Thursday, 15 August 2013

IAS கனவை நனவாக்க தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்....

இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்தியா அயல் நாட்டுப் பணி (IFS) மற்றும் குரூப் I , குரூப் II , போன்ற மத்திய பணிகளுக்குப் பணியாளர்களை தேர்ந்தேடுப்பதற்கான இந்த ஆண்டின் (2012) குடிமை பணிகள் (சிவில் சர்வீஸ்) தேர்வை வரும் டிசம்பரில் (01.12.2013) மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு ஒரே நாளில் நடைபெறும். தென் மாவட்டத்தில் இந்த தேர்வு மதுரையில் நடை பெற உள்ளது.

இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங்களைப் பார்ப்போம்.


சிவில் சர்வீசஸ் பணித் துறைகள்...

சிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை:

1. இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)

2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service) 

3. இந்திய காவல் பணி (Indian Police Service)

4. இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு "அ' (Indian P & T Accounts & Finance Service, Group 'A') 

5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி பிரிவு "அ' (Indian Audit & Accounts Service, Group 'A')

6. இந்திய சுங்கம் மற்றும் கலால் வரி பணி, பிரிவு "அ' (Indian Customs & Central Excise Service, Group 'A')

7. இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணிபிரிவு "அ' (Indian Defence Accounts Service, Group 'A')

8. இந்திய வருவாய் பணி, பிரிவு "அ' (Indian Revenue Service, Group 'A') 

9. இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு "அ' (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group 'A' Assistant Works Manager, nontechnical)

10. இந்திய அஞ்சல் பணி, பிரிவு "அ' (Indian Postal Service, Group 'A')



11. இந்தியக் குடிமைக் கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Civil Accounts Service, Group 'A')

12. இந்திய இரயில்வே போக்குவரத்து, பணிபிரிவு "அ' (Indian Railway Traffic Service, Group 'A') 

13. இந்திய இரயில்வே கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Railway Accounts Service, Group 'A')

14. இந்திய இரயில்வே பணியாளர்கள் பணி, பிரிவு "அ' (Indian Railway Personnel Service, Group 'A')15. இரயில்வே பாதுகாப்புப் படையில், உதவிப் பாதுகாவல்     அலுவலர் பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Security Officer, Group 'A' in Railway Protection Force) 

16. இந்தியப் பாதுகாப்பு நிலைகள் பணி, பிரிவு "அ' (Indian Defense Estates Service, Group 'A')

17. இந்திய தகவல் தொடர்புப் பணி, (இளநிலை) பிரிவு "அ' (Indian Information Service, (Junior Grade) Group 'A')

18. மையத்தொழிலகப் பாதுகாப்புப் படையில் உதவி ஆணையாளர், பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Commandant Group 'A' in Central Industrial Security Force)

19. மைய அரசு செயலகப்பணி, பிரிவு "B (பிரிவு அலுவலர் நிலை)

20. புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு "B' (பிரிவு அலுவலர் நிலை)

21. ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி பிரிவு "B' (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)

22. சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு "B'

23. தில்லி, அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு "B''

24. தில்லி, அந்தமான்- நிகோபார் தீவுகள், இலட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி பிரிவு "B'

25. புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு "B 

26. புதுச்சேரி காவல் பணி, பிரிவு "B'

இப்பணிகளுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இத்தேர்வு அறிவிப்பின் போது, எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காலியிடங்களுக்குத் தக்கவாறு இத்தேர்வு நடத்தப்படும்



தேர்வு எழுத தகுதிகள்

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத விரும்புபவர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு போதுமானது. அதே சமயம் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம்.

தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் தங்களது படிப்பு பட்டப்படிப்புக்கு இணையானது எனில் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் இளங்கலை பட்டங்கள் பெற்றவர்கள், முதுகலைப்பட்டம், ஆராய்ச்சிப்படிப்பு என அனைவரும் விண்ணப்பிப்பர்.


வயது வரம்பு:

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பப் பெற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதுவரை இத்தேர்வினை எழுதலாம். குறைந்தப் பட்ச வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது. இந்த 21-30 வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.

அட்டவணை வகுப்பினர் (S.C.), அட்ட வணை பழங்குடியினர் (S.T.) 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் மத்திய அரசு அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் OBC ஆவர். இப்பிரிவினர் 33 வயது வரை இத்தேர்வை எழுதலாம்.
அதே போல உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாட்டோடு போர்புரிந்து உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத ராணுவத் தினருக்கு மூன்று ஆண்டுகளும் (33 வயது வரை), குறைந்தது ஐந்து ஆண்டுகள் சேவை பணி முடித்த முன்னாள் இராணுவத்தினருக்கு ஐந்து ஆண்டுகளும் (35 வயது வரை) தளர்த்தப்பட்டுள்ளது.

எத்தனை முறை தேர்வு எழுதலாம்?

நாம் கல்லூரியில் படிப்புக்குரிய பாடங் களில் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வு அப்படியல்ல. இத்தேர்வு எழுதுவதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒருசில தடவை (Number of Attempts) மட்டுமே இத் தேர்வை எழுத முடியும். ஆனாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு ஏழு முறை தேர்வை எழுதலாம்.

பட்டியல் வகுப்பினர் (SC/ST) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு நடை பெறும்போது ஒருமுறை தேர்வை எழுதி னாலும் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப் படும். அதனால் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புக்குள் நம் அறிவை கொண்டு தேர்வில் வெற்றிப் பெற்றிட வேண்டும்.

விண்ணப்பித்தல்..

ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு களுக்கான அறிவிப்பானது Employment News வார இதழில் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் தேர்வு குறித்து Special Supplementary தனியாக வெளிவரும். அதில் தேர்வு குறித்த முழு விபரம் தரப்பட்டிருக்கும். அதையடுத்து முக்கியமாக, விண்ணப்பம் வாங்க வேண்டும். UPSC விண்ணப்பம் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சலகங்களிலும் கிடைக்கும்தற்போது இந்த தேர்வுக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க ஏதுவாக, அதன் இனைய தள முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. http://upsconline.nic.in/


தேர்வுத் திட்டம்


சிவில் சர்வீசஸ் தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.

1. முதனிலைத் தேர்வு (Preliminary Exam)
2. பிரதானத்தேர்வு (Main Exam)
3. நேர்முகத்தேர்வு (Interview - Personality Test)


ஆகியவை ஆகும். முதனிலைத்தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது முதனிலைத் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவுடன் யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு எழுத விண்ணப்பத்தை அனுப்பிவைக்கும். அதில் பிரதானத் தேர்வு விபரங்கள் அனைத்தும் அடங்கியிருக்கும். பிரதானத் தேர்வை எழுதி முடித்து அதில் வெற்றிப் பெற்றால் உங்களுடைய பிரதானத் தேர்வு மதிப்பெண்கள் கொண்ட தர வரிசையின் படி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள். நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.

பிரதானத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதில் நீங்கள் விருப்பம் தெரிவித்த பணியை உங்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.


முதனிலைத் தேர்வு (Preliminary Examination)

முதனிலைத் தேர்வில், ஒரு பொது அறிவுத்தாள் மற்றும் ஒரு விருப்பப் பாடத்திற் கான தேர்வு நடைபெறும். இந்தியாவில் பல மையங்களில் இத்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் ஒரே நாளில் சென்னை, மதுரை ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். விருப்பப்பாடம் காலை நேரத்திலும், மாலை நேரத்தில் பொதுஅறிவுத் தேர்வும் நடத்தப் படுகிறது. விருப்பப்பாடத்தில் 100 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு 200 மதிப்பெண்கள்.

பொதுஅறிவுத்தாளில் 80 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான மதிப்பெண்கள் 200. ஆக இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 400 மதிப்பெண்களுக்கு முதனிலைத்தேர்வு நடத்தப் படுகிறது. வங்கித்தேர்வை போன்று நெகடிவ் மதிப்பெண்கள் இத்தேர்விலும் உண்டு. இத்தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு என்கிற போது சுமாராக சொன்னால், 400 மதிப்பெண்களுக்கு குறைந்தது 250 மதிப்பெண்கள்-அதாவது 230 கேள்விகளுக்கு 150 கேள்விகள் சரியாக பதில் அளித்தால் போதுமானது.

பொது அறிவுத் தேர்வில் குறைந்தது 100 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முதனிலைத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்று விடலாம். இந்த தேர்வு முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதுவதற்கான தகுதித் தேர்வு மட்டும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.



Paper I - (200 marks) Duration: Two hours

• Current events of national and international importance

• History of India and Indian National Movement

• Indian and World Geography - Physical, Social, Economic geography
  of India and the World.

• Indian Polity and Governance – Constitution, Political System,
  Panchayati Raj, Public Policy, Rights Issues, etc.

• Economic and Social Development – Sustainable Development,
  Poverty, Inclusion, Demographics, Social Sector Initiatives, etc.

• General issues on Environmental ecology, Bio-diversity and Climate
  Change - that do not require subject specialization

• General Science.



Paper II- (200 marks) Duration: Two hours

• Comprehension

• Interpersonal skills including communication skills;

• Logical reasoning and analytical ability

• Decision making and problem solving

• General mental ability

• Basic numeracy (numbers and their relations, orders of magnitude
  etc.) (Class X level), Data interpretation (charts, graphs, tables, data
  sufficiency etc. -Class X level)

• English Language Comprehension skills (Class X level).   

• Questions relating to English Language Comprehension skills of Class X level



பிரதானத்தேர்வு (Main Exam)

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவரே பிரதானத்தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். பிரதானத் தேர்வு என்பது எழுத்துத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக் கியது. இதுவே இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. 
முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதானத் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். அதனைப் பெற்று மீண்டும் இத்தேர்வுக்காக விண்ணப் பிக்க வேண்டும். எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



இந்த பிரதானத்தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக் கிறது. இத்தேர்வானது விண்ணப்பதாரரின் புத்திக்கூர்மையையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். இத்தேர்வு முழுக்க முழுக்க விரிவாக விடை யெழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.


பிரதானத்தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது

தாள் I - ஏதேனும் ஒரு இந்திய மொழி (அரசியலமைப்பு அட்டவணையில் உள்ளடங்கிய இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பித்தவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்) - இதற்கு 300 மதிப்பெண்கள்

தாள் II - ஆங்கிலம் (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 300 மதிப்பெண்கள் 

தாள் III -  கட்டுரை (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 200 மதிப்பெண்கள்

தாள் IV  - (அ) பொது அறிவு - 1 இதற்கு 300 மதிப்பெண்கள்

தாள் V  - (ஆ) பொது அறிவு - 2 இதற்கு 300 மதிப்பெண்கள்

தாள் VI  - விருப்பப்பாடம் 1 (அ) இதற்கு 150 மதிப்பெண்கள்

   தாள் VII  - விருப்பப்பாடம் 1 (ஆ) இதற்கு 150 மதிப்பெண்கள்

தாள் VIII -  விருப்பப்பாடம் 2 (அ) இதற்கு 150 மதிப்பெண்கள்  

தாள் IX - விருப்பப்பாடம் 2 (ஆ) இதற்கு 150 மதிப்பெண்கள்

ஆக மொத்தம் 2000 மதிப்பெண்கள்

விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடத்திலிருந்து இரண்டு தாள்கள் 1 (அ) 1 (ஆ) & 2 (அ) 2 (ஆ) ) ஆக மொத்தம் நான்கு தாள்கள் (2x2=VI, VII, VIII, IX) எழுத வேண்டும். இது தவிர இரண்டு மொழித் தாள்கள் (I, II), இரண்டு பொது அறிவுத் தாள்கள் (IV, V), ஒரு கட்டுரை (III)ஆக மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும். இரண்டு மொழித் தாள்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவைகளுக்கு மொத்தம் 2000 மதிப்பெண்கள் ஆகும்.

பிரதானத்தேர்வு விருப்பப் பாடத்திற்குத் தேர்வாணையத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஏதேனும் இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


பிரதானத்தேர்வுக்கான விருப்பப் பாடங்கள்:


1. வேளாண்மை (Agriculture)

2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary) 

3. மானிடவியல் (Anthropology)

4. தாவரவியல் (Botany) 

5. வேதியியல் (Chemistry)

6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)  

7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)

8. பொருளாதாரம் (Economics)

9. மின் பொறியியல் (Electrical Engineering)

10. புவியியல் (Geography)  

11. புவியமைப்பியல் (Geology)

12. வரலாறு (History)

13. சட்டம் (Law)

14. மேலாண்மை (Management)

15. கணிதம் (Mathematics)

16. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)  

17. மருத்துவ அறிவியல் (Medical Science)

18. தத்துவம் (Philosophy)

19. இயற்பியல்(Physics)

20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)

21. உளவியல் (Psychology)

22. பொது நிர்வாகம்(Public Administration)  

23. சமூகவியல் (Sociology)

24. புள்ளியியல் (Statistics)

25. விலங்கியல் (Zoology)

26. இலக்கியம் (Literature)

(இது பின்வரும் ஏதேனும் ஒரு மொழி இலக்கியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.)

1. தமிழ் 2. ஆங்கிலம் 3. மலையாளம் 4. தெலுங்கு 5. கன்னடம் 6. இந்தி 7. மராத்தி 8. உருது 9. ஒரியா 10. சமஸ்கிருதம் 11. குஜராத்தி 12. வங்காளம் 13. பஞ்சாபி 14. நேப்பாளி 15. சிந்தி 16. மணிப்பூரி 17. காஷ்மீரி 18. கொங்கணி 19. பாலி 20. பெர்சியன் 21. அஸ்ஸாமி 22. அரபு 23. சீனம் 24. பிரெஞ்ச் 25. ஜெர்மனி 26. ரஷ்யன்.

பிரதானத்தேர்வில் இரண்டு விருப்பப் பாடங்கள் என்றாலும் சில விருப்பப் பாடங்களைச் சேர்த்து எழுத முடியாது.

நேர்முகத்தேர்வு(Personality Test)

பிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றவர்கள்- அவர்களின் ஆளுமையை சோதிப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. (தகுதிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் கிடையாது)
சுருக்கமாகக் கூறினால் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நீங்கள் எவ்விதத்தில் பொருத்தமானவர் என்பது நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இறுதியில் மெயின் தேர்வு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டையும் கூட்டி இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிப்பர். அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.

இதில் புத்திக்கூர்மை, நடப்பு நிகழ்வுகளில் உள்ள அக்கறை, சமூக சேவை மனப்பான்மை, பாடத்தில் புரிந்துகொண்ட திறன், ஒழுக்கம், உடல்மொழி (body language), சமயோகித புத்தி, தலைமை தாங்கும் திறன்
போன்றவற்றைச் சோதித்து அறிவார்கள்.


