இந்தியாவில் உள்ள உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களான IIT, IISc, NIT போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலை கழகங்களில் பொறியியல் படிப்புகள் (B.E/B.Tech) , கட்டிட நிர்மான கலை (B.Arch) படிப்புகள் படிக்க JEE Main தேர்வு ஆண்டு தோரும் நடத்தப்படுகின்றது. அதற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 (30-09-2019)
JEE Main தேர்வில் தேர்சி பெறுபவர்கள் JEE Advance தேர்வு எழுதி தேர்சி பெற்று IIT, IISc-யில் B.E/B.Tech/B.Arch படிப்புகளில் சேரலாம்.
JEE Main தேர்வில் மட்டும் தேர்சி அடைந்தவர்கள் NIT, தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிப்புகளில் சேரலாம்.
கல்வி தகுதி :
a) +2 -ல் கணிதம்(Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) பிரிவு மாணவர்கள். படித்து கொண்டிருப்பவர்கள் அல்லது படித்து முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
b) டிப்ளோமா (Diploma) இறுதி ஆண்டு படித்து கொண்டிருப்பவர்கள் (அல்லது படித்து முடித்தவர்கள்)
c) +2 -ல் சில வொகேஷனல் (Vocational) பிரிவு மாணவர்கள்
+ 2 தேர்வு அல்லது டிப்ளோமா தேர்வில் குறைந்தது 75 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்
வயது :
2018, 2019- ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் அல்லது 2020-ல் தேர்வு எழுதபோகும் மாணவர்கள்
2018, 2019- ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் அல்லது 2020-ல் தேர்வு எழுதபோகும் மாணவர்கள்
விண்ணப்பிக்க :
https://jeemain.nta.nic.in/webinfo/public/home.aspx என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணம் ரூ.650, பெண்களுக்கு ரூ.325
https://jeemain.nta.nic.in/webinfo/public/home.aspx என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணம் ரூ.650, பெண்களுக்கு ரூ.325
06.01.2020 முதல் 11.01.2020 வரை 5 நாள்களில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு நடைபெறும்.
தேர்வை பற்றி :
இது 3 மணி நேரம் நடைபெறும் கணிணியில் எழுதப்படும் ஆன்லைன் (CBT) தேர்வாகும்
இதில் கணிதம்(Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) ஆகிய 3 பாடங்களில் இருந்து ஒரு பாடத்திற்க்கு 25 கேள்விகள் வீதம் மொத்தம் 75 கேள்விகள் கேட்க்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு இந்த தேர்வு நடைபெறும். கேள்விகள் ஆங்கிலம், மற்றும் இந்தியில் இருக்கும்.
ஒவ்வொரு பாடத்திற்க்கும் 20 கேள்விகள், சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் (MCQ) முறையில் இருக்கும், 5 கேள்விகள் நேரடியாக பதில் எழுதும் முறையில் இருக்கும்.
MCQ கேள்விகளில் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைத்து கொள்ளப்படும் (negative mark for wrong answer )
நேரடியாக பதில் எழுதும் 15 கேள்விகளுக்கு negative mark இல்லை.
நேரடியாக பதில் எழுதும் 15 கேள்விகளுக்கு negative mark இல்லை.
JEE Main தேர்வின் பாடதிட்டம் (syllabus) https://jeemain.nta.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx… லின்கில் உள்ளது
JEE Main தேர்வை பற்றிய விபரங்கள் இந்த pdf https://jeemain.nta.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx… ஃபைலில் உள்ளது
இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்க சந்தேகம் இருந்தாலோ, அல்லது கூடுதல் விபரம் தேவைபட்டாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
No comments:
Post a Comment