Sunday, 21 June 2015

மகளை மணமுடித்து கொடுக்கும் தந்தையின் உணர்வுகள்!!

பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருந்த அன்பு மகள் பட்டுச்சேலை அணிந்து மணமேடையில் மணப்பெண்ணாய் வீற்றிருக்கும் காட்சியை பார்த்ததும் ”அட என் பொண்ணா…. என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே…” என்று தாய் பெருமையுடன் திருஷ்டி போட்டுக்கொள்வாள்.
எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கும் தந்தையின் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுக்கும். அது ஆனந்த கண்ணீர் என்று சொந்த பந்தங்கள் நினைக்கும்.
ஆனால் அந்த கண்ணீருக்கான அர்த்தம் அவனுக்கு மட்டும்தான் புரியும்.
மகள் பிறந்து இருக்கிறாள் என்று நர்சு ஓடிவந்து சொன்னதும்… அடுத்த சில விநாடிகளில் கைகளில் தூக்கி கொஞ்சியதும்… பிஞ்சு கையை பற்றிக்கொண்டு நடந்ததும்… பள்ளிக்கு அழைத்து சென்று மகிழ்ந்ததும்… கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து அவள் முகத்தில் ஏற்படும் சிரிப்பையே தன் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டு வாழ்ந்த காலம்...
என்றும் பசுமையான வசந்த காலம்.
இனி அவள் என்னோடு இருக்கப்போவதில்லை. புதிய உறவை ஏற்படுத்தி குலம் தழைக்க குடும்ப பெண்ணாய் பொறுப்பேற்க போகிறாள்.
பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம் பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது.
அந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.
அவ்வாறாக உணர்ச்சி வசப்பட்ட ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரைதான் இது...
“இந்த உரையை ”எனது மகளின் புதிய குடும்பத்தினரே” என்று உங்களை வரவேற்று ஆரம்பிக்க வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால், அது பொருத்தமாக இருக்காது என்பதால் கடைசி நிமிடத்தில் அதை தவிர்த்து விட்டேன்.
அவள் எப்போது திருமண பந்தத்தில் இணைந்தாளோ அப்பொழுதே உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவளாகி விட்டாள். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவள் உங்கள் குடும்பத்தினருக்கே எப்போதும், எதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நான் எதிர்பார்ப்பதைவிட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததைவிட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளலோடு இருப்பாள் என நம்புகிறேன்.
இருந்தாலும்,
எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் “தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.”
அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன். ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன்.
ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டு மட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன்.
அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும்.
எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.
அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள்.
ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள்.. ஆனால் அதேவேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறைவைக்காதீர்கள். அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள். உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து...
அவளது பொறுப்புகளிலிருந்து எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதேவேளையில், ”நீ இன்னும் வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்” என அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள். அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அவளை மாதக்கணக்கில் காண முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவள் குரலை தினம் தினம் கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தபிறகு அவளுக்கு என் நினைவே வரவில்லை என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
“அன்பிற்குரிய மருமகனே…” இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும் போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ”என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்றே சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த யதார்த்தமான, உருக்கமான, உணர்வு பூர்வமான வெளிப்பாடுதான் பெண்களை பெற்ற ஒவ்வொரு தந்தையின் இதயத்தில் இருந்தும் வெளிப்படும்.
இதை உணர்ந்து நடந்தால் எந்த குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் வெடிக்காது – விவாகரத்து பேச்சு வராது.
அன்பில் திளைப்பார்கள்.
இதை படித்த பின்பாவது அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையோடு…

சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு புதிய அடையாள அட்டை !! (Implementation of New Residence Cards Started in Saudi Arabia)

சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் புதிய அடையாள அட்டை வழங்க சவுதி அரசவை முடிவு செய்துள்ளது!
இது பற்றி இளவரசர் முகமது பின் நைஃப், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், அரசவையில் கூறியதாவது:
"சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் இகாமா துறையை (DEPARTMENT OF JAWAZAT) மூட உள்ளோம். அதற்க்கு பதிலாக முக்கிய்ம் (MUQEEM) எனப்படும் தற்காலிக குடியுரிமை அட்டை ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் வழங்கப்படும்.
IQAMA ஐ போன்று ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்க தேவை இல்லை இதன் கலாவதி காலம் முடிவற்றது. ஆனால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ள வேண்டும். இதனை புதுப்பிக்க எந்த ஒரு அலுவலகத்திலோ அல்லது அவரவர்களின் கம்பெனிகளிலோ அடையாள அட்டையை ஒப்படைக்க தேவை இல்லை. வலைதளத்திலேயே புதுபித்துகொள்ளலாம்.
இந்த MUQEEM அடையாள அட்டையின் படியே ஒவ்வொருவருக்கும் அவர்களது
1. வங்கி கணக்கு,
2. மருத்துவ பதிவு,
3. ஓட்டுனர் உரிமம்,
4. தொலைப்பேசி இணைப்பு,
5. இருப்பிட பதிவு,
6. கடவுச் சீட்டு விவரங்கள்,
7. தூதரக விவரங்கள்
8. காவல்துறை விசாரணை ஆகியவை பதிவு செய்யப்படும்.
இந்த அட்டையை சரிபார்க்க ஒவ்வொரு சோதனை சாவடி, வங்கி மற்றும் அரசு சார் நிறுவனங்களிலும் புதிய இயந்திரங்கள் மிக விரைவில் பொருத்தப்படும்.
இதை போன்று MUQEEM துறையில் பணி செய்யும் சவுதி அரசு பணியாளர்களை கண்காணிக்க புது ரக இயந்திரங்கள் ஒவ்வொரு அலுவலகத்திலும் சவுதி அரேபியா முழுவதிலும் மிக விரைவில் பொருத்தப்படும்.
இது முழுவதிலும் வெளிநாட்டவர்களை பாதுகாக்கும் எண்ணம் வருகிற இஸ்லாமிய வருடபிறப்பு 01, Muharram 1437 H (14, October 2015) தொடங்கப்பட உள்ளது.
இதனை போல் சவுதி அரேபிய மக்களின் நலம் பேணும் வகையில் அவர்களது MUQEEM அடையாள அட்டைகளிலும் சில மாற்றங்கள் வருவதாகவும் தெரிவித்தார்.
நன்றி : அராப் நியூஸ் .

In English..

Implementation of New Residence Cards Started in Saudi Arabia.. 
The government will provide new machine-readable identity cards to expatriates from the first day of the Islamic year, or Oct. 14 this year, in a bid to fight fraud and improve the efficiency of its systems.
Crown Prince Mohammed bin Naif, deputy premier and minister of interior, launched the “Muqeem” (Resident) card, which will replace the current one, in Riyadh on Thursday. The name “iqama” would no longer be used by the department.
The new card can last for five years or more, depending on how the user looks after it. All expatriates will have this identity document in place of the current one, Col. Khalid Al-Saykhan, director of information technology, told Arab News.
However, Al-Saykhan warned that the new document does not mean residency laws have changed. This was only a move to improve the efficiency of the department’s e-system, he said.
“The residency periods for expatriates will stay the same. The period of stay must be recorded through the Abshir system,TO REGISTER an identity card automatically,” he said. 
The cards, which will have no expiry date, will be read with special machines at checkpoints,BANKS and other places. It would have the photograph, name and other details of a person on it. The details of expatriates including their period of stay would be updated online.
Thanks : Arab News.

மிகச்சிறந்த வழிகாட்டிநமது அப்பா மட்டுமே!



என் அப்பா....
அருமையான அன்பான அப்பா ..,
உண்மையில் அவங்கள என் வாழ்கையில் ரொம்ப மிஸ் பண்றன்.
என் இறைவன் தந்த அருட்கொடை அவங்க பத்தி சொல்ல இந்த யுகம் போதாது.என் முதல் ஹீரோ அவங்கதான்..

 நான் விழுகின்ற பொது எல்லாம் தன் தோள் தந்து உயர்த்தியவர்ஒருத்தனுடைய வாழ்க்கையில். நமக்கு ஒரு பொக்கிஷம்

சின்ன வயதில் அப்பா தான்
முதல் ஹீரோ ... அப்பா என்ன
செய்தாலும் நன்றாக
கவனித்து வைத்து அதையே
ரிபீட் செய்வதுதான் என்
ஹீரோயிசம் .... ரிமோட் கார்
அப்பா ... சைக்கிள் வேணும்
அப்பா ... ரிப்போர்ட் கார்டு
அப்பா ....


என்று சுற்றிய என் அப்பா
உலகம் எப்போ எங்கே எப்படி
சற்று மாறியது..... ஹை
ஸ்கூல் , பிரெண்ட்ஸ்,
ட்யுஷன், மேட்ச், தியேட்டர் ,
காலேஜ் என்று மற்ற எல்லாம்
முதல் சீட் எடுக்க எப்படியும்
பாக் சீட்டில் இருக்கும் அப்பா
வேறு எங்கும் போய் விட
மாட்டார் என்னும்
மெத்தனமாயிருக்கும்
என்றுதான் நினைக்கிறேன்...
அப்படி ஓடும் போது



                                                                                   அப்பாவின் கண்ணில் தெரிந்த
Image result for அப்பா


ஒரு அக்கறையின் பரிதவிப்பு
என்னவோ நான் ரொம்ப
வளர்ந்து பெரிவனானதை
போல பெருமை பட வைத்தது!!

வேலை சேர்ந்து பெரிய
மனிதனாய் உணர்ந்த பின், என்
பையன் அவன் சம்பளத்தில்
வாங்கி தந்த ஷர்ட் , என்
பையன் அவன் பைக்ல
என்னை கூட்டிட்டு போனான்
என்று அப்பா பெருமையாக
சொன்ன போது அதை என்
சாதனையாக நினைத்தேன்...
அப்பாவை வைத்து முதல்
ரைட் போன பைக் பின்னே
ஏனோ ரொம்ப பிசியாகி
விட்டது அப்பாவின்
மென்மையான புன்னகையை
கடந்து கொண்டே .... என்
திருமணம் முடிந்த போது
அப்பாவின் கண்ணில் தெரிந்த
பெருமிதம் என்னவோ
அப்பாவையே காக்கும்
தலைவனாய் என்னை உணர
வைத்தது.....



ஆனால் அப்பா இன்றைக்கு
என் குழந்தையை பார்க்கும்
போது தான் புரிகிறது ....
தோளில் சுமக்க வேண்டிய
காலத்தில் தோளில் சுமந்தும்,
கை பிடித்து அழைத்து
செல்லும் நேரத்தில் கையை
பிடித்தும், அந்த கையை உதறி
விட்டு நான் ஓட எத்தனித்த
தருணத்தில் மனம்
பரிதவித்தாலும்
நம்பிக்கையோடு என் கையை
விட்டு என்னை பெரியவனாய்
உணர செய்ததும் , எனக்கான
வாழ்க்கை அமைந்த போது
எட்டி நின்று அதை வாழ்த்தி
நான் பெருமை அடைய
செய்ததும் , என்
வாழ்க்கையின் எல்லா
நேரங்களிலும் எந்த
எதிர்பார்ப்பும் இன்றி நான்
அறியாமலே என்னை
அரவணைத்து என்னை
தலைவனாக உணர செய்ததும்



அப்பா தான்...
இப்பொழுது தோன்றுகிறது
இன்னும் கொஞ்சம்
நெருக்கமாக அப்பா
அணைப்புக்குள் இருந்து
இருக்கலாமோ !

ன்னை மட்டுமே உலகமென்று நினைக்கும் என் உலகம் அப்பாஎன் அப்பா எனக்கு அப்பா இல்லை ஒரு நல்ல நண்பர்.என் உயிர்.சந்தோச சுமைதாங்கி.
அன்பை உள்ளே வைத்துக் கொண்டு எதிரியைப் போல தெரியும் ஒரு உறவு அப்பா

எங்கட அப்பாவ மிஸ் பன்றன் .அப்பா எனக்கா வேன்டி எல்லாமே செய்து இருக்கிறார் ஆனா நாந்தான் பகத்தில இல்ல அதுதான் எனக்கு சரியான கவலை


என்னுடைய அப்பா என்னை எப்படி அரைவனைத்து வளர்த்தார் என்பதை நான் அப்பாவாக ஆன பிறகு தெறிஞ்ஞைகிட்டேன்.


அப்பா எனும் வார்த்தையில் கூட எத்தனையோ இன்பம்

சின்னக் குழந்தையில் நம்மை எப்படி வளர்த்தார்களோ அதேபோல் அவர்களுக்கு வயதானால் நம் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்


மிகச்சிறந்த வழிகாட்டி! நம்மில் நல்ல எண்ணங்களை விதைப்பது நமது அப்பா மட்டுமே!


இவ் உலகில் தாய் தந்தையர்கலுக் நாம் கொடுக்கும் அன்பும் பாசமும் தான் நாளை மருமையில் நமக்கு கிடைப்பது சுவர்கம்


எனது உண்மையான ரொல் மாடல்,,உலக சரித்திரம் சொல்லி தந்தவர் என் அப்பா ,இப்போது என்னுடன் அவர் இல்லாத குறைதான் ,,,,,,



பாசத்துக்கு சொந்தகாரர்நான் என்னையே பயில என்னை பயிறுவித்த ஓர் கல்வி கூடம் அப்பா.....


அப்பா, ஏலா(செல்லமா) சாப்பிடடியா? என்று கேட்க! அந்த அன்பு பாசம் அப்பாவுக்கு பிறகு கிடைக்கவில்லை.நான் செய்கின்றன ஒவ்வொரு நல்ல விஷியங்களும் காரணம் என் அப்பா நாளை என் தலை முரையும் சொல்லும் என் அப்பா என்று நலமாக வாழ்வாராக


 நான் செய்கின்ற ஒவ்வொரு நல்ல விஷயங்களுக்கும் காரணம் என் அப்பா.நாளை என் தலை முறையும் சொல்லும்!!!!


ஆக்கம் மற்றும் தொகுப்பு  :  மு. அஜ்மல் கான்.

Thursday, 18 June 2015

நோன்பின் நோக்கம் பற்றிய சிறப்பு பார்வை !!



அஸ்ஸலாமு அjளல்க்கும் வரஹ..,
எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.
பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.
பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.
பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும்.
உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா?
நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.
சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.
நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.
மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903, 6057
பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.
நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1893, 1903

நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.
முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.
ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள்.
எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.நோன்பின் நோக்கம் உணர்ந்து இருப்பிர்கள் தெரிந்ததை நம் சகோதரர்களுக்கு தெரிய வைப்பது நம் அனைவர்கள் மீதும் கடமை அல்லாஹ நம் அனைவருக்கும் இந்த ரமலானில் பூரண சுகத்தை தந்து இரவில் நின்று வணங்கிய கூட்டத்தில் சேர்க்க பிராத்திப்போம்.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Wednesday, 17 June 2015

சினிமாவும் இன்றைய மனித சமூகமும்! ஒரு இஸ்லாமிய பார்வை...

சினிமாவும் இன்றைய மனித சமூகமும்!
{ ﺎَّﻣَﺃَﻭ َﻑﺎَﺧ ْﻦَﻣ َﻡﺎَﻘَﻣ ﻰَﻬَﻧَﻭ ِﻪِّﺑَﺭ َﺲْﻔَّﻨﻟﺍ ِﻦَﻋ .ﻯَﻮَﻬْﻟﺍ َّﻥِﺈَﻓ َﺔَّﻨَﺠْﻟﺍ َﻲِﻫ ﻯَﻭْﺄَﻤْﻟﺍ }
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். 79:40,41
﴿ ِﺱﺎَّﻨﻟﺍ َﻦِﻣَﻭ ْﻦَﻣ َﻮْﻬَﻟ ﻱِﺮَﺘْﺸَﻳ ِﺚﻳِﺪَﺤْﻟﺍ َّﻞِﻀُﻴِﻟ ْﻦَﻋ ِﻞﻴِﺒَﺳ ِﻪَّﻠﻟﺍ ٍﻢْﻠِﻋ ِﺮْﻴَﻐِﺑ ﺎَﻫَﺬِﺨَّﺘَﻳَﻭ ًﺍﻭُﺰُﻫ َﻚِﺌَﻟﻭُﺃ ْﻢُﻬَﻟ ٌﺏﺍَﺬَﻋ ٌﻦﻴِﻬُﻣ * ﺍَﺫِﺇَﻭ ﻰَﻠْﺘُﺗ ﺎَﻨُﺗﺎَﻳَﺁ ِﻪْﻴَﻠَﻋ ﻰَّﻟَﻭ ًﺍﺮِﺒْﻜَﺘْﺴُﻣ ْﻥَﺄَﻛ ْﻢَﻟ ﺎَﻬْﻌَﻤْﺴَﻳ ﻲِﻓ َّﻥَﺄَﻛ ِﻪْﻴَﻧُﺫُﺃ ًﺍﺮْﻗَﻭ ُﻩْﺮِّﺸَﺒَﻓ ٍﻢﻴِﻟَﺃ ٍﺏﺍَﺬَﻌِﺑ ﴾
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்)  
.
இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. 31 : 6
இன்றைய மனித சமூகம் தனது வாழ்வின் முக்கிய அங்கமாக இந்த சினிமாவை வைத்திருக்கிறது.
இறைவனுக்கு அஞ்சிவாழும் சிலரை தவிர பெரும்பான்மை மக்கள்
.
.
தங்களை சினிமாவுக்கு அடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
.
அதன் மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன என்பதையும் இந்த சமூகம் சிந்திக்க மறுக்கிறது.
.
.
சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன ???
.
1) சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம்பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது இந்த சினிமா !
.
2) பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா !
.
3) திருட்டின் வகைகளை கற்றுகொடுத்தது இந்த சினிமா !
.
4) நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனித பண்பாக மாற்றியது இந்த சினிமா !
.
5) இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா !
.
6) வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா !
.
7) காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா !
.
8) தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது இந்த சினிமா !
.
9) Fashion என்ற பெயரில் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம்,பண்பாடுகளை அழித்தது இந்த சினிமா !
.
10) ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா !
.
11) உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது இந்த சினிமா !
.
12) உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது இந்த சினிமா !
.
13) திரையில் பெண்களை போகப்பொருளாக ஆக்கியது இந்த சினிமா !
....
14) "அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே "என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களை கண்களால் "விபச்சாரம்" செய்ய கற்றுக்கொடுத்தது இந்த சினிமா !
.
15) வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது இந்த சினிமா !
.
16) இறைவனின் சட்டங்களை புறக்கணிக்க செய்து மனித சட்டங்களின் பக்கம் மக்களை திருப்பியது இந்த சினிமா !
.
ஒழுக்கக் கேட்டைத்தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
.
மொத்தத்தில் சினிமா என்பது ஓழுக்கச்சீர்கேடடின் "கையேடு "
.
விபச்சாரத்தின் "நுழைவாயில்"சமூக சீர் குலைவிற்கான " ஆயுதம் "
என்று இந்த மனித சமூகம் சினிமாவை தடை செய்கிறதோ அன்றுதான் நாம் இறைவன் கூறும் பண்புகளை அடைவோம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
.
.
இனியாவது சிந்தியுங்கள் இந்த சினிமாவினால் நாம் அடைந்த நன்மைகள் என்ன ??
.
"விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு (விதியில்) எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான். கண்கள் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபச்சாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபச்சாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபசாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபச்சாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 516
ْﻦَﻤِﻟَﻭ َﻑﺎَﺧ ﻡﺎَﻘَﻣ ﻪّﺑَﺭ ِﻥﺎَﺘَّﻨَﺟ
.
தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன. 55:46

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல் .

Monday, 15 June 2015

Ramadan Marketing Guide for 2015..

Ramadan Kareem Is a Month of Loving and Caring the People
Ramadan is a famous Islamic festival that takes place in the ninth month of the Islamic lunar calendar. Muslims stay away from any kind of physical consumption during daytime hours throughout this month. Families get together during Iftar time in order to enjoy a wide variety of delicious foods and drinks with their beloved ones. Thus, Ramadan Kareem is a month of loving and caring the people.
The Celebration of Ramadan in More of a Traditional Muslim Style in Gulf Countries
Saudi Arabia is a traditional country because Prophet Muhammad (P.B.U.H) laid the foundation of Islam in this region. This is the reason why Ramadan is celebrated in Saudi Arabia in more of a traditional Muslim style.

Ramadan 2015 Marketing

Ramadan 2015 will start from June 17th and end on July 17. After that, the Eid- Al-Fitr / عيد الفطر festival will take place as it is a great time of joy for every Muslim. That’s what plenty of businesses and companies are advertising their products or services for Ramadan 2015 ahead of time.
ramadan-kareem-photos-2015

Extensive Product Marketing during Ramadan in Gulf Countries

The holy month of Ramadan brings an enormous amount of happiness on the face of every Muslim. The sale of consumer goods and services increases during Ramadan in the Kingdom of Saudi Arabia. The growth of the local businesses, retail shops, wholesale shops, mini- markets, and local advertisers increases during Ramadan.
Truly speaking, clothing is an important part in Muslims cultures. The sale of clothes increases in Ramadan. Then sale of handmade and crafted jewelry also increases in this holy month. Moreover you can see that electronic shops and markets are fully packed in Ramadan. It seems that everyone is busy in “shopping in Ramadan Kareem”.
ramadan-kareem-2015
Food and Drink Consumption Increases during Ramadan in Gulf Countries
Often, people say that food consumption in the holy month of Ramadan decreases as it is a month of fasting. This is not the case because food consumption increases during Ramadan Kareem. Millions of Muslims eat a wide variety of hot, spicy and delicious foods in the evening after many hours of fasting. The most popular foods eaten in Saudi Arabia during Ramadan are known as Al-Baik Broast Chicken, Baak, Kudu and House of Donuts.
Fast food is becoming rapidly popular in the Kingdom of Saudi Arabia. The sale of fast food increases during Ramadan in Gulf Countries Not only this, Gulf people drink a wide variety of beverages and fruit juices on Iftar time in Ramadan such as dates & milk, malt juice, apple juice, tap water, mango, strawberry, banana shakes, pomegranate juices, etc. Ramadan is a time in which Saudi families spend more time on delicacies. There is one important aspect about Saudi people that they become more generous during Ramadan.
Extensive Use of Dates during Ramadan Kareem
One of the most important features about Ramadan Kareem is the extensive use of dates. Usually dates are eaten while breaking the fast after Namaz e Maghrib.
Use of Crescent Moon as an Iconic Symbol and Visual Marketing during Ramadan
Crescent moon is used as an archetypal sign by a wide variety of Muslim organizations in Ramadan across the Muslims countries. Generally this symbol is used on flags for various Muslim countries. Truly speaking, crescent moon sign is the beginning of Ramadan Mubarak. This iconic symbol is extensively used in Ramadan ads and marketing campaigns by a wide variety of organizations in the Kingdom of Saudi Arabia. Therefore if you are thinking of visual marketing in Saudi Arabia during Ramadan, you should never forget to use the iconic symbol of “Crescent Moon”.
Unique Use of Messages by Companies during Ramadan
There are different types of unique messages used in Ramadan by the companies in the Kingdom of Saudi Arabia and other Middle East countries. These messages are given below one-by-one:
  • One of the most commonly used messages by the companies is “Ramadan Kareem”. It is a unique sign of Ramadan blessings from Allah to the Muslims.
  • Another common message used in Ramadan by the companies is known as “Ramadan Kareem”, which means that Allah is more kind and generous in Ramadan. That’s what companies become more generous during Ramadan Kareem by giving the people special offers, incentives, bonuses and other discount packages.
  • Then Happy Ramadan is used by the companies as a unique message in Ramadan marketing in Saudi Arabia.
  • Last, but not the least, Eid Mubarak /عيد سعيد) is used by top brands as the most popular message in Kingdom of Saudi Arabia and other Muslim countries not only during Ramadan but also during other Muslim festivals. Therefore, companies use the message of “Eid Mubarak/ عيد سعيد” throughout their Ramadan promotion and it seems to be the most popular message among Muslim community.
Promotion of TV Commercials during Ramadan Season
Countless companies are busy in product marketing during Ramadan season. Most of the companies take advantage of TV ads, commercials and promos during Ramadan Kareem. From shoe manufacturers to fashion attire brands, from mobile phone companies to sweet manufacturers and from electronic companies to cosmetic service providers, all other brands are busy in their brand promotion through TV commercials during Ramadan season. Great thing is that companies are successfully able to generate higher conversion rates and sales volumes through TV commercials in this month.
saudi-arabia-ramadan-kareem-2015
2015 Online Ramadan Promotion by the Companies in Saudi Arabia
As Ramadan is not far away from us, plenty of companies and renowned business brands have launched their online marketing campaign for Ramadan 2015 in Saudi Arabia. These companies are making use of
  • Google Adwords
  • Pay-Per-Click (PPC) Advertising
  • Social Media Marketing
  • SMS marketing
  • Classified ads
  • Video marketing
  • Content marketing
and all other forms of marketing.
saudi-arabia-eid-mubarak-2015
Special Ramadan 2015 Marketing by Prolines in Saudi Arabia
If you are willing to promote your brand during Ramadan season, feel free to contact with Prolines.sa immediately as they are offering you the best and affordable Ramadan marketing services in Saudi Arabia.

Prepared by M.Ajmal Khan.