சேரர், சோழர், பாண்டியர்களில் சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். *தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் ராஜராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.
கி.பி.930 – யில் தொடங்கி கி.பி.1305 வரை கிட்டத்தட்ட 375 ஆண்டுகள் தொடர்ந்து கொங்குநாட்டை சுயாட்சியாகவும் 275 ஆண்டுகள் தஞ்சை பேரரசாக ஆட்சி செய்தவர்களே இந்த சோழர்கள். நாம் அனைவரும் சோழர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம், பாடபுத்தகத்தில் படித்திருப்போம். அதுமட்டுமில்லாமல் சோழர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தஞ்சை சோழர்கள் மட்டுமே !!
ராஜராஜ சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவரது மகன் ராஜேந்திர சோழன் கி.பி. 1014 ஆம் ஆண்டு மன்னராக முடி சூடி கொண்டார். மன்னரான பின்னர் புதிய தலைநகரை ஏற்படுத்தினார். கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த நகரிலிருந்தபடி பல வெற்றிகளைக் குவித்தார். சோழ ராஜ்ஜியத்தையும் வளம் கொழிக்கும் சொர்க்கபூமியாக மாற்றினார். 30 ஆண்டுகள் மகத்தான ஆட்சி புரிந்தார்.
தோல்வியே காணாத ஒரே தமிழ் மன்னன், பல நாடுகளை வென்றெடுத்த ஒரே இந்திய மன்னன், சோழ ராஜ்ஜியத்தை சொர்க்க பூமியாக மாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன் மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான்.
*வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்துவிட்டான்.ராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு.*
இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது.
இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது.
ராஜேந்திரசோழன் தனது பெரும் கடல் படையுடன் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியா, வங்கம், மாலத்தீவு,ஜப்பான்,சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வென்று சோழ பேரரசின் கீழ் கொண்டு வந்தார். கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.
உலகில் முதன்முதலில் கப்பல் படை வைத்திருந்தது ராஜேந்திர சோழன்தான்.
மாவீரன் என்றால் நாம் அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்தான் சொல்கிறோம். அவர்கள் எல்லோருமே அவரவர் நாட்டுக்குள்ளேயே சண்டையிட்டவர்கள். *உண்மையில், ராஜேந்திர சோழன்தான் மிகப்பெரிய வீரன். ஆயிரம் கப்பல்கள், 60 ஆயிரம் யானைகள், 1.50 லட்சம் குதிரைகள், 9 லட்சம் சிப்பாய்களுடன் கடல் கடந்து சென்று தெற்கு ஆசியா முழுமையும் வென்றான்.
கிட்டத்தட்ட 11 லட்சம் வீரர்களை கடல் கடந்து கொண்டு சென்றிருப்பானேயானால் எத்தனை நாடுகளை வென்றிருக்க முடியும்? அத்தனை பேருக்கும் எப்படி சாப்பாடு போட்டிருப்பான்? இது மாதிரியான போர்களை உலகத்தில் இதுவரை யாருமே நிகழ்த்தியதே இல்லை. *இதற்கெல்லாமே போதிய கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.*
இன்றைய நிலையில் அமெரிக்கா, இந்தியா ராணுவத்தையும் சேர்த்தால்கூட 2 லட்சம் துருப்புகளைத் தாண்டாது.
ஏதோ ஒரு காரணத்தினால் ராஜேந்திர சோழன் தவறவிட்டதன் விளைவுதான் கஜினி முகமது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டான்.
மாவீரன் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த 2015, மார்ச் 15ம் தேதி தபால் தலை வெளியிட்டுள்ளது. அந்த தபால்தலையில், ‘உலகில் கப்பலை முதன்முதலாக உருவாக்கியவனும், பயன்படுத்தியவனும் ராஜேந்திரசோழன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தகவல்.
தாசியை மனைவியாக்கிய பெருமைக்குரியவர் சாதாரண தாசி குலத்தைச் சேர்ந்த பெண்ணை கோவில் வாசலில் சந்தித்து அவரைப் பிடித்துப் போய் மணந்து அவருக்குரிய மரியாதைகளை, வசதிகளைச் செய்து கொடுத்தவரும் கூட. அவரது பெயர் பாவை. இந்த பாவையின் சிலை கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் இப்போதும் கூட உள்ளது.
ஏரி வெட்டிய சோழன் அத்துடன் இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்கை வளம்பெற மேற்கு பகுதியில் சோழகங்கம் என்னும் மிகப்பெரிய ஏரியை வெட்டி இந்த பகுதியில் விவசாயம் செழிக்க செய்தார். இந்த ஏரிதான் பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. கங்கை வரை சென்று வென்று வந்தபோது அங்கிருந்து குடம் குடமாக கொண்டு வந்த தண்ணீரை இந்த ஏரியில் ஊற்றினார்களாம்.
ராஜேந்திர சோழன்.. முடிசூடிய 1000–மாவது ஆண்டு நிறைவு விழா!
ராஜேந்திர சோழன்.. முடிசூடிய 1000–மாவது ஆண்டு நிறைவு விழா!
2014ஆண்டு ஆயிரமாவது ஆண்டு நிறைவு இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாமன்னன் ராஜேந்திரன் அரியணை ஏறி 1000 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடல் கடந்தும் தமிழனின் ஆட்சியை நிறுவிய ராஜேந்திரனை கொண்டாடும் விதமாக கங்கை கொண்ட சோழபுரத்தில் இரண்டு நாட்கள் விழா நடைபெற்றது.விழாவையொட்டி ஆயிரமாவது ஆண்டு விழா மலர் வெளியீட்டு விழா நடந்தது. இதன் முதல் பிரதியை தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர் சுந்தரமூர்த்தி, குலோத்துங்கன் ஆகியோர் வெளியிட சென்னை கிறிஸ்தவ கல்லூரி தமிழ் துறை தலைவர் அசேந்திரன் பெற்றுக்கொண்டார்.தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தீபச்சுடர் ஓட்டம் நடந்தத, இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைக்கிறார். தீப ஜோதியை எழுத்தாளர் பாலகுமாரன் ஏற்றி வைத்தார். இந்த ஓட்டத்தில் தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றனர் .
நாம்தான் ராஜேந்திர சோழனைக் கொண்டாடுகிறோம். ஆனால் வட இந்தியாவில், இன்றைக்கும் கப்பலை கண்டுபிடித்தவன் சிவாஜிதான். அதே வட இந்தியன்தான் ராஜேந்திர சோழனுக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறான். எனில், நான் ஏன் அவுரங்கசீப்பை படிக்கணும்? நான் ஏன் அக்பரை படிக்கணும்? நான் ஏன் அசோகரைப் படிக்கணும்?
தமிழ் அரசர்கள் மட்டுமின்றி தென்னிந்திய மன்னர்கள் பற்றிய பாடங்கள் எதுவுமே வடஇந்திய பாடப்புத்தகங்களில் இல்லை.
இந்தியாவின் 60 சதவீத பகுதிகளை ஆட்சி செய்தவன் அசோகன். காஞ்சியில் உள்ள அசோகர் ஸ்தூபி கல்வெட்டில், ‘என்னால் தெற்கு பகுதியில் மட்டும் நுழைய முடியவில்லை. காரணம், சோழர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அப்படி இருக்கும்போது நாம் மட்டும் ஏன் இன்னும் அக்பரையும், அசோகனையும், ஷாஜகானையும் படிக்க வேண்டும்?*
அவர்களைப் பற்றி நம் பாடத்திட்டத்தில் ஏன் வைக்கிறார்கள்?
பெரிய கேள்வி எழவில்லையா? முதன்முதலாக *இப்போதுதான் ஒரு தமிழ் புத்தகத்தில் பென்னி குயிக் ஃபோட்டோ போட்டுள்ளனர்.வள்ளுவனையே நம்மால் அட்டையில் வைத்துக்கொள்ள முடியவில்லை.அப்புறம் எப்படி வரலாறை சொல்லிக்கொடுக்க முடியும்?
அவர்களைப் பற்றி நம் பாடத்திட்டத்தில் ஏன் வைக்கிறார்கள்?
பெரிய கேள்வி எழவில்லையா? முதன்முதலாக *இப்போதுதான் ஒரு தமிழ் புத்தகத்தில் பென்னி குயிக் ஃபோட்டோ போட்டுள்ளனர்.வள்ளுவனையே நம்மால் அட்டையில் வைத்துக்கொள்ள முடியவில்லை.அப்புறம் எப்படி வரலாறை சொல்லிக்கொடுக்க முடியும்?
உலகையே ஆண்ட ராஜேந்திர சோழனுக்கு இதுவரை அரசு சார்பில் விழாக்கள் நடத்தப்படவில்லை.* இப்படி எவ்வளவோ சொல்ல முடியாத ஆதங்கங்கள் இருக்கின்றன.
மேலும் அறிய ..
https://www.youtube.com/watch?v=6-IkRGI4BCg
அவர்களாவது, பண்டைய காலத்து வரலாறுகளை நினைவு கூறும் செப்பேடுகளை, தொல்லியல் துறை சேகரித்து பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. நாணயங்கள் கண்காட்சியைத் தொடர்ந்து, செப்பேடுகள் பற்றிய கண்காட்சியை நடத்துவது சிறப்பு. சோழ, பாண்டிய, பல்லவர் உள்ளிட்ட அரசர்களின் வரலாற்றை விளக்கும் செப்பேடுகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அரசர்களின் ஆட்சி முறை, கொடை, நிபந்தனைகள் பற்றி விளக்கும் வரலாற்று ஆவணமாக இந்த செப்பேடுகள் விளங்குகின்றன. பண்டைய வரலாறு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உண்மையான வரலாற்றை படிக்கட்டும், வரலாற்றை படைக்கட்டும்,
வரலாற்றில் வாழட்டும் !!
வரலாற்றில் வாழட்டும் !!
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment