Saturday, 10 October 2020

புதிய கல்விக் கொள்கையில் உள்ள மாணவர் விரோதக் கருத்துக்கள்!!


1.மும்மொழித் திட்டம்" என்ற பெயரில் இந்தித் திணிப்பு.

2. மாணவர்களுக்கு எவ்வகையிலும் பயன்தராத மொழியான

சமஸ்கிருதம் திணிப்பு.

3.தொடக்க நிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் தேவையற்ற

நிலையிலான தேசிய அளவிலான தேர்வு.

4.கலை, அறிவியல் பாடங்களுடன், 'தொழிற்கல்வி' என்ற பெயரில் குலக்கல்வித் திணிப்பு.

5.பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம். முதலியனவற்றில் சேர்ந்து படிக்க நுழைவத்தேர்வு!

6.கல்லூரிகளுக்குத் தரத்தின் அடிப்படையில் ‘நிதி உதவி' என்ற

பெயரில், பின்தங்கிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள் புறக்கணிப்பு.

7) சுமார் 5000 மாணவர்களுக்கு மேல் உள்ள கல்லூரிகள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையில், கிராமப்புறக் கல்லூரிகள் ஒழிப்பு.

8.நீண்ட காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள் மூடப்படும்.

9.பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை நிர்வகிக்கப் பிரதமர்

தலைமையில் டில்லியில் ஒரு உயர்கல்விக் குழு அமைக்கப்படும்.

10. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் உருவாக்கவும், நடத்தவும் மாநில

அரசே நிதி வழங்க வேண்டும். ஆனால், நிர்வகிக்க உரிமை கிடையாது.

11) மாநில அரசின் அதிகாரம் பறிப்பு.

12. பல்கலைக் கழகத் துணைவேந்தரை டில்லியே நியமிக்கும்; மாநிலஅரசுக்கு உரிமை கிடையாது.

13. டில்லியால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள், அவர்களுக்கு வேண்டிய

வர்களையே பல்கலைக் கழகத்தில் உள்ள மற்ற பதவிகளுக்கும்

ஆசிரியர் பணியிடங்களுக்கும் நியமிப்பர்.

14. எனவே, பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எந்தப் பதவி

களுக்கும் வர முடியாது.

15.வகுப்புவாரி இடஒதுக்கீடு பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

16.அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை மதிப்பெண்கள்

அடிப்படையிலேயே வழங்கப்படும். அதனால் ஒடுக்கப்பட்ட சமுதாய

மாணவர் உரிமை பறிக்கப்படும்

17.இந்தியா முழுவதற்கும் ‘ஒரே பாடத்திட்டம்' என்ற பெயரில் 'ஆரிய பாடத்

திட்டம்' கொண்டு வர முயற்சி ஆரிய நாகரீகம், வரலாறு ஆகியவற்றைத் திணித்துத் தென்னிந்திய நாகரீகம், வரலாற்றைப் புறக்கணிக்க முயற்சி.

19.பாரம்பரியக் கல்வி அறிமுகம்' என்ற பெயரில் அறிவியல் சோதனையில்

நிற்காத கல்வித் திணிப்பு...


20.ஆக்ஸ்போர்டு, ஹார்வேர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை

முன்மாதிரியாகக் கொள்ளாமல்; நாளந்தா, தட்சசீலம் போன்ற

பிற்போக்கான பாடத் திட்டங்களைக் கொண்ட பல்கலைக்கழகங்களை

முன்மாதிரியாகக் கொண்டது.

21.மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு 5ஆம் வகுப்பு வரையில்மட்டுமே தரப்படும்.

22.ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படும்.

23. தன்னார்வத் தொண்டர்கள்' என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்

அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பர்.

24. முதலாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கூட தேசிய முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும்.

25) பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பாடத்திட்டம் (Sylabus) உண்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் அனைத்துத் தேர்வுகளையும் நடத்த

தனியார் தேர்வு வாரியம் அமைக்கப்படும்.

பெண்கள் கல்வியைப் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை.


இந்தியாவில் கல்விமுறையை மாற்றி அமைப்பதற்கு முன்பு அடிப்படையில் கல்வி, வாழ்வு என்பது பற்றிய மக்களின் கண்ணோட்டம் மாற வேண்டும். கேள்விக்கு நேரடியாக சம்மந்தம் இல்லை. இருப்பினும் இது சொல்ல வேண்டிய ஒரு விஷயம்.




இதற்கடுத்து இன்றைய கல்வி முறையில் எவற்றை மாற்றி அமைப்பது முக்கியம் என்பதற்கான எனது கருத்துகளைச் சொல்கிறேன்.

ஆசிரியர்களின் தகுதி

வெறும் பட்டங்களும் தேர்வுகளும் மட்டும் ஒரு ஆசிரியரின் தகுதியை நிர்ணயிக்காது. ஒரு ஆசிரியர் என்பவர் வாழ்நாள் முழுவதும் கற்பதற்குத் தயங்காமல் இருப்பது அவசியம். இந்த பண்பு இல்லாதவர்கள் சிறந்த ஆசிரியராக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே இந்த பண்பு இல்லாதவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் ஆசிரியராக இருப்பதற்கு பொருத்தமானவர்கள் அல்ல.

ஆசிரியர்களின் அணுகுமுறை

எனது இயற்பியல் ஆசிரியர் அடிக்கடிக்கூறும் ஒரு வாக்கியம் — Ignorance is not a sin. அறியாமை என்பது தான் நம் அனைவருக்கும் ஆரம்ப நிலை. அதில் எந்த அவமானமும் இல்லை. எந்த கேள்வியும் கிறுக்குத்தனமானது அல்ல (no question is silly). இந்த Ignorance is not a sin என்பது ஆசிரியருக்கும் பொருந்தும். ஏதோவொரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பது ஒரு ஆசிரியரைத் தாழ்த்திவிடாது. ஆனால் அந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லையெனில் அது தான் அந்த ஆசிரியரைத் தாழ்த்தும். மேலும் ஒரு ஆசிரியர் கல்வியை போதிக்கிறார் என்கிற எண்ணம் தவறு. கல்வி என்பது அந்தந்த மாணவர் தனது முயற்சியில் சொந்தமாகக் கற்றுக் கொள்வதே. ஆசிரியர் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறார். இந்த மனப்பான்மை ஆசிரியர்களுக்கு மிக முக்கியம்.

பாடதிட்டம் வடிவமைக்கப்படும் விதம்

நாம் கற்பிக்கும் பாடங்களை மாணவர்கள் அவர்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த விரும்புவர். அது தான் அவர்களின் இயல்பு. ஆனால் நமது பாடத்திட்டங்கள் பெரும்பாலும் இதற்குப் புறம்பாகவே தான் உள்ளன. நான்கு சுவற்றிற்கு நடுவில் உட்கார வைத்துக் கற்றுத் தரப்படும் வானியல் சுவாரஸ்யமாக இருக்குமா? அல்லது வானத்தை காண்பித்து சொல்லித் தருவது சிறப்பாக இருக்குமா? பல வகுப்புகள் பாடம் நடத்திப் புரிய வைக்க முடியாத சில விஷயங்களை ஒரு செயல்முறைை (experiment) மூலம் எளிதில் புரிய வைக்க முடியும். அதுமட்டுமின்றி பாடத்திட்டம என்பது மாணவர்களுக்கு கற்கும் ஆசையை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். ஏதோ இந்த வருடத்தை கடத்த வேண்டுமே என்று உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் உபயோகமற்றது. சென்னை ஐஐடியின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் எம்.எஸ். அனந்த் கூறிய ஒரு வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது — "Rather than covering the syllabus, try to uncover a part of it"

பாடம் பயிலும் முறை

இதில் புதிதாக சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. பல வருடங்களாக பலர் கூறுவது தான். மனப்பாடம் செய்வது என்பது வேண்டாமே! முன்பெல்லாம் அச்சு மாறாமல் மனப்பாடம் செய்வது பரவலாக இருந்தது. பின்னர் ஒரு டிரெண்ட்— புரிந்து கொள்ள முடியும் என்பதை புரிந்து படி, புரியாததை மனப்பாடம் செய். இதுவும் வேண்டாம் (அதுவும் தயவு செய்து கணிதத்தை எல்லாம் மனப்பாடம் செய்யாதீங்க 🙏🏼). படிப்பது என்றாலே புரிந்து படிப்பது மட்டும் தான். புரிதலின்றி படிக்கப்படும் வாக்கியங்கள் வெறும் சத்தம் தான். இதற்கு தொடர்பாக எனது மனைவி தனது பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொல்வார். ஆங்கில வகுப்பில் மனப்பாடப் பகுதியில் ஒரு கவிதை கற்று கொடுக்கப்பட்டதாம். அது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எழுதிய "Up up my friend quit your books" என்கிற கவிதை. "புத்தகப் புழுவாக இருக்காதே", "உலகத்தை அனுபவம் மூலம் கற்றுக்கொள்" என்கிற கருத்துகளைக் கூறும் கவிதையையே மனப்பாடம் செய்ய வைக்கின்றனர் என்றால் எவ்வளவு அபத்தமான கல்வி முறை நிலுவையில் உள்ளது!

தாய்மொழி வழிக் கல்வி முறை

மாணவர்களின் புரிதல் மேம்படுவதற்கு இது மிக முக்கியம். இவ்வழியில் பயின்றால் மேற்சொன்ன மனப்பாடம் செய்யும் பழக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை. கலைச்சொற்கள் (technical keywords) ஆங்கிலத்தில் உள்ளதை கற்றுக் கொடுப்பது அவசியம் தான். ஆனால் வகுப்புகளில் கற்றுக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் மொழி தாய்மொழியாக இருப்பதே சிறப்பு. இல்லையெனில் டூ ஒன் சார் டூ என்று மனப்பாடம் தான் செய்வோம். அது உண்மையில் two ones are two என்பது விளங்குவதற்குள் நாம் பன்னிரண்டாவது வகுப்பையே தாண்டிவிடுவோம்.

கல்விக்கான உபகரணங்கள்

சாக் பீஸ் முதல் புரொஜெக்டர் வரை அனைத்து கல்வி சாதனங்களும் ஒரு பள்ளியில் இருக்க வேண்டியது அவசியம். நவீன தொழில்நுட்பத்தை கல்விக்கு தேவைப்படும் விதத்தில் பயன்படுத்த வேண்டும். நமது பள்ளிகளில் இது போன்ற வசதிகள் உள்ளதா? சரி. இருக்கும் உபகரணங்கள் சரிவர பயன்படுத்தப் படுகின்றனவா? எனது பள்ளியின் PT அறையில் கூடைப்பந்து இருக்கும். ஆனால் எங்களிடம் பந்தைக் கொடுத்தால் தொலைத்து விடுவோம் அல்லது கிழித்து விடுவோம் என்று சொல்லி தரவே மாட்டார்கள். இது போல உபகரணங்களை ஒட்டடை படிய போற்றிப் பராமரிப்பதை நிறுத்துவது நலம்.



இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் பல நுட்பமான விஷயங்கள் உள்ளன. ஆனால் அவசியமாக/அவசரமாக தேவைப்படும் மாற்றங்களை மட்டும் சொல்லிவிட்டேன் என்பதால் இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment