச் என்றாகி விடும்.இரண்டடி அகலத்தில் நாண்கு அடுக்குகள் கொண்ட மரத்தாலான செல்பை செய்து சமையல் கட்டில் ஒரு ஓரமாக வைத்து இருந்தால் ஒவ்வொரு அடுக்கிலும் எலெக்ட்ரிக் குக்கர்,டேபிள்டாப் கிரைண்டர்,மைக்ரோவேவ் அவன்,மிக்ஸி,கிரில்ட் அவன் ,டோஸ்டர் போன்ற மின்சார உபகரணங்களை வைத்துக்கொண்டால் இடம் அடைத்துக்கொள்ளும் அவஸ்தை இருக்காது.மிகவும் வசதியாக இருக்கும்.முயற்சித்துப்பாருங்களேன்.

நெய் வாங்கும் பொழுது கிடைத்த பாட்டில்,பருப்புப்பொடி வாங்கும் பொழுது தந்தது,தேயிலை ,காப்பித்தூளுக்கு கிடைத்த இலவச பாட்டில்களை அப்புறப்படுத்தி விட்டு ,ஒரே மாதிரி அளவுள்ள பெட் பாட்டில்களை மளிகை பொருட்களை நிரப்புங்கள்.பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்றவற்றுக்கு ஒரே அளவுள்ள பெரிய சைஸ்பாட்டில்களை வாங்கி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.இந்த பாட்டில்களை கையாளும் பொழுது ஈரக்கையினால் எடுப்பதை தவிர்த்தால் அழுக்கு படிவதை தவிர்க்கலாம்.மாதம் ஒரு முறை சோப்பு நீரினால் கழுகி உலரவைத்து எடுத்தல் அவசியம்

நம் வசதிக்காக பாத்திரங்களை அளவுக்கதிகமாக வைத்திருந்தாலும் சமையலறை அலங்கோலமாகி விடும்.ஆகவே அளவான பாத்திரங்களை வைத்து சமைக்க பழகிக்கொண்டால் அடுக்களையும் சுத்தமாகும்.வேலை செய்பவரும் காத தூரம் ஓடமாட்டார்.

கிச்சன் சின்க் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக,உலர்ந்த நிலையில் இருந்தால் பூச்சிகள் வருவது குறையும்.எச்சில் பாத்திரங்களை அதனுள் போட்டு வைக்காமல் இருப்பதே நல்லது.

ஸ்டோர் ரூம்:ஒரு வீட்டுக்கு ஸ்டோர்ரூம் அமையப்பெற்று இருந்தால் சுத்தத்தை அதிகம் பேணலாம்.வாய்ப்பு இருப்பின் ஸ்டோர் ரூம் இணைக்கத்தவறாதீர்கள்.ஸ்டோர் ரூம்தானே என்று பொருட்களை அடைசலாக வைத்து இராமல் அதிலும் உங்களின் சுத்த பரமரிப்பைத்தொடருங்கள்.

சாப்பாட்டறை:சாப்பாட்டு மேசையில்; தேவை இல்லாத பொருட்கள் பரப்பி இருப்பதை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.எப்பொழுதும் துடைத்து சுத்தமாக வைத்திருங்கள்.அதன் நாற்காலிகள் மீது ஈர டவல்கள் போன்றவை தொங்குவதை தவிர்த்து விடுங்கள்.சாப்பிட்டதும் உடனுக்குடன் சுத்தம் செய்து பாத்திரங்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.ஊறுகாய்,சாஸ்,நெய்,உப்பு,பொடிவகைகள் போன்றவற்றை உள்ளே எடுத்து வைக்கும் வசதி இல்லாவிட்டால் அழகாக ஒரு டிரேயில் அடுக்கி ஓரமாக வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

பரண்:இதிலும் கசகச வென்று சாமான்கள் அடைத்து வைக்காமல் பெரிய அட்டைப்பெட்டிகளில் கட்டி.உள்ளே எனென்ன பொருட்கள் இருப்பது என்ற லிஸ்டை ஒரு பேப்பரில் எழுதி அட்டை பெட்டி மேல் ஒட்டி லாஃப்டில் அடுக்கி வைத்தால் எடுப்பதற்கு சுலபமாக,பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.



