நாம் பெரும்பாலும் கண்டிப்பே அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். ஆம்...உறவுகளில் மிகவும் சிக்கலான சற்றே கடினமான உறவாக பார்க்கப்படுவது அப்பா-மகன் உறவு. அம்மா-மகன் உறவில் இருக்கும் ஓர் அன்னியோன்யம் அப்பா மகன் உறவில் இருப்பதில்லை.
தந்தை சற்று கண்டிப்பானராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்வதால் ஆண் பிள்ளைகள் மத்தியில் விரிசல் ஆரம்பித்து அந்த விரிசல் தொடர்ந்து நீடிப்பதில் தான் சிக்கல் இருக்கிறது. சில வீடுகளில் பேச்சுவார்த்தை கூட இருக்காது. அதுவும் டீன் ஏஜில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு (அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் விதிவிலக்குகள் தவிர்த்து) நிச்சியம் ஒரு வில்லன் ரேஞ்சுக்குதான் இருந்திருப்பார்.
அப்பாவை திட்டியிராமல் கடந்து விட்ட பதின் பருவமென்பது நிச்சியம் யாருக்குமே இருக்காது.
1, இவர் எப்போது தான் நம்மை புரிந்து கொள்வார் ?
2, அப்படி என்ன கேட்டு விட்டோம், இந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியாது என்றால் ஏன் தான் பிள்ளை பெற்று கொள்ள வேண்டும்?
3, இனி இவர் முகத்திலே விழிக்கவே கூடாது.
4, அப்பாவிடம் போட்ட சண்டைகளுக்காக அம்மாவை துன்பப்படுத்தி சாப்பிடாமல் படுக்க போன இரவுகள்என பதின் பருவத்தில் அப்பாவின் மீது கோபமில்லாமல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கவே முடியாது.
பிள்ளைகளின் பார்வையில் தங்களின் ஒவ்வொரு வயதிலும் அப்பா தங்களுக்கு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைச் சொல்லும் குட்டிக்கதை ஒன்று உண்டு!
5 வயது - ‘என் சூப்பர் ஹீரோ!’
10 வயது - 'வீட்டில கொஞ்சம் கத்துவார்... மத்தபடி நல்லவர்தான்!'
15 வயது - ‘எப்போ பார்த்தாலும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கார்... சொல்லிவைம்மா அவர்கிட்ட!’
20 வயது - ‘எப்படிம்மா இப்படி ஒரு ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!'
30 வயது - ‘நான் என்ன பண்ணினாலும் குறைசொல்லிக்கிட்டே இருக்கார். இதனாலேயே அவர்கிட்ட நான் பேசுறதைக் குறைச்சுட்டேன்!’
40 வயது - ‘அடிக்கடி கத்துவார்... ஆனா, அடிப்படையில ரொம்ப நல்லவர்!’
50 வயதில் - ‘அந்தக் காலத்தில எங்க குடும்பம் இருந்த நிலைமையில, தன் உழைப்பால எங்களையெல்லாம் கரை சேர்த்திருக்கார். அந்த மனுஷன்தான் எங்களுக்கு எப்பவும் சூப்பர் ஹீரோ!'
ஆக அப்பாவை பற்றி சரியாக ஒரு மனநிலைக்கு வர 40 முதல் 45 வருடகால வாழ்க்கையும் அனுபவமும் தேவைப்படுகின்றன.
1. அம்மா 9 மாதம் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், ஏன் அப்பா பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
2. அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார், அப்பா தனது சம்பளத்தை எல்லாம் குடும்பத்திற்காக செலவு செய்கிறார், இருவருமே சமமான உழைப்பு, இன்னும் அப்பா ஏன் பின் தங்குகிறார் என்று தெரியவில்லை.
4. போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும், கஷ்டத்தில் இருக்கும் போது அம்மா என்று அழுவாள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில் கொள்ளவில்லை என்று அப்பா ஒருபோதும் வருத்தப்படவில்லையா? குழந்தைகளின் அன்பைப் பெறுவதில் தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
5. அலமாரியில் கலர்புல் புடவைகள், நிறைய குழந்தைகளின் உடைகள் இருக்கும் ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு, அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, இன்னும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.
6. அம்மாவுக்கு நிறைய தங்க ஆபரணங்கள் உள்ளன, ஆனால் தந்தைக்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ஒரே ஒரு மோதிரம் மட்டுமே உள்ளது. இன்னும் குறைந்த நகைகள் பற்றி அம்மா புகார் செய்யலாம் மற்றும் அப்பா இல்லை. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
7. அப்பா தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள கடினமாக உழைக்கிறார், ஆனால் அங்கீகாரம் என்று வரும்போது, அவர் ஏன் எப்போதும் பின்தங்குகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.
8. இந்த மாதம் காலேஜ் டியூஷன் கட்ட வேண்டும் என்று அம்மா சொல்கிறார், பண்டிகைக்கு எனக்கு புடவை வாங்கித் தாருங்கள், ஆனால் அப்பா புது உடை பற்றி யோசிக்கவே இல்லை. இருவருக்கும் சமமான அன்பு இருக்கிறது, அப்பா ஏன் பின்தங்குகிறார் என்று இன்னும் தெரியவில்லை.
9. பெற்றோர்கள் வயதாகிவிட்டால், குழந்தைகள் சொல்கிறார்கள், அம்மா வீட்டு வேலைகளைக் கவனிக்க குறைந்தபட்சம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவர்கள் அப்பாவுக்கு பயனில்லை.
10. குடும்பத்தின் முதுகெலும்பு என்பதால் அப்பா பின்னால் இருக்கிறார். மேலும் நமது முதுகெலும்பு நம் உடலுக்குப் பின்னால் உள்ளது. ஆனால் அவரால் நாம் தனித்து நிற்க முடியும். ஒரு வேளை, இதனால்தான் அவர் பின்வாங்குகிறார்...!!!!திடீரென அப்பா புராணம் எழுத என்ன காரணம் என்று எனக்கே நான் கேட்டுக்கொண்டபோது வயதாகிவிட்டதோ என்கிற எண்ணம் தோன்றுகிறது......
2021 -இல் தந்தையர் தினமான இன்று அனைத்து தந்தையர்களுக்கும் இந்த கட்டுரை ஒரு சமர்ப்பணம் !!
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.