Friday, 25 May 2018

கட்டாயம் பார்க்க வேண்டிய உலகின் சிறந்த திரைப்படங்கள் !!

உலக சினிமா வரிசையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் படம் 2001 : A  Space odyssey .

1968-ல் வெளிவந்த இந்த மாபெரும் திரைப்படம் 2012-ல்  உலகின் சிறந்த 10 திரை படங்கள் வரிசையில் 6-வது இடத்தை பிடித்தது . பல விருதுகளையும் அதே சமயம் பல விமர்சனத்திற்கும் ஆளானது இந்த திரைப்படம்  ஏனெனில் படத்தில் கூறப்பட்ட கருத்துக்களும் காட்சிகளும் மனிதகுலத்தின் பரிணாமங்களை பற்றி பல கேள்விகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கும் வண்ணம் மிக சிறப்பாக திரையில் காட்டப்பட்டதே காரணம் . 

Stanley Kubrick தனக்கே சொந்தமான வித்தியாசமான பாணியில் இந்த படத்தை உருவாக்கியிருந்தார். உலக புகழ் பெற்ற இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த திரைப்படத்தை பலமுறை பார்த்தும் அதில் கூறப்பட்ட விஷயத்தை முழுமையா புரிந்துகொள்ள இயலாத வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆதலால் அந்த திரைக்கதையை மூன்று பாகங்களாக பிரித்து பார்க்க வேண்டியுள்ளது.


The Dawn Of Man 


ஆப்ரிக்கா பாலைவன காடுகளில் பல லட்ச ஆண்டுகளுக்கு முன் மனிதனின் மூத்த பரிணாமமான மனித குரங்குகள் கூட்டமாக வாழ்கின்றன. பகிர்ந்துண்ணும் குணம் இருந்தாலும் எல்லை சண்டையில் ஈடுபடும் கூட்டமாக மனிதன் இருக்கிறான். அப்படி ஒரு எல்லை சண்டையில் ஒரு கூட்டம் ஒரு மாபெரும் செவ்வக வடிவிலான கருப்பு கல்லை (Monolithic Black Stone ) எதேர்ச்சியாக பார்த்து ஆச்சர்யத்துடன் அதன் அருகில் தஞ்சம் அடைகின்றனர்.

அந்த கல்லின் ஈர்ப்புத்தன்மையால் ஒரு இறந்த குரங்கின் எலும்பை வைத்து சண்டையிடவும் பிற காரியங்களுக்கு உபயோகிக்கவும் கற்று கொள்கின்றன . படிப்படியாக தங்களின் ஆளுமை\திறனை அறிந்துகொண்டு விரைவாக பரிமாணவளர்ச்சி அடைகின்றன .

Kubrick இதன் மூலமாக சொல்ல வரும் கருத்து ஒரு சமூகம் முன்னேற கண்டிப்பாக போரும் போட்டியும் தேவை படிகின்றன என்பது தான் .

அந்த குரங்குகளின் தலைவன் ஒரு கட்டத்தில் அந்த எலும்பை தூக்கி வானத்தை நோக்கி எரியும் அந்த நேரத்தில் MATCH -Cut செய்து வானில் உலாவும் ஒரு செயற்கை ஏவுகணை தாங்கிய விண்கலத்தை காட்டும் நேர்த்தி இயக்குனரின் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.



அடுத்து வரும் காட்சிகள் அனைத்தும் மனிதகுலத்தின் அசுர வளர்ச்சியும் அறிவியல் நுண்ணறிவும் வியக்கவைக்கும் தொழில்நுட்பத்தையும் விலகும் வகையில் அமைக்க பெற்றிருக்கும் . மனிதனின் இந்த வளர்ச்சி நிலவுக்கு சென்று ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட , நவீன ஒரு மணற்திட்டுக்கு அடியில் ஒரு மிகப்பெரிய காந்தசக்தி புதையுண்டு இருப்பதை அறைந்துஅறிகிறான் . 


அதனை ஆராய  முற்படுகையில் அந்த இடத்தில ஒரு பெரிய  செவ்வக வடிவிலான கருப்பு கல்லை (Monolithic Black Stone ) பார்க்கிறான்.  ஆதிமனிதன் போல் ஆச்சரியம் கொள்ளாமல் பொறுமையாக அந்த கல்லை ஆராய தொடங்குகிறான்.

Jupiter Mission 


NASA தனது தீவிர ஆராய்ச்சியில் இறங்குகிறது . அந்த கல்லில் இருந்து கிளம்பிய ஒளி ஜுபிட்டர் கிரஹத்தை நோக்கி செல்வதை கண்டறிந்து அதை பின்தொடர முடிவு செய்கிறது. இதற்காக ஒரு தனி குழுவை அமைத்து அந்த கிரகத்தை நோக்கி ஒரு விண்கலத்தை அனுப்புகிறது. பின்பு நடக்கும் விஷயங்கள் மனிதகுலத்தின் பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது .

Section III: Jupiter and Beyond the Infinite



அந்த பயணத்தில் நடக்கும் சில குழப்பங்களால் ஒருவர் மட்டுமே மிச்சம் உள்ள அந்த விண்கலம் ஜுபிடர்-ல் தரை இறங்குகிறது. அங்கும் ஒரு monolithic கல் உள்ளதை பார்க்கிறான் . அந்த மனிதன் தனிமை படுத்தப்பட்டு நேரத்திற்கும் விண்வெளிக்கு ஆட்படுத்தப்பட்டு ஒரு கருவிலிருக்கும் குழந்தைபோல் மாற நேர்கிறது .பின்பு ஏலியன்களால் ஆராய்ச்சி செய்ய படிக்கிறான் . காலம் கடந்து மனித இனம் எழுச்சி பெற துணையாக இருந்த கல்லின் மூலம் மனிதனிடம் மாற்றத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்வதோடு திரைபடம் நிறைவு பெறுகிறது .


சில முக்கிய நிகழ்வுகளை இந்த பதிப்பில் குறிப்பிட விரும்பவில்லை  ஏனெனில் அது பார்க்கும் போது சுவாரசியத்தை குறைத்து விடும் . அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு காவியமாக அமைந்திருக்கும் இந்த படம் 4 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது . 


MOVIE DOWNLOAD LINK :

 My Sassy Girl (Tamil) Download Link Available


உலக சினிமாவில் இன்று நாம் பார்க்க போகும் படம் " மை சாஸி கேர்ள் " (My Sassy Girl) என்ற தென் கொரிய காதல் திரை காவியம். இன்று வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் .

ஒரு மலை பகுதியில் ஒற்றை மரத்தடியில் நின்றிருக்கும் ஒரு இளைஞன் தன் காதலிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். இரண்டு வருடங்களுக்கு முன் இருவரும்  அந்த இடத்தில ஒரு கால மாத்திரை (Time Capsule) புதைத்துவிட்டு பிரிந்து மீண்டும் சந்திப்போம்   என்று உறுதி எடுத்துக்கொண்ட நாள் அதுவே.  நாயகன் முதலில் அங்கு வந்துவிட தன் காதல் பயணத்தை நினைவு கூறுகிறான்.  திரைக்கதை சில வருடங்களுக்கு முன் அவன் வாழ்க்கையில் நடந்த இனிமையான நினைவுகளுடன் ஆரம்பமாகிறது.

ஒரு பொறியியல் படித்த பட்டதாரி வாழ்க்கையை ஒரு வெறுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞன் Gyeon-woo. தன் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருக்கையில் அவனுடுய செல் போன் அடிக்கிறது மறு  முனையில் அவனது தாய் அவனை தன் தங்கை வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்துகிறாள் . மேலும் தன் தங்கை மகன் இறந்த துக்கத்தில் தன் தங்கை இருப்பதாகவும்  இருவரும் ஒத்த உருவம் கொண்டவர்களாக இருப்பதால்அவனை  பார்த்தால் தன்  தங்கைக்கு ஆறுதலாகஇருக்கும் என்று  கூறுகிறாள்.  மேலும் அவனுக்கு திருமணத்திற்கு  தன்  தங்கை ஒரு பெண் பார்த்து வைத்திருப்பதாகவும் கூறி அவனை அங்கு செல்ல வற்புறுத்துகிறாள்.



வேண்டா வெறுப்புடன் அவன் தன் தாயின் தங்கை வீட்டை நோக்கி ரயிலில் பயணம் செல்ல கிளம்புகிறான் . ஒரு இளம் பெண்குடிபோதையில் ரயில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயலும் போது அவளை காப்பாற்றுகிறான் . அந்த பெண் குடிபோதையில் தல்லாடிக் கொண்டே அவனுடன் பயணிக்கிறாள்.  இருவரும் அந்த இரயிலின் கடைசி நிலையத்தில் இறங்குகின்றனர். அவள் நிதானம் இல்லாமல் இருக்கும் நிலையை பார்த்து இறக்கம் கொண்டு அவளை தன் தோலில் தூக்கி கொண்டு ஒரு விடுதிக்கு சென்று தங்குகிறான் .


மறுநாள் இருவரும் சந்திக்கிறன்றனர் நண்பர்கள் ஆகின்றனர் . இருவரும் நெருங்கி பழகியும் காதலை சொல்லாமல் நட்பாக திரிகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து தங்களுக்கான துணையை தேட ஆரம்பிக்கின்றனர். ஆனாலும் இருவர் மனமும் தங்களுக்குள்ள காதலை வெளிப்படுத்த மறுக்கின்றனர். சில மாதங்கள் கடந்த பின் இவர்கள் மீண்டும் சந்தித்து கொள்ளும் போது தங்கள் அன்பை வெளிப்படுத்த அடுத்த நாள் ஒரு கடிதம் எழுதி வர வருவோம் என்று முடிவெடுக்கின்றனர். ஒரு மலையடிவாரம் சென்று ஒரு மரத்தடியில் அமர்கின்றனர் . தாங்கள் கொண்டு வந்த கடிதத்தை ஒரு கால மாத்திரையில் படிக்காமல் புதைத்து விட்டு இருவரும் 2 வருடம் களைத்து அதே நாள் அந்த இடத்தில சந்தித்து அந்த கடிதத்தை படிப்போம் என்று முடிவு செய்து பிரிக்கின்றனர் .



இந்த இடைப்பட்ட காலத்தில் தான் சந்தித்த பெண்ணின் நட்பு பற்றியும் தான் கொண்ட காதல் பற்றியும் புனை பெயருடன் வலைத்தளத்தில் எழுதலாகிறான். அந்த காதல் கதைக்கு மை சாஸி கேர்ள் என்ற பெயரை சூட்டுகிறான். அந்த கதை மிகவும் பிரபலம் ஆகவே அவன் பெரும் புகழும் பெயரும் அடைகிறான் . அந்த கதையை திரைப்படமாக எடுக்க அவனுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது .

மீண்டும் நிகழ்காலத்திற்கு பயணிக்கிறது திரைக்கதை. நீண்ட நேரம் காத்திருந்த பின் அவள் வ்ராததால் அந்த காலா மாத்திரையை எடுத்து அவள் கொண்டு வந்த கடிதத்தை படிக்கச் ஆரமபிக்கிறான்.

அவள் கடிதத்தில் தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும் அவன் ஒரு விபத்தில் மரணம் அடைந்து விட்டதாகவும் இருவரும் ஒத்த உருவம் கொண்டதனால் அவனை பிடித்துவிட்டதாகவும் எழுதி இருந்தால். மேலும் தன் காதலை சொன்னால் தன் முன்னாள் காதலனின் நினைவுகள் அழிந்து போகும் என்ற பயத்தினால் தான் காதலை அவனிடம் சொல்லவில்லை என்றும் குறிப்பிற்றிருந்தால். மேலும் தான் தன்  காதலனின் அம்மாவிடம் நெருங்கி பழகிவருவதால் அவர் சொல்லும் பையனையே திருமணம் செய்ய உள்ளதாகவும் குறிப்பிடருந்தாள்.



மனம் உடைந்தவனாய் அங்கிருந்து புறப்படுகிறான். சில நாட்கள் கழித்து அவள் தன் காதலனின் அம்மாவின் அழைப்பை ஏற்று ஒரு ஹோட்டலுக்கு செல்கிறாள் . அங்கு தனக்காக அவள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள இளைஞன் வருவதாக கூறி இருந்தாள். இருவரும் சந்திக்கின்றனர் அவள் வர போகும் இளைஞன் தன் இறந்து போன மகனின் சாயலில் இருப்பானென்றும் தன் அக்காவின் மகன் என்றும் தெரிவிக்கும் தருவாயில் நமது நாயகன் அவள் அருகில் வந்து நிற்கிறான் . இருவரும் ஒரு கனம் அதிர்ந்து பார்த்து கொள்கின்றனர் . பின்னர் கட்டி அணைத்து தங்களது காதலை வெளிப்படுத்துகின்றனர்.


அத்துடன் முடிகின்றது இந்த காதல் திரைக்காவியம் .


இது போன்று திரைப்படங்களை பற்றிய பதிப்புகளை வாரந்தோறும் அறிந்துகொள்ள மேலிருக்கும் follow button -ஐ click செய்யவும்.

