Tuesday, 7 July 2009

பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் 1,500 எருமை மாடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் !!


சமீபத்தில் இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கிராமங்களிலோ, நகரங்களிலோ எருமை மாடுகளை பார்ப்பது அரிதாகி வருகிறதுஇதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள பசுக்களும், காளைகளும், எருமைகளும் கொல்லப்பட்டு மாமிசமாகவும் , தோலாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிவிடும்இதன் ஆபத்தை உணர்ந்த கர்நாடக அரசு மாடுகளைக் கொல்வதை தடை செய்ததுடன் லாரிகளில் மாடுகளை ஏற்றிச் செல்லவும் தடை விதித்துள்ளது.

ஆந்திராவில் விவசாயிகளின் பரிதாப நிலையால் மாடுகளை 
அடிமாட்டு விலைக்கு விற்கும் பாவத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதே நிலை தமிழகத்துக்கு வரும் முன் தடுக்க முதல்வர் மாடுகளைக் கொல்வதை தடைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வெளி மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்தோ , தமிழகம் வழியாகவோ மாடுகள் கொண்டு செல்வதையும் தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ராமகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

மணப்பாறை அருகேயுள்ள மட்டப்பாறைப்பட்டியில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, 20 கி.மீ., தொலைவில் மட்டப்பாறைப்பட்டி உள்ளது. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்

அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்வது வழக்கம். பக்தர்கள் தாங்கள் எண்ணியது நிறைவேறி விட்டால், எருமை கிடா பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்வர். ஏழு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை சுற்றுப்புற 54 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு நடந்த திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. அதற்கு ரெட்கிராஸ் அமைப்பு மற்றும் மிருகவதை தடுப்பு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியதால், அப்போதிருந்த .தி.மு.., ஆட்சியில் கோவில்களில் உயிர்பலி கொடுக்க தடை விதித்து கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டது. உயிர்பலி தடைசட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின் சில மாதங்களில் கோவில்களில் உயிர்பலி தடைசட்டத்தை அரசு வாபஸ் பெற்றது.

இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஒரு வாரமாக திருவிழா நடந்து வருகிறது. மட்டப்பாறைப்பட்டி ஊரார் செல்வம், தவளவீரன்பட்டி முக்கியஸ்தர் ராமசாமி, சீரங்கன், வேலுச்சாமி, அணியாப்பூர் செல்வம் மற்றும் 54 ஊர்களைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழாவையொட்டி, பத்ரகாளியம்மனுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிடும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று பகல் 2 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு எருமை கிடா பலியிடும் பூஜை நடந்தது. வீரப்பூர் ஜமீன்தார் சவுந்திரபாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அரிவாள் பூஜை நடந்தது. பகல் 2.45 மணிக்கு ஜமீன்தார் சவுந்திரபாண்டியனின் எருமைகிடா முதலில் பலியிட, தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திக்கடனாக செலுத்திய எருமை கிடாக்கள் பட்டியிலிருந்து ஒவ்வொன்றாக அழைத்து வரப்பட்டதுவழியில் நின்ற வாலிபர்கள் தங்களிடமிருந்த உருட்டுக் கட்டையால் எருமை கிடாக்களை தாக்கினர்.

பின்னர் எருமைகிடாக்கள் பலியிடத்துக்கு கொண்டு வரப்பட்டு பலியிடப்பட்டன. கோவில் முன் தோண்டப்பட்ட குழியில் பலியிடப்பட்ட எருமைகிடாக்கள் போடப்பட்டன. வேண்டுதல் உள்ள பக்தர்கள், எருமைகிடாக்களின் தலையிலிருந்து வடியும் ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டு கோவிலை சுற்றிவந்து குழிக்குள் எருமைகிடாக்களின் தலையை போட்டனர். பக்தர்கள் உப்பு வாங்கி சென்று குழியில் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு வரை தொடர்ந்து ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

நன்றி:-தின மலர்

நேர்த்திக் கடனுக்காக உயிர்ப்பலி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்ட எருமைகளை யாருக்கும் பயன்படாமல் குழியில் போட்டு புதைத்ததுதான் மனதுக்கு நெருடலாக இருந்தது. இந்த இறைச்சியை பதப்படுத்தி தேவையுள்ள வறியவர்களுக்கு கொடுத்திருந்தால் வறியவர்களின் வாழ்த்து கிடைத்திருக்குமே! இதற்கு இந்து மதத்தில் தடையிருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் தரவும்.

இதே போன்று முஸ்லிம்களிடத்திலும் ஹஜ் பெருநாளன்று கோடிக்கணக்கான ஆடுகளும் மாடுகளும் ஒட்டகங்களும் உலகம் முழுவதும் அறுக்கப்படுகின்றன. சவூதி அரேபியாவில் ஹஜ் பெருநாளன்று வெட்டப்படும் அனைத்து உயிர்களையும் பதப்படுத்திஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா நாடுகள், இந்தோனேஷியா போன்ற வறிய நாடுகளுக்கு சவூதி அரசாங்கம் அனுப்பி வைக்கிறது. இது போன்ற ஒரு வழி முறையை நமது அரசாங்கமோ அல்லது இந்து மக்களோ ஏன் முயற்சி செய்யக் கூடாது.

முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கும் ஆர்.எஸ்.ஸோ அல்லது பி.ஜே.பியோ இதற்கும் சிறிது நேரத்தை ஒதுக்கினால் அந்த உயிர்கள் உரிய வறியவரைச் சென்றடையுமல்லவா?

'பலி கொடுக்கப்பட்ட உயிர்களின் மாமிசங்களோ அவற்றின் ரத்தங்களோ இறைவனை சென்றடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள இறை அச்சமே இறைவனை சென்றடையும்.'
-குர்ஆன் 22:37

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment