Wednesday, 20 March 2013

சுயவேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் இலவச பயிற்சி நிலைய முகவரிகள்!!!

பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் டெக்ஸ்டைல் துறையில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி.



 புதுதில்லி இந்தியஅரசு கைவினைப் பொருட்கள் வளர்ச்சி  ஆணையகமும், பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியும் இணைந்து டெக்ஸ்டைல் துறையில் கைவினை கலைஞர்களின் திறமையை மேம்படுத்தவும் நவீன இயந்திர தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் நோக்கமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புக்கள் முறையே ஒரு மாதம் மற்றும் நான்கு மாத கால பயிற்சி அளித்து வருகின்றது. இந்த பயற்சியில் டெய்லரிங், எம்ராய்டரி, கம்பியூட்டர் கொண்டு ஆடைகள் வடிவமைக்கும் முறை(CAD) , பிரிண்டிங் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது கலைஞர்களுக்கு கூலி இழப்பு தொகையாக மாதம் ரூ2000/=  அளிக்கப்படுகிறது. மேலும் கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு , மற்றும் பயிற்சிக்கான சான்றிதழும் பயிற்சியின் முடிவில் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியானது கடந்த 29-01-2009 முதல் தொடர்ந்து  ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடத்தபடுகிறது.

தொடர்பிற்கு
துறைத் தலைவர்,
டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி
பீளமேடு
கோவை.641 004.
அலைபேசி எண்: 98654 34528

இப்பதிவை படிக்கும் அன்பான வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள். பிறர்க்கு இச்செய்தியை தெரிவியுங்கள் / பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக சுயுதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.


மசாலாப் பொடிகள் தயாரிப்பு - ஒருநாள் பயிற்சி



மிக வேகமான நகர வாழ்கையில் முன்பு போன்று மசாலா பொருட்களை வறுத்து அரைத்த காலம் முடிந்துவிட்டது. இன்று எல்லாவற்றிற்கும் பொடி என்ற நிலைமை பொதுவாக எல்லா தென்னிந்திய சமயலைறகளிலும் காணமுடிகிறது. ஒரு சில நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமாக இருந்தாலும் பல தயாரிப்புக்கள் அவ்வாறு இருப்பதில்லை. பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மசாலா மூலப்பொருட்களை வாங்கி அதனை பொடிகளாக மதிப்பைக் கூட்டி நமது உபயோகத்திற்கும், வியாபார ரீதியிலும் விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். சாம்பார் பொடி, ரசப் பொடி, கரம் மசாலாப் பொடி, எள்ளுப் பொடி, தேங்காய்ப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் மசாலா, மீன் மசாலா, போன்ற பல பொடிகளை தயாரிக்கவும் பின் அதனை தரம் காண அக்மாரக் கிரேடிங் கற்றுத் தரப்படும். வீட்டிலிருக்கும் பெண்கள்மாணவர்கள்சுய உதவி குழுக்கள்மாற்றுத் திறனாளிகளுக்கு பயன் தரும். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். 



தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506


வீடுகளில் போன்சாய் வளர்ப்பு - - ஒருநாள் பயிற்சி.



இந்திய பொருளாதார வளர்ச்சியில் பல புதிய பொழுதுபோக்குகள் நடுத்தர, மேல்நடுத்தர மக்களிடம் தற்சமயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று போன்சாய் வளர்ப்பு. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவை மிக பிரபலம். இந்தியாவில் வீடுகளில் பூஜை அறை போன்று  ஜப்பான் வீடுகளில்  டோகோனோமா” (Tokonoma) என்றழைக்கப்படும் வழிபடும் இடங்களில் போன்சாய் மரங்கள் வளர்க்கப்பட்டு அவர்களது இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த அளவிற்கு அங்கு போன்சாய் பிரபலம் பெறுகிறது.

இக்கலைக்குத் தேவையான   தாவர வகை, தேவையான மண்வகை, ஊட்டசத்து, நோய், பல்வேறு வகையான வளர்ப்பு முறைகள் (Different styles of bonsai ) போன்றவைகளை தெரிந்து கொண்டால் சிறப்பாக நாமே போன்சாய் மரங்களை வளர்க்கலாம். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். பங்கேற்று பயன் பெறுவீர்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506


காய், கனிகளுக்கு மதிப்புக் கூட்டுதல்- ஒருநாள் பயிற்சி.



வேளாண்மை பொருட்கள் குறிப்பாக காய்கள், கனிகள் மிக விரைவாக கெட்டுவிடும். ஆனால் அதனை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனை செய்யும் போது நல்ல விலை கிடைப்பதுடன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அதிக நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் காய், கனிகளை ஜீஸ், ஜமாம், ஜெல்லி, சாஸ், கெட்சப் மற்றும் ஊறுகாய் என மதிப்பைக் கூட்டி வீட்டு உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டு எஞ்சியதை விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். வீட்டிலிருக்கும் பெண்கள்மாணவர்கள்சுய உதவி குழுக்கள்மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றது.  இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். 
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

அழகு தோட்டம் அமைத்தல்- ஒருநாள் பயிற்சி.



தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
P. 44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

 


காளான் வளர்ப்பு - ஒரு நாள் பயிற்சி.



தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506


காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் வணிகம்


உலக மயம், தாராளமயம், தனியார் மயம்  என்ற திசையில் உலக வணிகம் பயணிக்க ஆரம்பித்தவுடன் காப்புரிமை (Patent ), அறிவுசார்ந்த சொத்துரிமை (Intellectual Property Rights IPR ), பொருட்களுக்கான பூகோள பதிவுரிமை (Geographical Indications of Goods - GI) என பல உரிமைகளை தற்சமயம் பெற்றால்தான் வேளாண்மை வணிகம் செய்யமுடியும் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது. இதில் நாம் உரிமை கோரவில்லை என்றால் ஏதோ ஒரு நாட்டில் இதற்கு உரிமை கோரி பெற்றுவிடுகின்றனர் (உ.தா. மஞ்சள், பாசுமதி அரிசி, உரிமை மீட்டு எடுக்கப்பட்ட வேம்பு ). இதில் தனிநபர் இழப்புடன் நாட்டிற்கும் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக விவசாயத்தில் நமது பரம்பரை ஞானம், இடத்திற்கேற்ற பதிவுரிமை, மதிப்பூட்டும் தொழில்நுட்பம், கருவிகள் போன்றவற்றிற்கு காப்புரிமை உண்டு. ஆனால் வழிகாட்டுதல் இன்மை, அதிக பொருட்செலவு போன்ற காரணங்களால் பொதுவாக நாம் வேளாண்மை சார்ந்த உரிமைகளை பெறுவதில்லை.

இது பற்றிய வழிகாட்டுதலுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் ஒரு துறையை ஏப்ரல் 2010 இல் உருவாக்கி கீழ்கண்ட சேவைகள் தருகின்றனர். தொடர்பு கொண்டு பயன் பெறுவோம்.

காப்புரிமை பெற்றுத்தருதல் (Patent )

அறிவுசார் சொத்துரிமை ஆலோசனை வழங்குதல் (IPR)

பூகோள பதிவுரிமை பெற்றுத் தருதல் (GI)

ஏற்றுமதியாளர்களுக்கான பயிற்சி அளித்தல்

வேளாண் வணிகம் சார்ந்த ஆலோசனை வழங்குதல்

வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் அறிவுரை வழங்குதல்

தொடர்புக்கு:-

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வணிகம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம்,
கோயமுத்தூர் – 641 003
தொலைபேசி : 0422- 6611360

மேலும் இது பற்றி அறிந்துள்ள கொள்ள :-

http://indiapatents.blogspot.com


மாடித்தோட்டம் - ஒருநாள் பயிற்சி.

பொருளாதார சீர்திருத்தங்கள்?? சட்டங்கள், காலநிலையில் வேறுபாடு, இயற்கை சீற்றம், கொள்ளையடிக்கும் இடைத் தரகர்கள், சில்லறை வணிகத்தில் கூட நுழைந்து லாபம் தேடும் பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகள், உரத் தட்டுப்பாடு என பல்வேறு காரணங்களால் சிறு ,குறு விவசாயம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது. விளைவு சென்ற மாதம் வெங்காயம் ரூ.100/ =, முருங்கைக் காய்  ரூ.200/= என வாங்கினோம். வருங்காலத்தில் இது ஒரு தொடர் கதையாக மாறலாம். இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது நகர மக்களே!! பாதிப்பை ஓரளவு குறைப்பதற்கு நகரங்களில் மாடித்தோட்டம் ஒரு மாற்றாக அமையும் இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். பங்கேற்று பயன் பெறுவீர்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506


மண்புழு உரம் தயாரிப்பு – ஒரு நாள் பயிற்சி.


ஒரு கல்லில் இரு மாங்காய் என்பார்கள். அது போன்று இந்த மண்புழு உரம் தயாரிப்பு என்பது மக்கக்கூடிய சுற்றுச் சுழல் மாசுபாட்டை உண்டாக்கும் நம் வீட்டுக் கழிவுகளை நம் இடத்திலேயே மண்புழுக்களின் உதவியால் சத்துள்ள உரமாக மாற்றுவது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தை  நமது செடிகளுக்கே இட்டு இயற்கை காய்கறிகளை நாம் உற்பத்தி செய்யலாம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள்மாணவர்கள்முதியோர்சுய உதவி குழுக்கள்மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மிகப் பெரிய அளவிலும் வங்கிக் கடன் உதவியுடன் மேற் கொள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506


காளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி

காளான் வளர்ப்பு வருடம் முழுவதும் மிக சிறிய இடத்தில் மற்ற காய்கறிகளைப் போல் வளர்க்க முடியும். உணவிற்கான காளான்கள் மட்டுமின்றி மருத்துவ குணமுடைய காளான்களும் உண்டு. விலை மற்றும் தேவையின் அடிப்படையில் மிகுதியாக நகர்புறங்களில் சந்தை வாய்ப்பு உள்ளது. விரைவாக கெட்டுவிடும் என்பதால் வளர்ப்பிடம் நகர்புறத்தின் அருகில் இருப்பது நலம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கோள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506

வீட்டுத் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.

உலகின் பல நாடுகளிலும் “வீட்டுத் தோட்டம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் இது வாய்ப்பாக அமையும்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

கிராம புறங்களில் மழை காலங்களில் இயற்கையாக காளான் தோன்றும் அவற்றை சேகரித்து உண்பார்கள். ஆனால் இன்று அவற்றை வருடம் முழுவதும் மிக சிறிய இடத்தில் மற்ற காய்கறிகளைப் போல் வளர்க்க முடியும். உணவிற்கான காளான்கள் மட்டுமின்றி மருத்துவ குணமுடைய காளான்களும் உண்டு. விலை மற்றும் தேவையின் அடிப்படையில் மிகுதியாக நகர்புறங்களில் சந்தை வாய்ப்பு உள்ளது. விரைவாக கெட்டுவிடும் என்பதால் வளர்ப்பிடம் நகர்புறத்தின் அருகில் இருப்பது நலம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கோள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506



அழகு தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி.

நகரங்களில் நிலபகுதியை தாவரங்களுடன் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு எழிலூட்டி இயற்கையை மனிதனின் இரசனைகேற்ப உருவாக்கி கொஞ்சம் சுற்றுச்சுழலை காப்பாற்றும் கலை (Landscape Gardening.). இன்று மிக பிரபலமாகி வரும் கலை. மிக எளிதாகவும் பொருளீட்ட உதவுகிறது. இதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி.

பேராசிரியர் மற்றும் தலைவர்
நகர்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை - 600 040

தொலைபேசி : 044 - 2626 3484,  044 - 42170506


இதில் சில ஆச்சரியங்களையும் அனுபவித்திருக்கிறேன். இந்து நாளிதழில் “ஸாமியா” என்ற பெரிதாக வளர்ந்த செடி ரூ1000/= என்று படித்தேன்.
நாட்டில் இவ்வளவு விலை கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம். சென்ற வருடம் கேரளா சென்றிருந்த போது அதனையும் முறியடித்தது மிக சிறிய “அக்லோனிமா” என்ற செடி. ரூ.5000/= என்ற விலையுடன் விற்பனைக்கு இருந்தது.

இந்தியாவில் தான் இருக்கிறோமா ? என்று எண்ணினேன். உங்களுக்கும் என் எண்ணம் போன்று தோன்றிருக்கும். எனவே இந்த எழிலூட்டும் கலை ஆச்சரியங்கள் நிறைந்த துறை.

மரச்சாகுபடி மற்றும் தரிசு நில மேம்பாடு - ஒரு நாள் விழிப்புணர்வு இலவசக் கருத்தரங்கம்

பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி (சத்தியமங்கலம் ) பயோடெக்னாலஜி துறை

மற்றும்

சேசாயி காகித ஆலை ஈரோடு

இனைந்து நடுத்தும் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் . மரசாகுபடியின் முக்கியத்துவம், பண்ணைக் காடுகள் , தரிசுநிலத்தில் சவுக்கு சாகுபடி வெற்றிக் கதை, மரச் சாகுபடிக்கு வங்கிக் கடன்கள் போன்ற முக்கிய தலைப்புக்களில் வல்லுனர்கள் பேசவுள்ளனர். விவசாய பெருங்குடிமக்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.

தலைப்பு : மர சாகுபடி மற்றும் தரிசுநில மேம்பாடு
இடம் : டெக்ஸ்டைல் செமினார் ஹால், பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி (சத்தியமங்கலம் )
நாள் :
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
அனுமதி : இலவசம்.

முன்பதிவிற்கு :

முனைவர். N.S. வசந்தி
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 94437 74447, 97506 21289

முனைவர். G.S. முருகேசன்
உதவிப் பேராசிரியர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 97151 18120

திரு. சண்முகம்
தலைவர் (சுற்றுச் சுழல் )
சேசாயி காகித ஆலை
ஈரோடு
அலைபேசி : 94433 40236

ஓர் வேண்டுகோள் : உங்களுக்கு தெரிந்தவர்களுடன் இச் செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் 


பயிற்சி நிலைய நிர்வாகக் கட்டிடம் 
கோவை - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பெரியநாயக்கன்பாளயத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் புதுப்புதூர் பயிற்சி நிலையம் உள்ளது. Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் என்ற பெயரில் 2.5 ஏக்கர் நிலத்தில் மரக் கூட்டங்களுக்கிடையே அமைதியான சுழலில் இங்கு இயங்கி வருகிறது.

தொடங்கப்பட்ட ஆண்டு : 1991
இதுவரை பயிற்சி பெற்றவர்கள் : 11,721
தொழில் புரிவோர் : 6678

திரு. K. மோகன் (இயக்குனர்)

உழவர் பயிற்சி நிலையம்

தையல் பயிற்சி பெறும் பெண்கள்

இந்த பயிற்சி நிலையத்தில் பயின்ற இளைஞர்கள் இரவு பள்ளி நடத்தி கடந்த 10 வருடங்களாக ஏழைக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் உதவி வருகிறார்கள். உழவர் பயிற்சி நிலையமும் அமைந்துள்ளது. தேர்வில் தோற்றவர்கள், படிக்க வசதியின்றி மேல் படிப்பிற்கு செல்லாதவர்கள், பயிற்சியின்றி குறைந்த கூலிக்கு வேலை செல்வோர் என்று நாம் சந்திக்கக் கூடிய இள வயதினர் இந்த காலக் கட்டதில் சரியான வழிகாட்டுதல் இன்றி விரக்தியில் இருப்பார்கள். இது சரியான தருணம் என்று எண்ணுகிறேன் இவர்களை கண்டுபிடியுங்கள், உதவிடுங்கள், ஊக்கபடுத்துங்கள்.

திரு. K. மோகன் (இயக்குனர்)
Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
புதுப்புதூர்
பெரியநாயக்கன்பாளயம் (வழி)
கோவை 641 020

தொலைபேசி எண் : 0422-2692080 .
அலைபேசி எண் : 98651 02185



கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் - (1) 

கிராம வாழ்வாதாரம் சுத்தமான நிலம், நீர் காற்று. உலகமயம், தாராளமயம், லாபம் மட்டும் என்ற மாய பொருளாதார கோட்பாட்டில் அடிப்படை வாழ்வாதாரங்களை பன்னாட்டு நிறுவனங்களும், நம் நாட்டு நிறுவனங்களும் போட்டிபோட்டு அழிப்பதோடு பெரிய மலைகளையே கூட விழுங்குகின்றனர். விளைவு கிராம மக்கள் வேலை தேடி நகரை நோக்கி வருகிறார்கள், பழங்குடியினர் நகரத்திற்கு வருவதை தவிர்த்து கடவுளாக வணங்கும் மலைக்கும் மண்ணுக்கும் போராடி உயிரை இழக்கிறார்கள். இது போன்ற நிறுவனங்களிடம் சமூக பொறுப்புக்களை காண முடியாது.


ஆனால் அத்தி பூத்தாற் போன்று சில நிறுவனங்கள் உண்மையிலேயே கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் கனரா வங்கியின் சேவை பாராட்டுதலுக்குரியது.

இலவசமாக கிராம வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை கனராவங்கிநூற்றாண்டு கிராம வளர்ச்சி டிரஸ்ட் மூலம் 26 இடங்களில் நாடு முழுவதும், தமிழகத்தில் 5 இடங்களிலும் நடத்துகின்றனர். தையல்பயிற்சி முதல் புகைப்பட கலை, கம்யூட்டர் என நிறைய பயிற்சிகள் உண்டு.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்.
தங்குமிடம், உணவு, பயிற்சி இலவசம்
வங்கிக்கடன், அரசு மானியதிற்கு உதவுதல்
வியாபாரம் / விற்பனைக்கு வழிகாட்டுதல்.
பயிற்சிக்குப் பிறகு 2 - 3 ஆண்டுகளுக்கு தொடர்பு மற்றம் ஆலோசனை