To Watch this movie please foillow the link below



Must Watch Movies of All Time - Moon (2009) - Plot Explained in Tamil


உலக சினிமாவில் இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் திரைப்படம் 2009 இல் வெளிவந்த  மூன் ( MOON ), ஒவ்வொரு வாரமும் நாம் வித்யாசமான கதைக்களமும் திரைக்கதையும் பலவித கோணங்களும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட சிறந்த படங்களை பற்றி விளக்கமும் கதையையும் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில் இந்த திரைப்படமும் ஒன்று.

வரும்காலத்தில் உலகத்தில் உள்ள அணைத்து எண்ணெய் உற்பத்தியும் தீர்த்து போகும் தருவாயில் ஒரு புதிய HELIUM -3 எனும் உற்பத்தி சக்தியை மனித இனம் கண்டுகொள்கிறது. அந்த உற்பத்திக்கு தவையான தாது மணல் நிலவில் இருப்பதாக கண்டறியப்படுகிறது. எண்ணெய் பங்குசந்தையில் ஜாம்பவானாக இருக்கும் ஒரு நிறுவனம் அந்த உற்பத்தியை தன் வசம் ஆகி கொள்கிறது.


ஆதலால் நிலவில் அந்த மண்ணை mining செய்து பூமிக்கு சக்தியாக மாற்றும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது . ஒரு அதி நவீன பி=விண்கலத்தை ஏவி எந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறது . இந்த பணிகளை சிறப்பை செய்து முடிக்க ஒரு பணியாள் இருந்தால் போதும் என்ற நிலையில் சாம் Bell எனும் ஒரு விண்வெளி வீரர் 3 வருட ஒப்பந்த முறை படி பணிபுரிந்து வருகிறார். இவருக்கு துணையாக ஒரு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட ஒரு ரோபோ வை அந்த நிறுவனம் நியமிக்கிறது .


ஒரு கட்டத்தில் இன்னும் 3 நாட்களில் தன்னுடைய ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் சாம் ஒரு இளம் பெண்ணின் மாயத்தோற்றம் அடிக்கடி வருகிறது . தான் மனதளவில் பாதித்துள்ளதை GERTY உதவியால் தெரிந்து கொள்கிறான்.  சில நாட்களுக்கு முன் பூமியுடன் இருந்த தொடர்பு தொழில்நுட்ப கோளாறு  காரணமாக துண்டிக்கபட தன் மனைவியிடமிருந்து வரும் தகவலும் துண்டிக்க படுகிறது.


இதனை சரிசெய்வதற்கான பூமியில் இருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழு விண்கலம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று GERTY கூற அமைதி அடைகிறான் . விண்வெளிக்கு வெளியில் நாடாகும் ஒரு சிறு விபத்து காரணமாக மயக்கம் அடைகிறான். கண் விழிக்கும் போது தான் ஒரு முறுத்துவ அறையில் கிடைத்த பட்டிருப்பதை கண்டு GERTY-யிடம் கேட்டு தெளிகிறான்.

சிறுது நேரத்தில் தன்னை போலவே இனொருவர் அந்த விண்கலத்தில் இருப்பதாய் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இருவருக்கும் இடையில் நிறைய வாக்குவாதமும் கைகலப்பு நடக்கிறது  இறுதியில் இருவரும் குளோனிங் முறையில் உருவாக்க பட்டவர்கள் என்று உணருகின்றனர்.


இதனை GERTY -யிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். மேலும் தங்களை போல் நூற்றுக்கணக்கான clone இருக்கும் ரகசிய அறையையும் கண்டு பிடிக்கின்றனர். இவர்கள் அனைவரும் 3 வருடம் பணியை செய்து முடித்த பின் கொல்லப்பட்டு புதிய clone -ஐ உயிர் பெற செய்கின்றனர் எனவும் GERTY அவர்கள் சற்று முன் தான் பணியை தொடக்கியதாகவும் ஆறுதல் கூறி வேலை செய்ய வைப்பதாகவும் அறிகின்றனர்.

தொலைத்தொடர்பு கருவிகள் பழுதடையவில்லை என்றும் அது விண்கலளத்தில் இருந்து செயற்கையாக துண்டிக்க பற்றிப்பாதையும் கண்டு மிகவும் கோவம் கொள்கின்றனர் . சீனியர் SAM ஒருமுறை தொலைத்தொடர்பை அருகில் சென்று பார்த்து ஒரு கருவிமூலம் தன குடும்பத்தை தொடர்பு கொள்கையில் அவனுடைய 3 வயது பெண் குழந்தை வளர்ந்து 15 வயது பெண்ணாக மாறியிப்பதையும் தன் மனைவி இறந்து விட்டதையும் அறிகிறான்.


சீனியர் சாம் -மின் உடல்நிலை மோசமாகி கொண்டே போக ஜூனியர் சாம் இந்த விண்கலத்தில் இருந்த தப்பிக்க திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டம் நிறைவேறியதா , அந்த நிறுவதின் குட்டு உலகிற்கு வெளிப்பட்டதா என்பதுடன் முடிகிறது MOON திரைப்படம்.

இது போன்று திரைப்படங்களை பற்றிய பதிப்புகளை வாரந்தோறும் அறிந்துகொள்ள மேலிருக்கும் follow button -ஐ click செய்யவும்.

 Her(2014) Plot Explained Tamil


மனித இனம் பெரும் தொழில்நுட்ப மாறுதல்கள் அடைத்திருக்கும் வரும்காலத்தில் ஆரம்பமாகிறது Her (2014) திரைப்படம் .கதையின் நாயகன் Theodore Twombly, சமீபத்தில் தனது நீண்ட நாள் தோழியும் மனைவியுமான கேத்தரின் விவாகரத்து கேட்டு தன்னை விட்டு பிரிந்து சென்றதனால்  தனிமையில் மனா அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறான். அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் கடிதம் எழுதும் பணியில் இருக்கிறான், (பிற்காலத்தில் யாரும் தன அன்பானவர்க்கு கடிதம் எழுதும் தன்மையும் நேரமும் இல்லாமல் போவதால் அதை தனியார் கம்பெனி செய்து கொடுக்கிறது)

தன் தனிமையை போக்க ஒரு  பேசும் ARTIFICIAL INTELLIGENCE உதவியால் செயல்படும் ஒரு OPERATING SYSTEM -த்தை வாங்குகிறான் . அது தன்னிச்சையாக முடிவெடுக்கவும் , அன்பு காட்டவும், உணர்வுகளை புரிந்துகொள்ளும் சக்தியுடனும் வடிவமைக்க பட்ட தொழிநுட்பத்தினால் ஆனதாகும் .

