Monday, 8 February 2021

நாங்கள் வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது அவ்வளவு எளிதல்ல …!!


நாங்கள் வெளிநாடு போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப சொந்த நாட்டுக்கே வறோம் அப்படீன்னு வெளிநாட்டு வாழ்க்கை ஆரம்பிக்கும்..

வயசு 22
தம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும்
வயசு 24
அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம்
வயசு 26
தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும் ஒரு தொழிலுக்கு என்னமும் பண்ணிக் கொடுக்கணும் அதனால இன்னும் ஒரு 2 வருஷம் –
வயசு 28
அப்பா அம்மா எனக்கு பொண்ணு பார்க்கறாங்க கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம் –
வயசு 30
கல்யாணத்துக்கு வாங்கின கடன் பட்ட கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும் அதுக்கு ஒரு 2 வருஷம் –
வயசு 32
தனக்குன்னு சின்னதா ஒரு குடும்பம் பிள்ளைய ஸ்கூல் சேர்க்கனும், அதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கனும் அதுக்கு 2 வருஷம் –
வயசு 34
ஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்து ஒன்னுமே சம்பாதிக்கல அதுக்கு ஒரு 6 வருடம்
வயசு 40
புள்ளங்க படிக்குது இப்போ ஊருக்கு போக முடியாது பணம் வேணும் அதுக்கு இன்னும் 10 வருஷம் இருந்தே ஆகனும் –
வயசு 50
புள்ளங்க படிப்ப முடிக்க இன்னும் 2 வருஷம் இருக்கு அதனால இன்னும் 3 வருஷம் –
வயசு 53
புள்ளைகளுக்கு ஒரு வேலை கிடைக்கனும், மகளுக்கு கல்யாணம் பண்ணனும் அதனால இன்னும் 4 வருஷம் –
வயசு 57
கல்யாணம் பண்ணி கொடுத்ததும் மாப்பிள்ளைகளுக்கு ஒரு தொழில் அல்லது ஏதாவது உதவிகள் செய்து கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது அதனால ஒரு 4 வருடம் –
வயசு 61
இதுக்கு மேல உயிரோடு இருந்தால் ஊருக்கு வந்து நல்ல வேலையா தேடிகிட்டு, புள்ளை குட்டிகளோடு சந்தோசமாக வாழ ஆரம்பிக்கலாம் ???!!!
என்று ஊருக்கு போய் வாழ்க்கையை கொஞ்சம் காலமாவது குடும்பத்தோட வாழ ஆசை பட்டு வெளிநாட்டு வாழ்கையை முடித்து விட்டு வீடு திரும்பினாள்....
கடைசியா எல்லாரும் கேக்கின்ற கேள்வி எங்களுக்குனு என்ன செஞ்சிங்கனு...

இது தான் உண்மையான வெளிநாட்டு வாழ்க்கை.

No comments:

Post a Comment