Tuesday, 31 May 2011

சமசீர் கல்வி-ஒரு சிறப்பு பார்வை....

தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்திய கல்வி முறை, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், சிபிஎஸ்ஈ மற்றும் மெட்ரிகுலேஷன் என 5ந்து வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது . இந்த பாடத்திட்ட முறைகளால் , பல ஆண்டுகளாக ஏகபட்ட குழப்பங்கள் நீடித்துவந்தன.

மேலும், சமூகத்தில் மாணவர்களிடையே பெரும் ஏற்றதாழ்வை உருவாக்கி வந்தது. தனியார் கல்வி நிறுவனங்களின் கண்மூடித்தனமான கட்டண கொள்ளைகலை இந்த கல்வி முறைகள் ஊக்கப் படுத்தியும் வந்தன.

இந்திய அரசியல் அமைப்பு_சட்டத்தின் 14ம் பிரிவு அனைவரும் சமம் என தெரிவித்தாலும் , சாதி, சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக, பணகாரர்களின் பிள்ளைகள் தரமான கல்வியையும், பணமில்லாத மக்களின் பிள்ளைகள், தரம் குறைந்த கல்வியையும் பெறும்சூழல் நிலவிவருகிறது .இது சாதி, மத பேதத்தை விட கொடியது,

"பிச்சை புகினும் கற்கை நன்றே" என்றால் ஔவை_இன்று
English Medium_களில் குழந்தையை படிக்கவிட்டு_ பிச்சைக்காரர்கள்
ஆவதுதான்_ உண்மை.

அமெரிக்க N.C.A.E.R- நீயூயார்க் என்ற அமைப்பு, இந்திய_மக்களின் சேமிக்கும் திறன் பற்றிய ஒருஆய்வை நடத்தியது. இதில் யா‌ர்யா‌ர் பணம் சேமிக்கிறார்கள் என சர்வே எடுத்துள்ளது அதில் கிடைததகவலின்படி மாதசம்பளம் பெறுபவர்களே சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் என்று தெரியவருகிறது எதற்கு என்றால் தங்கள் குழந்தையின் கல்விக்கு என வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் கல்விக்கு எவ்வளவு முக்கியதுவம் தருகிறார்கள் என்பது புரியும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் பாசாகவே கஷ்ட்ட படும் ஒரு டாக்டரின் (அல்லது) ஒரு பெரும் செல்வந்தரின் பிள்ளை தனியார் மருத்துவ கல்லூரியில் பல லட்சங்களை தந்து கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்றும் வந்து விடுகிறார் ? வந்தவுடனேயே தங்களது பண பலத்தால் ஒரு பெரிய மருத்துவ மனைக்கு சொந்தகாரராகவும் ஆகிவிடுகிறார்

அனால் ஒரு ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அறிவாளி மாணவன் மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து அவன் தனியாக ஒரு சாதாரண கிளினிக் வைப்பதற்குள் அவன் படும் கஷ்ட்டம் சொல்லிமாளாது , இதுவே இந்தியாவில் அறிவு செல்வங்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை

இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வு உள்ள நாட்டில் "சமச்சீர் கல்வி" என்பது அவசியத் தேவையாகும்.சமசீர் கல்வி என்றால் எல்லோருக்கும் சமமான கல்வி எ‌ன்பதாகும். இந்த சமசீர் எப்படிபட்ட கல்வியாக இருக்கவேண்டும்? இதன் அவ‌சிய‌ம் என்ன? இந்த கல்வியின் பயன் என்ன? என்று மக்களுக்கு தெரியவேண்டும்.
கல்வியில் எங்கும் சமசீர் நிலவவேண்டும். அந்நிய தேசத்துடன் அறிவில் போட்டிப்போட நம் நாட்டு குழந்தைகளுக்கு கல்வியை தரமுள்ளதாக தரவேண்டும். அதற்க்கு அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் அணைத்திலும் உயர்தரமான கல்வி 
வழங்கவேண்டும். அதற்க்கு மாணவ,மாணவிகள் தங்கள் தாய்மொழியை முதல் மொழியாகவும், இரண்டவதாக தேசிய மொழி இந்தியையும், முன்றாவதாக உலகளாவிய மொழி ஆங்கிலத்தையும் தெளிவாக எழதவும் பேசவும் பழக வேண்டும்.

ஏன்ணென்றால் நம் நா‌ட்டி‌ன் பிரதமர், மத்திய மந்திரிகள் பாராளுமண்றத்தில் மற்றும் மேடை விழாக்களில் என்ன பேசுகிறார்கள் என்று மற்றவர் மொழி பெயர்த்து கூறாமல்
தாங்களே தெறிந்துக்கொள்ள முடியும். மேலும் படிக்கும் மாணவ,மாணவிகள் மொழிவரிசை(Language) பாடங்கள் தவிர மற்ற(Maths,Science&Socialscience..)பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்கவேண்டும். அப்பொழுதான் அவர்கள் நம் நாட்டில் மட்டும் அல்லாமல் உலகளாவிய அவர்களின் படிப்பு மற்றும் படிப்பு சமந்தமில்லாத பயனுள்ள தகவல்களை அடுத்தவரின் உதவியின்றி அவர்கள் மொழியிலே படித்து உணரஏதுவாகும்.
மேலும் உய‌ர்நிலைப்பயிலும்(HighSchool) மாணவ,மாணவிகளுக்கு கணிணிப்பயிற்சி மற்றும் ஆய்வகப்பயிற்சி பயிற்றுவிக்கவேண்டும். இந்த அடிப்படை கல்வி மிக தரமுள்ளதாக இருக்கும்படி கல்வித்துறை பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி ஒரு அடிப்படைக்கல்வி நம் வளரும் தலைமுறைக்கு வாயிக்கப்பெற்றால் அவர்களிடையே உள்ள கூச்சசுபாவம் விட்டு போகும் தன்நம்பிக்கை வளரும். அ‌ண்டை மா‌நிலங்களையும் தன் மா‌நிலம்போல என்னவழி பிறக்கும். பொதுநல குணம் வளரும். இப்படி கிடைக்கப்படும் அல்லது கொடுக்கப்படும் கல்விதான் உண்மையில் சமசீர்கல்வியாகும்

No comments:

Post a comment