Friday, April 29, 2016

கனிணியில் வேலை செய்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு வரபிரசாதம் !!

நாம் ஒவ்வொரு முறையும் ஓவ்வொரு பழங்களின் மருத்துவக் குணங்களை அறிந்து வருகிறோம். இந்த பகுதியில் மங்குஸ்தான் பழத்தின் மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வோம்.பழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது.


இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா,தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும் (Infection),காளான்களையும் (Fungus)அழிக்க பயன்படுத்தினர்.


மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகாகவும், சுவைக்க இனிதாகவும் இருக்கும். மங்குஸ்தான் பழத்தின் தோல் பகுதி தடிமனாக காணப்படும். பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். இது ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் 'சீசன்' ஆகும். இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். மங்குஸ்தான் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் மங்குஸ்தான் பழத்தில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.


வைட்டமின்கள்..


பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது.கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.அதிக அளவில் தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளது. உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியா திகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.

இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு


Tamil - Mangosthan


English - Mangosteen


Malayalam - Mangusta


Telugu - Maugusta


Botanical Name - Garcinia mangostana
மூல வியாதியை போக்க.
.

நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது.

சீதபேதி
இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.
உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
மன அழுத்தம் போக்கும் நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவைகளை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.
வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.
உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.


வாய் துர்நாற்றம் நீங்க


மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமடையும். கிருமிகளைக் கொள்ளும்.

கண் எரிச்சலைப் போக்க

கனிணியில் வேலை செய்பவர்களுக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.

இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.


பெண்களுக்குமாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.


தமிழ்நாட்டில்மலைப்பகுதியில்..


தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் விரும்பி வாங்கி சுவைக்கும் பழங்களில் மிக முக்கியமானது மங்குஸ்தான் பழம்ஆனால் சீசன் சமயத்தில் ஒவ்வொரு மரமும் சுமார் ஒன்றரை டன் பழங்களை தந்து விவசாயிகளின் மனங்களையும், பையையும் நிறைத்துவிடும். இந்நிலையில் இந்த ஆண்டு மங்குஸ்தான் பழ சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. புனலூர், செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கிலோ ரூ. 30க்கு மங்குஸ்தான் பழங்களை அடைத்து மதுரை, திருச்சி, கோவை, சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment