Saturday, 18 February 2017

இணையத்தில் வைரல் ஆக பரவும் புதிய போராட்ட அழைப்பு !!

Image may contain: one or more people, crowd, meme and textதமிழ்நாடு இளைஞர்கள் கூட்டமைப்பின் அமைப்பின் அதிகார பூர்வ அறிவிப்பு…!
.
சமூக வலைத்தளங்களில் நேற்று இரவில் இருந்து ஒரு முக்கிய செய்தி மிக வாட்ஸ் அப்பிலும் facebook லும் மிக வேகமாக பரவி வருகிறது .
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான முன்னுதாரங்களை கருத்தில் கொண்டு கருப்பு நிற பேட்ச் அணிந்து இந்த துக்க நாளாக அனுசரிக்க தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது இந்த அறிவிப்பு.
அதன் விரிவாக்கம் தொடர்ந்து படிக்கவும்..!
கடந்த மாதம் public மீடியா மூலம் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தது இதில் சிதறுண்ட அத்தனை இளைஞர்களும் கிராமம் மற்றும் நகரம் வாரியாக அடையாளம் கண்டு ஓன்று சேர மிகசிறந்த வாய்ப்பாக உருவாக்க பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் நாட்டு நலன் விரும்பும் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் மிக சிறந்த அடையாளம் ஏற்படுத்தி கொள்ள தவறவில்லை . அடுத்த கட்ட போராட்டம் இப்போது தான் அறிவிக்க இது தான் சரியான சமயம் ஆகும் . ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சில விரும்பதகாத சம்பவங்களை தவிர்க்க நாம் ஒரு படி மேலே போய் சிந்திக்க நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிதறுண்ட இளைஞர் அமைப்பின் தலைவர்கள் மற்றும் சமூக ஆரவாளர்கள் ஓன்று கூடவும் அவர்கள் எழுதப்படாத மிகச்சிறந்த நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டனர். இவர்கள் தலைமையில் நேற்று இரவு மிக முக்கியமான கொள்கை முடிவுகளை பின் பற்ற மக்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.
அதன்படி
இனி நாம் ரோட்டுக்கு இறங்கி வந்து போராட போவதில்லை
யாரிடமும் தடி அடியும் வாங்க போவதில்லை.
தைரியமாக புத்திசாலி தனமாய் சில முடிவுகளை எடுக்க போகிறோம். இதில் இரண்டு விஷயங்களுக்காக அடுத்த கட்ட போராட்டம் தொடங்க போகிறது.
1 .தமிழகத்தில் நமக்கு சோறு போட்ட விவசாயிகளை அச்சுறுத்தும் விதமாக விவசாய நிலங்களில் இருந்து கெயில் எரிவாயு திட்டத்திற்கு தடைகள் ஏற்படுத்த ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்ப்பை காட்டுவது
2. 7 கோடி தமிழர்கள் எதிர்ப்பு காட்டியும் 107 சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி அவர்களை பணயமாக வைத்து தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த தமிழர்களின் மானத்தை கேலி கூத்தாக மாற்றியவர்களுக்கு பாடம் புகட்டவும் இளைஞர்கள் பெரிய அளவில் உணர்வு பூர்வமாக ஓன்று கூட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு நிற பேட்ஜ்
இதன்படி மேலே சொல்லப்பட்ட இந்த இரண்டு எதிப்பு விஷயங்களில் ஏதாவது ஓன்று பிடிக்கவில்லை என்றாலும் தாங்கள் அணியும் உடைகளில் கருப்பு நிற பேட்ஜ் அணிய வேண்டும். இந்த இரண்டு பிரச்சனைகள் ஓயும் வரை அந்த நாளை கருப்பு நிற துக்கம் நிறைந்ததாக அனுசரிக்க போகிறோம். இந்த கருப்பு நிற பேட்ஜ் அணிந்தவர்கள் தாங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த இரண்டு திட்டத்துக்கும் துணை போகாமலும் துணை போகிறவர்களுக்கு தங்களால் இயன்ற அளவுக்கு ஒத்துழையாமையை காட்டி அவர்களின் நோக்கத்தை செயல்படாதவாறு கிடப்பில் போட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்களின் அன்றாட பணிகளை சரிவர செய்து கொள்வதோடு போராட்ட நோக்கத்தையும் கருத்தில் கொண்டு உணர்வு ரீதியான ஆதரவு காட்ட வேண்டும்.
இதன் மூலம் நமக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு நமது சார்பாக ஓர் ஆதரவும் .ஊழல் செய்து வைத்திருக்கும் பணத்தின் மூலம் மக்களின் பிரதி நிதிகளை வாங்கி தேசத்தின் வளர்ச்சிக்கு சாவு மணி அடிக்கும் அவர்களின் ஆட்சியை துக்க தினமாக கடைபிடிக்க வேண்டும் .

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான அதே விதிமுறைகள் தான்.!
அரசியல்வாதிகள் பங்கேற்க அனுமதி இல்லை
நடிகர் நடிகைகள் பங்கேற்க அனுமதி இல்லை
மதம் சார்ந்தவர்களுக்கும் அனுமதி இல்லை.
மாணவர்கள் ,அரசு ஊழியர்கள் ,விவசாயிகள் தொழிளார்கள் ,சமூக ஆர்வலர்கள் .பெண்கள் என வயது வித்தியாசம் எதுவும் இல்லாமல் தமிழர்கள் என்ற உணர்வுடன் போராட அழைக்கிறோம்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள மிக கேவலமான நிகழ்வுகளை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வரை நமக்கு இந்த கருப்பு தினம் தொடரும்....!

No comments:

Post a Comment