வயது வரம்பு : 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ம் வகுப்பு
முன்னுரிமை : அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்.
தாழ்த்தபட்டவர்கள்,/ பழங்குடியினர் / மிகவும் பிற்பட்ட / பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை இளைஞர்கள்/பெண்கள் பயிற்சியில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : வெள்ளைத்தாளில் பெயர், முகவரி, கல்வித்தகுதி,இனம், தேவையான பயிற்சி போன்றவற்றை எழுதி கல்வி இருப்பிடச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


==============================
திரு. K. மோகன் (இயக்குனர்)
Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
புதுப்புதூர்
பெரியநாயக்கன்பாளயம் (வழி)
கோவை 641 020
தொலைபேசி எண் : 0422-2692080 .
அலைபேசி எண் : 98651 02185
===============================
திரு.R. கல்யாணகிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி வளாகம்
அசோகபுரம்
ஈரோடு.- 638 004
தொலைபேசி எண் : 0424- 2290338
அலைபேசி எண் : 98404 95745

==============================
திரு.B.M. கிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
8/10, USSS அனிமேசன் சென்டர்
சேரிங் கிராஸ்
உதகமண்டலம்.- 643 001
தொலைபேசி எண் : 0423-2446559
அலைபேசி எண் : 94442 59125
===========================
திரு. கௌரிசங்கர் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
83A, ஜான் பால் காம்பெளக்ஸ்
DMSSS பில்டிங்
நேருஜி நகர்
திண்டுக்கல் -624 001
தொலைபேசி எண் : ---
அலைபேசி எண் : 94441 89677
===========================
திரு. தர்மசீலன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
15, பூமாலை வணிக வளாகம் ,
உழவர் சந்தை எதிர்புறம்
தேனி -
தொலைபேசி எண் :
அலைபேசி எண் ; 94420 21363


வலைப்பதிவர்களுக்கும் இப்பதிவைப் படிக்கும் அன்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் :
இச்செய்தினை உங்கள் வலைப்பூவில் இடுங்கள் அல்லது படிக்க வசதியின்றி இருக்கும் ஆர்வமிக்கவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் குறிப்பாக கிராமங்களில் இருக்கும் தன்னார்வ தொண்டு நிறவனங்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள்.

தன்னிறைவான கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு...



இதுபோன்று நல்ல வாய்ப்புக்கள், வசதிகள் நிச்சயம் உங்கள் பகுதியில் இருக்கும். நீங்கள் அறிந்திருந்தால் பதிவிடுங்கள் (எனக்கும் தெரிவியுங்கள்). ஆரோக்கியமான தன்னிறைவு கிராமங்களை உருவாக்குவோம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.



Monday, 18 March 2013

விளாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு கேடா? ஒரு சிறப்பு பார்வை..


விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும்.விளாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.  


செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக், ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.
எலும்புகளை பலப்படுத்தும்:
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது. ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும். விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். நல்ல பசியை ஏற்படுத்தும். வயதானவர்கள் விளாம்பழம் உண்டு வந்தால், அவர்களுக்கு ஏற்படும் ‘ஆஸ்டியோபெரோஸிஸ்’ என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது. பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரண சக்தியைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.
வசியம் போக்கும்:
விளாம்பழத்தை ஒட்டோடு இருபத்தியொருநாள் ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்ணாசை மறந்து விடும். கெட்ட பெண்களினால் இடம்பெற்ற வசிய மருந்துகளும் முறிந்துவிடும்.
பழுக்காத விளாங்காயைத் தண்­ணீர் விட்டு அவித்து, அதை உடைத்து, உள்ளே உள்ள சதையை எடுத்து காலை வேளையில் மட்டும் ஐந்து நாள்வரை தொடர்ந்து கொடுத்து வந்தால், சீதபேதி குணமடையும். வெறும் பேதியைகூட நிறுத்திவிடும். பேதிக்கு இது கைகண்ட மருந்து.
இதயத்திற்கு இதமளிக்கும்:
இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது.
இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளிக்கும். ஜீரணக் கருவிகளை தக்க நிலையில் பாதுகாக்கும். அறிவுக்குப் பலம் தரும். மன சந்தோஷத்தையும், மனோ தைரியத்தையும் அளிக்கும்.
பித்தம் போக்கும்:
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும்.
இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.
தினசரி ஒரு பழம் வீதம் 21 தினங்களுக்கு சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும். ஒருவர் சாப்பிடும் விளாம்பழத்தை மற்றவருக்கு பங்கு தரக்கூடாது. காரணம் விளாம்பழத்தில் உள்ள ஒரே ஒரு விதைக்கு மட்டுமே பித்தத்தைப் போக்கும் சக்தி உண்டு. அந்த குறிப்பிட்ட விதை மற்றவருக்குப் போய்விட்டால், பித்தத்தைப் போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
முகம் இளமையாக மாறும்:
வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பளம் சிறந்த மருந்தாகும்.
இரண்டு டீ ஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீ ஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.
விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும் காணாமல் போகும்.
மரப் பட்டையைப் பொடித்து தண்­ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.
பட்டுப்போன்ற கூந்தல்:
வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு! காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் – 100 கிராம், சீயக்காய், வெந்தயம் – தலா கால் கிலோ.. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.
தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப்புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது. வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
விளாம் மர இலையை தண்­ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 14 March 2013

உனது அண்ணி ஓர் அந்நியப் பெண்ணா? ஒரு இஸ்லாமிய பார்வை ...



ஓர் அந்நியப் பெண்ணிடம் ஒருவன் பேசும் போதுஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொள்ளும் போது மிக மிக ஜாக்கிரதையாகப் பேசுகின்றான். தொடர்பு கொள்கின்றான் ஆனால் தன் சகோதரனின் மனைவியிடம் இந்த ஜாக்கிரதையை எடுத்துக் கொள்வது கிடையாது.  


பேராபத்து நிகழ்வதற்கு மிக முக்கியமான காரணம் பெண்ணின் ஆடையலங்காரம்! தனது கணவனின் சகோதரனேயானாலும் இஸ்லாம் பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கின்ற அந்த உடை அமைப்புடன் தான் அவன் முன் காட்சியளிக்க வேண்டும் என்ற சட்டம் பேணப்படுவதில்லை.
அதிலும் இந்தக் காலத்தில் அணிகின்ற கண்ணாடி போன்ற உடைகள் உடல் உறுப்புக்களை அப்படியே பிரதிபலிக்கின்றன. இந்நிலையில் தனிமையில் சந்திப்பதுகிண்டலடித்துப் பேசுவதுபோன்றவை தவறான எண்ணத்திற்கு வழி வகுத்து விடுகின்றன.
இவை முற்றிலும் தடுக்கப்பட்ட காரியங்கள் என்று இன்னும் இந்தச் சமுதாயத்திற்குப் புரிய வைக்கப்படவில்லை.

கணவன் மைத்துனி விஷயத்திலும்மைத்துனி தன் சகோதரியின் கணவன் விஷயத்திலும் கவனமாக நடக்க வேண்டும். காரணம் இதுவெல்லாம் ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய வாசல்களாகும்.

இந்தக் கலாச்சாரம் கைமீறிப் போய் சில இடங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் கூட அக்காவையும் தங்கைகளையும் ஒரே நபர் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்க்கை நடத்துவதைக் காணமுடிகின்றது.

இதற்குக் காரணம் வரைமுறை வரம்பற்ற பழக்கம் தான். 
சில ஆண்டுகளுக்கு முன்னால் புதுவையில் ஒரு கோர நிகழ்ச்சிநடைபெற்றது. இந்தக் கோர நிகழ்ச்சி புதுவையை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையும் சேர்த்து உலுக்கியது.

கமல்ஷா என்பரின் மனைவியான பார்வதிஷாவை கமல்ஷாவின் தம்பியே கற்பழித்துபடுகொலை செய்தான்.

பரபரப்பாக இந்தச் செய்தி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகஎழுதப்பட்டது. புதுவையில் மட்டுமல்ல! ஒட்டு மொத்த இந்தியாவில்ஏன் உலகின் பல பகுதிகளில் இந்தக் கற்பழிப்புப் படலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

புதுவையில் நடந்த நிகழ்ச்சி வெளியே அப்பட்டமாகத் தெரிந்து விட்டது. இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் இருட்டில் மறைக்கப் பட்டுக் கிடப்பவை ஏராளம்! ஏராளம்!


அண்ணன் மனைவியான அண்ணியிடம் தம்பியும்அல்லது தம்பியின் மனைவியிடம் அண்ணனும் கேலி கிண்டல் பேசுவது,அதிலும் குறிப்பாக இரட்டை அர்த்தத்தில் ஆபாசமானவார்த்தைகளில் பேசுவது என்பது தொடர்கதையான ஒன்றாகி விட்டது.

நமது சமூகத்தில் இது ஒப்புக் கொள்ளப் பட்ட நடவடிக்கையாகி விட்டது. எந்த ஓர் ஆன்மீகவாதியும்அறிஞரும்மார்க்கமும்,மதமும் இதைத் தப்பாகக் காண்பது கிடையாது.


இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தனது எக்ஸ்ரே பார்வை மூலம் இதை ஒரு கடுமையானசமுதாயக் கட்டமைப்பை அரித்துத் தள்ளும் புற்று நோய் என படம் பிடித்துக் காட்டுகின்றது.

இதற்குக் காரணம் இந்த மார்க்கம் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்ட மார்க்கமாகும். எல்லாம் வல்லஅல்லாஹ்மனித மனங்களில் சஞ்சரிக்கின்ற சஞ்சலங்களை,எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்தவன். அதனால் தான் இதை மாபெரும் தீமை என்று அல்லாஹ் தன் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் அறிவிக்கச் செய்கின்றான்.


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்லவேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்'' என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: புகாரி )

அண்ணியும் அபாயமும்

தமிழ்நாட்டில் ஒரு சுலோகம் கூட சுற்றி வருகின்றது.
 ''தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டிஅண்ணன் பெண்டாட்டி அரை பெண்டாட்டி'' என்பது தான் அந்தச் சுலோகம். இது சர்வ சாதாரணமாக தமிழக மக்களிடம் சுற்றி வருகின்றது. இங்குள்ளகலாச்சாரம் எந்த அளவுக்குப் போயிருக்கின்றது என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக் காட்டாகும்.


பெற்ற தாய்தந்தையர் கூட இதைப் பெரிதாக மட்டுமல்ல! ஒருபொருட்டாகக் கூடக் கருதுவது கிடையாது. சின்னஞ் சிறுசுகள் ஏதோ கிண்டல் பேசுகின்றார்கள் என்ற ரீதியில் இதைக் கண்டு கொள்வது கிடையாது.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்ற உறவுகளை விட கணவனின் உறவினர்கள் தான்மரணத்திற்குச் சமம் என்று பிரகடனப் படுத்துகின்றார்கள்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஓர் இறை விசுவாசி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தனது வாழ்க்கையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கட்டளையை முழுமையாக வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பின்பற்ற வேண்டும்.
ஏதோ அல்லாஹ் தொழச் சொல்கின்றானாதொழுகின்றோம். ஆனால் இதுபோன்று காலம் காலமாகப் பின்பற்றி வரும் கலாச்சாரத்தை விடச் சொன்னால்இந்தக் கட்டளையெல்லாம் எங்களுக்கு சாத்தியப்பட்டு வராது என்று ஒதுங்குபவர்கள் இறை நம்பிக்கையாளர் அல்லர்.


வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுக்கின்றீர்களாஎன்று அல்லாஹ் யூதர்களைக் கண்டிக்கும் விதமாக தனது திருமறையில் (2:85) வசனத்தில் கூறுகின்றான். எனவே அது போன்ற நிலை நம்மிடம் ஏற்பட்டுவிடக் கூடாது.

இரு சக்கர வாகனத்தில் இணைந்திருத்தல்..
கொழுந்தன் – அண்ணி உறவில் காணப்படும் மிக வேதனைக்குரிய விஷயங்களில், மிக பகிரங்கமாக நடக்கும் செயல்களில் ஒன்று தான், சகோதரன் மனைவியை இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்வது! இப்படி இரு சக்கர வாகனத்தில் இணைந்து செல்கையில் ஒருவரின் மேனி இன்னொருவரின் மேனியில் ஒட்டாமல் உரசாமல் வண்டியை ஓட்ட இயலுமா? அதிலும் குறிப்பாக பிரேக் போடும் போதும் மேடு பள்ளங்களிலும் இந்த உரசல்கள் நிகழாமல் இருக்குமா? இது மார்க்கத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றல்லவா? இதில் இன்னும் வேதனை என்னவெனில் கணவனே இதற்குப் பச்சைக்கொடி காட்டி வழியனுப்பி வைப்பது தான்.
கணவனே இவ்வாறு இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்து விட்டு, பின்னொரு காலத்தில் வண்டியில் கொண்டு சென்றவருக்கும் இவரது மனைவிக்கும் விவகாரம் ஏற்படும் போது இருவரையும் கொலை செய்வார், அல்லது குறைந்தபட்சம் தனது மனைவியை விவாகரத்து செய்வார். இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வது போன்ற மரணத்துக்குச் சமமான ஒரு நிலையாகும்.




மச்சான் மைத்துனி கிண்டல்கள்

இங்கு நாம் இன்னொரு தீமையையும் குறிப்பிட வேண்டும். மனைவி எப்படி கணவனின் உறவினர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டுமோ அதே போல் தான் கணவனும் மனைவியின் அக்கா தங்கைகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தனது சகோதரியின் கணவரிடம்மச்சான் என்றுகிண்டல் செய்வதுஅதுபோல் அவரும் மைத்துனிகொழுந்தியாள் என்று கிண்டல் செய்வது போன்ற செயல்கள் சமூகத்தில் தீமையாகக் காணப்படவில்லை.

கணவன் சம்பந்தப்பட்ட உறவினர் மூலம் ஒரு மனைவிக்கு ஏற்படும் விளைவுகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு மச்சான்மைத்துனி விவகாரத்தில் ஏற்படவே செய்யும்.


எனவே கணவன் மைத்துனி விஷயத்திலும்மைத்துனி தன் சகோதரியின் கணவன் விஷயத்திலும் கவனமாக நடக்க வேண்டும். காரணம் இதுவெல்லாம் ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய வாசல்களாகும்.

இந்தக் கலாச்சாரம் கைமீறிப் போய் சில இடங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் கூட அக்காவையும் தங்கைள்யும் ஒரே நபர் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்க்கை நடத்துவதைக் காணமுடிகின்றது.

இதற்குக் காரணம் வரைமுறை வரம்பற்ற பழக்கம் தான். சில இடங்களில் சகலைக்கும் சகலைக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு கொலையில் முடிந்த வரலாறும் உண்டு.

எனவே தான் மனிதர்களின் மனநிலைகளை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.


தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.


தமது கணவர்கள்,                           
தமது தந்தையர்,
தமது கணவர்களுடைய தந்தையர்,
தமது புதல்வர்கள்,
தமது கணவர்களின் புதல்வர்கள்,
தமது சகோதரர்கள்,
தமது சகோதரர்களின் புதல்வர்கள்,
தமது சகோதரிகளின் புதல்வர்கள்
தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,
ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள்,பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.


அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டும்என்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.

நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)

இந்த வசனத்தில் கூறப்படும் உறவினர்கள் தவிர மற்றவர்களிடம் ஒரு பெண் புர்கா சட்டத்தை அனுசரித்து நடக்க வேண்டும்.
அல்லாஹ் சொல்கின்ற இந்த உறவுமுறைக்குஅப்பாற்பட்டவர்களிடம் ஓர் ஆண் மிக மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
அண்ணிமைத்துனி போன்றவர்கள் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறும் அனுமதிக்கு அப்பாற்பட்டவர்களே!
எனவே மற்ற அந்நியப் பெண்களிடம் காட்டும் பேணுதலை விட இந்த உறவுகளிடம் அதிக பேணுதலைக் காட்ட வேண்டும்.
ஏனெனில் இந்தத் தொடர்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணத்திற்குச் சமம் என்று சொல்கின்றார்கள். எனவே இந்தப் பெண்கள் அந்நியப் பெண்கள் என்ற வட்டத்தையும் தாண்டியர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஆடைகளில் அலட்சியம்

இன்றைய காலத்துப் பெண்கள் உள்மேனி வெளியே தெரிகின்ற அளவுக்கு மெல்லிய ஆடைகளை அணிந்துகொண்டிருக்கின்றார்கள். இந்த ஆடைகளை அணிந்து கொண்டு,அந்நிய ஆண்களிடம் குறிப்பாக கணவனின் உறவினர்களிடம் காட்சி தருவது நிச்சயமாக அவர்களை நரகத்திற்கே கொண்டு சென்று விடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.
ஒரு சாரார்அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்றசாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்.
இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.

அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுநூல்: முஸ்லிம்)

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)

பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம்


பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.



நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)



மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:
(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.
(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.
(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.
(4) ஆணாக இருக்க வேண்டும்.



இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!



நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது.
(அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)
கணவன் மனைவி இருவருக்குமிடையில் வாழ்க்கைப் பந்தம் செத்துப் போய் விடுகின்றது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஓர் இறை விசுவாசி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தனது வாழ்க்கையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கட்டளையை முழுமையாக வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பின்பற்ற வேண்டும். ஏதோ அல்லாஹ் தொழச் சொல்கின்றானா? தொழுகின்றோம். ஆனால் இதுபோன்று காலம் காலமாகப் பின்பற்றி வரும் கலாச்சாரத்தை விடச் சொன்னால், இந்தக் கட்டளையெல்லாம் எங்களுக்கு சாத்தியப்பட்டு வராது என்று ஒதுங்குபவர்கள் இறை நம்பிக்கையாளர் அல்லர்.
இந்தக் கட்டளையையும் பெண்கள் கவனத்தில் கொண்டு தங்கள் வாழ்க்கையை சுவனத்திற்குரிய வாழ்க்கையாக அமைத்துக்கொண்டு நற்பயனைப் பெறுவோமாக!
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.