Tuesday, 24 January 2012

Learn Safety Quickly be a Professional and Draw your Money...

Dear Friends,
 Safety is a course which can be done by any one from who has crossed the SSLC education to the engineering degree holders. But the difference is the position they get after finishing the course. A safety professional can get minimum start from  40000 INR as initial salary in abroad, In India can get 20,000 INR. Comparatively the career opportunity in safety field is large in gulf countries and in the countries such as Singapore, Malaysia than India.
 .
SAFETY…..is part of everyday living. It is an important consideration for everyone in everything he/she does, in the home, at work or play, on streets and highways – wherever he/she goes. Safe operating practices and procedures are vital in the drilling business because the work is hazardous, involving massive machinery, heavy tools.

Available 6 months or 1 year diploma courses from all over India.
Especially in South India has  more safety courses in Institutes and colleges.

Examples..1, Industrial Safety,
                   2, Fire Safety,
                   3, Oil & Gas Safety,
                   4, General Safety.

After  completion Join Green World Group  get a Nebosh International General Certificate/NEBOSH International Technical Certificate in Oil and Gas Operational Safety with  IOSH Managing Safely/Working Safely with Advance diploma in Occupational Health, Safety, Environmental Management  depends on your field knowledge and select your carrier.



 NEBOSH
 The NEBOSH International General Certificate provides a sound introduction to the basics of occupational health and safety. It looks at the management of health and safety and a wide variety of workplace hazards. The NEBOSH Certificate has been designed for managers, supervisors and employee representatives and is ideal.

OSHA
The Occupational Safety and Health OSHA Act of 1970 does not address specifically the responsibility of employers to provide health and safety information and instruction to employees..

The development of the guidelines is part of an agency-wide objective to encourage cooperative, voluntary safety and health activities among OSHA, the business community, and workers. These voluntary programs include training and education, consultation, voluntary protection programs, and abatement assistance.

An awareness of your strengths and weaknesses is a necessary step if you want to enhance your career. This awareness is one that is self-reflective. One that makes you feels a sense of inadequacy. This sense of inadequacy creates an intrinsic need for improvement. The energy generated from this awareness is a positive energy.

Green World Group (http://www.greenwgroup.com)
Green World Group which was founded in 2005, is a Middle East based company providing services on Health, Safety & Quality consultancy & Training, Recruitment & Selection of highly qualified / experienced manpower. We also provide services in construction management & supervisory support & inspection services along with Third party Certifications. We are the leading professional services company working in the public and private sectors to deliver change and raise performance. The company’s successful growth has been built on the ability of our staff to achieve results and the high reputation this has created with clients.

Our people are leaders in the industry, creative problem solvers and innovative thinkers from diversified backgrounds. Together they collaborate to help you transform your business into high performing business.


NIST(http://www.nistinstitute.com/index.php)

IST, Institute is extremely delighted to produce the NEBOSH’s 20,000th candidates passed for  International General Certificate.

NIST,GWG is the leading training course provider of comprehensive range of safety courses like Nebosh International General Certificate, NEBOSH International Technical Certificate in Oil and Gas Operational Safety,IOSH Managing Safely,Working Safely, Advance diploma in Occupational Health, Safety, Environmental Management approved by Govt of India and certification programmes from United Kingdom and United States which are globally recognized.

Course Calender Year at your Area...

 http://www.nistinstitute.com/course_calendar.php#TOP1

 http://www.greenwgroup.com/course-calendar/india



 Collection & Written by M.Ajmal Khan.

Monday, 23 January 2012

Islamic E-books தரவிறக்கம்(Download) செய்து கொள்ளலாம்.


http://www.4shared.com/office/iaBLqbCi/Al_Quran_Tamil_by_Jan_Trust.html
http://www.4shared.com/office/LbGJdMlv/Al_Quran_Tamil_by_PJ.html
http://www.4shared.com/office/wcSV8Wnd/Annai_Kadeeja.html
http://www.4shared.com/office/L9dXGFXO/Aravani__aligal_.html
http://www.4shared.com/office/whTgfIKw/Concept_of_God_in_Major_Religi.html
http://www.4shared.com/office/bk_R4UzE/Duas_in_Quran.html
http://www.4shared.com/office/PQpOvfcj/Haj_Guide_Tamil.html
http://www.4shared.com/office/E1kB9HLp/Hijaab.html
http://www.4shared.com/office/mF_AgC1X/Ibn_Thaimiya.html
http://www.4shared.com/office/s3Iyv9Xj/Inna_Narppadu_Tamil.html
http://www.4shared.com/office/endEoo6x/Irai_Nesargalidam_Udhavi_Thedu.html
http://www.4shared.com/office/ywLGs420/Maanabiyin_Manitha_Neya_Kural.html
http://www.4shared.com/office/QxVxOQuA/Makkalin_Parvayil_Satharanamag.html
http://www.4shared.com/office/I9yX4mFd/Mamanithar_Tamil.html
http://www.4shared.com/office/OIj1Keg-/Mannika_padatha_Pavangal_Tamil.html
http://www.4shared.com/office/qEqsHxJO/Muthum_Pavazhamum.html
http://www.4shared.com/office/PkRcpzpe/Muthum_Pavazhamum_2.html
http://www.4shared.com/office/lunIfrNb/Nabi_vazhiyil_nam_haj.html
http://www.4shared.com/office/YRFDMn6o/Natural_medichine__tamil.html
http://www.4shared.com/office/CQ7740rd/prophet_mohamed_biography_in_e.html
http://www.4shared.com/office/y7UFCYAC/Prophet_Mohamed_History_in_Eng.html
http://www.4shared.com/office/4-yXznVl/Prophet_Mohamed_in_Tamil.html
http://www.4shared.com/office/tsIYQA7A/Ramadan_Malar_tamil.html
http://www.4shared.com/office/ywHaXqT8/Sahih_Buhari_in_Tamil.html
http://www.4shared.com/office/7J0ADHYl/Siddha_medichine__tamilpdf.html
http://www.4shared.com/office/Z8557tAZ/Suvargavasigal.html
http://www.4shared.com/office/r0IkxpoP/The_Holy_Quran_Tamil.html
http://www.4shared.com/office/4U-BgYVw/The_Quran_and_Modern_Science_E.html
http://www.4shared.com/office/2mZ6FDni/Thirukkural_in_Malayalam.html
http://www.4shared.com/office/Swt7AVXR/Thirukkural_tamil.html
http://www.4shared.com/office/g1CWI26y/Umar_Pulavar_Oru_Parvai.html
http://www.4shared.com/office/Ntaw2t0T/Vetri_Petra_Pirivinar.html
http://www.4shared.com/office/C-qHHoRD/what_is_the_sufism_tamil.html
http://www.4shared.com/office/M5xrU4_-/zakath_islam_tamil.html
http://www.4shared.com/office/KrfGsiO5/Zakathin_Mukkiyathuvm_Tamil.html
http://www.4shared.com/office/pqeKYQPH/Zakatul_Fitr_Tamil.html

Saturday, 21 January 2012

நிஜமாவே பேய் இருக்கா? இல்லையா?

சின்ன வயதிலிருந்து எவ்வளவு பேய் கதைகள் கேட்டிருப்போம். எக்ஸார்ஸிஸ்ட், ஓமன் என எவ்வளவு ஹாலிவுட் படங்கள் பேய்களை அவிழ்த்து விட்டிருக்கிறது. எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும் மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளையிட்டால் இதயத்துடிப்பு எகிறும். இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல் அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.

பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும், graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார் விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும் உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள், பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம். சந்திரமுகியில் "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு "என்ற வடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா?

பேய் என்று சொன்னாலே மனதில் தோன்றும் உருவம் வெள்ளை புகை போல கால்களின்றி. இந்த கற்பனை உருவம் ஓவியர்கள் புகையிலிருந்து உருவாக்கியது. காரணம் இறந்தவர்களின் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ ஒன்று பிரிந்து போவதாக நினைப்பது. அமைதி கிடைக்காத ஆத்மா பேயாக அங்குமிங்கும் அலைவது போன்ற கருத்து தான்.

ஒரு மனிதனின் இறப்பு என்பது மூளையின் இறப்பு. மூளையில் பதிந்த ஞாபகங்களின் இழப்பு, அல்லாமல் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ பிரிந்து வெளியேறி சாந்தி அடையாமல் தவிப்பதெல்லாம் கிடையாது. உயிர் பிரிந்து விட்டது என்பார்கள். உயிர் பிரிவது என்பதை பொதுவாக மூளை உடம்பின் மீதான தன் கட்டுப்பாட்டை இழப்பதைத் தான் குறிக்கிறது என்றாலும் ஒருவரது உயிர் அப்போது ஒரேயடியாகப் போய் விடுவதில்லை. உயிர் அவனது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது. ரத்த ஓட்டம் தடைப் படுவதால் ஒவ்வொரு செல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும்.

அப்படியே ஒரு பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கி டீ குடிக்கப் போகும் டிரைவர் போல உடலை விட்டு ஆவி தனியாகப் போவதாய் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். வெறும் பஸ் டிரைவர் நம் மீது மோதி ஒரு ஆக்ஸிடென்ட் ஏற்படாது. ஒரு பேய் செயல் பட வேண்டுமானால் அதற்கு ஒரு மனம் இருக்க வேண்டும் அப்படியானால் அதற்கு ஒரு மூளை தேவை. மூளைக்கு சக்தி கொடுக்க இதயம், நுரை ஈரல் எல்லாம் தேவை. மூளையின் கட்டளைகளை செயல் படுத்த கை கால்களின் திசுக்கள், நரம்புகள் எலும்புகள் எல்லாம் தேவை இவை எதுவும் இன்றி தனித்து எப்படி ஆவி செயல் பட முடியும். ஒரு "software " கம்ப்யூட்டரின் மெரியிலிருந்து எடுக்கப்பட்டு ப்ரொசசரால் கையாளப்பட்டால் தான் அது செயல் படும். அந்த software ஐ ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் செயல் படுமா?
அப்படி ஓர் ஆவி அல்லது பேய் இருக்குமானால் அது மிக பரிதாபத்திற்குரியது தான் அன்றி பயங்கரமானதாக இருக்க முடியாது. ஏனென்றால் அதனால் பார்க்க முடியாது, கண்ணில்லை. நாம் அதை திட்டினாலும் கேட்க முடியாது, காதில்லை. நம்மைத் தாக்க முடியாது, ஏனென்றால் எலும்பும் சதையும் கொண்ட ஸ்ட்ராங்கான கை , காலில்லை, சிறகில்லை ஒரு அடி நகர முடியாது.

இறந்த பின் அதீத சக்தி கிடைக்குமா? எல்லா அவயங்களும் உடன் இருக்கும் போதே கையாலாகாது இருப்பவன் அவற்றை எல்லாம் இழந்து இறந்த பின் எங்கிருந்து சக்தி கிடைக்கும். ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.

ஒய்ஜா போர்டு ஆவிகளுடன் பேசுவது என்று சொல்வதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை. பின் லேடன் எங்கிருக்கிறான் என்று எதாவது ஆவி குறிப்பிட்டு காட்டுமா? இறந்தவர்கள் பேயாக உலவ முடியும் என்றால் புஷ்ஷின் கழுத்தில் எத்தனையோ பேய்கள் கை வைத்திருக்கும்.

சுடு காட்டில் பிணத்தை எரிக்கும் போது சில வேளை பிணம் எழுந்து உட்கார்வதுண்டு. இது தீயினால உண்டாகும் எஃபெக்ட். அடுப்பில் ஒரு ப்ளாஸ்டிக் துண்டைப் போட்டாலும் இப்படி நெளியும்.

முன்பெல்லாம் திருடர்களும் சமூக விரோதிகளும் தங்கள் பிழைப்புக்காகவும், குற்றங்களை மறைக்கவும் ஊரில் பேய் கதைகளை உலவ விடுவதுண்டு. வேண்டாதவர்களை அடித்துக் கொன்றும் பேய் மீது பழி போட்டார்கள். இரவில் தனியே மாட்டிக்கொண்டு பயத்தில் ஸ்ட்ரோக், அட்டாக் போன்றவை வந்து ரத்தம் கக்கி செத்தவர்களின் பழி்யையும் பேய்கள் ஏற்றுக்கொண்டது. கள்ளக் காதல் மாட்டிக்காமல் தொடரவும் பேய் துணை நின்றது.

பேய் வந்து ஆடுபவர்கள் நூற்றுக்கு நூறு மன நோய் அல்லது பாசாங்கு வகையில் சேரும். இதனை பற்றி உளவியல் துறை விரிவாக விளக்கம் தரும். பலரும் குறிப்பாக பெண்கள் தங்களது வெளியே சொல்ல முடியாத உளப் போராட்டங்களின் பாதிப்பு, சமூகதால் பிற மனிதர்களால் உண்டான பாதிப்புகள் , அங்கீகாரமின்மை, அடக்கி ஒடுக்கப்பட்ட மன அழுத்தங்கள் காரணம், உளச்சிதைவு, பிளவு பட்ட ஆளுமை போன்ற மன நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
தினமும் குடித்துவிட்டு வந்து டார்ச்சர் செய்யும் கணவனை தண்டிக்க கூட பெண்களுக்கு பேய் பிடிக்கும். காதல் தோல்வி உண்டாக்கும் டிப்ரெஸன் கூட பேய் பிடித்ததாக உணரப்படும். நல்ல மன நல மருத்துவரின் உதவி தேவை.

உருவெளித் தோற்றங்கள் காணுதல், யாரோ காதில் பேசுவது போல் கேட்டல், எப்போதும் மவுனமாய் இருத்தல், ஆவேசமாக அட்டகாசம் புரிதல், அசுர பலத்துடன் செயல்படுதல், எப்போதோ இறந்து போன ஒருவரின் பெயர் சொல்லி அது நான் தான் என்று கூறுதல், தன்னை இன்னொருவராக,கடவுள் அவதாரமாக, கடவுள் சக்தி உள்ளவனாக காட்டிக்கொள்ளுதல் என இந்த லிஸ்ட் நீளும். மனித மனம் மிக விசித்திரமானது. பல மன நோயாளிகள் தான் நோயுற்றிருப்பதை அறியவோ நம்பவோ மாட்டார்கள். தனக்கும் மற்றவர்க்கும் பாதிப்பு உண்டாக்கும் எல்லா நடத்தைக்கும் மன நோய் தான் காரணம். பலர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து தப்பிக்கவும், குற்றம் செய்யவும் பேய் நாடகமாடலாம். சில பேயோட்டும் இடங்களில் காசுக்காக மற்றவர்களது பேயை தன் மீது ஏற்றுக்கொண்டு ஆடுவது போல் நடிப்பவர்களும் உண்டு. மன நோயளிகளை பேய் என்று கருதி பேயோட்டும் இடங்களில் கட்டி வைத்து சித்திரவதை செய்வது பாவம். அதுபோல அவர்களை குறி கேட்டாலும் சாமியார்கள் ஆக்கினாலும் நீங்கள் பாவம்.

இன்னும் நம்பத் தகுந்த பலர் தான் பேயை கண்டதாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்வார்கள். கண்ணால் காணும் காட்சியை பல சந்தர்ப்பங்களில் மூளை எளிதில் தவறாக பதிவு செய்து விடும். பனை மரத்தடியில் பால் குடித்தாலும் கள் குடித்ததாகவே காணுவர். நிலவில் பாட்டி நூல் நூற்பதை கண்டுபிடித்த நமக்கு மரத்தின் நிழல் பேயாக தெரிவதில் என்ன அதிசயம். சுவாரசியமான கதை சொல்வதில் மனிதனுக்குள்ள ஆர்வமும் இதற்கு காரணம். எங்கேயாவது ஒரு பேய் புரளி கிளம்பி விட்டால் ஆளாளுக்கு கை கால் மூக்கு எல்லாம் வைத்து கதை சொல்வார்கள். காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போல் சில தற்செயலான நிகழ்வுகளுக்கெல்லாம் பேயை கூப்பிடப்படாது. ஆமாம். இருட்டான இடங்களை பார்க்கும் போது மனித மனம் எளிதில் பல கற்பனைகளை காட்சியோடு சேர்த்துக்கொள்கிறது. வெளிச்சம் சூழ்நிலை பற்றி அதிக நம்பகமான தகவல்களை பார்வை வழி தருவதால் குழப்பும் கற்பனைகள் நீங்கி விடுகிறது.

எல்லா தரப்பு மக்களிடையேயும் பேய் கதைகள் இருந்தாலும் பெரும்பாலும் கிறிஸ்துவர்களுக்கும் பேய் கதைகளுக்கும் அதிக தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதற்கு நான் நினைக்கும் காரணம் அவர்களது மத ரீதியான ஆவி நம்பிக்கயும், இறந்து போனவர்களுக்கு அழியாத கல்லறை கட்டி அவர்கள் நினைவுகளை பாதுகாத்து வருவது தான்.