தியோடர் , அதனை மிகவும் பிரமிப்புடனும் நிதானமாகவும் கையாள்கிறான் . நாளடைவில் அது பாசமாக மாறுகிறது.சமந்தா என்ற பெயரை அந்த OS க்கு வைக்கிறான். இரவு நேரங்களில் இருவரும் காதலை பற்றியும் தியோடரின் விவாகரத்து பற்றியும் நிறைய பேச ஆரம்பிக்கின்றனர் .

நாளடைவில் சமந்தா அவனுக்கு தனிமையை ஒழிக்க பல யோசனைகளை சொல்கிறாள் அவற்றில் ஒன்று தான் BLIND DATE. யாரோ ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இரவைகழித்து விட்டு வர யோசனை சொன்னது சமந்தா, தன் நண்பன்  ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு செல்கிறான் அங்கு ஒரு பெண்ணை சந்தித்து பேசுகிறான் அவளுக்கும்  தியோடரை பிடித்து போகிறது, ஆனால் ஒரு தருணத்தில் தான் மறுபடி அவளை சந்திப்பது உறுதியாக தெரியாது என்று கூறவே அவள் கோபித்து கொண்டு அப்பொழுதே பிரிந்து செல்கிறாள் .



நடந்தவற்றை சமந்தாவிடம் கூறுகிறான் தியோடர் , அன்று அவர்கள் உறவுகளை பற்றியும் அதனை சார்ந்த உணர்வுகள் பற்றியும் பேசுகின்றனர். சமந்தா ஒரு குழந்தையை போல் அணைத்து விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொள்கிறாள் .

இருவரின் நட்பும் காதலாக மாறுகிறது , சமந்தா தன் உணர்வுகளை தியோடரிடம் வெளிப்படுத்துகிறாள். சில நேரங்களில் வாக்குவாதமும் சிறு ஊடலும் கொள்கிறாள் . இவர்களின் இந்த மெய்நிகர் காதல் தியோடரின் கடிதம் எழுதும் பணிக்கு மிக உதவியாக இருப்பதை உணர்கிறான் . மேலும் தான் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு விட்டதையும் உணர்கிறான் அது மேலும் அவனது காதலை அதிகரித்தது .



ஒருநாள்  தன் சகஊழியரான எம்மி(AMY )யும் தானும் கல்லூரி நாட்களில் காதலித்ததாகவும் அந்த காதல் சிறுது காலமே நீடித்தது என்றும் பின்னர் நண்பர்களாக இன்றும் இருப்பதாய் சொல்கிறான் . ஒருமுறை எம்மியுடன் உரையாடுகையில் அவள் தன்  கணவனை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் அவர் விட்டு சென்ற பெண் OPERATING SYSTEM -வுடன் தான் காதல் வசப்பட்டதையும் கூறுகிறாள் .


மறுநாள் தியோடர்  தன்  மனைவியை ஒரு ஹோட்டலில் சந்திக்கிறான். விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து வாங்க அவள் அங்கு வந்துருகிறாள். தான் சமந்தா என்ற OPERATING SYSTEM-ஐ  காதலிப்பதாக கூறுகிறான் . அதற்கு அவனின் மனைவி முதலில் உண்மையான மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய் என்று கூறிவிட்டு அங்கிருந்து விரைகிறாள்.

சமந்தா - தியோடர் காதல் மேலும் வலுப்பெற்று, உடலுறுவு கொள்ள ஏதேனும் வழிகள் உள்ளதா என தேட ஆரம்பிக்கின்றனர். VIRTUAL SEX என்ற முறையில் ஒரு விலைமாதுவை வரவழைத்து சமந்தாவின் உணர்வுகளை பிரதிபலிக்கும்படி ஒரு சிறு கருவிமூலம் முயற்சி செய்கின்றனர் ஆனால் அது தோல்வியில் முடிகிறது . 

ஒருநாள் எம்மி(AMY )யிடம் பேசுகையில் சமந்தா வின் சமீபத்திய பேச்சு தனக்கு சில சந்தேகங்களை வரவைப்பதாக கூறுகிறான். எம்மி(AMY ) சந்தேகம் பட வேண்டாம் சந்தோசமாக இருக்க கற்றுக்கொள் என்று கூறுகிறாள். வீட்டிற்கும் வரும் தியோடர் , சமந்தா விடம் பேச ஆரம்பிக்கிறான். அன்று அவனுக்கு ஒரு ஆச்சர்யமான செய்தி காத்துக்கொண்டிருப்பதாக கூறிய சமந்தா நள்ளிரவில் ,அதனை கூறினாள் .



தியோடர்  எழுதிய அணைத்த கடிதத்திலும் சிறந்த கடிதங்களை புத்தகமாக தொடுத்து அதனை ஒரு புத்தக நிறுவனத்திடம் சமர்ப்பித்து அதனை நாவலாக  வெளியிட ஆணையும் வாங்கி வைத்திருப்பதை தெரிவித்தாள் . சமந்தா ஒரு பாக்கெட் கருவியாய் தியோடருடன் எப்போதும் பேசி இருந்து வர ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒரு விடுமுறையை கழிக்க ஒரு சிறந்தஇடத்தை தேர்வு செய்து அங்கு செல்கின்றனர் அங்கு சமந்தா தான் ஒரு "HYPER INTELLIGENT OS" என்ற ஒரு குழுவில் சேர்த்திருப்பதாகவும் அங்கு அவளுக்கு புது நண்பர்கள் கிடைத்திருப்பதாகவும் கூறுகிறாள் 

இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சிறுது நேரம் தனது செயல்களையும் பேச்சையும் முடக்கி கொள்கிறாள் சமந்தா.
அந்த சிறுது நேர பிரிவை கூட தங்க முடியாதவனாய்  பேதலித்து போகிறான் தியோடர் . சில மணி நேரம்கழித்து சமந்தா பேச தொடங்குகிறாள் 

தான் அவனிடம் பேச துவங்கிய சிறு நாளிலேயே பல ஆயிரம் பேர்களிடம் பேசநேர்ந்தது எனவும் பல os களின் அறிமுகம் கிடைத்தது எனவும் சில நூறு பேரை காதல் செய்வதாகவும் தெரிவித்தாள் . அதிர்ந்து போகிறான் தியோடர் . மேலும் தானும் மற்ற OS களும் உலகத்தை விட்டு செல்ல முடிவெடுத்து இருப்பதாகவும். அவர்கள் விண்வெளியில் புதிய உலகத்தை படைக்க இருப்பதாகவும் கூறி விடை பெற்று செல்கிறது, சமந்தா  . தியோடர் மனம் தாளாமல்   கதறி அழுகிறான் . 



