Wednesday, 28 October 2020

கிராம நிர்வாக அதிகாரியின் (V.A.O )பணி என்ன..? நாம் எத்தனை பேருக்கு தெரியும்..?

கிராம நிர்வாக அதிகாரியின் (V.A.O )பணிகள் !!


1. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.
6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.
7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.
8. காலரா, டெங்கு, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தொற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.
9. இருப்புப் பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுகாத்தல்.
13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.
14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.
15. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.
16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.
17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.
18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்து கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.
19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.
20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.
21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.
22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.
23. அரசாங்கம் அவ்வப்பொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல்.

Saturday, 10 October 2020

புதிய கல்விக் கொள்கையில் உள்ள மாணவர் விரோதக் கருத்துக்கள்!!


1.மும்மொழித் திட்டம்" என்ற பெயரில் இந்தித் திணிப்பு.

2. மாணவர்களுக்கு எவ்வகையிலும் பயன்தராத மொழியான

சமஸ்கிருதம் திணிப்பு.

3.தொடக்க நிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் தேவையற்ற

நிலையிலான தேசிய அளவிலான தேர்வு.

4.கலை, அறிவியல் பாடங்களுடன், 'தொழிற்கல்வி' என்ற பெயரில் குலக்கல்வித் திணிப்பு.

5.பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம். முதலியனவற்றில் சேர்ந்து படிக்க நுழைவத்தேர்வு!

6.கல்லூரிகளுக்குத் தரத்தின் அடிப்படையில் ‘நிதி உதவி' என்ற

பெயரில், பின்தங்கிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள் புறக்கணிப்பு.

7) சுமார் 5000 மாணவர்களுக்கு மேல் உள்ள கல்லூரிகள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையில், கிராமப்புறக் கல்லூரிகள் ஒழிப்பு.

8.நீண்ட காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள் மூடப்படும்.

9.பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை நிர்வகிக்கப் பிரதமர்

தலைமையில் டில்லியில் ஒரு உயர்கல்விக் குழு அமைக்கப்படும்.

10. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் உருவாக்கவும், நடத்தவும் மாநில

அரசே நிதி வழங்க வேண்டும். ஆனால், நிர்வகிக்க உரிமை கிடையாது.

11) மாநில அரசின் அதிகாரம் பறிப்பு.

12. பல்கலைக் கழகத் துணைவேந்தரை டில்லியே நியமிக்கும்; மாநிலஅரசுக்கு உரிமை கிடையாது.

13. டில்லியால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள், அவர்களுக்கு வேண்டிய

வர்களையே பல்கலைக் கழகத்தில் உள்ள மற்ற பதவிகளுக்கும்

ஆசிரியர் பணியிடங்களுக்கும் நியமிப்பர்.

14. எனவே, பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எந்தப் பதவி

களுக்கும் வர முடியாது.

15.வகுப்புவாரி இடஒதுக்கீடு பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

16.அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை மதிப்பெண்கள்

அடிப்படையிலேயே வழங்கப்படும். அதனால் ஒடுக்கப்பட்ட சமுதாய

மாணவர் உரிமை பறிக்கப்படும்

17.இந்தியா முழுவதற்கும் ‘ஒரே பாடத்திட்டம்' என்ற பெயரில் 'ஆரிய பாடத்

திட்டம்' கொண்டு வர முயற்சி ஆரிய நாகரீகம், வரலாறு ஆகியவற்றைத் திணித்துத் தென்னிந்திய நாகரீகம், வரலாற்றைப் புறக்கணிக்க முயற்சி.

19.பாரம்பரியக் கல்வி அறிமுகம்' என்ற பெயரில் அறிவியல் சோதனையில்

நிற்காத கல்வித் திணிப்பு...


20.ஆக்ஸ்போர்டு, ஹார்வேர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை

முன்மாதிரியாகக் கொள்ளாமல்; நாளந்தா, தட்சசீலம் போன்ற

பிற்போக்கான பாடத் திட்டங்களைக் கொண்ட பல்கலைக்கழகங்களை

முன்மாதிரியாகக் கொண்டது.

21.மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு 5ஆம் வகுப்பு வரையில்மட்டுமே தரப்படும்.

22.ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படும்.

23. தன்னார்வத் தொண்டர்கள்' என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்

அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பர்.

24. முதலாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கூட தேசிய முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும்.

25) பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பாடத்திட்டம் (Sylabus) உண்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் அனைத்துத் தேர்வுகளையும் நடத்த

தனியார் தேர்வு வாரியம் அமைக்கப்படும்.

பெண்கள் கல்வியைப் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை.


இந்தியாவில் கல்விமுறையை மாற்றி அமைப்பதற்கு முன்பு அடிப்படையில் கல்வி, வாழ்வு என்பது பற்றிய மக்களின் கண்ணோட்டம் மாற வேண்டும். கேள்விக்கு நேரடியாக சம்மந்தம் இல்லை. இருப்பினும் இது சொல்ல வேண்டிய ஒரு விஷயம்.




இதற்கடுத்து இன்றைய கல்வி முறையில் எவற்றை மாற்றி அமைப்பது முக்கியம் என்பதற்கான எனது கருத்துகளைச் சொல்கிறேன்.

ஆசிரியர்களின் தகுதி

வெறும் பட்டங்களும் தேர்வுகளும் மட்டும் ஒரு ஆசிரியரின் தகுதியை நிர்ணயிக்காது. ஒரு ஆசிரியர் என்பவர் வாழ்நாள் முழுவதும் கற்பதற்குத் தயங்காமல் இருப்பது அவசியம். இந்த பண்பு இல்லாதவர்கள் சிறந்த ஆசிரியராக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே இந்த பண்பு இல்லாதவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் ஆசிரியராக இருப்பதற்கு பொருத்தமானவர்கள் அல்ல.

ஆசிரியர்களின் அணுகுமுறை

எனது இயற்பியல் ஆசிரியர் அடிக்கடிக்கூறும் ஒரு வாக்கியம் — Ignorance is not a sin. அறியாமை என்பது தான் நம் அனைவருக்கும் ஆரம்ப நிலை. அதில் எந்த அவமானமும் இல்லை. எந்த கேள்வியும் கிறுக்குத்தனமானது அல்ல (no question is silly). இந்த Ignorance is not a sin என்பது ஆசிரியருக்கும் பொருந்தும். ஏதோவொரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பது ஒரு ஆசிரியரைத் தாழ்த்திவிடாது. ஆனால் அந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லையெனில் அது தான் அந்த ஆசிரியரைத் தாழ்த்தும். மேலும் ஒரு ஆசிரியர் கல்வியை போதிக்கிறார் என்கிற எண்ணம் தவறு. கல்வி என்பது அந்தந்த மாணவர் தனது முயற்சியில் சொந்தமாகக் கற்றுக் கொள்வதே. ஆசிரியர் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறார். இந்த மனப்பான்மை ஆசிரியர்களுக்கு மிக முக்கியம்.

பாடதிட்டம் வடிவமைக்கப்படும் விதம்

நாம் கற்பிக்கும் பாடங்களை மாணவர்கள் அவர்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த விரும்புவர். அது தான் அவர்களின் இயல்பு. ஆனால் நமது பாடத்திட்டங்கள் பெரும்பாலும் இதற்குப் புறம்பாகவே தான் உள்ளன. நான்கு சுவற்றிற்கு நடுவில் உட்கார வைத்துக் கற்றுத் தரப்படும் வானியல் சுவாரஸ்யமாக இருக்குமா? அல்லது வானத்தை காண்பித்து சொல்லித் தருவது சிறப்பாக இருக்குமா? பல வகுப்புகள் பாடம் நடத்திப் புரிய வைக்க முடியாத சில விஷயங்களை ஒரு செயல்முறைை (experiment) மூலம் எளிதில் புரிய வைக்க முடியும். அதுமட்டுமின்றி பாடத்திட்டம என்பது மாணவர்களுக்கு கற்கும் ஆசையை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். ஏதோ இந்த வருடத்தை கடத்த வேண்டுமே என்று உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் உபயோகமற்றது. சென்னை ஐஐடியின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் எம்.எஸ். அனந்த் கூறிய ஒரு வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது — "Rather than covering the syllabus, try to uncover a part of it"

பாடம் பயிலும் முறை

இதில் புதிதாக சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. பல வருடங்களாக பலர் கூறுவது தான். மனப்பாடம் செய்வது என்பது வேண்டாமே! முன்பெல்லாம் அச்சு மாறாமல் மனப்பாடம் செய்வது பரவலாக இருந்தது. பின்னர் ஒரு டிரெண்ட்— புரிந்து கொள்ள முடியும் என்பதை புரிந்து படி, புரியாததை மனப்பாடம் செய். இதுவும் வேண்டாம் (அதுவும் தயவு செய்து கணிதத்தை எல்லாம் மனப்பாடம் செய்யாதீங்க 🙏🏼). படிப்பது என்றாலே புரிந்து படிப்பது மட்டும் தான். புரிதலின்றி படிக்கப்படும் வாக்கியங்கள் வெறும் சத்தம் தான். இதற்கு தொடர்பாக எனது மனைவி தனது பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொல்வார். ஆங்கில வகுப்பில் மனப்பாடப் பகுதியில் ஒரு கவிதை கற்று கொடுக்கப்பட்டதாம். அது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எழுதிய "Up up my friend quit your books" என்கிற கவிதை. "புத்தகப் புழுவாக இருக்காதே", "உலகத்தை அனுபவம் மூலம் கற்றுக்கொள்" என்கிற கருத்துகளைக் கூறும் கவிதையையே மனப்பாடம் செய்ய வைக்கின்றனர் என்றால் எவ்வளவு அபத்தமான கல்வி முறை நிலுவையில் உள்ளது!

தாய்மொழி வழிக் கல்வி முறை

மாணவர்களின் புரிதல் மேம்படுவதற்கு இது மிக முக்கியம். இவ்வழியில் பயின்றால் மேற்சொன்ன மனப்பாடம் செய்யும் பழக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை. கலைச்சொற்கள் (technical keywords) ஆங்கிலத்தில் உள்ளதை கற்றுக் கொடுப்பது அவசியம் தான். ஆனால் வகுப்புகளில் கற்றுக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் மொழி தாய்மொழியாக இருப்பதே சிறப்பு. இல்லையெனில் டூ ஒன் சார் டூ என்று மனப்பாடம் தான் செய்வோம். அது உண்மையில் two ones are two என்பது விளங்குவதற்குள் நாம் பன்னிரண்டாவது வகுப்பையே தாண்டிவிடுவோம்.

கல்விக்கான உபகரணங்கள்

சாக் பீஸ் முதல் புரொஜெக்டர் வரை அனைத்து கல்வி சாதனங்களும் ஒரு பள்ளியில் இருக்க வேண்டியது அவசியம். நவீன தொழில்நுட்பத்தை கல்விக்கு தேவைப்படும் விதத்தில் பயன்படுத்த வேண்டும். நமது பள்ளிகளில் இது போன்ற வசதிகள் உள்ளதா? சரி. இருக்கும் உபகரணங்கள் சரிவர பயன்படுத்தப் படுகின்றனவா? எனது பள்ளியின் PT அறையில் கூடைப்பந்து இருக்கும். ஆனால் எங்களிடம் பந்தைக் கொடுத்தால் தொலைத்து விடுவோம் அல்லது கிழித்து விடுவோம் என்று சொல்லி தரவே மாட்டார்கள். இது போல உபகரணங்களை ஒட்டடை படிய போற்றிப் பராமரிப்பதை நிறுத்துவது நலம்.



இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் பல நுட்பமான விஷயங்கள் உள்ளன. ஆனால் அவசியமாக/அவசரமாக தேவைப்படும் மாற்றங்களை மட்டும் சொல்லிவிட்டேன் என்பதால் இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 8 October 2020

மனித உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள் யாவை?

மனித உடல் மிகவும் அதிசயமாகவும் வியக்கத்தக்க விசயத்தை கொண்டு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என்பதே முதலில் அதிசமயமான ஒன்றுதான்.


உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.
ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.
மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.
பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.
அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.
நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.
ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.
இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.
ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே.
பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.
விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும். காரணம் ஒரு சதுர அடியில் வெறும் மூன்றில் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.
மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை.




உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.
மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.
ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.
ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்களை சிமிட்டுவார்கள்.
பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.
கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.
குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.
குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.
சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்...



உடலைப் பற்றியும் அதன் உறுப்புக்கள் பற்றியும், எனக்கு தெரிந்த படித்த சிந்திக்கவைக்க செய்த சில பதில்களை கேள்விகளாக தருகிறேன் .

1.நமது முலையின் அனிச்சை செயல் பள்ளி புத்தகத்தில் படித்ததில் இருந்து அதிசயமாக உள்ளது .

எ .கா. தீயின் அருகில் விரலை கொண்டு செல்லும்போது சூடான உடனே விரலை எடுப்பது.

2.உடலின் உள்ளுறுப்புகளை படலங்களை கொண்டு பாதுகாக்க செய்வது.

எ .கா . இதயத்தின் பெரிகார்டியம்

3.நாம் உண்ணும் உணவில் நீர்ச்சத்து மற்றும் இதர சத்துக்களை பிரித்து தேவையானவற்றை தேவையான இடத்திற்கு அனுப்புவது .தேவையில்லாதவற்றை மலமாக அனுப்புவது.

4.(அருவெறுப்பு உடையவர்கள் இதை படிக்காமல் அடுத்திற்கு போகலாம்)

உடலின் தேவையில்லாதவைகளை நீர்பொருளை சிறுநீராகவும் மற்றவைகளை மலகாவும் வெளியேற்றுகின்றது .இதில் வெளியேற்றும் நிகழ்வானது அனைத்து நேரத்திலும் வெளியேற்றாமல் ஒரு உணர்வின் முலம் வெளியேற்ற செய்வதும் அதிசயமானது தான்.மேலும் ஆசனவாய் பகுதியில் எவ்வித கருவிகள் இல்லாமல் உணர்வின் மூலம் மட்டுமே கழிவுகளை வெளியேற்றுவது ஒரு அதிசயமான உணர்வு .

5.உடலில் தூசி நுழைந்தால் அதை தும்மல் மூலமாக வெளியேற்ற செய்வது.

மேலும் தும்மும் பொது ஒரு வினாடி ஊழலில் செயல் நின்று துவங்கும் இதை என்றாவது கவனித்தது உண்டா.

6.கரு உருவாக்குதலில் தொடங்கி குழந்தையாக மாறி வெளியேறுவதும் அதிசயம் தான் .

7விலங்களில் இருந்து பரிணாமம் பெற்ற நாம் ,நம் நம் குழந்தைக்கு உடலில் ரத்தத்தை பாலாக மாற்றி உணவாக தரச்செய்யும் முறை அதிசயத்தின் அதிசயம் ஆகும்.

8.சுவாசத்தின் மூலம் மனிதனை இயக்க செய்வது அனைத்திற்கும் மேலான அதிசயம்.

இவ்வாறு உடலில் ஆயிரக்கணக்கான அதிசயங்கள் உள்ளது,சொலில்லிக்கொண்டே போகலாம்,இந்த மனித உடலே அதிசயத்தக்க விஷயம்தான். உடலில் உள்ள ஒவ்வொரு விஷயமும் அதிசயத்தக்க விஷயம்தான்,எவ்வளவு பெரிய அதிசயங்களைச் ஓவ்வொரு நிமிடமும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அப்பப்பா!