Tuesday, 9 August 2011

ரகசிய கேமராடி,ஜிட்டல் கேமரா, மொபில் கேமரா மற்றும் வெப்காம் -ஒரு விழிப்புணர்வு ஆய்வு...



குறிப்பு :  இது ஒரு ஆய்வு பதிவு மட்டும் இல்ல , இது ஒரு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவும் கூட அதனால நான் வார்த்தைகளை எந்த கட்டுப்பாடும்  இல்லாம எழுதி இருக்கேன். அதுக்காக பெண்கள் இதை படிக்காம போய்ட வேண்டாம் என்னென்றால் இது முக்கியமா பெண்கள்தான் அவசியம் படிக்கவேண்டும் . 

           இந்த பதிவ படிக்குற உங்களுக்கு ஒரு சிம்பிள் கேள்வி , நீங்க ரோடுல நடந்து போய்கிட்டு இருக்கீங்க அப்போ உங்களை  ஒரு நாலு பேரு குறுகுறுன்னு கண்ணு கொட்டாம பார்கிறாங்கன்னு வச்சுக்குவோம் அப்போ உங்களால சரியா நடக்க முடியுமா? உடனே கால்கள் பின்ன ஆரம்பிச்சுடாது? சரியா நடக்க முடியாது இல்லையா . அதுலயும் நடக்குறது ஒரு வயசு பையனா இருந்து குறுகுறுன்னு பார்க்குறது நாலு பெண்களா இருந்தா சொல்லவே வேண்டாம் அது வரைக்கும் நல்ல நடந்துகிட்டு இருந்த அந்த பையன் அவங்க பாக்குராங்கன்னு தெரிஞ்சதும் ததக்கா புதக்கான்னு  நடக்க ஆரம்பிசுடுவான். இதே மாதிரி நிலைமைதான் ஒரு பெண் நடக்கும் போது நாலு ஆண்கள் பார்க்கும் போதும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.  இதெல்லாம் மனிதனின் இயல்பு , அடிப்படை உணர்ச்சிகள்.
          ஆனால் இந்த உணர்ச்சிகள் எல்லாம் நமக்கு நம்மையே அறியாமல் மக்கி போக ஆரம்பிச்சு இருக்குகிறது. எப்படின்னு கேட்டிங்கன நாம ரோட்ல நடக்கும் போது , கடைகளில் இருக்கும் போது, ஹாஸ்பிட்டல்களில் இருக்கும் போது, ரயில்வே ஸ்டேஷன் , ஏர்போர்ட் , பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் , ஷொப்பிங் மால், டிராபிக் சிக்னல் அப்படின்னு இன்னைக்கு கண்காணிப்பு கேமரா இல்லாத இடமே இல்ல .
என்னுடைய கல்லூர் நண்பன் இப்போ லண்டன்ல வேலைல இருக்கான் அவன் சொன்ன ஒரு புள்ளி விவரம் , அவன் ஒரு நாள் காலையில் ஆபீஸ்க்கு போயிட்டு இரவு வீடு திரும்புவதற்குள் அவனை இந்த கண்காணிப்பு கேமராக்கள் குறைந்தபச்சம் இருநூறு முறையாவது புகைப்படம் எடுகின்றனவாம். எதுக்குங்க லண்டன்க்கு எல்லாம் போய்கிட்டு? , இங்க நம்ப ஊருலயே இருக்கே, ஆயிரதெட்டு கண்காணிப்பு கேமராக்கள். தினம் தினம் நம்மை கண்காணித்துகொண்டே இருக்கின்றன . எதற்கு இதெல்லாம்? ஏன் இந்த கண்காணிப்பு ?
      இதற்க்கெல்லாம் பதில் , குற்றங்களை தடுப்பதற்காக , பாதுகாப்பு காரணங்களுக்காக , தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்காக. இந்த காரணங்கள் எல்லாம் 100% சரியாகவே இருந்தாலும் . என்னுடைய கேள்வி எல்லாம், எங்கே போயிற்று தனிமனித சுதந்திரம்? இன்றைய நிலைமையில் நம்மால் எந்த ஒரு கண்காணிப்பு இல்லாமல் தனிமனித சுதந்திரத்துடன் வெளியே போயிட்டு வர முடியுமா? சும்மா நாலு பேரு நாம நடக்கும் போது வெறிக்க பார்த்தாலே நமக்கு என்னவோ போல இருக்கு, ஆனா கண்காணிப்பு கேமரா என்கிற பெயரால் நம்மை கேமரா கண்கள் எப்போதும் கண்காணித்து கொண்டே இருப்பது எப்படி இருக்கும் ? எதற்காக எந்த குற்றமும் செய்யாத நம்மை கண்காணிக்க வேண்டும்? ஆகா மொத்தத்தில் தனிமனித சுதந்திரம் ( privacy )  பறிபோய்விட்டதாகவே நான் உணர்கிறேன் . 
         சரி அதற்காக கண்காணிப்பு கேமராவை எல்லாம் நீக்கி விடலாம் , எங்கயும் வைக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை . ஆனால் கண்காணிப்பு கேமரா வைப்பது மட்டுமே குற்றங்கள் தடுத்து விடாது , குறைத்து விடாது . எடுத்துகாட்டாக திருடவோ , கொள்ளை அடிக்கவோ வருபவர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வேலை செய்ய வேண்டி இருக்கும் அது என்ன என்றால் , அவர்கள் போகின்ற இடத்தில உள்ள கண்காணிப்பு காமெராவை முதலில் செயல் இழக்க செய்ய வேண்டி இருக்கும் அல்லது கேமரா கண்காணிப்பில் சிக்காமல் வேலையை செய்ய வேண்டி இருக்கும் . தீவிரவாதிகளுக்கு இந்த கண்காணிப்பு கேமரா பற்றிய கவலை எல்லாம் கிடையாது . மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்த போதே நான் நேரடியாக பார்த்தோம் . தீவிரவாதிகளுக்கு அவர்கள் உயிர் மேலயே கவலை இல்ல அப்புறம் எங்க கண்காணிப்பு காமெராவை பற்றி எல்லாம் கவலை பட போகிறார்கள் ? வந்த வேலையை செவ்வனே செய்தது முடிப்பார்கள் .
       சரி இப்போ கண்காணிப்பு கேமராவுக்கே இத்தனை கஷ்டமா இருக்கு என்றால் உங்களுக்கு மற்றும் ஒரு கேள்வி , பெண்கள் வெளி இடங்களுக்கு போகும் போது ஆண்கள் யாரவது தவறான கண்ணோட்டத்தில் பெண்களில் அங்கங்களை அதாவது , பெண்களின் மார்பையோ , பின்புரத்தையோ அல்லது இடுப்பையோ பார்த்தால் அந்த பெண்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கும்? எதன்னை தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ?
            சும்மா வெறுமனே வெளி இடங்களில் இந்த மாதிரி பார்வைக்கே எத்தனை தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது , அதுவே அந்த பெண்களில் உடம்பை "நிர்வாணமாய்" யாராவது பார்த்தால் என்னவாகும் ? அதை புகைபடமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்தால் எப்படி இருக்கும் ? அதற்கும் ஒரு படி மேல போய் பதிவு செய்த புகைப்படம் , வீடியோகளை இணையதளத்தில் வெளியிட்டால் என்னவாகும் ?
              இது எல்லாமே நடக்கிறது இன்றைய கலியுகத்தில் . இது எல்லாம் விஞ்ஜான கண்டுபுடிப்புகளின் பக்கவிளைவுகள். இது மட்டும் அல்ல , இன்னும் இளம் தம்பதிகளின் உடலுறவு காட்சிகள் , அந்தரங்கங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகின்றன . எப்படி இதெல்லம் நடக்கிறது? என்ன காரணங்கள் ? நம்மை அறியாமல் எப்படி நம்புடைய அந்தரங்கங்கள் படம் பிடிக்க படிகின்றன ? கூடுமானவரை அதில் இருந்து எப்படி எல்லாம் தப்பிக்கலாம் ? 
நான் சொன்னது எல்லாம் கண்காணிப்பு கேமராகளை பற்றிதான் , ரகசிய கேமராகளுக்கான ஒரு முன்னுரையை மட்டும்தான் நான் குடுத்து இருந்தேன் . கண்காணிப்பு கேமராகளுக்கும் , ரகசிய கேமராகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு . கண்காணிப்பு கேமராக்கள் என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பட்டமாய் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி அதிகார பூர்வமாக பொது இடங்களில் வைக்கப்படுவது, அதற்க்கு பெயர் 
Security Camera  அல்லது  CCTV Camera (Closed Circuit Television Camera )அதுவே தனிமனித சுதந்திரம் பறி போவதாக வருத்தப்பட்டு இருந்தேன் . ஆனால் ரகசிய கேமராக்கள் என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒளித்துதோ அல்லது மறைத்தோ வைக்கபடக்கூடிய சிறிய வகை கேமராக்கள் . இதன் நோக்கம் உளவு பார்ப்பதற்காகவோ அல்லது வேறு சில வக்கிர உள்நோக்கங்களுக்காகவோ வைக்கப்படுபவை.
இந்த ரகசிய கேமராகளுக்கு நிறைய பெயர்கள் உண்டு Spy Cam , Candid Cam , Hidden Cam , Secret Cam என்று பல பெயர்கள்.  சரி அப்படி இந்த கேமராக்களை வச்சுக்கிட்டு அப்படி என்னதான் பண்ணுறாங்க ? கேட்டிங்கனா ரொம்பவே அதிர்ச்சி ஆகிடுவிங்க .
         நான் கட்டுமான பொறியாளராக இருப்பதால் சமீபத்தில் ஒரு மிக பெரிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தேன் , அந்த கட்டிடம் ஒரு மிக முக்கியம் வாய்ந்த கட்டிடம் ஆகையாதால் அந்த கட்டிடத்துக்கு சில பல ரகசிய கேமராக்கள் பாதுகாப்பு காரணாங்களுக்காக  பொறுத்த வேண்டி இருந்தது அந்த கட்டிடத்தின் உரிமையாளர் குழுமம் கேட்டு கொண்டதுக்கு இணங்க . அப்போது அதற்க்கு தேவையான ரகசிய கேமராக்கள் வாங்க வேண்டிய பொறுப்பு நான் பணியாற்றும் கம்பெனிக்கு வந்தது. அப்போது கேமராக்கள் வாங்க வேண்டி அதற்கான தகவல்கள் திரட்டப்பட்டு சில கம்பெனிக்கள் விவரம் கிடைக்க, அந்த கேமரா கம்பெனிகளிடம் மேலும் தகவல்கள் , மாடல்  மற்றும் விலை விவரங்கள் கோரப்பட்டன . அதில் சில கம்பெனிகள் குடுத்த கேமரா மாடல் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை (Catalog)  பார்த்த போது நான் சற்று இல்ல நிறையவே அதிர்த்துதான் போனேன் . சொன்ன நம்ப மாட்டிங்க இதை பற்றிய விவரம் எவ்வளவு பேருக்கு இன்னும் தெரியும் என்று தெரியவில்லை , அந்த ரகசிய கேமராக்களின்  மாடல்கள் உண்மைலயே பேரதிர்ச்சியை உண்டாக்கின . கதவு கை புடி  , கடிகாரம்  , சுவிட்ச் , சுவிட்ச் போர்டு , பல வகை லைட்  வடிவத்தில் , அலங்கார விளக்குகள் , பொம்மைகள் , குளியல் அறையில் லைட் , ஷவர் , வாட்டர் ஹீட்டர்  என எல்லா வடிவங்களிலும் கேமரா மாடல்கள் இன்றைய உலக சந்தையில் சர்வ சாதாரணாம கிடைக்கிறது. ரொம்ப சிம்பிள் அதை வாங்கி அப்படியே பொறுத்த வேண்டியதுதான் அதில் உள்ள உபகரணமும் வேலை செய்யும் , கேமராவ்வும் வேலை செய்யும். யாராலையும் கண்டேபிடிக்க முடியாது . ஏன் பேனா வடிவில் கூட சிறிய கேமராக்கள் வந்து விட்டன,  “மங்காத்த” படத்தில் அஜித் பேனா வடிவ கேமராவை உபயோகித்து இருப்பார். 

உங்களுக்காக  சில ரகசிய கேமராக்களின் படங்கள் கீழே : 

        இந்த கேமராக்கள் எங்கு எல்லாம் எப்படி எப்படி எல்லாம் சமூக விரோத தனமாக , வக்கிர எண்ணங்களுடன் உபயோக படுத்தப்படுகிறது? எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல் ரூம்களில் , ஹோட்டல் பாத் ரூம்களில் , துணி கடைகளில் பெண்கள்  உடை மாற்றும் அறைகளில்தான். பெரும்பாலும் எல்ல ஹோட்டல்கள் , குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களிலும் இந்த வேலை நடக்கிறது. இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்பது வேறு கதை , யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் , அதை பின்னர் விவாதிப்போம் . 
        இப்போது எல்லாம் நான் வெளியூர்களுக்கு போனால் தாங்கும் ஹோட்டல்களில் நட்சத்திர ஹோட்டல்களே ஆனாலும் , குளிக்கும் போது கோவணம் கட்டி கொண்டுதான் குளிக்கிறேன் , ஏனென்றால் இது போல ஏதாவது ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டு இருக்குமோ என்கிற பயம் தான். இல்லை என்றால் அப்புறம் என்னுடைய பிறந்த மேனியை நானே இணையதளத்தில் பார்க்க நேரிடலாம் . என்னதான் பெண்களை குறி வைத்து கேமராக்கள் பொறுத்த பட்டு இருந்தாலும் , குளிக்கிறது ஆணா ? பெண்ணா ? என்று கேமராவுக்கு எங்கு தெரிய போகிறது அப்படி என்னையும் குளியல் காட்சியில் படம் பிடித்துவிட்டால் ? அதனால் தான் இந்த கோவண குளியல் .
      இன்றைய இணையதளத்தில் இந்த ரகசிய கேமராக்களை பயன்படுத்தி ஏகப்பட்ட அந்தரங்க , உடலுறுவு  மற்றும் நிர்வாண கட்சிகள் படமாக்கப்படுகின்றன பல வக்கிர கும்பல்களினால் . அதை இணையதளத்தில் வெளியிட்டு பணம் பார்க்கின்றனர். பாவம் ஹோட்டலில் தங்குபவர்களுக்கு இதை பற்றி எந்த விவரமும் தெரியாது . கேமரா பொறுத்தப்பட்டதோ , அவர்களின் அந்தரங்கங்கள் படம் பிடிக்கப்பட்டதோ எதுவும் தெரியாது. 
பெரும்பாலும்  இந்த வக்கிர கும்பல்களின் குறி அழகிய பெண்கள் மற்றும் இளம் தம்பதிகள் . அதிலும் தேனிலவுக்கு போகும் புது மண தம்பதிகள் என்றால் இந்த வக்கிர கும்பகளுக்கு ஏக கொண்டாட்டம். பெரும்பாலும் தேனிலவுக்கு போகும் இடங்களான சுற்றுலா தளங்களின் உள்ள ஹோட்டல்களில் இந்த அபாயம் அதிகம் உள்ளது. ஜாக்கிரதை . 

    
     
த்ரிஷா போன்று பிரபலங்களின் நிர்வாண குளியல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஆனது எல்லாரும் அறிந்ததே , ஆனால் பிரபலங்கள் மட்டும் அல்லாது சாமானிய குடும்ப பெண்களின் , தம்பதிகளின் நிர்வாண , அந்தரங்க உடலுறவு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொட்டிகிடகின்றன இன்றைய இணையதளத்தில் .எப்படி இதெல்லாம் சாத்தியம் ஆகிறது? எல்லாம் இந்த ரகசிய கேமராக்களின் உதவியால்தான். ஹோட்டல்களில் தாங்கும் போது கண்டே புடிக்க முடியாத சிறிய வகை ரகசிய கேமராகளை பற்றி இது வரை யாராவது யோசித்து பார்த்து இருக்கிர்களா? கவலைப்பட்டு  இருக்கீர்களா? 
இனி கண்டிப்பாக கவலைப்படணும் , கவனமாய் இருக்கணும். 


இனி ஹோட்டலில் தாங்கும் போது கவனிக்க வேண்டிய , செய்ய வேண்டிய விஷியங்கள் :
1, உடலுறவு கொள்ளும் அவசியம் இருந்தால் முடிந்தவரை ஹோட்டல் அறையை இருட்டாக்கிகொண்டு விளக்குகளை அணைத்து விட்டு நடக்கட்டும் . கேமரா கண்களில் இருந்து தப்பிக்க வேற வழி இல்லை .
2) பெண்கள் முடிந்தவரை உடையை கலையாமல் இருக்கவும் அறையுனுள் இருக்கும் போது. உடை மாற்றும் போது கூட கணவர் மட்டும்தானே இருக்கார் என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் சுவர்களுக்கு கூட (கேமரா)கண்கள் இருக்கலாம் .
3) அதே போல் பெண்கள் குளிக்கும் போது முடிந்தால் உடம்பை மறைக்க ஏதாவது துணி கட்டிக்கொண்டு குளிக்கவும்.

      இதையெல்லாம் செய்ய சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் ஆனால்  ரகசிய கேமரா கண்களுக்கு இரை ஆகி , 
வக்கிர மனம் கொண்டவர்களின் கண்களுக்கு விருந்தாகாமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேற வழி இல்லை .

       சரி இது எல்லாம் நமக்கு தெரியாமல் ரகசிய கேமராகளால் நமக்கு வரும் பிரச்சனைகள் . ஆனால் சிலர் ஆர்வ கோளாறினாலும் , சில தம்பதிகள் அவர்கள் அந்தரங்களை அவர்கள் உபயோகத்திற்காக சொந்த கேமராவிலோ அல்லது மொபைல் கேமராவிலோ எடுக்கும் நிர்வாண புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எப்படி வெளியுலகிற்கு , இணையதளத்திற்கு வருகிறது? அதை எப்படி எல்லாம் தடுக்கலாம் ? 

உங்கள் லேப்டாப் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்காம்களை மற்றவர்கள் உங்கள் அனுமதி இன்றி உங்களை எப்படி பார்க்க முடியும் ? அதை எப்படி தடுப்பது ?





 
இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது  ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும். 

          இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில்  கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும் பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீஸ்சார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும் ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்து கொண்டும், பதிவு செய்தது கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக நிர்வாணமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்தது ரசித்து கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்தது கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை. 
         இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting அப்படியென்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை. 
சரி இந்த வகை தில்லாலங்கடி கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது? 

 Reflecting Glass -சை  கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :


1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுண்ணிப்பாக கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால்  இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது. 
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கை பையில் எப்பவும் ஒரு சிறிய முகம் பார்க்கும் வைத்து கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் , உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.  

2. உங்கள் கைப்பையில் எப்பவும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தல் அதில் ஒளி ஊடுருவுகிறதா என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது  முகம் பார்க்கும் கண்ணாடி. 

3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப சிம்பிள்  உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகம்ப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால்  கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியை குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொருத்தி இருப்போம் இல்லையா அதில் நாம் சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா கார்க்குள் என்ன இருக்கிறதென்று அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.

       சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றி . ஆனால் இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல. 

    சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி  அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம்  எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக  வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை . 
          ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின்  நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ? 
மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம்  புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன்.  

           எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று  தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்க்கிறது? 

டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் : 
1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.  

3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.




                                                       உங்க WEBCAM ஜாக்கிரதை . . .


          சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்யில்  இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்க்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு இணைக்க வில்லை ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்க்கு என்ன சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . அப்புறம்  தெரியாத ஒரு தப்பான விஷியத்தை நானே சொல்லி குடுத்தார் போல் ஆகிவிடும். அதனால் விஷியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .

இதில் இருந்து தப்பிக்க : 

1. நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்திருப்பார்களானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் . 
 
2. நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்ஸ்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமா லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கராய்அல்லது ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது . 




இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.

தொகுப்பு; மு.அஜ்மல் கான்.

Monday, 8 August 2011

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? பெரியார்தாசன்....

மதமாற்றமல்ல! இது மனமாற்றம்.
நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட டாக்டர் பெரியார்தாசன்.

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்?

பெரியார்தாசன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மா என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். இவர் 12-3-2010 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்[1][2]. அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார். - SOURCE:WIKEPEDIA

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? டாக்டர் பெரியார்தாசன்


இப்பரந்த உலகையும் அண்ட சராரங்களையும் படைத்தவன் என்று ஒருவன் உண்டா? இல்லையா?. இக்கேள்வியின் மீதான விவாதத்திற்கு, இல்லை என்றும் உண்டு என்றும் இருவேறு பதில்கள் உள்ளன.

உண்டு என்பதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் உண்டு என்று கூறுவோரும் உளர்.

இதில் படைத்தவன் ஒருவன் உண்டு என்று கூறுவோரில் ஒன்றுக்கு மேற்பட்ட பல கடவுள்கள் உண்டு என்ற நிலைபாட்டில் உள்ளோரில் பெரும்பாலோர் என்றாவது ஒருநாள் படைத்தவன் ஒருவன்தான் என்ற உண்மையைக் கண்டுகொள்கின்றனர்.

இது நாள்தோறும் நாம் படிக்கும் செய்திகளில் ஒன்றுதான்.

ஆனால், "படைத்தவன் என்றொருவனே இல்லை; அனைத்தும் தானாகவே தோன்றின" என நிரூபிக்கப்படா அறிவியலைத் துணைக்கழைத்து "பகுத்தறிவு" என்ற பெயரில் படைத்தவனை மறுதலித்து வாழும் நாத்திகர், படைத்தவனைக் கண்டுகொள்தல் என்பது நிகழ்வுகளில் ஆச்சரியமும் அபூர்வமுமான நிகழ்வாகும்.

தமிழகத்தின் பகுத்தறிவு(!)ப் பாசறையிலிருந்து இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுள் மிகச் சிறந்த இலக்கியவாதியான முரசொலி/நீரோட்டம்/அடியார் அவர்கள் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்.

நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட இன்னொருவரது வாழ்வின் திருப்புமுனை நிகழ்வு ஒன்று கடந்த வியாழன் (11.03.2010) அன்று சவுதி அரேபியாவில் நடந்தது.

ஆம்! "தேடுதல் உடையோர் நேரான வழியை அடைந்து கொள்வார்" என்பதற்கு இன்னுமோர் இலக்கணமாக, தமிழகத்தில் "கடவுள் இல்லை" என்ற கொள்கையில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வந்த பிரபல பேராசிரியர் முனைவர் பெரியார்தாசன் அவர்கள் கடந்த வியாழன் அன்று இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தம்மையும் இவ்வுலகையும் படைத்த இறைவனை இறுதில் தேடிக் கண்டுகொண்டார்.

உள்ளம் திறந்து, முன்முடிவுகள் இன்றித் தேடமுனைபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தேடுவதில் முனைப்புடன் இருந்தால் என்றாவது ஒருநாள் அவர்கள் தேடுவதை அடைந்தே தீருவர்.

"படைப்பாளன் என்றொருவன் இல்லவே இல்லை" என்று எவ்வித உறுதியான சான்றும் இல்லாமல், கண்டுபிடிப்பில் இன்றும் கத்துக்குட்டியாக இருக்கும் விஞ்ஞானத்தைத் துணைக்கழைத்து மிக அற்பமான சிற்றறிவைப் பயன்படுத்திப் படைத்தவனை மறுதலித்து வாழும் நாத்திகச் சகோதரர்கள்,

தங்களைத் தாங்களே "பகுத்தறிவுவாதிகள்" என அழைத்துக் கொள்வதிலாவது அவர்கள் உறுதியானவர்களாக இருப்பின்,

தம் மனதைத் திறந்து "படைப்பாளன்" குறித்துப் பேசும் அனைத்து வேத கிரந்தங்களையும் ஒப்பீட்டாய்வு செய்ய முன்வரவேண்டும் என்றும்

படைத்தவனின் வாக்காக இவ்வுலகின் இறுதிநாள்வரை பாதுகாக்கப்பட இருக்கும் திருக்குர்ஆனை முழுவதும் ஒருமுறையாவது படித்துப் பார்க்கவேண்டும் என்றும் இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறோம்.

தன்னுடைய நீண்டகால நாத்திக+புத்தமதப் பயணத்தின் இறுதியில் தன்னையும் இவ்வுலகையும் படைத்தவனைக் கண்டுகொண்ட பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், "கருத்தம்மா" என்ற பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருந்த திரைப்படத்தின் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவராவார்.

உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்து தனது பெயரையே நாத்திகச் சிந்தனையாளரான பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டு, 'பெரியார்தாசன்' ஆக வாழ்ந்தவர்.

சமூக சிந்தனைக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னணியில் நின்ற அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இஸ்லாத்தைப் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பெரியார்தாசன், கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11, 2010) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, தன்பெயரை "படைத்தவனுக்கு அடிமை" என்ற பொருள்படும் "அப்துல்லாஹ்" என்று மாற்றிக் கொண்டார்.

இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட முனைவர் அப்துல்லாஹ் எனும் பெரியார்தாசனின் இறைதேடுதல் பயணம் சுவாரசியமானது.

சிறுவயதில் தன்னுடன் பயின்றிருந்த சிராஜுதீன் என்ற முஸ்லிம் நண்பருடன் 2000ஆம் ஆண்டில் ஒருநாள் இரவு பல விஷயங்களைக் குறித்துக் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், படைத்தவனைத் தேடும் சிந்தனை எழக் காரணமான ஒரு கேள்வி சிராஜுதீனிடமிருந்து எழுந்தது என்றும் அதுவே தன் இறைதேடுதல் பயணத்தின் ஆரம்பக்கட்டம் என்றும் அவர் நினைவு கூர்கிறார்.

"படைத்தவன் என்றொருவன் இல்லை என்ற நாத்திக கொள்கைதான் சரியானது எனில் அதனால் நம்முடைய மரணத்துக்குப் பின் எந்த இழப்பும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக ஒருவேளை படைத்தவன் என்றொருவன் இருந்து விட்டால் மரணத்துக்குப் பின் நாம் மிகப் பெரிய நஷ்டவாளியாக நிற்க நேருமே" என்ற சிந்தனையினால் எழுந்த அச்சம்தான் "படைத்தவன் என்றொருவன் இருக்கிறானா?" என்ற தேடுதலுக்குத் தன்னை உந்தித் தள்ளியதாகக் கூறுகிறார்.

"கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் அங்கு உரையாற்ற வந்த பெரியாரைப் புகழ்ந்து, நான் எழுதிய கவிதைதான், பெரியாரின் கொள்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பமாக அமைந்தது" என்று கூறும் அவர்,

அதன்பின் கடுமையான கடவுள் மறுப்புச் சிந்தனை கொண்டவராக தமிழகம் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும்

இதற்கிடையில் இனத்தின் அடிப்படையிலான இழிவை அகற்ற "புத்த மதத்துக்கு" மாறியதாகத் தமிழக அரசு பதிவேடுகளில் தன் விவரங்களை மாற்றிக்கொண்டதையும் நினைவு கூர்கிறார்.

"2000இல் மனதினுள் எழுந்தக் கேள்வி, பல வேத கிரந்தங்களையும் ஆராயச் சொன்னது.

இந்துமத வேதங்களில் கடவுளைத் தேடுபவன், கடவுள் மறுப்புக் கொள்கையில்தான் போய் சேருவான்.

பைபிளிலும் படைத்தவனைக் குறித்த தெளிவு இல்லை.

இறுதியில் இஸ்லாத்தில் - திருக்குர்ஆனில் தேட முற்பட்டேன்.

திருக்குர்ஆனை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்தே மனதினுள் தெளிவுகள் ஏற்பட ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் தினசரி வேலைகளை ஒதுக்கி, நாளுக்கு 5 மணி நேரம் வரை திருக்குர்ஆனை வாசித்து முழுமையாக முடித்தேன். அதன் பின் ஹதீஸ்களையும் வாசிக்க ஆரம்பித்தேன்.

2004 இல் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை முழுமையாக நிறுத்தி விட்டேன். அதன் பிந்தைய 6 ஆண்டுகளும் முழுமையாக இஸ்லாத்தை ஆய்வு செய்வதிலேயே செலவழித்து, இறுதியில் உண்மையான இறைவனை இஸ்லாத்தின் மூலம் கண்டுகொண்டேன்" என்று தன் இறைதேடுதல் பயணத்தின் கடந்த 10 ஆண்டுகால முக்கிய நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.

"கடவுள் இல்லை" என்ற சிந்தனையை ஆயிரக்கணக்கானோருக்கு விதைத்த இறைமறுப்பாளர் ஒருவர் இன்று இறைவனைக் கண்டுகொண்டுள்ளார்.

கடுமையான தேடுதல் மூலம் கண்டு கொண்ட ஓரிறையை இனிவரும் காலங்களில் மக்களுக்கு எடுத்தியம்ப இருக்கும் அன்னாரின் கண்டறிதலைத் தமிழ்ச் சமூகம் மனம் திறந்து கேட்கட்டும்; உண்மையான படைத்தவனைக் கண்டு கொள்ளட்டும்.

இறைமார்க்கத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபின், மக்கா நோக்கிக் கடந்த சனிக்கிழமையன்று உம்ரா எனும் புனிதபயணத்தை மேற்கொண்ட அவர், இன்று 14.03.2010 இரவு 8.30 மணிக்கு ஜித்தா செனய்யாவில் "நான் எவ்வாறு இஸ்லாத்திற்கு மாறினேன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார், இன்ஷா அல்லாஹ்.

அவரது இந்நாள் வரையிலான பிழைகளைப் பொறுத்து, அவர் மூலம் இத்தூய மார்க்கம் மேலும் வலுப்பெற இறைவன் அருள்புரிவதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

"தேடுங்கள்; கண்டடைவீர்கள்!"

Artical source : Satyamargam.com

Wednesday, 3 August 2011

சாக்லேட் தயாரிப்பில் குழந்தைத்தொழிலாளர்!! ஒரு சமூக பார்வை..

அழுது கொண்டிருக்கிற குழந்தையின் கையில் ஒரு சாக்லேட்டினைக் கொடுத்தாலே போதும், தன்னுடைய அழுகையினை உடனே நிறுத்திவிட்டு முகமலர்ச்சியோடு சிரிக்கத்துவங்கிவிடும். அந்த அளவிற்கு சாக்லேட் என்பது அனைவருக்கும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) பிடித்தமான ஒரு உணவுப்பொருளாகிவிட்டது.

 தெருமுனைப்பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் வரை, சாக்லேட் விற்பனை நடைபெறாத கடைகளே இல்லை எனலாம். ஓராண்டிற்கு உலகம் முழுவதிலும் முப்பது லட்சம் டன் அளவிற்கான சாக்லேட்டுகள் விற்பனையாகின்றன... ஐரோப்பாவில் மட்டுமே அதில் பாதியளவிற்கு உண்டு தீர்க்கிறார்கள். 


சாக்லேட்டின் இந்த இமாலய வெற்றிக்குப்பின் பெரும் சோகம் மறைந்திருக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளின் குழந்தைகள் தினந்தோறும் விதவிதமான சாக்லேட்டுகளை உண்கிற அதேவேளையில், ஆப்பிரிக்கக் குழந்தைகளின் நிலையோ வேறுமாதிரி இருக்கிறது. சாக்லேட் தயாரிப்பிற்குத் தேவையான "கோகோ" உற்பத்தி செய்யும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க குழந்தைகள் கடத்தப்பட்டு வேலைக்கு அமர்த்தபடுவதனை ஒட்டுமொத்த சாக்லேட் தொழில்துறையே செய்துவருகிறது என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத்தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் உழைக்கிறார்கள். நாம் மகிழ்ந்துண்ணும் இனிப்பான சாக்லேட்டுகளின் தயாரிப்பின் பின்னே, கசப்பான ஆயிரம் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன...

சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவை உலகிலேயே அதிகளவில்
 (42 %) உற்பத்தி செய்யும் நாடு மேற்கு ஆப்பிரிக்காவின் "ஐவரி கோஸ்ட்" என்கிற நாடுதான். ஆனால் உலகின் மிக மிக ஏழ்மையான நாடுகளில் ஐவரி கோஸ்டும் ஒன்று என்பதுதான் முரண்.

சாக்லேட் தயாரிப்பின் கசப்பான மறுபக்கம் (Ivory Coast Film) 

சாக்லேட் நிறுவனங்களின் வருடாந்திர கண்காட்சி:

குழந்தைகள் கடத்தல், கட்டாயக் குழந்தைத்தொழிலாளர் முறை போன்றவை உண்மையானதுதானா எனக்கண்டறிய டென்மார்க்கைச் சேர்ந்த "மிக்கி மிஸ்திராதி" என்கிற பத்திரிக்கையாளர் முடிவெடுக்கிறார். அதனை ஒரு ஆவணப்படமாகவும் தயாரித்தார். உண்மை எப்போதும் அபாயகரமானது என்பதால், தன்னுடைய அடையாளங்களை மறைத்தும் சட்டைக்குள் ஓட்டை போட்டு கேமராவினை மறைத்தும் அவர் உருவாக்கிய படத்தின் பெயர்தான்"The Dark side of Chocolate".


ஒவ்வொரு ஆண்டும் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் ஜெர்மனியிலிருக்கும் கொலோன் என்கிற நகரில் சந்தித்துக்கொள்வார்கள். அச்சந்திப்பில், சாக்லேட் தொழிலை வளர்த்தெடுப்பது மற்றும் விற்பனையைப் பெருக்குவது குறித்து விவாதிப்பார்கள். மிக்கி தன்னுடைய பயணத்தினை இச்சாக்லேட் கண்காட்சியிலிருந்து துவங்குகிறார்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான சுவிசர்லாந்தைச்சேர்ந்த "பேரி கேலபாட்" என்கிற நிறுவனம்தான் பெரும்பாலான மற்ற சாக்லேட் நிறுவனங்களுக்கு கோகோ பௌடரை விற்று விநியோகம் செய்கிறது.

பேரி கேலபாட்டின் துணைத்தலைவர் பேட்ரிக் ஹாட்பென்னேவை கண்காட்சியில் சந்திக்கிறார் மிக்கி.

இயக்குனர் மிக்கி : "ஐவரி கோஸ்டில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்?"

 பேட்ரிக் ஹாட்பென்னே (பேரி கேலபாட்டின் துணைத்தலைவர்) : "எங்களுடைய நிறுவனத்தில், உலகம் முழுவதிலும் ஒட்டுமொத்தமாக 7400 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் தோராயமாக 1000 பேருக்குமேல் ஐவரி கோஸ்டில் மட்டும் பணிபுரிகிறார்கள்."

 இயக்குனர் மிக்கி : "குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் பணிபுரிவதாக வதந்திகள் இருக்கின்றனவே. அது குறித்து?"

 பேட்ரிக் ஹாட்பென்னே : "உண்மையாகவே இது குறித்து எங்களுக்குத் தெரியாது. எங்காவது ஒன்றிரண்டு அபூர்வமாக நடக்கலாம். அப்படியொன்று நடந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்..."                              

அக்கண்காட்சியில் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் குழந்தைத்தொழிலாளர்களைப் பயன்படுத்துவது குறித்து வாய்திறக்கவில்லை.

2001 லேயே குழந்தைத்தொழிலாளர்களை சாக்லேட் தயாரிப்புத் தொழிலின் எந்தவொரு வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது என்று சாக்லேட் தொழில்துறை நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றின. இவற்றையெல்லாம் உலகுக்கு அறிவித்தவர்களே, இதனைச் செய்வார்களா? என்ற கேள்வியுடன் இயக்குனர் மிக்கி ஆப்பிரிக்காவிற்கே சென்று ஆய்வினை நடத்த முடிவெடுக்கிறார்.    

 குழந்தைக்கடத்தலில் உலகின் முதன்மை நாடு - மாலி :

மாலி என்கிற மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஏராளமான குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்ட் நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு கோகோ தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவதாகச் செய்தி நிலவுகிறது. எனவே தன்னுடைய பயணத்தை உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியிலிருந்து துவங்குகிறார் இயக்குனர். 


ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு மேற்கே இருக்கிற நாடுதான் மாலி. மாலி மற்றும் பிற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திக்கொண்டு வரப்படும் குழந்தைகளை "சிகாசோ" என்கிற பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்குதான் கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து புறப்படுகிற பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு "செகுவா" என்கிற இடம் வரை செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மாலி-ஐவரி கோஸ்ட் நாடுகளுக்கிடையிலான எல்லையினை குறுக்குப்பாதைகளில் கடந்து குழந்தைகளை ஐவரி கோஸ்டிற்கு கொண்டு சேர்க்கிறார்கள் என்கிற உண்மையினை மாலி நாட்டிலிருக்கும் ஒரு சமூகநல ஊழியர் மூலம் அறிந்துகொள்கிறார் இயக்குனர் மிக்கி.
 இட்ரிகாசா கண்டே (சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர்) :"குழந்தைகளைக் கடத்துவதென்பது எப்போதுமே இருந்து வருகிறது. எல்லாப் பேருந்துகளிலும் குழந்தைகள் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஐவரி கோஸ்டிற்கு செல்லும் குழந்தைகளின் வயது பொதுவாக 12 இலிருந்து 14 வரை இருக்கும். இதிலே பெண்குழந்தைகளும் உண்டு."
அவரால் இயன்ற அளவிற்கு, பேருந்து நிலையத்திலிருந்து கடத்தப்படுகிற குழந்தைகளை மீட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் தான் மீட்கிற குழந்தைகளின் பெயர், முகவரி போன்றவற்றை ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதியும் வருகிறார். 2006 இல் மட்டும் அவர் மீட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 132 (35 பெண் குழந்தைகள் உட்பட). 2007 இல் அவ்வெண்ணிக்கை 140 (41 பெண் குழந்தைகள்). புர்க்கினா பாசோ, மாலி, நைஜர் போன்ற நாடுகளைச்சேர்ந்தவர்கள்தான் அக்குழந்தைகள்.
 ஒரு பேருந்து முதலாளி : "கிராமப்புறக் குழந்தைகள்தான் அதிகமாக கடத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்கள் ஒரே நேரத்தில் 10 முதல் 15 குழந்தைகளை பேருந்தில் கடத்துவார்கள். பேருந்தில் மாலி நாட்டின் எல்லை வரை குழந்தைகளைக் கொண்டுசெல்வார்கள். பின்னர் அங்கிருந்து குறுக்குப்பாதைகளில் மோட்டார் சைக்கிள்களில் நாட்டு எல்லையினைக்கடந்து ஐவரி கோஸ்ட் நாட்டிலிருக்கும் கொரோகோ என்கிற இடத்திற்குச்சென்று அங்கிருக்கும் கோகோ தோட்ட முதலாளிகளிடம் விற்றுவிடுவார்கள்."

பேருந்து முதலாளியிடம் பேசிவிட்டு வெளியே வருகிறபோது, அருகினில் நிற்கும் பேருந்தொன்றினில் ஒரு சிறுமி அங்குமிங்கும் முழித்துக்கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். இயக்குனர் அவளருகினில் சென்றதும், அச்சிறுமியைக் கடத்திவந்த கடத்தல்காரப்பெண் தப்பித்து ஓடிவிடுகிறாள். அச்சிறுமியை விசாரித்துப்பார்த்தால், அவள் கொண்டுவரப்பட்டிருக்கிற பேருந்து நிலையத்திலிருந்து 450 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் செகு என்கிற கிராமத்திலிருந்து வந்திருக்கிறாள் என்றும் தெரிகிறது.

அச்சிறுமியிடம், சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளரான இட்ரிகாசா கண்டே,
 "உன்னை நான் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறேன். மீண்டும் இதுபோல் வந்துவிடாதே... நீ அங்கே சென்று காசெல்லாம் எதுவும் சம்பாதிக்க முடியாது. அங்கே போனால் வீணாகத்தான் போவாய்"
என அச்சிறுமியை எச்சரித்துவிட்டு அவளது வீட்டிற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறார். வாழ்க்கை முழுவதும் இதே போன்ற நிலைமையினைத் தினந்தோறும் எதிகொள்ள வேண்டியிருக்கிறதே என்று புலம்பிக்கொண்டே அழுகிறார் இட்ரிகாசா கண்டே.

குழந்தைக்கடத்தல் நடைபெறுகிற பாதையில் செகுவாவை நோக்கி இயக்குனர் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார். வழியில் ஒரு கிராமத்தில் நின்று, அங்கிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
 பக்கரி (கிராமத்தலைவர்) : "500 வீடுகள் இருக்கிற எங்கள் கிராமத்திலிருந்து, இதுவரை 12 -15 வயதுள்ள 130 குழந்தைகள் காணவில்லை. கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுடைய கிராம சந்தைக்கு வருவார்கள். அங்கே அவர்கள் பார்க்கிற குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் (தெரிவிக்காமல்) கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள்."

மேலும் பயணித்து, செகுவாவை வந்தடைந்து அங்கிருக்கும் உணவகமொன்றின் உரிமையாளர் மூலமாக குழந்தைகளைக் கடத்த உதவுகிற ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது.
 கடத்தலில் ஈடுபடுபவர் "குழந்தைகளை எல்லைதாண்டி கடத்தும் வேலையினை ஒருவரே செய்வதில்லை. ஒருவர் மாலி நாட்டின் எல்லைவரை குழந்தையைக் கொண்டு செல்வார். இரண்டாமவர், யாருக்கும் தெரியாமல், நாட்டு எல்லையினைத்தாண்டிக் கொண்டுசெல்வார். மூன்றாமவர் ஐவரி கோஸ்ட் நாட்டினில் குழந்தையினைப் பெற்றுக்கொண்டு கோகோ தோட்ட முதலாளிகளிடம் ஒப்படைப்பார். ஆக ஒரு கடத்தலை தனிப்பட்ட ஒருவர் மட்டும் செய்வதில்லை. அதே போன்று எல்லையோரம் வாழ்கிற எல்லோரும் ஏதோவொரு வகையில் குழந்தைகளின் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அதனை யாரேனும் மறுத்தால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகளை எல்லை தாண்டி கொண்டு விடுவதற்கு, கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுக்கு பணம் தருகிறார்கள். நானே பல பேரை கொண்டு சென்றிருக்கிறேன்."
செகுவாவிலிருந்து ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைய, புறவழியொன்றின் வழியாகக் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறிந்துகொண்ட இயக்குனர் மிக்கியும் அதே புறவழி மண்சாலைவழியே சென்று பார்க்கிறார். 
 
சிகாசோவிலிருந்து வருகிற பேருந்துகளிலிருந்து குழந்தைகள் இறக்கப்படுவதும், உடனே அங்கே தயார் நிலையில் இருக்கும் நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் அக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறவழிச்சாலை வழியாக நேராக ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைவதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. 
 
இயக்குனரும் அதே வழியில் சற்று அதிக இடைவெளிவிட்டுப் பின்தொடர்கிறார். போகிற வழியில் சாலையோரத்தில் ஒரு பத்து வயதிற்குட்பட்ட சிறுவன் தனியாக அழுதுகொண்டிருக்கிறான். கடத்தல்காரர்கள் யாரையாவது பார்த்துப் பயந்து, அச்சிறுவனை நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். அச்சிறுவன் அவ்விடத்திற்கு எப்படி வந்தான் என்று சொல்லக்கூட முடியாதநிலையிலிருந்தான்.

குழந்தைத்தொழிலாளர்களே இல்லையாம் - முதலாளிகளும் ஆட்சியாளர்களும் 

இயக்குனரும் சில ஆப்பிரிக்க சமூக ஆர்வலர்களும் இணைந்து ஐவரி கோஸ்டின் பொருளாதாரத்தலைநகரான "அபிட்ஜானுக்கு"ச் செல்கிறார்கள். நெஸ்லே, கார்கில், ஏ.டி.எம்., பேரி கேலபாட், சாப் கோகோ போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அபிட்ஜானில் இருக்கின்றன. உலகின் 42 % கோகோ, ஐவரி கோஸ்டிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இந்நிறுவனங்கள்தான் ஐவரி கோஸ்டிலிருந்து ஒட்டுமொத்த கோகோ ஏற்றுமதியையும் செய்கின்றன.

கோகோ ஏற்றுமதி நிறுவனமான சாப் கோகோவின் (SAF Cocoa )
 முதலாளி அலி லகிசை சந்தித்து, குழந்தைகள் கடத்தல் குறித்தும், குழந்தைத்தொழிலாளர் குறித்தும் கேட்கிறார் இயக்குனர் மிக்கி.
 அலி லகிஸ் : "நான் ஒரு கோகோ தொழில் குடும்பத்தில்தான் பிறந்தேன். என்னுடைய வாழ்க்கையில் இதுவரையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோகோ தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்ததே இல்லை. கோகோ தோட்டங்களில் குழந்தைத்தொழிலாளர் முறையே இல்லை. ஐவரி கோஸ்டில் ஒரு குழந்தைத்தொழிலாளர்கூட கோகோ தோட்டங்களில் வேலை செய்யவில்லை என்பதனை ஒட்டு மொத்த உலகத்திற்கே சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். இது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. பல குழுக்கள் வந்து முறையாக விசாரித்துவிட்டு அறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றன. எந்தவொரு அறிக்கையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்படவே இல்லை. நாட்டின் எல்லைகளில் கூட இது நடக்கவில்லை."
 இயக்குனர் மிக்கி : "மாலியிலிருந்தும் புர்க்கினா பாசோவிலிருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்டின் கோகோ தோட்டங்களில் வேலை செய்யவைக்கப்படவே இல்லை என்கிறீர்களா?"
 அலி லகிஸ் : "இல்லை இல்லை இல்லவே இல்லை... எங்களது நிறுவனம்தான் ஐவரி கோஸ்டிலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். சும்மா எதையாவது கொளுத்திப்போட்டுவிட்டு போகாதீர்கள். ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். குழந்தைத் தொழிலாளர்களே இல்லையென்பதை நீங்களே சென்று பார்த்துவிட்டு வாருங்கள்" என்கிறார் உலகின் மிகப்பெரிய கோகோ ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் அலி லகிஸ். அவருடைய நிறுவனம்தான் அதிக அளவில் நெஸ்லே நிறுவனத்திற்கு கோகோ விற்பனை செய்கிறது.
இயக்குனர் மிக்கியின் ஆவணப்பட முயற்சி குறித்து கேள்விப்பட்ட ஐவரி கோஸ்ட் நாட்டின் தொழிலாளர் துறையின் தலைமைச்செயலர்  "டோஹே ஆடம் மாலிக்", மிக்கியை அழைத்து பேச விரும்புகிறார்.
 இயக்குனர் மிக்கி : "மாலி நாட்டின் செகுவா என்ற இடத்திலிருந்து குழந்தைகளை கடத்திக்கொண்டு கடத்தல்காரர்கள் புறவழிச்சாலை வழியாக ஐவரி கோஸ்டிற்கு வருகிறார்கள். இதனை நானே பார்த்தேன்"
 டோஹே ஆடம் மாலிக் : "வருடா வருடம் கோகோ விளைச்சலானது அக்டோபரில் துவங்கி மார்ச்சில் முடியும். நீங்கள் ஜூலையில் மக்கள் வருகையினைப் பார்த்தீர்களானால், அவர்கள் கோகோவிற்காக வரவில்லை. அந்த நேரத்தில் கோகோ எங்குமே இருக்காது. அதனால் கோகோ தோட்டங்களில் வேலையும் இருக்காது. உண்மை என்னவென்றால், அவர்கள் எல்லாம் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வருகிறார்கள். ஒரு பேருந்தில் 20 குழந்தைகள் இருந்தால் உடனே குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஐவரி கோஸ்டின் அழகைக் காண சுற்றுலா வருகிறார்கள்"
 இயக்குனர் மிக்கி : "ஆனால் நான் பார்த்தது ஏப்ரல் மாதத்தில்"
 டோஹே ஆடம் மாலிக் : "அதற்கு எங்களிடம் சட்டமெல்லாம் இருக்கிறது."
சொல்லிவைத்தாற்போல் முதலாளிகளும் ஆட்சியாளர்களும் ஒரே மாதிரிகுழந்தைக்கடத்தலும் குழந்தைத்தொழிலாளர் முறையும் இல்லவே இல்லை என்று அடித்துச்சொல்கின்றனர்.
ஆதாரங்கள்:

ஆதாரம் ஒன்று:

கோகோ ஏற்றுமதி நிறுவன முதலாளி அலி லகிஸ் மற்றும் ஐவரி கோஸ்டின் தொழிலாளர் துறை முதன்மைச்செயலர் ஆகியோர் சொல்வது உண்மைதானா என்பதனை அறிய, ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களின் உதவியினை நாடுகிறார் இயக்குனர். மேற்குலக நாட்டவரை பார்த்தால் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால், ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களிடம் மறைமுக கேமராக்களை கொடுத்து கோகோ தோட்டங்களை வீடியோ எடுக்க சொல்கிறார் இயக்குனர். அவர்கள் எடுத்து வந்த வீடியோவில் பதிவாகியிருப்பதைப் பார்த்தால், கோகோ தோட்டங்களில் முழுவதுமாக குழந்தைகள்தான் எல்லா வேலைகளையுமே செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது. 

ஆதாரம் இரண்டு:

வீடியோவை பார்த்ததும், இயக்குனரும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மீண்டுமொருமுறை கோகோ தோட்டங்களுக்கு செல்கிறார். அங்கே கைகளில் கத்தியும் உடலினில் வேர்வையுமாக கோகோ தோட்டங்களில் வேலை செய்கிற அச்சிறுவர்கள் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வந்தவர்களல்ல, தங்கள் மீதமுள்ள வாழ்க்கையையே கோகோ தோட்டங்களில் தொலைக்க வந்தவர்கள்.

ஒரு கோகோ தோட்டத்திலிருப்பவரைச் சந்தித்து (மறைமுகக் கேமராவை வைத்துக்கொண்டு), தங்களுடைய தோட்டத்திற்கும் குழந்தைத்தொழிலாளர்கள் வேண்டுமென்றும், எவ்வாறு பெறுவது என்றும், எவ்வளவு செலவாகுமென்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாகக் கேள்வி கேட்கப்படுகிறது.
 கோகோ தோட்ட முதலாளி : "எங்க பெரியண்ணன் இருக்கார். அவரிடம் எத்தனை குழந்தைகள் வேண்டுமென்று சொன்னால், ஏற்பாடு செய்வார். ஒரு குழந்தைக்கு 15,000 ரூபாய் ஆகும்"
15,000 ரூபாய் கொடுத்தால், ஆயுள் முழுவதும் உழைப்பதற்கு சம்பளமே இல்லாத குழந்தை என்கிற பொருள் கிடைக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆதாரம் மூன்று:

கோகோ தோட்டங்களிலிருந்து தப்பிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லையென்றாலும், மிக அபூர்வமாக ஒன்றிரண்டு குழந்தைகள் கோகோ தோட்டங்களிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். 

அவ்வாறு தப்பித்த இரு சிறுவர்கள்,
 யாயா கொனாட்டே : "கடத்தல்காரர்கள் எங்களை எப்படியோ ஏமாற்றித்தான் அழைத்துச்சென்றார்கள். அங்கே நிறைய சிறுவர்-சிறுமிகள் இருந்தனர். நாங்கள் எல்லோரும் தப்பிக்க முயற்சி செய்தோம். தோட்ட முதலாளிகள் எங்களைத் துரத்தினார்கள். இரவெல்லாம் இருளினில் ஒளிந்து மறைந்திருந்தோம். மறுநாள், எங்களை பார்த்த வெளியாள் ஒருவர்தான் உதவி செய்து எங்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்."
 சங்கா த்ரோரே : "கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது வேலை செய்ய மறுத்தாலோ, கடுமையாக அடிப்பார்கள்."