படிப்பறை:படிக்கும் அறையில் புத்தக அலமாரியில் பொருட்களை அளவுக்கு அதிகமாக அடுக்கி,நேர்த்தி இல்லாமல் இருந்தால் பிள்ளைகளுக்கு படிக்கும் மூடே போய் விடும்.மேசை மீது ஓரத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு வேலை செய்வதற்கு ஏற்ற வாறு இடம் ஒதுக்கி இருக்க வேண்டும்.பேனா,பென்சில்களுக்கு ஸ்டாண்ட்,பேப்பர் குப்பைகளை போட சிறிய குப்பைத்தொட்டிஎன்று வைத்து குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை வலியுறுத்துங்கள்.எந்தெந்த பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றது என்று தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும் டக் என்று சொல்லும் அளவு பிள்ளைகளை நாம் சீர்படுத்தினால அவர்களின் சிந்தனையும் சீராக தெளிவாக அவர்களை நேர்வழிப்படுத்தும்.

உங்கள் இல்லம் எளிமையாக இருந்தாலும் சுத்தமாக அழகாக,ரசனை மிக்கதாக அமைந்து உங்கள் இனிய இல்லம் சொர்க்கமாக அமைய வாழ்த்துக்கள்.

Thursday, 16 December 2010

உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில ...

1
உலகின் மிகப்பெரிய ஒரு மில்லியன் டொலர் தங்க நாணயம்


3

உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும்

உலகின் மிகப்பெரிய வரைபடம்
world-biggest-art.jpg
உலகின் மிகப்பெரிய வரைபடம் என்றதும் ரொம்ப சாதாரணமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இது உண்மையில் உலகம் அளவுக்கு மிகப்பெரிய வரைபடம்.
ஸ்டாக்ஹோம் ஓவியரான எரிக் நார்டென்கருக்கு ஒரு வித்தியாசமான ஐடியா உதித்தது. ஜிபிஎஸ் கருவிவின் உதவியுடன், உலகின் மிகப்பெரிய ஓவியத்தை வரைய முடியும் என நம்பினார் அவர்.
முதலில் ஒரு உலக மேப்பை எடுத்தார். அதன் மேலாக தன்னுடைய முகத்தை பரவலாக வரும்படி வரைந்துகொண்டார். ஒரு சின்ன பெட்டியில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தினார். அந்தப் பெட்டி உலகம் முழுக்க சுற்றிவரும்படி செய்ய திட்டமிட்டார்.
gps-briefcase.jpg
இதற்காக பிரபல கூரியர் நிறுவனமான டிஎச்எல்– லை அணுகினார். இவருடைய முயற்சிக்கு அவர்களும் உதவி செய்ய தயாரானார்கள்.
உலக வரைபடத்தின் மீது தன்னுடைய உருவம் எங்கெல்லாம் வரையப்பட்டதோ அங்கலெல்லாம் அந்த பெட்டி சென்று வரும்படி செய்தார் எரிக். கடைசியில் அந்த பெட்டி அவரிடமே திரும்பி வந்தது.
பெட்டி பயணித்த வழியையெல்லாம் பெட்டிக்குள் இருந்த ஜிபிஎஸ் கருவி கணிணியில் அழகாக வரைந்திருந்தது. தன்னுடைய உருவம் வளைந்த இடத்திற்கெல்லாம் விமானம் மற்றும் ஆட்கள் பயணித்தது கண்டு உண்மையில் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார் எரிக்.
இவர் அனுப்பிய ஜிபிஎஸ் ஓவியப்பெட்டி 55 நாட்களில், 6 கண்டங்களில் உள்ள 62 நாடுகளில் பயணித்து அவரை திரும்ப வந்து சேர்ந்தது. அந்தப் பெட்டி சுமார் 110664 கிலோமீட்டர் பயணித்தது..
இதற்காகவே அவர் பிரத்யேகமாக ஜிபிஎஸ் கருவி ஒன்றை தயார் செய்து அதனுடைய பேட்டரி தீரா வண்ணம் பார்த்துக்கொண்டார்.கடைசியில் அவர் எண்ணப்படி உலகின்மிகப்பெரிய ஓவியம் கிடைத்தது.

