தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது.மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். இந்தக் காலத்தில் பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக்கூடும்.
ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும் இழுத்துக் கொண்டோடும் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாக மாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கிய வர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும்.
மழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடிக்கொண்டே இருக்கும். இதனால் எளிதில் நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.. தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா. இன்ஃபுளூயன்ஸா வைரஸ் நோய்க் கிருமிகள் முதலில் வயதானவர்களையும், குழந்தை களையும் தாக்கும். அதேபோல ஏற்கெனவே நோயுற்றிருப்ப வர்களிடமும் தன் கைவரிசையைக் காட்டும்.
இன்ஃபுளூயன்ஸா தாக்கியப்பின் உடலின் நோய் எதிர்ப்புசக்தியைக் குறைத்து, பாக்டீரியா தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தித் தரும். இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை சாதாரண காய்ச்சலாக நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும் அபாயமும் இருக்கிறது. அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
பொதுவாகவே நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான் நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அதுமட்டுமில்லாது வீட்டை சுற்றி நீர் தேங்கி இருப்பின் அதில் கொசுக்கள் உருவாகின்றன.
* நாளடைவில் தேங்கி இருக்கும் நீர் சாக்கடை போல் மாறி விடுகின்றது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்கிறோம். இவ்வாறு இருக்கும் போது வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி நோய்களை ஏற்படுத்துகிறது.
* சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.
* மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரலாம். மழை காலத்தில் தான் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வரலாம்.
* காய்ச்சல், சலதோஷம், இருமல் ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று தகுந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.
* சரியாகிவிடும் என்று வீட்டிலேயே ஏதேனும் மாத்திரை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.
* தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் ரத்தப் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். மழைக் காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
* கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வீட்டில் காய்ச்சிய தண்ணீரை கொண்டு சென்று குடித்தால் மழை கால நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* மழைக் காலத்தின் போது சுத்தமாக இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* வீட்டைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடுவது நல்லது.
* வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அவர்களுக்கே அறியாமல் கீழே இருப்பதை வாயில் எடுத்து வைத்துக் கொள்வர், எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.
* வைரஸ் கிருமிகள் காற்றில் துகள்கள் வடிவில் பரவும். எனவே ஒருவர் பயன்படுத்திய டவல், கைக்குட்டை ஆகியவற்றை மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும் தும்மல், இருமல் போன்ற காரணத்தினாலும் வைரஸ் காய்ச்சல் பிறரை எளிதில் தாக்கும்.
* கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
* மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால் பரவக்கூடியதுதான். அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் தும்மல் இருமல் அலர்ஜி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
* கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
* மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால் பரவக்கூடியதுதான். அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் தும்மல் இருமல் அலர்ஜி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
மூன்றுவித பிரச்னைகள் பொதுவாக மழைக்காலத்தில் 3 விதமான பிரச்னைகள் ஏற்படும். மாசுபட்ட சூழ்நிலை, மாசுபடும் குடிநீர், தண்ணீர் சார்ந்த உயிரினங்கள் ஆகியவற்றின் மூலம் நோய்கள் பரவுகின்றன. இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள பழகிவிட்டாலே, நாம் எளிதில் நோய்களை வென்று விடலாம். நிச்சயம் நம் குழந்தைகளுக்கும் இவற்றை கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும்.
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
நன்றி : டாக்டர் பீ.பஷீர் அஹமது. விஜயா மருத்துவமனை, சென்னை .
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
நன்றி : டாக்டர் பீ.பஷீர் அஹமது. விஜயா மருத்துவமனை, சென்னை .