ஆதாரம் நான்கு:

சர்வதேசக் காவல்துறையினர், குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்ததாகவும் 50 குழந்தைகளை மீட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகிறது. இயக்குனர் மிக்கி சர்வதேசக் காவல்துறை உயரதிகாரியை சந்திக்கப்புறப்படுகிறார்.
 ஹென்றி ப்ளேமின் (சர்வதேச காவல்துறை தலைமை அதிகாரி) :
 "சாலைகள், சந்தைகள், கோகோ தோட்டங்கள் போன்ற இடங்களில் இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, அதன்பின் மேற்கொண்ட சோதனையில் 65 குழந்தைகள் வரை எங்களால் மீட்க முடிந்தது. எங்களது நடவடிக்கைகளை சற்று முன்கூடியே அவர்கள் அறிந்தமையால், பல குழந்தைகளை வீடுகளில் ஒளித்துக்கொண்டார்கள். மீட்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகள் அனைவரும், புர்க்கினா பாசோ, மாலி, டோகோ, நைஜர், நைஜீரியா, பெனின் போன்ற வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்."
 இயக்குனர் மிக்கி : "கோகோ தோட்டங்களில் குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டதும் அதிர்ச்சியடையும் அளவிற்கு புதிய செய்தியாக இருந்ததா உங்களுக்கு?"
 ஹென்றி ப்ளேமின் : "நிச்சயமாக இல்லை"
குழந்தைகள் கடத்தல், குழந்தைத் தொழிலாளர்முறை போன்றவை மிகச்சாதாரணமாக நடப்பது எல்லாத் தரப்பு மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் ஏனோ சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தெரியாமல் (தெரிந்தும் ஒப்புக்கொள்ளாமல்) இருப்பது ஆச்சர்யம்தான்.

முதலாளித்துவத்தின் அடிப்படையே மனிதநேயத்திற்கு எதிரானதுதான்:

எல்லா ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு சாப் கோகோவின் முதலாளி அலி லகிசை சந்திக்கிறார் இயக்குனர் மிக்கி.
 இயக்குனர் மிக்கி : "சென்ற முறை உங்களை சந்தித்தபோது, ஐவரி கோஸ்டில் குழந்தைத்தொழிலாளர்களே இல்லை என்றீர்கள். ஆனால் சர்வதேச காவல்துறைகூட பல குழந்தைத் தொழிலாளர்களை மீட்டிருக்கிறார்கள்."
 அலி லகிஸ் : "ஐவரி கோஸ்டிற்கே இது மிக வருத்தமான செய்திதான். செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் நானும் பார்த்தேன். இதெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கிறது. அரசாங்கமும் இதனை எதிர்த்து போராடிவருகிறது."
என்கிற மிகப் பொறுப்பான(?!?) பதிலை உதிர்க்கிறார் அலி லகிஸ்.

ஆதாரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஐ.நா. சபையின் ஒரு அங்கமான"சர்வதேச தொழிலாளர் ஆணையத்திற்கு" செல்கிறார் இயக்குனர் மிக்கி. உலகம் முழுவதிலும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பினையும் தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டியுங்கும் அமைப்பிது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இதே அமைப்புடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு குறித்த ஒப்பந்தமொன்றினை கையெழுத்திட்டது.

சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் இயக்குனர் பிரான்க் ஹேகமன், மிக்கி காண்பித்த வீடியோ ஆதாரங்களைப் பார்த்தபின்னர்,
 பிரான்க் ஹேகமன் : "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்காகக் கடந்த 13 வருடங்களாக உழைத்து வருகிறேன். ஆனால் இது போன்ற வீடியோ காட்சிகளை பார்க்கிறபோதெல்லாம், அதிர்ச்சியாகவே இருக்கிறது. இது போன்ற ஆதாரங்களெல்லாம் நம்முடைய இயலாமையினைத்தான் காட்டுகிறது."
 இயக்குனர் மிக்கி : "சாக்லேட் நிறுவனங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது?"
 பிரான்க் ஹேகமன் : "பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. சில வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையான மாற்றம் எதுவும் பெரிய அளவில் நிகழவில்லை. ஐவரி கோஸ்டிலும் கானாவிலும் கோகோ தோட்டங்களில் இன்றையநிலவரப்படி எத்தனை குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று கேட்டால், என்னால் சொல்லமுடியாத நிலைதான்"
சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தன்னுடைய ஆவணப்படத்தை திரையிட்டுக்காட்டவும், அவர்களின் உண்மையான அக்கறை குறித்து சில கேள்விகளைக் கேட்கவும் அனுமதி கேட்டுப்பார்த்தார் இயக்குனர் மிக்கி. ஆனால் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் அவருடைய படத்தைப் பார்க்கவோ, அவரிடம் பேசவோ மறுத்தவிட்டன. ஆனால் திடீரென ஒரு நாள், சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு அறிக்கையினை மட்டும் வெளியிட்டன. அதில், 
 "பெரும்பாலான கோகோ தோட்டங்கள் எங்களுக்குச் சொந்தமானதல்ல. அதனால் அங்கிருக்கும் எந்தவொரு மோசமான நிலைமைக்கும் நாங்கள் பொறுப்பாகமுடியாது"
என்றொரு வரி எழுதப்பட்டிருந்தது.
 
ஆதாரங்களை காண்பித்தவுடன், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தட்டிக்கழிக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு அக்குழந்தைகள் மீது அக்கறை இருக்கிறதா என்கிற சந்தேகம்தான் நம் அனைவருக்கும் எழும்.

ஒவ்வொரு சாக்லேட் நிறுவனங்களின் வாசலிலும் பெரிய திரையொன்றினை அமைத்து, தான் தயாரித்த ஆவணப்படத்தை திரையிடத்திட்டமிடுகிறார் இயக்குனர் மிக்கி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐவரி கோஸ்டில் அலுவலகம் அமைத்து சுரண்டலைச் செய்துவரும் நெஸ்லேயின் தலைமையகம் முன்பு திரையமைத்து தன்னுடைய ஆவணப்படத் திரையிடலைத் துவங்கினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒட்டுமொத்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து 40 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவிகளை செய்திருக்கின்றன. 
 
ஆனால், நெஸ்லே என்கிற ஒரே ஒரு நிறுவனம் கடந்த ஓராண்டில்மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்திருக்கிறது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் ஐவரி கோஸ்டில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. 
 
அவர்களுடைய மேற்பாவையில்தான் அனைத்து கொத்தடிமைத்தனமும், ஒடுக்குமுறையும், சுரண்டலும் நடைபெறுகின்றன. 
 இலாபமொன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவர்கள், ஐ.நா.வில் சட்டம் போடுவதும், குழந்தைதொழிலாளர் முறையினை ஒழிக்க முயற்சி எடுத்து வருகிறோம் என்று வருடாவருடம் அறிக்கைகள் விடுவதும், உதவித்தொகை என்கிற பெயரில் மிகச்சிறிய தொகையினை வீசியெறிவதும், யாரை ஏமாற்றுவதற்காக?
ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்காதீர்கள், சிரியாவிடம் சிரித்துப் பேசாதீர்கள், க்யூபாவை கண்டுகொள்ளாதீர்கள் என்று உலகிற்கே ஒரே நாளில் உத்தரவு போட்டு நிறைவேற்றுகிற ஐ.நா., அமெரிக்கா மற்றும் இன்ன பிற மேற்குலக நாடுகள் எல்லாம், இத்தனை ஆண்டுகளாகக் கொடூரமாக சுரண்டப்படும் ஆப்பிரிக்ககி குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்காததற்கான காரணம் என்ன?  

 ஒருபுறம் மனிதநேயத்தை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர்கள்போல பேசிக்கொண்டே, மறுபுறம் மக்களைக் கொன்றாவது இலாபம் பார்க்கத்துடிக்கிற அமைப்பின் பெயர்தான் முதலாளித்துவம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.