சில புகைப்படங்களில் பேய் போன்ற உருவம் தோன்றலாம். டபுள் எக்ஸ்போஸர், படம் பதியும் நேரம் காமிரா அல்லது பொருள் அசைவது, டிஜிடல் காமிராக்களில் பதியும் இன்ஃப்ரா ரெட் ஒளிகள், சில நிழல்களின் பதிவு,சில கோனங்கள் என பல காரணங்களால் இப்படி ஏற்படும் அதற்கும் பேய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. பேய் பற்றிய பல வீடியோக்களும் இது போன்ற தந்திரக் காட்சிகளே

இனி தைரியமாக இருட்டில் போவீர்கள் தானே. பேய் போகும் போது குடம் உடைத்து விட்டு போகுமாம் அது போல உங்களுக்கு பேய் பயம் தீர்ந்தால் தைரியமாக தமிழ்ஷில் குத்திவிட்டு போங்கள்.

பூமியில் வேற்றுலக வாசிகள்?...

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.

பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.

வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.
வேற்று கிரக வாசிகள் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்து இறங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மனிதனைப் போன்ற உருவம் இருக்க வேண்டும். வாகனத்தை கட்டுப்படுத்த கைகள், எங்கே இருக்கிறோம் என்று பார்த்து இறங்க கண்கள், இறங்கி நடந்து வர கால்கள் எல்லாம் மனிதனை போல் அமைய வேண்டும். பறக்கும் தட்டு போன்ற வாகனத்தை வடிவமைக்க இயக்க மனிதனைப் போல் இயந்திர அறிவில் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் வெகுவாக குறைவு. இதை விட வேறு பயண முறைகளை அவர்கள் உப்யோகிக்கலாம். teleportation என்றெல்லாம் நாமே மாற்று வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

அயல் உயிரினங்கள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்
  • கெட்டியான பாறை போல் இருக்கலாம், கூழாங்கல் போல இருக்கலாம். அதனால் தான் காலில் கல் தட்டிவிட்டது என்கிறோமா?
  • பிசு பிசுவென்று போஸ்டர் ஒட்டும் பசை போல் இருக்கலாம். காலில் அப்படி ஏதாவது அப்படி மிதிபட்டால் ஒருமுறை நன்றாக பரிசோதிது பார்த்து விட்டு கழுவவும்.
  • கலர் கூல் ட்ரிங்ஸ் போல் இருக்கலாம், ஜெல்லியாக இருக்கலாம். குடித்தால் வயிற்றை பிராண்டுவது போலிருந்தால் அதற்கு காரணம் பாக்டீரியா.
  • இரும்பு நட்டு போல்டு போல இருக்கலாம், மண் போல இருக்கலாம்
  • தோசை இட்லி போலக்கூட இருக்கலாம்
  • புதிய தனிமம்,புதிய கிரகம்,என்றெல்லாம் கூட அறியப்படலாம்.
  • அலைகளாக,கதிர் வீச்சாக கூட இருக்கலாம்
  • ஒளியாக ஒரு விசிட் அடித்து விட்டு போகலாம்.
  • வாயு வடிவத்தில் உலவிக்கொண்டிருக்கலாம். நான்கு பேர் கூடுமிடத்தில் திடீரென கெட்ட நாற்றம் வந்தால் அது ஓர் நபரின் வருகையாகக் கூட இருக்கலாம்.
பூமியில் காணப்படும் எல்லா உயிரினங்களும் கார்பன் எனும் கரிமத்தை அடிப்படையாகக் கொண்டது. இது போல மற்ற தனிமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட உயிரினங்கள் இருக்கலாம். தங்கம் , தாமிரம், கந்தகம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கூட உயிர்கள் இருக்கலாம்

ஒளியாக ,நெருப்பாக, நீராக எல்லாம் கூட உயிரினங்கள் ஆக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் தினமும் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் இருப்பதாகவும் குர் ஆன் சத்தியம் செய்து கூறுவதை மறுக்க முடியவில்லை. தினம் எவ்வளவு நட்சத்திர ஒளி பூமியை தொடுகிறது. ஆனால் அதன் மனித வடிவமும் மனிதனோடு இன்டெராக்சனும் உறுத்துகிறது.
பழமையான இந்து மதக் கருத்துகளும் உயிர்கள் எல்லா இடமும் இருக்கின்றது என்று தான் சொல்கின்றன.

அடிப்படை ஆதாரமாக நாம் அணுக்களால் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் . அணுக்களுக்கு அடிப்படை எலெக்ட்ரான், புரோட்டான் எனும் சக்திகள் தான். எப்படி அணுக்கள் மூலக்கூறுகளாகி, அமினோ அமிலங்களாகி, செல்களாகி, மனிதனாக பரிணாமம் பெற்றானோ. இதே போல் வேறு கிளைகளிலும் ஏன் பரிணாமம் நிகழ்ந்து நம் கண்முன்னே இருந்தும் நம்மால் உணர முடியாத உயிர்கள் நம்மைச் சுற்றி இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் முதியோர்களை ஓர் உயிர்களாக தெரியாதற்கு பெயர் வேறு,அது திமிர்.

முன்பெல்லாம் ஒரு சினிமா பார்க்க வேண்டுமானால் புரொஜெக்டரில் ஃபிலிம் இட்டு ஓட்ட வேண்டும். பின்னர் வீடியோ கேஸட்டுகளில் வேறு வடிவத்தில் சினிமா பதிவு செய்து காட்டப்பட்டது, பின்னர் சிடி க்கள், டிவிடி க்கள் என வேறு டெக்னாலஜியில் அதே "குலேபகாவலி " காட்டப்பட்டது. இப்போது ஹார்ட் டிஸ்க், ஃபளாஷ் மெமெரியில் divx ,mpeg, vob ஃபைலாக கிடக்கிறது. இணையம் வழி இன்னும் எத்தனையோ வடிவங்களில் எல்லாம் அதே சினிமா வெளிப்படுகிறது. இதே போல் உயிர் என்பது வெறும் ஒரு Data தான் ஒரு software போன்றது. அது இருக்கும் மீடியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சாத்தியம் உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இப்போதைய செல் போன், லேப் டாப் , இணையம் எல்லாம் எந்த வடிவில் இருக்கும் ?

வேறு உயிர்கள் வானத்திலிருந்து தான் வர வேண்டுமென்பதில்லை. நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம் வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது. இன்னும் கல்லுக்கும் மண்ணுக்கும், பூமிக்கும் கூட உயிருண்டு என பின்னாளில் உணரப்படலாம். மண்ணின் அம்சம் தானே நம் உடலிலும். பூமியின் எல்லா உயிர்களும் பூமியின் அம்சம் தானே. உயிரற்றதாக கருதப்படும் பூமியில் உயிர் தோன்றுகிறது. உயிருள்ள உடம்பில் ரோமம். நகம் போன்ற உயிரற்றப் பொருள் தோன்றுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள உயிர் பொருள் நம் உடலில் சேர்வதில்லை. அதிலுள்ள உயிரற்ற பொருள் தான் நம் உடலில் சேர்ந்து உயிர் பொருளாகிறது.

பஞ்ச பூதங்கள், வானவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இப்படிப் பட்ட வேறு உயிர்களுக்கு மனித வடிவம் கொடுத்து புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ?

வேறு உயிரினங்கள் மனித கண்களால் அளக்கக்கூடிய சைசில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மலையளவாகவோ, வியாழன் கோள் அளவாகவோ, ஏன் சூரியனின் சைசில் கூட இருக்கக் கூடும். அது போல ஒரு பாக்டீரியா, வைரஸை விட சிறிதாகக் கூட இருக்கலாம். அணுக்களுக்குள் கூட குட்டி பிரபஞ்சங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் உயிர்களும் இருக்கக் கூடும். நம் பார்வையின் அறிவின் எல்லைகள் மிகக் குறுகியது. நம் அறிவின் பவுதீக விதிகள் செல்லுபடியாகாத இடத்திலும் வேறு உயிர்கள் இருக்கலாம். இடம், அளவு , காலம் இதெல்லாம் நம் மனதால் அமைக்கப்படும் ஒரு கருத்து அவ்வளவு தான்.பெரிது சிறிது எல்லாம் நமக்கு மட்டும் தான். நீங்கள் சாப்பிடும் போது பல உலகங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கலாம். சிலர் மில்கிவே , ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளையே டிபன் பண்ணக்கூடும்.

நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்.

வெற்றி அடைவது எப்படி -- சில புருடாக்களும், நிஜங்களும்....

வெற்றியாளர்களை நமக்கு உள்ளூரப் பிடிக்காது. இதன் காரணம் ஒருவர் தொடர்ந்து வெற்றி பெறுவதில் ஒரு அதர்க்கம் உள்ளது. இந்த அதர்க்கம் வெற்றியாளன் மீது கோபமாக மாறுகிறது. வெற்றியின் காரணங்களாக ஒரு பட்டியல் தரப்படுகிறது. அடிப்படையான உழைப்பு, மனவலிமை, ஒழுக்கம் ... என்று போக இந்த சூத்திரத்தில் நமக்கு அகப்படாத ஒரு கூட்டல் / பெருக்கல் குறி மறைந்துள்ளது. அது என்ன? சரியான சந்தர்பத்தில் சரியான நபர் வலது காலை வைப்பதா?

சந்தர்ப்பவாத வெற்றிக்கு ஏகப்பட்ட உதாரண கதைகள். தற்போது வெளியான Luck by Chance இந்திப் படத்தின் கரு இதுதான். ஆனால், அங்கேயும் ஒரு ஓட்டை உள்ளது. சந்தர்ப்பம் (ஒழுக்கமான, கடுமையாய் உழைக்கும், மனவலிமை மிக்க ... ) வெற்றியாளனை ஒரு சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்வதில்லை. நம் மத்தியில் சந்தர்பங்கள் ஒத்துழைக்காத, சோம்பல் கொண்ட, உள்நடுக்கம் மறைக்கும் பல குழப்பமான வெற்றியாளர்கள் வேறு. மேலும் குழப்பம். வெற்றி எனும் இந்த புதிர் பற்றி எத்தனையோ சுயமுன்னேற்ற புத்தகங்கள். இவை வெற்றியை ஒரு பழக்கம் என்பவை. ஒரே மாதத்தில் வெற்றியாளனாவது எப்படி, வெற்றியாளனுக்கான ஏழு பழக்கங்கள், உங்களுக்குள் இருக்கும் ராட்சதனை உசுப்பி விடுங்கள் ... இப்படி. இவை மனவியல், நரம்பியல் என்று அலசி ஒரு வெற்றியாளனுக்கான மனநிலையை பயிற்சி மூலம் உருவாக்கினால் நீங்களும் வெற்றியாளன் என்கிறது. இவற்றைப் படித்த கோடிகள் வெற்றியாளர்கள் ஆகவில்லை. புதிர் தொடர்கிறது. அதனால் மேலும் பலர் கோடிக்கணக்கில் வாங்கிப் படிக்கின்றனர்!

விடாமல் நட்சத்திரங்கள் சொல்லும் வெற்றி ரகசியங்களை ஞாயிறு மலர்களில், டி.வி பேட்டிகளில் காப்பி டம்ளர் வாயருகே வைத்து படிக்கிறோம், கேட்கிறோம்: "நள்ளிரவு பன்னிரெண்டுக்கு தூங்கினால் பத்து நிமிடத்தில் எழுந்து அம்மா தரும் ஹார்லிக்ஸ் குடித்து, மறக்காமல் கக்கூஸ் போய் விட்டு, மறுபடி கடுமையான உழைப்பை தொடர்வேன்". என்ன மனிதர்கள்! மனுஷ்யபுத்திரன் பற்றி ஜெயமோகன் என்னிடம் சொன்னார்: "தொடர்ச்சியாய் ஒரு நாளில் 22 மணிநேரம் உழைக்கக் கூடியவர். தீபாவளி, பொங்கல், கலவரம் என்றால் ஊடகங்களில் தேடி வந்து மைக் நீட்டும் இடத்தை இப்போது அடைந்து விட்டார் பாருங்கள்!" ஆனால் ஒரு கலைஞன் அலாரம் கிளாக் உழைப்பாளியாக இருக்க முடியாது. பிற்பாடு என் ஊகம் சரி என்று உணர்ந்தேன். ம.பு.விடமும் நிறைய சோம்பல் உண்டு.

வெற்றியாளனிடம் ஒரு மிகையான தன்னம்பிக்கை, அதன் விளைவான மூர்க்கம், கடிவாள மனக்குவிப்பு தனியாகத் தெரியும். உங்கள் நெரிசலான, ஓட்டை மின்விசிறி சடசடக்கும், புத்தகங்கள் சிதறிய அறைக்குள் ஒரு நிர்வாண அழகி நுழைகிறாள் என்று கொள்ளுங்கள். உங்கள் உடலுள் ஜிவ்வென்று சூடு கிளம்ப அவளை அடையப் போகிறேன் என்று நொடியில் நம்பிக்கை கொள்கிறீர்கள். ஐயம் சிறு பிசிறு அளவும் இல்லாமல். ஒரு வெற்றியாளனுக்கு இதுபோல் பரிசு கையருகிலேயே உள்ளது என்ற பிரமை உள்ளது. எண்ணமல்ல, உணர்வு. வெற்றியை அறியாதவனுக்கு அது பார்வைப் புலம் தாண்டி வெகுதொலையில் எங்கோ...

கிரிக்கெட்டில் தொடர் வெற்றிகள் குவிக்கும் அணிகள் படிப்படியாக அவ்விடத்துக்கு வருவதை கவனிக்க வேண்டும். அப்புறம் அந்த இடத்திலிருந்து ஒருசேர தள்ளினாலும் புட்டம் உயர்த்த மாட்டார்கள். ஒரு குழுவின் வெற்றியின் வரலாறு தான் தொடர்ந்து வெற்றியை தக்க வைக்க பயன்படுகிறது. வெற்றி வரலாற்றை சுமப்பவர்கள் வெற்றிக்காக குனிந்து தத்தம் பெருவிரல் நக்கவும் தயங்க மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் அணி போன முறை ஆஸ்திரேலியா பயணித்தபோது ஆஸி அணியினர் பல பொய் பாசாங்குகள் மூலம் டெஸ்டு தொடரை தாங்கள் வெல்வதை உறுதி செய்தது. "ஒரு அணி மற்றும் தான் நேர்மையாக ஆடியது" என்று கும்பிளே ஊடகங்களிடம் பஞ்சியதும் உலகமே ஆஸி மூர்க்கத்தை வெறுத்தது. பின்னர் இந்தியா வந்து மீண்டும் தொடர் ஆடி தோற்ற பின்பும் ஆஸி தலைவர் ரிக்கி பாண்டிங் தோல்வியை முழுக்க ஒப்புக் கொள்ள மறுத்தார். "தொடரில் பெரும்பாலும் நாங்கள் தான் முன்னிலையில் இருந்தோம்" என்றார். இது திமிர் அல்ல. வெற்றியின் நீண்ட பாரம்பரியத்தின் எல்லையில் கூட ஒருவனுக்கு இருக்கும் 'வெற்றி இதோ அடுத்து வரப் போகிறது' என்ற அபரித நம்பிக்கை. இந்த முறை பிடி நழுவு விட்டது, அடுத்த முறை அகப்படும் என்ற உறுதிப்பாடு. தோல்வி அடைந்து வருகிறோம் என்று நம்ப ஆஸி அணிக்கு வெகுகாலம் பிடிக்கும். இதுவரை எந்த ஒரு குறிப்பிடும்படியான தொடர் வெற்றிகளையும் அறிந்திராத நியூசிலாந்தின் அணித் தலைவர் விட்டோரி தற்போதைய இந்திய தொடரின் ஒரு நாள் ஆட்டம் ஒன்றின் போது சேவாக் ஒரு போட்டியில் விளாசிட உடனே இப்படி சொல்கிறார்: "எங்கள் அணி வீரர்களுக்கு சேவாக்கின் மீது உள்ளூர நடுக்கம்". அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா அதிரடியாய் ஓட்டங்கள் குவித்து தொடரை வெல்ல தொடர்ந்து தண்டனிடுகிறார்: "இந்தியாவைத் தோற்கடிக்க நாங்கள் 500 ஓட்டங்கள் எடுக்க வேண்டும்". ரிக்கியின் சவடால்களோடு இந்த பணிவை ஒப்பிடுங்கள். வெற்றியாளனுக்கு இரண்டாவது கன்னம் காட்டத் தெரியாது.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கவாஸ்கர் சொன்னார்: "எங்கள் காலத்தில் இவ்வளவு சுதந்திரமாக, ஆக்ரோசமாக ஆட முடியவில்லை.". காரணம் அப்படி ஆடும் முன்னோடிகள் அவருக்கு இல்லை. பிறகு வந்த சச்சினுக்கு கவாஸ்கரும், விவியன் ரிச்சர்ட்ஸும் முன்னோடிகள். அவரது ஆட்டம் இவ்விருவரின் கலவை. சேப்பாக்கில் வார்னேயை மட்டு மரியாதை இன்றி சச்சின் விளாசிய சிக்சரின் ரீப்ளேதான் யுவ்ராஜின் சமீபத்திய 6 சிக்சர்கள். இப்போதைய ரைனா, உத்தப்பா, ரோஹித் வகையினரின் தன்னம்பிக்கை சேவாகின் ஆட்டத்தை தொடர்ந்து வருவது.

இப்படி முதல் வெற்றிக்குப் பின் இரண்டாவது எளிதாகி விடுகிறது. அது எப்படி என்பது ஒரு சிக்கலான கேள்வி.

சமீபத்தில் ரோயல் சொசைட்டி இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை படித்தேன் (rspb.royalsocietypublishing.org/content/early/2009/03/06/rspb.2009.0132.abstract ). இனப்பெருக்க காலத்தில் சிக்ளிட் மீன்கள் துணைக்காக மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் மீனுக்கு அதிகமாய் ஆண்டுரோஜென் ஹார்மோன் சுரக்கிறது. இந்த சுரப்பு காரணமாய் அடுத்த போட்டியில் இதே மீன் படு மூர்க்கமாய் மோதுகிறது. முன்னர் தோற்ற மீன் இப்போது எளிதாய் தோற்று சடுதியில் ஓடி விடுகிறது. சரி, ஆண்டுரோஜன் தானே வெற்றியை தீர்மானிக்கிறது என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் தோற்ற மீனுக்கு வெற்றியாளனது அளவில் ஆண்டுரோஜென் ஏற்றி மீண்டும் மோத விட்டார்கள். யார் ஜெயித்திருப்பார்கள்? முதல் சுற்றில் வென்ற மீன்தான்.

என்னதான் ஹார்லிக்ஸ், மெமரி பிளஸ், ஏஸி, டியூசன் என்று அமைத்துக் கொடுத்தாலும் பையன் படிக்க மாடேன் என்கிறானே சார் என்று விசனிக்கும் பெற்றோர் பொறுமை காக்க வேண்டும். வெற்றி மிதிவண்டி பழகுவது போல. பழகினால் மறக்க சிரமம். மேற்சொன்ன ஆராய்ச்சியாளர்களின் முடிவும் இதுவே. தோல்வி அனுபவம் மேலும் தோல்விக்கு தள்ளி விடுகிறது. மற்றபடி 'தோல்வி வெற்றிக்கு முதற் படி' என்பது எல்லாம் புருடா.

தற்போது நடக்கும் India-Australia தொடரில் India  தோற்றதற்கு ஒரு காரணம் அவர்களின் தோல்வி ஞாபங்களே.

சரி, இந்த முதல் வெற்றி எப்படி கிடைக்கிறது? தெரிந்தால் சொல்லுங்கள்!

Thursday, 19 January 2012

Plus Two (+2) தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கான Question bank !!


தமிழ்நாட்டில் உள்ள Plus Two (+2)  தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கான Question bank



தமிழ்நாட்டில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவதற்ககாக கடந்த கால வினாத்தாள்களை கிழ்கண்ட தளத்தில் இருந்து இலவசமாக டவுன் லோடு  பண்ணி உபயோகித்து கொள்ளலாம். இங்கு 2006 முதல் கடந்த ஆண்டு வரை நடந்த தேர்விற்கான வினாக்கள் உள்ளது. தமிழ் மீடியம் மற்றும் ஆங்கில மீடிய மாணவர்களுக்குரிய எல்லா பாடப் பிரிவுகள்க்குமான வினாத்தாள்கள் இங்கு உள்ளது. http://www.tn.gov.in/dge/question_bank.htm

இந்த பதிவு மாணவர்களுக்கு உதவும் என்ற நோக்கில் வெளியிடப்படுகிறது. இதனைப்பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் நண்பர் மற்றும் உறவினர் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தி தேர்வில் நல்ல முறையில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். நன்றி

This post is very useful for  “Tamilnadu Plus Two (+2)  students. who ever going to write  plus two(+2) board exam they can find Previous Year Question Papers here.


இது Government of Tamil Nadu Directorate of Government Examination  அவர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.


Visit  this link to get all the latest news from the directorate of Government examination. Here you can get all the details about 10th and 12th exams.


Head Office
Director- Tmt D Vasundaradevi

Directorate of Government Examination,
College Road, D.P.I. Campus
Nungabakkam,
Chennai - 600 006.
Phone : 28278286,
28272088, 28269982
28275125, 28275126



தமிழகம்: ஹஜ் பயண அனுமதி 11 சதவிகிதம் அதிகரிப்பு !...

இவ்வாண்டின் ஹஜ் பயணத்திற்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி கடைசி வாரம் வெளியிடப்படும் என்றும், தமிழகத்துக்கான கோட்டா 11 சதம் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் இந்திய ஹஜ் குழுமத் தலைவர் ‘பிரசிடெண்ட்’ அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய ஹஜ் குழுமத் தலைவர் ‘பிரசிடெண்ட்’ அபூபக்கர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“இவ்வாண்டு ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பங்கள்பெற கடைசி நாள் மார்ச் 31 ஆகும். குலுக்கல்
ஏப்ரல் கடைசியில் நடைபெறும். பயணக்கட்டணம் செலுத்த கடைசி நாள் மே 31.
70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்குத் துணையாகவும் ஒருவர் ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பயணத்துக்காக திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.
தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை அளவு இந்த ஆண்டு 11 சதவீதம் உயர்த்த பட்டு உள்ளது. சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதிக் கட்டணங்கள் உயர்த்த படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதேபோல், ஹஜ் பயண விமானக் கட்டணமும் அதிகரிக்கப் படவில்லை.
ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண் டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்க படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் தடை செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப் பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு சார்பான ஹஜ் பயணர் என்றில்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்க படும்.”
மேற்கண்டவாறு இந்திய ஹஜ் கமிட்டித் தலைவர் ‘பிரசிடென்ட்’ அபூபக்கர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து!

சின்னக் குழந்தைகள் கீழே விழுந்து லேசாக அடிபட்டாலே டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடும் பல தாய்மார்கள் தவறாமல் கூறுவது,"டாக்டர் தலையில் ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பாருங்கள்"என்பது தான்.இது தேவையற்றது.

பொதுவாக சின்னக் குழந்தைகள் அடிக்கடி கீழே விழுந்து தலையில் அடி படுவது சகஜம். அதனால் தான் இயற்கை குழந்தகளின் மண்டையோட்டை அதற்கேற்ற படி நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கிறது. விழுந்தாலும் பாதிப்பு ஏற்படாமல் இயற்கை இப்படி பாதுகாக்கிறது. இருந்தாலும் பல நோயாளிகளும் பல மருத்துவர்களும் தேவையற்ற பல எக்ஸ்ரே எடுப்பதற்கு காரணம் நோயாளியின் அறியாமையும், சில மருத்துவர்களின் பண மோகமுமே . இதில் பாதிக்கப்படுவது எப்போதும் நோயாளி தான்.

ஆனால் அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதனால் ஏற்படும் புற்றுநோய் வாய்ப்பு, அணுகுண்டால் ஏற்படும் புற்று நோய் வாய்ப்பை விட அதிகம்' John Goffman மருத்துவர். அமெரிக்க பொது சுகாதாரத்துறை " எக்ஸ் கதிர்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை (Carcinogen) " என்பதை 2005-ல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எந்த வயதில்‘X’ ray எடுக்கப்படுகிறது என்பது மிக முக்கியம். சிறு குழந்தைகளுக்கு புற்றுநோய் (குறிப்பாக இரத்தப் புற்றுநோய், தைராய்டு) ஏற்படும் வாய்ப்பு அதிகம். இள வயதினருக்கு குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். வயது வந்தவர்களுக்கு (பெரியவர்களுக்கு) நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இந்தியாவில் `‘X’ ray பாதுகாப்பு விதிமுறைகளை கையாளுவது என்பது நடைமுறையில் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்பதை திரு. பார்த்தசாரதி ( முன்னாள் செயலர்) வேதனையுடன் கூறுகிறார். அவர் எழுதியுள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அவை
1. IAEA (International Atomic Energy Agency) 12 வளரும் நாடுகளில் செய்த ஆய்வில் 53% எக்ஸ்ரேக்கள் சரியாக எடுக்கப்படவில்லை என்றும், அதனால் மீண்டும் ‘X’ ray எடுக்க வேண்டியிருப்பதால் மக்கள் தேவையற்ற அதிக கதிர்வீச்சிற்கு ஆளாகி பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதை American Journal of Roentgenology, June 2008 குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவில் AERB (Atomic Energy Regulatory Board) க்கு ‘X’ ray தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் தெரிந்திருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையும் தெளிவாக அவர் எழுதியுள்ளார்.

2. இந்தியாவில் 175 ‘X’ ray எடுக்கும் இடங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் 12% இடங்கள், நோயாளிகளை 200% மேல் தேவையற்ற கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாக்கியது தெரிய வந்துள்ளது. ‘X’ ray எடுக்கும் முறை சரியாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

3. மார்பக (Breast) புற்றுநோய் இருப்பதை அறிய Mainmo graphy எனும் பரிசோதனை செய்யும் மும்பையில் உள்ள 30 மருத்துவமனைகள் நோயாளிகளை தேவையற்ற கதிர்வீச்சு பாதிப்புக்கு உட்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

1994_ல் AERB செய்த ஆய்வில் 30% ‘X’ ray உபகரணங்கள் (30,000 உபகரணங்களை பரிசோதித்ததில்) 15 வருடங்களுக்கு மேல் பழைமையானவை என்பதும், அதன் காரணமாக நோயாளிகள் அதிக கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் CT Scan பரிசோதனைகள் செய்யப்படுபவர்களில் 9% குழந்தைகள். 71 CT Scan பரிசோதனைக் கூடங்களை ஆய்வு செய்ததில் அவற்றில் 32 இடங்களில் குழந்தைகள் மிகவும் அபாயகரமான கதிர்வீச்சிற்கு தேவையற்று ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகளுக்கு CT Scan எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் மீறப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், இந்தியாவில் எடுக்கப்படும் ‘X’ ray க்களில் 20% குழந்தைகள் மீதானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் 2500 CT Scan மையங்கள் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை வளர்ந்தாலும், CT Scan மூலம் பெறப்படும் படங்களின் தரம் உயர்வது சரியாக நடைபெறவில்லை.

இதற்குத் தீர்வாக, அவர் ‘X’ ray எடுக்கும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை Atomic Energy (Radiation Protection) Rules 2004 தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்றும்,

அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதைக் கண்காணிக்கும் நிறுவனங்கள் மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் அதிகாரம் பரவலாக்கப்பட்ட 5 நடைமுறை படுத்தப்படும் மையங்கள் அமைய வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார். AERB ‘X’ ray பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அளவில் உள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விழித்துக் கொண்டால் மட்டுமே தேவையற்று நிகழும் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க முடியும். மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கிறதா? என பார்ப்போம்.

(‘X’ ray எடுத்து 40 ஆண்டுகள் கழித்தபின் புற்றுநோய் ஏற்பட்டது மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது ).

ஆக, தேவையற்ற ‘X’ ray எடுப்பதை தவிர்ப்பதே சிறந்தது. ‘X’ ray எடுப்பதால் பெரும் பாதிப்பு வராது என கூறும் மருத்துவர்கள் தனது மகளுக்கு பேறு காலத்தில் சிறு குழந்தைகளுக்கு ‘X’ ray எடுக்கத் தயாரா?

கதிர்வீச்சை பொறுத்தமட்டில் இந்த அளவிற்கு மேல்தான் அபாயம் என்பதை சொல்வதற்கில்லை. (There is no safe dose) என்பது மனதில் கொள்ள வேண்டும். மிகச்சிறிய அளவும் பாதிப்பை உண்டாக்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுவதே சிறந்தது. பத்து முறை எடுத்தாலும் ஒரே ஒரு முறை எடுத்தாலும் எப்போது பாதிக்கும் என்று சொல்ல முடியாது. விழித்துக் கொள்ளுங்கள்.

டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

இயற்கையாகவே கால்சியம் ப்ளோரைடு என்ற வகையில் பூமியில் சில இடங்களில் ஃப்ளோரைடு அதிகமாக இருக்கும். என்வே அந்த இடங்களில் உள்ள நீரிலும் அதிக அளவு கலந்திருக்கும். இந்த இடங்களில் இருப்பவர்களின் பற்களில் பற்குழிகள் விழுவது மிகக் குறைவு. ஆனால் பெரும்பாலும் பற்களில் கறைகள் படிந்து அழகில்லாமல் காட்சியளிக்கும். இது நீரில் உள்ள அதிக அளவு ப்ளோரைடினால் தான் ஏற்படுகிறது என்று கண்டறிந்த பல் மருத்துவர்கள் பற்குழி விழுந்த சிறுவர் சிறுமியர்க்கு ப்ளோரைடு பெயிண்டிங் என்ற முறையில் பற்களில் ப்ளோரைடினை பூசினார்கள். 1973-ம் ஆண்டு வாக்கில் பற்பசையில் ப்ளோரைடு கலந்து அறிமுகப் படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் இந்த பற்பசைகள் உபயோகத்திற்கு வந்த பத்து வருடங்களில்
குழந்தைகள் பற்குழிக்காக பல் மருத்துவரிடம் வருவது வெகுவாக குறைந்தது. அதன் பின்பு ப்ளோரைடு பற்பசைகள் உலகெங்கும் உபயோகிக்க ஆரம்பித்தார்கள்

நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க ஃப்ளோரைடு உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஃப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல்மருத்துவர்கள் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம் வசிக்கும் இடத்தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த அறிவுரை மாறுபடுகிறது.

பற்பசைகளில் ப்ளோரைடு உள்ளதா என எப்படி அறிவது?
பற்பசை பெட்டியிலும் ட்யூபிலும், சிறிய எழுத்துக்களில் 'FOAMING
FLUORIDATED TOOTHPASTE' என்று எழுதப்பட்டிருக்கும். மேலும், ' contains
1000PPM of available fluoride' என்றும் எழுதப்பட்டிருக்கும்.

பக்க விளைவுகள், ஆபத்துக்கள்
அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

1997ம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
"WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately."
ஒரு முறை பல்துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும் என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

அதிக அளவு ப்ளோரைடு உபயோகம் ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவு ஏற்பட காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக் கூடும்.

பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1000ppm அளவிற்கு மிகாமலும், சிறுவர்களுக்குக்கான பற்பசையில் 500ppm அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ப்ளோரைடு பற்பசையினை உபயோகிக்கும் பொழுது ஒரு பட்டானி அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொண்டு பல்துலக்க வேண்டும் என்று பல்மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ப்ளோரைடு பற்பசை உபயோகிக்கும் பொழுது அது தொண்டைக்குள் செல்லாமல் துப்பி விடுவது நல்லது. சிறுவர்களுக்கு பிடித்தமான சுவைகளில் பற்பசைகள் தயாரிக்கப்படுவதால் சிறுவர்கள் இதனை விழுங்காமல் பார்த்துக் கொள்வது கடினம்.

ஃப்ளோரைடு விஷமா?
ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் தான் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக்கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மாறுபட்ட கருத்து
இது குறித்து வல்லுநர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
ப்ளோரைடு பற்பசை நல்லதே என்று கூறும் வெப் தளங்கள்:
http://www.doctorspiller.com/fluoride.htm
http://www.dentalgentlecare.com/toothpaste.htm

ப்ளோரைடு பற்பசை மிக ஆபத்தானது என்று கூறும் வெப் தளங்கள்:
http://www.aroma-essence.com/research-reports/fluoride.html
http://www.mercola.com/2001/may/30/toothpaste.htm
http://www.sonic.net/kryptox/dentistr/dentistr.htm

ப்ளோரைடு பற்றிய பக்க விளைவுகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக 'ப்ளோரைடு செயல் கூட்டணி' (Fluoride Action Network) என்ற அமைப்பு செயல்படுகிறது. http://www.fluoridealert.org

நாம் செய்யக்கூடியது.
தற்போது ப்ளோரைடு கலவாத பற்பசைகளே இல்லை என்ற நிலை உள்ளது. சில ஆயுர்வேத பற்பசைகளும், இயற்கை மூலிகை பற்பசைகளுமே ப்ளோரைடு கலவாத பற்பசைகளாக உள்ளது.

குழந்தைகளுக்கு ஆறு வயது வரை ப்ளோரைடு பற்பசையை தவிர்ப்பது நல்லது. அதற்கு முன்பு உபயோகிப்பதானால் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யலாம்.

நமக்கு பற்பசை மட்டுமல்லாமல், நீர், உணவு, குளிர்பானங்கள் மூலமாகவும் ப்ளோரைடு உடலில் சேரும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே முடிந் தவரை ப்ளோரைடு கலவாத பற்பசைகளை உபயோகிக்கலாம். ப்ளோரைடு பற்பசைகளை உபயோகிப்பதானால் அவற்றை பட்டானி அளவிற்கு மிகாமல் எடுத்து உபயோகிக்க வேண்டும்.

அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?

நம் உடலின் ஆரோக்கியத்தைக் காக்க நம் உடலே உற்பத்தி செய்யும் பல்வேறு பொருட்களில் ஒன்று தான் இந்த கொலெஸ்ட்ரோல் (Cholestrol). இது வெண்மை நிறத்திலான கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு மிகவும் அவசிமாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் , பித்த நீர், வைட்டமின் D மற்றும் உடலின் பல்வேறு முக்கிய புரதச் சத்துகள் , திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் தேவையானது.

கொலஸ்ட்ரால் எங்கிருந்து கிடைக்கிறது?
கொலெஸ்ட்ரோல் பொதுவாக இரண்டு விதங்களில் உடலில் சேர்கிறது.
  1. நமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. நம் கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து இரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 75% உற்பத்தி செய்கின்றன.
  2. 25% கொலஸ்ட்ரால் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கிடைக்கிறது.
கொலெஸ்ட்ரால் வகைகள்:நம் இரத்தத்தில் 'கொலெஸ்ட்ரால்' மற்றும் 'டிரைகிளிஸெரைட்ஸ்' (Triglycerides) ஆகிய இரண்டு வித கொழுப்புகள் உள்ளன.
டிரைகிளிஸெரைட்ஸ் என்பது கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒருவிதக் கொழுப்பே! இது நம்முடைய அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடலுக்கு வழங்குகின்றது. கொலெஸ்ட்ரோலைப் போலவே இரத்தத்தில் டிரைகிளிசெரைடுகள் அதிக அளவில் இருந்தாலும் இருதய நோய்களின் அபாயத்தை அதிகப் படுத்திவிடும்.

கொலெஸ்ட்ரோல் புரதங்களுடன் இணைந்து ஒரு லிப்பொ ப்ரொடீன் ஆகி, அதன் மூலம் உடல் முழுவதும் பயணிக்கிறது. லிபோபுரோட்டீன்கள் என்பவை இரண்டு வகைகளாகும். அவை:

1. குறைந்த அடர்த்தியுள்ள (Low density) லிப்போ புரோட்டின் (LDL)

2. அதிக அடர்த்தியுள்ள (High density) லிப்போ புரோட்டின் (HDL)

அடர்த்திக் குறைவான லிப்போ புரோட்டீன் (LDL):
இது 'தீய கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த (LDL) அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலந்து செல்லும்போது, இருதயத்திற்கும் மூளைக்கும் செலுத்தப்படும் இரத்தக் குழாய்களின் சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக் கொள்கிறது.காலப் போக்கில் இரத்தக்குழாய்களை குறுகச் செய்கிறது

அடர்த்திமிகு லிபோபுரோட்டீன் (HDL):

இது 'நல்ல கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்ட்ரோலை தமனியிலிருந்து அகற்றி பின் கல்லீரலுக்குக் கொண்டு செல்கிறது. இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்டொரோலை இவ்வாறு அகற்றுவதவன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது.

மிகை கொலெஸ்ட்ரோல் எவ்வாறு பாதிக்கிறது?

தேவைக்கு அதிகமாக உருவாகும் கொலெஸ்ட்ரோல் தமனிக் குழாய்களின் உள் சுவரில் ஒட்டிக் கொள்ளும. நாளடைவில் சிறிது சிறிதாகச் சேர்ந்து இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களின் உள் சுற்றளவைக் குறுக்கி விடுகின்றது. இதனால் குறைவான இரத்தத்தை இருதயம் பெறுகிறது. அதனால் இரத்ததில் கலந்துள்ள 'ஆக்ஸிஜன்' (Oxygen) எனும் பிராண வாயு தேவையான அளவு இதயத்துக்குக் கிடைக்காது.இதன் காரணம் இதயத்தின் செயல் பாடு பாதித்து Angina எனும் நெஞ்சு வலி ஏற்படலாம். தொடர்ந்து இருதயத்தின் பகுதிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுவது தடை பட்டால் heart attack எனும் மாரடைப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்தக் கொழுப்புச் சில்லுகள் இடம் பெயர்ந்து கட்டிகளாக இரத்தக் குழாய் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்திவிடுவதும் உண்டு.அல்லது இந்த கொழுப்புக் கட்டிகள் உடைந்து அதனால் இரத்தம் உறைந்து இரத்தக்குழாய்களில் தடையுண்டாக்கும். அதன் விளைவாக நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. அளவைவிட அதிகமான கொலெஸ்ட்ரோலின் விளைவாக சீறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) உட்பட டெமென்ஷியா (மறதி நோய்),பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

அதிக கொலஸ்டராலுக்குக் காரணம் என்ன?
  • அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்
  • அதிக மாமிச உணவு உண்பது
  • அதீத உடற்பருமன் (Obesity)
  • உடல் இயக்கக் குறைவான பணிகள்.
  • உடற் பயிற்சியின்மை
  • அதிக தூக்கம்
  • புகைப் பழக்கம்
  • மன அழுத்தம்
  • மதுப் பழக்கம்
  • சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்.
  • கருத்தடை மாத்திரைகள்.
  • வயோதிகம்
  • பரம்பரை -உங்கள் பெற்றோர்களுக்கு மிகை கொலெஸ்ட்ரால் இருக்குமானால் அதற்கு காரணமான ஜீன்களை நீங்களும் பெற்றிருக்கக் கூடும்.
இரத்தத்தில் அதிக அளவில் கொலெஸ்ட்ரோல் இருப்பதன் அறிகுறிகள் என்ன?
பொதுவாக எந்த ஓர் அறிகுறியையும் அது ஏற்படுத்துவதில்லை; ஆகையால்தான் அது "அமைதியான உயிர்க்கொல்லி" என்று அறியப்படுகிறது.
உடல் பருமன் இல்லாதவர்களுக்கு இரத்தத்தில் கொலெஸ்ட்ரால் அதிகம் இருக்காது என்று சொல்ல முடியாது. யாருக்கும் வரலாம். இரத்த சோதனை செய்து பார்த்தால் தான் தெரிய வரும்.20 வயதுக்கு மேல் ஒவ்வொரு 5 வருட இடைவெளியிலும் இரத்தத்தை சோதனை செய்வது நல்லது.

இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோலை எப்படி தீர்மானிப்பது?

இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு என்பது, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் எடுக்கப்பட்ட மாதிரி (sample) இரத்தத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.

அதிலும் 'லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்' (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.

இதன் வாயிலாக
  • இரத்தத்திலுள்ள மொத்த கொலெஸ்ட்ரோல்
  • LDL (தீய) கொலெஸ்ட்ரோல்
  • HDL (நல்ல) கொலெஸ்ட்ரோல்
  • டிரைக்ளைஸெரைட்ஸ்
ஆகியவற்றின் விபரங்களை அறியலாம்.

இரண்டு விதமான அளவுகோல்கள் மூலம் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்படுகின்றது.
  1. எடையின் அடிப்படையில். அதாவது ஒரு டெசி லிட்டரில் உள்ள மில்லி கிராம் (mg/dl) எண்ணிக்கையளவு முறை.
  2. மூலக்கூறு எண்ணிக்கையளவு (molecular count) அதாவது ஒரு லிட்டரில் உள்ள மில்லிமோல்கள் (mmol/L) முறை.
உங்களது கொலெஸ்ட்ரோல் பரிசோதனையில் இந்த இரு விதங்களில் எவ்விதத்தில் உங்கள் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்பட்டது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

1) மொத்த கொலெஸ்ட்ரோல்:

200 mg/dl க்கும் குறைவாக (5.2 mmol/L க்கும் குறைவாக) -- இயல்பான அளவு
200–239 mg/dL ------------------------------ --- எச்சரிக்கைக் கோடு
239 mg/dL க்கு மேல் ------------------------ ----அதிகம்

2) LDL (தீய)கொலெஸ்ட்ரோல்:
130 mg/dl க்கும் குறைவாக (3.37 mmol/L க்கும் குறைவாக) -- இயல்பான அளவு
130–159 mg/dL ------------------------------------------ --- எச்சரிக்கைக் கோடு
160–189 mg/dL ------------------------------------------- --- அதிகம்.
189 mg/dL க்கு மேல் ------------------------------------------ - -- மிக அதிகம்

3) HDL (நல்ல) கொலெஸ்ட்ரோல்:

40 mg/dl க்கும் குறைவாக (1.0 mmol/L க்கும் குறைவாக) --இதய நோய் வர சாத்தியம் இருக்கிறது
40 mg/dl முதல் 60 mg/dl (1.0 mmol/Lமுதல்1.54 mmol/L) -- அதிகம் (நல்லது)
60 mg/dL(1.54 mmol/L) க்கு மேல் --- இதய நோயிலிருந்து பாதுகாப்பு

4) டிரிக்ளைஸெரைட்ஸின் இயல்பான அளவு :

150 mg/dl க்கும் குறைவாக (1.69 mmol/L க்கும் குறைவாக)

நம் உணவில் உள்ள கொழுப்புச் சத்து வகைகள் (Fats) :

திடக் கொழுப்புகள் (saturated):
முக்கியமாக, மாமிச உணவு வகையில் இருந்து திடக் கொழுப்பு வகைகள் கிடைக்கின்றன. Hydrogenated எண்ணெய்களில் இந்த வகை திடக் கொழுப்புகள்தாம் 'தீய' (LDL) கொலெஸ்ட்ரொலை இரத்தத்தில் அதிகப் படுத்துவது.