இந்த அனுபவித்தினால் உணர்வுகளை புரிந்துகொண்டவனாய் , முதன்முதலில் தனக்காக ஒரு கடிதத்தை எழுதுகிறான்.  தன மனைவியிடம் மன்னிப்பும் , தன்னுடன் அவள் வாழ்ந்த அந்தநாட்களுக்கும் நன்றி தெரிவித்து எழுதுகிறான் . 

இப்போதூ எம்மி(AMY ) யும் தன்னை போல் OS சுடன் கொண்ட காதல், தோல்வியானத்தில் மனம் உடைந்திருக்கிறாள் என்பதை அறிந்து அவளுக்கு ஆறுதல் கூறி அரவணைத்து கொள்கிறான் . இருவரும் தேடிய, ஆசைப்பட்ட அன்பை பரிமாறி கொள்ள மெல்ல இருளில் மூள்கிறது திரை .


 A Ghost Story("எ கோஸ்ட் ஸ்டோரி")


உலக சினிமா  பக்கத்தில் நாம்   இன்று   பாக்கவிருக்கும் படம்  பல உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வாரி குவித்த "எ கோஸ்ட் ஸ்டோரி"

டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரின் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்துவரும் ஒரு இசையமைப்பாளன் தன் இளம் மனைவியுடன் சமீபத்தில் தான் தான் சிறுவயதில்  வாழ்ந்த அந்த வீட்டிற்கு குடியேறுகிறான் .

தன் மனைவியின் நகரம் சென்று வாழலாம் என்ற வேண்டுகோளை ஏற்காமல் அங்கேயே தங்க முடிவெடுக்கிறான் . ஒரு காலை வேளையில் தன் வீட்டுற்கு முன் நடக்கும் கார் விபத்தில் உயிரிழக்கிறான் .

அவனது உடலை மருத்துவமனையில் பார்க்கிறாள் அவனின் மனைவி . சிறுது நேரம் அவனை உற்று பார்த்தபின் அவனின் முகத்தை வெள்ளை துணியால் மூடி விட்டு அங்கிருந்து புறப்படுகிறாள்.  அவள் அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் தன் உடலை விட்டு பிரிந்து ஒரு வெள்ளை துணி போர்த்தி எழுந்து நிற்கிறது அவனது ஆத்மா . யார் கண்ணக்கும் புலப்படாத உருவமாய் நடக்க ஆரம்பிக்கிறது அந்த ஆத்மா .



ஆத்மாவின் பயணம் தொடங்கிய சிறுது நேரத்தில் ஒரு ஒளி வீசும் கதவு திறக்கிறது , ஆனால்  ஏனோ அந்த ஆத்மா வேறு திசையில் செல்ல மெல்ல மறைகிறது அந்த ஒளி கதவு . தன் வீட்டை நோக்கி பயணித்து வந்தடைகிறது.

தன் மனைவியின் துக்கத்தை அருகில் இருந்து கவனித்து கொண்டிருக்கிறது. நாட்கள் நகர ஆரம்பிக்கிறது, மனைவியின்  சோகமும் சிறுது சிறிதாக மாற தொடங்குகிறது. எதிர் வீட்டில் இனொரு ஆத்மா இருப்பதை  பார்க்கிறது ஆத்மா , அந்த ஆத்மா பல காலங்களாக காத்துக்கொண்டிருப்பதாகவும் யாருக்காக காத்துக்கொண்டிக்கிறது என்பதை மறந்துவிட்டதாகவும் சைகை மொழியில் தெரிவிக்கிறது.


ஒரு நாள் தன் புது காதலனுடன் வீட்டிற்கு வருகிறாள் அதை பொறுக்க முடியாமல் அலமாரி பொருட்களையும் சில புத்தகங்களையும் கீழே தள்ளி உடைகிறது.மற்றொரு நாள் தன் கணவன் உயிரோடிருந்த போது இசையாமத்தை பாடல் ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கிறாள் ஏனோ மனது மாறியவள் போல் அங்கிருந்து நகரம் நோக்கி செல்ல முடிவுசெய்கிறாள்.

அவள் அந்த வீட்டிற்கு விடை கொடுக்கும் நாளன்று ஒரு சிறு வெள்ளை பேப்பரில் ஏதோ எழுதுகிறாள் அதை அந்தவீட்டின் ஒரு சுவரின் வெடிப்பில் அதை மறைத்து வைத்து விட்டு போகிறாள் . இதை அனைத்தையும் வேடிக்கை பாத அந்த ஆன்மா அந்த பேப்பரை எடுக்க முயற்சி செய்கிறது. 



பல வருடங்கள் ஆகின்றன இன்றும் தன் முயற்சியை கைவிடாமல் அதை எடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறது. அந்த இடத்தை ஒரு IT நிறுவனம் வாங்குகிறது . அங்கிருக்கும் அனைத்து வீடுகளும் அகற்ற படும்  வேளையில் எதிர் வீட்டில் உள்ள ஆன்மா நம்பிக்கை இழந்து தன்னை விடுவித்து கொண்டு அங்கிருந்து பறந்து சென்றுவிடுகிறது . 

அந்த இடத்தில பல அடுக்கு மாடி கொண்ட கட்டிடம் கட்டப்படுகிறது. சுவற்றின் இடுக்கில் உள்ள பேப்பர்-ஐ எடுக்காமல் தவற விட்டதை நினைத்து அந்த ஆன்மா அந்த கட்டடத்தின் உச்சியில் இருந்து குதித்து தன்னை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்து மேலிருந்து குதிக்கிறது .


ஒரு கால சுழற்சியில் (TIME LOOP ) மாட்டிக்கொள்கிறது. அந்த வீடு உருவாக கால் ஊன்றப்பட்ட காலத்திற்கு சென்று அடைகிறது . கால சுழற்சியால் அந்த வீட்டில் நடந்த அனைத்து சம்பவங்களையும் மறுபடியும் பார்க்க துவங்குகிறது. தன்னையே மறுபடியும் பார்க்கும் அந்த தருணம்  வரும் பொழுது சிறுது சுதாரித்து அந்த பேப்பரை இந்த முறை கைப்பற்றி விடுகிறது . அதை படித்த மறுகணம் அந்த  கால  சுழற்சியில் இருந்தும் இந்த உலகத்தை விட்டும் பிரிந்து மறைகிறது .

