Monday 7 June 2021

தமிழக அரசு பணியாளர்களின் நன்கொடை நிதி !! தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் !!

 





1.தமிழ் நாட்டில் தமிழக அரசு பணியாளர்கள் மொத்தம் 14 லட்சங்கள்.

2. இதில் நான்கு விதமான பணியாளர்களில் இருக்கிறார்கள் ஏ,பி,சி,டி என்று.

3. தமிழக அரசின் மொத்த வருமானத்திலிருந்து அவர்களுக்கு மாத சம்பளம், மற்றும் ஓய்வு ஊதியத் தொகை 40% வரை சென்று விடுகிறது.

4. நாம் மாநில வளர்ச்சி நிதியாக, ஏ குரூப் 513 ,பி .குரூப் 365 , சி .குரூப் 265 ,டீ குரூப் 107 ரூபாய்கள்.தமிழக வளர்ச்சிக்கு வழங்க வேண்டும் .

5. நாம் சேமிக்கப்படும் தொகைகளை சுற்றுப்புற சூழல் ,பாதுகாப்பு இயற்கை பேரிடர்களின் செலவு செய்யவேண்டும்.

6. இதில் 12 பேர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்,அதில் நான்கு பிரிவு சேர்ந்த பணியாளர்கள் தலா ஒருவர் என்றும் .விவசாயிகள் இருவர் என்றும் ,மீனவர்கள் ஒருவர் ,அதிகாரி ஒருவர் ,அரசியல் பிரமுகர் ஒருவர் ,காவல் துறையை சேர்ந்தவர் ஒருவர், பொது துறை சார்ந்த ஒருவர், சமூக சேவகர் ஒருவர் ,என் டி ஆர் எஃப் .சேர்ந்தவர் ஒருவர், என்று இருப்பார்கள்...

7.இந்தத் தொகை மாதம் 25 கோடியும், வருடம் 300 கோடியும் சேரும்..

8. இயற்கை பேரிடர் செலவு செய்யவில்லை என்றால், கல்வி வளர்ச்சி ,மருத்துவ வளர்ச்சியில் செலவிட வேண்டும்..

இல்லையே ஏழை மக்களுக்கு குடியிருப்பு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்..
9.வெளிப்படையாகவும், நம்பகத்தன்மை செலவு செய்யவேண்டும்..

இந்த தொகைகளை, மரம் நடுதல் ,குடியிருப்பு உருவாக்குதல், மருத்துவ வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, மீனவர்கள் பாதுகாப்பு ,விவசாயிகள் பாதுகாப்பு ,போன்றவைகளில் செலவு செய்ய வேண்டும்..

10.இதற்குப் பெயர் அரசு பணியாளர்கள் நன்கொடை நிதி என்று வைக்க வேண்டும்...

இப்படிக்கு

தமிழன் நலன் விரும்பி மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment