முதுமையில் சிலரைத் தாக்கக்கூடிய ஆர்த்திரைடிஸ் நோய்கூட உடலின் ஏதாவது ஒரு மூட்டுப் பகுதியை மட்டுமே பொதுவாகப் பாதிக்கிறது. ஆனால், சிக்குன் குனியா உடலில் உள்ள எல்லா மூட்டு இணைப்புகளிலும், அசைக்கவே அஞ்சும் அளவுக்கு வலி உண்டாக்குகிறது. உட்கார, எழுந்திருக்க, படுக்க, கை கால்களை அசைக்க விரும்பினால், ஒவ்வொரு அசைவையும் கடும் வலியுடன்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிரமப்பட்டு எழுந்து நடந்தால், ஏறத்தாழ குரங்கிலிருந்து உதயமான ஆதி மனிதனைப் போல சற்றே மடித்த காலும், கூனுமாக நடக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்த நோயின் பெயரை 'முடக்கிக் குறுக்கும் நோய்' என்று 'ப்ரிக்க ஸ்வாஹிலி' மொழியில் சூட்டியிருக்கிறார்கள்.
சிக்குன் குனியா காய்ச்சல் :
கூன் குனியாவினால்கடுமையான சுமார் 103 கிரி காய்ச்லில் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை கடுமையான ஜூரத்திற்கு உட்படுகின்றார்கள், கூடவே உடலில் உள்ள அத்தனை மூட்டுக்களிலும் தாங்க முடியாத வலி. இந்த மூட்டு வலி ஒரு வாரம் முதல் ஆறு மாதம் வரை
தொடரலாம். நோய் வாய்ப்பட்டவர் காலைக்கடனை கழிக்கச்செல்ல மற்றவர் துணை தேவைப்படலாம் [இதில் தப்பிப்பிழைப்பவர் உண்மையில் புண்ணியம் தெய்தவராவார்]. பலருக்கு மூட்டு வீக்கமும் ஏற்படுகின்றது. கொஞ்சம் குண்டானவர்கள் பாடுதான் திண்டாட்டம்.காய்ச்சல் சிகிச்சை என்பது காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளும், வலி நிவாரணிகளும் மட்டுமே! உடல் உழைப்பிலான தினக்கூலி வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டால், குடும்பமே மிகப் பெரும் துயரத்துக்கு உள்ளாகும்.
தொடரலாம். நோய் வாய்ப்பட்டவர் காலைக்கடனை கழிக்கச்செல்ல மற்றவர் துணை தேவைப்படலாம் [இதில் தப்பிப்பிழைப்பவர் உண்மையில் புண்ணியம் தெய்தவராவார்]. பலருக்கு மூட்டு வீக்கமும் ஏற்படுகின்றது. கொஞ்சம் குண்டானவர்கள் பாடுதான் திண்டாட்டம்.காய்ச்சல் சிகிச்சை என்பது காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளும், வலி நிவாரணிகளும் மட்டுமே! உடல் உழைப்பிலான தினக்கூலி வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டால், குடும்பமே மிகப் பெரும் துயரத்துக்கு உள்ளாகும்.
சிக்குன் குன்யா காய்ச்சல் குணமடைய ...
அதிமதுரம், நற்சீரகம், சடமாஞ்சி, சாரணை வேர், தோல் நீக்கிய வில்வ வேர், முடக்கத்தான், நிலவேம்பு, குருந்தொட்டி சமூலம், நல்ல மிளகு, துளசி, தூதுவளை, ஆடாதோடை இது எல்லாத்துலயும் வகைக்கு 5 கிராம் எடுத்து நல்லா இடிச்சி பொடியாக்கி அதோட தண்ணி சேத்து மூணுல ஒரு பங்கா வத்துற வரை கொதிக்க வையி...' 'இந்த கஷாயத்த வடிகட்டி மூணு வேளையும் சாப்பிட்டு வர... எல்லாம் சரியாப்போகும்'
சிக்குன் குனியாவுக்கு யார் பொறுப்பு?
அரசின் கையாலாகாத்தனத்தாலும், நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் அரசு ஏற்படுத்த தவறியதாலும் மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய தவறானஎண்ணமும் பய உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது. இது மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய வேண்டாத பீதியையும் கலக்கத்தையுமே ஏற்படுத்துவதுடன்அரசு மீதும் மக்களுக்குள்ள நல்லெண்ணெத்தையும் சீர்குலைப்பதாகவே அமையும். எனவே அரசு இனியேனும் விரைந்து நடவடிக்கை எடுத்து சிக்கூன் குனியா பரவலாகஉள்ளதை பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டு, அந்நோய் பரவால் தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, அந்நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியையும் மக்களிடம் ஏற்படுத்தமுனைய வேண்டும்."
கொசுக்களைக் கட்டுப்படுத்தமுடியாத அரசாங்கங்கள்தான் பொறுப்பு. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சிக்குன் குனியா பாணி நோய்கள் வருவதில்லையே, ஏன்? பொது சுகாதாரத்தை அங்குள்ளஅரசுகள் ஒழுங்காகப் பேணுவதுதான் காரணம். கட்டமைப்பு என்ற பெயரில் பிரமாண்டமான சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பதில் செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நிகராக பொது சுகாதாரத்துக்கு நமது அரசுகள் நிதி ஒதுக்குவதில்லை.
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .
No comments:
Post a Comment