IAS தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்ற 'ஆறு பேர்கள்' !

நம் இந்திய தேசத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கப் போகும்,
 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை, தேர்ந்தெடுக்கும் சிவில் சர்வீஸ்
 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் அடலேறுகளே ! இலட்சியவாதிகளே ! 

நீங்கள் பின்வரும் ஏதேனும் ஒன்றிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றிலோ பற்று
 உடையவராக இருந்தால் தயவு கூர்ந்து எதிர் வரும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கும்,
 இது தவிர மத்திய, மாநில அரசுகள் நடத்தும் இது போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும் 
விண்ணப்பிக்க முன் வர வேண்டாம் என கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. பணம் சம்பாதிப்பது ஒன்றே பிரதான நோக்கமாகவும், குறிக்கோளாகவும் 
கொண்டிருக்கும் சுயநலவாதிகள்

2. 'அன்பளிப்பு பெறுகிறேன்' என்ற பெயரில் கவுரவப் பிச்சை எடுக்கக் காத்திருக்கும் 
இலஞ்சப் பேர்வழிகள்.

3.  அரசின் சிறப்பான திட்டங்களை செயலாற்ற, எல்லா வகையிலும் கமிஷன் பெற்று
 கோடிகளில் புரள ஆவல் கொடிருக்கும் இலட்சியவாதிகள்

4. அரசியல் சாணக்கியர்களின் கைப்பாவையாக, ஆட்டுவித்த பொம்மையாக
 செயல் பட ஆர்வம் கொண்டிருப்பவர்கள்.

5.   அரசு பொறுப்பை ஏற்றவுடன், தங்களால் இயன்ற அளவுக்கு, உலக அளவில் நம் 
இந்திய மண்ணிற்கு களங்கம் ஏற்படுத்த காத்திருப்பவர்கள்.

6.    பொதுநலம் என்ற வார்த்தையை அகராதியில் தேடும் அறிவிலிகள்

மேற்கண்ட 'சிறப்புத் தகுதிகள் ?' தங்களிடம் இல்லாமலிருந்தால் மேற்கொண்டு
 இந்த தளத்தையும், அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் எண்ணத்தையும் 
தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு ஏதேனும் ஒன்றோ 
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தீவினைகளோ உங்கள் உள்ளத்தில் இருந்தால், 
இன்று முதல் (15.08.2013), இந்த நன்னாளில் அத்தனை சுய நல எண்ணங்களையும்
 களைந்து, நம் தேசத்திற்காக, நம் தேசத்தின் கடைக் கோடி மக்களுக்காக
உழைக்க 'நான் தேர்வு எழுத காத்திருக்கிறேன்' என்ற உறுதி மொழி எடுப்போம்.


ஆக்கம்  & தொகுப்பு :   அஜ்மல் கான்.


Thursday, 8 August 2013

சுதந்திரம் தானாக கிடைத்ததல்ல

     
 பள்ளி  வரலாற்றுப் பாடத்தில்  இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிப் படிக்கும் போது ''கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி, யுத்தமின்றி காந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்'' என்கிற வரியை எல்லா வகுப்பிலும் நாம் படித்திருப்போம். அதை படிக்கும் போது, ஏதோ காந்தி மட்டுமே  வெள்ளைக்காரனிடம் கெஞ்சிக்கேட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது போன்ற  ஒரு கருத்தை தான் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும். இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் - குறிப்பாக காங்கிரஸ்காரர்கள் பள்ளிப் பாடப்புத்தகத்தை தங்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான், இந்த தேசத்திற்கு கிடைத்த சுதந்திரத்திற்கும், அதற்காக நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் சொந்தக்காரர்களாக காங்கிரஸ்கட்சியையும், காந்தியையும் மட்டுமே காட்டுகின்றனர். அதுவும் வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களைத் தான் குறிப்பிட்டிருப்பார்கள். தென்னிந்தியத் தலைவர்களை - குறிப்பாக காமராஜர், திருப்பூர் குமரன், பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்ற  தமிழகத்தலைவர்களை பற்றி ஒரு சிறு குறிப்புக்கூட காட்டியிருக்கமாட்டார்கள். 
                  நாம் வரலாற்றுப் பாடத்தில் படிப்பது போல் '' ஏதோ  கேட்டுப்பெற்றதல்ல சுதந்திரம்... தானாக வந்ததுமல்ல சுதந்திரம்...''


           ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் உயிர்த்தியாகம் செய்து, ரத்தம் சிந்தி பெற்றச் சுதந்திரம் இது...


           பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், உத்தம்சிங் போன்ற இளைஞர்கள்  தூக்குமேடை   ஏறிப் பெற்றச் சுதந்திரம் இது...


           திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்ற  இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துப் பெற்றச் சுதந்திரம் இது. 


