Wednesday, 28 December 2011

SEVEN WAYS TO BE MORE AUTHENTIC AT WORK....

                         SEVEN WAYS TO BE MORE AUTHENTIC AT  WORK



The way I see it, there are two reasons we women travel through life losing sight of ourselves. Our diffuse awareness and our other-focused prioritizing. We aren’t likely to change, but when we get conscious and intentional, we make huge shifts in the balance of our priorities.
Generalizing wildly, we women have one beautiful pair of traits that opens the door for these huge shifts: we dream and we implement. We see the big picture and then we go about pinching the devil out of the details.
Before I give you the 7 Actions that will aid you in collaborating and delegating those details, I want to tell you a little story about Jane Doe the CEO (you, that is).
You were born with an inny.
Your parents swaddled and adored you and gave you nicknames like princess and honey love pot and sweetness.
They gave you Barbie dolls and you liked them. Mostly. Your mom told you that the world was your playground and that you could be and do anything you imagined. You built sand castles and mud pies with daisy frosting, and you punched Joey for cutting in front of you in the lunch line on pizza day.
You got straight As in math even thought you couldn’t imagine how it was relevant to, well, anything.
And then you were eleven.
E-leven. The boys were stronger, but you could still hold your own on the flag football team because you were a foot taller and ran like a cheetah. Boys were noisy and loud and gross, demanding the teacher’s attention and wiping their noses on the inside of their elbows, and life was way better when you circled up with the girls in solidarity and sniped out stiletto barbs that could cleave a life in two.
And then you were 15 and nothing made sense.
A yearning something yanked you into imperfect friendships and furtive dalliances. You excelled and failed in equal measure, wished people expected more of you and loathed yourself when they asked for more than you could give.
At 17 the yearning something transformed into direction, flanked equally by doubt and desire. You found your activism and your g-spot almost simultaneously, and for a moment, one excruciating moment, you considered raising chickens, throwing pottery, writing like Jane Austen and birthing babies like you might flip pancakes.
Somewhere in your late 20s, after the B.A. and the Master’s and the year in Costa Rica counting turtles and the job coup of a lifetime, you ran into yourself at an intersection. You had your feet on the ladder, a ring of promise on your finger and endless eggs cueing up to nest in your belly. The light turned green and you gunned it.
You knew you could do it all.
You’d been doing it all since you learned to walk. Promotion lead to partnership, and partnership lead to authority and in between the meetings and the diapers and the arguments and the invitations and the accolades, you realized your weekends with loved ones were spent shopping for cake mixes and power tools and suddenly you’re 43 and just like 15, not one thing makes sense, and your Jane Austen self sits on the curb where you left her, waving at you.
“Who am I?” You Ask
You’re Jane Doe, the CEO of everything, and nothing’s wrong. You’re in the right place at the right time for the right reason. And babe, it’s time to get your life back.
It’s no wonder we women find ourselves here. Even if we were blessed with parents and mentors who helped us discover and navigate the sweet waters of purpose-filled living, we have been aided and abetted by our culture. A culture that doesn’t much understand pause and reflection and stepping away from the madding crowd. A culture that still struggles to come to grips with equality and feminine leadership; a culture that is still fearful of the power of women. And sometimes we’re the last to know.
Navigating the Pivot Points
No matter if you’re household executives or house keepers, freelancers or entrepreneurs, cubicle expats or c-suite brainiacs, or a micro business owner raising goats and selling vegetables in the market in Kenya, we all reach at least one pivot point in our lives in which we question who we are and what our lives are missing.
How well we navigate this passage depends on our willingness to give ourselves what we need. To pause and reinvent. To open our mouths and ask for what we want. To recognize that everything is a negotiation and we’ve been doing it since we were born.
And We’re Good at It
But because we’ve been socialized to be nice and accommodating and selfless and giving; and because we’ve been trained to modulate our voices (read suppress) lest we be found bitchy, strident, bossy or mannish; because men approach negotiation factually and women approach it emotionally, we do our best to avoid it all together. We resist learning and training in the subject of negotiation because we compare ourselves to the way men do things and tell ourselves we can’t compete.
Getting the Keys to the Castle
What this all means is that we have to start where we are and become more like ourselves, not less. We have to know what we value, and in turn we must learn to bend toward our intrinsic values in all relationships—work, family, community, neighbors, etc. As we begin to consciously live from our value(s) we naturally begin to make choices that express our value in the world, and in the work we do everyday. We’ve built the scaffolding for asking for what we want, and we’re beginning to notice negotiation opportunities everywhere.
It’s here, at this point, we find the keys to the castle and begin the process of transformation. It’s here that we finally see that negotiation is just a conversation. A conversation leading to agreement. A conversation leading to a different world. And it all started by talking to and negotiating with yourself.
So Jane Doe, as you unravel the who am I now question, it might be a good idea to let yourself off the hook for landing here, right now, with a big question mark on your forehead. Give yourself a break for having a philosophical moment, a pragmatic pause. Forgive yourself for dithering in quicksand. You didn’t get here because of some fundamental flaw in your nature. You got here because you’re awake, and listening, and ready to shift the balance in your life. Your whole life.
Seven Actions for Becoming More Like Yourself in 2012
  1. Create 5 Daily Practices. One for self nourishment; one business or career-enhancing strategy; one thing you want to learn, one behavior you want to replace with another, better one; and one core value you’ll be mindful of daily to underpin your agreements in 2012.
  2. Say no to most everything that doesn’t connect to #1.
  3. Ask for help. As soon as you hit a roadblock, or ask yourself the question that begins with, “How do I…” ask for help. Get direction. Hire a coach.
  4. Learn the grammar of negotiation so you can understand and strategically repeat what you’re already good at: having conversations that lead to agreement.You know where to go for that.
  5. Start a mastermind group for the purpose of putting #1 in action. (Here’s a great guide to getting started.)
  6. Implement daily productivity habits to keep your practices front and center. You need to keep your busyness temperature low, and your delegating and collaborating temperature high. If you need a resource for that, my absolute favorite productivity Diva is Sara Caputo of Radiant Organizing and she has a fabulous ebook worth every penny.
  7. Choose the life you have. The only way to keep your agreements with yourself and make major shifts is to choose your imperfections and flawsand choose to regard them as highly as you do your values and strengths. You are a complete package, as is, right now.
Be more like yourself in 2012, and you’ll like yourself more.

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு...

                 பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு



நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.
முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.
1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
6. Windows 7 யில்  பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்.

ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்

                  ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்...


ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான். என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது. முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது. இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.விடியோ வடிவிலான குறும்பாடங்கள். கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.

குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?
மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு ,இலக்கண பயன்பாடு,கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும். மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது.ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம். கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம். உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.
பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம். பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.
கூரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின்றன்.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.இலக்கண பிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.
இதைவிட இனிய வழி ஆங்கிலம் கறக இருக முடியுமா என்ன
இந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.
இணையதள முகவரி;
    http://classbites.com/

சிறுநீரக கோளாறு போக்கும் எருக்கன் பூக்கள்!

சிறுநீரக கோளாறு போக்கும் எருக்கன் பூக்கள்!



தேவ மூலிகை அல்லது விருட்சம் என்று கூறப்படும் வெள்ளெருக்கு அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குப்பை மேடுகளிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.
ஆஸ்துமா குணமடையும்
வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.
10 கிராம் இஞ்சி,3வெள்ளெருக்கன் பூ,6 மிளகு இவற்றை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் இருவேளை பருகி வர இரைப்பு குணமாகிவிடும்.
வாதவலி வீக்கம்
எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.
பாம்பு கடி விஷமருந்து
நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.
(நன்றி வீரமுனை இணையம்)

Monday, 26 December 2011

ஏஜண்டுகளை நம்பி மோசம் போகும் இளைஞர்கள்.....

                 ஏஜண்டுகளை நம்பி மோசம் போகும் இளைஞர்கள்  

அதிக சம்பளம், இலவச தங்குமிடம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் என்பன போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் மோசம் போய், அந்தந்த நாடுகளின் சிறைகளில் அவதிப்பட்டு திரும்புகின்றனர். முறையான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு சென்றால், கை நிறைய சம்பளத்துடன் பாதுகாப்பும் கிடைக்கும்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. விவசாயம் இல்லாததால், பலர் நகரங்களை நோக்கி வேலை தேடி படையெடுக்கின்றனர். சிலர், “வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இவர்களை போன்றோர்களை தேடிக் கொண்டிருக்கும் மோசடி ஏஜன்டுகள்,உள்ளூர் பிரமுகர்கள், வெளிநாட்டில் வேலை தயாராக உள்ளது. சம்பளம் பல ஆயிரம்; தங்குமிடம் இலவசம். ராஜ வாழ்க்கை வாழலாம்’ என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதில் மயங்குவோரிடம், சில லட்சங்களை பெற்றுக் கொண்டு, பாஸ்போர்ட், விசா,விமான டிக்கெட் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.பெரும்பாலும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு, “டூரிஸ்ட் விசா’ எடுக்கப்படுகிறது. இது, அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லும். பின், நாடு திரும்பி விட வேண்டும். இந்நிலையில், “டூரிஸ்ட் விசா’ மூலம் வெளிநாட்டிற்குச் செல்லும் அப்பாவிகள், ஆறு மாதம் முடிந்தவுடன் “ஓவர் ஸ்டே’என்ற வகையில் அந்நாட்டு போலீசாரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.பலரின் பாஸ்போர்ட்டுகளை வேலை கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பிடுங்கி வைத்துக் கொள்வதால், நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். சொன்னபடி சம்பளமும் கிடைக்காமல்,நாடு திரும்பவும் முடியாமல், சிறையில் அடைபட்டு சித்திரவதைக்கு உள்ளாகும் இளைஞர்கள், பின், இந்திய அரசின் முயற்சியின் பேரில் நாடு திரும்பும் அவலமான சூழ்நிலை நிலவுகிறது.வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஐ.டி., இன்ஜினியர்கள் ஆனாலும் சரி, கட்டட வேலைக்கு செல்பவர்களானாலும் சரி, இந்த விதிமுறைகளை கடைபிடித்தால் அவர்களுக்கு வேலை, சம்பளம், மருத்துவக் கவனிப்பு, பாதுகாப்பு ஆகியவை உத்தரவாதமாக இருக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து குடியுரிமை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “முதலில் எம்ப்ளாய்மென்ட் விசா மூலம் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் சுற்றுலா விசா (டூரிஸ்ட் விசா) மூலம் வேலைக்கு செல்லக்கூடாது. 10ம் வகுப்பிற்கு கீழே படித்தவர்கள் இ.சி.ஆர்., (இமிகிரேசன் கிளியரன்ஸ் ரிக்கொயர்டு) சான்றிதழ் பெற வேண்டும். இதை, புரெக்டக்டர் ஆப் இமிகிரன்ட் என்ற அதிகாரியிடம் பெறலாம்.அடுத்ததாக, வேலை வாய்ப்பு தரும் நிறுவனம் தனக்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுகின்றனர்; அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு; சலுகைகள் என்னென்ன ஆகியவை குறித்த தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரத்திற்கு கொடுத்து, அங்கு அட்டஸ்டட் பெற வேண்டும். அதோடு. தங்கள் சார்பாக எந்த நிறுவனம் இந்தியாவில் ஆட்களை தேர்வு செய்து அனுப்பப்போகிறது என்ற தகவலும் கொடுக்கப்படவேண்டும். (இந்தியாவில் ஆட்களை எடுக்கும் நிறுவனம், மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறையிடம் முறையான உரிமம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்)மூன்றாவதாக, குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனமும், வேலைக்குச் செல்லும்தொழிலாளியும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை (அக்ரிமென்ட்) செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்த நகல், இந்திய தூதரகத்தில் அட்டஸ்டட் செய்யப்பட வேண்டும். குறைந்தது, இந்த மூன்று விதிமுறைகளை கடைபிடித்தால் கூட போதும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், வேலைக்கு சேர்ந்த பின் அவதிப்பட வேண்டியதிருக்காது’ என்றார்.

வெளிநாட்டு வேலைக்கு போக விரும்பும் இளைஞர்களுக்கு உதவுவதற்கு, சென்னையில் தமிழக அரசின் சார்பில், “ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இதுவரை பல ஆயிரக்கணக்கானவர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியுள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், கனடா, அயர்லாந்து, சவுதி அரேபியா, குவைத், சூடான், வங்கதேசம், பிரான்ஸ், ஓமன்,பக்ரைன், லிபியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்நிறுவனத்தை நேரடியாக அணுகி, தங்களுக்கு தேவையான ஆட்கள் குறித்து தகவல்களைத் தருகின்றன.ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் செல்வோருக்கு 100 சதவீதம் பாதுகாப்பு உண்டு.
இது குறித்து இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் முறைப்படி ஆட்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறோம். வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புவோர், முதலில் எங்கள் நிறுவனத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்கள் தேவை என்று எங்களிடம் கேட்கும். அப்போது, அதற்கு தகுதியுடையவர்களை அங்கு அனுப்பி வைக்கிறோம். மேலும், வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து, அதன் மூலமும் ஆட்களை எடுத்தும் அனுப்புகிறோம். எங்கள் நிறுவனத்தின் மூலம் செல்வோர், “எம்ப்ளாய்மென்ட் விசா’ உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற உதவுகிறோம். தனியார் நிறுவனங்கள் இந்த சேவைக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறுகின்றன. நாங்கள், 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூல் செய்கிறோம். எங்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்வோர்க்கு பாதுகாப்பு 100 சதவீதம் உத்தரவாதம்’ என்றார்.

தொடர்பு கொள்ளலாமே!

சம்பளம், பாதுகாப்பு உத்தரவாதத்துடன் வெளிநாடு செல்ல விரும்புவோர், தமிழக அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தை அணுகலாம். அனைத்து பணிகளுக்கும் இந்நிறுவனம் ஆட்களை அனுப்புகிறது.இந்நிறுவனம் தற்போது சென்னை, அடையார், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, வீட்டு வசதி வாரிய வளாக முதல் தளத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை 044 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, 25 December 2011

தொழுகையை விட்டவனின் நிலை ???

Post image for முதன்மையான கடமை தொழுகை    இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது. தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி)   

      
நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: புரைதா (ரழி)
நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9


(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக. இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78


பாங்கோசை கேட்டு பள்ளிக்கு வராதவனின் நிலை: 
என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராதவர்களைத் தீயிட்டுப் பொசுக்க நான் எண்ணுகிறேன் என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி

நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது சாட்சி கூறுவதாக இருக்கிறது. அல்குர்ஆன்17:78


இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி(ஸல்) அவர்கள் நவின்றனர்.
அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழி)
நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம் உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது.

தொகுப்பு :அ .தையுப அஜ்மல். 

இஸ்லாம் காதல் திருமணத்தை அனுமதிக்கின்றதா? ஒரு இஸ்லாமிய பார்வை..

ஆண்களும் பெண்களும் இரண்டற கலந்து - அதிலும் பெண்கள் கவர்ச்சி மிகு ஆடைகளை உடுத்திக் கொண்டு உலவும் - சமூகங்களில் வாழக் கூடிய முஸ்லிம்கள் இறை நம்பிக்கையும் கட்டுப்பாடும் நிறைந்தவர்களாக வாழ வேண்டும். இதில் இடற்பாடோ குறைப்பாடோ ஏற்படும் போது 'இத்தகைய' காதலும்? வரும். காதலைக் கடந்த நிலைகளும் வரும்.

கால மாற்றங்களால் காதலும் மாறிப்போய் விட்டதை நாம் சொல்லி்த் தெரிய வேண்டியதில்லை. கணடதும் காதல் என்பதும், காதலின் அர்த்தம் கலவிக்கு இடம் தேடுவதுதான் என்பதும் இன்றைய பெரும்பாலான காதல்களின் பொதுவிதியாகி போய் விட்டது.

உலகெங்கும் அங்கீகரிக்க்ப்பட்டு விட்ட ஒரு திறந்த நிலை விபச்சார நாளுக்கு 'காதலர்தினம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த நாளுக்காக திரையரங்குகளும், ஹோட்டல் ரூம்களும், பார்க், கடற்கரையின் ஒதுங்குப்புறங்களும், பிறரின் தொந்தரவு இல்லாத ஒதுங்குப்புறங்களும் காதலரர்களால் 'புக்' பதிவு செய்யப்படுகின்றன.

டிஸ்கோதேக்கள், பார்கள், கிளப்கள் அன்றைய தினம் நிறைந்து வழியும். விடிய விடிய குடி கூத்து கும்மாளம் என்று பொழுது நகரும். அன்றய தினம் இங்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தால் வந்துள்ள அவ்வளவு பேருமே 'காதலர்களாக?ஸ இருப்பார்கள்.



அழகுப் பெண்ணின் தாயார் என்றால் அத்தையாக்கிக் கொள்ளும் காதலையும், பாவாடை தாவணி கிடைக்கலைன்னா சுடிதார் பொண்ணை லவ் பண்ண தூண்டும் காதலையும் திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கின்றன. திரைப்படங்கள் சொல்லும் காதல்கள்தான் உண்மையான காதல் இலக்கணம் என்றே இன்றையக் காதலர்கள் நம்புகிறார்கள். அதுவே அவர்களின் காதல் உணர்வாக இருக்கின்றது. அதன் விளைவுதான் யார் யாரை வேண்டுமானாலும் 'லவ்' பண்ணலாம் என்ற நிலைக்கு இளைஞர்களையும், இளைஞிகளையும் தள்ளுகின்றது.


இஸ்லாம் காதலுக்கு எதிரானதல்ல. காதல் என்றால் என்னவென்று தீர்மானிப்பதில் இஸ்லாம் வேறுபடுகின்றது.



திருமண வாழ்க்கை என்பது சந்தோஷ்ப்பதற்குதான். சந்தோஷம் வேண்டுமானால் மனதிற்கு பிடித்த துணை வேண்டும். அதனால் தான் 'மன விருப்பமான' திருமணங்களையே இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. فَانكِحُواْ مَا طَابَ لَكُم (உங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்துக் கொள்ளுங்கள், அல்குர்ஆன் 4:3) என்ற உரிமையையே இஸ்லாம் வழங்குகின்றது.

பிடித்தமானவர்கள் என்று இறைவன் சொல்லி இருந்தாலும், பிடித்தமானவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறான். திருமண வாழ்க்கை என்பது சந்தை வாழ்க்கையாக, கூடி களையக் கூடிய வாழ்க்கையாக ஆகிவிடக் கூடாது. அது பாரம்பரியத்தையும் பிறருக்கு நல்லப் பாடத்தையும் உணர்த்த வேண்டும். அதற்கு தேவையான, பிடித்தமான பெண் வேண்டுமானால் இறைவன் சொல்லும் இலக்கணத்துக்குரியவர்களே பொருத்தமாக அமைவார்கள்.
وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ (இறைவனுக்கு இணைத்துணை, மனைவி மக்கள் என்று நம்பி) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் ஓரிறை நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். (அல் குர்ஆன் 2:221)

இந்த வசனத்திலிருந்து பிற மதப்பெண்களால் நாம் கவரப்படுவோம் என்பது விளங்குகின்றது. (சகோதரர் ..... போன்றவர்களின் காதல் சொல்லும் பாடம்). ஆனாலும் ஒரு முஃமின் அந்தக் கவர்ச்சியில் மயங்கி தன்னை அந்த நிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது.

அவர்கள் ஓரிறைக் கொள்கையால் கவரப்பட்டு மனமாற்றம் அடைந்தால் அப்போதுதான் அவர்களுடனான திருமண உடன்படிக்கையை இஸ்லாம் அங்கீகரிக்கும். அதுவரை அவர்கள் எத்துனைப் பேரழகியாக, படித்தவர்களாக, பணக்கார்களாக, பண்புள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்களுடனான வாழ்க்கைத் துணைக்கு பொருந்தாதவர்கள் என்பதை முஸ்லிம் இளைஞர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

விழியில்விழுந்து இதயம் நுழையும் காதல்  உயிரில் கலந்த உறவாக ஆக வேண்டுமானால் அது உயர்வான இறைவனின் வழிகாட்டுதலில் வந்தால்தான் நடக்கும்!!


 சில இஸ்லாமிய  சகோதரர்ளுக்கு தனிப்பட்ட ஆலோசனை. 
நீங்கள் விரும்பும் பெண்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், ஓரிறைக் கொள்கைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். அந்தக் கடமை நமக்கு உண்டு. இறைவன் நாடி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாம் சொல்லும் வரைமுறையில் நின்று பழகி திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.
காதல் - ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை நாம் காதல் என்கிறோம். அது உறவுமுறைக்கேற்ப பல பெயர்களில் காதல் அன்பு பாசம் என்று பலவாறு தமிழிலே அழைக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலத்திலே அனைத்திற்குமே LOVE என்றே குறிப்பிடுகின்றோம்.காதல் என்றவுடன் நமக்கெல்லாம் ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, ஷாஜகான் மும்தாஜ்தான் நினைவுக்கு வருவார்க்ள்.

காதலர்களைப் பற்றி சொல்லும்போது கண்ணதாசன் ஒரு கவிதயிலே மிக அழகாகச் சொல்லுவான் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும். நான் கானும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காணும் பொருள்யாவும் நானாக வேண்டும்". ஆக காதல் என்பது ஒருவர் மற்றவருக்காக வாழ்வது காதலன் காதலிக்காக, கணவன் மனைவிக்காக ஆனால் இவ்வுலகைப் பொறுத்தவரையில் தாயின் அன்பே அனைத்தையும்விட சிறந்ததென்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கவே முடியாது.
ஆனால் இந்த காதல் அன்பு பாசம் எல்லாம் உண்மையா நிரந்தரமானதா? நிச்சயமாக இல்லை. தன்னைப்பற்றி யோசிக்காத எந்த காதலனும் காதலிக்கு சலித்துத்தான்போவான். பல வருடமாக சம்பாதிக்காத எந்த ஆசைக் கணவனும் மனைவிக்கு வெறுப்பாகித்தான்போவான். தன் பேச்சை கேட்காத எந்தப்பிள்ளையும் தாய்க்கு தூரமாகித்தான் போவான்.

மறைந்துபோன கணவனை நினைத்து நினைத்து உருகும் மனைவியிடம் அல்லது தனது பிள்ளை இறந்துபோன துக்கத்தில் இருக்கும் தாயிடம் மண்ணறையிலிருந்து உன் கணவனை உன் பிள்ளையை எழுந்து வர சொல்கிறேன் என்றால் ஒப்புக்கொள்வார்களா?நிச்சயமாக பயப்படவே செய்வார்கள்.இப்பொழுது சொல்லுங்கள் இது உண்மையான பாசமா அன்பா?

அல்லாஹ் தன் இறுதி நபியான முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது அளவில்லாத காதல் கொண்டுள்ளான். அதன் காரணமகவே அவன் நபி அவர்களுக்கு முஹம்மது (புகழுக்குறியவர்) என்று பெயர் சூட்டி அழகு பார்த்தான். தனது திருமறையிலே எந்தயிடத்திலும் முஹம்மது என்று கூப்பிடாமல் நபியே ஹபீபே என்று தனது நபியை அழைக்கின்றான். இது பலருக்கு குழப்பமாகவும் இருக்கலாம். இறைவன் எத்தனையோ ஜீவராசிகளை படைத்தான் படைத்துக்கொண்டே இருக்கின்றான். அப்படி இருக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அப்படி என்ன காதல் என்று.


ஒரு தாய் தன் பிள்ளையை பெற்றெடுக்கிறாள் அதிலும் இது 5வது குழந்தை. தான் பெற்றெடுத்த குழந்தை அதுவும் 5வது குழந்தை. ஆனால் அந்த தாய்க்கு கடைசி குழந்தையின் மேல் ஒரு தனி பிரியம் பாசம். அது போல அல்லாஹ் எத்தனையோ நபிமார்களையும் மனிதர்களையும் படைத்திருந்தாலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் படைத்து அவர்கள் மீது தனி அன்பு செலுத்துகின்றான் அருள் புரிகின்றான். இதனை பின்வரும் இறைவசனம் நமக்கு தெளிவாக்குகின்றது
.

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِي


இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.33:56.



மேலும் பல வரலாற்று சம்பவங்களின் மூலம் அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது வைத்திருக்கின்ற அன்பை நாம் புரிந்து கொள்ளலாம். ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 200 ஆண்டுகள் உருண்டோடிய பிறகு யாஅல்லாஹ் முஹம்மதின் பொருட்டால் என் பாவங்களை மன்னித்த்ருள்வாயாக என்று கேட்க இறைவன் ஆதம் (அலை) அவர்களை மன்னித்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


மிஹ்ராஜ் பயணத்திலே நமக்கெல்லாம் 50 வக்து தொழுகையை கடமையாக்கியபொழுது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வேண்டுகோளுக்கினங்க இறைவன் அதை 5 வக்து தொழுகையாக்கியதை யாரேனும் மறுக்க முடியுமா.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை தாயிப் நகர மக்கள் கல்லால் அடித்தபொழுது மலக்குகள் இறைவா நீ ஆணையிடு உன் ஹபீபை துன்புறுத்தியவர்களை அழித்துவிடுகிறோம் என்று சொல்லியபொழுது. முஹம்மது நபி (ஸல்) அவர்களிடமே கேளுங்கள் என்று இறைவன் சொல்ல நபி அவர்கள் அதை மறுத்துவிட்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

சற்று சிந்தித்துப்பாருங்கள் உங்கள் தாயை ஒருவன் திட்டிவிடுகிறான் நீங்கள் உங்கள் தாயிடம் கேட்டுவிட்டா அவனை அடிப்பீர்கள். அப்படி செய்வது முறையா? ஆனால் நாம் நமது தாயின்மேல் வைத்திருக்கும் பாசத்தைவிட பலமடங்கு அதிக பாசம் கொண்டுள்ள இறைவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்கச்சொல்கின்றான். ஏனென்றால் அல்லாஹ்விற்கு தெரியும் அந்த தாயிப் நகர மக்களை அவன் அழித்துவிட்டால் தன்னுடைய ஹபீப் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதிகம் அதிகம் துயரப்படுவார்கள் என்று.

இந்த உலகையெல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அருள் புரிய நமது நாயகம் (ஸல்) அவர்களோ உம்மத்துக்களாகிய நம்மீது அன்பு செலுத்தக்கூடியவர்களாய் இருக்கிறார்கள்.

ஒருமுறை ஸஹாபி ஒருவர் மரண தருவாயிலே இருக்கிறார். தனது வாயால் திருக்கலிமா மொழியமுடியவில்லை. நம்மைப்போன்ற சாதாரண மனிதரல்ல அவர். என் தோழர்களில் எவரேனும் ஒருவரை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேர்வழி பெற்றுவிடுவீர்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களால் சொல்லப்பட்ட ஸஹாபிக்கு ம்ரண தருவாயிலே கலிமா வரவில்லை. நபிகள் நாயகம் விசாரிக்கிறார்கள் அந்த ஸஹாபியின் தாயார் அவர் மீது கோபமாயிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அந்த தாயிடத்திலே மன்னிக்க வேண்டுகிறார்கள் ஆனால் அவர்களோ மறுத்துவிடுகிறார்கள்.


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிறு நாடகம் நடத்துகிறார்கள் எப்படியும் நரக நெருப்பிலே எரியப்போகிற உடம்புதான் இது. மரக்கட்டைகளைக் கொண்டு வாருங்கள் இப்பொழுதே எரித்துவிடலாம் என்று சொல்ல அந்த தாய் வேண்டாமென்று பதறி தனது மகனை மன்னிக்க அந்த ஸஹாபி கலிமா சொல்லியவாறு மரணமடைகிறார்கள்.சற்று சிந்தித்துப்பாருங்கள் பெற்ற தாய்க்கு தன் மகன் நரக நெருப்பிலே எரியப்படுவதிலே வருத்தமில்லை ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அன்பு ஸஹாபியை நரகத்தைவிட்டும் காப்பாற்றுகிறது.

இதுபோலத்தான் நாளை மறுமையிலே நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் மறந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்காக நாளை மன்றாடி நம்மை நரகத்தைவிட்டு காப்பாற்றுவார்களே. யாஅல்லாஹ் என்னுடைய உம்மத்திலே கடைசி நபர் நரகத்தைவிட்டு வெளியேறாதவரை நான் சுவர்க்கம் செல்ல மாட்டேன் என்று சொல்லி மன்றாடுவார்களே அந்த அன்பை நாம் என்றாவது நினைத்துப்பார்திருக்கிறோமா?

மூஸா (அலை) அவர்களின் உயிர் வாங்கப்படுகிறது. மூஸா (அலை) பின்பு இறைவனிடத்திலே முறையிடுகிறார்கள் யாஅல்லாஹ் உனது மலக்கு உயிர் வாங்கும்போது என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கிவிட்டார் என்று. ஒரு சிட்டுக்குருவி வெந்நீரிலே விழுந்து அதனால் வெந்நீரைவிட்டு வெளியே வரவும் முடியவில்லை வெந்நீரிலே உயிர் பிரியவும் மறுக்கிறது அப்படி ஒரு துன்பத்தை மரண தருவாயிலே அனுபவித்ததாக சொல்கிறார்கள்.

அதே மரண தருவாயிலே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதுபோல துன்பத்தை அனுபவிக்க இறைவனிடத்திலே இறைவா மரணம் இவ்வளவு துன்பத்தை தருமா. எனது உம்மத்திற்கு இந்த வேதனையைத் தந்துவிடாதே அவர்கள் அத்தனைபேரின் வேதனையையும் எனக்கு தந்துவிடு அவர்களுக்கு தந்துவிடாதே என்று இறைவனிடத்திலே கேட்டார்களே அந்த அன்பை என்னவென்று சொல்வது.

இறைவா உனது ஹபீப் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைக்கும் பாக்கியத்தை எங்களுக்கு தருவாயாக. முஹம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தருவாயாக. நாளை மறுமையிலே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிபாரிசு எங்களுக்கு கிடைக்க அருள் புரிவாயாக.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல்.