திடக் கொழுப்புகளை உள்ளடக்கிய உணவு வகைகள் : பால், வெண்ணெய், இறைச்சி, பாமாயில், தாவர நெய்.

திரவக் கொழுப்புகள் (1) (polyunsaturated):

எண்ணெய், விதை மற்றும் தானிய உணவுப் பொருட்களிலிருந்து திரவக் கொழுப்புகள் உருவாகின்றன. திரவக் கொழுப்புகள் LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை இரத்தத்திலிருந்து குறைத்து, இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவை. ஆயினும், திரவக் கொழுப்புகள் நம் இரத்தத்தில் கூடிவிட்டாலும் அவை HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலைக் குறைத்து விடக்கூடும். ஆகையால் கீழ்க்காணும் திரவக் கொழுப்பு வகைகளை அதிகமாகவுமில்லாமல் குறைவாகவுமில்லாமல் நடுநிலை அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

திரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய் உணவு வகைகள் : தேங்காய் எண்ணெய்,சோள எண்ணெய் (Corn oil), சூரியகாந்திப்பூ எண்ணெய் (Sunflower oil), ஸாஃப்பூ (Safflower) எண்ணெய், ஸோயாபீன் எண்ணெய் (Soya been oil).

திரவக் கொழுப்புகள் (2) MonoUnsaturated:

மோனோஅன்ஸேச்சுரேடெட் எனும் திரவக் கொழுப்புகள் தானிய வகைகளில் அதிகம் கிடைக்கின்றன. பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்பு வகைகள் பேன்றே மொனோஅன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளும் இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவையாகும். ஏனெனில் அவை நம் இரத்தத்திலுள்ள LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை குறைத்து HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன. ஆயினும் இவற்றையும் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் உட்கொள்ளவேண்டும்.

திரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய்/தானிய உணவு வகைகள் : ஓலிவம் எனும் ஜைத்தூன் எண்ணெய், கனோலா canola எண்ணெய், பாதாம், முந்திரி, வேர்கடலை, பிஸ்தா பருப்பு போன்றவை.

அமிலக் கொழுப்பு:

ஒமேகா-3 (Omega 3 acids) எனும் கொழுப்பு அமிலங்கள் இன்னொரு வகை பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்புவகை ஆகும். இவை முக்கியமாக மீன் எண்ணெயில் கிடைக்கின்றன. இவையும் இருதய நோய்கள் உருவாவதைக் குறைப்பவையாகும்.

அமிலக் கொழுப்பு மீன் வகைகள் : TUNA (ஐலா/கும்பலா) KING FISH (வஞ்சிரம்/ஐகுரா), SALMON கெண்டை, SARDINES சூடை/மத்தி போன்ற மீன்கள்.

நீரகக் கொழுப்பு (Hydrogenated):
பாலி அன்ஸேச்சுரேடெட் அல்லது மொனொ அன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளுடன் கலந்து நீரகக் கொழுப்பு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் நீரகக் கொழுப்பு, திடநிலைக்கு மாற்றம் பெறுகிறது. இந்த முறை மூலம் அன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளை ஸேச்சுரேடெட் கொழுப்புகளாக அது மாற்றுகிறது. அவசர (fast food) உணவுகளில் நீரகக் கொழுப்பு உபயோகிக்கப் படுகின்றது.
தாவர எண்ணெயால் கொலெஸ்ட்ரால் கூடுமா?
பழங்கள் காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில் கொலெஸ்ட்ரோல் இல்லை.
கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்' போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெய்யிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

எந்த சமையல் எண்ணெய் உடல் நலத்திற்கு சிறந்தது?
கனோலா எண்ணெயில் அதிக அளவில் மொனொஸெடுரேடெட் கொழுப்பு உள்ளது.
சோள எண்ணெய், சூரியகாந்திப்பூ (Sun flower) எண்ணெய், ஸஃப்போலாப்பூ (Saffola) எண்ணெய் மற்றும் ஸோயாபீன் (Soya bean) எண்ணெய்களில் அதிக அளவில் பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்பு உள்ளது.
இயற்கையாகக் கிடைக்கும் தேங்காய் எண்னெயும் இதயத்துக் நல்லது தான்.
Super Foods -The Truth about Coconut - video

'கொலெஸ்ட்ரோல்' அளவைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

சரியான உணவைத் தேர்ந்தெடுத்தல்:
ஸேச்சுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.பட்டினி கிடப்பது என்பது இதன் பொருளல்ல.
பார்க்க இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

தவறாத உடற் பயிற்சி:

ஒவ்வொருவரும் போதிய உடல் அசைவு ஏற்படும் வகையிலான பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. அதனால் நல்ல கொலெஸ்ட்ரோல் (HDL) அதிகரிக்கும்; தீய கொலெஸ்ட்ரோல் (LDL) குறையும்; அளவுக்கு அதிகமான உடலின் எடையைக் குறைக்கவும் உதவும்.
எந்த உடற்பயிற்சியையும் தொடங்கும் முன் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
பார்க்க உடற்பயிற்சி -அறிய வேண்டிய சில உண்மைகள்

புகைப் பழக்கத்தைக் கைவிடுதல்:

புகைப் பழக்கம் இருதய நோய்கள் மற்றும் இதர கேடுகளின் அபாயத்தை இரட்டிக்கச் செய்கிறது. இது நல்ல கொலெஸ்ட்ரொலை (HDL) குறைக்கிறது. தீய கொலெஸ்ட்ரொலை (LDL) அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தைக் (stress) கட்டுப்படுத்துதல்:

மன அழுத்தம் என்பது காலப்போக்கில் கொலெஸ்ட்ரோல் அளவினைக் கூட்டுவதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத்தம் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. உதாரணமாக, சிலர் மன அழுத்தத்தில் இருக்கும்போது தங்கள் மனதை நிலைப்படுத்திட கொழுப்புகள் கலந்துள்ள நொறுக்குத்தீனி கொறிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அவற்றில் உள்ள அதிக அளவிலான திடமான (saturated fats) கொழுப்புகள் கொலெஸ்ட்ரோல் அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது.

மருத்துவம்

ஓரளவிற்கு கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு முக்கியமாகத் தேவை. அதுவே அளவிற்கு மீறினால் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். கொலஸ்ட்ரால் அளவுக்கதிகம் இருந்து ,அதோடு
  • உயர் இரத்த அழுத்தம் (140/90 mg/dL அல்லது அதற்கு மேல்)
  • சர்கரை நோய்.
  • முதுமை -ஆண் 45 க்கு மேல் பெண் 55 வயதுக்கு மேல்
  • பரம்பரை ஜீன் - குடும்பத்தில் தந்தை,சகோதரன் யாருக்கவது 55 வயதுக்கு முன் , அல்லது தாய், சகோதரி யாருக்காவது 65 வயதுக்குமுன் இதய நோய் தாக்கியிருந்தால்.
  • உடல் இயக்கமின்மை, உடல் பருமன்,
  • புகை, மது போன்ற பழக்கம் போன்ற காரணங்கள் இருந்தால் எல்லாம் சேர்ந்து இதயத்தை பதம் பார்ப்பதில் கை கோர்த்துக் கொள்ளு(ல்லு)ம்.
கொலெஸ்ட்ரால் அதிகம் இருந்தும் மேல் கண்ட பிற காரணங்கள் இல்லாததால் இதயம் பழுது படாமல் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் உண்டு. இருந்தாலும் தலைக்கு மேல் கத்தி தான் . இங்குக் கூறப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வழிகாட்டும் விஷயங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் கொலெஸ்ட்ரோல் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க எளிதாக இருக்கும்.

இவற்றுள் எதுவும் பயனளிக்காத நிலையில் உள்ளவர்கள், தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். அவருடைய ஆலோசனையில் மாற்றமின்றி அவர் தருகின்ற மருந்துகளை அதே அளவில் உட்கொள்ள வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பல் வேறு மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் எல்லமே பக்க விளைவுகள் உள்ளது. அதிக விலையுள்ள இம் மருந்துகள் கொலெஸ்ட்ராலைக் குறைப்பதில் உண்மையாகப் பலன் தருவதில்லை என்ற கருத்துக்களும் உண்டு. எல்லா மருந்துகளும் தற்காலிகமாக கொலெஸ்ட்ரால் அளவை ஓரளவு கட்டுப் படுத்த மட்டும் தான் உதவும் . நிரந்தர தீர்வு சரியான உணவுப்பழக்கமும் உடல் உழப்புமே.
போதுமான தண்ணீர் தினமும் அருந்துவது கூட இதயத்தைக் காக்கும்
பார்க்க தண்ணீர் மருத்துவம்

"அளவுக்கு மி்ஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது கொலஸ்ட்ராலுக்கு நன்றாக பொருந்தும்.