            பாரதி தன்  பாட்டுத்திறத்தாலே விடுதலைத்தீயை மூட்டி இந்திய மக்களிடையே எழுச்சியை உண்டாக்கி பெற்றச் சுதந்திரம் இது. வ. உ. சி மற்றும் சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் சிறைகொடுமைகளை அனுபவித்து, செக்கிழுத்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
           நேதாஜி மற்றும் கேப்டன் லட்சுமி போன்றவர்கள் இந்திய தேசியப் படை அமைத்து வெள்ளையனுக்கு எதிராகப்போராடிப் பெற்றச் சுதந்திரம் இது. 


            தோழர். ஜீவானந்தம், தோழர். ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராடி, சிறைக்கொடுமைகளை அனுபவித்து, தலைமறைவு வாழ்க்கையை நடத்தி பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 


         1806 - ஆம் ஆண்டு தொடக்கி 1947 - ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான  ஆண்களும், பெண்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் போராடி - ரத்தம் சிந்தி - உயிர்த்தியாகம் செய்து நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 


          அனால் கடைசி இந்தியன் வரை அந்த சுதந்திரம் பொய் சேர்ந்ததா என்று கேட்டால்... அது கேள்விக்குறிதான். 


          உண்மையான சுதந்திரம் என்பது, இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சொன்னானே மாவீரன் பகத்சிங் அது தான்.     
              
         ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு எங்கும் மாணவன், வேலைதேடும் இளைஞன், வறுமையில் வாடும் தாய் - இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா'' 
இது தான் மாவீரன் பகத்சிங் கனவுகண்ட இந்தியா.


         அன்று வெள்ளையர் கையில் இருந்த இந்தியா... இன்று கொள்ளையர் கையில் சிக்கி மேலே சொன்ன அத்தனை பேரையும் கொண்ட ''வாடும் இந்தியா''வில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 


           இது மாறவேண்டுமென்றால், ''முப்பது கோடி ஜெனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை'' வேண்டினானே பாரதி, அந்த பொதுவுடைமை இந்த தேசத்தில் மலரவேண்டும். அதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரத்தை மணக்கச் செய்யும். 
அதற்காக போராடுவோம்.... 
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்... 



மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!      


தேசத்தை காத்தல் செய்வோம்.

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார். அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.  

                  இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள். 

                  இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும்   காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார். அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி,  தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை  தூக்கு தண்டனையிலிருந்து  காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.  
            அதனால்  அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி   கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே   பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931  மார்ச் மாதம் 24  - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது. 

              ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள். 
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24  - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு  வேகம் காட்டினர்.
                 லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல் கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும் ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது.  மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான் அது. அதுவரையில் அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்ததால், நான் ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்  என்று சொன்னார். 
               அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்......   இன்னும் எழுதுகிறேன்....



நீங்கள் மாறிவிட்டீர்களா!! உலகத்தை மாற்றலாம் வாங்க.....



இப்போது நடைபெறும் மாற்றம் மனிதனுடைய இயல்பு வாழ்கையே தலைகீழாக புரட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றது என்றே சொல்லலாம். கல்வி, தொழில், சேவை, சட்டம், நடைமுறை , நடை, உடை, பாவனை, இடம், எண்ணங்கள், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், ஆன்மிகம், வீட்டு நிர்வாகம், நிறுவன நிர்வாகம், அரசியல், போக்குவரத்து, தொடர்பு சாதனங்கள், உணவு பழக்கங்கள்   என்று எதில் தான் மாற்றமில்லை. சொல் வழி கல்வி மறைந்து புத்தக வழி கல்வி உருவாகி இன்று கணினி வழி கல்விக்கு வந்துவிட்டார்கள். ஆட்சியாளர்களும், ஆட்சி முறையும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கின்றன. ஒரு மாற்றம் முழுமையாக தெரியு முன்னே இன்னொரு மாற்றம் வருகின்றது. 


ஆகவே சூழ்நிலைக்குத் தகுந்தாற்ப் போல் காலத்திற்கு தகுந்தாற்ப்போல் எவ்வளவு சிக்கிரம் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு நீங்கள் மாறுகின்றீரோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு வாழ்கையில் நல்லது கிடைக்கும். நல்ல மாற்றத்திற்கு தடை சொல்லாமல் உடனே ஏற்றுக்கொண்டு பின்பற்ற ஆரம்பித்தால் அனாவசியமான பிரச்சனை இல்லாமல் தவிர்க்கலாம். பலவித பிரச்சனை எதிர்கொண்டு கடைசியில் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் மனஉளைச்சல், கால விரயம் மற்றும் பணவிரயம் தான் மிச்சமாகும். ஒருவேளை நீங்கள் மாறாவிட்டால் அந்த மாற்றமே உங்களது வாழ்கையை அதலபாதாளத்தில் தள்ளிவிடும்.


நேற்று, இன்று , நாளை என்று காலங்கள் மாறுவது எப்படி தவிர்க்க முடியாதோ அதுபோல் உங்களது வாழ்விலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதே! மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவர்கள் ஜடங்களுக்கு ஒப்பானவர்களாவார்கள். 


நமது வாழ்கையில் மாற்றம் குழந்தை முதல் பெரியவர் வரை மாறிவருகிறோம். வயதிற்குத் தகுந்தாற்ப்போல் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவிதமான எண்ணங்களையும், சூழ்நிலைகளையும் எதிர்கொள்கிறோம். அதற்கு தகுந்தாற்ப்போல் நமது செயல்களும், பழக்க வழக்கங்களும் மாறுகின்றன. குழந்தையில் பிடித்தது இளைஞனான பிறகு பிடிப்பதில்லை. இளம் வயதில் பிடித்தது வயதான பிறகு பிடிப்பதில்லை. காரணம் மாறிவரும் உலகிற்கேற்ப உனது எண்ணங்களும் செயல்களும் மாறுவது தான்.


மாற்றத்தின் விதை 'கற்பனை' என்று சொன்னால் மிகையாகாது. இந்த கற்பனையானது அறிவியல், கலை, தொழிநுட்பம் என்று பல வகைகளின் நுழைந்து இன்று மரங்களாக வளர்ந்து நமக்கு பலவிதத்தில் காய் கனி போல் பலன்களை அள்ளிக் கொடுத்து உதவுகின்றது.

மாற்றங்கள் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. தினம் தினம் சில மாற்றங்களை சந்தித்து கொண்டு வருகின்றோம். கற்கால மனிதன் முதல் இக்கால கம்ப்யூட்டர் மனிதன் வரை மாற்றங்கள் ஒன்றே நம்மை மாறாமல் ஆட்சி செய்துவருகின்றது. 


விட்டில் ரேடியோ மறைந்து தொலைக் காட்சி பெட்டி, விறகு அடுப்பு மறைந்து கேஸ் மற்றும் இண்டக்சன் அடுப்பு, தொலைபேசி மறைந்து மொபைல், கடித தொடர்பு மறைந்து ஒரு நொடியில் அனைத்து தகவல்கள் தரும் கம்ப்யூட்டர், அதன் மூலம் உலகம் முழுவதும் எளிதாக தகவல் பரிமாற்றங்கள், கால்நடை மறைந்து மோட்டார் வாகனம், பாஸ்ட் புட் உணவுவகைகள்,  பல தரப்பட்ட கல்விகள் அதாவது மருத்துவ கல்வியில் பலவகை, கலைக் கல்வியில் பலவகை, பொறியியல் கல்வியில் பலவகை, உடைகளில் தான் எத்தனை மாற்றங்கள்! பாவாடை ரவிக்கை மறைந்து சுடிதார் மற்றும் பல.


மாற்றம் தான் ஒரு மனிதனை உயிருள்ளவனாக காட்டுகின்றது. படைப்பாளியாக்குகின்றது, பெருமை தேடித் தருகின்றது. வாழும் வீடுகளில் தான் எத்தனை மாற்றங்கள்! மண் குடிசை மறைந்து கான்கிரீட் வீடுகள் ! அதுவும் போய் இப்போது நானோ வீடுகள்! 

மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்புகள். ஓடாமல் ஒரே இடத்தில் அழகான காரை நீங்கள் எத்தனை நிமிடங்கள் வரை பார்த்துகொண்டு இருப்பீர்கள்! ஒரு நிமிடம்.... ஐந்து நிமிடம்... அது மிகவும் கஷ்டமாக தெரிகின்றதா? ஆனால் ஓடிக்கொண்டு விதம் விதமாக சாகசம் செய்யும் காரை நாள் முழுவதும் பார்த்து ரசிக்கலாம். 





வாய்ப்புகள் எப்படி கிடைக்கும்?

முட்டாளுக்கு மத்தியில் அறிவாளிக்கு வாய்ப்பு! 
நோயாளிகளுக்கு மத்தியில் மருத்துவனுக்கு வாய்ப்பு!
தொண்டர்களுக்கு மத்தியில் தலைவனுக்கு வாய்ப்பு!
சோம்பேறிகளின் கூட்டத்தில் சுறுசுறுப்பானவனுக்கு வாய்ப்பு!
பலவீனம் உள்ளவர்களுக்கு மத்தியில் பலசாலிக்கு வாய்ப்பு!
கரிக்கட்டைக்கு மத்தியில் வைரத்திற்கு வாய்ப்பு 
வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் வியாபாரிக்கு வாய்ப்பு!
பேச்சை கேட்பவர்களுக்கு மத்தியில் பேச்சாளர்களுக்கு வாய்ப்பு!
கலைகள் ரசிப்பவர்களுக்கு மத்தியில் கலைஞனுக்கு வாய்ப்பு!
பாடல்கள் ரசிப்பவர்களுக்கு மத்தியில் பாடகர்களுக்கு வாய்ப்பு!
கற்க விருப்பமுள்ளவர்களுக்கு மத்தியில் ஆசிரியர்களுக்கு மதிப்பு!

அதாவது நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் உனது மாற்றங்களால் மட்டுமே முடியும். மாற்றங்களைச் செய்யாமல் கட்டை வண்டி மோட்டார் வண்டியாக மாற்ற முடியாது. உனது வாழ்கையில் வேகம் பெற வேண்டுமானால் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும். மாறிவரும் உலகில் நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் நம் வாழ்க்கை நிலை மாறாது.




'கனவு காணுங்கள், விஞ்ஞானி ஆகலாம்' என்று சொல்கிறார் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். மாற்றங்களுக்கு அடிப்படை எண்ணங்கள்! வளமான எண்ணங்கள் நல்ல செயலுக்கு அடித்தளமாய் அமைகின்றன. அத்தகைய மாற்றங்கள் மக்களுக்கு பல நன்மைகள் தருகின்றன. அறிவியல் மாற்றங்கள் நடைபெற்றிருக்காவிட்டால் பெருகிவரும் மக்கள் தொகையினை சமாளித்திருக்க முடியுமா? இல்லையெனில் மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுக்கு பஞ்சம் வந்திருக்கும்! உடுத்துகின்ற உடைக்கு பஞ்சம்! ஆரோக்கிய வாழ்வுக்கு பஞ்சம்! வாழுகின்ற இடத்திற்கு பஞ்சம் எற்பட்டு இருக்கும்.

மாற்றங்கள் பல வந்தாலும் சில மாற்றங்கள் மக்கள் தங்கள் அறியாமையினால் ஏற்றுக்கொள்ள தவறிவிடுகின்றனர். அதனால் தினமும் பலவித இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனன்ர். தற்போது நமது நாட்டில்  மின்சார பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கின்றன.  தினந்தோறும் மின்வெட்டு பலமணி நேரம் வரை இருக்கின்றனர். உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. விவசாயம் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. அதற்கு  தீர்வாக சூரிய சக்தி, பயோ டீசல், ஹோபர் கேஸ் முறை போன்றவைகள் இருந்தாலும் அரசாங்கம் அதை ஊக்குவிக்க தவறிவிட்டது. அதற்கு மான்யம் பூஜ்யம் தான். எண்ணெய் இறக்குமதி செய்வதில் இருக்கும் அக்கறை உள்நாட்டு உற்பத்தியில் இல்லை. 

போதிய அளவு மழை பெய்தாலும் அதை முறையாக சேமிக்க வழியில்லை. அணைகள் கட்டுவதில் பிரச்சனை, மழைநீரை தேக்கி வைப்பதில் திட்டமின்மை, நதிநீர் பங்கீடு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவை வெறும் பேச்சளவில் தான் இருகின்றது. நம் நாடு என்ன பாலைவனமா? நதிகள் ஓடவில்லையா? ஆறுகள் இல்லையா? வடக்கு வெள்ளத்தில் மூழ்கின்றன. தெற்கே மழையில்லாமல் பஞ்சத்தில் அடிபடுகின்றது. ஆனால் வெள்ள நீரை பஞ்ச நாட்டிற்க்கு மாற்றும் திட்டம் அரை நூற்றாண்டுகளாக காகிதத்தில் தான் இருக்கின்றது. எதுவும்  முயற்சி செய்தால் தான் பலன் கிடைக்கும். இன்னும் எத்தனை நாட்கள் அயல்நாட்டை எதிர்பார்த்து நிற்ப்பது. இதில் மாற்றம் இல்லையென்றால் எத்தனை பெரிய தலைவர்கள் வந்தாலும் விலைவாசி ஏறுவதை தவிர்க்க முடியாது. 

மருத்துவத்தில் எக்ஸ் - ரே    முதல் ஸ்கேன் வரையிலான மாற்றம் மனிதனின் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே துல்லியமாக நமக்கு தெரிவிப்பதனால் சரியான சிகிச்சை தகுந்தநேரத்தில் கொடுப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. இதன் பலனாக இதய நோய்க்கு நிரத்தர தீர்வுகள் பல கிடைத்துள்ளது. பை -பாஸ் சர்ஜரி , பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் உறுப்பு மாற்றதல, கண்தானம், ரத்த தானம் போன்றவை உதாரணமாக கொடுக்கலாம்.

நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, கெமிகல் டெக்னாலஜி, திசு கல்சர், க்ளோனிங் ஆகியவை அறிவியல் துறையில் ஏற்ப்பட்ட மாற்றங்களே! மேலும் மக்களின் ஆரோக்கியத்தை காப்பதில் பெரும்  பங்கு வகிக்கின்றது. ஐ.நெட் எனப்படும் வலைதளம் உலகத்தில் நடை பெறும் , நடைபெற்ற நிகழ்ச்சிகளை உடனுக்குடன் நமக்கு தருகின்றது.

பொதிபோல் புத்தகங்களை சுமக்கின்ற மாணவ மாணவிகள் இனிமேல கைக்கு அடக்கமாக உள்ள லேப் -டாப் க்கு மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லலாம்.இது மாற்றத்தின் உச்ச கட்டம் எனலாம்.

குழந்தை பெறுவதற்கும், குடும்பத்தை காப்பதற்கும் தான் பெண்கள் என்று மலையேறி புதுமை பெண்களாக பல சாதனைகள் படைக்கின்றனர். நாட்டை ஆளும் திறமையும், விண்வெளியில் வலம் வரும் துணிச்சலையும் அடைந்துள்ளனர். இதற்கு கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் சான்றுகளாவார்கள்.

மனிதனின் 360 கோணங்கள் சுற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதை அறிந்து கொண்டு தகுந்த அறிவை வளர்த்துக்கொண்டு வந்தால் தான் நாம் வாழ்கையில் முன்னேற முடியும்.

இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. மாற்றங்கள் ஒன்றே நிரந்தரம். 




விதையில் மாற்றம் கனி கொடுக்கும் மரத்தில் இருக்கின்றது!
கம்பளிப் புழுவின் மாற்றம் வண்ணத்துப் பூச்சியில் இருக்கின்றது!
செல்லின் மாற்றம் பல உயிரினங்களை கொடுப்பதில் இருக்கின்றது!
எண்ணங்களின் மாற்றம் செயலில் இருக்கின்றது!     
மனிதனின் மாற்றம் தெய்வமாக மாறுவதில் இருக்கின்றது!

முடிவு:

'நான் உலகத்தை மாற்றப் போகிறேன்' என்று புறப்பட்டவர்கள் எல்லாம் முகவரி தெரியாமல் தொலைந்துவிட்டனர். அதற்குக் காரணம் நடைமுறைக்கு ஒத்து வராமை. அதாவது நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால் நாம் முதலில் நாம்  மாறவேண்டும். அப்படி மாறிவிட்டால் உலகம் தானாக மாறும். இதுதான் உண்மை நிலை. ஆக நாம் மாற்றத்தை கடைபிடிப்போம். வாழ்கையில் தொடர்ந்து முன்னேறுவோம். 

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

இந்தியாவில் முகாலய பேரரசு!! ஒரு சிறப்பு பார்வை..


காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ்மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது . முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை, இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது .
இக்கோட்டையிலுள்ள மூசாம்மன் புர்ஜ், காஸ் மஹால் ஆகிய பகுதிகள் கட்டக் கலைக்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் அழியாத சான்றாகத் திகழ்கின்றன .

தனது காதல் மனைவி மும்தாஜ் இறந்தபின், அவளின் நினைவாக படைத்த தாஜ்மஹாலை – தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது மகனால் இதே கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது – மூசாம்மன் புர்ஜ் கலைக்கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஷாஜஹான் என்று வரலாறு கூறுகிறது .

இந்தியாவில் ஆக்ரா கோட்டைக்குள் ஷாஜஹான் கட்டிய அழகிய பகுதிகளில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ்மஹாலின் உன்னத காட்சியைக் காணலாம். இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷாஜஹானுக்கே உரியது. அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார்.

இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. 1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் – அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் – முகலாய பேரரசு , பலமாக காலூன்ற உதவியது.
பாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆப்கானிய அரசர் ஷேர்ஷா கைவசமானது இக்கோட்டை . 1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு மாற்றினார் . இன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

யமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷாஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேரரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள். பேரரசர் அக்பர் உறுதியாகக் கட்டிய இக்கோட்டையின் சில பகுதிகளை இடித்துவிட்டு, பளிங்கு கற்களைக் கொண்டு பேர்ரசர் ஷாஜஹான் கட்டிய கூடங்களும், கோபுரங்களும்தான் இக்கோட்டைக்கு பெருமை சேர்த்தன . இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர்    ஷாஜஹானுக்கே உரியது. அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார் . இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது .

1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் – அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் – முகலாய பேரரசு வளமாக, பலமாக காலூன்ற உதவியது .

பாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆஃப்கானிய அரசர் ஷேர்ஷா கைவசமானது இக்கோட்டை . 1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு மாற்றினார் . இன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. யமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷாஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேரரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Saturday, 3 August 2013

இஸ்லாமில் மகத்தான 30 நற்பாக்கியங்கள்!

Photo: மகத்தான நற்பாக்கியங்கள்....!! 

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்

6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்

7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

8.) எவர் அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையை பெனுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார்...

9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.

10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.

11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.

12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.

13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.

14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.

17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.

18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).

19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.

20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.

21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.

23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.

24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.

25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.

26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.

27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.

28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.

30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.

நன்றி : Mm.mohamed Kamil1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.


4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.
5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்
6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்
7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.
8.) அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை எவர் மனனமிடுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.
10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.
11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.
12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.
13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.
14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.
16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.
17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.
18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).
19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.
20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் திரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.
21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை அழகு படுத்துகின்றான்.
23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.
24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.
25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.
26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.
27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.
28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.
30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.

தொகுப்பு :அ .தையுபா அஜ்மல்.