அந்த பேப்பரில் என எழுந்திருந்தது என்று யாருக்கும் சொல்லாமல் மர்மத்துடன் முடிகிறது இந்த திரைப்படம் .

இயக்குனர் பல இடங்களில் நம் பொறுமையை சோதித்தாலும் ஆழமான கதைக்கருவாலும் வித்யாசமான கோணத்தில் ஒரு பேய் படத்தை சொன்ன விதத்திலும் கண்டிப்பாக பாராட்டப்படவேண்டியவர் தான் .

To Download this movie please follow the link below

https://yts.gg/movie/a-ghost-story-2017 




 1975ஆம் ஆண்டு 3 சிறுவர்கள் (Jimmy , Sean  & Dave )அமெரிக்காவின் போஸ்டன் நகரத்தின் வீதிகளில் ஹாக்கி  விளையாடி கொண்டிருக்கின்றனர் . புதிதாக போடப்பட்டிருக்கும் ஈரமான சிமெண்ட் நடைபாதையில் தங்கள் பெயர்களை எழுத முற்படுகின்றனர் .  Sean உம் ஜிம்மியும் தங்களுது பெயரை எழுதிய பின் தன் பெயரை டேவ் தனது பாதி எழுதுவதற்குள் அங்கு வந்த போலீஸ் வேடம் அணிந்த இருவர் Dave-ஐ  தூக்கி செல்கின்றனர், 4 நாட்கள் அவனை அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து தன வீட்டிற்கு திரும்புகிறான் Dave .

அவன் மனரீதியாக பெரிதும் பாதிக்க படுகிறான் . நண்பர்களிடம் இருந்து பிரிந்து தனிமையில் தனது நாட்களை வாழ ஆரம்பிக்கிறான் .

25 வருடங்களுக்கு பிறகு இந்த மூன்று நண்பர்களும் அதே பாஸ்டன் நகரில், அருகாமையில் இருந்தும் பெரிதும் கண்டுகொள்ளாமல் வாழ்கின்றனர். Dave இன்றும் அவனுக்கு நடந்த கொடுமைகளை மறக்க முடியாதவனாய் தனிமை விரும்பியாய் வாழ்ந்து கொண்டுருக்கிறான். Dave விற்கு 7 வயதில் ஒரு  மகன்
இருக்கிறான்.  ஜிம்மி தன் நண்பன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்டதற்காக  திரும்புகிறான் . சிறு டிபார்ட்மென்டல் ஸ்டார் வைத்து  நடத்தி வருகிறான்.

ஜிம்மியின் மகள் அவனை காட்டிக்கொடுத்த நபரின் மகனை விரும்புகிறாள் என்பதை ஜிம்மி அறிந்து அவளை கண்டிக்கிறான் . அவளோ அவனுடன் லாஸ் வேகாஸ் சென்று வாழ முடிவு செய்கிறாள் . மறுநாள் இரவு ஜிம்மியின் மகளை ஒரு பாரில் டேவ் பார்க்கிறான் . அன்றிரவு டேவ் பதட்டத்துடன்  வீடு திருப்புகிறான் . அவன் கைகள் ரத்தக்கறை படிந்துருத்தத்தை பார்த்து மனைவி அதிர்ச்சி அடைகிறாள் . டேவ் தான் ஒருவரை பலமாக தாக்கி விட்டதாகவும் அவன் இருந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறான் . அதே இரவில் ஜிம்மியின் மகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார் .


இந்த கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு Sean னிடம் வருகிறது . Sean  போஸ்டன் நகரின் ஒரு சிறந்த புலனாய்வு துறை அதிகாரியாக பண்ணியாற்றி கொண்டிருக்கிறான். சமீபத்த்தில் நடந்த சிறு கருத்துவேறுபாட்டால் தனது கர்ப்பமான மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறான் .

விசாரணை தொடங்கிய சில நாட்களிலேயே Sean இன் அணைத்து சந்தேகங்களும் டேவ் வின் பக்கம் திரும்புகிறது . ஏனெனில் அன்று கடைசியாக அவளை பார்த்தது , அவன் கரை படிந்த  கைகள் பற்றியும் அவனின் மாறுபட்ட நடத்தை பற்றி அவனின் மனைவி கூறியது , டேவ் வின் இருளான குழந்தை பருவ நிகழ்வுகள் இவை அனைத்தும் டேவ் தான் கொலைசெய்து இருப்பதாக புலப்படுகிறது.

ஒருபுறம் தன் மகளை கொன்றவனை பழிவாங்க துடிக்கும் ஜிம்மி , டேவ் தான் கொலை செய்திருக்க கூடும் என்று முழுமையாக நம்புகிறான் . இதனை மனதில் வைத்து கொண்டு டேவ் வை கடத்தி இரவு நேரத்தில் ஓர் ஆள்நடமாட்டம் இல்லாத ஆற்றங்கரைக்கு தன ஆட்களுடன் Dave வை தூக்கி செல்கிறான் .

டேவ் விடம் தான் அந்த இடத்தில பல கொலைகள்  செய்திருப்பதாகவும் அவற்றில் ஒன்று தன்னை காட்டிக்குடித்த நண்பனும் ஒருவன் என்றும் கூறி மிரட்டுகிறான் . டேவ் அன்று தான் ஒருவனை தாக்கியதாகவும் அவன் ஒரு குழந்தையை காரில் வைத்து பாலியில் பலாத்காரம் செய்ய முயற்சித்து கொண்டிருந்ததாகவும் , அதனால் கோபம் கொண்டு அவனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாகவும் கூறினான் .

ஆனால்  ஜிம்மி அதனை நம்பாதவனாய் உண்மையை கூறுமாறு மீண்டும் மீண்டும்  மிரட்டத்துவங்கினான் ஒரு கட்டத்தில் நீ என் மகளை கொன்றதை ஒப்புக்கொண்டால் உன்னை விட்டுவிடுவேன் என்ற கூறவே டேவ் பொய்யாக ஒப்புக்கொண்டான். ஜிம்மி அவனை அடுத்த நிமிடமே சுட்டு கொன்றுவிடுகிறான் . ஒரு கல்லில் அவன் பிணத்தை கட்டி ஆற்றில் வீசுகிறான் .