உலகின் மிகப்பெரிய விண்கலத்தை நாஸா ஏவியது

உலகின் மிக பெரிய மண் வெட்டும் இயந்திரம் (Excavator) ஜெர்மனியில் உள்ளது.
இதன் எடை சுமார் 45,500 டன்கள், உயரம் 95 மீட்டர்கள் அகலம் 215 மீட்டர்கள்.

உலகின் மிகப்பெரிய மீன் காட்சியகம்
Georgia Aquarium, Atlanta, USA: உலகின் மிக பெரிய மீன் காட்சியகம் இதுதான். இந்த காட்சியகத்தில் சுமார் 500 மீனினங்கள் வளர்க்கப்படுகிறது, சுமார் 100,000 கடல்வாழ் உயிரினங்களை உள்ளடக்கியது. இதில் 8.1 million US gallons அளவு கடல் நீர் நிரப்பபட்டுள்ளது. குறிப்பாக திமிங்கலங்கள், சுறா மீன்கள் போன்ற மிக பெரிய கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வளர்க்கப்படுகிறது.


உலகின் மிக பெரிய விளையாட்டு மைதானம் பிரேசில் நாட்டில் உள்ள MARACANA STADIUM தான் இதில் ஒரே நேரத்தில் சுமார் 1,99,000 பார்வையாளர்கள் அமரலாம்.

உலகின் மிகப்பெரிய நாய்

உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள Burj Dubai தான். இதன் உயரம் சுமார் 900 மீட்டர்கள்.

உலகின் மிக உயரமான சிலை பிரசிலில் உள்ள CHRIST THE REDEEMER STATUE தான்.

[worlds-highest-statue-brazil-1.jpg]


உலகின் மிக பெரிய பயணிகள் பஸ் Neoplan Jumbo -cruiser தான் இரண்டு அடுக்கு கொண்ட இந்த பஸ்சில் ஒரே நேரத்தில் 175 பயணிகள் பயணிக்கலாம்.


உலகின் மிக பெரிய பயணிகள் விமானம் Airbus A380 தான். இதில் ஒரே நேரத்தில் சுமார் 555 பயணிகள் பயணிக்கலாம்

[worlds-biggest-planeairbus-1.jpg]
உலகின் மிக பெரிய பயணிகள் கப்பல் MS Freedom of the Seas தான் இதில் ஒரே நேரத்தில் சுமார் 4300 பயணிகள் பயணிக்கலாம்.[worlds-biggest-passengership-1.jpg]


கப்பலின் 5 தளத்தின் ஒரு பகுதி.....

உலகின் மிக நீளமான பாலம் சீனாவின் Donghai Bridge தான் இதன் நீளம் சுமார் 32.5 கிலோ மீட்டர்கள்.


உலகின் மிக அகலமான பாலம் ஆஸ்திரேலியாவின் Sydney Harbour Bridge தான். மொத்தம் 16 lanes of car traffic.....8 lanes in the upper floor, 8 in the lower floor அமைந்துள்ளது.
உலகின் மிக பெரிய விமான நிலையம் அமெரிக்காவின் ஜான் எப் கென்னடி (JFK) New York விமான நிலையம் தான்.

உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால் (Shopping mall) சீனாவின் சாங்காய் நகரில் அமைந்துள்ளது இது ஆறு அடுக்கு கட்டிடம் சுமார் 892,000 meter-square அளவுடையது .


உலகின் மிகப்பெரிய அலுவலகம் (office complex) Merchandise Mart அமெரிக்காவின் சிக்காகோ நகரில் அமைந்துள்ளது.


உலகின் மிகப்பெரிய Indoor நீச்சல் குளம் கனடாவின் Edmonton நகரில் அமைந்துள்ளது. இது சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடையது.

தேடல்
நன்றி இணையம்...

Wednesday, 15 December 2010

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும் முறை

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்



இணையதள முகவரி : www.tnvelaivaaippu.gov.in

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு : TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :

1. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?

இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?

ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.

3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?

ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?

தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?

ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்

6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?

முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?

இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?

நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

Monday, 13 December 2010

பங்கு வணிகத்தில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்!

சமீபகாலமாக ஆன்லைன் தொழில், மல்டி லெவல் மார்கெட்டிங், என்று பல நூதன முறைகளில் ஏமாற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது! எத்தனை முறை அனுபவபட்டாலும் மக்களால் இந்த கவர்ச்சியை விட்டு வெளிவர முடியவில்லை! சென்ற மாதம் மதுரையில் நண்பர் ஸ்ரீயுடன் பேசி கொண்டிருக்கும் போது சொன்னார்! ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் 35 ஆயிரம் தருவார்களாம், அதற்கு அடுத்து 25 ஆயிரம், அடுத்து 20 ஆயிரம், கிட்டதட்ட ஒரு வருடத்தில் 3 மடங்கு நீங்கள் கொடுத்த பணம் ரிட்டர்ன்!

சிலர் அம்மாதிரி சம்பாதித்திருக்கிறார்கள் என்றான்! ஆரம்பத்தில் பணம் கொடுப்பார்கள் மொத்தமாக ஒரு பெரிய தொகையை லவட்டி கொண்டு ஓடுவார்கள் என்றேன்! முதலில் அந்த அளவு வருமானத்திற்கு சாத்தியமா என்று யோசிக்கனும்! அப்படி சாத்தியம் என்றால் அது கள்ளநோட்டாக தான் இருக்கும்! பேராசை பட்டு பணத்தை கொடுத்துட்டு ”எதோ ஒரு” கனவு கண்டா வெளியே சொல்லமுடியாதுன்னு சொல்வாங்கள்ள அந்த மாதிரி இருக்கக்கூடாது!

நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! நேர்மையான வழியிலேயே, பொறுமையாக பத்து வருடங்களில்! அதற்கு ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீடு இரட்டிபாக வேண்டும்! நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் ஆனால் ஒவ்வொரு வருடமும் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகினால் பத்தே வருடங்களில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் துறையில் கவனமும், கொஞ்சம் அறிவும் இருத்தல் நலம்!


உங்களுடய முதலீடு பத்தாயிரம் ருபாய் மட்டுமே!

10,000 உங்கள் முதலீடு
20,000 முதல் வருடம்
40,000 இரண்டாம் வருடம்
80,000 மூன்றாம் வருடம்
1,60,000 நான்காம் வருடம்
3,20,000 ஐந்தாம் வருடம்
6,40,000 ஆறாம் வருடம்
12,80,000 ஏழாம் வருடம்
25,60,000 எட்டாம் வருடம்
51,20,000 ஒன்பதாம் வருடம்
1,02,40,000 பத்தாம் வருடம்

ஒரு கோடியே ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் பத்தாம் வருட இறுதியில் உங்கள் கையில்!

பத்தாயிரத்துக்கு நல்ல பங்காக பத்து வாங்கினால் அடுத்த வருடம் இருபதாயிரத்துக்கு இருபது வாங்கலாம்! கமாடிடியில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம்! பணம் இரட்டிப்பாக ஒரு வருட கால அவகாசம் இருப்பதால் பொறுமையாக நிதானமாக சரியான இடத்தில் வாங்கலாம்! இதை பகுதி நேரமாக ல்லது மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே செய்வதால் உங்களுடய வழக்கமான பணிகளுக்கு இடையூறு வராது!



உங்கள் இல்லங்களுக்கு அருகில் இருக்கும் ஷேர் புரோக்கிங் அலுவலகத்தையே நாடலாம்!

 

பங்கு வணிகத்தில் நட்டம் ஏன்?

வர்த்தகம் என்றாலே லாபமும் நட்டமும் இயல்பு தான். ஆனாலும் வர்த்தகத்தில் வெற்றி பெற சரியான தொலைநோக்கு பார்வை வேண்டும். பெரும்பாலோர் புரிந்து கொள்ளாத விஷயம் வர்த்தகம் ஆரம்பித்த நாளிலிருந்து லாபம் எதிர்பார்ப்பது. எந்த வர்த்தகத்தில் இது சாத்தியம்? பின் ஏன் பங்கு வர்த்தகத்தில் மட்டும் எதிர்பார்கிறார்கள். நான் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் நீங்கள் எதிர் பார்க்கும் லாப சதவிகிதம் தான் உங்கள் ரிஸ்க் சதவிகிதமும்.

நீங்கள் பூ விற்கலாம், உணவு பொருள் விற்கலாம், பிளாஸ்டிக் பொருள் விற்கலாம். பூ ஒரே நாளில் கெட்டுவிடும், உணவு பொருள் இரண்டு நாள் வரை தாங்கலாம், பிளாஸ்டிக் பொருள் அழியாமல் இருக்கும். அதே அளவு லாப அளவும் இருக்கும் என்பது தான் வியாபார உண்மை. நீங்கள் என்ன வியாபாரம் செய்ய போகிறிர்கள் என்பதில் தான் உங்கள் தொலைநோக்கு பார்வை இருக்கிறது. இன்றே லாபம் வேண்டுமென்றால் அதற்கான ரிஸ்கையும் புரிந்து கொள்ளவேண்டும்.




மார்கெட் குறியீட்டு எண் சரிந்த போதும் பல நிறுவன பங்குகள் நல்ல முறையில் ஏறி கொண்டிருந்தது. தினம் பல செய்தி தளங்களில் அந்த செய்தியும் வருகிறது, அதையெல்லாம் படிக்க நமக்கு ஒரு மணிநேரம் போதுமானது. நான் ஏற்கனவே சொன்னது போல் உங்கள் முதலீட்டை ஒரு வருடத்தில் இரட்டிப்பாக்கினாலே போதும் பத்தாவது வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர். தெளிவான பார்வை போதும். சரியான திட்டமிடல் போதும்.

சில ஆலோசகர்கள் சரியில்லை அதனால் தான் நட்டமடைந்தேன் என்கிறார்கள். நான் அலோசகார இருந்த பொழுது வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு சொல்வேன். நான் 5 கால் தருகிறேன் ஒவ்வொன்றும் 1000 லாபம் அதே நேரம் ஸ்டாப்லாஸ் 200௦௦ இருக்கும். 4 கால் தோல்வி அடைந்தாலும் ஒரு காலில் 1000௦௦௦ லாபம். ஆக மொத்தம் 200௦௦ லாபம் தான். ஸ்டாப்லாஸ் போடாமல் நீங்கள் செய்யும் வர்த்தகம் ரிஸ்கானது. அதை புரிந்து கொண்டால் உங்களால் தினசரி வர்த்தகத்திலும் லாபம் பார்க்க முடியும்.

Tuesday, 7 December 2010

யூதர்கள் வரலாறு......

யூதர்கள் எனக்கு என்றும் ஆச்சர்யத்தையே தருகிறார்கள்,உலக மக்கள் தொகையில் வெறும் 0.2 வீதமான யூதர்கள் உலகில் ஆதிக்கம் செலுத்தாத துறை எதுவுமே இல்லை என்று சொல்லாம்,உலக அளவில் வழங்கப்படும் நோபல் பரிசாக இருந்தாலும் சரி,ஆஸ்கார் விருதாக இருந்தாலும் சரி ஏன் கிராமி விருதாக இருந்தாலும் சரி யூதர்களை தவிர்த்து ஒரு லிஸ்ட் தயாரிக்க முடியாது என்பது போல எங்கும் எதிலும் யூதர்களின் ஆதிக்கம் அதிகம்.ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் தொடங்கி 


"ஸ்டார்ட்ஸ் வார்ஸ்" புகழ் பிரபல நடிகர் ஹாரிசன் போர்ட்,



"ஜுராசிக் பார்க்" புகழ் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பேர்க்



,பிரபல இயக்குனர் ஒலிவர் ஸ்டோன் என சாதித்த சாதித்து கொண்டிருக்கிற யூதர்களின் பட்டியல் அபாரமானது.

சரியாக சொன்னால் யூதர்களின் வரலாறு ஒரு இரத்த சரித்திரம்,நான் தொடராக எழுத விரும்பும் இந்த தொடர் மூலம் யூதர்களின் முழு வரலாறையும்,அவர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களையும்,அவர்களின் வரலாற்றில் இருந்து உலகம் பெறக்கூ டியதையும்  ஒரு நாவல் பாணியில் சொல்ல முயற்சிக்கிறேன்.உங்களின் ஆதரவையும் எதிர் பார்க்கிறேன்.

நான் நூலுருவில் முதலில் கொண்டுவர விரும்பும் தொடர் இது   
  
காட்சி ஒன்று 



யூதர்களை கொல்வதற்கென்றே பிரத்தியோகமாக தனிக் கவனிப்புடன் உருவாக்கப்பட்ட "Gestapo" என்கிற ரகசிய காவல்ப் படை முன்பு நின்று கிட்டத்தட்ட கொக்கரித்துக் கொண்டிருந்தார் ஜேர்மானிய சக்கரவர்த்தி ஹிட்லர்.

ஜேர்மானிய சாம்ராச்சியத்தை உலகெங்கும் பரப்ப பெரும் தடையாக உள்ள நச்சுக்கிருமிகள் யூதர்கள்,ஒவ்வொரு யூதனும் கொல்லப்பட வேண்டியவன்,அவர்கள் துரோகிகள்,யூதர்கள் உடலில் ஓடுவது கெட்ட ரத்தம்,ஜேர்மானிய ஆளுகைக்கு உட்படப் போகிற இந்த உலகிற்கு எந்த வகையிலும் தேவை இல்லாதவர்கள் யூதர்கள்.யூதர்களை கொல்வதை ஒவ்வொரு படை வீரனும் மனச் சந்தோசத்துடன் செய்ய வேண்டும்,

யூதக் குழந்தைகளையுமா?

ஆம்,அதில் என்ன சந்தேகம் 
  
அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?அவர்களை ஏன் கொல்ல வேண்டும்? , மனதில் சிறிதளவு ஈரம் எஞ்சி உள்ள ஒரு ஜேர்மானிய அதிகாரி கேட்டார்

 அவர்கள் யூதர்கள் என்பதே அவர்களைக் கொல்வதற்கு போதுமானது, எந்திரன் வில்லன் கணக்காக சிரிப்பு சிரித்தார் ஹிட்லர்.  



இடிக்கிறது பிரபு,ஜேர்மானியர்களை திருமணம் செய்து காலம் காலமாக ஜேர்மானியர்கள் போல வாழும் யூதர்களையுமா கொல்ல வேண்டும்?  

ஒரு ஜெனரல் நாலேஜ் இல்லாமல் இப்படி,குழந்தைப் பிள்ளை போல டவுட் கேட்கிறானே என தனது படை அதிகாரியை கவலையாக பார்த்தபடி சொன்னார் ஹிட்லர், ஜேர்மானியர்களை திருமணம் செய்து இருந்தாலும் அவர்களது சந்ததிகளின் உடலில் ஓடுவதும் கொடிய யூத ரத்தம்,அவர்களும் துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள்

சுருங்க சொன்னால்.......

தனது குட்டி மீசைக்குள் ஒரு கொடூரப் புன்னகையை படர விட்டபடி ஹிட்லர் சொன்னார்

ஒருவன் பிறப்பால் யூதனாக இருக்கலாம்,இல்லை யூத தாய்க்கோ இல்லை தந்தைக்கோ பிறந்தவனாக இருக்கலாம்,இல்லை  யூத மதத்தில் இருந்து மதம் மாறி கிறிஸ்தவனாக கூட இருக்கலாம்,ஒருவனது உடலில் கொடிய யூத ரத்தம் சிறிதளவு ஓடினாலும் அவன்/அவள் கொல்லப்பட வேண்டியவர்கள்,

ஏனேன்றால்,யூதர்கள் துரோகிகள்,அவர்கள் உடலில் ஓடுவது கொடிய யூத ரத்தம்,வாழப் பழக்  காமெடி போல மீண்டும் சொன்னார் ஹிட்லர்.

யூதர்கள் துரோகிகள், அவர்களைக் கொல்லவேண்டும்!....

கொல்ல வேண்டும்!.... 

தலைவனது வழியில் கொக்கரித்தது கூட்டம்        

யூதர்கள் மேல் கிறிஸ்தவர்களிற்கு இருந்த வெறுப்புக்கு பிரதான காரணம்,அவர்கள் மேல் துரோகிகள்,காட்டிக் கொடுப்பவர்கள் என்கிற அவப்பெயர் வர காரணம்

அதற்கு ஒரு சிறிய பிளாஷ் பாக்,சிறிது அல்ல சற்றே பெரிய இரண்டாயிரம் வருடங்களிற்கு முற்ப்பட்ட கிளைமாக்ஸ்                          

காட்சி இரண்டு 



சன்மானமாகப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகள் கொண்ட ஒரு பையை கையிலே வைத்த படி புதிய வானம் புதிய பூமி ரேஞ்சிற்கு பாடியபடி மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தான் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ்,முப்பது வெள்ளிக் காசுகளை வாழ்வில் ஒரே தடவையில் பார்த்ததை அவனால் துளியும் நம்ப முடியவில்லை,முப்பது காசுகள் அதுவும் வெள்ளிக்காசுகள்..

யூதாஸ் இது நீயா?,உன்னிடமா முப்பது வெள்ளிக் காசுகள்,நம்ப முடியாதவனாக தனது கையை தானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறான்,அவனிற்கு அந்த முப்பது வெள்ளிக் காசுகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை வடிவேலிற்கு கிரி படத்தில் பேக்கரி கிடைத்ததைப் போன்றது வடிவேல் அடகு வைத்தது அக்காவை என்றால் யூதாஸ் அடகு வைத்தது இயேசுவை ஆம் மனித குலத்தை மீட்க வந்தவராக கிறிஸ்துவர்களால் நம்பப்படும் இயேசுவை, 

அன்னா,கயபா என்கிற இரண்டு யூத மதகுருமார்களின் முன்பாக கொண்டுவந்து  நிறுத்தப்பட்டான் யூதாஸ்

பை தி வே அன்றைய பாலஸ்தீனின் ரிமோட் கொன்றோல் யூத மத குருமா ரிடமே இருந்தது,மன்னன் என்பவன் சும்மா பெயர் அளவிற்கே இருந்தான்,மத குருமார்கள் வாயால் எடுத்த முடிவுகளை தலையால் செய்து முடிக்கும் அளவிற்கே மன்னனின் அதிகாரங்கள் இருந்தன,எங்கும் எதிலும் மத குருமார்களின் அதிகாரங்கள் கொடி கட்டிப் பறந்தது.மன்னன் என்பவன் சும்மா ஜஸ்ட் போர் நேம் சேக்.

தங்களின் முன்னால் நிறுத்தப்பட்ட யூதாசைப் பார்த்துக் இருவரும் ஒரே நேரத்தில் கேட்டார்கள் 

நீதான் இயேசுவின் நண்பனா?

மன்னிக்கவும்,நான் இயேசுவின் சீடன்

நல்லது தங்களின் பெயரை அறிந்து கொள்ள ஆவல்?

"யூதாஸ் இஸ்கேரியாத்"  [judas iscariot]

இயேசுவைக் கைது செய்வதாக எமது யூத மதகுருமார் சபை முடிவு செய்து உள்ளது,நீதான் அவரை அடையாளம் காட்ட வேண்டும்   

என்ன இயேசுவைக் கைது செய்யப் போகிறீர்களா?,அவர் யார் தெரியுமா இந்த உலகத்தை மீட்க வந்த மீட்பர்,மோசஸுக்கு பிறகு எம்மை மீட்க வந்த தேவ தூதர்,ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இறை தூதன் தோன்றி எம்மைக் காப்பார் என்பது தானே எமது மதத்தின் அடிப்படை நம்பிக்கை, மோசஸூக்கு பிறகான தேவ தூதனை என்னைக் கா ட்டிக் கொடுக்க சொல்கிறீர்களா?,அய்யோ அந்தக் கொடிய செயலை நான் செய்யமாட்டேன்.

நீ செய்யப் போகும் உதவிக்கு நாம் உனக்கு சன்மானம் தருகிறோம் 

என்னை விலை பேச நினைக்காதீர்கள்,என்னை விலை பேச உங்களால் முடியாது 

முப்பது வெள்ளிக் காசுகள் [அந்தக் காலத்தில் மிகப் பெரிய பணம்]

இயேசுவா கொக்கா,எங்கே,எப்போது  காட்டிக் கொடுக்க வேண்டும்

நாளை இரவு.

சீடர்களிற்கு மத்தியில் உள்ள அவரை நீதான் தொட்டு அடையாளம் காண்பிக்கவேண்டும் 

தொட்டு என்ன கட்டியணைத்து,கன்னத்தில் முத்தம் இட்டே அடையாளம் கண்பிக்கிறேன்

யூதாஸ் பேசவில்லை,முப்பது வெள்ளிக் காசுகள் பேசின 
    
இயேசு தனது சீடர்களுடன் தங்கி இருந்த கேத்சமனி தோட்டம்,கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம்,இயேசுவின் பதினோரு சீடர்களும் அழ்ந்த உறக்கத்தில் இருக்க யூதாஸ் மாத்திரம் மிஸ்ஸிங்,வாங்கின காசுக்கு நேர்மையாக சொன் ன படி சொன்ன நேரத்துக்கு படை வீரர்களை இயேசு தங்கி இருந்த    கேத்சமனி தோட்டத்திற்கு அழைத்து வந்து விட்டான் யூதாஸ்



இயேசு மாத்திரம் தூங்காமல் கண்களில் நீர் வழிந்தோட சேபித்துக் கொண்டிருந்தார்,

தந்தையே பாவிகளை மன்னியும்,என்னைக் கைது செய்து சித்திரவதை செய்யப்போகிறவர்களையும் மன்னியும்

மனம் உருகப் பிராத்தனை செய்து கொண்டிருந்த இயேசுவின் முன்னால் வந்தார்கள் யூத மதகுருமார்கள் அனுப்பிய படையும் கூடவே யூதாசும் 

நீங்கள் யாரை எதிர்பார்த்து வந்துள்ளீர்கள்?,மெல்லிய குரலில் அன்பு ததும்ப அவர்களைப் பார்த்துக் கேட்டார் இயேசு  

நாங்கள் இயேசுவைக் கைது செய்ய வந்துள்ளோம்

சடுதியாக யூதாஸ் இயேசு முன் வந்தான்,இயேசுவைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான்



"ஒரு மனுஷ குமாரனை  [son of man] முத்தமிடுவதன் மூலம் காட்டிக் கொடுத்து விட்டாய் யூதாஸ்"

 யூதாசைப் பார்த்து அன்பு ததும்ப சிரித்தார் இயேசு.
பின்பு இருவரும் ஒரு  அறையில் சென்று  கதவை மூடிவிட்டார்..கடவுள் இயேசுவை வானத்தில் உயர்த்திக்கொண்டார். யூதாஷிற்குமுகத்தை இயேசுவுடைய  மாற்றிவிட்டார் , முஹமஹா  
முகமாக  மாற்றிவிட்டார்.
யூதாசை வைத்து யூதர்கள் என்றாலே காட்டிக் கொடுப்பவர்கள் என முடிவெடுத்த பலர் வசதியாக ஒன்றை மறந்து  விட்டார்கள்

அது இயேசுவும் பிறப்பால் ஒரு யூதர் என்பதை ....