Thursday, 27 October 2011

வைரம் நகைகளை வாங்கக்கூடியவர்கள் வைரத்தைப்பற்றி அறிந்திருக்கிறார்களா.?

சமீபகாலமாக வைரத்தின் விளம்பரங்களை நிறைய காண்கிறோம்.வைரக்கல் மோதிரம் ,வைரத்தோடு ,வைரநெக்லஸ் இப்படி வைரத்தில் நிறைய நகைகள் பலரை கவர்ந்து வருகிறது.

வைரத்தில் நகைகளை வாங்கக்கூடியவர்கள் வைரத்தைப்பற்றி அறிந்திருக்கிறார்களா.? என்றால் பலருக்கு அது சூனியமாகவே இருக்கிறது.
சாதாரண அமெரிக்கன் ஜர்கோன் கல்லையும் வைரக்கல்லையும் காண்பித்து எது வைரம் என்றால் திணறிப்போவார்கள்.

இந்த அறியாமை பலரை ஏமாறவைக்கிறது.தங்கத்திலிருந்து இரண்டு மூன்று மடங்கு அதிகமான விலையில் வைரநகைகளின் விலைகள் இருக்கிறது.


சாலிடேர்(Solitaire) என்றால் என்ன ?
சாலிடேர் என்பது ஒற்றை வைரத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை, 33 சென்ட் மற்றும் அதற்கு அதிகமான எடையுள்ள வைரங்களைத்தான் சாலிடேர் என்று குறிப்பிடுவார்கள்.


வைரத்திலும் தரம் இருக்கிறது அதற்கும் கேரட் இருக்கிறது.தங்கம் காப்பரின் அளவில் தரம் பிரிக்கப்படுகிறது.வைரம் அதன் நிறம் கட்டிங் எடை இவைகளில் தரம் பிரிக்கப்படுகிறது.


வைரத்தின் தரம்
விவிஎஸ்-1 (VVS-1)
விவிஎஸ்-2 (VVS-2)
விஸ்-1 (VS-1)
விஸ்2 (VS-2)
எஸ்ஐ-1 (SI-1)
எஸ்ஐ-2 (SI-2)

இது தரத்தின் பெயர்கள்.அதன் நிறத்தை சி(C) டி(D) இ(E) எப்(F) ஹச்(H) ஐ(I) என ஆங்கில அரிச்சுவடி வார்த்தைகளில் நிறத்தை நிர்ணயித்துள்ளார்கள்.



விவிஎஸ்-1(VVS-1) சி(C) நிறத்தில் உள்ள வைரம் விலை அதிகம். தரம் நிறைந்ததாகும். பெரும்பாலும் கடைகளில் விஎஸ்-2(VS-2) மற்றும் எஸ்ஐ-2(SI-2) இந்த ரக வைரங்களை மோதிரம், நெக்லஸ்சில் பொருத்தி விற்பனை செய்கிறார்கள்.

விவிஎஸ்-1 (VVS-1)C நிறத்தின் ஒருகேரட் விலை $ 3500 அமெரிக்கன் டாலராகும்.
விஸ்-2 (VS-2)ஒருகேரட் $ 400 டாலராகும்.
ஒருகேரட் என்பதின் எடை 0.10 மில்லியாகும்.
போடிவைரக்கற்களை பதித்து அத்துடன் சில கலர் கற்களையும் பதிதத்து ஒரு நெக்லஸ் $ 5000 டாலர் என்று விற்பனை செய்வார்கள். தள்ளுபடி 25% அல்லது 50% சதவீதம் என்பார்கள்.

நாம் வாங்கிய சில மாதங்கள் கழித்து அதை விற்பனைக்கு கொடுத்தால் வைரத்திற்கு மதிப்புப்போட மாட்டார்கள். தங்கத்தின் எடைக்கு மட்டும் விலை நிர்ணயித்து அதற்கான தொகையை தருவார்கள். காரணம் வைரத்தின் தரம் எஸ்ஐ-2 என்ற குவாலிட்டியைச் சார்ந்தது. அதற்கு வாங்கும்போது மதிப்பிருக்கிறது. விற்கும் போது மதிப்பில்லை.

அதேநேரத்தில் விவிஎஸ்-1 அல்லது விவிஎஸ்-2 போன்ற வைரக்கற்கள் பதித்த நெக்லெஸ் வாங்கும் போது விலை அதிகம் . விற்கும்போதும் அதே விலை இல்லையென்றாலும் 75 சதவீதம் அதனுடைய தொகை திரும்ப கிடைக்கும்.
விவிஎஸ் வைரங்கள் என்றால் என்ன ?
விவிஎஸ் (VVS) என்றால் very very small inclusions என்கிற ஆங்கில வார்த்தையின் சுருக்கம். அதாவது மிகச் சிறிய, சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத, லென்ஸை வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய வைரத்தின் உள்ளேயே இணைந்து வளர்ந்துள்ள கனிம, அல்லது வேதிப் பொருளின் (மிகச்சிறிய) துகள்களோ, துணுக்குகளோ ஆகும். இதனால் வைரத்தின் ஜொலிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இது தவிர இன்னும் பெரிய துகள்களை VS1, VS2 என்பார்கள்.

அதன் உள்ளே உள்ள துகள்களின் அளவை பொறுத்து குறியீடுகளும் மாறிக் கொண்டே போகும்.

பூமியில் இருந்து எடுக்கப்படும் எல்லா வைரங்களும் நகை செய்யப் பயன்படுமா?
இல்லை. 40-50 சதவீதம் வைரங்கள் மட்டுமே நகை செய்யப்பயன்படும். அவை 4Cs என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தரம் குறைந்த மற்ற வைரங்கள் தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படும். இவை Industrial Diamonds எனப்படும்.

Industrial Diamonds – என்றால் என்ன ?
நகை செய்யப் பயன்படாத வைரங்கள் பலவித தொழிற்சாலை உபகரணங்களுக்கு பயன்படும். ஏனென்றால் அந்த வைரத்தின் தன்மை என்றுமே மாறாது. அவை சாணைக்கல்லில் அடைப்புகளை நீக்கும் கருவிகள் (Dressing Tools), கண்ணாடிகள் வெட்டும் கைக்கருவிகள் (Glass Cutter), லேத்மெஷினில் ஸ்டீல் பாகங்களை வெட்டும் கருவிகள் (Cutting Tools), அறுவை சிகிச்சை செய்யும் கைக்கருவிகள் (Operation Instruments), இன்னும் பலவற்றில் உபயோகிக்கப்படுகிறது. இதன் துகள்களை சாணைக்கல்லில் பதித்து வைரத்தை பட்டை தீட்ட பயன்படுத்தலாம். இப்படி பலவற்றில் பயன் படுத்தலாம்.

4Cs என்றால் என்ன?
பல நாடுகளில் வைரங்களின் தரத்தைக் குறிப்பிட வெவ்வேறுவிதமான வார்த்தைகளை குறிப்பிட்டு வந்தார்கள். உலகளவில் ஒரே தர நிர்ணயம் செய்வதற்காக (நிமிகி) ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடிட் ஆப் அமெரிக்கா 4சி என்கிற முறையை அறிமுகப்படுத்தியது. அது பின்வருமாறு.

1.CLARITY, 2. COLOUR, 3. CAROT, CUT.

1.CLARITY (தெளிவு)
வைரத்தை மேலிருந்து உள்ளே பரிசோதித்து பார்க்கும் போது ஏதேனும் வேதிப் பொருள்களோ கனிமப் பொருள்களோ உள்ளடங்கி இருக்கிறதா என்பதை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படும். அது எந்தவிதத்திலாவது அதன் ஜொலிப்பை பாதித்தால் வைரத்தின் விலை குறையும்.

2. COLOUR (நிறம்)
வைரம் சுத்த வெள்ளையாக அதாவது நிறமற்றதாக (தெளிந்த நீரோடை போல்) இருந்தால் நல்ல தரமானது. நிறம் சற்றே மாறுபட்டு கொஞ்சம் பழுப்பு நிறம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக இருந்தால் தரம் குறைவாகும். தெளிவான கற்களே சிறந்தவை.

3. CAROT (எடை)
100 சென்ட் = 1 கேரட் இது வைரத்தின் எடையை குறிக்கிறது. வைரக் கல்லின் எடையை பொறுத்து அதன் விலை நிர்ண யிக்கப்படும்.

4. CUT (பட்டை தீட்டப்பட்டுள்ள முறை)
வைரக்கல் எந்த முறையில் பட்டை தீட்டப்பட்டுள்ளதோ அதை பொறுத்து விலை நிர்ணயிக்கப் படும். பட்டை சரியாக தீட்டப் படாமல் இருந்தால் வைரத்தின் விலை குறைந்து விடும்.
இந்த நான்கு C க்கள் (4 Cs ) வைரம் தேர்வு செய்வதற்கான அடிப்படையாகும்.

தங்கக் கேரட் வைரக் கேரட் இரண்டும் ஒன்றுதானா ?
வைரத்தில் கேரட் (CAROT) என்கிற வார்த்தை அதன் எடையைக் குறிக்கும். தங்கத்தில் கேரட்(Karatage) என்கிற வார்த்தை தங்கத்தின் தரத்தைக் குறிக்கும்.
உ.ம் 24 கேரட் என்றால் 100$ சுத்தத் தங்கம் அதே 24 கேரட் வைரம் என்பது அதன் எடையைக் குறிக்கும் இரண்டும் வேறு வேறு பொருள் (Meaning) கொண்டவை.

வைரத்தில் `ரத்தப்பந்து` என்றால் என்ன?
வைரம் வளரும் போது ஆயிரத்தில் ஏதாவது ஒரு கல்லில் அதனோடு சேர்ந்து சிவப்பு நிறத்தில் (மாதுளம் பழத்தின் முத்து நிறத்தில்) கார்னெட் (Garnet) என்கிற ஒருவகை ரத்தின கல்லும் சேர்ந்தே வளரும். வைரத்தை பட்டை தீட்டிய பிறகு இந்த சிவப்பு நிறம் நன்றாக தெரியும். இதை நம் ஊர் வியாபாரிகள் `ரத்தப்பந்து` என்பார்கள்.

டீபியர்ஸ் (De Beers) வைரங்கள் என்றால் என்ன?
1876ம் ஆண்டு ஜோஹன்னாஸ் டீபியர்ஸ் மற்றும் ஆர்ணால்டஸ் டீபியர்ஸ் சகோதரர்களுக்கு சொந்தமான பண்ணை நிலத்தில் ஏராளமான வைரங்கள் கிடைத்தன. ஆப்பிரிக்காவில் இந்த இடத்தை ஸெஸில் ரோட்ஸ் (Cecil Rhodes) என்பவர் வாங்கி வைரங்களை தோண்டி எடுத்து பெரும் செல்வந்தர் ஆனார்.அந்த நிறுவனத்துக்கு டீபியர்ஸ் மைனிங் கம்பெனி என்று பெயரிட்டார். இது 1880 ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி துவங்கப்பட்டது.
இன்று உலக வைர வியாபாரத்தில் 75சதவீதத்திற்கும் மேலாக இந்த நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால் De Beers சகோதரர்கள் இங்கிருந்து வைரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இந்த நிலத்தை சுமார் 500 டாலருக்கு விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.

ஹார்ட்ஸ் ஆரோஸ் வைரம் (Hearts and Arrows Diamonds) என்றால் என்ன?
சிறந்த பொறியியல் நுணுக்கத்துடன் ஒவ்வொரு பட்டையையும் குறிப்பிட்ட விகிதத்தில் சிறப்பாக தீட்டப்பட்ட வைரத்தை டைமண்ட் ஸ்கோப் என்ற கருவியின் மூலமாக பார்த்தால், அதனுள்ளே இருதயம் போலவும், அம்பு போலவும் துல்லியமாகத் தெரியும். இந்த வைரங்கள் அதிக ஜொலிப்புடன் விளங்கும் அதைத்தான் மேற் கண்டவாறு குறிப்பிடுக்கிறோம்.

ஆப்பிரிக்காவில் வைரங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?
தென் ஆப்பிரிக்காவில் 1866ல் எராஸ்மஸ் ஜேக்கப் என்ற சிறுவனும் அவன் தங்கையும் ஆரஞ்சு நதியின் கரையில் விளையாடும் போது ஒரு பளபளப்பான கல்லைப் பார்த்து, அதை வீட்டுக்கு விளையாட எடுத்துச் சென்றனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த போயர் என்ற ஆங்கிலேயர் அவர்களது தாயாரிடம் அந்த கல்லை விலைக்குத் தருவீர்களா? என்று கேட்க, அவளோ பணமெல்லாம் வேண்டாம் என்று இலவசமாகவே கொடுத்துவிட்டாள். பிற்பாடு அதை (Boer)பரிசோதித்ததில் அது மிக அருமையான வைரம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பட்டைத் தீட்டாத கல்லின் எடை 21.23 காரட் இருந்தது. பட்டை தீட்டியபின் 10.73 காரட்டில் அருமையான வைரமாய் ஜொலித்தது. இதற்கு “யுரேகா” என்று பெயரிட்டனர். (அதாவது புதிய கண்டுபிடிப்பு என்று பொருள்). இது தான் ஆப்பிரிக்காவின் வைரக் கண்டுபிடிப்புக்கு ஆரம்பம் இந்த வைரம் தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லி மிசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விலைஉயர்ந்த வைரங்கள் வாங்கும் போது தரத்தை எப்படி அறிந்து கொள்வது?
இதற்கென்றே சில சட்ட திட்டங்கள், தரக்கட்டுப்பாடு முதலியவற்றை வகுத்து. அதை தர உறுதி செய்து சர்டிபிக்கேட் கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட கல்லும் முழுவதும் சீல் செய்யப்பட்டிருக்கும். அதில் கல்லுடைய எடை, நிறம், பட்டையின் விகிதம் முதலிய எல்லாமே குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்காக பல அமைப்புகள் உலக முழுவதுமுள்ளன. சான்றிதழ் பெற்ற கல்லை நகையில் வைத்து பதித்த பிறகு, அது அதே கல்தானா, என்று எப்படி அறிவது?
இதற்கும் ஒரு முறை உள்ளது. அந்தக் கல்லின் பட்டையின் மேல் பகுதியும், கீழ்பகுதியும் சந்திக்கும் இடத்தை கர்டில் (GIRDLE)என்று குறிப்பிடுவோம். அந்த இடத்தில் லேசர் கதிரின் (LASER) மூலமாக ஒரு அடையாள நம்பரை எழுதி விடுவார்கள். அதை அழிக்கவே முடியாது. லென்ஸ் வைத்து பார்த்தால் தெரியும்.

இப்போது சில நாட்கள் முன் வைரம் பற்றி தெரிந்து கொண்ட சில தகவல்களை உங்களுக்கு சொல்கிறேன்:

1. வைரம் வாங்கும் முன் அதன் "Certificate" உள்ளதா என்று விசாரியுங்கள். இது தான் வைரத்தின் தரம், எடை(carat - இது வைரத்தின் எடையை சொல்வது. karat - தங்கத்தின் தரத்தை சொல்வது. ), கட், கலர் எல்லா தகவலையும் சரியாக கொடுக்கும்.

2. Certificate என்பது வைரத்தின் 4 அம்சங்களை கொண்டு அதை மதிப்பீடு செய்து கொடுப்பது. (Cut, Color, Clarity, Carat)

3. ஒரு நல்ல வைரம் என்பது நிறமே இல்லாத நல்ல கட்'ம், க்ளாரிட்டியும் கொண்டது.

4. இவற்றை பல அனுபவம் உள்ளவர்கள் கண்டரிந்து அந்த வைரத்தை மதிப்பிட்டு certificate கொடுப்பார்கள்.

5. நம்ம ஊரில் GIA (Gemological Institute of America)certificate உள்ள வைரங்கள் கிடைக்கின்றன. அதுவே உலகில் முதல் தரம் வாய்ந்த வைரம் என்றும் சொல்கிறார்கள்.

6. பொதுவாக வைரத்தில் ஒரு carat என்பது 200 மில்லி. இது வைரத்தின் அளவை குறிக்கும். இதை வைத்தே வைரத்தின் விலை.

7. certificate'ல் இருக்கும் தரம் பற்றிய தகவல் வைத்து எந்த கடையில் எந்த தரம் உள்ள வைரம் என்ன விலை என்று நீங்க ஒப்பிடூ பார்த்து வாங்கலாம்.
வைர நகைகளோ அல்லது வைர கற்களையோ (diamond stone) இயற்கையான  ஒளியில் வாங்குவது மிகவும் நல்லது. ஏனென்றால் நகை கடைகளில் உள்ள செயற்கை விளக்குகளின் வெளிச்சத்தில் உண்மையான வைர நகைகளோ அல்லது வைர கற்களை வாங்குவது சாத்தியம்  (original diamond jewelry or diamond stones) அல்ல.

பொதுவாக வைரங்களை நல்ல பிரபல்யமான நகை கடைகளில் வாங்குவது நல்லது. அப்படி வாங்கும்போது நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஒரு நல்ல வைர நகைகளை
வாங்கிய திருப்தி ஏற்ப்படும்.

மேலும் பிரபல்யமான வைர நகை கடைகளில் வாங்கும் போது வாங்கிய வைர நகைகளிலோஅல்லதுவைரகற்களிலோ சரியில்லை என்றால் திரும்ப கொடுப்பதற்கு அல்லது வேறு நகைகளை வாங்கி கொள்ள வசதி இருக்கும்

வைர நகைகளை அல்லதுவைரகற்களை Escrowservice என கூறப்படும் வைரத்தின்  தர நிர்ணயம் செய்யும் நிறுவனத்தின் மூலம் வாங்கும் போது நீங்கள் வாங்கும் வைர நகை அல்லது வைர கற்களுக்கு நல்லதொரு நகையை வாங்கிய திருப்தி ஏற்ப்படும்.

Escrow service எனப்படும் வைரத்தைதர நிர்ணயம் செய்யும் நிறுவனம் வைரம் வாங்கும்
பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செயல்படுகிறது.



நம்ம ஊரில் வைரம் போட தோஷம் உண்டு என்பார்கள். அதனால் இத்தனை Carat'கு மேல் உள்ள வைரங்கள் போட கூடாது என்றும் சொல்வார்கள். அது அவர் அவர் ஜாதகத்தை பொருத்ததுன்னு சொல்றாங்க. நான் ஒரு இஸ்லாமிய பகுத்தறிவாளன் எனவே   அதை நம்புவதும் இல்லை, அந்த அளவு பெரிய வைரங்கள் வாங்கியதும் இல்லை.

No comments:

Post a Comment