Friday, 18 December 2020

துபாய் விசா என்ற பெயரில் போலி மோசடி கும்பல் இளைஞர்களே உஷார்!!!!


இந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு துபாய் விசா கிடைத்துள்ளதாக சொன்னார். மேற்கொண்டு வேலையே உறுதி செய்ய உடனடியாக 10000 ரூ பணம் கட்ட சொல்வதாகவும் சொன்னார்.

முழுவிபரம் கேட்டறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது! பிரபலமான ATM கார்டு மேல கீர 16 நம்பர் சொல்லுங்கோ... பிராடு கும்பல் போலவே அதே திருட்டு பாணியில் விசா வழங்குவதாக ஒரு போலிக் கும்பல் கிளம்பி இருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது.
ஒரு facebook பக்கத்தில் துபாய்க்கு வேலைக்கு ஆள் தேவை என்ற வழக்கமான ஒரு விளம்பரத்தை பார்த்து அதன் வாட்சப் நம்பருக்கு தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விபரங்களை அனுப்பியிருக்கிறார் இவர். அவருக்கு அடுத்த நாளே உங்களுக்கு விசா ரெடி, கீழ்கண்ட website இல் சென்று உங்கள் பாஸ்போர்ட் நம்பர் மற்றும் நாங்கள் தந்துள்ள விசா நம்பரை கொடுத்து உங்கள் விசா பேப்பரை டவுன்லோடு செய்துவிட்டு சொல்லுங்கள் என்று சொல்கிறார் வாட்சப் ஆடியோ மூலம் பதிலளித்த பெண். டவுன்லோட் செய்தால் அச்சசல் ஒரு விசா போன்ற பேப்பர் வருகிறது, பாஸ்போர்ட்டில் இருக்கும் தகவல்கள் போட்டோ உடன். சட்டென பார்த்தால் சந்தேகம் வராதபடி இருக்கும். இது என்ன, ஒரு டிராவல்ஸில் தம்பி சென்று விசாரித்த போது இது உண்மையான விசா தான் என்று சொல்லுமளவு இருந்திருக்கிறது. அடுத்தடுத்து வந்த ஆடியோவில், உடனே 2 மணிநேரத்திற்குள் MSC பீஸ் 10000 காட்டுங்கள் மேற்கொண்டு டிக்கட் உள்ளிட்ட வேலைகளை தொடங்க வேண்டும் என்று நகர்ந்துள்ளது உரையாடல்.. பிறகு என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்ததே!
அந்த website ஐ பார்த்தால் பக்கா UAE logo க்கள் பயன்படுத்தப்பட்டு சட்டென சந்தேகம் வராதபடி இது உண்மைதானோ என்று படித்தவர்கள் கூட நம்பும்படி இருக்கிறது. (லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
ஒரு படி மேலே போய் https எனப்படும் certified secured வலைத்தளமாகவும் அது இருக்கிறது. அதுமட்டுமல்ல எமிரேட்ஸ் நிறுவனம் லோகோவுடன் போலியான offer letter உம் அனுப்பி இருக்கிறார்கள்.
உடனடியாக UAE இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ facebook பக்கத்தில் சென்று பார்த்தல் அவர்கள் கொடுத்துள்ள வலைத்தள முகவரி வேறு ஒன்றாக இருக்கிறது. இதனால் சந்தேகமடைந்து அந்த பிராடு வலைத்தளத்திற்கு சென்று சோதித்தால் அது ஒரு பகடை என்பதை உணர முடிந்ததுக்கு. உடனடியாக இந்த தகவலை UAE தூதரக முகவரிக்கு செய்தியாக அனுப்பிவிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பதிவை பகிர்கிறேன், உஷாராக இருக்கவும்.
அவர்கள் பயன்படுத்திய போலி வலைத்தளம்: https://uaeembassy.in/consularservices_eVisa-Verfication.php
போலி விளம்பரம் செய்த facebook பக்கம்:
https://www.facebook.com/RightWay-Dubai-Immigration-Services-105249281327132
பிராடுகள் பயன்படுத்திய வாட்சப் தொடர்பு எண்கள்: +91 85318 02951, +966 59 730 8631
அவர்கள் வெவ்வேறு பெயர்களில், விளம்பரங்களில் வரக்கூடும். மிகவும் கவனம் தேவை, குறிப்பாக, புதிய பட்டதாரிகளும் இளைஞர்களும் கவனமாக இருக்கவும்.
பகிர்ந்ததை பகிருங்கள் அனைவருக்கும்.

No comments:

Post a Comment