Friday 20 April 2018

சென்னையில் நடந்த ராணுவ கண்காட்சியின் நோக்கம் !!

சென்னையில் நடந்த ராணுவ கண்காட்சியின் நோக்கம் என்ன?? இது எந்தவகையில் நாட்டுக்கும் , மாநிலத்தின் நலனுக்கும் நல்லது??? இதைக் கேலியும் கிண்டலும் சில கட்சி விமர்சனம் செய்கிறார்களே???
Image may contain: 5 peopleநமது காவல் துறையினர் கையில் வைத்திருக்கும் கட்டை துப்பாக்கி இருக்க அல்லவா - அது Martini-Henry வகை துப்பாக்கிகள். 1870களில் பிரிட்டிஷ் உலக அளவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நவீன வகை துப்பாக்கி ஆயுதப்படைக்கு தேவை என்று துப்பாக்கி தயாரிப்பாளர்கள் மத்தியில் கேட்டுக்கொள்ளப்பட்டு - சிறந்த துப்பாக்கி தயாரிப்பாளருக்கு விருதுகள் வழங்கத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்படி வந்த துப்பாக்கிகளில் Martini நிறுவனம் உருவாக்கிய துப்பாக்கியும் Henry நிறுவனம் உருவாக்கிய துப்பாக்கியில் சில அம்சங்களும் பிடித்து போகவே - இரண்டையும் ஒன்றாக இணைத்து Martini-Henry துப்பாக்கி உருவாக்கப்பட்டது. இது அதிக காலம் பிரிட்டிஷ் படையில் இருந்த துப்பாக்கிகளில் முக்கியமானது. இதனால் ஆங்கிலோ- ஜுலு யுத்தம் , அநேக காலனிநாடுகளில் நடந்த யுத்தங்கள் ரஷ்ய துருக்கி போர் என்று பல போர்களில் வெற்றிகரமாக சர்வீஸ் செய்தது. (பரிசு யாருக்கும் கொடுக்கவில்லை. இரண்டு நிறுவனங்கள் தேர்வானதால்.)
சரி இப்போது இது முழுக்க ஒரு collectible firearms. அதாவது வரலாற்றுப் பொருட்களை தேடி வாங்கிச் சேகரிக்கும் மக்களுக்கு இந்தப் பொருள் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்தியாவில் கொடுமையாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது இந்தத் துப்பாக்கி. பயன்படுத்தலாம் - அதற்காக இவ்வளவு தொழில்நுட்பம் பின்தங்கி இருப்பது நிச்சயம் நலல் விஷயம் இல்லை. நீங்கள் சாதாரண ஏதாவது ஆப்ரிக்கா நாட்டு காவல்துறை வைத்திருக்கும் துப்பாக்கி கூடக் கொஞ்சம் நவீன வகையைச் சார்ந்ததாக இருக்கும். இது அட்ட பழசு.
-------------------------------------------------------------
இப்படி தான் இந்திய ஆயுத உற்பத்தி இருக்கிறது. ஆனால் உலகத்தின் 4ஆவது மிகப் பெரிய ராணுவமும் , இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் உள்ள இந்த நாட்டிற்கு இது ஆரோக்கியம் கிடையாது. தீவிரவாதிகள் கூட மேம்படட்ட ஆயுதங்கள் கிடைக்க நாம் எப்போ தான் மாறுவோம்?
நீங்கள் நினைப்பது போல சாதாரணமாகப் பின்தங்கி இருக்கவில்லை இந்தியா - பெரிய அளவில் பின்தங்கி உள்ளது.
பாதுகாப்பான தொடர்புக்கு Antennas, Towers ? ராணுவம் துணை ராணுவத்திற்குத் தேவையான பிரமாண்டமான லைட்டிங் Military Airfield Lighting எத்தனை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன? பிரமாண்டமான பொருட்களை தூக்க இறக்க எந்த இடத்திற்கும் கொண்டு செல்ல Lifting Equipment எத்தனை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன? உள்நாட்டு பாதுகாப்பிற்கு தேவையான Surveillance and Sighting Systems எத்தனை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன? நமது ராணுவம் , காவலர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த தக்கப் பாதுகாப்பு மிக்க GPS, Navigation and Satellite Communication Equipment எத்தனை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன?
துப்பாக்கி மட்டும் அல்ல இப்படிப் பல ஆயிரம் ஆயிரம் Equipment தேவை நமது ராணுவத்திற்கும் , காவல் துறையினருக்கும் வேண்டும். மொத்தமாக நாட்டின் பாதுகாப்பை நவீனப்படுத்த வேண்டும் என்பது ஆக முக்கியமான விஷயம். இன்னொரு முக்கியமான விஷயம் இதை எல்லாத்தையும் இறக்குமதி செய்ய கூடாது. நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.
உங்களுக்கு ஒரு உண்மை : இந்தியா தனது ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு தேவையான உபகரணங்களில் 60% இறக்குமதி செய்கிறது. இதனால் ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் 31% வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்கின்றன. இது வருந்த தக்கவகையில் உண்மை.
{மோடி ஆட்சிக்கு வந்த பின் நமது Army Special Forces கையில் உள்ள துப்பாக்கிகளை கொஞ்சம் தேடி பாருங்க. அது அதற்கு முன் எப்படி இருந்து என்றும் தேடி பாருங்க..}
--------------------------------------------------------------------------
இப்போது இன்னொரு முக்கியமான விஷயம் அனைவருக்கும் விளக்க விரும்புகிறேன்:
நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்குவது என்றால் என்ன என்று நினைத்துத் திரிகிறீர்? பலர் அரசு வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை என்கிறார்கள். இங்கே ஒரு முக்கியமான தகவலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை அந்த ஆண்டவனே வந்து இங்கே ஆட்சி செய்தாலும் நிலை மாறாது. அது
உற்பத்தி துறைசார்ந்த வேலைவாய்ப்பை அதிகம் ஆக்க வேண்டும் என்று மோடி அரசு வேகம் காட்டுகிறது. அதாவது உங்களைச் சுற்றி பாருங்கள் பெரும்பாலான எலக்ரானிக் பொருட்களும் இறக்குமதி ஆனவையே , அதே போல engineering machinery ஆரம்பித்து சாதாரண குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் கூட நாம் இறக்குமதி செய்கிறோம்.
உலகின் இரண்டாவது பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு இப்படி உற்பத்தித் துறை சார்ந்த முன்னேற்றம் இல்லாமல் இருக்கக் காரணம்??? முழுக்க முழுக்க படித்த மாணவர்கள் மத்தியில் சுயதொழில் தொடங்கவோ , உற்பத்தித்துறை சார்ந்த ஆர்வமோ இல்லது இருப்பது தான். இதனால் இந்தியாவில் 21% labour force மட்டுமே உற்பத்தித் துறையில் உள்ளனர் - 28% வரை சேவை துறையில் இருக்கிறார்கள்... 43% வரை விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள்.
உற்பத்தித் துறையில் 35% தாண்டுவதும் , அதன் மூலம் சேவை துறையில் 40% தாண்டுவதும் இலக்காகக் கொண்டு மோடி அல்ல எந்த அரசும் வேலை செய்யவேண்டும். உள்நாடு உற்பத்தித் திறன் மேம்படாமல் இங்கே வேலைவாய்ப்புக்கு வாய்ப்பே இல்லை. Make in india திட்டம் மூலம் அனைத்து நிறுவனங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய மோடி அரசு இன்று மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒரு பத்து ஆண்டுகள் முன் மன்மோகன் செய்திருந்தால் இன்று நாடு நல்ல நிலையைத் தொட்டிருக்கும் என்பதைக் கூறியாகவேண்டும்.
இந்த உற்பத்தித் துறையில் முக்கியமானது ஆயுதங்கள் மற்றும் நாட்டு பாதுகாப்பிற்கு தேவையான உபகரணங்கள் தயாரிப்பது தான். குறிப்பிட்ட இந்தக் கால இடைவெளியில் சுமார் 570 நிறுவனங்கள் இந்த துறைசார்ந்து இந்தியாவில் தொழில் தொடக்கி இருப்பது உண்மையில் மோடி அவர்கள் தனது திட்டத்தில் முதல் படியில் வெற்றி பெற்றதாகவே கருதவேண்டும்.
--------------------------------------------------------------------------------
இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்ன?
இதன் மூலம் மாணவர்கள் , இளையவர்கள் மத்தியில் பாதுகாப்பு, ஆயுத உற்பத்தி சார்ந்த துறையில் ஆவலைத் தூண்டுவதும் , இதைச் சுற்றி சுயதொழில் தொடங்க மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் நோக்கம் என்றால் - இன்னொரு வகையில் மோடி தான் எடுத்து முன்வைத்த make in india மூலம் உலக நாடுகள் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் இருப்பதை வெளிப்படுத்தவும் இந்தக் கண்காட்சி உதவியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
Airbus (France),BAE India Systems (UK),Pilatus (Switzerland),Lockheed Martin (USA),Boeing India (USA),Raytheon (USA),Israel Aerospace Industries (Israel),Rafael Advanced Defense Systems Ltd. (Israel),Dassault Aviation SA (France) என்று பெரும் நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி வேலையைத் தொடங்க தேவையான தொழிற்சாலைகள் அமைக்கும் பணியை விரிவுபடுத்தியுள்ளன. இது இன்று தொடக்கி நாளைக்குப் பலன் தரும் எளிய வியாசம் இல்லை. குறைந்தது அடுத்த 10ஆண்டுகளில் இதன் தாக்கம் எளிதில் உணரலாம். சென்ற பத்தாண்டுகளுக்கு முன் செய்யாததை இன்றாவது திருத்தி கொண்டு நாடு செல்கிறது என்றவைகையில் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
தமிழக மக்களுக்கு ஏறக்குறைய 1லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வல்லது என்று கூறுகிறார்களே?????
உடனே வேலைவாய்ப்பு என்றது இண்டர்வ்யூ, ரிட்டன் எக்ஸாம் என்று தயவு கூர்ந்து சிந்திக்காதீர் - அது என்னவென்றால் ஒரு இந்தியாவைப் பொறுத்தவரை முறைசாரா தொழிலாளர்கள் 90% இருக்கிறார்கள். அதாவது சுயதொழில் செய்வார்கள் ஆனால் பெரிய அளவில் நாட்டில் கணக்கு வழக்கு எல்லாம் காட்டி கொள்ள மாட்டார்கள். சின்ன சின்ன டெய்லரிங் முதல் அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு வரை. இந்த விதம் இந்தியாவில் அமைய உள்ள ராணுவ தடவாலங்கள் உற்பத்தி மையங்களில் ஒன்று உத்திரபிரதேசம் இன்னொன்று தமிழ்நாடு என்னும் போது அது நேரடியாக இந்த unorganised labourக்கு வருமானத்தையும் அதில் வேலைவாய்ப்பையும் கூட்டும்.
எடுத்துக்காட்டுக்கு :
ஒரு உளவு தொழில் நுட்ப திறனுள்ள ஆண்டன ,Antenna Research செய்யும் நிறுவனம் ஒன்று இங்கே வருகிறது என்றால் அதற்குத் தேவையாக Power Conversion Systems உற்பத்தி அதிகம் ஆகும். அதாவது Battery, DC/AC inverters தயாரிக்கும் தொழில்கள் வளரும். எளிமையாக சொன்ன ஒரு துப்பாக்கி தயாரிக்கும் தொழில் சாலை வந்தால் அந்தத் துப்பாக்கி எடுத்துச் செல்ல தேவையான தோல் பைகள் உற்பத்தியாளர்களுக்கு இங்கே ஆடர்கள் கிடைக்கும்.
இது புரிகிறதா???? இது தான் முதலீட்டின் அருமை.. அது வரும் போது அந்த இடத்தில் பண புழக்கத்தை அதிகம் ஆக்கும். கெடுவாய்ப்பாக நம் மாநிலத்தில் கடந்த 1வருடமாகப் போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதால் முதலீட்டாளர்கள் விலகிச் செல்கிறார்கள். இது மிக மிகப் பெரிய கேடு விளைவிக்கும் விஷயம்.
வேலைவாய்ப்பு என்பது என்னவோ அரசின் கடமை மட்டும் என்று நினைத்தால் முட்டாள்தனம். நாமும் ஒரு படி முன்வந்து உற்பத்தி திறன் சார்ந்து நமது வீட்டு குழந்தைகளை மேம்படுத்த வேண்டும்.
அரசு - அரசின் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு இரண்டும் இல்லை என்றால் எதுவுமே இங்கே சாத்தியம் இல்லை.
--------------------------------------------------------------------
இறுதியாக :
உடனே கொள்ளை அடிக்க பிளான் போட்டானுக்க !!! அரசியல்வாதிகள் கேவலம் மோசம் என்று ஆரம்பித்துவிட வேண்டாம். எல்லாவற்றையும் குறை சொல்லிட்டே திரியும் கொட்டம் தான் வலைத்தளத்தில் அதிகம் ஆகிவிட்டது. அரசு இந்த முயற்சி எடுக்கும் என்றால் அந்த இடத்தில் எனக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் இருக்கு அதை எப்படி நான் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று தான் படித்த பட்டதாரிகள் நினைக்கவேண்டும்.
அதாவது இந்த அளவுக்கு உற்பத்தி செய்ய நிறுவனங்கள் வரும் போது அந்த நிறுவனங்களை அணுகி வேலைவாய்ப்பை அவர்கள் அலுவலகத்தில் தேடுவதை விட - அவர்களுக்கு எதுவும் outsourcing job எதுவும் இருக்கிறதா என்று அணுகலாம்.. இதன் மூலம் சுயதொழில் தொடங்க வேகம் பிடிக்கும். அதற்குப் பெரிய முதலீடு எல்லாம் வேண்டாம்.
ஒரு பேச்சுக்கு கூறுகிறேன் நமது royal enfied போன்ற உறுதியான ராணுவ வாகனம் செய்யும் ஒரு தொழில் சாலை இங்கே வரும் என்றால் - அந்த நிறுவனத்தை அணுகி அவர்கள் tool box மட்டும் செய்ய outsource job work நீங்கள் எடுக்கலாம். தோல் மூலம் அந்த நிறுவனத்தின் சீட் தயாரிக்க ஆடர் எடுக்கலாம் , leather embossing machine எல்லாம் நாம் வீட்டில் ஒரு அறையில் வைத்துக் கொள்ளும் அளவுக்குச் சின்னது தான். தாராளமாக தொழில் தொடங்க முடியும். இப்படி ஆயிரம் ஆயிரம் spares இருக்கும். அதை ஆடர் எடுத்தாலே பெரிய லாபம் பார்க்க முடியும். இந்த மாதிரி உற்பத்தி சிந்தனையை மாணவர்கள் உருவாக்கி கொள்ளவேண்டும்.
எனவே இப்போது உற்பத்தித் திறனை கூட்டுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டவேண்டும். அது அதி முக்கியமான விஷயம் என்பதைக் கட்டாயம் அனைவரும் உணரவேண்டும். அந்த வகையில் இந்த ராணுவ கண்காட்சி மற்றும் ராணுவ தடவாளங்கள் உற்பத்தி தமிழகத்திற்கு வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கவே வேண்டும்.
நல்ல திட்டங்களை பாராட்டி - அதற்க்கு மக்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கேட்டு கொள்வதும் திட்டம் வெற்றி அடைய துணை நிற்பதும் தானே நலல் அரசியலாக இருக்க முடியும்??? ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன? முழுக்க முழக்க எந்த விவகாரம் எடுத்தாலும் வெறுப்பு அரசியல் தானே நடக்கிறது???
மிக கேவலமாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட - அந்த பெராசிரியல் பிஜேபி கட்சியை தேர்ந்த ஒரு பெண்னை இழுத்துவிட்டு அவமானம் செய்ய துடிப்பதும் ; சிறுமியின் கொலையை வைத்து அந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதை விட அதை வைத்து இந்து மதத்தினையும் , பிஜேபி என்ற கட்சி தலைவர்களையும் எப்படி மக்களிடம் அவமானம் செய்யலாம் என்று தானே இங்கே அசிங்கமான அரசியல் விளையாடுகிறது???? இதே கீழ்தரமான விஷயத்தை எத்தனை எத்தனை இந்து சிறுமிகள் சாவும் பொது இவர்கள் குரல் எழுப்பினர்???? எனவே நோக்கம் முழக்க வெறுப்பு அரசியல் தான் இங்கே.
அதிகம் செய்தி தாள்கள் படிக்க வேண்டும்; செய்தி தினமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பார் என் தந்தை. ஆனால் இன்றைய தேதியில் செய்தி நிறுவனங்களை தயவு கூர்ந்து பார்ப்பதை நிறுத்துங்கள். எவனும் யோக்கியன் கிடையாது... ஆரோக்கியமான தேடலை நீங்களே மேற்கொள்ளுங்கள்.
எது எக்கேடுகெட்டு போகட்டும் உற்பத்தி திறனை சார்ந்து மாணவர்கள் சிந்திக்க வேண்டும் என்பது தான் கரு... மறக்கவேண்டாம்...

No comments:

Post a Comment