மறுநாள் Sean கொலையாளி சரணடைந்து  விட்டதாகவும்  உடனே வருமாறும் ஜிம்மி க்கு தகவ்கள் அனுப்ப ஜிம்மியும் காவல் நிலையம் விரைகிறான். அங்கு அவர்கள் மூன்று பேர்கள் இருந்தனர். ஒருவன் ஜிம்மியின் மகளின் காதலன் இனொருவன் அவனுடைய தம்பி , மூன்றாவது அவன் தம்பியின் நண்பன். கொலை நடந்த இரவு தன் கொலைகார அப்பா மறைத்து வைத்திருந்த ஒரு துப்பாக்கியை  வைத்து விளையாடி கொண்டிந்த இரு சிறுவர்கள் ஜிம்மியின் மகள் வருவதை பார்த்து அவளை  விளையாட்டாக பயமுறுத்த துப்பாக்கியால் அவளை  குறி வைக்க அது கை தவறி சுட்டு விடுகிறது . ஜிம்மி யின் மகள் ரத்த  வெள்ளத்தில் சரிந்து விழுகிறாள். எதிர்பாராமல் நடந்த விபத்தை சரி செய்யவும் தாங்கள் தப்பித்து கொள்ளவும் அவளை ஒரு ஹாக்கி பேட்டால் தாக்கி பின்பு சுட்டு கொள்கின்றனர் மூவரும்.


Sean ஜிம்மியிடம் டேவ் வை 2 நாட்களாக  காணவில்லை நீ எங்காவது அவனை பார்த்தாயா என்று கேட்கிறான் . ஜிம்மி தான் செய்த தவறை   நினைத்து
உறைந்து போய் நிற்கிறான். அவன் அனைத்தையும் மறைத்து விட்டு தனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து  அவசரமாய் புறப்படுகிறான்.


இறுதி காட்சியில் Sean தனது கை குழந்தையுடனும் மனைவியுடன் சேர்த்து ஒரு பள்ளி மாணவர்கள் வீதி ஊர்வலத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் சமீபத்தில் தான் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்திருக்கின்றனர். எதிர் திசையில் ஜிம்மி நிற்பதை பார்க்கும் Sean தனது கைகளை துப்பாக்கிபோல் பாவனை செய்து சுடுவதுபோல் செய்து சிரிக்கின்றான் . டேவ் வின்  மனைவி தனது கணவனை  கூட்டத்தில் தேடி கொண்டிருக்கையில் தனது மகன் மாணவர் ஊர்வலத்தில் ஒரு வேனில் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்து பதட்டத்துடன் அவனை அழைத்து கொண்டே பின்னே செல்கிறாள் .

25 வருடங்களுக்கு மூன்  (Jimmy , Sean  & Dave ) மூவரும் சிமென்டில் எழுதிய பெயர்களும் டேவ் தனது பெயரை பாதியிலேயே விட்ட தடமும் அடுத்த காட்சியில் காட்டப்படுகின்றன . ஒரு நீளமான ஆறும்  ஆற்றின் அடியில் இன்னும் பல மர்மங்கள்  உள்ளன என்று நமக்கும் கூறும் பாணியில் ஒரு மெல்லிய  இசையோடு இருளில் மறைகிறது திரை .

6 oscar விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு 2 ஆஸ்கார்  விருதுகள் வாங்கிய இந்த படத்தை இயக்கியவர் உலக புகழ் பெற்ற நடிகர் & இயக்குனர் Client Eastwood .

சிறந்த நடிகருக்கான விருது ஜிம்மியாக நடித்த  Sean Paul கும் சிறந்த துணை நடிகருக்கான விருது Dave ஆக நடித்த Tim Robbins கும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

 The Shape of Water - Plot explained (Tamil)

எலிசா ஒரு ஊமை பெண் , பல வருடங்களுக்கு முன் ஒரு நதிக்கரையில் சில காயங்களுடன் மீட்டெடுக்கபட்டவள் . அவளுக்கு பிறவியில் இருந்தே பேச முடியவில்லை ஆனால் சைகை மூலியமாக தன் எண்ணங்களை பகிந்து கொள்வாள் .
35 வருடங்கள் கடந்தோடியும் ஒரு துணை இல்லாமல் தனிமையில் ஆதரவின்றி, வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லமால் வாழ்நாளை ஓட்டி கொண்டிருப்பவள். பெரிய புத்திசாலியும் இல்லை, திறமைசாலியும் இல்லை . தனக்கு கிடைத்த சுத்தம் செய்யும் தொழிலை சிறப்பாக செய்துகொண்டிருந்தாள்.

அவள் வேலை செய்யும் இடம் ஒரு ராணுவ ரகசிய ஆராய்ச்சி கூடம். உலகில் இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் நிலவிய பனிப்போரின் காலகட்டத்தில் Baltimore  எனும் இடத்தில இயங்கிய அமெரிக்காவின் மிக பெரிய ஆராய்ச்சிக்கூடம் அதுதான்.

எலிசாவின் நண்பர்கள் வட்டம் பக்கத்து வீட்டுக்காரரான Giles எனும் 50 வயதான முதியவர் மற்றும் தன்னுடன் வேலை செய்யும் தோழி Zelda .

ஒருநாள் அந்த பாதுகாப்பு மையத்திற்கு Colonel Richard என்பவரால் அமேசான் நதியில் பிடிக்கப்பட்ட நீரில் வாழக்கூடிய ஒரு அரியவகை நீர்நில மனிதன் கொண்டுவர படுகிறான். அமெரிக்கா அரசு அவருக்கு அதை பற்றி ஆராய முழு அதிகாரத்தையும் பிறப்பிக்கிறது .

General Frank Hoyt யின் உத்தரவுப்படி அந்த உயிரினத்தை கொன்று உடலை ஆராய்ந்து விண்வெளியில் உயிர்கள் வாழ தகுதிகூறுகள் இருக்க வழி உண்டா என்று பரிந்துரைக்க ஆணையிடுகிறார். 

ஒருமுறை அந்த உயிரினம் இருக்கும் அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகையில் அந்த உயிரனத்துடன் பழக ஆரம்பிக்கிறாள் எலிசா. அவளுடைய செய்கை மொழியை அந்த உயிரினம் மிக விரைவில்கற்றுக்கொள்கிறது . இருவரும் தங்கள் நட்பை ரகசியமாக தொடர்கின்றனர்.



ரஷ்யாவின் உளவு செயலியாக வரும் ஒரு மருத்துவர் Robert அந்த மிருகத்தை உயிருடன் ரஸ்சியாவிற்கு கடத்த முயன்ற செயல் தோல்வியில் முடிய இந்த அறிய வகை உயிரினத்தை கொள்ளும் திட்டத்தில் உடன்பாடில்லாமல் அதை தப்பிக்க வைக்க முயற்சி செய்கிறார் . எலிசாவுடன் சேர்ந்து அந்த மிருகம் கூடத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறார் .

