B.Sc படிப்பவர்கள் IISc, IIT-ல் M.Sc, Ph.D படிக்க JAM நுழைவு தேர்வு ஒரு வரப்பிரசாதம்.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனமான IISc, ஐஐடியில் (IIT) M.Sc, Ph.D படிக்க JAM நுழைவு தேர்வு நடத்தபடுகின்றது, B.Sc- யில் Physics, Chemistry, Mathematics , Statistics, Geology, Biotechnology படித்தவர்கள் இந்த தேர்வை எழுத முடியும்.
B.Sc- ல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.
B.Sc- ல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.

IISc, IIT-ல் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு சிறப்பு கல்வி உதவி தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது, எனவே இங்கு படிக்க பெரிய அளாவில் பொருளாதாரம் செலவாகாது
இளநிலை (B.Sc) படிப்பில் 55 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும், வயது வரம்பு இல்லை. தொலைதூர கல்வியின் மூலம் (Distance Education) பட்டம் பெற்றவர்களும் இந்த தேர்வை எழுத முடியும்.
இந்த தேர்வில் தேர்சி பெறுவதன் மூலம் M.Sc -ல் Physics, Chemistry, Mathematics, Statistics, Biotechnology, Astronomy போன்ற படிப்புகளை IISc, IIT-ல் படிக்கலாம். ஒருங்கினைந்த M.Sc, Ph.D படிப்புகளும் படிக்கலாம்
தற்போது இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 8. இந்த https://joaps.iitk.ac.in/ இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் விபரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் விண்ணப்ப கட்டணம் ரூ.1500 (பெண்களுக்கு ரூ.750).
பிப்ரவரி 9- ஆம் தேதி தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெறும்.
மார்ச் 20- ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும், தேர்சி பெற்ற மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் அட்மிஷனுக்காக https://joaps.iitk.ac.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண், பிரிவின் (Gen, OBC) அடைப்படையில் ஜூன் மாதத்தில் IISc, IIT-களில் இடம் ஒதுக்கப்படும்.
இந்த JAM தேர்வை பற்றி :
கீழ் காணும் 6 பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறும் .
(i) Mathematics (MA)
(ii) Mathematical Statistics (MS)
(iii) Physics (PH)
(iv) Chemistry (CY)
(v) Biotechnology (BT)
(vi) Geology (GG)
(ii) Mathematical Statistics (MS)
(iii) Physics (PH)
(iv) Chemistry (CY)
(v) Biotechnology (BT)
(vi) Geology (GG)
ஒருவர் ஒரு பிரிவில் தேர்வு எழுதினால் போதும். இரண்டு பிரிவிலும் எழுதலாம் . உதாரணத்திற்க்கு B.Sc Mathematics படித்தவர்கள் M.Sc Mathematics படிப்பதற்க்காக Mathematics (MA) பிரிவிலும், M.Sc. Applied Statistics and Informatics படிப்பதற்க்காக Mathematical Statistics (MS) பிரிவிலும் இரண்டு தேர்வுகள் எழுதலாம்.
இது முழுக்க முழுக்க ஆன்லைனில் (கணினி மூலம்) நடக்கும் 3 மணி நேர தேர்வு, மொத்தம் 60 கேள்விகள் 100 மதிப்பெண்னுக்கு கேட்க்கப்படும், Multiple Choice Questions வகையில் 30 கேள்விகளும், ஒன்றிற்கு மேற்பட்ட பதில்கள் வகையில் 10 கேள்விகளும், பதில் எழுதும் முறையில் 20 கேள்விகளும் கேட்க்கப்படும். தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் (Negative marking) 1 மார்க் கேள்விக்கு -0.33 மதிப்பெணும், 2 மார்க் கேள்விக்கு -0.66 மதிப்பெண்னும் குறைக்கப்படும்.
மேலும் விபரங்கள் இந்த pdf http://jam.iitk.ac.in/doc/JAM2020_ApplicationBrochure.pdf ஃபைலில்உள்ளது