Wednesday, 27 February 2013

இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள்!! ஒரு சிறப்பு பார்வை ...

இன்றய உலகில் மது பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக சிறுவர்கள் கூட மது பாவனைக்கு  அடிமையாகி  விட்டார்கள்.சோகம், வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் super market க்கு போய் அங்குள்ள அனைத்து ரக குடிவகைகளையும் வீட்டிற்கு கொண்டு வந்து மூச்சு முட்ட குடித்து விட்டு , மிச்சமெல்லாம் அடுத்த நாள் விடியலில் தான்.  

இவர்கள் தமக்கு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நோய்களை கண்டு கொள்வ தாக தெரியவில்லை. இங்கு நாம் மதுவால் ஏற்பட கூடிய தீங்குகளை பார்க்கலாம்.


மது பிரியர்கள் 

  • சராசரியாக ஒருவர் ஒரு வருடத்திற்கு 152 ounces சாராயம் அருந்துகிறார்
  • அதிகமாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது Wisconsin என்னும் இடத்தில் 7 .4 %
  • Wisconsin என்னும் இடத்தில் சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் 11 .32 %
  • குறைவாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது West Virginia , Utahஎன்னும் இடங்களில்  2 .8 %
  • சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் உள்ளது North Carolina வில்  5 .97 %

வருடத்திற்கு ஒரு நபர் அதிகமாக உபயோகிப்பது ( நாடுகள் )
 

  • 526 ounces   Luxembourg  
  • 463 ounces   Ireland             
  • 397 ounces   UK                   
  • 386 ounces   France            
  • 349 ounces   Russia            
  • 291 ounces   USA                  
  • 263 ounces   Canada         
  • 256 ounces   Japan             
  • 0 .0 ounces   Iran                  
  • 0 .0 ounces   Saudi Arabia   
ஈரான், சவூதி அரேபியா வில்  மது பாவனை தடை செய்யபட்டு உள்ளது

அதிக இறப்பை சந்தித்துள்ள நாடுகள் 

  • 10 -14 %   கிழக்கு ஐரோப்பா, ரஷ்ஸியா
  • 5 -10 %    இந்தோனேசியா, வியட்னாம்
  • 5 -10 %    மத்திய, கிழக்கு அமரிக்கா
  • 2 -5 %      வடக்கு அமரிக்கா
  • 2 -5 %      தெற்கு அமரிக்கா
  • 0 -2 %     மத்திய கிழக்கு
  • 0 -2 %     மேற்கு ஐரோப்பா
  • 0 -2 %     வடக்கு ஆபிரிக்கா

பாடசாலைகளில் மது பாவனை 

  • 6 % ஆன மாணவர்கள்  மது பாவனைக்கு அடிமையாக உள்ளார்கள்
  • 25 % ஆன மாணவர்கள் எங்கே இருந்தோம், குடிக்கும் போது என்ன செய்தோம் என்பதை நினைவு படுத்த முடியாது உள்ளார்கள்.
  • 599000 ஆனோர் ஒவ்வொருவருடமும்  போதையில் உள்ள போது காயப் படு கிறார்கள்.
  • 1700 பேர் மரணத்தை தழுவுகிறார்கள்.

ஆபத்துகள்   ( 20 -30 % )

  • Oesophageal cancer
  • Liver Cancer
  • Cirrhosis of the Liver
  • Homicide
  • Epilepsy
  • Motor Vehicle Accident
HippoCampus என்கிற இடம், எங்களுக்கு குடிப்பதை நிறுத்துவதற்கான Self Control ஐ தருகிறது. அதிகமாக மது அருந்துவது Brain Cell உற்பத்தியை HippoCampusஎனும் இடத்தில் குறைக்கிறது.

குடும்பத்தில் அண்ணன், தம்பி இரட்டையர்களாக இருந்தால் , ஒருவர் மதுவிற்கு அடிமையானால் மற்றையவரும் அடிமையாவதற்கான சாத்தியம் அதிகம். இருவரும் Twins ஆக இல்லாத விடத்து இது குறைவாக உள்ளது.

நோய்களில் ஏற்பட கூடிய அதிகரிப்பு

  •  70%    Throat Cancer             
  •  80%    Colon Cancer          
  •  50%    Lung Cancer             
  • 100%    High Blood Pressure

கர்ப்பிணி தாய்மார்கள் மது அருந்துவது ( Ratio )
National : Native American =  1 : 3 

கர்ப்பிணி தாய்மார்கள் இறப்பது ( Ratio )
National : Native American  =  1 : 6 
  

நல்ல செய்தி

  1. 35 %   ஆன இருதய நோயை குறைக்கிறது
  2. 85 %   ஆன குளிரில் இருந்து எம்மை பாதுகாக்கிறது
  3. 25%    ஆன இறப்பை  குறைக்கிறது .


வாஸ்கோடகாமா, 1498 மே மாதம் கள்ளிக்கோட்டை மன்னர் சமோரினை சந்தித்தபோது, போர்ச்சுக்கீசிய மதுச்சந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர வாய்ப்பு இல்லையே என்று கவலைப்பட்டார். காரணம், அப்போது இந்தியாவில் குடிப்பழக்கம் மிக, மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, மொகலாய மன்னர்கள் உண்மையான முசல்மான்களாக இருந்து, மதுவை 'ஹராம்’ செய்து இருந்தார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னர் ஜஹாங்கீர் ஆட்சியில்தான் போர்ச்சுக்கீசிய, பிரெஞ்சு நாட்டு மதுபானச் சந்தைக்கு இந்தியாவின் கதவுகள் அகலத் திறந்தன. மன்னர் ஜஹாங்கீர் விதவிதமான மது பானங்களைச் சுவைப்பதிலும் மது சுவைப்பவர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். ஆட்சியை வழிநடத்தும் ஒரு மன்னரால் அப்போது தொடங்கி சந்தைப்படுத்தப்பட்ட மது கலாசாரம், இன்று தமிழகத்தில் அரசே மதுபானங்களை கூவிக்கூவி விற்கும் நிலைக்குக் கொண்டுவந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது. 'குடி உயர கோன் உயரும்’ என்ற அவ்வை வாக்கை தப்பாய் புரிந்துகொண்டால் இப்படித்தான்!

இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். மதுவால் ஏற்படும் சமூகப் பிரச்னையால் இந்தியா மிகப்பெரிய அழிவை நோக்கிச் செல்கிறது. அணு, மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக. வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்பதுதான் அரசாங்கத்தின் குறைந்தபட்ச இலக்கு. வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும் என்றுஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் கோடிகளில் டார்கெட் நிர்ணயித்துக் காத்து இருக்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மதுக் கடைகள், மதுக் கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கை  சராசரியாக ஆறு முதல் எட்டு சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது. 1952-ம் ஆண்டில், மது அருந்தத் தொடங்கும் இந்தியரின் சராசரி வயது 19. இன்று அது 13. பன்னாட்டு மது நிறுவனங்களின் மிகப்பெரிய 'ஹப்’பாக மாறிவிட்டது இந்தியா. மாறாக, மேற்கத்திய நாடுகளில் குடிப்பழக்கம் குறைந்து வருகிறது - பிரபல இன்டர்நேஷனல் மருத்துவ பத்திரிகையான லேண்ட்செட் சமீபத்தில் வெளியிட்ட தகவல் இது!
தமிழகத்திலோ, நிலைமை மிக மிக மிக மோசம்.  ஏழு கோடி மக்களில் சுமார் ஒரு கோடிப் பேர் குடிக்​கிறார்கள். சுமார் 49 லட்சம் பேர் தினமும் குடிக்கும் மது அடிமைகள். இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம்.
அதுசரி, அப்புறம் அந்த நண்பன் என்ன ஆனான் என்று சொல்லவே இல்லையே... 'தினைக் கள் உண்ட தெளிதோல் மறவர்’ வழி வந்த அந்த நண்பன், பின்னாளில் டாஸ்மாக் சரக்கின் போதை போதாமல் எங்கோ ஸ்பிரிட் வாங்கி வந்து குடித்து செத்துப்போனான்! 
அரசு மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மோகனை ஒருமுறை யதேச்சையாக பார்த்தபோது அவனைப் பற்றிக் கேட்டேன். ''அவங்கம்மாதான் அவனை இங்க கூட்டிட்டு வந்தாங்க. குடிச்சிட்டு சுயநினைவு இல்லாம இருந்தான். இங்க வர்றப்பயும் குடிக்கணுமானு அவங்கம்மாகிட்ட சத்தம் போட்டேன். 'இங்க கூட்டிட்டு வர எனக்கு வேற வழி தெரியலைப்பா... அதான் நானே அரை பாட்டில் வாங்கிக் கொடுத்தேன்...’னு அழுதாங்க.
நாலு மணி நேரம் கழிச்சு எழுந்தவன், சுற்றிலும் பார்த்துட்டு எழுந்து ஓட ஆரம்பிச்சான். தடுத்த நர்ஸைத் தள்ளிவிட்டதில் அவங்களுக்கும் காயம். ஒருவழியா அவனைப் பிடிச்சு, பெட்டுல கட்டிப்போட்டோம். ஆனாலும், அவன் பிழைக்க அஞ்சு சதவிகிதம்தான் வாய்ப்பு இருந்துச்சு. கணையத்தை ஆல்கஹால் அடைச்சு, ஜீரண நீர் வெளியேற வழி இல்லாம அது பந்து மாதிரி வீங்கி, எந்நேரமும் வெடிக்கத் தயாரா இருந்துச்சு. இரைப்பையோட உள்சுவரான 'மியூக்கஸ்’-ல கிழிஞ்சுபோன பனியன் மாதிரி ஏகப்பட்ட ஓட்டைங்க. உள்ளே எந்த உணவும் தங்காது. கல்லீரல் 80 சதவிகிதம் அழுகிப்போயிருந்தாக்கூட அதை வெட்டி எடுத்துட்டா, அது தானாகவே வளரும் தன்மைகொண்டது. ஆனால், கல்லீரல் முழுக்க ஹெபாடிடிஸ், சிரோசிஸ் பரவி இருந்தது. பத்து நாள் இங்க பொழுதுக்கும் கத்திட்டே கெடந்தவன், ஒருநாள் தப்பிச்சு ஓடிட்டான். அப்புறம் ஏதோ ஸ்பிரிட் குடிச்சு செத்துட்டான்னாங்க...'' என்றார்.
இப்படி என் நண்பன் மட்டும் அல்ல... இன்று தமிழகத்தில் குடிநோயால் மட்டுமே தினமும் அநேகம் பேர் இறக்கிறார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ராஜீவ்காந்தி மருத்துவ​மனையிலும் கணையம், கல்லீரல் வீங்கி, பார்வை சொருகி, பாதி மனிதனாய் வருபவர்களின் எண்ணிக்​கையும் அதிகரித்து இருக்கிறது. அதுசரி, டாஸ்மாக் ஆரம்பித்தபோது 2,828 கோடியாக இருந்த ஆண்டு வருமானம் கடந்த ஆண்டில் 18,000 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதனைச் சாதனையாகச் சொல்லும் அரசு... மருத்துவமனைகளில் செத்து விழும் மனிதர்கள் எண்ணிக்கை உயரும்போதும் அதையும் சாதனையாகச் சொல்லுமா? ஆபத்தை உணராமல் அரசாங்கம் பரப்பும் வியாதியின் கோரம் என்ன தெரியுமா? 

    தெளிவோம்      மது மூலம்!
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் மது தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஓட்கா உருளைக் கிழங்கிலும், சீனாவின் மவுத்தாய் - ஜப்பானின் சாக்கே ஆகியவை அரிசியிலும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச் கோதுமை மற்றும் மக்காச்சோளத்திலும், ஃபிரான்ஸின் ஷாம்பெயின் திராட்சையிலும், கோவாவின் பென்னி முந்திரியில் இருந்தும் தயாராகிறது. இதுதவிர அரபு நாடுகளில் பேரீச்சம் பழத்திலும், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தென்னை, பனையின் பொருட்களில் இருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவான மொலாசஸில் இருந்து மதுவைத் தயாரிப்பது தமிழ்நாடு மட்டுமே!

மது - ஆசிட் வேறுபாடு என்ன?
மதுவுக்கும் ஆசிட்டுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறார் இந்திய பொது சுகாதார சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் இளங்கோ. ''மீத்தைல் ஆல்கஹால் என்பது டாய்லெட் கழுவும் ஆசிட், பெயின்ட், வார்னிஷ் போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனம்.
ஈத்தைல் ஆல்ஹகால் என்பது மதுபானங்களில் போதைக்​காக கலக்கும் ரசாயனம். இவை இரண்டும் அண்ணன் - தம்பி போலத்தான். இரண்டுக்கும் ஒரே வாசனை, ஒரே சுவை. மீத்தைல் ஆல்கஹாலை குடித்தால், ஐந்து நிமிடங்​களில் பார்வை பறிபோகும். 15 நிமிடங்களில் மூளை செயல் இழக்கும். 30 நிமிடங்களில் உயிர் போகும். இதே வேலை​யைதான் ஈத்தைல் ஆல்கஹாலும் கொஞ்சம், கொஞ்சமாக செய்கிறது. மீத்தைலுக்கு நிமிடங்கள் என்றால் ஈத்தைலுக்கு ஆண்டுகள். அவ்வளவுதான்!'' என்கிறார் அவர்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, 22 February 2013

நேரத்தை ஏன் RGO, GMT, UT, UTC என்று அழைக்கிறோம்? ஒரு சிறப்பு தவகல்..

இன்றைய நாளில், நேரத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. எதில் எடுத்தாலும் துல்லியமாகச் செயல்படும் மனிதர்களையும் அவன் மூலையின் குழந்தையான கணினிகளையும், GPS வழிகாட்டிச் சாதணங்களையும், இயந்திர மனிதர்களையும் இன்ன பிற கருவிகளையும் இன்று நம் கண் முன்னே பார்க்கத்தான் செய்கிறோம். இந்த நிலையை உருவாக்கியதன் பின்னனி என்னவாக இருக்க முடியும்?? தேவைதான்..!
அன்றைய தேவை நேரநிர்ணயம். அதாவது பிரிட்டன் ஆண்டுவந்த பகுதிகளையும், தன்னுடைய சொந்த பகுதிகளையும் நேரத்தை வைத்து ஒருங்கிணைக்க வேண்டும். வான இயற்பியல் மற்றும் கடல் பயணங்களின் தேவைகளின் ஊடே நேரத்தையும் அதன் கட்டுப்பாட்டையும் உணர்ந்த அன்றைய பிரிட்டன் அரசாங்கம் நேர நிர்ணயத்திற்காகப் பல உலகளாவிய மாநாடுகளை நடத்தியது. பல ஆய்வுக்கூடங்களைத் திறந்தது. உலகளாவிய பல அறிவியல் அறிஞர்களின் துணைக் கொண்டு வகுக்கப்பட்ட நேரக்கணக்கினையும் அதன் நிர்ணயத்தையும் இறுதியில் நடைமுறைப்படுத்திக் காட்டியது. இதன் விளைவாகக் கிடைத்தது தான் இந்த GMT, UT, UTC களெல்லாம்.
GMT, UT, UTC ஆகியவைகளை நாம் பல இடங்களில் படித்ததுண்டு. படித்துவிட்டு குழம்பியதும் உண்டு. GMT என்றால் என்ன? UT அல்லது UTC என்றால் என்ன? என்ற தெளிவில்லாமல் பல இடங்களில் அறிவியல் சம்பந்தமான நேர கணக்குகளின் புரிதல்கள் தடைப்பட்டிருக்கலாம். இவற்றை பற்றி இங்கு காண்போம்....  
  • RGO- Royal Greenwich Observatory (ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம்)
  • GMT- Greenwich Mean Time (கிரீன்விச் இடைநிலை நேரம்)
  • UT- Universal Time (உலகளாவிய நேரம்)
  • UTC- Universal Time Coordinated (ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்

ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greenwich Observatory):
முன்னதாக 1928 முதல், லண்டனில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தில் இயங்கி வந்த வான் ஆய்வு மையமே ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greewich Observatory- RGO) என்று அழைக்கப்பட்டது. 1948 ல், இந்த ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (RGO), சசெக்ஸில் உள்ள Herstmonceux Castle என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது. (இடம் மாற்றப்பட்டாலும் இதுவும் ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் என்றே அழைக்கப்பட்டது).
இதன் வரலாற்று கட்டிடங்கள் மற்றும் ஆய்வுக் கருவிகள் அனைத்தும் தேசிய கடல்சார் அருங்காட்சியத்துடன் (National Maritime Museum)  இணைக்கப்பட்டு, இதன் பெயர் புராண கிரீன்விச் வானாய்வுக் கூடம் (Old Royal Greenwich Observatory- ORGO) என்றானது.
மீண்டும், 1998ல் ​​சசெக்ஸில் இருந்த RGO வின் இயக்கம் நிறைவு பெற்றதைத் தொடந்து, முன்னர் கிரீன்விச்சில் இருந்த புராண ஆய்வுக்கூடம் (ORGO) மீண்டும் செயல்படத் துவங்கியது. இந்த முறை இதன் பெயர் Royal Obervatory Greenwich (ROG) என்றானது.
கிரீன்விச் இடைநிலை நேரம் (Greenwich Mean Time- GMT):
கிரீன்விச் இடைநிலை நேரம் - GMT என்பது கிரீன்விச் ஆய்வுக்கூடத்தை அடிப்படையாக கொண்டு போடப்பட்டுள்ள தீர்க்கரேகையை (Zero degree Longitude) பொறுத்து அமையப்பெற்ற சூரிய ஓட்டத்தின் அடிப்படையிலான ஒரு கால அளவு ஆகும்.
Image result for greenwich mean timeஅதாவது நடுமட்ட சூரியன் (Mean Sun) சரியாக இந்த ஆய்வுக்கூடத்தின் தீர்க்கரேகையை (Zero degree) ஒத்திருக்கும் பொழுது மணி 12:00 GMT ஆகும். (பூமியின் சுழல் அச்சு 23.5 degree சாய்ந்துள்ளதால், சில நேரம் மெதுவாகவும் சில நேரம் வேகமாகவும் சூரியன் நகர்வது போல் இருக்கும்.  இதை சரி செய்யவும், ஒரே சீரான சூரிய ஓட்டத்தை அளவிட்டு நேரத்தை குறிப்பதற்காகவே 'நடுமட்ட சூரியனின்' ஓட்டம் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.)
இந்த வகையான நேர அளவே அக்காலத்தில் சிவில் மற்றும் கடல் சார்ந்த பயண பயன்பாட்டிற்கு வகுக்கப்பட்டிருந்தது.
உலகளாவிய நேரம் (Universal Time):
1928 ஆம் ஆண்டில் சர்வதேச வானியல் சங்கம் பரிந்துரைத்ததின் படி அன்றிருந்த கிரீன்விச் சிவில் நேரமே (GMT) உலகளாவிய நேரம் (UT) என குறிப்பிடப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் தான் "உலகளாவிய நேரம் (Universal Time)" மற்றும் "உலகளாவிய நாள் (Universal Day)" அறிமுகமானது.
குறிப்பிட்ட வான் ஆய்வுக்கூடத்தில் வகுக்கப்பட்ட நேரத்தை UT0 ("UT-பூஜ்யம்") என்றனர். பூமியின் சுழட்சியினால் ஏற்படும் விளைவுகளை சரிசெய்யும் பொருட்டு, UT0 உடன் அதற்குரிய நாழிகையில் திருத்தங்கள் (லீப் நொடிகள்) சேர்க்கப்பட்டு UT1 அறிமுகப்படுத்தப்பட்டது. UT0 வின் புதுப்பிகப்பட்ட வெளியீடு UT1 எனலாம்.
எனினும் பூமியில் ஏற்படும் பருவ மாற்றம், கடல் சீற்றம்போன்றவற்றால் ஏற்படும் விசையேறுதலுக்காக (Momentum changes) UT1னுடன், சில ஈடேற்றம் செய்யப்பட்டு UT2 உருவாகியது. UT1 ன் புதுப்பிகப்பட்ட வெளியீடு UT2 எனலாம்.
இந்த UT2  நேர அளவிலும் கூட,  ஓத உராய்வு (Tidal Friction), மற்றும் அதிவேக ஓத மற்றும் புயல்கள் (High Tides and Winds) போன்ற அதிபயங்கர மாற்றங்களினால் பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றத்தை தன்னகத்தே உட்கொள்ள முடியவில்லை.எனவே, இந்தச் சூரிய அளவு முறையிலும் நேர நிர்ணயத்தின் துல்லியம் எட்டப்படவில்லை. இந்த வகையான நேர நிர்ணயங்கள், சிவில் பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்புடையதாக இருந்தது.
சூரியனை வைத்தும், சீரற்ற பூமியின் சுழற்ச்சியை வைத்தும் ஒரு துல்லியமான நேர அளவை குறிப்பிட முடியாத காரணத்தால் அறிவியல் விஞ்ஞானிகள் மாற்று வழியை அறிமுகப்படுத்தினர். அது தான், அட்டாமிக் டைம் (Atomic Time) - அணு நேரம்.
ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்- UTC  (Coordinated Universal Time):
சீசியம் (Cesium) அணுக்கதிர்களின் நிலையான அதிர்வலைகளின் உதவியால் நேர அளவீடு கருவி ஒன்றின் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. இது அணு நேரம் (அட்டாமிக் டைம்) என்றும் இதன் அளவு அணு நொடிகள் (அட்டாமிக் செகண்ஸ்) என்றும் அழைக்கப்படுகிறது. இது முற்றிலுமாக ஒரு அறிவியல் சாதனமாகும். ஒரு நாளின் அளவாக 86,400 விநாடிகள் கொண்டு ஒரு நாளின் நேரம் கணக்கிடப்படுகிறது. கணக்கிடப்பட்ட நேரத்திற்கும் சூரியனின் ஓட்டத்திற்கும் (Actual Time based on Sun) எந்த தொடர்புமிருக்காது.
ஆயினும், விண்ணில் அமைக்கப்பட்டுள்ள International Earth Rotation and Reference Systems Service (IRES) பூமியின் ஓட்டதை கண்கானித்து, தேவைப்படும் பொழுது UTC யுடன் லீப் நொடிகளை சேர்க்கவும் பரிந்துரைக்கும். அதாவது, கணக்கிடப்பட்ட நேரத்தோடு அதற்குரிய திருத்தங்களும் இடம்பெறும். (இங்கு லீப் நொடிகள் என்பது பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை/ பின்னடைவுகளை உள்ளடக்கி, கூட்டவோ குறைக்கவோ செய்யப்படும் மணித்துளிகளின் அளவு ஆகும்).
இவ்வாறு பூமியின் சுழற்சிற்கேற்ப கணக்கிடப்பட்ட நேரம் அவ்வப்பொழுது ஒத்தியக்கப்படுவதால் இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்- UTC  (Universal Time- Coordinated) எனப்படுகிறது.
அணு நேரம் UTC, சூரிய நேரமான UT1 ஐ ஒத்து அதிகபட்சமாக 0.9 நொடிகள் வரையில் தான் வித்தியாசத்தில் இருக்க முடியும். இரண்டிற்கும் அதிகபட்சம் 0.9 நொடிகள் வரையில் வித்தியாசம் இருக்கும் என்பதால் மிகத்துல்லியமான GPS, வானியல் கணக்கு போன்ற பயன்பாட்டிற்கு UTC மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். வானியற்பியல் கணக்கிற்காக நாம் பயன்படுத்து UTC நேர கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, GMT ---> UT0 ---> UT1 ---> UT2. தற்பொழுது உள்ள GMT ---> UT2 ஆகும்.
UTC கணக்கிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நேர நிர்ணயம் ஆகும்
சுருங்கச் சொன்னால், GMT அடைந்த பரிணாம வளர்ச்சியே UTC எனலாம் ! அளவீடு முறை மட்டும் வேண்டுமானால் மாறுபட்டிருக்கலாம்..
நன்றி : ராசிக் (அறிவியல் ஆயிரம்)

Wednesday, 20 February 2013

பொடுகு (Dandruff) தொல்லையா? ஒரு தீர்வு..

பொடுகு தோன்றுவதற்குப் பெயரும் காரணம் தோலில் எண்ணெய்த் தன்மை இருப்பதால் PO VALE எனப்படும் பூசண பீடிப்பு(பங்கஸ்)கிருமிகள் உண்டாகி அவை வளர்ந்தது பொடுகு உண்டாகும். இது அதிகமாக நெற்றி, மூக்கு மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக ஏற்படும். இதற்கு Seborrhea dermatitis. என்று பெயர். 


பொடுகு என்றால் என்ன?
           தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக  செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?
1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது.  நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது..

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் இப்பொடுகு வருகிறது

5. "பிடி ரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்ணியிர் கிருமியினாலும் இந்தபொடுகு நோய் வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும்.  இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம்  செய்யலாம். இது பொடுகுபெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.
"பிடிரோஸ்போரம் ஓவல்"  என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகுதொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுதொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல்  கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.


பேன் தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

1. வசம்பை தண்ணீர் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து கொஞ்சநேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்

2. வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து கொஞ்ச நேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்.

இப்படி செய்தால் பேன் செத்து போகும்.

முடி நீளமாகவும் ஸ்ராங்காகவும் வளர என்ன செய்ய வேண்டும்?

1. முட்டை வெள்ளை கருவை தனியாக எடுக்கனும் இதனுடன் நல்லண்ணெய் கொஞசம் கலக்கனும் தலையில் தேய்த்து ஊற வைக்கனும் அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து குளிக்கனும்

2. பாசிப்பருப்பு வெந்தயம் இரண்டையும் தண்ணீரில்  ஊறவைத்து பின்பு மாவாக அரைத்து கொள்ளவும். தலையில் நல்லெண்ய் தேய்த்து அரை மணிநேரம் கழித்து அரைத்த மாவை தலையில் தேய்த்து குளிக்கவும். இதனால் கூந்தல் அழகாககும் பளபளப்பாகவும் இருக்கும்.



கூந்தல் மிருதுவாக இருக்க…
1.வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
2.நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.
3.டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.