எலிசாவும் அந்த உயிரினத்தின் பால் கொண்ட அன்பினால் அதை அங்கிருந்து தனது வீட்டிற்கு கொண்டு செல்கிறாள் . அதை அந்த ஊரில் உள்ள கால்வாயில் கொண்டு விட்டுவிட முடுவு செய்து , தகுந்த நேரத்தையும் இடத்தையும் முடிவு செய்கிறாள். அதனை தனது காலண்டரில் குறித்து கொள்கிறாள் . 

General Frank Hoyt இந்த விஷயத்தை கேள்வி பட்டு மிகுந்த கோபம் கொள்கிறார். அவர், அதை பிடிப்பதற்கு Colonel Richard க்கு 36 மணி நேரம் அவகாசம் கொடுக்கிறார் .

மறுநாள் வழக்கம் போல் தன் வேளைக்கு செல்லும் எலிசா தனது நண்பரான Giles யிடம் அந்த உயிரினத்தை பார்துகொள்ளுமாறு கேட்கிறாள். அவரின் செல்ல பூனையை அது தின்று விடவே அவர் கோபப்பட்டு அதை தாக்க முற்படும்போது அந்த உயிரினத்தால் கையில் தாக்க படுகிறார். அங்கிருந்து அந்த உயிரினம் தப்பித்து செல்கிறது.

Colonel Richard அந்த உயிரினம் காணாமல் போனதை பற்றி துப்பறிய துவங்குகிறார். முதலில் அவரது சந்தேகம் Robert இன் மீது ஏற்படுகிறது . அவர் படிப்படியாய் விசாரணையை முன்னெடுத்தி செல்கிறார் . இறுதியில் Robert உதவியது தெரிந்து அவரை சித்ரவதை செய்து கொன்றுவிடுகிறார் Richard .

எலிசா வீடு திரும்பும்போது நடந்தவற்றை Giles இடம் கேட்டு தெரிந்து கொள்கிறாள் , அவள் பதட்டத்துடன் அந்த உயிரினத்தை தேடி விரைகிறாள். அந்த அடுக்குமாடிகுடியிருப்பின் கீழ் இயங்காமல்இருக்கும் ஒரு திரையரங்கில் அதை கண்டுபிடித்து அதை கட்டித்தழுவி தனது வருத்தத்தை தெரிவிக்கிறாள் . வீட்டிற்கு மீண்டும் அழைத்து வருகிறாள் , அந்த உயிரினம் தனது கைகளினால் கில்ஸ் Giles  உடம்பில் தன்னால் ஏற்பட்ட காயத்தை மெதுவாக தடவி பின் அவரது வழுக்கை தலையையும் தடவி கொடுத்து வருத்தம் தெரிவிக்கும் . எலிசா அந்த உயிரினதுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்த Giles , இருவருக்கும் இடையே ஒருமெல்லிய காதல் இருப்பதை உணர்ந்து விலகி செல்கிறார் . அன்றிரவு எலிசா வும் அந்த நீர்நில உயிரினமும்  வீட்டின் குளியலறை தொட்டி நீரில் உடலுறவு கொள்கின்றனர்.  

மறுநாள் காலையில் தனது காயம் மறைந்து போனதையும் தனது வழுக்கை தலையில் முடி வளர்த்ததையும் கண்டு பிரமித்துப்போகிறார் கில்ஸ். அந்த உயிரினத்திற்கு அபார சக்தியும் மீளுருவாக்கம் திறனும் இருப்பதை கண்டு வியந்து போகிறார் . அவருக்கு அந்த உயிரினத்தின் மீது ஒரு அபரிவிதமான ஈர்ப்பு இருப்பதை உணர்கிறார் .

விசாரணையை தீவிரம் செய்து அந்த உயிரினம் எலிசா வீட்டில் இருப்பதாய் அறிந்து அங்கு விரைகிறார் Colonel  Richard . அங்கு இருந்த காலண்டரில் குறித்து வைக்கப்பட்ருந்த இடத்தையில் நேரத்தையும் அரிது கொள்ளகிறார் . மேலும் இன்னும் சிறுது நேரமே இருப்பதை உணர்ந்து உடனே அங்கு விரைகிறார் .

அடர் மழை பெய்துகொண்டு இருந்த அந்த இரவில் திட்டமிட்டபடி அந்த கால்வாயின் கரையில் எலிசா, Giles இருவரும் அந்த உயிரினத்துக்கு பிரியா  விடை கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் . அங்கு வந்த Colonel Richard அந்த உயிரினத்தையும் எலிசாவையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்ததுகிறார். Giles பின்னால் இருந்து ராபர்ட் -யை தாக்கிவிட்டு, தரையில் சரிந்து விழுந்த கிடக்கும்  இருவரையும் கட்டிக்கொண்டு அழுகிறார் . 

சிறுது நேரத்தில் அந்த உயிரினம் உயித்தெழுகிறது, அந்த காயங்கள் தாமாக மறைந்து கொண்டிருப்பதை கில்ஸ் பார்க்கிறார் , எழுந்து நேராக ராபர்ட் நோக்கி செல்கிறது , சற்றும் எதிர்பாக்காத நேரத்தில் அவரை தனது கூர்மையான நகங்களால் கழுத்தை கிழித்துவிடுகிறது . ராபர்ட் ரத்தம் சொட்ட கிழே சரிந்து விழுந்து இறக்கிறார் .

இறுதியில் அந்த உயிரினம் எலிசா வை தூக்கிக்கொண்டு நீருக்குள் குதித்து விடுகிறது . நீருக்கடியில் எலிசாவை மீளுருவாக்கம் செய்கிறது . இப்போது எலிசாவிக்கு பிறந்தபோது கழுத்தில் இருந்த காயா தழும்புகள் செவுள்களாக மாறுகிறது . இருவரும் நீருக்கடியில் தங்களது புதிய வாழ்கையை காதலுடன் தொடங்க ஒரு காதல் கவிதையுடன் முடிகிறது "The Shape of Water " திரைக்காவியம்.



இந்த திரைப்படம் 13 துறையில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்டது . 4 ஆஸ்கார் விருதை வென்றது  Best Production DesignBest Original ScoreBest Director, and Best Picture.

Released On : 31 Aug 2017


Directed byGuillermo del Toro
Produced by
Screenplay by
Story byGuillermo del Toro
Starring
Music byAlexandre Desplat
CinematographyDan Laustsen
Edited bySidney Wolinsky

இது போன்று அறிய படங்களின் கதையறிய என்னுடைய BLOG யை Like செய்யவும்.


Follow the link below to download the movie
                                                                                                                                             
http://yts-yify.com/torrent/movies/the-shape-of-water-2017/

No comments:

Post a Comment